Archive for the ‘குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்’ Category

தர்மராஜ் ரசாலம் – பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ.. தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (2)

ஜனவரி 17, 2023

தர்மராஜ் ரசாலம்பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ..தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (2)

ஓய்வு வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தி, சட்ட திருத்தம் கொண்டு வந்ஹது: இவருக்கு வருகிற ஜூன் மாதம் 67 வயது பூர்த்தியாகுகிறது[1]. தலைமை பேராயர் பதவி காலமும் 67 வயது வரைதான்[2]. அதன்பின்னர் அவர் ஓய்வு பெறவேண்டும். அதை தொடர்ந்து அந்த பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும்[3]. ஆனால், இவரை தொடர்ந்து இப்பதவியில் நீட்டிக்க வைப்பதற்காக, ஓய்வு வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தி, சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளனர்[4]. அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆலியாக காலம் தள்ளலாம், அனுபவிக்கலாம் என்ற திட்டம் தான். ஆனால், போட்டியாளர்கள் விடவில்லை. எனவே, தலைமை பேராயர் வயது வரம்பை 70-ஆக உயர்த்தி நடைபெறும் தேர்தலுக்கும், துணை தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும். திருச்சபையை நிர்வகிக்கவும், அதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இவரும் விடவில்லை, தனக்குரிய அதிகாரம், பலம், பணம் முதலியவற்றை உபயோகப் படுத்தி, பதில்-மனு தாக்கல் செஉதார், காரணங்களையும் அதிவு செய்தார்.

தேர்தலுக்கு தடை இல்லை – தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 13-01-2023 அன்று (ஜன.13) நடைபெறும் தேர்தலுக்கு தடை விதிக்க விரும்பவில்லை. அதேநேரம், கீழ் கண்ட நிபந்தனைகளுடன் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். தேர்தல் நடவடிக்கை அனைத்தையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து, அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். சிஎஸ்ஐ விதிகளின்படி ஓட்டு சீட்டு முறைப்படி தேர்தலை நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. தற்போதுள்ள நிர்வாகிகளே மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதவியில் தொடரலாம் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர் பிஷப் மாணிக்கம் துரை வழக்கு: கடுமையான PMLA [Prevention of Money Laundering Act] பிரச்சனைகளில் சிக்கிய முதல் CSI பிஷப் கோயம்புத்தூர் பிஷப் மாணிக்கம் துரை ஆவார், 2013 இல் ED உடனான தொடங்கிய பிரச்சனைகள் இன்றுவரை தொடர்கின்றன[5]. மாநில காவல்துறை அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு ED வந்த ரசாலம் வழக்கைப் போலவே, மறைமாவட்ட நிதி மற்றும் அவரது சகோதரர் எம்.மூர்த்தி மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, பொது அறக்கட்டளையை 7.93 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதால், துரை ED இன் கவனத்திற்கு வந்தார்[6]. சுவாரஸ்யமாக, CSI வரலாற்றில் 2012ல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிஷப் இவரே ஆவார். அதற்குக் காரணம், அப்போதைய நடுவர் எஸ். வசந்தகுமார், ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஃப். மூலம் உத்தரவிடப்பட்ட விசாரணையில் எழுந்த மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள்தான் காரணம்.

துரையும் அவரது மனைவியும் குற்றவாளிகள்: சல்தானா, துரை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம், அவர் ஆயர் நீதிமன்றத்தை அவமரியாதை செய்ததால், அதில் உள்ள பிஷப்புகள் தங்களைத் தாங்களே ஊழல் செய்து கொண்டதாகவும், அவர் இடைநீக்கத்திற்கு வழிவகுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்ப்பளிக்க தார்மீக அதிகாரம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். 2013 ஆம் ஆண்டில், துரை மற்றும் அவரது மனைவி சூடாமணி, ஒரு இணை குற்றவாளி, தங்களுக்கு எதிரான ED இன் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தனித்தனியான ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். ஐந்து வருட நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2018 இன் பிற்பகுதியில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, துரையும் அவரது மனைவியும் ED இன் உத்தரவுகளில் தலையிடுவதற்கு “எந்தவொரு சட்டப்பூர்வ ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தையும் நிறுவத் தவறிவிட்டனர்” மற்றும் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ED மூலம் அவர்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கடைசி விசாரணையில், முன்னாள் பிஷப் ஆஜரானார், ஆனால் அவரது சகோதரர் மூர்த்தி (A2) ஆஜராகவில்லை, மேலும் அவர் செப்டம்பர் 23, 2022 அன்று அடுத்த விசாரணையில் ஆஜராக உத்தரவிட ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

பிஷப் கோவாடா தேவாசீர்வாதம் சிக்கியது: தற்போது ED இன் விசாரணைப்பிடியில் உள்ள மற்றொரு முன்னாள் பிஷப் முன்னாள் மாடரேட்டர் மற்றும் கிருஷ்ணா கோதாவரி மறைமாவட்ட பிஷப் கோவாடா தேவாசீர்வாதம் ஆவார். 2018 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச சிபி-சிஐடி, மறைமாவட்டத்தின் முன்னாள் செயலாளரும், மிகவும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவருமான போடு யோகனின் தனிப்பட்ட புகாரின் பேரில் அவரைக் கைது செய்தது. சட்டவிரோத நில விற்பனை மற்றும் மறைமாவட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் EDக்கு முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலாக அவர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை நாடினார் (இந்த பிராந்தியத்திற்கான ED அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது) மேலும் ED நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையைப் பெற்றார். கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ராதா ராணி, “7-12-2021 தேதியிட்ட இடைக்கால உத்தரவுகளின்படி இந்த நீதிமன்றம் வழங்கிய விசாரணையின் தடையை நீக்குவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது மற்றும் சட்டத்தின்படி கண்டிப்பாக விசாரணையைத் தொடர அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது.” தெய்வாசீர்வாதத்திற்க்கு எதிரான சிபிசிஐடி வழக்கின் குற்றப்பத்திரிகை விஜயவாடா நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது அவரின் சட்ட சிக்கல்களை அதிகரிக்கிறது.

அதே பாணியில் இப்பொழுது தர்மராஜ் ரசாலம்:  ஊழல்வாதிகளான CSI பிஷப்புகளுக்கும் அவர்களின் மறைமாவட்ட கூட்டாளிகளுக்கும் ED இன் நீண்ட கரம் அவர்களைப் பிடிக்கும் என்பதை நினைவூட்டலாக கொள்ள வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்று பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட கடுமையான சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடலாம், இதனால் அவர்கள் நிம்மதியான உறக்கத்தை இழக்க நேரிடும் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் மோசமான ஆதாயங்களைத்தான் அவர்களுக்கு விருந்தளிக்கின்றனர். இங்கும், தர்மராஜ் ரசாலம் அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதும் தெரிகிறது. சசிதரூருடன், மிக நெருக்கமான நட்பு அல்லது இணக்கம் இருப்பது தெரிகிறது. அயல்நாட்டு தொடர்புகளும் அவரை காக்கத் தயாக இருக்கின்றன. அந்நிலையில் அவர் இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டிற்கு சென்று விட்டாலும், இந்தியாவிற்கு எந்த பிரச்சினை வரும் என்று தெரியவில்லை. ஆனால், கல்வியில் முந்நிலை வகிக்கிறோம் என்ற கேரளாவில், இத்தகைய ஊழல்கள், அதிலும், மருத்துவக் கல்லூரிகளில் நடப்பது திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-01-2023


