இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

முன்னுக்கு முரணான தேதிகள் குறிப்பிட்டு ஆக்கிரமிப்பை நியாயபடுத்தும் போக்கு: இந்த சர்ச்சின் பேஸ்புக் குறிப்பிடுவது, திருவண்ணாமலை மாவட்டம் வேளாங்கண்ணி[1] கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கார்மேல் மலை மாதா கோயில் ரோமன் கத்தோலிக்க வேலூர் மறைமாவட்டத்தின் வழிபாட்டில் இயங்கி வருகின்றது[2]. இளையாங்கண்ணி கிராமத்தை பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி உள்ளனர்[3]. ஏபிபி செய்தி குறிப்பிடுவது, இந்த கிராமத்தில் வனத் துறைக்கு சேர்ந்த மலையை இணைத்தவாறு 160 ஏக்கர், பரப்பளவில் 150 அடி உயர, மலை ஒன்று உள்ளது[4]. இவை அனைத்தும்  வருவாய்த்துறை ஆவணத்தில் கல்லாங்குத்து என குறிப்பிடப்பட்டுள்ளது[5]. இந்த மலையின் மீது கடந்த 1961 ஆம் அந்தபகுதி மக்கள் மூலம் மலையில் சிலுவை நட செய்துள்ளது சர்ச் நிர்வாகம். பொதுமக்கள் முன்னிறுத்தி மலைமீது இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து 1982ஆம் ஆண்டு சர்ச் கட்டப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து மலைமீது செல்வதற்கு படிக்கட்டுகள் அமைத்து, 2014ஆம் ஆண்டில்  மலையை குடைந்து மண் சாலை அமைத்து, மலை மீது மேலும் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாற்றி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த மண் சாலையை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையாக அமைக்க செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரி தலைமையில் பூமிபூஜை நடந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கடந்த 19ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்.

19-12-2021 அன்று மரக்கன்றுகள் நடுவதற்காக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்: அதாவது செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரியை வைத்து எப்படி பூமிபூஜை நடத்தினரோ, அதுபோல, இவரையும் வரவழைத்து மரக்கன்று நட சொல்லியிருப்பர் போலும். அப்போது  5 ஏக்கர் பரப்பளவில் மலையில் சர்ச் மற்றும் சிலுவை அமைக்கப்பட்டதையும்  மேலும் சில கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை  அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு துறையினர் அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் அரசு ஆவணத்தில் உள்ளது என்றும்  அந்த இடம் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் மக்களை முன்னிறுத்தி சர்ச்   நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பைக் கண்டு பிடித்து நோட்டீஸ் கொடுத்த ஆட்சியாளர்: இதையடுத்து சர்ச் கட்டப்பட்டுள்ளது இடத்தை விட்டு மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி சர்ச் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வசப்பட்டு பஞ்சாயத்துக்குட்பட்ட சவேரியார் பாளையத்தில் உள்ள மலை மீது சிலுவை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம்  இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயளாலர்  அருண்குமார் நிர்வாகிகள் அளித்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக கிறிஸ்துவ  ஜெபகூட்டங்கள் மற்றும் சர்ச் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஏழை பொது மக்களையும் குழந்தைகளையும் மனதை மாற்றி மதத்தை மாற்றி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் கொடுத்த புகார் மனு: திருவண்ணாமலை மாவட்டத்தில், அனுமதியின்றி தொற்றுநோய் போல் வளர்ந்து வரும் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடங்களை அகற்றக்கோரி, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில், கலெக்டர் முருகேசிடம் மனு அளிக்கப்பட்டது[7]. அதில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தேவாலயங்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதில், ஏழை இந்துக்களும், குழந்தைகளும் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுகின்றனர். ஒரு கும்பல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிகிறது, முக்கியமாக நோய்வாய்ப்பட்ட இந்துக்களுக்காக பிரார்த்தனை செய்து, உங்கள் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ராமகிருஷ்ணா ஓட்டல் முன், வீடு என ஆவணப்படுத்தப்பட்டு, கீழ்பென்னாத்தூரை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில், நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, இளையாங்கண்ணி பஞ்சாயத்துக்கு சொந்தமான மலை ஆக்கிரமித்துள்ளது. ந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அனுமதியற்ற பிரார்த்தனை கூடங்களை அரசு தடை செய்ய வேண்டும்.

தினமலரில் வெளியான செய்தி[8]: செங்கம் அருகே, மலையை ஆக்கிரமித்து சர்ச் விஸ்தரிப்பு செய்வது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் – தனி தொகுதிக்கு உட்பட்ட, இளையாங்கண்ணி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, 150 அடி உயர மலை மீது கார்மேல் மாதா சர்ச், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, மலை உச்சியை சமன் செய்து, சர்ச் விரிவாக்கம் செய்யும் பணியை, நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதற்காக, மலை மீது சாலை அமைக்கும் பணியை மூன்று மாதங்களுக்கு முன், செங்கம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கிரி துவக்கி வைத்தார். இந்நிலையில், அக்கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியை, நேற்று முன்தினம் கலெக்டர் முருகேஷ் துவங்கி வைத்தார். தொடர்ந்து, மலை மாதா சர்ச் பகுதியை ஆய்வு செய்ததில், மலையை சமன் செய்து விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ‘மலையை ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது’ என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மலை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, மலை மாதா சர்ச் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்[9].

© வேதபிரகாஷ்

24-12-2021


[1] வேளங்கண்ணி என்று தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறிப்பிடப் படுவது தெரிகிறது. இளங்கண்ணி என்ற சொல்லும் விசமத்தனமானது. கண்ணிக்கும் கன்னிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா அல்லது கண்ணி வைத்து இடத்தை அக்கிரமிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

[2] Elayankanni, is a village in Tiruvannmalai District, Tamil Nadu, South India. It is one of the big parishes in the Catholic Diocese of Vellore. https://www.facebook.com/MountCarmelElayankanni/

[3] Most of the people (90%) are traditional and God fearing Catholics and the rest are Hindus. More than 1200 families are living here. Each and every day these people are growing in their spirituality. Most of the people are farmers. Nearly 30 Catholic priests and more than 60 nuns are called from here to render their service to God and to the Catholic Church. They are working in different parts of India and also in many other countries. This village is abundantly blessed and protected by Our Lady of Mount Carmel, our patroness, in a special way.

https://www.facebook.com/MountCarmelElayankanni/

[4] ஏபிபி.நியூஸ், மலை மீது சிலுவை நட்டு 5 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்புசர்ச் கட்டடத்தை தவிர்த்து மற்றவற்றை அகற்ற உத்தரவு, By: V.வினோத் | Updated : 22 Dec 2021 07:58 PM (IST).

[5] https://tamil.abplive.com/crime/the-investigation-revealed-that-the-church-was-built-by-occupying-the-cross-on-the-mountain-31678

[6] அதிபன்.டிவி, முதலில் சிலுவை, பிறகு தேவாலயத்தை கட்டுங்கள்…! ஆக்கிரமிப்பு மலை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!, By athibantv -டிசம்பர் 22, 2021.

[7]https://athibantv.com/political/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/

[8] தினமலர், மலையை ஆக்கிரமித்து சர்ச்; நடவடிக்கை எடுக்க உத்தரவு, Updated : டிச 20, 2021  06:51 |  Added : டிச 20, 2021  06:49.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2917897

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.