Posts Tagged ‘சிலுவையை வைப்பது’

பர்வதமலையில் கிருத்துவர்கள் வைத்த சிலுவை அகற்றப் பட்டது! அதர்ம ஆக்கிரமிப்புத் தனம், சட்டமீறல் கேவலமாக இருக்கிறது!

திசெம்பர் 7, 2018

பர்வதமலையில் கிருத்துவர்கள் வைத்த சிலுவை அகற்றப் பட்டது! அதர்ம ஆக்கிரமிப்புத் தனம், சட்டமீறல் கேவலமாக இருக்கிறது!

குன்றுகளை ஆக்கிரமித்து சர்ச்சுகள் கட்டும் கிருத்துவர்கள்: சமீபகாலமாக கிருத்துவர்கள் வேண்டுமென்றே, மலைப்பகுதிகளில் உள்ள மேடுகள், சிறு குன்றுகள், குன்றுகள், முதலிய இடங்களில் முதலில் கான்கிரீட் சிலை வைத்தல், பத்து-பதினைந்து பேர் வந்து வழிபடுதல், பிறகு, 50-100 என்று ஆட்களை வரவழைத்து, பிரதி ஞாயிற்றுக்கிழமை என்று ஜெபம் செய்தல், படிப்படியாக கூரை போடுதல், ஒலை / தகடுகள் வைத்து கூடம் கட்டுதல், பிறகு சுவர்கட்டி, அறை போன்றாக்குதல், ஒரு ஆளை தக்க வைத்தல், மின்னிணைப்புப் பெறுதல், என்று படிப்படியாக அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்[1]. திண்டிவனத்திற்கு போகும் வழியில் உள்ள அச்சிறும்பாக்கம் சிவன் கோவில் மலையை அவ்வாறு ஆக்கிரமித்து, பட்டிப்படியாக கட்டிடங்கள் கட்டி, இன்றைக்கு அதனை, ஒரு அனைத்துலக கிருத்துவர்கள் உல்லாச சுற்றுலா இடமாக மாற்றி விட்டனர். மேரி அம்மலை மீது காட்சியளித்ததாக, புது-புது கதைகளைக் கட்டி, அயல்நாட்டவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தையும் வசூலித்து, அந்த இடத்தினையே மாற்றிவிட்டனர். அத்தகைய முயற்சிகள் தாம் மற்ற இடங்களிலும் கையாண்டு வருகின்றனர். இது, செங்கல்பட்டு அடுத்த சோகன்டி கிராமத்துக்கும், அருகில் உள்ள அழகுசமுத்திரம் கிராமத்துக்கும் இடையே காப்பு காடு மற்றும் மலை இடங்களில் வெளிப்பட்டு வருகிறது. செஞ்சியைப் பற்றி இங்கு படிக்கலாம்[2].

2009ல் வாக்குறுதி கொடுத்து 2010ல் ஆக்கிரமிப்பில்ல் ஈடுபட்ட சர்ச்[3]: அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார். அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது. வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 2009 நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர்[4]. தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பர்வதமலை மீது கண் வைக்கும் கிருத்துவர்கள்: கிருத்துவர்களின் அடாவடித் தனங்கள் எல்லைகளை மீறி சென்று கொன்டிருக்கின்றன. உண்மையான விசுவாச்சிகள் என்றால், தங்கள் மதம் உண்டு, என்று செக்யூலரிஸ நாட்டில் இருக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்ற்றே, இந்துக்களுக்கு காலம்-காலமாக புனித இடங்களாக இருக்கும் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இவ்வேலையை செய்து வருகின்றனர். இப்பொழ்ழுது பர்வதமலைமீது கண் விழுந்துள்ளது போலும். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்து தென்மாதிமங்கலம் என்கின்ற கிராமத்தில் உள்ள சிவன்மலை பெயர் பருவதமலை. இது சுமார் 4,500 அடி உயரம் உள்ள இந்த மலையின் மீது அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கிரிவலம் வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலம் வரக்கூடிய சீனனந்தல் என்கின்ற பகுதியில் திடீரென யாருடைய அனுமதியும் இன்றி சிலுவை நடப்பட்டது.

இந்துக்கள் விழித்துக் கொண்டு புகார் கொடுத்தது: இதை அறிந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், சிவனடியார்கள், இந்து இயக்க நண்பர்கள், இந்து இயக்கத்தவர்கள், என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்[5]. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி 2018 புதுப்பாளையம் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த சிலுவையை நடவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து சிலுவை அகற்ற முடிவு செய்து காவல்துறை பாதுகாப்பு கேட்டு அவர்கள் முன்னிலையில் சிலை அகற்றப்பட்டது[6]. உடனே ஒரு சிலர் மறியல் செய்ய, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து சென்றார்கள்.   சிவன்மலை சிலுவை மலையாக மாற்றி சென்னை அச்சிரப்பாக்கம் மலைபோல மதமாற்ற கேந்திரமாக மாற்ற முயற்சித்த கிறிஸ்தவ பாதிரியார்களிடமிருந்து பருவதமலை பாதுகாத்திட்ட வனத்துறை, மாவட்ட வருவாய் துறை, மற்றும் தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்கிறார் ரவிக்குமார். சிலுவை மலையாக அந்தோணியார் மலையாக மாற்ற முயற்சி நடத்தப் பட்டது முறியடிக்கப் பட்டுள்ளது!

இராம. ரவிக்குமார் , மாநில பொதுச்செயலாளர் , இந்து மக்கள் கட்சி தமிழகம் கூறியது[7]: இந்த பருவதமலை பாதுகாப்பு பணிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட அனைத்து இந்து இயக்க சகோதரர்களுக்கும் பாதம் பணிந்து என்னுடைய வணக்கங்களை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் திடீரென அந்தோணியார் குளம் என்று பேனர் வைத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய பாதிரிகளின் அயோக்கியத்தனத்தை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவனடியார்கள் இதற்காக போராட வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கிறோம். இல்லையெனில் பக்தர்களை, பொதுமக்களை திரட்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம் என உறுதி எடுக்கிறோம். வரக்கூடிய மார்கழி மாதம் ஒன்றாம் தேதி போற்றுதலுக்குரிய காஞ்சி மடத்து மாமுனிவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பருவதமலை கிரி வலம் செய்து வழிபாடு செய்வதற்கு வருகிறார்கள். இந்த மார்கழி ஒன்றாம் தேதி நடக்கக்கூடிய கிரிவலத்தில் அனைவரும் பங்கேற்று இந்து சக்தியை, சிவசக்தியை வெளிப்படுத்துவோம். நஞ்சை உண்ட கண்டன் சிவன்பிள்ளைகள் நாம் நயவஞ்சக கிறிஸ்தவர்களின் மதமாற்றம் நிகழ்ச்சியை, மலை ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிப்போம். பர்வத மலையை பாதுகாப்போம் பாரத தேசத்தை பாதுகாப்போம்,” என்றார். இவரது முயற்சியை அனைவரும் பாராட்ட வேண்டும்.

காலனிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு எண்ணம் மற்றும் அடிவருடிகளாக, அடிமைகளாக, கூலி மனப்பாங்குடன் இருப்பது: காலனிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு எண்ணம், இன்றும், இந்த மதம் மாறிய கூட்டத்திற்கு இருக்கிறது என்றால், அவர்கள் அந்த அளவுக்கு அடிவருடிகளாக, அடிமைகளாக, கூலி மனப்பாங்குடன் இருப்பது தெரிகிறது. அத்தகைய இழிய நிலையிலிருந்து, முதலில் அவர்கள் வெளியே வரவேண்டும். ஒரு உண்மையான கடவுள் நம்பிக்கையாளன் அத்தகைய செயலை செய்ய நினைக்கவும் மாட்டான். ஆனால் செய்து விட்டான் எனும் போது, தீவிரவாதி நிலையில் இருக்கிறான் என்று தெரிகிறது. ஆகவே, அரசு மற்றும் போலீஸார் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-12-2018


நன்றி: புகைப்படங்கள் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன.

[1]https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

[2] வேதபிரகாஷ், கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?, மே.19, 2010.