[1] தினகரன், தென்னிந்திய திருச்சபை தேர்தலை நடத்தலாம் முடிவுகளை வெளியிட கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, 01:08 am Jan 14, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[2] https://m.dinakaran.com/article/news-detail/830746

[3] தினமலர், சி.எஸ்.., நிர்வாகி தேர்தல் முடிவு வெளியிட ஐகோர்ட் தடை, Added : ஜன 14, 2023  17:50

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3218016

[5] Anglican, Why Dharmaraj Rasalam and other CSI bishops need to fear the Enforcement Directorate, By Binu Thomas -August 25, 2022

[6] https://anglican.ink/2022/08/25/why-dharmaraj-rasalam-and-other-csi-bishops-need-to-fear-the-enforcement-directorate/

தர்மராஜ் ரசாலம் – பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ.. தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

ஜனவரி 17, 2023

தர்மராஜ் ரசாலம்பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ..தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

சி.எஸ்.ஐ.யின் தொடரும் ஊழல்கள்: தென்னிந்திய திருச்சபை (Church of South India, CSI) என்றாலே, சண்டை, சச்சரவு, அடிதடி, ஊழல், பணம் கையாடல், செக்ஸ், பாலியல், என்று பற்பல விவகாரங்கள் அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கும். அதற்கும் / எதற்கும் அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு பேராயர், பிஷப், பாஸ்டர் என்ற நிலைகளில் உள்ளவர்கள், யாதாவது ஒரு வழியில், பணம் வருகிறது என்பதை அறிந்து, அதனை தொடர்ந்து பெற்றுவர, அனுபவிக்க, வழிமுறைகளை உண்டாக்கி, சந்தோஷமாக காலம் தள்ளி வருகின்றனர். மாட்டிக் கொள்ளும் வரை ஜல்ஸா தான். பிறகும், எப்படியாவது வழி கண்டு பிடித்து, பழைய ரூட்டில் செல்ல திட்டம் போடுகிறார்கள். இது கிட்டத் தட்ட, தமிழக இந்து அறநிலைய அதிகாரிகளின் திட்டம் போலவே இருக்கிறது. இதில் யாரும் வெட்கப் படுவதில்லை, இறைத் தொண்டு, கடவுள் சேவை என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.  கடவுள் சொத்து, இறைவன் பணம், என்றெல்லாமும் யோசிப்பதில்லை. கிடைக்கும் வரை, கொள்ளையடித்துச் சென்று விடலாம் என்று தான், வேலை செய்து வருகின்றனர். அரசியல் வாதிகளின் தொடர்புகள் இருப்பதால் தப்பிக்கவும் செய்கின்றனர்.

கேரளாவில் பதிவாகியுள்ளது அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது” சென்னை உயர் நீதிமன்றத்தில், தென்னிந்திய திருச்சபையின் ஆயர் மன்றத்தின் (சினாட் கவுன்சிலின்) உறுப்பினர்களான கேரளாவைச் சேர்ந்த சுனில்தாஸ், ஜெயராஜ் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திருச்சபை என்பது பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டது[1]. இப்படி எல்லா வழக்குகளிலும், தாக்கல் செய்யப் படும் ஆவணங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதற்கேற்ற படி மோசடிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த திருச்சபையின் தலைமை பேராயராக கேரளாவைச் சேர்ந்த தர்மராஜ் ரசாலம் [Dharmaraj Rasalam [2]] பதவி வகித்து வருகிறார்[3]. தென்னிந்திய திருச்சபைக்கு பல லட்ச கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் உள்ளன[4]. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நூறு சதவீதம் அரசு உதவி பெறும் சுமார் 2 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்வது இந்த திருச்சபைத்தான்[5]. இவ்வாறு அரசு உதவி பெறும் நிலையில், அரசு தொடர்புகளும் இணைந்து விடுவதால், கோடிக் கணக்கான அசையா சொத்துகள் மற்றும் அவற்றின் மூலம் வரும் வருவாயை அனுபவிக்க திட்டம் தீட்டி செயல்ப்ட்டு வருகின்றனர். தலைமை பேராயர் தர்மராஜ் ரசாலத்தின் மீது முறைகேடு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது[6]. அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது[7]. இவைப் பற்றியெல்லாம், கேரள பத்திரிக்கைகளில் தாராளமாகவே செய்திகள், விவரங்களுடன் வெளி வந்துள்ளன.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஊழல்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ சபைக்குட்பட்ட டாக்டர் சோமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது[8]. இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்றுவிட்டு, சேர்க்கையில் இடம் கொடுக்கவில்லை என சர்ச்சை எழுந்தது[9]. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வெல்லறடை, மியூசியம் ஆகிய காவல்நிலையங்களில் புகார் கொடுத்தனர்[10]. இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது[11]. இவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிஷப் தர்மராஜ் ரசாலம் பெயர் இல்லை[12]. தங்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக்கொடுத்த பிஷப்பின் பெயரே குற்றப்பத்திரிகையில் இல்லாததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்[13]. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் சிலர் சபைக்குத் தெரியாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் திருச்சபையில் இருந்தே புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை அமலாக்கத்துறை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.

குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது; முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டே போலி சாதிச் சான்றிதழ் வினியோகித்து பிஷப் தர்மராஜ் ரசாலம் முறைகேடாக 11 மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்தச் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை கல்லூரியில் நடக்கும் மாணவர் சேர்க்கைக் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராஜேந்திர பாபு என்பவரது தலைமையில் விசாரித்த அந்தக்குழு, பிஷப் தர்மராஜ் ரசாலம் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது. இந்தக் கல்லூரியில் அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தியும், பணம் கட்டியும் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களில் அதிக அளவில் தமிழ் மாணவர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.

அமலாக்கத்துறை சோதனை; திருவனந்தபுரத்தில் பிஷப் இல்லத்தை உள்ளடக்கிய எல்.எம்.எஸ் வளாகம், சபையின் செயலாளராக இருக்கும் ப்ரவீன் என்பவரது இல்லம், காரக்கோணத்தில் இருக்கும் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, கல்லூரி இயக்குநர் பெனட் ஆப்ரகாம் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெனட் ஆபிரகாம் கடந்த 2014-ம் ஆண்டு, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சசி தரூரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, மிக மோசமாகத் தோற்றவர் ஆவார். சர்ச்சிற்குள் இவருக்கும் மற்றவர்களுக்கும் சண்டை-சச்சரவு இருந்து வந்துள்ளது[14]. முன்னதாக இதுதொடர்பாக கல்லூரி மாணவர்களின் கட்டணம் தொடர்பாக புகார் கொடுக்கும் கல்விக்கட்டண நிர்ணய குழுவிலும் மாணவர்கள் புகார் கொடுத்திருந்தனர். அப்போது சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை உள்ளடக்கிய சி.எஸ்.ஐ சபையின் பிஷப் தர்மராஜ் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார்[15]. “மடியில் கனம் இல்லாதவர், வழியில் ஏன் பயப்பட வேண்டும்”என்பது போல் தவறு செய்யவில்லை என்றால் பிஷப் ஏன் எழுதிக்கொடுக்க வேண்டும் என கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், இவ்வழக்கில் நேரில் ஆஜராக பிஷப் தர்மராஜ் ரசாலத்திற்கு சம்மன் அனுப்பும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்[16]. இதனிடையே மத நிகழ்ச்சி ஒன்றிற்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் பிஷப். அதற்கு முன் சம்மனை அனுப்பி கிடுக்குப்பிடி போடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை[17]. ஜூலை 2022ல் இங்கிலாந்திற்கு ஓடிவிடலாம் என்று விமானநிலையத்திற்கு சென்றபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டு திரும்ப கொண்டு வரப்பட்டார்[18].

© வேதபிரகாஷ்

16-01-2023


[1] தமிழ்.இந்து, தென்னிந்திய திருச்சபை தலைமைப் பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்: முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 13 Jan 2023 07:20 PM, Last Updated : 13 Jan 2023 07:20 PM

[2] Dharmaraj Rasalam is a bishop in the Church of South India: he has been Bishop of South Kerala since 2011 and Moderator of the Church of South India since 2020. Rasalam was born in 1956 at Venganoor and educated at the University of Kerala. He was ordained in 1987. Since 2012, he has been implicated in various civil and criminal cases attributed to financial irregularities and abuse of power.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/929008-election-for-posts-including-archdiocese-of-church-of-south-india-hc-interim-stay-on-declaring-results.html

[4] தினத்தந்தி, தென்னிந்திய திருச்சபை தேர்தல் முடிவை வெளியிட தடைஐகோர்ட்டு உத்தரவு, ஜனவரி 14, 4:52 am

[5] https://www.dailythanthi.com/news/state/prohibition-on-publication-of-south-indian-church-election-results-court-orders-878636

[6] காமதேனு, தேர்தல் நடத்தலாம், முடிவை வெளியிடக் கூடாது: தென்னிந்திய திருச்சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated on: 13 Jan, 2023, 8:10 pm

[7] https://kamadenu.hindutamil.in/national/madras-high-court-bans-declaration-of-south-indian-church-election-results

[8] காமதேனு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுதமிழக மாணவர்களிடம் வசூல் வேட்டை: கேரள பிஷப்க்கு அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி, என்.சுவாமிநாதன், Updated on : , 26 Jul, 2022, 12:25 pm

[9] https://kamadenu.hindutamil.in/national/kerala-bishop-accused-of-malpractice-in-medical-student-admissions

[10] தினத்தந்தி, மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை, ஜூலை 27, 6:49 am .

[11] https://www.dailythanthi.com/News/India/complaint-about-collecting-donations-for-medical-studies-bishop-dharmaraj-rasalam-banned-from-traveling-abroad-755097

[12] தினமலர், மருத்துவக்கல்லுாரி நன்கொடை விவகாரம் சி.எஸ்.., பிஷப் வெளிநாடு செல்ல தடை, Added : ஜூலை 29, 2022  01:10

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=3087430

[14] Kerala High Court – Rev. Bishop Dharmaraja Rasalam vs Rev. Dr. T.B Premjith Kumar, IN THE HIGH COURT OF KERALA AT ERNAKULAM,  PRESENT:  THE HONOURABLE MR. JUSTICE K.ABRAHAM MATHEW, FRIDAY ,THE 30TH DAY OF OCTOBER 2015/8TH KARTHIKA, 1937, OP(C).No. 2179 of 2015 (O),  OS 1065/2013 OF MUNSIFF COURT,THIRUVANANTHAPURAM.

https://indiankanoon.org/doc/167311449/?type=print

[15] Two years ago, the Kerala High Court cancelled the admission of 11 medical students enrolled on the basis of fake community certificates issued by the Bishop. In 2019, Kerala’s state admission fee regulatory committee also found that the college accepted exorbitant fees from some NRI students.

Hindusthan Times, Day after ED raids, Bishop Rasalam reaches airport for UK visit; turned back, India News, Published on Jul 26, 2022 03:21 PM IST.

[16] Later, some students from Tamil Nadu also filed a cheating complaint, alleging that they had to pay a huge amount to the college management for MBBS seats.

https://www.hindustantimes.com/india-news/day-after-ed-raids-bishop-rasalam-reaches-airport-for-uk-visit-turned-back-101658829073912.html

[17] The Hindu, Emigration officials at the Thiruvananthapuram airport prevent CSI bishop from leaving for UK, G ANAND, July 26, 2022 11:37 am | Updated 05:49 pm IST – Thiruvananthapuram

[18] https://www.thehindu.com/news/national/kerala/emigration-officials-at-the-thiruvananthapuram-airport-prevent-csi-bishop-from-leaving-for-uk/article65684345.ece

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].

அரசியல், அரசியலாக்கப் பட்ட  நீதித்துறை, திராவிடத்துவ குழப்பங்கள்சமரசங்கள் முதலியவ்ற்றின் தக்கம் காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே.  ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.

நீதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாகத் தொடரப்பட்ட வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையான விமர்சனங்களுக்கோ மாற்றுக் கருத்துகளுக்கோ இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மதத் துவேஷக் கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் எனப் பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மாரிதாஸுக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது? மாரிதாஸுக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன? வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].

தீர்ப்பைப் பற்றிய என்னுடைய கமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:

1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!

3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!

4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!

5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!

6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..

7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!

8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!

9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….

10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.

மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] ஏபிபிலைவ், கிறிஸ்தவத்திற்கு எதிரான செயல்களை செய்ததற்காக ஜார்ஜ் பொன்னையாவை கடவுள் தண்டிப்பார்நீதிபதி, By: மனோஜ் குமார் | Updated : 08 Jan 2022 02:19 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/god-will-punish-george-ponniah-for-committing-acts-against-christianity-madurai-high-court-judge-gr-swaminathan-34339

[3] சமயம்.தமிழ், பிரதமர் குறித்து அவதூறு பேச்சுஜார்ஜ் பொன்னையாவிற்கு ஜாமீன் கிடைக்குமா?, Josephraj V | Samayam Tamil, Updated: 6 Jan 2022, 5:22 pm.

[4] https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-madurai-bench-adjourns-judgment-on-george-ponnaya-petition-till-7th/articleshow/88735042.cms

[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.

[6]  ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

[7] சமயம்.தமிழ், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து; மாறுபட்ட பார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/the-case-against-maridhas-and-the-verdict-have-triggered-a-lot-of-controversies/articleshow/88298429.cms

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html

கடவுளின் வங்கி, வாடிகன் வங்கி நிதி மோசடிகளில் ஊறி, பணமோசடிகள் செக்ஸ்-குற்றங்களில் முடிந்த நிலை!

ஒக்ரோபர் 17, 2019

கடவுளின் வங்கி, வாடிகன் வங்கி நிதி மோசடிகளில் ஊறி, பணமோசடிகள் செக்ஸ்குற்றங்களில் முடிந்த நிலை!

Vatican bank -nexus with other organizations

வாடிகன் நாடும், வங்கியும்: வாடிகன் நகரம், “ஒரு நாட்டில் உள்ள நாடு” [State wthin a state] என்ற ரீதியில், ரோமில் செயல்பட்டு வருகிறது. அதனால்,அதற்கான வங்கியும் தனியாக உள்ளது. உலகத்தின் பல இடங்களிலிருந்து, பலவழிகளில் நிதி வந்து கொண்டிருக்கிறது. அதனை வாடிகன் வங்கி நிர்வகித்து வருகின்றது. வாடிகன் வங்கி [The Institute for the Works of Religion (Italian: Istituto per le Opere di Religione – IOR] ஜூன் 1942ல், போப் பயஸ்-12 ஆல் நிறுவப்பட்டது. 2012ல் பரவலாக தன்னுடைய வங்கிப்பணிகளை விரிவுப் படுத்தியது. 2013ல் தனது வரவு-செலவு அறிக்கையினையும் வெளியிட்டது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதால், யூரோ இதன் கரன்சியாக இருக்கிறது. இது கடவுளின் வங்கி, தேவனின் / தெய்வத்தின் / மேரியன் வங்கி என்றெல்லாம் வழங்கப் படுகிறது. பல நேரங்களில் வங்கிப் பணம் மற்ற செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படுவது, தெய்வ-தருமகாரியங்களுக்கு என்று வரிவிலக்குக் ஒடுக்கப் பட்டுள்ள பணம், சொத்து முதலியவற்றை மற்ற காரியங்களுக்கு உபயோகப் படுத்த அனுமதி கொடுக்கப் பட்டு பணத்தை அள்ளி வருகின்றனர்.

Vatican bank scandal, 02-10-2019, five officers suspended

2019 ஆண்டு பிரச்சினை, விவகாரம் முதலியன: வாடிகன் வங்கி [The Vatican Bank, officially known as the Institute for Religious Works or IOR] சமீப காலங்களில் பல நிதிமோசடிகளில் சிக்கியுள்ளது. வாடிகனின் தரும காரியங்களுக்கு என்று துவக்கப் பட்ட கோடானுக் கோடி பணம் [$400 million], லண்டனில் அடுக்குமாடி கட்டிடங்கள் வாங்க உபயோகப் படுத்தப் பட்டது. அதாவது, பணத்தை முறைதறிய லாபங்களுக்காக, வாடிகன் வங்கி அதிகாரிகள் இவ்வாறு திருப்பியுள்ளனர். அவ்வாறு வாங்கப்பட்ட கட்டிடங்கள், ஓரின சேர்க்கை கத்தோலிக்க சாமியார்களின் விபச்சார மடங்கள் [gay brothels] ஆகின, சில நேரங்களில் பெண்களும் வந்து சென்றனர். அதாவது, பாதிரிகளில் உல்லாசக் கூடங்களாக இருந்தன. இவற்றை சில இத்தாலிய நாளிதழ்கள் கண்டு பிடித்து வெளியிட்டன. இதனால், பிரச்சினை வெளியே தெரிய, அசிங்கமாகியது. 02-10-2019 அன்று ஐந்து வங்கி அதிகாரிகள் வேலை-நீக்கம் செய்யப் பட்டனர்[1]. இதனால், குற்றம் நிவத்தியாகி விட்டது என்று அர்த்தமில்லை. பொதுவாக இவ்வாறு வழக்குகள் அமைதியாக மூடப்படும்.

Vatican bank -nexus with other organizations-books

கடந்த ஆண்டுகளில் நடந்த நிதி மோசடிகள், வரியேய்ப்புகள் முதலியன: 2006-2011 ஆண்டுகளில் €4bn சொத்துவரி வாடிகன் ஏமாற்றியதால், நீதிமன்றம் செல்லுத்துமாறு ஆணையிட்டது! ஜூன் 28, 2013 அன்று, மோன்சிக்னர் நுன்சியோ ஸ்கெராரானோ என்ற கிருத்துவ சந்நியாசி மோசடி மற்றும் ஊழல் காரணங்களுக்காக, இத்தாலிய போலீஸார் கைது செய்தனர்[2]. சுமார் 10 பில்லியன் $ சொத்து, 40,000 வங்கிக் கணக்குகள், என்று  இருந்தும், வருவாய்க்கு மேல் செலவு செய்து, நஷ்டத்தைக் காட்டுகிறது! 1982ல், ராபர்டோ கல்வி என்ற “கடவுளின் வங்கி அதிகாரி,” லண்டனில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார்[3]. பணமோசடி வித்தைகளில் கடவுளின் வங்கியான, வாடிகன் வங்கி, தொடர்ந்து ஈடுபட்டு வருவது, போப்பிற்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. ஆனால், அவருக்குத் தெரிந்தே, எல்லாம் நடக்கின்றன, அவரே அதற்கு ஒப்புக் கொள்கிறார் என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிக்க அதிகாரம் மற்றும் ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் போப் மற்றும் கடவுளின் வங்கி, இவ்வாறு பணமோசடிகளில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையாளர்களுக்கு திகைப்பாக இருக்கிறது.

Church covers up pedophiles

குழந்தை கற்பழிப்பாளிகள் செக்ஸ் குற்றங்களும், அதற்கு இழப்பீடு கொடுத்து சமரசப் படுத்தலும்: குழந்தை கற்ப்பழிப்பாளிகள் கிருத்துவத்தில் அதிகம், இதைப் பற்றி பல கட்டுரைகளில், பல உடாரணங்களுடன் விவரமாக எடுத்துக் காட்டியுள்ளேன். இத்தகைய செக்ஸ் குற்றங்களினால், உலகம் முழுவதுமே, அசிங்கம் ஏற்பட்டுள்ளதால், வாடிகன், போப் மற்ற கிருத்துவ பாதிரிகள், இக்குற்றங்களை மறைத்தே வந்துள்ளனர், வருகின்றனர். 2017ல் ஆஸ்திரேலியாவில், இக்குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போய், நாறிவிட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகள், அதாவது 18 வயது வரையுள்ள இளம் ஆண்-பெண்கள் கற்பழிக்கப் பட்டு, தொடர்ந்து, தங்களது காமப் பசிக்கு, அவர்களை உபயோகப் படுத்திக் கொண்டனர[4]. இதனால், 4445 குழந்தைகளுக்கு 213 மில்லியன்$ கொடுத்து அமுக்கியுள்ளனர்[5]. இதைப்பற்றி, ஆஸ்திரெலிய அரசு ஒரு ஆராய்ச்சியே நடத்தி, முடிவுகளை வெளியிட்டது[6]. இருப்பினும், இதனை ஆதரிக்க, ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அதாவது, பிடோபைல் ஒரு வியாதியாகும், குற்றமல்ல, என்று விசித்திரமான அருவருக்கத் தக்க கருத்துடன், உலா வந்துக் ஒண்டிருக்கிறது அக்கூட்டம்.

Vatican bank -02-10-2019, five officers suspended.Latin paper

குழந்தை கற்பழிப்பிற்கு அடுத்ததாக உள்ளது, கன்னியாஸ்திரிக்களைக் கற்பழிக்கும் விவகாரம்: இதுவும் உலகம் முழுவதும் தெரிந்த விசயமாகி விட்டது. இந்தியாவிலும் அதிகமாகி வருகின்றது. அபயா கொலை, கன்னியாஸ்திரி கற்பழிப்புகள் என்று அதிகமாகி வருகின்றன. இவையெல்லாமும், பணத்தால் சரிகட்டப் பார்க்கிறனர். ஜோசப் பழனிவேல் ஜெயபால் விவகாரத்தில், பணம் கொடுத்து சரிகட்டப் பட்டது[7]. பிஷப் மூலக்கல் விவகாரம் நாறி விட்டது. ஆகவே, பணத்தை வைத்து, எல்லாவற்றையும் சரிகட்டலாம், என்ற எண்ணத்துடன் இருப்பது, செயல்படுவது, அழிவிற்கு எடுத்துச் செல்லும் பாதையாகி விடும். இப்பொழுது செக்ஸ் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உலகில் கிருத்துவ பாதிரிகள் பாஸ்டர்கள் முதலியோர் பற்றி யாரும் நம்புவதாக இல்லை. கிருத்துவமதத்தின் பெயரும் அடியோடு கெட்டு விட்டது. இஸ்லாம் தீவிரவாதம் என்றால், கிருத்துவம் செக்ஸ்-கற்பழிப்பு குற்றங்கள்-பாலியல் அசிங்கங்கள் என்ற நிலைக்கு, ஒப்பீட்டில் உள்ளது. அதனால் தான் குற்றங்களை மறைத்து வெள்ளையடிக்க முயன்று வருகின்றனர். அங்கு தான் பணம் கொடுத்து சரிகட்டும் முறை வருகிறது.

Vatican bank scandal, 15-10-2019

இந்த செக்ஸ்-கற்பழிப்புகள் குற்றம், மிகப் பெரிய சமூக குற்றம்: இச்செயல்களை ஏதோ மனம் சிதைந்தவர்களின் செயல் போன்று திரிபுவாதங்கள் கொடுக்க, அமெரிக்கர்கள் முயன்று வருகின்றனர்[8]. “பிடோபிலியா” என்று அதற்கு ஏதோ ஜுரம், சளி மாதிரி பெயரை மாற்றி வைத்து, குற்றமல்ல என்று வாதிக்கவும் தயாராகி விட்டனர்[9]. கற்பழிப்பு குற்றமல்ல என்பது, விவேக்கின் மைனர் குஞ்சு ஜோக் போன்று உள்ளது. வாடிகன், வங்கியில் பணத்தை செலவிடப்படும் முறை. அவற்றுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடவுளின் பணம், மிகத் தூய்மையாக இருக்க வேண்டிய நிலையையும் மறந்து அது பாவமான காரியங்களுக்கு உபயோகப்படுகின்றன இந்நிலையில்தான் எல்லா குற்றங்களும் கிருத்துவ மதத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அதுவே இது உலகம் முழுவதும் மற்றும் இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் ஒரு பெரிய அபாயகரமான போன்ற கொடிய நோய் போன்று அல்லது இக்காலச் போன்ற தீவிரவாத செயலை விட மிகக் கொடுமையாக தான் கருத வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது சமுதாயத்தையே அழிக்கும் புற்றுநோய் போல ஒரு அச்சத்தை உண்டாக்கி வருகிறது.

வேதபிரகாஷ்

16-10-2019

Pedophilia is not a crime, it is mental disorder 2014 NY times

[1] The five senior officials were suspended on Wednesday after the Vatican confirmed on Tuesday that prosecutors had seized documents from the offices of the city state’s financial information authority, an oversight body, and its secretariat of state.

https://www.theguardian.com/world/2019/oct/03/anti-mafia-proscutor-giuseppe-pignatone-appointed-head-of-vatican-court

http://espresso.repubblica.it/inchieste/2019/10/02/news/vaticano-clamoroso-scandalo-milionario-indagine-su-un-monsignore-e-il-capo-dell-aif-1.339417?refresh_ce

[2] On June 28 2013, Italian police arrested a silver-haired priest, Monsignor Nunzio Scarano, in Rome. The cleric, nicknamed Monsignor Cinquecento after the €500 bills he habitually carried around with him, was charged with fraud and corruption,

[3] The Vatican’s bank made headlines following the 1982 death of Roberto Calvi, known as “God’s banker” because of his links to the Holy See, whose corpse was found hanging from Blackfriars Bridge in London

[4] SocialConsciousness, Catholic Church Paid $213 Million To 4,445 Children Sexually Abused By Pedophile Priests In Australia, Monday, June 5, 2017.

 Read more at:

[5] Read more at: http://www.social-consciousness.com/2017/06/catholic-church-paid-213-million-4445-children-sexually-abused-pedophile-priests-in-australia.html

[6] ஆஸ்திரேலிய அரசின் அறிக்கையை இங்கே படிக்கலாம் – https://www.childabuseroyalcommission.gov.au/case-studies/case-study-50-institutional-review-catholic-church-authorities

[7] https://christianityindia.wordpress.com/2010/04/07/the-rapist-of-america-lives-in-ooty-happily/

[8] The New York Times, Pedophilia: A Disorder, Not a Crime, By Margo Kaplan, Oct. 5, 2014

[9] https://www.nytimes.com/2014/10/06/opinion/pedophilia-a-disorder-not-a-crime.html

Vatican bank -02-10-2019, five officers suspended

என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்!

ஜூலை 3, 2011

என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்

 

ஜெயிலிலிருந்து மருத்துவமனைக்குச் சென்ற சாத்வி பிரக்யா தாகூரும், விடுதலை ஆகி வெளியே வந்த மரியா சூசைராஜும்: காலை 11.35 அளவில், ஊடகக்காரர்கள் மற்றவர்கள் பைகுல்லா ஜெயிலின் வாசலில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று கதவுகள் திறந்து ஒரு ஆம்புலன்ஸ் வெளிவந்ததும், ஏதோ ஒரு “கொள்ளைக்காரன்” வெளியே வரப்போகிறான் என்று பார்த்தனர். ஆனால், சாத்வி பிரக்யா தாகூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப் பட்டார். பிறகு தான் வெள்ளை நிற காரில் வந்த மரியாவின் சகோதரர் கதவருகில் சென்றபோது, மரியா இனிமேல் தான் வருவார் என்று தெரிய வந்தது.

 

சொகுசு காரில் சர்ச்சிற்குச் சென்ற மரியா: மரியா ஆர்தர் ரோடில் இருக்கும் ஜெயிலிலிருந்து வெளி வந்ததும், போலீஸார் ராஜ உபசாரத்துடன் அதாவது, ஏதோ ஒரு பெரிய விஐபி போன்று அனுப்பி வைத்தனர். வெளியே தயாராக நின்று கொண்டிருந்த ஹோண்டா-சிடி காரில் ஏறி, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். பந்த்ரா-வோர்லி கடற்கரை சாலை வழியாக மாஹியில் இருக்கும் செயின்ட் மைக்கேல் சர்ச்சிற்கு, தனது சகோதரியுடன் சென்றார்[1]. மூன்று வருடங்களாக தான் எந்த சர்ச்சிற்கும் செல்லவில்லை என்று கூறினார். சர்ச்சிற்குள் சென்றதும், உட்கார்ந்து கொண்டார். அருகில் சகோதரரும் இருந்தார். கைகளைக் கூப்பிக் கொண்டு பிரார்த்தனை செய்தார். சுமார் அரைமணி நேரம் அங்கிருந்தபோது, பிரார்த்தனை செய்தபோய்து அழுத நிலையில் இருந்தார்[2]. கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொண்டே இருந்தார். குற்ற உணர்வுடன் இருப்பது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. இதை ஊடகக்காரர்களும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

 

பேட்டியில் சரீஃப் ‌ஷேய்க், மரியாவின் வக்கீல் கூறியது[3]: “நீரஜின் உடல் 300 துண்டுகள் வெட்டப்பட்டது என்பதெல்லாம் உண்மையில்லை…புலன் விசாரணை செய்த ராவ் ரானே என்பவர் எடுத்த புகைப்படம் இது (ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்). இதில் உடல் 300 துண்டுகளாக இருப்பதைப் பார்க்கிறீர்களா? விலா எலும்புகள், மண்டை ஓடு எல்லாமே ஒழுங்காக இருக்கின்றன[4]. 300 துண்டுகளாக உடல் வெட்டியிருந்தால், எலும்புக்கூடு இவ்வாறு இருக்குமா? போலீஸார் அவ்வாறு பார்த்திருக்க முடியுமா? ஆகவே போலீஸார் அத்தகைய தவறான விஷயத்தை ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள். எங்களுக்கு தீர்ப்பின் நகல் ஜூலை 7ம் தேதி கிடைத்தவுடன், நாங்கள் மேல் முறையீட்டிற்குச் செல்வோம்”, என்று சரீஃப் ஷேய்க் என்ற மரியாவின் வக்கீல் கூறினார். அதற்குப் பிறகு, மரியாக கீழ்கண்டவாறு பேட்டியளித்தார்.

 

மரியாவின் பேட்டியில் சொன்னது[5]: வழக்குப் பற்றிய விவரங்களைக் கேட்ட வினாக்களுக்கு பதில் சொல்ல மறுத்து, “நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் நான் குற்றமற்றவள். என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும்[6] நான் கடந்த காலத்தை பின்னால் விட்டுவிட விரும்புகிறேன். எனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எதையும் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை[7]”, என்றார்.

 

ஜெரோமுடன் எந்த உறவும் இல்லை, பேசியதே இல்லை[8]: நீரஜ் மற்றும் ஜேரோம் இவர்களுடனான உறவுகளைப் பற்றிக் கேட்டபோது, நீரஜுடனான உறவை முக்கியத்துவப் படுத்தாமல் மழுப்பினார். “நான் அவருடன் (ஜெரோமுடன்) எதையும் பேசவில்லை………”, மறுபடியும் கேட்டபோது, “அவருடன் (ஜெரோமுடன்) எனக்கு நட்பு கூட இல்லை………”, என்று சொன்னது வியப்பாகத்தான் இருந்தது.

 

ஊடகக்காரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மழுப்பலக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தபோது, இதுவரை நான் இத்தனை பேர்களை எதிர்கொண்டதில்லை….”, என்றெல்லாம் சொல்லி,  “நான் தண்டனைக்குட்பட்டுள்ளேன். என்மீது ஏற்பட்டுள்ள நான் சிறையில் மூன்று வருடம் 41 நாட்கள் இருந்தேன். சிறையில் இருந்ததால் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்[9]. களங்கத்தை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லை. என்னுடைய குடும்பத்தார் என்ன செய்வது என்று தீர்மானிப்பார்கள். எனக்கு நான் கடவுளுக்கு அருகில் இருந்ததாக உணர்ந்தேன். கடவுளை உணர்ந்தேன், அவர் தான் என்னை வெளியே அழைத்து வந்துள்ளார்.

சித்திரங்கள் வரைந்து கொண்டிருந்தேன், பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்………”. என்றெல்லாம் சொன்னார்.

 

எங்களுடைய மகனின் கொலையை தமாஷா ஆக்கிவிடாதீர்கள்: எங்களுடைய மகனின் கொலைகயை தமாஷா ஆக்கிவிடாதீர்கள் என்று நீரஜின் தந்தை அமர்நாத் வருத்தத்துடன் தெரிவித்தார். “ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், எங்களுடைய மகனின் பிணத்தைக் கூட போலீஸார் எங்களுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது தான் வெள்ளிக்கிழமை – 01-07-2011 அன்று கொடுப்பதாகக் கூறினார்கள்[10]. ஏற்கெனவே எரித்துவிட்டார்கள் என்றால் எப்படி பிணத்தைக் கொடுக்க முடியும்? நாங்கள் வாங்கமுடியாது என்று கூறிவிட்டோம்”. மரியா மற்றும் ஜெரோம் கொடுத்த ரூ. 1.5 லட்சங்களைப் பெற குரோவர் தம்பதியர் மறுத்துவிட்டனர்[11]. மே 2008ல் கொலை செய்யப்பட்ட பிணம் எப்படி இப்பொழுது கொடுக்க முடியும்? இதுவே முழு பொய் என்று நன்றகவே தெரிகிறது.

 

தர்கா-கோவில் செல்ல விரும்பிய மரியாவும் ஏசுவிடன் நெர்க்கமாகி விட்ட மரியாவும்[12]: மாஹிமில் உள்ள தர்கா மற்றும் சித்தி வினாயகர் கோவில் முதலிய இடங்களுக்கு செல்வதாக இருந்ததாம். ஆனால், பிறகு அவற்றை தவிர்த்து, நேராக சீக்கிரமாக வக்கீலைப் பார்க்க பந்த்ரா-குர்லா பாதையில் சென்று விட்டாராம்[13]. சரீஃப் ஷேய்க் அங்கு என்ன பேசலாம், கூடாது என்பது பற்றி விவாதித்தப் பிறகு, பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாம். அதனால்தான், சர்ச்சிற்குள் நுழையும் போதே, ஊடகக்காரர்கள் கேள்வி கேட்டபோது, மரியாவின் சகோதர், பிறகு இதற்கெல்லாம் பதில் சொல்லப்படும் என்று கூறி, மரியாவை அணைத்துக் கொண்டு சர்ச்சிற்குள் சென்றுவிட்டனர். ஆக மிகவும் தீர்மானித்து செயல்படுவதைக் காணலாம், இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் இவ்வாறு ராஜ மரியாதையுடன் நடத்தப் பட வேண்டும் என்று தெரியவில்லை. திடீரென்று, இப்பொழுது மதரீதியிலான பதில்கள், நியாயப்படுத்தப்படும் முறைகள் முதலியவற்றை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு பெண் இரு ஆண்களை காதலிப்பது, உறவு வைத்துக் கொள்வது ……………………முதலியவற்றை கிருத்துவம் ஆமோதிக்கிறதா, கர்த்தர் ஆதரிக்கிறாரா அல்லது ஏசு ஏற்றுக் கொள்கிறாரா என்று தெரியவில்லை. இப்பொழுது மரியா கர்த்தர் / ஏசுவின் அருகில் மிகவும் நெருக்கத்தில் இருப்பதால், ஒருவேளை, அவரே பதில் சொல்லக்கூடும்! குற்றவாளிகள் இப்படி தொடர்ந்து மதரீதியில் பேசுவது, தங்களை அவ்வாறு காட்டிக் கொள்வது, “எங்கள் கடவுள் எங்களுடன் இருக்கிறார்”, என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும், என்றெல்லாம் சொல்வது நீதித்துறையை பாதிக்கக் கூடும். மேலும், இது அரசியல் ஆக்கப்படும் படும்போது, சாதாரண மக்களும், இப்பிரச்சினையால் அவதிப்பட நேரிடலாம். ஏற்கெனவே, செக்யூலரிஸ இந்தியா, இஸ்லாம் அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பனவற்றால், அதிகமாகவே அவஸ்தைப் பட்டு, வருந்திவரும் வேளையில், இத்தகதைய கிருத்துவமத வாதங்கள் தேவையில்லை. அந்தந்த கடவுளின் நம்பிக்கை அவரவர்களுக்கு, இதனால் என் கடவுள் என்னை காப்பாற்றினார், உன் கடவுள் உன்னை காப்பாற்றவில்லை என்பது போலெல்லாம் பேசவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், பிறகு, உனது கடவுள் தான் அத்தகைய உறவு முறைகளை வைத்துக் கொள்ள சொன்னாரா, அவ்வாறு கொலை செய்யச் சொன்னாரா, குரூரமாக உடலை வெட்டச் சொன்னாரா…………….என்றெல்லம் கேள்விகள் எழுந்தால், நன்றக இருக்காது.

 

வேதபிரகாஷ்

03—07-2011


[5] டிவிக்களில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டவைகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

“All I know is that I am innocent. I have left my past behind. I haven’t realised what is happening. I have not digested the fact that I am convicted. That is a big stigma for me.” [7] http://www.hindustantimes.com/Maria-free-says-she-is-innocent/Article1-716664.aspx

[8] The 30-year-old refused to comment on her relationship with Grover, and played down the importance of her fiancee, Jerome, in her life. “I have not had a word with him…” She insisted that she shared “no friendship” with Jerome.

http://timesofindia.indiatimes.com/city/mumbai/I-have-left-my-past-behind-says-Maria-Susairaj/articleshow/9078189.cms

[9] “I have spent three years and 41 days in the jail. I should say I was blessed. I got close to God and believed in God, and (it is) He who has got me out today. I did a lot of paintings and prayer meets and lot of activities inside the jail,”….. http://www.telegraphindia.com/1110703/jsp/nation/story_14191089.jsp

[13] She was also scheduled a visit to the Mahim Dargah and Siddhivinayak temple, but decided against it and took the Western Express Highway to Thane in an attempt to shake off the media. Once the coast was clear, she quickly headed to her lawyer’s office at Bandra Kurla Express.

 

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி (2)

ஏப்ரல் 29, 2011

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி (2)


மேல் முறையீடு செய்ய ஏற்பாடு: 20-04-2011 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது[1]. 23-04-2011 (சனிக்கிழமை) கடலூரில் ஜான் டேவிட் சரண்டர் ஆகிறான். இவ்வளவு நடந்த பிறகும், போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, உச்ச நீதி மன்றத்தில் மறு ஆய்வு செய்ய / மேல் முறையீடு மனு செய்யப் போவதாக அவனது வழக்கறிஞர் ஏ. பத்மநாபன் என்பவர் 27-04-2011 அன்று தெரிவித்திருப்பது[2], சட்டமுறையை இன்னும் எந்த அளவிற்கு இழுக்கலாம், காலம் தாழ்த்தலாம் என்று தெரிகிறது. மறுபடி-மறுபடி நேரிடையான ஆதாரங்கள் இல்லை, மறைமுகமான, சந்தர்ப்பவசமான, ஆதாரங்கள்தான் உள்ளன என்று இப்படி வாதிட்டு வருவது, சட்டப் பிரிவுகளில், மேல்முறையிட்டு அமைப்பில் நியாயமாக இருக்கலாம். அதற்கு குற்றவாளிக்கு, உரிமையும் இருக்கலாம். ஆனால், குற்றத்தை பல நேரங்களில் ஒப்புக் கொண்டு இரண்டுமுறை சிறைக்கு வந்துவிட்டப் பிறகு[3], மறுபடியும் அத்தகைய முறையீட்டை பயன்படுத்தி பார்த்துவிடுவது என்ற முடிவு ஜான் டேவிட் உடையதா அல்லது அவ்வாறு யாராவது தூண்டிவிட்டுள்ளனரா அல்லது இன்னும் நீதித்துறையிலுள்ள சட்ட சலுகைகள், உரிமைகள் அல்லது ஓட்டைகளை வைத்து ஒருவேளை, கெட்ட முன்னுதாரத்தை உருவாக்க முயல்கிறார்களா என்பது, மறுபடியும் மூன்று-ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியும்.

ஜான் டேவிட்டும், அவனது பெற்றோரும்: ஜான் மாரிமுத்து மற்றும் எஸ்தர் லட்சுமி என்கின்ற அவனது பெற்றோர்களுக்கு, அவனைப் பற்றிய விவரங்கள் நிச்சயமாகத் தெரியும் என்பது, அவர்களது நடவடிக்கைகளிலிருந்து அறியப்படுகின்றது. போலீஸார் ஊடகங்களில் ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான் என்றபோதே, அவர்கள் கரூரிலிருந்து சென்னைக்கு வந்து, வக்கீல்களை சந்தித்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். அத்தகைய வதந்தி பரப்பியுள்ளது அவர்களின் வேலைதான் என்று தெரிய வந்துள்ளது. தம்முடைய மகன் விரைவில் சரணடைவான் என்று பெற்றோர் அறிவித்தனர்[4]. இணைத்தள நகலை வைத்துக் கொண்டு சரண்டரும் ஆகிவிட்டது.

ஜான் டேவிட்டைப் பற்றிய விவரங்களை மறைக்கும் ஊடகங்கள்: ஜான் டேவிட்டின் விஷயத்தில் மட்டும் ஊடகங்களில் அவனைப் பற்றிய விவரங்கள் மிகவும் குறைந்த அளவில்தான் வந்துள்ளன. அவனது முகத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அளவிற்குக் கூட, புகைப் படமோ, அல்லது தொலைக்காட்சிகளில் செய்திகளிலோ காட்டவில்லை. ப்ழைய படங்களைத் தான் காட்டி வந்துள்ளனர். குறிப்பாக “தி ஹிந்து”வில் வந்த இரண்டு படங்களைத்தான், மாற்றி-மாற்றி மற்ற ஊடகங்கள் காட்டிவருகின்றன. மேலும் சதர்லாந்து கம்பெனியில் வேலைப் பார்க்க உண்மையான பெயர் மற்ற விவரங்களை மறைத்துள்ளதும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் செய்வது போல இல்லை. ஏனெனில், முன்பு பைபிளை கையில் வைத்துக் கொண்டு, கடவுள்தான் தன்னைக் காப்பாற்றினனர் என்று அரைகூவலிட்டு பேசியது சிலருக்குத்தான் நினைவில் இருக்கும்[5].

ஜான் டேவிட்டைப் பற்றிய வதந்திகள்: தன்னுடைய மகன் திருமணம் செய்து கொண்டு விட்டான், பாதிரியாகி விட்டான், நட்டைவிட்டு ஓடி விட்டான், பாதிரியாகி விட்டான் என்றெல்லாம் வதந்திகள் வருவதை தாய் எஸ்தர் லட்சுமி விரும்பவில்லையாம். ஆகையால் தான், வக்கீல் துணையுடன் சரண்டர் ஆகத் தீர்மனித்தனராம். பிறகு எப்படி, இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தனர். உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடினர் என்பதெல்லாம் ரகசியமாகவே இருந்தன என்பதும் மர்மமமக இருக்கின்றது. இதே மற்ற வழக்கு எனும்போது, தினசரி அல்லது தொடர்ந்து அவ்வழக்கைப் பற்றி ஊடகங்களில் கூறிவருகின்றனர். ஆனால், கிருத்துவர்கள் சம்பந்தப் பட்டவை என்றால், ஆரம்பத்தில் பெரியதாக வந்து, பிறகு, ஒன்றுமே இல்லை என்பது போல அமைதியாகி விடுகின்றது. இந்த போக்கு என்ன என்று ஆராயவேண்டியுள்ளது.

ஆட்டோ சங்கரும், ஜான் டேவிட்டும், கிருத்துவர்களும்: ஆட்டோ சங்கர் விவகாரத்தில், எப்படி கிருத்துவர்கள் ஆபாசமாக விளம்பரத்தைப் பெற முயன்றனரோ, அதேமுறையில் ஜான் டேவிட் விஷயத்திலும் செயல்பட்டது. கொலைவிஷயத்தில் தீவிரமாக விசாரணை செய்தால், ஜான் டேவிட் அவ்வாறு தீவிரமாக கொலைவெறிப் பிடித்த குரூரனாக மாற, கிருத்துவ மதம் தான் காரணம் என்ற உண்மை தெரிய வரும் என்று தெரிந்துகொண்டு, அவ்வழக்கை அமுக்க முயற்சி மேற்க்கொண்டன்ர். சிறையில் இருக்கும் போதே கிருத்துவர்கள் தமது ஆதிக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவன் விடுவிக்கப் பட்டதும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிருத்துவ அமைப்பை அவனை மதபோதக வேலைக்கு வைத்துக் ஆஸ்திரிலேயாவில் பாதிரியாக வேலைசெய்து வருகிறான் என்று செய்திகளை ஏன் பரப்பின என்பதும் வேடிக்கையாக உள்ளன..


[1] Ispector of Police, Tamilnadu vs John David, in Criminal Appeal No. 384 of 2002-Decided on 20-04-2011; http://www.stpl-india.in/SCJFiles/2011_STPL(Web)_404_SC.pdf

[5]  Waving the Bible, John David told waiting presspersons “Your pen is mightier than an ordnance and ammunition; don’t spoil my life with some publicity or the other, and please let me lead my life”, he said fluttering. Long-haired and bearded, David attributed his release to “Lord Christ’s mercy alone, and nothing else”.

http://www.hindu.com/2001/10/09/stories/0409223w.htm

கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு முன்ஜாமீன் வழக்கு நாளைக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது!

நவம்பர் 2, 2010

கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு முன்ஜாமீன் வழக்கு நாளைக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது!

கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு முன்ஜாமீன் கூடாது : ஐகோர்ட் கிளையில் ஆட்சேபம்[1]: பாதிரியை காணவில்லை, தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டபோது[2], முன்ஜாமீனிற்காக மனு செய்யப்பட்டது. திருச்சியில் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை கற்பழித்த வழக்கில் சாட்சிகளை கலைக்கும் அபாயம் இருப்பதால், செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினத்திற்கு முன்ஜாமீன் கூடாது என, மதுரை ஐகோர்ட் கிளையில் 01-11-2010 அன்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது[3]. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக இருந்தவர் பாதிரியார் ராஜரத்தினம். இவர் மீது, கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கொடுத்த புகாரின்படி போலீசார், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்[4]. மேரியைத் தவிர மற்ற பெண்களையும் செஸ் தொல்லைக்குட்படுத்தினார்[5] என்ற லிஸ்ட் கொடுக்கப்பட்டது[6]. ஜாதிரீதியிலும், கிருத்துவ அமைப்புகள் தனித்தனியாக பாதிரிகளை எதிர்த்தும் ஆதரித்தும் போராட்டங்கள் நடத்தின[7].

காணாமல் ஒளிந்திருந்த பாதிரியாருக்கு முன்ஜாமீன் மனு: முன்ஜாமீன் கோரிய ராஜரத்தினம் மனு, நேற்று நீதிபதி ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. பிளாரன்ஸ் மேரி தரப்பில் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு செய்யப்பட்டது. அவரும் நேற்று ஆஜரானார். அவரது சார்பில் மூத்த வக்கீல் பிரபாகரன், வக்கீல் வெங்கடேசன் வாதிடுகையில், “ராஜரத்தினம் மீதான குற்றச்சாட்டு சமுதாயத்திற்கு எதிரானது. புகார்தாரரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து, மொபைல் போனில் படமெடுத்து மிரட்டியுள்ளார். கன்னியாஸ்திரி சபை தலைவருக்கு புகார்தாரர் கடிதம் எழுதியுள்ளார். 2008ல் கருக்கலைப்பு செய்த பின், புகார்தாரர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். “ராஜரத்தினத்தை கைது செய்து விசாரித்தால், உண்மை தெரியும். முதல் தகவல் அறிக்கை தாமதமாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. ராஜரத்தினத்தை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்[8]. சாதாரண கற்பழிப்பு வழக்காக எடுக்கக்கூடாது. புகார்தாரரை மிரட்டுகின்றனர். அவருக்கு பாதுகாப்பு இல்லை. மருத்துவச் சாட்சிகள், ஆதாரங்களைக் கலைக்க வாய்ப்புகள் உள்ளன. முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது‘ என்றனர்.

பாதுகாப்புக்கு உத்தரவு: பிளாரன்ஸ் மேரிக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு வக்கீல் அன்புநிதி, “பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். ராஜரத்தினம் சார்பில் ஆஜரான சேவியர் ரஜினி, “”மூத்த வக்கீல் ஆஜராக, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,” என்றார்[9]. இதையடுத்து, விசாரணையை நவ., 3ம் தேதிக்கு நீதிபதி ராஜசூர்யா தள்ளிவைத்தார்.

உயிருக்கு பாதுகாப்பு இல்லை: பிளாரன்ஸ் மேரி: ஐகோர்ட் கிளையில் பிளாரன்ஸ் மேரி கூறியதாவது: “பாதிரியார் ராஜரத்தினம் மீது புகார் கொடுத்த நான், சபையில் இருந்து வெளியில் உள்ளேன். அவரை கைது செய்ய தயங்குகின்றனர்[10]. அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் பலர் உள்ளனர். வெளியில் சொல்ல பயப்படுகின்றனர்[11]. புகார் கொடுத்ததால், தொடர்ந்து மிரட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன், 10 பேர் என் தந்தை, தாயாரிடம், புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளனர்[12]. நாங்கள் இதற்கு பயந்து ஒவ்வொரு ஊராகச் சென்று வருகிறோம். உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியார் மூலம் மிரட்டல் விடப்பட்டது[13]. எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். ராஜரத்தினத்திற்கு அரசியல், அதிகாரிகளிடம் செல்வாக்கு இருப்பதால்[14], என் புகார் மீது உரிய நடவடிக்கை இல்லை. குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்; கோர்ட்டில் நீதி கிடைக்கும்”, என்றார்.

வேதபிரகாஷ்

© 02-11-2010


[1] தினமலர், கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு முன்ஜாமீன் கூடாது : ஐகோர்ட் கிளையில் ஆட்சேபம், பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010,23:06 IST; மாற்றம் செய்த நாள் : நவம்பர் 01,2010,23:43 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=118255

[2] தினமலர், திருச்சி கல்லூரி முதல்வர் கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரில் கைதா? அக்டோபர் 26, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114364

[3] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரிதிருச்சி கல்லூரி முதல்வர் புகாரில் கைதா? “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’- “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை, https://christianityindia.wordpress.com/2010/10/28/கற்பழிப்பு-பாதிரி-திருச/

[4] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, https://christianityindia.wordpress.com/2010/10/13/பாதிரியார்-மயக்க-மருந்து/

[5] வேதபிரகாஷ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறதுமேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார், https://christianityindia.wordpress.com/2010/10/20/nun-raped-case/

[6] வேதபிரகாஷ், கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!, https://christianityindia.wordpress.com/2010/10/23/கிளினஸ்-உஷா-மேரி-என-தொடரு/

[7] வேதபிரகாஷ், பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்!, https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/

[8] இப்படி பலதடவை, எடுத்துக் காட்டியும், நீதிமன்றம், மற்றவகள், இதனை தவிர்ப்பதாகவே தெரிகிறது. இதனால், கிருத்துவப் பலாப் பாதிரிகள் இவ்வாறு தப்பித்துக் கொள்வது எப்படி என்று ஆராயவேண்டியுள்ளது.

[9] எப்படியெல்லாம் இழுத்தடிக்கின்றனர் என்று நன்றாகவே தெரிகின்றது. வாய்தா வாங்க / தள்ளிப் போட, ஒரு வக்கீலை அனுபியுள்ளனர்.

[10] மனுவை பரிசீலித்த நீதிபதி, “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’ என, அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு அவர், “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை என்று கூறினார்.

[11] வேதபிரகாஷ், கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!, https://christianityindia.wordpress.com/2010/10/23/கிளினஸ்-உஷா-மேரி-என-தொடரு/

[12] இதை தாராளமாக பதிவு செய்திருக்கலாம்.

[13] இவரது பெயரையும் தாராளமாகக் குறிப்பிட்டிருக்கலாம்.

[14] அதுதான், அப்துல் கலாம் கூடவே உட்கார்ந்து  கொண்டாரே?