Posts Tagged ‘திண்டிவனம்’

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

திசெம்பர் 24, 2021

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

முன்னுக்கு முரணான தேதிகள் குறிப்பிட்டு ஆக்கிரமிப்பை நியாயபடுத்தும் போக்கு: இந்த சர்ச்சின் பேஸ்புக் குறிப்பிடுவது, திருவண்ணாமலை மாவட்டம் வேளாங்கண்ணி[1] கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கார்மேல் மலை மாதா கோயில் ரோமன் கத்தோலிக்க வேலூர் மறைமாவட்டத்தின் வழிபாட்டில் இயங்கி வருகின்றது[2]. இளையாங்கண்ணி கிராமத்தை பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி உள்ளனர்[3]. ஏபிபி செய்தி குறிப்பிடுவது, இந்த கிராமத்தில் வனத் துறைக்கு சேர்ந்த மலையை இணைத்தவாறு 160 ஏக்கர், பரப்பளவில் 150 அடி உயர, மலை ஒன்று உள்ளது[4]. இவை அனைத்தும்  வருவாய்த்துறை ஆவணத்தில் கல்லாங்குத்து என குறிப்பிடப்பட்டுள்ளது[5]. இந்த மலையின் மீது கடந்த 1961 ஆம் அந்தபகுதி மக்கள் மூலம் மலையில் சிலுவை நட செய்துள்ளது சர்ச் நிர்வாகம். பொதுமக்கள் முன்னிறுத்தி மலைமீது இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து 1982ஆம் ஆண்டு சர்ச் கட்டப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து மலைமீது செல்வதற்கு படிக்கட்டுகள் அமைத்து, 2014ஆம் ஆண்டில்  மலையை குடைந்து மண் சாலை அமைத்து, மலை மீது மேலும் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாற்றி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த மண் சாலையை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையாக அமைக்க செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரி தலைமையில் பூமிபூஜை நடந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கடந்த 19ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்.

19-12-2021 அன்று மரக்கன்றுகள் நடுவதற்காக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்: அதாவது செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரியை வைத்து எப்படி பூமிபூஜை நடத்தினரோ, அதுபோல, இவரையும் வரவழைத்து மரக்கன்று நட சொல்லியிருப்பர் போலும். அப்போது  5 ஏக்கர் பரப்பளவில் மலையில் சர்ச் மற்றும் சிலுவை அமைக்கப்பட்டதையும்  மேலும் சில கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை  அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு துறையினர் அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் அரசு ஆவணத்தில் உள்ளது என்றும்  அந்த இடம் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் மக்களை முன்னிறுத்தி சர்ச்   நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பைக் கண்டு பிடித்து நோட்டீஸ் கொடுத்த ஆட்சியாளர்: இதையடுத்து சர்ச் கட்டப்பட்டுள்ளது இடத்தை விட்டு மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி சர்ச் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வசப்பட்டு பஞ்சாயத்துக்குட்பட்ட சவேரியார் பாளையத்தில் உள்ள மலை மீது சிலுவை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம்  இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயளாலர்  அருண்குமார் நிர்வாகிகள் அளித்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக கிறிஸ்துவ  ஜெபகூட்டங்கள் மற்றும் சர்ச் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஏழை பொது மக்களையும் குழந்தைகளையும் மனதை மாற்றி மதத்தை மாற்றி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் கொடுத்த புகார் மனு: திருவண்ணாமலை மாவட்டத்தில், அனுமதியின்றி தொற்றுநோய் போல் வளர்ந்து வரும் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடங்களை அகற்றக்கோரி, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில், கலெக்டர் முருகேசிடம் மனு அளிக்கப்பட்டது[7]. அதில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தேவாலயங்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதில், ஏழை இந்துக்களும், குழந்தைகளும் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுகின்றனர். ஒரு கும்பல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிகிறது, முக்கியமாக நோய்வாய்ப்பட்ட இந்துக்களுக்காக பிரார்த்தனை செய்து, உங்கள் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ராமகிருஷ்ணா ஓட்டல் முன், வீடு என ஆவணப்படுத்தப்பட்டு, கீழ்பென்னாத்தூரை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில், நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, இளையாங்கண்ணி பஞ்சாயத்துக்கு சொந்தமான மலை ஆக்கிரமித்துள்ளது. ந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அனுமதியற்ற பிரார்த்தனை கூடங்களை அரசு தடை செய்ய வேண்டும்.

தினமலரில் வெளியான செய்தி[8]: செங்கம் அருகே, மலையை ஆக்கிரமித்து சர்ச் விஸ்தரிப்பு செய்வது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் – தனி தொகுதிக்கு உட்பட்ட, இளையாங்கண்ணி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, 150 அடி உயர மலை மீது கார்மேல் மாதா சர்ச், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, மலை உச்சியை சமன் செய்து, சர்ச் விரிவாக்கம் செய்யும் பணியை, நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதற்காக, மலை மீது சாலை அமைக்கும் பணியை மூன்று மாதங்களுக்கு முன், செங்கம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கிரி துவக்கி வைத்தார். இந்நிலையில், அக்கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியை, நேற்று முன்தினம் கலெக்டர் முருகேஷ் துவங்கி வைத்தார். தொடர்ந்து, மலை மாதா சர்ச் பகுதியை ஆய்வு செய்ததில், மலையை சமன் செய்து விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ‘மலையை ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது’ என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மலை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, மலை மாதா சர்ச் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்[9].

© வேதபிரகாஷ்

24-12-2021


[1] வேளங்கண்ணி என்று தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறிப்பிடப் படுவது தெரிகிறது. இளங்கண்ணி என்ற சொல்லும் விசமத்தனமானது. கண்ணிக்கும் கன்னிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா அல்லது கண்ணி வைத்து இடத்தை அக்கிரமிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

[2] Elayankanni, is a village in Tiruvannmalai District, Tamil Nadu, South India. It is one of the big parishes in the Catholic Diocese of Vellore. https://www.facebook.com/MountCarmelElayankanni/

[3] Most of the people (90%) are traditional and God fearing Catholics and the rest are Hindus. More than 1200 families are living here. Each and every day these people are growing in their spirituality. Most of the people are farmers. Nearly 30 Catholic priests and more than 60 nuns are called from here to render their service to God and to the Catholic Church. They are working in different parts of India and also in many other countries. This village is abundantly blessed and protected by Our Lady of Mount Carmel, our patroness, in a special way.

https://www.facebook.com/MountCarmelElayankanni/

[4] ஏபிபி.நியூஸ், மலை மீது சிலுவை நட்டு 5 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்புசர்ச் கட்டடத்தை தவிர்த்து மற்றவற்றை அகற்ற உத்தரவு, By: V.வினோத் | Updated : 22 Dec 2021 07:58 PM (IST).

[5] https://tamil.abplive.com/crime/the-investigation-revealed-that-the-church-was-built-by-occupying-the-cross-on-the-mountain-31678

[6] அதிபன்.டிவி, முதலில் சிலுவை, பிறகு தேவாலயத்தை கட்டுங்கள்…! ஆக்கிரமிப்பு மலை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!, By athibantv -டிசம்பர் 22, 2021.

[7]https://athibantv.com/political/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/

[8] தினமலர், மலையை ஆக்கிரமித்து சர்ச்; நடவடிக்கை எடுக்க உத்தரவு, Updated : டிச 20, 2021  06:51 |  Added : டிச 20, 2021  06:49.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2917897

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

பிப்ரவரி 18, 2012

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

 

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு[1]: நள்ளிரவில், கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து, இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருசுக்குப்பம் சர்ச் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கிருத்துவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் உள்ள தொடர்பும் வெளிப்பட்டுள்ளது. மார்ச் 13, 2003 அன்று ஜோஸப் என்பவன், திருமாவளவன் குரலில் பேசி பணம் கேட்டதும், இந்த சர்ச்சிலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது[2]. பிறகு அது மோசடி என்று தெரியவந்தது. இருப்பினும், திருமாவளவன் என்று கேட்டால் பணம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. திருமாவளவன் கிருத்துவர் என்று அவர் நண்பர்கள் கூறுவதுண்டு. கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு, குல்லா போட்டு கஞ்சி கொடுக்கும் போது, கிருஸ்துவர்களுக்கு பலமுறை சங்கடமாகியுள்ளது. இருப்பினும், திருமாவளவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்.

152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் சர்ச்: புதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள்[3] பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. 2009ல் 150 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது[4]. இங்கு, திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்[5]  (45), பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம் (16-02-2012), நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன், பாதிரியார் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்லள் அம்மாணவி உள்ளே சென்றதை பார்த்து விட்டு மற்றவர்களிடத்தில் சொன்னதால், கையும் களவுமாக பிடிபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆலயம் எதிரே திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ்[6], பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆலயத்தில், நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.

இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்: இந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர். தலைவர் சனில்குமார், பொதுச் செயலர் முருகையன் ஆகியோர் தலைமையில், இந்து முன்னணியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். அதற்குள் விஷயம் அறிந்த மற்ற இயக்கத்தினர் வந்துவிட்டனர்.

பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பிய மற்ற இயக்கங்கள்: தகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிரியார் மீதான குற்றத்தை, கல்லூரி மாணவி மறுத்தார். இதனால், அனைவருக்கும் வியப்பானது.

புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு நள்ளீரவில் மாணவி வந்துள்ளாராம்: இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், “தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.சி.ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு, பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார். ஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால், பகலில் கூட சென்றிருக்கலாம், ஆனால் நள்ளிரவில் ஏன் செல்ல வேண்டும் என்று தான் மக்களுக்கு புரியவில்லை. இல்லை, பாதிரியாரே காலையில் வரசொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம். அவ்வாறில்லாதலால், மக்களுக்கு சந்தேகம் வந்தத்தில் வியப்பில்லை. மேலும் சமீபகாலங்களில் கிருத்துவப் பாதிரிகள் இத்தகைய பாலியல், செக்ஸ் விஷயங்களில் ஈடுபட்டுள்ளது, மாட்டிக் கொண்டுள்ளது சகஜமாகி விட்டதாலும், டிவி-நாளிதழ்களில் சில விஷயங்கள் வெளிவந்து விட்டதாலும் மக்கள் அவ்வாறே நினைத்திருக்கலாம்.  குருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு என்று “இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” அறிவித்ததும் ஆச்சரியமான விஷயம் தான்!


[2] Chennai youth held for `cheating’ Pondy Church heads By Our Staff Reporter, Saturday, Mar 15, 2003

Pondicherry March 14. Joseph alias Ravi (32) of Vyasarpadi, Chennai, was arrested here yesterday for allegedly cheating heads of a few churches in Pondicherry. The youth had allegedly spoken over phone to the church authorities mimicking the voice of the DPI convener, Tirumavalavan.

The Superintendent of Police, V.J. Chandran, said today that the youth had allegedly called the Bishop House on February 24 over phone mimicking the tone of the DPI leader. He told them that he wanted to hold a function to present tricycles to the handicapped children. Hence, he sought their contribution. Believing that it was only the DPI leader contacting them, the Bishop House assured that Rs. 10,000 would be given for the project. As requested, a cheque was prepared in the name of Ravi and handed over to the youth.

The same youth contacted the head of another church at Kurusukuppam on March 3 seeking Rs. 5,000 for the same project. This time also he spoke in the voice of Mr. Tirumavalavan. The head of the church reportedly gave Rs. 5,000 to the youth. When the Bishop House contacted Mr. Tirumavalavan, the cheating came to light. The management of the Bishop House filed a police complaint

http://www.hindu.com/2003/03/15/stories/2003031504890300.htm

[3] Peace meet to mark 150th year of church Staff Reporter, The Hindu, Thursday, Sep 24, 2009

PUDUCHERRY: A three-day conference on peace will launch the 150th year celebrations of the St. Francis of Assisi church at Kurusukuppam. The feast will start on September 25 and will go on till October 4. Parish Priest Fr. P. Arul Dass said the church was built in 1858 in honour of St. Francis of Assisi. The feast will seek to spread his spiritual views of love, peace and harmony and it is with this objective that the conference on peace has been organised from September 25 to 27, he said. Archbishop of Pondicherry-Cuddalore Anandarayar will celebrate the mass at 11 a.m on Sunday, September 27. He said about 500 persons from Puducherry,

http://www.hindu.com/2009/09/24/stories/2009092451090200.htm

[4] St.Francis of Assisi Church, Kurusukuppam, Pondicherry, Pin : 605 012,Tel.Ph: 0413- 2227626.

[6] இந்த பெர்க்மான்ஸ் வேறு மற்றும் பாட்டுப் பாடி ஆடும் பெர்க்மான்ஸ் வேறு என்று தெரிகிறது.

கிருத்துவர்களின் நிலம் அபகரிப்பு தொடர்கிறது!

பிப்ரவரி 10, 2011

கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை.

கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை. முதலில், அமைதியாக சிலுவையை வைப்பார்கள்; சிறியதாக கொட்டாய் போடுவார்கள்’; ஜெபம் செய்கிறேன் என்று 10-20 பேர் வர்வார்கள்; பிறகு சுவர் கட்டுவார்கள், சிமென்ட் கூறை போடுவார்கள்; அதற்குள் யாராவது எதிர்ப்புத் தெரிவித்தாலோ, தட்டிக் கேட்டாலோ, உள்ளூர் போலீஸாரை வாலைத்துப் போட்டு அமைதியாக்கி விடுவார்கள். அதற்குள் உள்ளூர் அரசியல்வாதி அல்லது பெரியமனிதர்களைப் பார்த்து சரிகட்டி, பட்டா வாங்க கிளம்பிவிடுவார்கள்; இவ்வாறான காரியங்களில் இடையில் கிருத்துவ அதிகாரிகள் இருந்தால், அவ்வளவு தான், புகார் செய்தால் கூட கண்டு கொள்ளமாட்டார்கள் அல்லது புகார் கொடுத்தவர்களுக்கு எதிராக செய்ல்படுவார்கள். ஆவணங்கள் மறைந்துவிடும் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படமாட்டாது. இப்படித்தான், அச்சரப்பாக்கத்தில், ஒரு குன்றின் மீது சர்ச் ஒன்று பெரிய அளவில் கட்ட்ப்பட்டுள்ளது.

அச்சறப்பாக்கம் ஆக்கிரமிப்பு (2009): அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார்[1].அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது.வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 2009 நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர். தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு[2] (2011): திருப்பூர் அருகே பிச்சம்பாளையம்புதூரில் புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது; போலீசார் சமரசம் செய்தனர். திருப்பூர், பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர், கிழக்கு ஸ்ரீநகர் பகுதியில் குடியிருப்பையொட்டி ரோட்டோரத்தில் 15 சென்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் சி.எஸ்.ஐ., சர்ச் கட்டப்பட்டுள்ளது. சர்ச்க்கு பின்னால் 2 சென்ட் காலி இடம் உள்ளது. காலி இடத்தில் சர்ச்சை விரிவுபடுத்த கிறிஸ்தவ அமைப்பினர் பலமுறை முயற்சி செய்துள்ளனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தில் ரேஷன் கடை, நூலகம், புறகாவல் நிலையம் என பொது காரியத்துக்கு பயன்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காலை கிறிஸ்தவ அமைப்பினர் 200 பேர் திடீரென சிமென்ட், கம்பி, கருங்கல் கொண்டு வந்து சர்ச் கட்ட முற்பட்டனர். தகவல் அறிந்ததும் இந்து அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் கூடி, சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. எஸ்.பி.அருண், டி.எஸ்.பி.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். காலி இடத்தில் எந்த கட்டடமும் கட்டக்கூடாது; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைபடி நடந்து கொள்ள அறிவுறுத்தினார். பிரச்னை ஏற்படாமல் இருக்க 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புறம்போக்கு இடத்தில் சர்ச்:: மதிற்சுவர் கட்ட எதிர்ப்பு[3] (2010): தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே கிறிஸ்துவ ஆலய காம்பவுண்ட் சுவர் கட்ட அப் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு்பட்டனர். ஆறுமுகநேரி அருகே உள்ளது தலைவன்வடலி கிராமம். இங்கு 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இடத்தில் சர்ச் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இப் பிரச்சனை தொடர்பாக கிராம மக்கள் பலமுறை பலகட்ட போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.மேலும், சர்ச் கட்டுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய 3 ஏக்கர் 48 சென்ட்டில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதற்கு கோர்ட்டில் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த இடத்திற்கு அருகில் இசக்கியம்மன் கோயில் மற்றும் இடுகாடு ஆகியவை உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் வந்த காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தார். இதனையடுத்து, காம்பவுண்ட் சுவர் கட்டுவது தொடர்பாக திருச்செந்தூர் ஆர்டிஒ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆறுமுகநேரி – ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம் (1973)! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது[4], “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[5]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[6] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம் (1973)! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[7] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

1973-2011 கிருத்துவர்கள் எப்படி முன்னேறியிருக்கிறார்கள்: சுமார் 40 ஆண்டுகளில் எல்லாமே முன்னேறித்தான் உள்ளன. திமுக ஊழலில் முன்னேறி கோடிகளில் கொடிக் கட்டிப் பறக்கிறது! அப்பொழுது ஹண்டே கோதுமை ஊழலுக்கு வழக்குப் போட்டார்[8], இப்பொழுது சுப்ரமணிய சுவாமி வழக்குப் போடுகிறார்! கிருத்துவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், கற்பழிப்பு, செக்ஸ், பாலியல், சிறுவர்-சிறுமி வன்புணர்ச்சி இத்யாதி………….முதலியவற்றில்[9], அமெரிக்க-ஐரோப்பிய நாட்டவர்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு முனேற்றி விட்டார்கள்[10]! ஒரு விளம்பரத்தில் சிறுவன் ஒருவன் கவலைப்பட்டுக் கொள்வான், “வயது தான் ஆகிறது, ஆனால், எனக்கு மட்டும் ஏன் இவை எல்லாம் முடியவில்லை, என்று அம்மாவிடம் கேட்பான். ஆனால், இவ்விஷயத்தில், அம்மாவிடம் எதையும் கேட்க வேண்டாம், ஒழுங்காக இருந்தாலே போதும்!

வேதபிரகாஷ்

10-02-2011


[1] தினமலர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார், அக்டோபர் 02,2010 , http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97459&Print=1

[2] தினமலர், புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு, பிப்ரவரி 07, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182576

[3] தினமலர், சர்ச் காம்பவுண்ட் சுவர் கட்ட பொது மக்கள் எதிர்ப்பு-சாலை மறியல்,  நவம்பர் 17, 2010, http://thatstamil.oneindia.in/news/2010/11/17/arumuganeri-church-wall-villagers-protest.html

[5] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[6] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[7] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[9] பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள அகரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ஓவியா(12) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பெரம்பலூரில் தனியாரால் நடத்தப்படும் விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படித்து வருகிறார். விடுதி வார்டன் ஜேம்ஸ்(40) என்பவர் கடந்த சில மாதங்களாக ஒவியாவிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனை ஓவியா தனது தாயார் கவிதாவிடம் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கவிதா அளித்த புகாரின் பேரில் ஜேம்ஸ் விடுதியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182713

[10] இதைப் பற்றிய இடுகைகளை இங்கே பார்க்கவும்: www.christianityindia.wordpress.com, www.womanissues.wordpress.com, etc

பாதிரியாருக்கு பெண்கள் தரும அடி: பணமோசடிக் குற்றத்தில் மற்றுமொரு பாதிரியார் கைது!

ஒக்ரோபர் 15, 2010

பாதிரியாருக்கு பெண்கள் தரும அடி: பணமோசடிக் குற்றத்தில் மற்றுமொரு பாதிரியார் கைது!

வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதாம்: பிரம்மதேசம், அக்.14- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பேரணி கிராமத்தை சேர்ந்த மார்கி என்கிற தருமன் மகன் எம். ஐசக் டேனியல். இவர் பேரணியில் உள்ள கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். வெளி நாட்டில் உள்ள வெள்ளைக்காரர்களிடம் இருந்து கிறிஸ்தவ சபைக்கு நிதி வருவதாகவும், ரூ.2500 கட்டினால் ரூ.1 லட்சமும், ரூ.1250 கட்டினால் ரூ.50 ஆயிரமும் கடன் வாங்கி தருவதாக பெருமுக்கல்லை அடுத்த அருங்குணம் கிராமத்து பெண்களிடம் கூறியுள்ளார்[1].

ஐசக் டேனியல் பணம் சுருட்டல்; ஐசக் டேனியல் கூறியபடி, அந்த கிராமத்தை சேர்ந்த 26 பெண்களும் மொத்தம் ரூ.40 ஆயிரத்து 750 கட்டியுள்ளனர். ஆனால் ஐசக்டேனியல் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அடாவடித்தனமாக பதில் கூறிவந்தான் இல்லை அப்பெண்களின் பார்வையில் படாமலிருந்தான். அந்நிலையில் அவன் திண்டிவனத்திற்கு வந்துள்ளதை அறிந்து கொண்டனர்.

பாதிரியாருக்கு பெண்கள் தரும அடி: இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திண்டிவனத்திற்கு வந்த ஐசக்டேனியலை கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உடனே பிரம்மதேசம் காவல்துறையினர் ஐசக்டேனியலை கைது செய்து விசாரணை நடத்தினர்[2].

பல ஊர்களில் பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது: விசாரணையில், திண்டிவனம், நெய்வேலி, கும்பகோணம் உள்ளிட்ட பல ஊர் களில் பலபேரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த செய்தி கேள்விப் பட்டதும் பல்வேறு ஊர்களில் இருந்து பெண்கள் நேற்று பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு வந்தனர்[3]. இருப்பினும் நமது ஊடகங்கள் இதனைக் கண்டுகொள்ளவேயில்லை!


[3] Police arrested a pastor on charges of duping several villagers of their savings totalling about Rs 40,000 after promising them interest free loans from foreign funding agencies. Police said M Isaac Daniel, a pastor in a church in Perani village near Tindivanam, has been collecting Rs 2,500 and Rs 1,250 from villagers promising them interest free loans of Rs 1 lakh and Rs 50,000 respectively. However, after collecting money from the villagers he failed to arrange loans for them. He evaded repeated pleas from the villagers to refund their money. Furious with the pastor for duping them, they assaulted him when he visited Tindivanam. They took him to Brammadesam police station and lodged a complaint against him. Police registered a case and produced him before a local court that remanded him to judicial custody.

Read more: Pastor dupes villagers promising loans, lands in jail – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Pastor-dupes-villagers-promising-loans-lands-in-jail/articleshow/6750828.cms#ixzz12QuOaycA

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

மே 19, 2010

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

வேதபிரகாஷ்

கிருத்துவர்களின் அபகரிப்பு திட்டம்: கிருத்துவர்கள் திட்ட்டமிட்டுத்தான் மலைகளை முழுங்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது. தமிழகம் மற்றுமல்லாது மற்ற மாநிலங்களிலும், இப்படி சின்னஞ்சிறிய மலைகள், குன்றுகளின் மீது சிலுவையை வைப்பது, வழிபடுவது, இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, சர்ச் கட்டிக்கொள்வது, பிறது அப்படியே அபகரித்துக் கொண்டு தமதாக்கிக்கொள்வது………………..என்ற வித்தை அமூல் படுத்துகின்றனர். திண்டிவனத்தில், அச்சரப்பாக்கம் அருகில் ஒரு மலைக்குன்றை அபகரித்து, அதை, ஒரு “அனைத்துலக கிருத்துவ சுற்றலா மையமாக” மாற்றியுள்ளது[1]. செஞ்சியில் அவர்களது அடாவடித்தனம் கோவில் நிலங்களை மோசடி செய்து கபளீகரம் செய்யும் அளவிற்கு வந்துள்ளது[2]. போதாக் குறைக்கு கோதண்டராம கோவிலே எங்களுக்கு சொந்தம்[3] என்று கிளம்பிவிட்டது கண்டும், யாரும் அதை கவனிக்காமல் இருப்பது, மோசடி கிருத்துவர்களுக்கு ஊக்கமளிப்பதாக தெரிகிறது. இது ஏதோ இந்து முன்னணி பிரச்சினைப் போல சாயம் பூசப்பட்டு[4] இந்துக்களை ஏமாற்ற கருணாநிதி அரசு எந்திரங்களைப் பயன்படுத்துவது தெரிகிறது.

கிருத்துவர்கள் கலட்டா, சாலை மறியல்[5]: செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அந்தோணியார் சிலைகள், போலீஸ் “பாதுகாப்புடன்” அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த கிறிஸ்தவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை உள்ளது. கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். இதே குன்றின் மறுபகுதியில், ஏப்., 14ம் தேதி இந்துக்கள் திடீரென பிள்ளையார் சிலை வைத்தனர். இதனால், சில நாட்களாக செஞ்சியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இதை பராமரித்து வருகின்றனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கிருத்துவர்களை அனுமதித்துவிட்டு இந்துக்களை அவமானப்படுத்துவது: நேற்று அதிகாலை 5 மணிக்கு செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார், குன்று அருகே குவிக்கப்பட்டனர். செஞ்சிக்கோட்டை முதுநிலை பராமரிப்பு அதிகாரி ஜெயகரன் தலைமையிலான கோட்டை ஊழியர்களும், கூலி தொழிலாளர்களும் குன்றின் மீதிருந்த பிள்ளையார், அமலோற்பவமேரி, அந்தோணியார் சிலைகளையும், மூன்று சிலுவைகளையும் அகற்றினர்.

ஒலிப்பெருக்கிகளில் கிருத்துவர்களின் “அபாய அறிப்பு”! கிறிஸ்தவ சிலைகள் அகற்றப்படுவதை அறிந்து, அருகில் இருந்த புனித மிக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களை திரட்ட, தொடர்ந்து அவசர மணி ஒலிக்கப்பட்டது. ஒலிபெருக்கியில் கிறிஸ்தவ தெய்வ சிலைகளை பாதுகாக்க உடனே தேவாலயத்திற்கு வர வேண்டும் என, அவசர அழைப்பு விடுத்தனர். இதெல்லாமே அவஎர்களது கபட நாடகத்தை காண்பிக்கிறது. இவர்களுக்கும் அந்த ஜீஹாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை. இன்று ஒலிப்பெருக்கிகளில் “அபாயம்” என்று கத்துபவர்கள், நாளைக்கு இந்தியாவிற்கு தொரோகம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? “இஸ்லாம் அபாயத்தில் உள்ளது” என்ற கூப்பாடு போடும் அந்த கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் என்ன மாறுபாடு?

கிருத்துவர்கள் சாலைகளில் கற்களைப் போட்டு மறியல்: இதனால் காலை 7.30 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே திரண்டனர். இவர்கள் சிலைகளை அகற்றும் இடத்திற்கு வேகமாக முன்னேறி வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் குழுவினர், சிலைகளை மட்டும் அகற்றிவிட்டு பீடத்தை இடிக்கும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.போலீசாரின் ஒருபகுதியினர் மட்டும் குன்றின் கீழே காவலுக்கு இருந்தனர். அங்கு வந்த கிறிஸ்தவர்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின், புனித மிக்கேல் தேவாலயம் எதிரில் சிங்கவரம் சாலையில் கற்களை போட்டு மறியல் செய்தனர். இத்தகைய அடாவடித் தனத்திற்கு யார் தையம் கொடுப்பது?

சாலைமறிப்பவர்களிடம் கொஞ்சி சல்லாபம் செய்யும் அதிகாரிகள்: அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சியாமளா, டி.எஸ்.பி., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படாமல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை விரட்டி அடித்தனர். பதட்டமான நிலை இருப்பதால் கோட்டை அருகே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் கெஞ்சல், பிறகு கைது என்பதெல்லாமே, அவர்கள் எந்த அளவிற்கு இடம் கொடடத்துள்ளனர், மற்றும் கிருத்துவர்கள் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி சட்டத்திற்கு எதிராக வேலை செய்கின்றன என்பதையும் காட்டுகிறது.

செஞ்சியில் இந்து கோவில்கள் சூறையாடப் படுதல்: செஞ்சி கோட்டையில் இந்து அமைப்பினர் அம்மன் சிலை வைக்க இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள பல கோவில்களில் சாமி சிலைகள் இல்லை. சாமி சிலைகள் உள்ள சில கோவில்களிலும் இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்த போது வழிபாடு இல்லாமல் இருந்ததால், அதே நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கட்ரமணர் கோவிலில், சாமி சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்குமாறு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.,வினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்துக்கள் என்றால் ரோந்து வருவார்களாம். கிருத்துவர்கள் என்றால் கொன்சுவார்களாம்: இந்நிலையில், செஞ்சி கோட்டை வளாகத்தில் ஒன்பது அம்மன் சிலைகளை, இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி கோட்டை, வெங்கட்ரமணர் கோவில் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார், கோட்டை வளாகத்தில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஏப்., 14ம் தேதி இரவு செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான குன்றின் மீது சிலர் திடீரென பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்துவர்களும், போலீஸாரும், அதிகார வர்க்கத்தினரும் சும்மா இருந்ததினால்தானே கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். அப்பொழுது ஏன் சட்டங்கள் செயல்படவில்லை?

2005 லிருந்து கிருத்துவர்களுக்கு உடந்தையாகி 2010ல் பிள்ளையார் வந்ததும் விழித்துக் கொள்கிறார்களா? கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கிருத்துவர்களுக்குத் துணைபானதுக் கண்டிக்கத் தக்கது: உடனடியாக நாத்திகம் பேசும் அரசு இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களுக்குப் புறம்பாக மலைகள், மலைக்குன்றுகள் மீது வைக்கப் பட்டுள்ள சிலுவைகள், கிருத்துவச் சிலைகள் முதலியவற்றை உடனடியாக அகற்றப் படவேண்டு. அத்தகைய மத வெறியர்கள், அவர்களை ஊக்குவிக்கும் திண்டிவனம், திருவண்ணாமலை, சி.எஸ்.ஐ அதிகார வர்க்கங்கள் முதலிவற்றோர் மீதும் இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

19-05-2010


[1] இதற்காக வேண்டுமென்றே அயல்நாட்டவர்களை பேருந்துகளில் அழைத்துவந்து, புதிய கதைகளை அளந்து, அவர்களிடமிருந்து பணத்தையும் பெறுகிகிறார்கள். குறைந்த காலத்தில், அவர்கள் அத்தகைய வேலையை செய்து முடித்துள்ளார்கள்.

[2] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை, பிப்ரவரி 08, 2010,00:00  IST,  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538

[3] தினமலர், கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில், பிப்ரவரி 03,2010,00:00  IST, http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6486

[4] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் , மார்ச் 18,2010,00:00  IST, http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17237

[5] தினமலர், செஞ்சிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைத்திருந்த சிலைகள் அகற்றத்தால் பதட்டம்: போலீஸ் குவிப்பு , மே 19,2010,00:00  IST, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18648

[6] தினமலர், செஞ்சி கோட்டை வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம், மே 15,2010,00:00  IST, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25067