Posts Tagged ‘பஜ்ரங் தள்’

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

Nakkeeran against Sarangi

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: பிரதாப் சந்திர சாரங்கி மே 30, 2019 அன்று பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற போது, பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் சிறுகுறு தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். கரகோஷத்துடன் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, யார் இவர் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த நாளே அவரைப் பற்றிய செய்திகள் வெளியாகின. ஆனால், உடனே, அவருக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. அவரது தேர்தல் விண்ணப்பத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றதை நேஷனல் ஹெரால்ட் என்ற காங்கிரஸ் நாளிதழ்  வெளியிட அதை வைத்து, மற்ற ஆங்கில நாளிதழ்கள், ஊதி பெரிதாக்கி செய்திகள் வெளியிட்டன. பிறகு, தமிழ் ஊடகங்களும் பிடித்துக் கொண்டன. உதாரணத்திற்கு “நக்கீரன்”…. “அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது, என்று “நக்கீரன்” பீடிகையுடன் ஆரம்பித்தது[1]. மற்றதை கீழே படிக்கலாம்.

Nakkeeran against Sarangi-2

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன: நக்கீரன் தொடர்கிறது, “64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது. அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்,” என்று வர்ணித்தது[2]..

Samayam against Sarangi

1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலையுடன் முடிச்சு போடுதல்: கமல்குமார் என்ற பெயரில், நக்கீரன் தொடர்கிறது[3], “இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுமேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன,” என்று முடிக்கிறது[4]

LankaSri- false propaganda against Sarangi.

சமயம் [Times of India, Tamil] இவ்வாறு வர்ணிக்கிறது[5], “ஆனால் சாரங்கியின் மறுபக்கம் மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. ஒடிசாவில் நடந்த பல்வேறு மத மோதல், வன்முறை சம்பவங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. …..இந்த கொலை வழக்கில் போலீசாரின் சந்தேகம் முழுக்க பிரதாப் சாரங்கியின் மீது தான் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் எப்படியோ அந்த வழக்கிலிருந்து அவர் வெளியே வந்துவிட்டார். …..2002ம் ஆண்டு ராமர் கோயில் பிரச்னை எழுந்த போது, சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒடிசாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது ஏற்பட்ட வன்முறையில், ஒடிசா சட்டசபை கட்டிடத்தை அடித்து சேதப்படுத்தியதாக சாரங்கி கைது செய்யப்பட்டுள்ளார் மேலும், ஒடிசாவின் மோடி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் சாரங்கி மீது வன்முறை, சூறையாடல், தீ வைப்பு, மத மோதல் என மொத்தம் 7 கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அதன் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது…..,” மேலும், “ஆனால் பிரதாப் சாரங்கி அமைச்சரான உடன் அவர் தொடர்புடைய குற்ற வழக்குகள் ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் இதெல்லாம் நீர்த்து போகச் செய்யப்படும் என ஒடிசாவின் முக்கிய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர் ,” என்று முடிக்கிறது[6]. ஆனால், பின்னணி, முதலியவை எதுவும் சொல்லப் படவில்லை.

Satyam TV - on Sarangi-disappeared-full

பசுத்தோல் போர்த்திய புலியின் கதை: “பசுத்தோல் போர்த்திய புலியின் கதை,” என்று தலைப்பிட்டு, சத்திய டிவி செய்தி வெளியிட்டுள்ளது. “கிளிக்” செய்தால் காணவில்லை. 9962311611 / 9500 60660 எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினாலும், சொல்லத் தயங்குகின்றனர். பிறகு எடுக்காமலேயே தவிர்த்தனர். லங்கஶ்ரீ என்ற இணைதளமும், “கிறிஸ்தவமத போதகரை குடும்பத்துடன் எரித்துக் கொன்றவர்……………….மோடி அரசில் அமைச்சர் பொறுப்பு….” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதெல்லாமே, அந்த ஜாபுவா, கந்தமால் கற்பழிப்பு செய்திகள் போலவே இருக்கின்றன. அதாவது, அந்த கற்பழிப்புகளில் ஈடுபட்டவர்கள் கிருத்துவர்கள் தான் என்றதும் மூடிக்கொண்டு அமைதியானார்கள். அதேபோல, கந்தமால் கன்னியாஸ்திரீயின் முரண்பட்ட செய்திகள், வாக்குமூலம், சோதனைக்கூட அறிக்கை எல்லாம் வந்தவுடன், மறுபடியும் மௌனியானார்கள். ஏனெனில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டாள் என்று தெரிந்தது. மேலும், முதலில் தன்னை யாரும் கற்பழிக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தாள். ஆனால், இன்றைய தேதியில், இவையெல்லாமே இணைதளங்களிலிருந்து மறைந்து விட்டன. ஆனால், உலகம் முழுவதும், இந்துக்கள் கன்னியாஸ்திரீக்கள் தினம் தினம் கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது போல செய்திகளை வெளியிட்டனர்!

Sathyam TV news on Sarangi suppressed

தமிழ்.இந்து வக்காலத்து வாங்குவது: தி.இந்து.தமிழ் குறிப்பிடுவதாவது, “இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது[7], “என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்னானவை. போலீஸ் வேண்டும் என்றே செய்துள்ளது ஏனென்றால் நான் லஞ்சத்தை எதிர்த்து போராடினேன். சமூகத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக போராடினேன். அதனால் ஊழல் நிறைந்த அரசு அதிகாரிகள் நான் எதிரியாகி உள்ளேன். அதனால் எனக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தனர். என் மீதான பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. மீதமுள்ளவையும் தள்ளுபடி செய்யப்பட்டன” என்றார். சாரங்கி ஒரு காலத்தில் ஒடிசா பஜ்ரங் தல் தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது[8]. தி.இந்து மற்றும் பிரென்ட் லைன் விசுவாசத்துடன் மற்ற விவரங்களை வெளியிடும் போது, இந்துக்கள் விசயத்தில் மட்டும், எதிரான விசயங்களை மட்டும், முக்கியத்துவம் கொடுத்து போடுவதேன் என்ற கேள்வியை, இந்துக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்பொழுதும், முழு விவரங்களை வெளியிடாமல், சாரங்கி சொன்னார் என்று தான் செய்தி வெளியிட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Sarangi playing cricket on the road

[1] நக்கீரன், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), கமல்குமார்

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[3] கமல்குமார், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), நக்கீரன்.

[4]  https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[5] சமயம், ஏழை பங்காளன் பிரதாப் சாரங்கி மீது ஏழு கிரிமினல் வழக்குகள்அதிர்ச்சியூட்டும் பின்னணி..!, Samayam Tamil | Updated:Jun 1, 2019, 02:53PM IST

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/union-minister-odissa-s-pratap-singh-has-another-face-which-has-7-criminal-records-all-been-on-investigation/articleshow/69609653.cms

[7] தி.இந்து.தமிழ், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை; லஞ்சத்தை எதிர்த்து போராடினேன்பிரதாப் சந்திர சாரங்கி, Published : 31 May 2019 18:29 IST; Updated : 01 Jun 2019 10:59 IST.

[8] https://tamil.thehindu.com/india/article27378851.ece