அமெரிக்காவில் கற்பழித்த பாதிரி ஊட்டியில் ஜாலியாக இருக்கிறாரானாம்: எங்கே லெனின்?

அமெரிக்காவில் கற்பழித்த பாதிரி ஊட்டியில் ஜாலியாக இருக்கிறாரானாம்: எங்கே லெனின்?

மைனர் குஞ்சு மாதிரி தண்டனைப் பெற்றப் பலான பாதிரி: 2001ல் ஜெயபால் என்ற பாதிரி ஒரு 14 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மின்னெசோடா, அமெரிக்காவில் மாட்டிக்கொண்டான். வாடிகனே – அந்த பாதிரியால் சிறுவர்-சிறுமிகளுக்கு ஆபத்து ஏற்படும் –  என்று எச்சரிக்கை விடுத்தும் அந்த பாதிரி ஜாலியாக ஊட்டியில் வேலை செய்து கொண்டு இருக்கிரானாம். ஆனால் இங்கு தமிழ் பத்திரிக்கைகள் கூறுவது வேடிக்கையானது, “இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது“. அதாவது மைனர் குஞ்சு மாதிரி!

20 வயதான அந்த பெண், இப்பொழுதும் வழக்கை விடாமல் தொடர்ந்து வருகிறாள். ஆனால், இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் அவனை பாதுகாத்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இப்பொழுது கத்தோலிக் பிஷப் கான்ஃபரன்ஸ் ஆஃப் (CBCI) இந்தியா என்ற அந்த அமைப்பே அதனை விசாரிக்கும் என்று அறிவித்துள்ளனர்.

அமெரிக்க சிறுமியிடம் பலாத்காரம் ஊட்டி பாதிரியார் மீது குற்றச்சாட்டு
ஏப்ரல் 07,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

ஊட்டி:அமெரிக்க சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிரியார் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, கத்தோலிக்க உயரிய அமைப்புக்கு புகார் தெரிவிக்கப் பட்டுள்ளதாக பிஷப் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி மறை மாவட்டத்தில் ஆசிரியர் பணி நியமன பொறுப்பாளராக பணிபுரிந்து வருபவர் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால். இவர் கடந்த 2004ம் ஆண்டு, செப்டம்பர் முதல் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அமெரிக்கா வில் உள்ள மினிசோடா மாகாணத்தில் உள்ள குரூஸ்டன் திருச்சபையில் பாதிரியாராக பணிபுரிந்தார். அப்போது அந்த திருச்சபையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச் சாட்டுகள் அதிகரித்து வருவதால் அதிருப்தியடைந்துள்ள போப் பெனடிக்ட், பாதிரியார்கள் மீதான குற்றசாட்டுக்களை விசாரிக்க அனைத்து திருச்சபைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம், ஊட்டியில் பணிபுரிந்து வரும் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, அவரை பணியிலிருந்து நீக்கி, அமெரிக்காவில் நடந்து வரும் வழக்கில் ஆஜராக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபாலை தொடர்பு கொள்ள முடிய வில்லை. சம்பவம் தொடர்பாக, சட்டபூர்வ ஆலோசனைகள் பெற அவர் சென்னை சென்று விட்டதாக, ஊட்டி மறை மாவட்ட அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதிரியார் மீதான, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உயரிய அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என, ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால், அவரது தாயாரின் உடல் நிலை மோசமானதால், இந்தியா திரும்பினார். அதன் பின் அமெரிக்கா செல்லவில்லை. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு, குற்றமற்றவர் என தெரிய வந்தது. அதன் பின் எனது நேரடி மேற்பார்வையில் ஊட்டியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேவையான நடவடிக்கைகளுக்காக கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் உயரிய அமைப்பான இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூட்டமைப்புக்கு புகார் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு,அவர் கூறினார்.

கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை கவனிக்கும் பலான பாதிரி: இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஊட்டியில் உள்ள அமல்ராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபாலால் பாதிக்கப்பட்டோர், மின்னசோடாவில் ஒன்று கூடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

பலான பாதிரிக்கு உதவும் கூட்டம்: ஆனால், ‘பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றார். இந்நிலையில், பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா உத்தரவிட்டிருக்கிறார். பாதிரியார் ஜெயபாலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்குமாறு ஊட்டி பிஷப்பிடம் பேசியிருப்பதாகவும் பேராயர் சின்னப்பா கூறினார்..

Christian-phedophile-sex-rapist

Christian-phedophile-sex-rapist

A Catholic priest who has been criminally charged with sexually assaulting a 14-year-old girl in Minnesota six years ago is still working in his home diocese in India despite warnings to the Vatican from an American bishop that the priest continued to pose a risk to children, according to church documents made public on Monday.

The case was handled after the Vatican clarified and streamlined its procedures in 2001 to respond to accusations of sexual abuse by priests.

In 2006, the Vatican recommended that the priest simply be monitored, a document shows.

Father Jeyapaul told The A.P., “It is a false accusation against me. I do not know the girl at all.”

The criminal complaint from Minnesota said that the 14-year-old girl, whose name is redacted, was praying after school at Blessed Sacrament Church in Greenbush, Minn., when Father Jeyapaul told her to come into the rectory. The girl claimed that when she refused to touch his genitals, he told her it was a sin and said he “could make her life miserable.” She said he then pushed her down onto a couch, touched her breasts and pulled down his pants.

The woman, now 20, has brought a lawsuit against the Diocese of Crookston. The documents were released in a news conference on Monday by her lawyers, Jeff Anderson and Mike Finnegan, the same lawyers who gave documents last month to The New York Times on another case involving a Wisconsin priest who molested as many as 200 deaf boys.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “அமெரிக்காவில் கற்பழித்த பாதிரி ஊட்டியில் ஜாலியாக இருக்கிறாரானாம்: எங்கே லெனின்?”

  1. டக்ளஸ் தேவானந்தா பிரச்சினையை திடீரென்றுக் கிளப்புவது ஏன்? « இலங்கைப்பிரச்சினை Says:

    […] […]

  2. இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மற Says:

    […] [4] https://christianityindia.wordpress.com/2010/04/07/the-rapist-of-america-lives-in-ooty-happily/ […]

  3. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்ட Says:

    […] [2] https://christianityindia.wordpress.com/2010/04/07/the-rapist-of-america-lives-in-ooty-happily/ […]

  4. பாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா? | Says:

    […] [13] https://christianityindia.wordpress.com/2010/04/07/the-rapist-of-america-lives-in-ooty-happily/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: