Archive for the ‘லட்டோர் மாசிமிலானோ’ Category

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலையில் கூட வாடிகனின் தலையீடு – இந்தியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் ஆதிக்கம்!

பிப்ரவரி 23, 2012

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலையில் கூட வாடிகனின் தலையீடு – இந்தியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் ஆதிக்கம்!

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் என்ற மீனவர்களை சுட்ட லட்டோர் மாசிமிலானோ மற்றும் சால்வடோர் கிரோன்: ஜியார்ஜ் மார் அலென்சேரி கிழக்குதிசை சிரிய-மலபார் சர்ச்சின் (Eastern Syro-Malabar Church) தலைவராக இருந்து, சில நாட்கள் முன்னர்தான், கார்டினர் நிலைக்கு உயர்த்தப் பட்டுள்ளார். அதற்காக அவர், வாடிகனுக்குச் சென்றுள்ளார். அந்நிலையில் தான், லட்டோர் மாசிமிலானோ மற்றும் சால்வடோர் கிரோன் என்ற (Latorre Massimillano and Salvatore Girone)  இத்தாலி கப்பலின் இரண்டு ஊழியர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் இரு கேரள மீனவர்கள் அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலை செய்யப்பட்டனர்[1]. அவர்கள் பாதுகாப்பிற்கு வானத்தில் சுட்டேன் என்று வாதிட்டாலும், படகின் மீது பாய்ந்துள்ள 16 குண்டுகளில் மூன்று குண்டுகள் ஒரு மீனவனின் உடலிலும், இரண்டு குண்டுகள் அடுத்த மீனவனின் உடலிலும் பாய்ந்துள்ளதிலிருந்து, அவர்கள் குறிபார்த்துதான் சுட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. பிறகு தாங்கள் இந்தியாவின் எல்லைகளில் இருந்து சுடவில்லை என்று வாதிட ஆரம்பித்தனர். அதுவும் எடுபடாத போது, அவர்கள் இத்தாலிய சட்டத்தின் படி விசாரணைச் செய்யப் பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்று வாதத்தை மாற்றிக் கொண்டனர். அதுவும் எடுபடாமல் போக, மதரீதியில் இறங்கியுள்ளதை அந்த புது கார்டினல் சொல்வதிலிருந்து வெளிப்படுகிறது[2].

தூதரக அதிரடி தாக்கம் – கேரள முதல்வருடன் இத்தாலிய மந்திரி ஆலோசனை[3]: டெல்லி வந்துள்ள இத்தாலி வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுரை சந்தித்து பேசினார். அப்போது, துப்பாக்கிச் சூடு சர்வதேச எல்லையில் நடந்துள்ளது. எனவே இந்தியா ஒருதலைபட்சமாக விசாரணை நடத்த கூடாது என்று கூறினார். அதற்கு, இந்திய எல்லையில்தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எனவே இந்திய சட்டத்துக்கு உட்பட வேண்டும் என்று பிரனீத் வலியுறுத்தினார்.  இதற்கிடையே, மீனவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகளை கைப்பற்ற, கப்பலில் சோதனை நடத்த கொல்லம் 2வது வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால், கப்பலில் சோதனை நடத்த உத்தரவிட இந்தியாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கப்பல் கேப்டன் உம்பர்டோ கூறியுள்ளார். இந்நிலையில் இத்தாலிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா இன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி இத்தாலிய கடற்படையினர் மனு[4]: கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படையைச் சேர்ந்த இருவரை கேரள காவல்துறையினர் கொல்லம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இத்தாலிய கடற்படையினர் சார்பில், கேரளா காவல்துறையினர் தங்கள் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இருநாட்டு எல்லையில் நடந்த பிரச்சினை என்பதால், இச்சம்பவத்திற்கு இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தவறு என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இத்தாலிய கப்பல் ஊழியர்களின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து கொல்லம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ. 25 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்திய பின், கப்பலை இந்திய கடற்எல்லையில் இருந்து செல்லலாம், அதுவரை, இங்குதான் இருக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது[5].

கார்டினல் வாடிகனின் மத்தியஸ்தராக செயல்படுகிறாரா? கார்டினல் ஜியார்ஜ் மார் அலென்சேரியின் தலையீடு கிருத்துவர்களின் இரட்டை வேடம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் குணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. கொல்லப்பட்ட மீனவர்களில் கூட மதத்தைப் பார்த்து வேலை செய்யும் போக்கைக் காணும் போது, அவர்களின் மத-அடிப்படைவாத பாரபட்ச போக்கும் வெளிப்படுகிறது. “நான் கத்தோலிக்க அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளேன். அவர்கள் இந்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக கே.வி. தாமஸ் கத்தோலிக்க கார்டினகளுக்கு நடந்த வழிப்பாடு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் அவர் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளார். ஆதலால், அவர் மிகுந்த முயற்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்”, என்றெல்லாம் அந்த கத்தோலிக்க கார்டினல் கூறியிருந்தார்[6]. லத்தீன் கத்தோலிக்கர்களும், மீனவர்களும் கிருத்துவர்கள் என்றாலும், கார்டினலின் இத்தகைய பேச்சு, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்[7]. பிறகு, “நான் அப்படி சொல்லவில்லை, பிரச்சினை சுமூகமாக முடியும் என்றுதான் சொன்னேன், ஆனால், வாடிகன் தரப்பில் மத்தியஸ்த்தம் செய்ய தான் ஈடுபடவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[8]. உடனே “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, கார்டினல் மாற்றிச் சொன்னதை வெளியிட்டுள்ளது[9]. ஆகவே –

  • ஒன்று அவர் பாதி உண்மையை சொல்லியிருக்க வேண்டும்
  • அல்லது பாதி பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • ஒன்று அவர் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது வாடிகன் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • இல்லை வாடிகன் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;

எது எப்படியாகிலும், பொய் சொல்வதில் கிருத்துவர்கள் போப் வரையில் கூட வல்லவர்கள் என்று தெரிகிறது.

கேரள நீதிமன்றத்தின் ஆணை[10]: இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலிய கடற்படையினர் இருவரும் நேற்று முன்தினம் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு, நேற்று அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் விருந்தாளிகள் போல் போலீசாரால் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். இந்தியர்களை கொலை செய்தவர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் இருந்து உணவு சப்ளை செய்யப்படுகிறது என்றும், கொச்சின் துறைமுகத்தை சுற்றிப்பார்த்து மகிழ்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன[11]. வந்துள்ள மந்திரியும் இதைக் கேட்டதும் பூரித்து போயிள்ளார்[12].

கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் 1 கோடி நஷ்டஈடு கோரல்[13]: இத்தாலிய கப்பற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு கேரள மீனவர்களில் ஒரு மீனவரின் குடும்பத்தினர் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். மேலும், நஷ்ட ஈடு கொடுக்காமல், இத்தாலிய கப்பலை இந்திய எல்லையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். கடற்கொள்ளையர் என்று தவறாக நினைத்து கேரள மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இத சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் நீதி கிடைக்குமா? போர்ச்சுகீசிய காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை வெள்ளைக்காரர்களால் நடத்தப் பட்ட கொலைகள் இவ்விதமாகத்தான் பாரபட்சம் காட்டப் படுகின்றன. இந்தியர்களின் உயிர் அவர்களுக்குக் கிள்ளுக்கீரைதான். இப்பொழுது, ஏதோ சட்டங்கள் உள்ளன என்று தயங்குகிறார்கள் இல்லையென்றால், தாக்கிக் கொன்றுவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இப்பொழுது உல்கம் முழுவதும் இந்நிகழுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனெனில், கத்தோலிக்க சோனியாயாவே அதிகாரத்துடன் இருக்கும் போது, கேரளாவில் ஆட்சியில் உள்ளவர்களும், போலீஸ் கமிஷனர் என்று எல்லோருமே கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்று இருக்கும் போது என்ன நடக்கும் என்று பார்க்கின்றனர்! நாமும் பார்க்க வேண்டியதுதான்.

வேதபிரகாஷ்

23-02-2012


[1] Two Indian fishermen, Ajesh Binki and Gelastine, were allegedly mistaken as pirates and shot dead by the security crew of cargo vessel Enrica Lexieon February 15 off Alappuzha. Two Marines have been arrested for the shooting.

[6] “I am and will remain in close contact with the Catholic ministers of Kerala and I hope that they will help to pacify the situation. In particular, I trust in the work of the Tourism Minister, the Catholic KV Thomas, who participated in the consistory in Rome in past days and attended the mass with the Holy Father and the new cardinals: he is a man of great moral stature and of significant influence, both in the local and central government, and he assured me his maximum effort. I guarantee, in the next few days, my constant involvement with the Indian authorities on the matter”.

http://www.firstpost.com/india/why-is-keralas-newest-cardinal-batting-for-italian-killers-221271.html

[7] This controversy is likely to amplify the socio-political divide between the two communities, although both are Catholics.

[12] “We have expressed our appreciation in the manner in which they have been treated,” the minister told reporters here.

http://www.dnaindia.com/india/report_happy-that-arrested-italians-are-being-treated-well-staffan-de-mistura_1653902