கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

வேதபிரகாஷ்

கிருத்துவர்களின் அபகரிப்பு திட்டம்: கிருத்துவர்கள் திட்ட்டமிட்டுத்தான் மலைகளை முழுங்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது. தமிழகம் மற்றுமல்லாது மற்ற மாநிலங்களிலும், இப்படி சின்னஞ்சிறிய மலைகள், குன்றுகளின் மீது சிலுவையை வைப்பது, வழிபடுவது, இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, சர்ச் கட்டிக்கொள்வது, பிறது அப்படியே அபகரித்துக் கொண்டு தமதாக்கிக்கொள்வது………………..என்ற வித்தை அமூல் படுத்துகின்றனர். திண்டிவனத்தில், அச்சரப்பாக்கம் அருகில் ஒரு மலைக்குன்றை அபகரித்து, அதை, ஒரு “அனைத்துலக கிருத்துவ சுற்றலா மையமாக” மாற்றியுள்ளது[1]. செஞ்சியில் அவர்களது அடாவடித்தனம் கோவில் நிலங்களை மோசடி செய்து கபளீகரம் செய்யும் அளவிற்கு வந்துள்ளது[2]. போதாக் குறைக்கு கோதண்டராம கோவிலே எங்களுக்கு சொந்தம்[3] என்று கிளம்பிவிட்டது கண்டும், யாரும் அதை கவனிக்காமல் இருப்பது, மோசடி கிருத்துவர்களுக்கு ஊக்கமளிப்பதாக தெரிகிறது. இது ஏதோ இந்து முன்னணி பிரச்சினைப் போல சாயம் பூசப்பட்டு[4] இந்துக்களை ஏமாற்ற கருணாநிதி அரசு எந்திரங்களைப் பயன்படுத்துவது தெரிகிறது.

கிருத்துவர்கள் கலட்டா, சாலை மறியல்[5]: செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அந்தோணியார் சிலைகள், போலீஸ் “பாதுகாப்புடன்” அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த கிறிஸ்தவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை உள்ளது. கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். இதே குன்றின் மறுபகுதியில், ஏப்., 14ம் தேதி இந்துக்கள் திடீரென பிள்ளையார் சிலை வைத்தனர். இதனால், சில நாட்களாக செஞ்சியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இதை பராமரித்து வருகின்றனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கிருத்துவர்களை அனுமதித்துவிட்டு இந்துக்களை அவமானப்படுத்துவது: நேற்று அதிகாலை 5 மணிக்கு செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார், குன்று அருகே குவிக்கப்பட்டனர். செஞ்சிக்கோட்டை முதுநிலை பராமரிப்பு அதிகாரி ஜெயகரன் தலைமையிலான கோட்டை ஊழியர்களும், கூலி தொழிலாளர்களும் குன்றின் மீதிருந்த பிள்ளையார், அமலோற்பவமேரி, அந்தோணியார் சிலைகளையும், மூன்று சிலுவைகளையும் அகற்றினர்.

ஒலிப்பெருக்கிகளில் கிருத்துவர்களின் “அபாய அறிப்பு”! கிறிஸ்தவ சிலைகள் அகற்றப்படுவதை அறிந்து, அருகில் இருந்த புனித மிக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களை திரட்ட, தொடர்ந்து அவசர மணி ஒலிக்கப்பட்டது. ஒலிபெருக்கியில் கிறிஸ்தவ தெய்வ சிலைகளை பாதுகாக்க உடனே தேவாலயத்திற்கு வர வேண்டும் என, அவசர அழைப்பு விடுத்தனர். இதெல்லாமே அவஎர்களது கபட நாடகத்தை காண்பிக்கிறது. இவர்களுக்கும் அந்த ஜீஹாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை. இன்று ஒலிப்பெருக்கிகளில் “அபாயம்” என்று கத்துபவர்கள், நாளைக்கு இந்தியாவிற்கு தொரோகம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? “இஸ்லாம் அபாயத்தில் உள்ளது” என்ற கூப்பாடு போடும் அந்த கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் என்ன மாறுபாடு?

கிருத்துவர்கள் சாலைகளில் கற்களைப் போட்டு மறியல்: இதனால் காலை 7.30 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே திரண்டனர். இவர்கள் சிலைகளை அகற்றும் இடத்திற்கு வேகமாக முன்னேறி வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் குழுவினர், சிலைகளை மட்டும் அகற்றிவிட்டு பீடத்தை இடிக்கும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.போலீசாரின் ஒருபகுதியினர் மட்டும் குன்றின் கீழே காவலுக்கு இருந்தனர். அங்கு வந்த கிறிஸ்தவர்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின், புனித மிக்கேல் தேவாலயம் எதிரில் சிங்கவரம் சாலையில் கற்களை போட்டு மறியல் செய்தனர். இத்தகைய அடாவடித் தனத்திற்கு யார் தையம் கொடுப்பது?

சாலைமறிப்பவர்களிடம் கொஞ்சி சல்லாபம் செய்யும் அதிகாரிகள்: அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சியாமளா, டி.எஸ்.பி., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படாமல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை விரட்டி அடித்தனர். பதட்டமான நிலை இருப்பதால் கோட்டை அருகே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் கெஞ்சல், பிறகு கைது என்பதெல்லாமே, அவர்கள் எந்த அளவிற்கு இடம் கொடடத்துள்ளனர், மற்றும் கிருத்துவர்கள் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி சட்டத்திற்கு எதிராக வேலை செய்கின்றன என்பதையும் காட்டுகிறது.

செஞ்சியில் இந்து கோவில்கள் சூறையாடப் படுதல்: செஞ்சி கோட்டையில் இந்து அமைப்பினர் அம்மன் சிலை வைக்க இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள பல கோவில்களில் சாமி சிலைகள் இல்லை. சாமி சிலைகள் உள்ள சில கோவில்களிலும் இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்த போது வழிபாடு இல்லாமல் இருந்ததால், அதே நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கட்ரமணர் கோவிலில், சாமி சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்குமாறு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.,வினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்துக்கள் என்றால் ரோந்து வருவார்களாம். கிருத்துவர்கள் என்றால் கொன்சுவார்களாம்: இந்நிலையில், செஞ்சி கோட்டை வளாகத்தில் ஒன்பது அம்மன் சிலைகளை, இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி கோட்டை, வெங்கட்ரமணர் கோவில் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார், கோட்டை வளாகத்தில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஏப்., 14ம் தேதி இரவு செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான குன்றின் மீது சிலர் திடீரென பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்துவர்களும், போலீஸாரும், அதிகார வர்க்கத்தினரும் சும்மா இருந்ததினால்தானே கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். அப்பொழுது ஏன் சட்டங்கள் செயல்படவில்லை?

2005 லிருந்து கிருத்துவர்களுக்கு உடந்தையாகி 2010ல் பிள்ளையார் வந்ததும் விழித்துக் கொள்கிறார்களா? கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கிருத்துவர்களுக்குத் துணைபானதுக் கண்டிக்கத் தக்கது: உடனடியாக நாத்திகம் பேசும் அரசு இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களுக்குப் புறம்பாக மலைகள், மலைக்குன்றுகள் மீது வைக்கப் பட்டுள்ள சிலுவைகள், கிருத்துவச் சிலைகள் முதலியவற்றை உடனடியாக அகற்றப் படவேண்டு. அத்தகைய மத வெறியர்கள், அவர்களை ஊக்குவிக்கும் திண்டிவனம், திருவண்ணாமலை, சி.எஸ்.ஐ அதிகார வர்க்கங்கள் முதலிவற்றோர் மீதும் இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

19-05-2010


[1] இதற்காக வேண்டுமென்றே அயல்நாட்டவர்களை பேருந்துகளில் அழைத்துவந்து, புதிய கதைகளை அளந்து, அவர்களிடமிருந்து பணத்தையும் பெறுகிகிறார்கள். குறைந்த காலத்தில், அவர்கள் அத்தகைய வேலையை செய்து முடித்துள்ளார்கள்.

[2] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை, பிப்ரவரி 08, 2010,00:00  IST,  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538

[3] தினமலர், கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில், பிப்ரவரி 03,2010,00:00  IST, http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6486

[4] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் , மார்ச் 18,2010,00:00  IST, http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17237

[5] தினமலர், செஞ்சிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைத்திருந்த சிலைகள் அகற்றத்தால் பதட்டம்: போலீஸ் குவிப்பு , மே 19,2010,00:00  IST, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18648

[6] தினமலர், செஞ்சி கோட்டை வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம், மே 15,2010,00:00  IST, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25067

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?”

 1. செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? « நாத்தி Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%A… […]

 2. முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்! « நாத்திகமும்-ஆலயநிர Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%A… […]

 3. antony Says:

  cristians aramba kalathilirundhu vazhipattu varum silakku ethiraka indhus puthiyathaga sila vaippadhu pakthi alla pazhi vangum thanmai….

  • vedaprakash Says:

   “கிருத்துவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து வழிபட்டு வரும் சிலைக்கு எதிராக இந்துக்கள் புதியதாக சிலை வைப்பது பக்தி அல்ல வழி வாங்கும் தன்மை” என்று நண்பர் அன்தோனி தனது கருத்தைத் தெரிவித்து உள்ளார். தாங்கள் இதைப் பற்றிய முழு விவரங்களையும் படித்து விட்டுதான் அவ்வாறு சொல்லியுள்ளீர்களா எனு தெரியைல்லை. 1. கிருத்துவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து வழிபட்டு வரும் சிலைக்கு…………..எப்படி விஜயநகர காலத்தில் கட்டிய கோவில்கள் உள்ள இடத்தில் கிருத்து சிலை வரமுடியும்? 2. இப்பொழுது கிருத்துவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்காக கான்கிரிட் சிலுவை வைத்தல், பிறகு படிப்படியாக அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுத, பிறகு சர்ச் கட்டிக்கொள்ளுதல்………..என்ற நில தான் உள்ளது. சென்சியைப் பொறுத்த வரைக்கும், கோதண்டராம கோவில் மற்றும் அதன் இடங்களை அபகரிக்க கிருத்துவர்கள் முயன்ற்ய் தோல்வியுற்றுள்ளது, அவர்களது ஆக்கிரமிப்பு நிலையைக் காட்டுகிறது. 3. எனவே நண்பர் தமது கிருத்துவ சகோதரர்களிடத்தில் தத்தகைய ஆக்கிரமிப்பு வேலகளில் ஈடுபட வேண்டாம் என்று சொன்னால், இந்துக்களுக்கும், கிருத்துவர்களுக்கும் பிரச்சினையே வராது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட பதிவுகளையும் படியுங்கள்: http://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/;http://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

 4. antony Says:

  விஜய நகர மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் தான் அனால் அந்த ஆலயமும் சிலையும் 2005 இல் வைக்கப்பட்டது இல்லை ஆங்கிலயேர் காலத்தில் வைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து வழிபடும் ஆலயத்திற்கு பக்கத்தில் பிள்ளையார் சிலை வைத்தது சரியா? அங்கு ஆலையம் மட்டும் இல்லை ஒரு கிறிஸ்துவ பள்ளியும் உள்ளது அதுவும் கிறிஸ்துவர்களின் அபகரிப்பு திட்டம் என்று அர்த்தமா என்ன?

 5. பர்வதமலையில் கிருத்துவர்கள் வைத்த சிலுவை அகற்றப் பட்டது! அதர்ம ஆக்கிரமிப்புத் தனம், சட்டமீறல Says:

  […] [1]https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%… […]

 6. பர்வதமலையில் கிருத்துவர்கள் வைத்த சிலுவை அகற்றப் பட்டது! அதர்ம ஆக்கிரமிப்புத் தனம், சட்டமீறல Says:

  […] [1]https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%… […]

 7. பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த ம Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: