கிருத்துவர்களின் நிலம் அபகரிப்பு தொடர்கிறது!

கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை.

கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை. முதலில், அமைதியாக சிலுவையை வைப்பார்கள்; சிறியதாக கொட்டாய் போடுவார்கள்’; ஜெபம் செய்கிறேன் என்று 10-20 பேர் வர்வார்கள்; பிறகு சுவர் கட்டுவார்கள், சிமென்ட் கூறை போடுவார்கள்; அதற்குள் யாராவது எதிர்ப்புத் தெரிவித்தாலோ, தட்டிக் கேட்டாலோ, உள்ளூர் போலீஸாரை வாலைத்துப் போட்டு அமைதியாக்கி விடுவார்கள். அதற்குள் உள்ளூர் அரசியல்வாதி அல்லது பெரியமனிதர்களைப் பார்த்து சரிகட்டி, பட்டா வாங்க கிளம்பிவிடுவார்கள்; இவ்வாறான காரியங்களில் இடையில் கிருத்துவ அதிகாரிகள் இருந்தால், அவ்வளவு தான், புகார் செய்தால் கூட கண்டு கொள்ளமாட்டார்கள் அல்லது புகார் கொடுத்தவர்களுக்கு எதிராக செய்ல்படுவார்கள். ஆவணங்கள் மறைந்துவிடும் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படமாட்டாது. இப்படித்தான், அச்சரப்பாக்கத்தில், ஒரு குன்றின் மீது சர்ச் ஒன்று பெரிய அளவில் கட்ட்ப்பட்டுள்ளது.

அச்சறப்பாக்கம் ஆக்கிரமிப்பு (2009): அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார்[1].அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது.வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 2009 நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர். தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு[2] (2011): திருப்பூர் அருகே பிச்சம்பாளையம்புதூரில் புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது; போலீசார் சமரசம் செய்தனர். திருப்பூர், பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர், கிழக்கு ஸ்ரீநகர் பகுதியில் குடியிருப்பையொட்டி ரோட்டோரத்தில் 15 சென்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் சி.எஸ்.ஐ., சர்ச் கட்டப்பட்டுள்ளது. சர்ச்க்கு பின்னால் 2 சென்ட் காலி இடம் உள்ளது. காலி இடத்தில் சர்ச்சை விரிவுபடுத்த கிறிஸ்தவ அமைப்பினர் பலமுறை முயற்சி செய்துள்ளனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தில் ரேஷன் கடை, நூலகம், புறகாவல் நிலையம் என பொது காரியத்துக்கு பயன்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காலை கிறிஸ்தவ அமைப்பினர் 200 பேர் திடீரென சிமென்ட், கம்பி, கருங்கல் கொண்டு வந்து சர்ச் கட்ட முற்பட்டனர். தகவல் அறிந்ததும் இந்து அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் கூடி, சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. எஸ்.பி.அருண், டி.எஸ்.பி.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். காலி இடத்தில் எந்த கட்டடமும் கட்டக்கூடாது; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைபடி நடந்து கொள்ள அறிவுறுத்தினார். பிரச்னை ஏற்படாமல் இருக்க 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புறம்போக்கு இடத்தில் சர்ச்:: மதிற்சுவர் கட்ட எதிர்ப்பு[3] (2010): தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே கிறிஸ்துவ ஆலய காம்பவுண்ட் சுவர் கட்ட அப் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு்பட்டனர். ஆறுமுகநேரி அருகே உள்ளது தலைவன்வடலி கிராமம். இங்கு 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இடத்தில் சர்ச் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இப் பிரச்சனை தொடர்பாக கிராம மக்கள் பலமுறை பலகட்ட போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.மேலும், சர்ச் கட்டுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய 3 ஏக்கர் 48 சென்ட்டில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதற்கு கோர்ட்டில் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த இடத்திற்கு அருகில் இசக்கியம்மன் கோயில் மற்றும் இடுகாடு ஆகியவை உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் வந்த காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தார். இதனையடுத்து, காம்பவுண்ட் சுவர் கட்டுவது தொடர்பாக திருச்செந்தூர் ஆர்டிஒ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆறுமுகநேரி – ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம் (1973)! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது[4], “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[5]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[6] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம் (1973)! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[7] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

1973-2011 கிருத்துவர்கள் எப்படி முன்னேறியிருக்கிறார்கள்: சுமார் 40 ஆண்டுகளில் எல்லாமே முன்னேறித்தான் உள்ளன. திமுக ஊழலில் முன்னேறி கோடிகளில் கொடிக் கட்டிப் பறக்கிறது! அப்பொழுது ஹண்டே கோதுமை ஊழலுக்கு வழக்குப் போட்டார்[8], இப்பொழுது சுப்ரமணிய சுவாமி வழக்குப் போடுகிறார்! கிருத்துவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், கற்பழிப்பு, செக்ஸ், பாலியல், சிறுவர்-சிறுமி வன்புணர்ச்சி இத்யாதி………….முதலியவற்றில்[9], அமெரிக்க-ஐரோப்பிய நாட்டவர்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு முனேற்றி விட்டார்கள்[10]! ஒரு விளம்பரத்தில் சிறுவன் ஒருவன் கவலைப்பட்டுக் கொள்வான், “வயது தான் ஆகிறது, ஆனால், எனக்கு மட்டும் ஏன் இவை எல்லாம் முடியவில்லை, என்று அம்மாவிடம் கேட்பான். ஆனால், இவ்விஷயத்தில், அம்மாவிடம் எதையும் கேட்க வேண்டாம், ஒழுங்காக இருந்தாலே போதும்!