[3] தினமலர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார், Added : அக் 02, 2010 01:49

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97459&Print=1

[5] தினசரி, பர்வத மலைசிவன் மலையை சிலுவை மலையாக்கும் கிறிஸ்தவ வெறியர்களின் முயற்சி முறியடிப்பு, செங்கோட்டை ஶ்ரீராம், 05-12-2018, 11:42 pm.

[6] https://dhinasari.com/local-news/chennai-news/63283-christian-missionaries-trying-to-make-parvatha-malai-siluvai-malai.html

[7] இராம. ரவிக்குமார் , மாநில பொதுச்செயலாளர் , இந்து மக்கள் கட்சி தமிழகம், 86430-8143096553 -65696.

சிலுவைகள் நட்டு, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (2)!

ஏப்ரல் 20, 2017

சிலுவைகள் நட்டு, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (2)!

DM cutting - Hill encroached by the Christians

கிருத்துவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றியது: இதனை [கிருத்துவர்களின் ஆக்கிரமிப்புகளை] அகற்றக்கோரி அழகுசமுத்திரம் கிராம மக்கள் வருவாய்த்துறையினருக்கு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த மாதம் டிசம்பர் 26–ந் தேதி 2016 தாசில்தாரின் ஜீப்பை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து தாசில்தார், ஆர்.டி.ஓ. அலுவலகங்களை முற்றுகையிட்டும் சாலை மறியல் செய்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டருக்கு ஆக்கிரமிப்பை அகற்ற பரிந்துரை செய்தார். ஆக்கிரமிப்பை அகற்ற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டதையடுத்து 16-01-2017 அன்று காலை திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா தலைமையில் வருவாய்த்துறையினர் அழகுசமுத்திரம் ஊராட்சியில் உள்ள மலைக்குன்றில் 10 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்கு வைத்திருந்த சிலைகள் மற்றும் சிலுவைகளை அகற்றினர். 10 ஏக்கர் நிலப்பரப்பில் அவ்வாறு சிலுவைகளை வைக்க வேண்டிய அவசியம், போக்கு என்ன என்று யோசிக்கத்தக்கது. அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

UCA prop[agandist news 17-04-2017

அனைத்துலக ரீதியில் பொய்பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கிருத்துவர்கள்[1]: இத்தகைய உண்மைகளை மறைத்து, 15-04-2017 அன்று நல்ல வெள்ளியின் போது, பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளன கேடு கெட்ட கிருத்துவ இணைதள ஊடகங்கள். “தலித் கத்தோலிக்கர்களை” பொது இடம் மற்றும் அரசுக்கு சொந்தமான மலைமீது வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. நல்ல வெள்ளி கொண்டாட தடுத்ததோடு, கன்னியாஸ்திரிக்களை தொட்டு, தள்ளுமுள்ளல் செய்யப்பட்டது என்றும் ஆங்கிலத்தில் அசிங்கமாக வர்ணித்தது. கத்தோலிக்கர்களில் எப்படி, “தலித் கத்தோலிக்கர்கள்” வந்தார்கள் என்று தெரியவில்லை. மாசிலா அடைக்கலம் ஜேகப் என்ற பாஸ்டர் இத்தகைய அபாண்டமாக புளுகியுள்ளான் [“Government officials stopped the service midway, pulled down the altar and manhandled nuns,” Father Masiladaikalam Jacob, pastor of Sogandi Parish][2]. இவர்கள் எல்லாம் எப்படித்தான், இப்படி வெட்கமே இல்லாமல் பெயர்களை வைத்துக் கொண்டு, அப்படியே எதிர்மறையான சமூகவிரோத செயல்களை, கற்பழிப்புகளை, குற்றங்களை எய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. மாசிலா-என்று குறிப்பிட்டுக் கொள்ளவே யோக்கியதை இல்லாத இவனுக்கு, அழுக்கு, அசிங்கம், மலம் போன்றவைதான் அடைக்கலமாகியிருக்கின்றன. இவ்வாறு பாதித்தவர்களுள் அரசு அதிகாரிகள், போலீசார் முதலியோரும் அடங்குவோர் என்று கண்ணால் பார்த்த சாட்சிகள் சொன்னதாக சேர்த்துக் கொண்டுள்ளது[3]. தங்களுடைய பெண்களை இவ்வாறு மோசமாக சித்திரித்துக் கொள்ள எப்படித்தான் அவர்களுக்கு மனம் வந்ததோ என்று தெரியவில்லை.

Sogandi tamasha - Woman defying police 15-04-2017

தலித் பிரச்சினையை கிருத்துவமதத்தின் உள்பிரசினையாக இருந்தாலும், அதனை, வேறு மாதிரி திசைத்திருப்ப முயன்றுள்ளது: இன்னொரு கிருத்துவ இணைதளம், சடங்கு நடத்தவிடாமல் அபச்சாரம் செய்து விட்டது என்று புலம்பி வைத்துள்ளது[4]. அவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில், நடத்தினால் யார் தடுக்கப்போகிறார்கள், ஆனால், வேண்டுமென்றே மலைமீது நடத்துகிறேன் என்றது, அதிலும், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செய்வது, தாங்கள் சிறுபான்மையினர் / கிருத்துவர்கள், தங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது, என்ற ரீதியில் செயல்பட்டது, பிரச்சினையை  உண்டாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு உள்ளதும் தெரிகிறது. கலவரம் ஏற்படவேண்டும், அதனால், ஆதாயம் தேட வேண்டும் என்ற உள்நோக்கமும் புரிகிறது. இன்ந்தியன் எக்ஸ்பிரஸ் அதனால் தான், அத்தகைய ஜாதி-விளக்கத்தைக் கொடுத்தது போலும். அதாவது, தலித் பிரச்சினையை கிருத்துவமதத்தின் உள்பிரசினையாக இருந்தாலும், அதனை, வேறு மாதிரி திசைத்திருப்ப முயன்றுள்ளதும் தெரிகின்றது. சூசை தீர்ப்பில் தோல்வியுற்றப் பிறகு, இவ்வாறு கலாட்டா செய்வதும் தெரிகிறது.

UCA persecution- propagandist news 17-04-2017

இது மதப்பிரச்சினையா, ஜாதிப்பிரச்சினையா?: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதற்கு ஒரு ஜாதி-விளக்கம் கொடுத்துள்ளது[5]. இந்த நிறுவனத்தில் கிருத்துவர்களுக்கு ஆதரவாக, சில நிருபர்கள், உதவி-ஆசிரியர்கள் இருப்பது, இருந்தது, இருந்து வருவது தெரிந்த விசயமே. தலித்-கிருத்துவர்களுக்கும், ஜாதி-இந்துக்களுக்கும் இடையிலான போராட்டம் போல சித்தரித்துள்ளது. மத சின்னங்களுக்கு இடையில் உள்ள போர் உச்சக்கட்டத்தை எட்டியது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[6].  அப்படியென்றால், கிருத்துவர்கள் ஏன் அத்தகைய அபாயகரமான விளையாட்டை அடிக்கடி செய்ய வேண்டும்? ஆக்கிரமிப்பு என்று ஒப்புக்கொண்டாலும், அத்தகைய சட்டமீறல், அத்து மீறல், முதலியவற்றை விடுத்து, ஜாதிப் பிரச்சினை போன்று விவரிப்பதும் திகைப்பாக இருக்கிறது[7]. கத்தோலிக்க இணைதளமே, இதனை, மதப்பிரச்சினையாகக் கருதுகின்றதே தவிர, ஜாதிப்பிரச்சினையாக குறிப்பிடவில்லை. அந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் அவ்வாறான விளக்கம் கொடுத்துள்ளது, வேடிக்கையா இருக்கின்றது.

Sogandi tamasha - stage managed-2

அனைத்துலகப் பிரச்சினையாக்கி பிரச்சாரம் செய்யும் விஷமத்தனம்: போதாகுறைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் அமைதியைக் குலைத்தது என்றும் சேர்த்துள்ளது[8].  இதில், ஆர்.எஸ்.எஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சட்டங்களை மீறி அரசுநிலத்தை எப்படி ஆக்கிரமித்துக் கொள்ளலாம், அங்கு எப்படி அத்துமீறி சிலைகளை வைக்கலாம், நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படலாம் என்றெல்லாம் மெத்தப் படித்த அந்த கிருத்துவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது போலும். ஆங்கிலத்தில் போடும் போது, கொஞ்சமாவது, அவர்களுக்கு அறிவு, புத்தி முதலியவையெல்லாம் தேவை என்று அவர்களும் யோசிக்காமல் பொய்களை வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இப்பொய்களை, கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்பது போல புனைத்து, கதை விட்டிருக்கிறார்கள்[9]. இனி ஒருத்தன் புளுகினாலே போதும், அது உண்மையாகி விடுகிறது என்று இன்னொருவன் புளுகியிருக்கிறான்[10]. அதனால், அபச்சாரம் என்றெல்லாம் சேர்த்து புளுகியிருக்கிறான்[11]. வீடியோக்களை முழுவதுமாக இல்லாமல், சிறியதாக-பகுதியாக போட்டும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்[12]. ஆனால், இவற்றையெல்லாம் எதிர்கொள்ள, சமாளிக்க, எதிர்-பிரச்சாரம் செய்ய இந்துக்களுக்கு நிச்சயமாக ஞானம், வசதி, திறமைகள் இல்லை. அதனால் தான் கிருத்துவர்கள், அளவுக்கு படுமோசமாக நடந்துகொள்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

20-04-2017

Sogandi tamasha - stage managed-1

[1] Ucannews, Indian nuns ‘manhandled’ at Good Friday service, ucanews.com reporter, Chennai , April 17, 2017.

[2] http://www.ucanews.com/news/indian-nuns-manhandled-at-good-friday-service/78961

[3] Police arriving to stop Good Friday ceremonies of a parish in the southern Indian state of Tamil Nadu. Officials disrupted the services of the Dalit Catholics on the grounds that they had no permission to hold such services on the public hillock, a government owned property. Police and local civic officials forcibly stopped a Good Friday service being held on public land in the southern Indian state of Tamil Nadu. “Government officials stopped the service midway, pulled down the altar and manhandled nuns,” Father Masiladaikalam Jacob, pastor of Sogandi Parish where the April 14 incident took place, told ucanews.com. The parish comes under Chingleput Diocese. Eye-witnesses said that the offending officials, including police, were led by the sub-district’s revenue officer.

[4] Christian persecution, Sacrilege at Sogandi,Good Friday service altar and Holy communion pulled down-Tamilnadu attack,  Submitted by newsman on Sat, 15/04/2017 – 11:32.

[5] Indian Express, Religious symbol war between two villages touches a new high, By Ram M Sundaram, Express News Service, Published: 19th March 2017 01:28 AM, Last Updated: 19th March 2017 05:26 AM

[6] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–1.html

[7] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–2.html

[8] Sacrilege at Sogandi, Diocese of chengalpet. Good Friday service conducted at the usual place, amidst hundreds of police peacefully was disturbed by RSS. Could not complete the Communion service. Altar and Holy commuion pulled, Priests and people, women, nuns and children aggressively pulled away from the hill. People are in dharna asking for justice and their right for worship Today. President of India extends Easter Greetings and asked to remove hatred.

[9] http://persecution.in/node/4257

[10] Christian persecution, Sacrilege at Sogandi,Good Friday service altar and Holy communion pulled down-Tamilnadu attack,  Submitted by newsman on Sat, 15/04/2017 – 11:32.

http://www.persecution.in/taxonomy/term/7200

[11] http://www.persecution.in/taxonomy/term/7200

[12] https://www.youtube.com/watch?v=kJPnTrPW-sU; https://www.youtube.com/watch?v=M-qFSsFM1yI

 

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

மே 19, 2010

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

வேதபிரகாஷ்

கிருத்துவர்களின் அபகரிப்பு திட்டம்: கிருத்துவர்கள் திட்ட்டமிட்டுத்தான் மலைகளை முழுங்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது. தமிழகம் மற்றுமல்லாது மற்ற மாநிலங்களிலும், இப்படி சின்னஞ்சிறிய மலைகள், குன்றுகளின் மீது சிலுவையை வைப்பது, வழிபடுவது, இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, சர்ச் கட்டிக்கொள்வது, பிறது அப்படியே அபகரித்துக் கொண்டு தமதாக்கிக்கொள்வது………………..என்ற வித்தை அமூல் படுத்துகின்றனர். திண்டிவனத்தில், அச்சரப்பாக்கம் அருகில் ஒரு மலைக்குன்றை அபகரித்து, அதை, ஒரு “அனைத்துலக கிருத்துவ சுற்றலா மையமாக” மாற்றியுள்ளது[1]. செஞ்சியில் அவர்களது அடாவடித்தனம் கோவில் நிலங்களை மோசடி செய்து கபளீகரம் செய்யும் அளவிற்கு வந்துள்ளது[2]. போதாக் குறைக்கு கோதண்டராம கோவிலே எங்களுக்கு சொந்தம்[3] என்று கிளம்பிவிட்டது கண்டும், யாரும் அதை கவனிக்காமல் இருப்பது, மோசடி கிருத்துவர்களுக்கு ஊக்கமளிப்பதாக தெரிகிறது. இது ஏதோ இந்து முன்னணி பிரச்சினைப் போல சாயம் பூசப்பட்டு[4] இந்துக்களை ஏமாற்ற கருணாநிதி அரசு எந்திரங்களைப் பயன்படுத்துவது தெரிகிறது.

கிருத்துவர்கள் கலட்டா, சாலை மறியல்[5]: செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அந்தோணியார் சிலைகள், போலீஸ் “பாதுகாப்புடன்” அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த கிறிஸ்தவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை உள்ளது. கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். இதே குன்றின் மறுபகுதியில், ஏப்., 14ம் தேதி இந்துக்கள் திடீரென பிள்ளையார் சிலை வைத்தனர். இதனால், சில நாட்களாக செஞ்சியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இதை பராமரித்து வருகின்றனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கிருத்துவர்களை அனுமதித்துவிட்டு இந்துக்களை அவமானப்படுத்துவது: நேற்று அதிகாலை 5 மணிக்கு செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார், குன்று அருகே குவிக்கப்பட்டனர். செஞ்சிக்கோட்டை முதுநிலை பராமரிப்பு அதிகாரி ஜெயகரன் தலைமையிலான கோட்டை ஊழியர்களும், கூலி தொழிலாளர்களும் குன்றின் மீதிருந்த பிள்ளையார், அமலோற்பவமேரி, அந்தோணியார் சிலைகளையும், மூன்று சிலுவைகளையும் அகற்றினர்.

ஒலிப்பெருக்கிகளில் கிருத்துவர்களின் “அபாய அறிப்பு”! கிறிஸ்தவ சிலைகள் அகற்றப்படுவதை அறிந்து, அருகில் இருந்த புனித மிக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களை திரட்ட, தொடர்ந்து அவசர மணி ஒலிக்கப்பட்டது. ஒலிபெருக்கியில் கிறிஸ்தவ தெய்வ சிலைகளை பாதுகாக்க உடனே தேவாலயத்திற்கு வர வேண்டும் என, அவசர அழைப்பு விடுத்தனர். இதெல்லாமே அவஎர்களது கபட நாடகத்தை காண்பிக்கிறது. இவர்களுக்கும் அந்த ஜீஹாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை. இன்று ஒலிப்பெருக்கிகளில் “அபாயம்” என்று கத்துபவர்கள், நாளைக்கு இந்தியாவிற்கு தொரோகம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? “இஸ்லாம் அபாயத்தில் உள்ளது” என்ற கூப்பாடு போடும் அந்த கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் என்ன மாறுபாடு?

கிருத்துவர்கள் சாலைகளில் கற்களைப் போட்டு மறியல்: இதனால் காலை 7.30 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே திரண்டனர். இவர்கள் சிலைகளை அகற்றும் இடத்திற்கு வேகமாக முன்னேறி வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் குழுவினர், சிலைகளை மட்டும் அகற்றிவிட்டு பீடத்தை இடிக்கும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.போலீசாரின் ஒருபகுதியினர் மட்டும் குன்றின் கீழே காவலுக்கு இருந்தனர். அங்கு வந்த கிறிஸ்தவர்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின், புனித மிக்கேல் தேவாலயம் எதிரில் சிங்கவரம் சாலையில் கற்களை போட்டு மறியல் செய்தனர். இத்தகைய அடாவடித் தனத்திற்கு யார் தையம் கொடுப்பது?

சாலைமறிப்பவர்களிடம் கொஞ்சி சல்லாபம் செய்யும் அதிகாரிகள்: அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சியாமளா, டி.எஸ்.பி., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படாமல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை விரட்டி அடித்தனர். பதட்டமான நிலை இருப்பதால் கோட்டை அருகே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் கெஞ்சல், பிறகு கைது என்பதெல்லாமே, அவர்கள் எந்த அளவிற்கு இடம் கொடடத்துள்ளனர், மற்றும் கிருத்துவர்கள் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி சட்டத்திற்கு எதிராக வேலை செய்கின்றன என்பதையும் காட்டுகிறது.

செஞ்சியில் இந்து கோவில்கள் சூறையாடப் படுதல்: செஞ்சி கோட்டையில் இந்து அமைப்பினர் அம்மன் சிலை வைக்க இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள பல கோவில்களில் சாமி சிலைகள் இல்லை. சாமி சிலைகள் உள்ள சில கோவில்களிலும் இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்த போது வழிபாடு இல்லாமல் இருந்ததால், அதே நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கட்ரமணர் கோவிலில், சாமி சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்குமாறு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.,வினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்துக்கள் என்றால் ரோந்து வருவார்களாம். கிருத்துவர்கள் என்றால் கொன்சுவார்களாம்: இந்நிலையில், செஞ்சி கோட்டை வளாகத்தில் ஒன்பது அம்மன் சிலைகளை, இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி கோட்டை, வெங்கட்ரமணர் கோவில் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார், கோட்டை வளாகத்தில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஏப்., 14ம் தேதி இரவு செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான குன்றின் மீது சிலர் திடீரென பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்துவர்களும், போலீஸாரும், அதிகார வர்க்கத்தினரும் சும்மா இருந்ததினால்தானே கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். அப்பொழுது ஏன் சட்டங்கள் செயல்படவில்லை?

2005 லிருந்து கிருத்துவர்களுக்கு உடந்தையாகி 2010ல் பிள்ளையார் வந்ததும் விழித்துக் கொள்கிறார்களா? கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கிருத்துவர்களுக்குத் துணைபானதுக் கண்டிக்கத் தக்கது: உடனடியாக நாத்திகம் பேசும் அரசு இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களுக்குப் புறம்பாக மலைகள், மலைக்குன்றுகள் மீது வைக்கப் பட்டுள்ள சிலுவைகள், கிருத்துவச் சிலைகள் முதலியவற்றை உடனடியாக அகற்றப் படவேண்டு. அத்தகைய மத வெறியர்கள், அவர்களை ஊக்குவிக்கும் திண்டிவனம், திருவண்ணாமலை, சி.எஸ்.ஐ அதிகார வர்க்கங்கள் முதலிவற்றோர் மீதும் இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

19-05-2010


[1] இதற்காக வேண்டுமென்றே அயல்நாட்டவர்களை பேருந்துகளில் அழைத்துவந்து, புதிய கதைகளை அளந்து, அவர்களிடமிருந்து பணத்தையும் பெறுகிகிறார்கள். குறைந்த காலத்தில், அவர்கள் அத்தகைய வேலையை செய்து முடித்துள்ளார்கள்.

[2] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை, பிப்ரவரி 08, 2010,00:00  IST,  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538

[3] தினமலர், கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில், பிப்ரவரி 03,2010,00:00  IST, http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6486

[4] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் , மார்ச் 18,2010,00:00  IST, http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17237

[5] தினமலர், செஞ்சிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைத்திருந்த சிலைகள் அகற்றத்தால் பதட்டம்: போலீஸ் குவிப்பு , மே 19,2010,00:00  IST, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18648

[6] தினமலர், செஞ்சி கோட்டை வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம், மே 15,2010,00:00  IST, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25067