Posts Tagged ‘போட்டி’

முந்தைய பாதிரி ஜெபசந்திரன் மீது வழக்கு பதிவு: 2006லிருந்தே ஆரம்பித்த பணமோசடி பிரச்சினை 2014ல் வழக்குப்பதிவில் முடிந்துள்ளது!

மார்ச் 26, 2014

முந்தைய  பாதிரி  ஜெபசந்திரன்  மீது  வழக்கு பதிவு: 2006லிருந்தே  ஆரம்பித்த  பணமோசடி  பிரச்சினை 2014ல்  வழக்குப்  பதிவில் முடிந்துள்ளது!

 

Tutocorin diocese 2003

Tutocorin diocese 2003

வேலியைமேயும்வெள்ளாடுகளும், பயிரைமேயும்கருப்புஆடுகளும், பலியிடும்ஆயர்களும்: பாலாசிங்என்றபிஷப்சார்ஜென்ட்டீச்சர்டெரைனிங்இன்ஸ்டிடியூட் [Bishop Sargent Teacher Training Institute] என்றநிறுவனத்தில்முதல்வர்கொடுத்தபுகாரின்பேரில், மூன்றுபிஷப்புகளின்மீதுபலகோடிரூபாய்களைமோசடிசெய்ததாகவழக்குபதிவுசெய்யப்பட்டது[1].

  1. ஜே. ஜே. கிருஸ்துதாஸ் [against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss],
  2. ஜே. ஏ. டி. ஜெபசந்திரன் [Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran] ,
  3. ஜெயபால்டேவிட் [a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David],
  4. செல்வின்ஜயராஜ் [Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj],
  5. சாமுவேல்செல்வராஜ் [Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj]
  6. ரெத்னராஜ் [retired district judge Retinaraj, a synod member],

 

பொலீஸார்  இந்திய  குற்றவியல்  சட்டத்தின்  பிரிவுகள் / சரத்துகள் 406 – நம்பிக்கை  மோசம், 420 – ஏமாற்றுதல், 464 – போலியான  ஆவணத்தை  உருவாக்குதல்  மற்றும் 465 போர்ஜரிக்கான  தண்டனை  என்று  வழக்குப்பதிவு  செய்யப்பட்டது[2]. டயோசிக்கு  சொந்தமான 5.51 ஏக்கர்நிலத்தை 99 ஆண்டுகளுக்கு  குத்தகைக்குக்  கொடுத்ததால்  பலகோடி  ரூபாய்  மோசடி  நடந்துள்ளது  என்று  புகார்  கொடுக்கப்  பட்டுள்ளது. அதன்படி  வழக்கும்   பதிவாகியுள்ளது[3].

 

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

பிஷப் ஜெபசந்திரனின் நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணாவிரதம் (மார்ச்.2012): 2006 இவர்  பிஷப்பாக  பதவி  ஏற்றுக்கொண்டபோது, “திஹிந்து” நாளிதழில்  செய்தி  வெளிவந்தது[4]. 2007லிருந்தே  உள்ளூர்  மற்றும்  சென்னை  உயர்நீதிமன்றங்களில்  இவர்களுக்குள்  நடந்துவரும்  பணமோசடி விசங்களுக்காக வழக்குகள் நடந்து வருகின்றன[5]. 2007ல்  புகார்  கொடுக்கப்பட்டு, மாநில  கிரைம்  பிரிவில்  வழக்கு  நிலுவையில் உள்ளது[6]. ஆனால்,  “திஹிந்து”  அதைப் பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடவில்லை.  என்னத்தான்  “திஹிந்து”வுக்கு அத்தனை  பாசம்  என்று  தெரியவில்லை.   என்.ராம்  ஏதோ  இன்னொரு  கிருத்துவப்பெண்ணை  திருமணம்  செய்துகொண்டார்  என்கிறார்களே,  அதன்விளைவோ  என்னமோ? 2012லேயே  ஜெபசந்திரனின்  நடவடிக்கைகளை  எதிர்த்து  உண்ணவிரதம், ஆர்பாட்டம்  முதலியவற்றை  செய்துவந்தனனர். அரசுவிதிமுறைகளுக்கு  விரோதமாக, இவர்  கல்லூரிகளுக்கு  ஆசிரியர்களை  நியமனம்  செய்துள்ளார், அந்தவேலைக்கு  வேண்டிய  படிப்பு  முதலிய  தேவைகளை  சரிபார்க்காமல், பணத்தை  வாங்கிக்கொண்டு, வேலை  கொடுத்தத்சாக  குற்றஞ்சாட்டினர்[7]. வருமானம்-செலவு  கணக்குகளை  சரியானமுறையில்  தணிக்கை  செய்யப்படவில்லை  என்றும்  எடுத்துக்காட்டினர்[8]. இது “திஹிந்து”வில்  வந்தது!

 

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

பிஷப்ஜெபசந்திரனின்மீதுபுகார்[9]: “CSI உருவாகியது 1947ம்ஆண்டுஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள்  இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, (இலங்கை) ஆகிய  மாநிலங்களில்  உள்ள  அனைத்து  CSI சபைகள்  அடங்கிய  டையோசிஸ்ஸின்  தலைமை  ஸ்தாபனம் CSI சினாட் என்று  அழைக்கப்படுகிறது.  கடந்த 66 ஆண்டு  காலவரலாற்றில்  நடந்திராத   அவமானகரமான  சம்பவம்  கடந்த 2013 பிப்ரவரி  மாதம்   CSI சினாட்  கமிட்டியில்  நடந்தது[10]. தமிழ்நாடு  தூத்துக்குடி – நாசரேத்  டையோசிஸ்ஸின்  பிஷப்.   Rt.Rev.Dr. ஜெபசந்திரன்  அவர்கள்  மேல்  ஏராளமான   ஊழல்குற்றச்சாட்டுகள்   எழும்பியது. ஆனால்  சினாட்  வழக்கம்  போல்  நடவடிக்கையை  எடுக்காமல்  குற்றசாட்டுகளை  ஊறப்போட்டது. அதன்பிறகு  அவர்மேல்  குற்றச்சாட்டுகள்  மிக  அதிகமாகவே CSI சினாட்  செயற்குழு  பிஷப்  மீதுநடவடிக்கை  எடுத்தது.  பிஷப்.ஜெபசந்திரன்  அவர்களை  பிஷப்  பொறுப்பிலிருந்து  நீக்கி  அவரை  சஸ்பெண்ட்  செய்கிறது  என்ற  சினாட்  நிர்வாக  கமிட்டி  எடுத்த  தீர்மானத்தை  மாடரேட்டர். தேவகடாட்சம்  அவர்கள்முன்னிலையிலும்  மற்றும்  சினாட்  கூட்டத்தில்  கலந்துக்கொண்ட  நான்கு  பாஷைகள்  பேசும்  நான்கு  மாநில  பிஷப்மார்கள், மெம்பர்கள்  கூடிய   அக்கூட்டத்தில் CSI சினாட்செயலர்  திரு.பிலிப்  அவர்கள்  சஸ்பெண்ட்  அறிக்கையை  05-02-2013 அன்று  வாசித்தார்”.

 

சி.எஸ்.ஐ.கூட்டத்தில் நடந்த கலாட்டா- படம் ஜாமக்காரன்

சி.எஸ்.ஐ.கூட்டத்தில் நடந்த கலாட்டா- படம் ஜாமக்காரன்

சைனாட்கூட்டத்தில்நடந்தசண்டை (2013)[11]: “உடனே  தூத்துக்குடி  பிஷப். ஜெபசந்திரன்  அவர்கள்  பிலிப்  அவர்களின்  சட்டையைப்  பிடித்து  இழுத்து  அவரை  தாக்கி, அறிக்கையை  படிக்கவிடாமல்  தடுத்ததோடு  மட்டுமல்லாமல்  MLA, MP அரசியல்வாதிகள்  கூட்டத்தில்  வழக்கமாக  நடப்பதைப்போல்  மைக்கை  பிடித்து  எடுத்து  எறிந்தார்[12]. இந்த  சண்டையில்  தூத்துக்குடி  பிஷப்புக்கு  உதவியாக  சினாட்  செயற்குழு  உறுப்பினர்  கோயமுத்தூர்  டையோசிஸ்ஸை  சேர்ந்த  திரு.அமிர்தம்  அவர்களும்  பிஷப்  அவர்களுக்கு  உதவியாக  பிஷப்புடன்  சேர்ந்து  திரு.பிலிப்பை  தாக்கி   அவை நாகரீகம்  இல்லாமல்  கெட்டவார்த்தைகளை  உபயோகித்து  ஏசினார். இவைகள்  வீடியோவில்  பதிவு  செய்யப்பட்டது. தூத்துக்குடி  பிஷப்புடன் சேர்ந்து  பிலிப்  அவர்களை  தாக்கி  கெட்டவார்த்தைகளை  பேசியதாக  கூறப்பட்ட  சகோ.அமிர்தம்  அவர்கள்  உடனே  அங்கேயே  தன்  செயலுக்கு  வருத்தம்  தெரிவித்ததால்  சினாட்  அவருக்கு  உடனே  மன்னிப்பு  கொடுத்தாக  அறிவித்தது. ஆனால்  பிஷப்.ஜெபசந்திரன்  அவர்கள்  மன்னிப்பு  கேட்கவில்லை. எழுத்து  மூலமாகவும்  மன்னிப்பு  கேட்க  ஆலோசனை   அளிக்கப்பட்டது. அதற்கும் அவர்  செவிசாய்க்கவில்லை. ஆகவே  அவர்  பிஷப்  பதவியிலிருந்து  சஸ்பெண்ட்  செய்யப்படுகிறார்  என்று  ஏகமானதாக  தீர்மானம்  எடுக்கப்பட்டதாக  சினாட்டில்  அறிவிக்கப்பட்டது. பிஷப். ஜெபசந்திரன்  அவர்கள்  சண்டைப்போட்டு  கெட்டவார்த்தைகளை  உபயோகித்தது   (சினாடில்) இதுதான்  முதல்முறை  என்று  கூறப்படுகிறது. இந்த  சம்பவம்  மற்ற  மாநில  பிஷப்மார்கள்  முன்னிலையில்  நடந்ததால்   தமிழ்நாட்டு  CSI சபைகளுக்கு  பெரும்  தலைக்குனிவை  உண்டாக்கி  விட்டது”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

CSI. டையோசிஸ்ஸில்  நடக்கும்  அநியாயங்களின்  பட்டியல்: “மிஷனரிமார்கள்,  ஆயர்மார்கள், உபதேசியார்  ஆகியவர்களின்   பிராவிடன்ட்  ஃபண்ட்,  பணம்,  பென்ஷன்  பணம்  ஆகியவற்றை  டையோசிஸ்  நிர்வாகம்  அரசாங்க  வங்கியில்   இதுவரை  சேர்க்காமலும்   டையோசிஸ்  சார்பில்  இவர்கள்  பணத்துடன்  சேர்த்து  மேலே  கூறப்பட்ட  ஊழியர்களுக்காக  சேர்த்து  அடைக்கவேண்டிய  பணமும்  இதுவரை  அரசாங்கவங்கியில்  சேர்க்கப்படாமல், பணம்  பேங்க்கில்  அடைக்காததால்  ஆரம்பகாலத்திலிருந்து  ஊழியர்கள்கணக்கில்  வரவு  வைக்கப்படவேண்டிய  வட்டிபணம்   பலகோடிகள்   ஊழியர்கள்  கணக்கில்  வங்கியில்  இல்லை  என்பதாக CSI சினாடுக்கும்,  பிராவிடன்  ஃபண்ட், பென்ஷன்  அதிகாரிகளுக்கும்  ஊழியர்கள்  சிலராக  புகார்  எழுதி  அனுப்ப  ஏற்பாடுகள்  நடக்கிறது. இது  உண்மையானால்  இது  பெரும் கிரிமினல்  குற்றமாக  கருதப்பட்டு  டையோசிஸ்  அதிகாரிகள்  முதல்   பிஷப்மார்  வரை  ஜெயிலுக்கு  போக  வேண்டி  வரும். இவர்களுக்கு பெரும்  ஆபத்தும், அவமானமும்  காத்துக்  கொண்டிருக்கிறது. இது  டையோசிஸ்  நிர்வாகிகளும்,  பிஷப்மாரும்  டையோசிஸ்  ஊழியர்களுக்கு  செய்யும்  பெருத்த  துரோகம்  ஆகும்”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலை  நியமனத்திலும்  ஊழல்: “டையோசிஸ்   வேலை  நியமனத்தில்  குறிப்பாக  தலைமை  ஆசிரியர்,  ஆசிரியர்  ஆகியோரின்  வேலைநியமனத்தில்  பல  வருடமாக  வரிசையில்  காத்துக்  கிடக்கும்  எத்தனையோ   CSI  டையோசிஸ்ஸில்   CSI  சபை  அங்கத்தினரின்  பிள்ளைகள்,   மனைவிமார்கள்  வரிசைப்படி  காத்துக்கிடக்க   வேலை  நியமான  லிஸ்டில்  இல்லாத   நபருக்கு  பணிநியமனம்  கொடுத்தது  துரோக  குற்றச்சாட்டில்  டையோசிஸ்  நிர்வாகத்தினருடன்   பிஷப்  அவர்களும்  குற்றவாளியாகிறார்.  இந்தவிதமான  அநியாயத்துக்கு  பாதிக்கப்பட்டவர்கள்  நீதிமன்றம்  போக  ஏழைகளுக்கு  பணவசதியில்லை.  ஆனால்  அவர்களின்  ஏமாற்றம்  கண்ணீராக  மாறி  தேவசமூகத்தில்  சென்றால்   கர்த்தரே   இந்தகுற்றச்சாட்டுக்கு  பொறுப்பானவர்களை  தண்டிப்பார்  என்பது  நிச்சயம்.   இந்த  சம்பவங்களும்  சினாட்டில்  குற்றச்சாட்டாக  அனுப்பப்  பட்டுள்ளது.   ஆனால்  நியாயம்  தீர்க்க  வேண்டிய  தலைவரின்  டையோசிஸ்ஸிலேயே  இதே  நியமனம்  குறித்த  குற்றச்சாட்டு  எழும்பியுள்ளது.  அப்படியானால்  சினாடின்  தீர்ப்பு  எப்படியிருக்கும்  என்பது  நம்மால்  யூகிக்க  முடிகிறதே!”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

எங்கும்  ஊழல்எதிலும்   ஊழல்  தெய்வபயம்  ஒழிந்துப்  போனது: “இப்போதுதான் CSI சினாட்டுக்கு  பிஷப்மார்கள்  மீது  நடவடிக்கை  எடுக்கும்   புதுதைரியம்  உண்டாகியிருக்கிறது,  அதற்காக  பாராட்டுகிறோம்.  இன்னும்  நடவடிக்கை   எடுக்கப்பட  வேண்டிய  CSI  பிஷப்மார்கள்  பட்டியல்  நீண்டுள்ளது.  சீக்கிரம்  நடவடிக்கை  எடுத்தால்   CSI  சபைகள்  நல்ல  ஒழுங்குக்கு  வரும்.   நடவடிக்கை CSI   சினாட்  தலைமையிலிருந்தும்   ஆரம்பிக்கப்  படவேண்டும்.  ஜெபிப்போம்  சில  வருடங்களுக்கு  முன்   சுனாமியால்   பாதிக்கப்பட்டவர்களுக்கு  அமெரிக்க  உதவி  ஸ்தாபனமான   ERD அனுப்பி  உதவிய  பலகோடிகளில்  ஊழல்  செய்து  களவாடிய  பணத்தை  சுனாமியால்  பாதிக்கப்பட்ட  மீனவ  குடும்பங்களுக்கு  கொடுக்காமல்  பலகோடிகள்   தன்  மகள்   பெயரில்  சினாட்  பொறுப்பாளர்கள்  சிலர்  பலகோடிகளை  வங்கியில்  போட்டு  வைத்ததை  போலீஸ்  கண்டு  பிடித்தது.   சினாடில்  பொதுசெயலர்  இன்னும்  சம்பந்தப்  பட்டவர்கள்  பொது செயலரின்  கர்ப்பிணியான  நிலையில்  இருந்த  மகள்  ஆகியவர்களை  போலீஸ்  கைது  செய்து  சிறையில்  அடைத்தார்கள்.   கடலே  இல்லாத  இடங்களில்  உள்ள   CSI பிஷப்மார்களும்  சுனாமி  உதவிதொகையில்  தங்களுக்கும்  பங்குவேண்டும்  என்று  வாங்கிப்போன  அநியாயங்களும்   CSIயில்  நடந்தது.  சுனாமி  உதவிதொகை  அனுப்பிய  அமெரிக்க  உதவி  ஸ்தாபனமான  ERD, CSI   மீது  வழக்கு  தொடுத்துள்ளது.  ERD உதவிஸ்தாபனம்   CSI   சினாடிடம்  கொடுத்த  பணத்துக்கு  கணக்கு  கேட்கிறது.  பணம்  வாங்கின  எந்த  பிஷப்பும்  திருமண்டலத்தில்  இதுவரை  கணக்கு  ஒப்புவிக்கவில்லை.  பிரதம மந்திரிக்கு ERD தகவல்  அனுப்பியுள்ளது.   நீதிமன்றவழக்கை   CSI  சினாட்  வேண்டுமென்றே  வாய்தா  வாங்கி  வருடகணக்கில்  நீட்டிக்கொண்டு  போகிறார்கள்.   இப்போதுள்ள  சினாட்  புதிய  கமிட்டி    சுனாமி  நிதிகணக்கை  சம்பந்தப்பட்ட  பிஷப்மார்களிடத்தில்  கேட்டு  வாங்குவார்களா?” என்று  ஜாமக்காரன்   முடித்துள்ளார்.

 

J.A.D. Jebachandran taking over as the Bishop of Tuticorin-Nazareth diocese.

J.A.D. Jebachandran taking over as the Bishop of Tuticorin-Nazareth diocese.

தூத்துக்குடி – நாசரேத்திருமண்டலநிர்வாகத்தை  கவனிக்க Rev.ஜேசுசகாயம்  நியமனம்[13]:தூத்துக்குடி – நாசரேத்  திருமண்டல  நிர்வாகத்தை   கவனிப்பதற்காக  பிரதம  பேராயர்   பிரதிநிதியாக  மதுரையை  சேர்ந்த CSI  குருவானவர்.  ஜேசுசகாயம்   நியமிக்கப்  பட்டுள்ளார்.தென்னிந்திய  திருச்சபையின்  பிரதம  பேராயர். தேவகடாசம்   அவர்கள்  தூத்துக்குடி –  நாசரேத்  திருமண்டல  குருவானவர்கள்  மற்றும்  கல்வி  நிறுவனங்களின்  நிர்வாகிகளுக்கு   அனுப்பியுள்ள  கடிதம்:  சென்னையில்  கடந்த  பிப்ரவரி 25ம்  தேதி  நடந்த  தென்னிந்திய  திருச்சபையின்  தலைமை  செயலக  (சினாடு) நிர்வாக  குழுகூட்டத்தில்  எடுக்கப்  பட்ட  முடிவின்படி   தூத்துக்குடி –  நாசரேத்  திருமண்டல  பேராயர்  ஜெபச்சந்திரன்சஸ்  பெண்ட்   செய்யப்பட்டுள்ளார்  என்று  சுற்றறிக்கை   அனுப்பியுள்ளார்.   இப்பொழுது  மார்ச்   2014ல்  வழக்குப்  பதிவு  செய்யப்   பட்டுள்ளது.

 

© வேதபிரகாஷ்

25-03-2014

 

[1] The Tirunelveli police have registered a cheating case against three CSI bishops in Tirunelveli and Tuticorin and a retired district judge for allegedly swindling several crores of rupees from a trust. Based on a complaint by Bala Singh, principal of the Bishop Sargent Teacher Training Institute, which was founded in 1818, the Palayamkottai police registered a case against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss, Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran , a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David, Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj, Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj and retired district judge Retinaraj, a synod member, who has been appointed as the financial administrator for the Tirunelveli CSI diocese.

http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms

[2] Police registered a case under IPC Sections 406 (punishment for criminal breach of trust), 420 (cheating), 464 (making a false document) and 465 (punishment for forgery). Tirunelveli police commissioner Karunasagar said, “We have registered a case based on a court direction. We will pursue the case further.” The complainant has accused the former Bishop and the present Bishops of conniving with each other and bifurcating the diocese into two, which was against the Company Law. “We maintain elaborate and meticulous records,” Tirunelveli CSI diocese Bishop Rev J J Christudoss said. He said the records were proper and there were no malpractices. “Every year we send our account details to the central government through CSI. This year also we had sent it and there was no flaw in the records,” he said.

http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms

[3]தினமலர், மாஜிபிஷப்உட்படநான்குபேர்மீதுவழக்கு, சென்னை, 25-03-2013, பக்கம்,9.

[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/jebachandran-frst-bishop-of-tuticorinnazareth-diocese/article3145638.ece

[5] Madras High Court-Thoothukudi Nazareth Diocese vs The Church Of South India on 23 September, 2008IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS; DATE: 23.9.2008.

[6] http://indiankanoon.org/doc/1420149/

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/parishioners-go-on-hunger-strike-condemn-activities-of-bishop/article3249357.ece

[8] Contravening the rules and regulations formulated by State and Central governments, lecturers were recruited at colleges under his maladministration. Alleging that those with educational qualifications and eligible for recruitment to posts of lecturers against existing vacancies were not considered but on the contrary, recruitments were made for money. Proper auditing was not executed to assess income and expenditure at regular intervals.

[9]இங்குள்ளவிசயங்கள்ஜாமக்காரன்என்றுஒருவர்எழுதிவரும்பதிவுகளினின்றுஎடுத்தாளப்பட்டுள்ளது. இங்குதேவைஎன்பதால்சேர்க்கப்பட்டுள்ளது.

[10] http://newindian.activeboard.com/t34454994/christian-world/?ts=1364740940&page=12&sort=newestFirst&direction=prev&w_r=1381895588

[11] http://jamakaran.com/tam/2013/june/csi.htm

[12] http://tamil.oneindia.in/news/2013/04/04/tamilnadu-tuticorin-nazareth-diocese-bishop-jebachandran-172791.html

[13]தூத்துக்குடி: மே 3-2013, தினகரன்

மூன்று பாதிரிகள் சேர்ந்து ஒரு பாதிரியை அடித்துக் கொன்றுவிட்டனர் – ஒருவருடம் கழித்துத் துப்புத் துலங்கியது – பாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா?

மார்ச் 22, 2014

மூன்று பாதிரிகள் சேர்ந்து ஒரு பாதிரியை அடித்துக் கொன்றுவிட்டனர் – ஒருவருடம் கழித்துத் துப்புத் துலங்கியது – பாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா?

 

Thomas murder Vatican officials came 2013

Thomas murder Vatican officials came 2013

தொடர்ந்து  பாதிரிகள்  கொலை  செய்யப்படுவது  ஏன்?: சென்ற வருடம், “பாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா?”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் பதிவு செய்திருந்தேன்[1]. அப்பொழுது பல பாதிரிகள் கொலை செய்யப்பட்டிருந்தனர், ஆனால், கொலை செய்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கமுடியாமல் இருந்தது. சர்ச் அதிகாரிகள், பிஷப்புகள் முதலியோர் அவசர-அவசரமாக கிரியைகள் செய்து புதைக்கவும் செய்தனர். ஆனால், பெங்களூரில் நடந்த கே. ஜே. தாமஸ் கொலை ஒரு மர்மமாக இருந்து வந்தது. இதில் அரசியல் தலையீடு இருந்ததால், இவ்வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற அழுத்தமும் ஏற்பட்டது. போதாகுறைக்கு, போலீஸார் தாமதப் படுத்துகின்றனர் என்றும், இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தாமஸின் உறவினர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்[2]. முதல்மந்திரி மற்றும் இதர காங்கிரஸ் கட்சிக்காரர்களையும் பார்த்துப் பேசியுள்ளார்கள்[3].

 

Priests and cops at the premises of St. Peters Pontifical Seminary where Father K.J. Thomas was murdered - DC file photo

Priests and cops at the premises of St. Peters Pontifical Seminary where Father K.J. Thomas was murdered – DC file photo

ரோமன்  கத்தோலிக்க  குருமார்களுக்கான  பயிற்சி  கல்லூரி  இயக்குநர் கே. ஜே. தாமஸ் கொலை: பெங்களூர், யஸ்வந்த்புரம் 8வது மெயினில் உள்ளது ரோமன் கத்தோலிக்க குருமார்களுக்கான பயிற்சி கல்லூரியில் இயக்குநராக பணியாற்றி வந்தவர் கே.ஜே.தாமஸ் (65)[4]. இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு இவர் பாடமும் நடத்தி வந்தார். ஈஸ்டரை முன்னிட்டு அனைவரும் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். பங்குதந்தை, தாமஸ் மற்றும் பேட்டரிக் ஆகிய 2 பேர் மட்டும் பயிற்சி கல்லூரியில் இருந்துள்ளனர். இருவரும் தனித்தனி அறையில் தங்கி வந்தனர். எப்ரல் 1 / மார்ச் 31 நள்ளிரவில் அவர்கள் தூங்கி கொண்டிருந்தபோது தாமசின் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்[5]. மழை அதிகமாக பெய்து கொண்டிருந்ததால் சத்தம் வெளியே கேட்கவில்லை. மற்றொரு பங்குத்தந்தை பேட்ரிக்கின் அறையை திறக்க முயன்றுள்ளனர். முடியாததால் வந்வர்கள் ஓடி தப்பிச்சென்றுள்ளனர். காலையில் பேட்ரிக், தாமசின் அறையில் ரத்தம் வருவதை பார்த்து உள்ளே சென்றார். தாமஸ் கொல்லப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசுக்கு தகவல் அளித்தார்.

 

வாடிகன் மற்ற பிஷப்புகள் வந்து பார்த்தது

வாடிகன் மற்ற பிஷப்புகள் வந்து பார்த்தது

இரும்புக்கம்பி,   செங்கல்  ஆகிய  பொருட்களால்  அடித்து  அவர்    கொல்லப்பட்டிருக்கலாம்  என்று  தெரிய  வந்தது: மாநகர கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அலோக்குமார், டிசிபி சித்தராமப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரும்புக்கம்பி, செங்கல் ஆகிய பொருட்களால் அடித்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை ஆர்.சி பிசோப் பெர்னாட் மோரஸ், பங்குதந்தை அந்தோணி சாமி ஆகியோர் பார்வையிட்டனர். போலீசார் விசாரணையில் பங்குதந்தை தாமஸ் கேரளாவை சேர்ந்தவர். 30 வருடங்களாக பங்குத்தந்தை பணியில் உள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு பெங்களூருக்கு மாறுதலாகி வந்துள்ளார். தமிழ், கன்னடம், மலை யாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளை பேசும் திறமை கொண்டவர். கேரளாவில் பிறந்து ஊட்டி மறைமாவட்டத்தில் குருவான கே. ஜே.  தாமஸ், அப்பொழுது இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[6]. போலீசார் விசாரணையில் அவருக்குத் தெரிந்தவர்கள் தாம் கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது.

 

போலீஸார் துப்புத் துலக்கியது

போலீஸார் துப்புத் துலக்கியது

வாடிகனின்  தலையீடு  ஏன்  என்ற  கேள்வி: முந்தைய கொலைகள் போலல்லாது, இதில் அளவிற்கு அதிகமான கவனம் செல்லுத்தப் பட்டது, மற்றவர்களது கவனத்தையும் இழுத்தது. வாடிகனின் இந்தியாவின் கண்கானிப்பாளர் சால்வடோர் பென்னாச்சியோ [Vatican’s Apostolic Nuncio to India Archbishop Salvatore Pennacchio], ஆஸ்வோல்ட் மும்பை பிஷப் [His Eminence Oswald Cardinal Gracias, Archbishop of Mumbai]  மற்றும் சிபிசிழையின் தலைவர் [President of the Catholic Bishops’ Conference of India (CBCI)] என அனைவரும் வந்தனர் என்று ஊடகங்கள் அமர்க்களப்படுத்தினர்[7]. கொலையாளிகள் யாரென்று தெரியவேண்டும் என்று வாடிகன் கேட்டது[8]. இந்தியாவில் எத்தனையோ பாதிரிகள் கொல்லப்பட்டுள்ளனர், அப்பொழுதெல்லாம் கேட்காமல், இப்பொழுது, இவ்வளவு த்ஈவிரமாகக் கேட்பது ஏன் என்று வியப்பாக உள்ளது. உடனே பெங்களூரு பிஷப்புகள் ஊடகக்காரர்களைக் கூப்பிட்டு விரைவில் கொலையாளிகளைப் பிடிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டனர்[9]. சிறப்பு பிரார்த்தனை கூட்டம், அறிக்கை என்றெல்லாம் பின்னால் வந்தன[10]. சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்[11]. 12 நாட்கள் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை என்று முதலமைச்சர் மீது குறைகூறினர்[12]. ஆனால், போலீஸார் இது அவர்களுடைய பிரச்சினை, அதாவது கொலையாளிகள் உள்ளேதான் இருக்கிறார்கள், வெளியேயிருந்து வரவில்லை என்று அவர்களது விசாரணை மீது ஆதாரமாகக் கூறினர்[13].

தாமஸ் கொலை 2013 பெங்களூர்

தாமஸ் கொலை 2013 பெங்களூர்

பெங்களூரு கொலைக்கு ஊட்டியில் ஊர்வலம்[14]: இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், கொலைக்கான காரணத்தை விரைவில் வெளிப்படுத்த வேண்டுமெனக் கோரியும், உதகை மறை மாவட்டத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (18-04-2013) மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது. மறை மாவட்ட ஆயர் அருளப்பன் அமல்ராஜ்[15] தலைமை வகித்தார். இதில் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும், அருட்சகோதரிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.  உதகை காஃபி ஹவுஸ் சந்திப்பிலிருந்து தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பிரகாஷிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  அதேபோல இப்பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசை வலியுறுத்தக் கோரி, முதல்வர், ஆளுநர் ஆகியோருக்கும், கர்நாடக மாநில ஆளுநருக்கும் நீலகிரி ஆட்சியர் மூலமாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன[16].

 

பிஷப் அறிக்கை பெங்களுர் 2013

பிஷப் அறிக்கை பெங்களுர் 2013

கொலை  சம்பந்தமாக  மூன்று  பாதிரிகள்  கைது[17]: 31-03-2013 / 01-04-2013 அன்று மல்லேஸ்வரத்தில் இருக்கும் செயின்ட் பீட்டர் செமினரியில் கே. ஜே. தாமஸ் [Fr KJ Thomas] என்ற 65வயதான ரெக்டர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதன் தொடர்பாக

  1. வில்லியம் பேட்ரிக் [William Patrick,] கென்கேரி என்ற ஊரைச் சேர்ந்த பாதிரி [a parish priest from Kengeri,] ,
  2. இலியாஸ் டேனியல் [Ilyas Daniel,  a priest in Gulbarga] என்ற குல்பர்காவைச் சேர்ந்த பாதிடரி மற்றும்
  3. பீட்டர் [Peter] என்ற இலியாஸ் சர்ச்சைச் சேர்ந்த பலிபீடத்தின் வேலையாள்

என்ற மூன்று கிருத்துவப் பாதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[18]. இவர்கள் தவிர மேலும் சிலர், இரண்டு பாதிரியார்கள் உட்பட, கைதாவார்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர். தங்களது முன்னேற்றத்திற்கு குறுக்காக இருக்கிறார், அவர் இருக்கும் வரையில் வாழ்க்கையில் தாங்கள் பதவியில் உயர முடியாது என்றதைத் தெரிந்து கொண்டனர்[19], இந்நிலையில் அவர் இரண்டாவது முறையாகத் தேர்ந் தேர்ந்தெடுக்கப் பட்டது அவர்களது எரியும் கோபத்தில் எண்ணையை வார்த்தது போலாக்கியது. இவ்விதமான காரணங்களுக்காக மூவரும் அவரைத் திட்டம் போட்டு கொன்றதாக விசாரணையில் தெரிகிறது. முதலில் அவருக்கு கெட்டப் பெயர் வரவேண்டும் என்பதற்காக சில ஆவணங்களைத் திருட முற்பட்டனர். ஆனால், இதனை தாமஸ் பார்த்து கையும் களவுமாகப் பிடித்து விட்டார். இதனால், அச்சமுற்று சில ஆயுதங்களினால் தாக்கியபோது அவர் இறந்து விட்டார்[20]. இவ்வழக்கை புலனாய்வு செய்த பிரனாப் மொஹந்தி என்ற துணை போலீஸ் கமிஷனர் [Additional Commissioner of Police (Crime) Pronab Mohanty] இவ்விவரங்களை வெளியிட்டார். ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கோவா மற்றும் பாண்டிச்சேரி என்ற மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சுமார் 2,000 பேர்களிடத்தில் விசாரணை நடத்தப் பட்டு, துப்புத் துலக்கியுள்ளார்கள்[21]. கைரேகைகளை வைத்து ஓரளவிற்கு போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டார்கள்[22]. மேலும் இரண்டு பாதிரிகளை உண்மை சொல்லும் சோதனைக்குட் படுத்தியதில் உண்மைகள் வெளிவந்துள்ளன[23].

 

தாமஸ் கொலை செய்யப் பட்ட செமினரி

தாமஸ் கொலை செய்யப் பட்ட செமினரி

இத்தாலி-வாடிகன்-இந்தியா  பிரச்சினை  என்ன?: இத்தாலிய வீரர்கள் கேரளாவில் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலைசெய்துள்ளனர். அவர்கள் கிருத்துவர்கள் என்பதினால், அமுக்கி வாசிக்கப் பட்டது. ஆனால், இத்தாலி அதனை பிரச்சினையாக ஆக்கப் பார்க்கிறது. ஏனெனில் கோடானுகோடி ஹெலிகாப்டர் ஊழலில் அந்நாட்டவர் சிக்கியுள்ளானர். பிணைப்பத்திரங்களை வைத்துப் பணம் பெறலாம் என்றால், இந்தியாவை இத்தாலி மிரட்டுகிறது. மேலும், ஒருவேளை, இந்துக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம், அப்படியென்றால், இதனை, ஒரிசா பிரச்சினைப் போல திசைத்திருப்பவும் திட்டம் போட்டிருக்கலாம். ஏற்கெனவே போலீஸார், உள்ளேயிருப்பவர்களின் வேலைதான் என்றது, ஓரளவிற்கு அடங்கி விட்டனர். மேலும் விவகாரம் பெரிதானால், தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்தது. இருப்பினும் அவர்கள் செய்த கலாட்டா, ஆர்பாட்டம், அறிக்கை முதலியன, போலிஸாரை துரிதமாக வேலை செய்ய வைத்தது. முடிவு, மூன்று பாதிரிகள், தாமஸைக் கொன்றுள்ளது தெரிந்து விட்டது.

 

© வேதபிரகாஷ்

22-03-2014


[3] Thomas was found murdered in a room at the seminary, which is involved in the training of priests, on the morning of April 1, 2013 by the principal of the seminary Fr Patrick Xavier. The case was a major challenge for police, with pressure to crack it coming from the chief minister and senior Congress leaders in Delhi. A few relatives of the deceased priest from Kerala recently approached the high court, seeking a CBI inquiry because of the delay in the police probe.

http://indianexpress.com/article/cities/bangalore/rector-murder-case-cracked-three-priests-arrested-in-bangalore/

[8] The unsolved murder of Father K.J. Thomas has roused concern in the Vatican, whose authorities are reportedly pressuring top political leaders in the country who, in turn, have expressed displeasure at the slow pace of the probe. The Pontifical Seminary in Malleswaram, where Father Thomas was rector, works under the direct supervision of the Vatican. His murder has therefore been of particular concern to the Vatican.

http://archives.deccanchronicle.com/130530/news-current-affairs/article/who-killed-father-thomas-vatican-wants-know

[12] They also criticized the State Government for its mysterious silence and wondered why the chief minister Jagadish Shettar and Deputy chief minister cum home minister were not active in prodding the police department to expedite investigation. ”Is it because the murdered person was a priest belonging to the minority Catholic community?,” asked Abraham wondering how the government  would have reacted if such an incident took place from other communities or religions. ”It is surprising that the police have remained silent even 12 days after the murder,” he said.

[13] According to The New Indian Express, police sources believe that the rector was done in by people known to him. Evidence suggests that the assassins had a dialogue with the priest before he was killed. Fr Thomas was hit on his head with a blunt weapon. The assailants had also hit on his forehead and then strangulated him by using the dhoti he was wearing, it is gathered. The investigators believe that one of the priest’s killers knocked at the priest’s door, and when he came out, his attention was diverted, providing two others who had accompanied him, an opportunity to attack him from behind. The assailants had wiped out blood with the gown the priest was wearing, and had searched his room for documents they needed. http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=169456&n_tit=Bangalore%3A%20Murder%20of%20Fr%20K%20J%20Thomas%20an%20inside%20job%2C%20feel%20police

[20] Mr Mohanty said the accused, who were unhappy with Fr Thomas for being sidelined, had hatched a conspiracy to defame him for which they required certain documents pertaining to the seminary. As per the plan, they tried to steal the documents when Fr Thomas caught them red-handed. Fearing their plans will be revealed, they attacked him with blunt weapons, killing him on the spot and escaped, police said.

[21] The investigation took city sleuths to Andhra Pradesh, Tamil Nadu, Kerala, Goa and Pondicherry, apart from different parts of Karnataka. Cops questioned more than 2,000 people, while 10 suspects underwent a lie detector test and five suspects, including three priests, underwent narcoanalysis in Gujarat.

http://timesofindia.indiatimes.com/city/bangalore/Rivalry-drove-2-priests-altar-boy-to-murder-Fr-Thomas/articleshow/32438076.cms

[23] The two priests were subjected to narco analysis at the Central Forensic Science Laboratory, Ahmedabad, last Friday 14-03-2014.

http://www.thehindu.com/news/cities/bangalore/police-claim-breakthrough-in-rectors-murder-case/article5797279.ece