வேதபிரகாஷ்

10-02-2011


[1] தினமலர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார், அக்டோபர் 02,2010 , http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97459&Print=1

[2] தினமலர், புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு, பிப்ரவரி 07, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182576

[3] தினமலர், சர்ச் காம்பவுண்ட் சுவர் கட்ட பொது மக்கள் எதிர்ப்பு-சாலை மறியல்,  நவம்பர் 17, 2010, http://thatstamil.oneindia.in/news/2010/11/17/arumuganeri-church-wall-villagers-protest.html

[5] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[6] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[7] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[9] பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள அகரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ஓவியா(12) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பெரம்பலூரில் தனியாரால் நடத்தப்படும் விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படித்து வருகிறார். விடுதி வார்டன் ஜேம்ஸ்(40) என்பவர் கடந்த சில மாதங்களாக ஒவியாவிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனை ஓவியா தனது தாயார் கவிதாவிடம் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கவிதா அளித்த புகாரின் பேரில் ஜேம்ஸ் விடுதியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182713

[10] இதைப் பற்றிய இடுகைகளை இங்கே பார்க்கவும்: www.christianityindia.wordpress.com, www.womanissues.wordpress.com, etc

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

10 பதில்கள் to “கிருத்துவர்களின் நிலம் அபகரிப்பு தொடர்கிறது!”

  1. W. L. Samuel Surendran Says:

    s I pointed out the Indian christians have lost all their moral values etc., and they have to be corrected from the scratch.

    the seminaries should be handed over to godd people and the coming clergy should be taught moral values, sirituality etc., otherwise, they wuld spoil the society.

    there is a reason to believe that USA, and some Europen countries have decided to ruin Indian society by all means.

    Actually, it amounts to suicidal, as ruining India amounts to ruin the whole world.

    For milleniums, India has been the teacher to all civiliztions. As a christia, I want to record this without any hesitation, as we have to rell the truth to others.

  2. எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்ச Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/ […]

  3. அமைதி என்ற பெயரில் கொடுங்கையூரில் சட்டவிரோத சர்ச், அதர்ம ஆக்கிரமிப்பு, கிருத்துவர்களின் அராஜ Says:

    […] [1] https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/ […]

  4. மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா? அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக Says:

    […] [1] வேதபிரகாஷ், கிருத்துவர்களின்நிலம்அபகரிப்பு தொடர்கிறது!, https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/ […]

  5. கஞ்சி குடித்த கருணாநிதியும், கேக் சாப்பிட்ட ஜெயலலிதாவும்: கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல அரசு Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/ […]

  6. ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும Says:

    […] [11] https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/ […]

  7. கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்பு Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/ […]

  8. புவலட்சுமி Says:

    ஆக்ரமிப்பு எல்லா மதத்தினரும் செய்கிறார்கள். நம் சமயத்தவர்கள் சாலை ஓரத்தில் பிள்ளையார் சிலை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிப்பு செய்யவில்லையா?
    அதுபோல் குற்றவாளிகளுக்கு சாதி மதம் கிடையாது. எல்லா மதங்களிலும் குற்றவாளிகள் இருக்கிறாள். அரசு கடுமையான சட்டம் இயற்றி, ஆக்ரமிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்து, கிறிஸ்தவ கோயில்களை இடித்து, சாலையை விரிவாக்க வேண்டும்.

    • vedaprakash Says:

      சாலையோர ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு இரண்டும் வெவ்வேறான விஷயங்கள்.

      சாலையோர ஆக்கிரமிப்பில் தாங்கள் சொல்லியபடி எல்லாமத குற்றவாளிகளும் ஈடுபடலாம். பிச்சைக்காரர்கள் இருந்து ஆட்டோ டிரைவர்கள் வரை பணம் கிடைக்கிறது என்று பிள்ளையார் கோவில்களைக் கட்டி வைக்கிறார்கள். ஆனால், நில ஆக்கிரமிப்பு, அபகரிப்பு போன்ற குற்றங்கள் திட்டமிட்டு கூட்டாக நிறுவன ரீதியில் நடத்தப் படுகின்றன. அவற்றில் “மைனாரிட்டி” என்ற போர்வையில் அல்லது அத்தகைய நிலையுள்ளது என்ற தைரியத்தில் அம்மாதிரியான குற்றங்களை, தெரிந்தே செய்வதைத்தான் இங்கு எடுத்துக் காட்டப் படுகின்றன.

      வி.ஜி.பி இயக்குனர்கள், சென்னை ஆர்ச் பிஷப் போன்றவர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை. மிகவும் பெரிய அந்தஸ்து, அதிகமான அதிகாரம், நிறைய பணபலம், அரசியல் செல்வாக்கு முதலியவைக் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அதனால்தான், ஒருவேளை அவர்கள் அத்தகைய தங்களது அதிகாரத்தை, நிலையை துஷ்பிரயோகம் செய்கிறார்களா அல்லது சாதகமாக உபயோகப் படுத்திக் கொள்கிறார்களா என்று, தாங்களே அலசி சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.

  9. கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவி Says:

    […] [3] https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: