“திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம்!

திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம்!

இந்து மக்கள் கட்சி சார்பில் திருக்குறள் மாநாடு நடந்தது: மாநாட்டிற்கு அழைப்பு என்று ஒரு வீடியோ உள்ளது[1]. சிவ.தாமோதரன் என்பவர் அழைப்பு விடுத்துள்ளார்[2]. இது அர்ஜுன் சம்பத் பேஸ்புக்கில் உள்ளது. ஆனால், இது எல்லோருக்கும் தெரிந்ததாக இல்லை. ஏனெனில், தெரிந்திருந்தால், கட்டாயம் நானே அங்கு சென்றிருப்பேன். மேலும், ஆய்வுகட்டுரைகள் வாசித்தனரா, விவாதம் இருந்ததா, எத்தனை பேர் பங்கேற்றனர் போன்ற விவரங்கள் இல்லை. ஆக, இந்துத்துவவாதிகள் இப்படித்தான் “மாநாடுகள்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 10-20 பேர் வந்தாலும், அவர்களுக்குள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல இப்படி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பர். ஒருவருக்கு ஒருவர் ஜால்றா அடித்து, பாராட்டுத் தெரிவித்துக் கொள்ள வேண்டியது தான்! இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சதிகளை, திட்டங்களை முறையாக அறிந்து கொண்டு, சரியாக செயல்பட வேண்டும். அதில், இந்துக்களுக்கு ஒற்றுமை இருக்க வேண்டும். தனித்தனியாக வேலை செய்து கொண்டு, ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டு, இருட்டடிப்பு செய்து கொண்டு, எதிர்த்தால், எதிரிகள் சுலபமாக இந்துக்களை வென்று விடுவர். இத்தனை ஆண்டுகள் சரித்திர உண்மைகள் தெரிந்தால், இந்துக்கள் அப்படியேத் தான், குழித் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்!

கிருத்துப் புரட்டுகளுக்கு தமிழறிஞர்கள் வாய் திறக்காதது ஏன்?: ”திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் எனவும், திருக்குறள் பைபிள் வழி வந்த நுால் எனவும் பரப்பப்படும் புரட்டுகளுக்கு தமிழறிஞர்கள் வாய் திறக்காதது ஏன்,” என பேராசிரியர் சாமி தியாகராஜன் கேள்வி எழுப்பினார்[3]. இவரே இப்பொழுது தான் வாயைத் திறந்து பேச ஆரம்பித்துள்ளார். இருப்பினும் கிருத்துவர்களை ஆதரித்தும் வருகிறார். இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை தி.நகரில் உள்ள தருமை ஆதீனத்தில், 19-12-2021 அன்று திருக்குறள் மாநாடு நடந்தது[4], என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,  ‘திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், பேராசிரியர் சாமி தியாகராஜன் பேசியதாவது: “திருக்குறள் உலக மக்களுக்கான நெறிகளை சொல்கிறது. இந்தியர்கள், ஹிந்துக்களின் தர்மங்களை தாங்கி உள்ளதுஆனால், தமிழக அரசின் சார்பில் இயங்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சா.வே.சுப்பிரமணியன், கா.சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலில், தெய்வநாயகம் என்பவர், திருக்குறளுக்கு உரை எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.”

பேராசிரியர் சாமி ஆவேசத்துடன் தியாகராஜன் பேசியது[5]: “அதில், திருக்குறள் என்பது ஏசுவின் போதனைகள் என்றும், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் என்றும் விளக்கி உள்ளார். இதற்கு முன், ஜி.யு.போப் அதற்கான விதையை துாவி உள்ளார்.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், திருச்சியில் நடந்த மாநாட்டில், அதை ஏற்கும் வகையில் பேசியுள்ளார். இதுபோல, தமிழ் நுால்கள் அனைத்தையும், கிறிஸ்துவர்கள் சுவீகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, தமிழர்களே வக்காலத்து வாங்கும் நிலையும் உருவாகி உள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய தமிழறிஞர்கள், திராவிடர் என்ற சொல்லால் நீர்த்து போயுள்ளனர். திருவள்ளுவர், தமிழர்களின் வாழ்வியலை தான் பதிவு செய்துள்ளார். ஆனால், திருக்குறளுக்கு உரை எழுதியோர் எல்லாம் பொய்யாக எழுதியுள்ளதாகவும், கிறிஸ்தவ நெறிகளை போதிப்பதாகவும், ஒவ்வொரு குறளுக்கும் இட்டுக்கட்டிய தெளிவுரையையும் தெய்வநாயகம் விளக்கியுள்ளார். அவர், அதிகாரத்தில் உள்ள உலக கிறிஸ்துவர்களுடன் தொடர்பில் உள்ளவர். அவர் எழுதியதை, உலகம் முழுக்க பரவலாக்கி ஆவணப்படுத்த துடிக்கிறார். இதை எதிர்க்க தமிழர்கள் ஒருங்கிணையாவிட்டால், தமிழனின் மொழியும், இனமும், பண்பாடும் சூறையாடப்படும் ஆபத்து உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார்[6].

அர்ஜுன் சம்பத் பேசியது[7]: இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: “தமிழர்களின் ஆதி சமயங்களான சைவமும், வைணவமும் விவிலியத்தில் இருந்து தோன்றியவை என தெய்வநாயகம் சொல்கிறார். இதுபோன்ற, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, தமிழர்களை பிளவுபடுத்தி குளிர்காயும் வகையில் தான், திருக்குறளுக்கு மிகவும் மோசமான வகையில் உரை எழுதியுள்ளார். இதை பல்கலையும் அங்கீகரித்துள்ளது. இதனால், திருவள்ளுவரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது. இதை தடுத்தாக வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார். கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் கல்யாணசுந்தரம், இந்து மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் சடகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர், என்றுள்ளது[8]. ஆகையால் அவர்கள் பேசினார்களா இல்லையா என்று தெரியவில்லை. பிறகு விசாரித்ததில், அவர்களும் பேசினார்கள் என்று சொல்லப் படுகிறது. கவிஞர் நந்தலாலா ஓம்காராநந்த ஆசிடரமத்தில் இருப்பவர். பேராசிரியர் கல்யாணசுந்தரம் “நாம் தமிழர் கட்சி”யில் இருந்து, அதிமுகவில் சேர்ந்தவர் என்கிறார்கள். ஆனால், இவர்கள் பேசியது செய்திகளில் வரவில்லை.

முறையாக ஆவணப்படுத்தப் படுத்தப் பட வேண்டும்: கிருத்துவர்களை மறுத்து நடத்தப் படும் “மாநாடுகள்”, கூட்டங்கள் முதலியவற்றிற்கு உரிய விளம்பரம், அறிவிப்புகள் கொடுக்கப் பட வேண்டும். ஏதோ நான்கு சுவர்களுக்குள் நடப்பது போல நடக்கக் கூடாது. வீடியோ எடுத்து, போட வேண்டும் இல்லை “கூகுள் மீட்” போன்ற லிங்குகள் / இணைப்புகள் கொடுக்க வேண்டும். இதில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்பவர்கள், விவரங்கள் தெரிந்தவர்களை அழைக்க வேண்டும். ஏதோ “கவி சம்மேளனம்” போன்று நடத்தினாலும், பிரயோஜனம் இல்லை. மேலும், ஏசு, கிறிஸ்து அல்லது ஏசு கிறிஸ்து சரித்திர ரீதியில் இருந்ததே கேள்விக்குறியாக உள்ளது. அதனை முதலில் எடுத்துக் காட்ட வேண்டும். கட்டுக்கதைகளின் மீது புனையப் பட்ட, அதுவே மாயை-பொய்-சரித்திரம் இல்லை என்றாகும் போது இத்தகைய அர்த்தமற்ற விசயங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

சாமி தியாகராஜன் மற்றவர்களிடம் கேட்டறிந்த அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு உளறியது: கிருத்துவ கட்டுக்கதைகள், மோசடிகள், களவாணித் தனங்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் விரித்த வலையில் வீழ்வது ஏன் என்று புரியவில்லை! சாமி தியாகராஜனுக்கு இதைப் பற்றிய முழு விவரங்கள் தெரியாமல், மற்றவர்களிடம் கேட்டறிந்த அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு உளறியுள்ளார். அவரது பொய்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன:

1. திருக்குறளுக்கு உரை எழுதி பட்டம் பெறவில்லை.

2. ச.வே. சுப்ரமணியம் மட்டும் தான் உதவி செய்தார். மற்றபடி, அருளப்பா நாற்காலியை உருவாக்கி இந்த போலி ஆராய்ச்சிக்கு வழிவகுத்தார்.

3. அப்புத்தகத்தில் / ஆய்வில் ஞான ஸ்நானம் பெற்றார் என்றெல்லாம் இல்லை…

4. 1985-87களில் இவரே வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார்……..

5. உண்மையைச் சொல்வதானால், ஒன்றும் தெரியாது எனலாம்!

பலதடவை எடுத்துக் காட்டியது போல, தேவபிரியாஜி போன்று எல்லாம், என்னுடைய விசயங்களைத் திருடி வியாபாரம் செய்து கொண்டிருப்பது போல, இவர்களும் இறங்கி விட்டனர் என்று தெரிகிறது.

கிருத்துவர்களுக்குத் துணை போகும் இந்துத்துவ வாதிகள்!:  இதில் சாமி தியாகராஜன் ஏற்கெனவே விஜி.சந்தோஷத்திற்கு பாராட்டு விழா நடத்தி, பரிசு கொடுத்தவர்! இதைப் பற்றி விவரமாக ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன். இப்பொழுது, ராஜீவ் மல்ஹோத்ரா-அரவிந்தன் நீலகண்டன் மாதிரி (கிருத்துவர்களே ஒப்புக் கொண்டது) மறுபடியும் விளம்பரம் கொடுக்கின்றனர்! இனி மற்றவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை! இந்துவிரோதிகளின் வஞ்சக திட்டம்,   தூண்டில் போடும் விதம்,  வலை விரிக்கும் தன்மை,  கிருத்துவயியல்………… பொய்களை – சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்லும் மாய்மாலம்……….. இவற்றையெல்லாம் ஆராயாமல், அவர்கள் சொன்னதை மட்டும் இல்லை-இல்லை என்று மறுத்துக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை! அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்……. இந்துத்துவவாதிகளும் அவ்வாறே உதவிக் கொண்டிருக்கின்றனர்!

© வேதபிரகாஷ்

23-12-2021


[1] திருவள்ளுவர் கிறிஸ்தவரா ? | திருவள்ளுவர் மாநாட்டில் பங்கெடுக்க அழைப்பு | சிவ தாமோதரன் | Arjunsampath, Dec 18, 2021.

[2] https://www.youtube.com/watch?v=oRolNmXSgn0

[3] தினமலர், திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம், Updated : டிச 21, 2021  02:13 |  Added : டிச 19, 2021.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2917359

[5] தமிழ்நாடு.நியூஸ், திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம், Updated : டிச 21, 2021 

[6] https://twnews.co.uk/in-news/tiruvlllluvr-kirristuvr-ennnptu-poy-kruttrngkil-caami-tiyaakraajnnn-aaveecm

[7] சஃபக்னா,திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம், Updated : டிச 21, 2021 . https://in.shafaqna.com/IN/AL/4027012

[8] https://in.shafaqna.com/IN/AL/4027012

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.