Archive for the ‘கர்த்தர் தண்டனை’ Category

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுகஎம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

ஜூன் 28, 2023

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

துரைமுருகன் நோட்டீஸ் கண்டுகொள்ளாத எம்.பி: சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடக்கும் விவகாரங்கள் குறித்த தகவல் தி.மு.க தலைமைக்குச் சென்றது[1]. அதனால் கட்சித் தலைமை ஞானதிரவியம் எம்.பி மீது அதிருப்தியடைந்துள்ளது[2]. அதனால் அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்[3]. அதில், கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஏழு தினங்களுக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது[4], இதனிடையே, சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்[5]. அத்துடன், ஞானதிரவியம் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட சிலர் பேர் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. காட்ப்ரே நோபுள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்[7]. அவர்கள்மீது 147 (கலகம் செய்தல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 506 (2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது[8]. விகடன் கேட்டபோது[9], “சி.எஸ்.ஐ அலுவலகத்தில் மோதல் நடந்தபோது நான் சம்பவ இடத்திலேயே கிடையாது. ஆனாலும் என்னையும் திட்டமிட்டு அந்த வழக்கில் சேர்த்திருக்கின்றனர். விசாரணையின்போது உண்மை தெரியவரும். என்னிடம் விளக்கம் கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுப்பேன்” என்று ஞானதிரவியம் முடித்துக் கொண்டார்[10].

ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான லாரிகளில் கனிமங்கள் கடத்தல்: சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நெல்லை திருமண்டலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் சி.எஸ்.ஐ உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஞானதிரவியம் எம்.பி செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தி.மு.க தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றவண்ணம் இருப்பதால் கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. 21-06-2023 கடிதத்தின் படி அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியானது. அதைத் தொடர்ந்து கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி கனிம கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த டாரஸ் லாரிகள் இரண்டும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது[11]. அதனால் போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, பிடிபட்டது 9 லாரிகள் என்றும் அவற்றை விடுவிக்குமாறு தி.மு.க-வின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால் ஏழு லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்[12]. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்>

பின்னணியில் அ.தி.மு.க.,திமுக எம்.பி குற்றச்சாட்டு: இவ்வழக்கு குறித்து எம்.பி., ஞான திரவியம் கூறியதாவது[13]: “காட்ப்ரே நோபுள், அடியாட்களுடன், டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கும், சி.எஸ்.ஐ., சபையினருக்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ கிடையாது. திருமண்டலத்தைச் சேர்ந்த ஜானிடம் தகராறு செய்யும் நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெனி தலைமையில், 30 பேருடன் டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டேன். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் நான், சம்பவ இடத்தில் இல்லை. அப்படி இருந்தும், காட்ப்ரே நோபுள் புகார் அடிப்படையில் காவல் துறையினர்.

எந்தவித விசாரணையும் இன்றி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, அதில் என்னையும் சேர்த்துள்ளனர். இது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்ப்ரே நோபுள், அ.தி.மு.க.,வுக்கு மிகவும் சாதகமானவர். அவர் ஏற்கனவே, ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் மற்றும் 2021 சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பணியாற்றிஉள்ளார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவரை, தற்போதைய பிஷப்பும், அ.தி.மு.க, ஒன்றிய செயலருமான, கே.பி.கே.செல்வராஜ், அ.தி.மு.க., பகுதி செயலர் ஜெனி ஆகியோர், பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர். பிஷப்பும், இவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தான் உண்மை,”இவ்வாறு தெரிவித்து உள்ளார்[14]..

2022லிருந்து தொடரும் கனிமவள கொள்ளை புகார்: அனுமதியின்றி கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளம் கடத்திய தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் மகன் தினகரன் கைதாவாரா என, கேள்வி எழுந்துள்ளது[15]. ஏற்கனவே, பொதுமேடையில் கலெக்டருடன் மோதல் ஏற்படுத்திய தி.மு.க., – எம்.பி., மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லாரிகளின் உரிமையாளர் திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பதால், போலீசார் ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லும்படி கூறினர்[16]. லாரி உரிமையாளர் தினகரன் உடனடியாக வரவில்லை. அவர் மீது, 379 பிரிவில் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். தற்போது டிரைவர்கள் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர். தி.மு.க., – எம்.பி., மகன் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாவட்ட நிர்வாகம் மீது கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சமீபத்தில் திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும், பிரச்னை அவருக்கு எதிராகவே திரும்பியது.அவரது மற்றொரு மகன் ராஜா மீதும் லாரி மணல் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது தினகரன் மீதும் மணல் திருட்டு வழக்கு, போலீஸ் தேடல் என, சர்ச்சை தொடர்கிறது.

© வேதபிரகாஷ்

28-06-2023


[1] தமிழ்.நியூஸ்.18, பாதிரியார் மீது தாக்குதல்திமுக எம்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, Published By :Arunkumar A, TIRUNELVELI, First published: June 27, 2023, 10:30 IST, LAST UPDATED : JUNE 27, 2023, 10:30 IST.

[2]  https://tamil.news18.com/tirunelveli/5-case-filed-against-dmk-mp-gnana-thiraviyam-reason-for-attack-nellai-father-1038153.html

[3] தமிழ்.இந்து, சிஎஸ்ஐ திருமண்டல மோதல் விவகாரம் | திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு, செய்திப்பிரிவு, Published : 27 Jun 2023 11:52 AM, Last Updated : 27 Jun 2023 11:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1027770-case-registered-against-33-people-including-dmk-mp-gnana-dhiraviyam.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சிஎஸ்ஐ மதபோதகர் மீது தாக்குதல்.. நெல்லை எம்.பி ஞானதிரவியம் மீது திமுக நடவடிக்கை.. பாய்ந்த வழக்கு, By Jeyalakshmi C Updated: Tuesday, June 27, 2023, 12:01 [IST]

[6] https://tamil.oneindia.com/news/thirunelveli/attack-on-csi-preacher-dmk-action-against-mp-gnana-thiraviyam-of-tirunelvely-police-booked-518539.html

[7] தினமணி,  மத போதகா் மீது தாக்குதல்: எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், By DIN  |   Published On : 28th June 2023 01:56 AM  |   Last Updated : 28th June 2023 01:56 AM

[8] https://www.dinamani.com/tamilnadu/2023/jun/28/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-4028548.html

[9] விகடன், என் மீது எந்தத் தவறும் கிடையாது!” – சி.எஸ். விவகாரம் தொடர்பாக ஞானதிரவியம் எம்.பி விளக்கம், பி.ஆண்டனிராஜ், Vikatan, Published:27-06-2023 at 4 PM’ Updated: 27-06-2-23 at 4 PM

[10] https://www.vikatan.com/crime/dmk-mp-gnanadiraviyam-clarification-on-the-tirunelveli-csi-issue

[11] விகடன், கனிம கடத்தல் வழக்கு! – நெல்லை எம்.பி மகன் தலைமறைவு, பி.ஆண்டனிராஜ் Published:15 Sep 2022 8 PMUpdated:15 Sep 2022 8 PM

[12] https://www.vikatan.com/government-and-politics/nellai-mp-son-booked-for-the-mineral-smuggling-case-and-he-is-absconded

[13] தினமலர், திமுக  எம்.பி மீது 5 பிரிவுகளில் வழக்கு, Updated: juun 28, 2023; 00:01; juun 27, 2023 23:55.

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=3359892

[15] தினமலர், மணல் கடத்தல், குவாரிகளால் சர்ச்சைகளில் சிக்கும் தி.மு.., – எம்.பி., ஞான திரவியம், மாற்றம் செய்த நாள்: செப் 17,2022 06:48.; https://m.dinamalar.com/detail.php?id=3125004

[16] https://m.dinamalar.com/detail.php?id=3125004

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? (1)

ஜூன் 28, 2023

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? (1)

பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக தேர்ந்தெடுக்கப் படுதல்: தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயரைத் தேர்வுசெய்வதற்கான பெயர் பட்டியல் தேர்வு 2021 செப்டம்பரில் நடைபெற்றது. இதில் ARGST பர்னபாஸ், A. பீட்டர் தேவதாஸ், TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ARGST பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதே 2021ல் திருநெல்வேலி பெருமண்டல உறுப்பினராக தேர்வானார் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம். இதற்குப் பிறகு திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் கல்வி நிலவரக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கடுத்த ஆறு மாதம் வரை பர்னபாஸ், ஞானதிரவியம் ஆகியோர் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர். இதற்குப் பிறகு ரெவரண்ட்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு வைக்கப்பட்டது. இதில் சிலரைத் தேர்வு செய்யும்படி ஞானதிரவியம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடிவுகள் வெளியானபோது ஞானதிரவியம் சொன்ன ஆட்களில் சிலர் தேர்வாகவில்லை.

ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் ஆரம்பித்த உரசல்கள்: தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே ரெவரண்ட்கள் தேர்வானதாக பர்னபாஸ் தரப்பு கூறியது. இதற்குப் பிறகு ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன. இதற்குப் பிறகு நடந்த கமிட்டி கூட்டங்களில் எல்லாம் இரு தரப்புக்கும் இடையில் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இந்தத் திருமண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போதும் இடமாற்றல்கள் செய்யும்போதும் ஞானதிரவியத்தின் பரிந்துரைப்படி நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது[1]. இதற்குப் பிறகு, பார்னபாஸைச் சுற்றியிருந்த சிலரை நீக்கும்படி ஞான திரவியம் கூறியபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார்[2]. இதற்குப் பிறகு கமிட்டி கூட்டம் நடக்கும் அறையில் சொத்து அலுவலரால் சிசிடிவி பொருத்தப்பட்டது. இதனால், சொத்து அலுவலரை மாற்றும்படி கூறினார் ஞானதிரவியம். இதனையடுத்தே சொத்து அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார் ஞானதிரவியம். புதிதாக ஒரு சொத்து அலுவலரையும் நியமித்தார். ஆனால், இதனால் திருமண்டலத்தின் அலுவல்கள் பாதிக்கப்படுவதாகவும் சொத்து அலுவல கதவைத் திறந்துவிடும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பர்னபாஸ். ஆனால், அதனை ஞானதிரவியம் தரப்பு ஏற்கவில்லை.

ஞானதிரவியம் எம்.பி, தென்னிந்திய திருச்சபை நிர்வாகம், சொத்து விற்பனை: தென்னிந்திய திருச்சபை எனப்படும் சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. கோடிக்கணக்கில் சொத்துகளைக் கொண்ட நெல்லை திருமண்டலத்தில் பிஷப்பாக பர்னபாஸ் உள்ளார். திருமண்டல செயலாளராக டி.எஸ்.ஜெயசிங் உள்ளார். இவரது ஆதரவோடு பிஷப் ஆனவர் தான் பர்னபாஸ். இருப்பினும் பொறுப்புக்கு வந்த பின் இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர். இந்த நிர்வாகத்தில் ஞானதிரவியம் எம்.பி முக்கிய பங்காற்றி வந்த நிலையில், அவருக்கும் பிஷப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கல்வி நிலைக்குழுச் செயலாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி, பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சில சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்ய தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தன்னை எதிர்த்தவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு பிஷப் பர்னபாஸ் மறுத்ததால் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

25-06-2023 – CSI நம்பிக்கையாளர்களுக்குள் சச்சரவு, அறைகளுக்கு பூட்டு: கடந்த 25ம் தேதி டயோசீஸ் அலுவலகத்தில் இரு தரப்பினர் கூடினர். அங்கு ஞான திரவியம் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிஷப் தலைமையில் கல்வி நிலைக்குழுக் கூட்டம் நடந்தபோது அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிஷப் முன்னிலையில் அருவருக்கத்தக்க வகையில் ஞானதிரவியம் பேசியுள்ளார்[3]. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது[4]. அதைப் பார்த்த சி.எஸ்.ஐ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும், ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்[5]. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்[6]. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்ததோடு, சி.எஸ்.ஐ அலுவலகத்தின் சில அறைகளை அவரது ஆதரவாளர்கள் பூட்டிச் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க-வின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிஷப் தரப்பினர் கட்சித் தலைமையிடம் புகார் அளித்தனர். அத்துடன், உளவுத்துறை மூலமாகவும் இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு புகார் சென்றது.

பிஷப் காட்ப்ரே நோபுள் ஞானதிரவியம் எம்.பி மீது வீடியோகுற்றச்சாட்டு: நெல்லை திருமண்டலத்தில் ஆளும் தி.மு.க-வின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தும்  முயற்சியில் ஞானதிரவியம் எம்.பி ஈடுபடுவதாக அனைத்திந்திய ஜனநாயக பாதுகப்பு கழகம் கட்சியின் தலைவரும் ஜே.எஸ்.எம் என்ற தனித்திருச்சபை நடத்திவரும் பிஷப் காட்ப்ரே நோபுள் என்பவர் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். வழக்கு, சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர். நாலுமாவடி மத போதகர் மோகன் சி லாசரசின் சகலைஅதில் ஞானதிரவியம் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில், 26—06-2023 அன்று பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ அலுவலகத்தை ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் கைப்பற்றப் போவதாக தகவல் பரவியது[7]. அதனால் பிஷப் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது அங்கு காட்ப்ரே நோபுளும் இருந்தார்[8]. அப்போது அங்கு வந்த ஞானதிரவியம் ஆதரவாளர்கள், காட்ப்ரே நோபுள் மீது தாக்குதல் நடத்தினார்கள்[9]. அவர் தப்பி ஓட முயன்றபோது, அவரைத் துரத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்கினர். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்[10]. அவரது சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர்[11]. கிழிந்த சட்டையுடன் அவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார்[12]. பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வைரலானது. 

எல்லோருமே கிருத்துவர்கள் தான், ஆனால், அரசியல், பணம் முதலியன பிரிக்கின்றன: பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஞானதிரவியத்தை நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய தாளாளருக்கும், ஞானதிரவியம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றிருந்தது[13]. பேராயர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[14]. எல்லோருமே கிருத்துவர்களாக இருந்தாலும், டினாமினேஷன்களால் பிரிந்திருக்கிறார்கள். ஆனால், பணம், அந்தஸ்து, சொத்து, சுகம் என்றெல்லாம் இருக்கும் பொழுது, அரசியல் கூட்டுடன் கொள்ளையடிக்க முயல்கின்றனர். போதாகுறைக்கு, கனிமகொள்லைகளில் இந்த பகுதி பிஷப்புகள், பாதிரிகள் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் அரசியல் ஆதரவு இல்லாமல் நடக்குமா என்று தெரியவில்லை. இங்கு செக்யூலரிஸத்தில், கம்யூனலிஸத்தில், பெரியாரிஸத்தில், திராவிட மாடலில், எதில் ஒன்று படுகிறார்கள்-வேறுபடுகிறார்கள் என்பதும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

28-06-2023


[1] தமிழ்.பிபிசி, மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.. எம்.பி. மீது வழக்குப் பதிவுஎன்ன நடந்தது?, 27 ஜூன் 2023

[2] https://www.bbc.com/tamil/articles/c6pd6608ew9o

[3] தினசரி.காம், thinasari.kaam, சிஎஸ்ஐ., பிஷப்பை அடித்து ஓட ஓட விரட்டிய நெல்லை திமுக., எம்.பி. ஞானதிரவியம் ஆட்கள்,  Dhinasari Reporter, June 27, 2923 12.31 PM

[4] https://dhinasari.com/latest-news/289818-csi-bishop-attacked-by-dmk-mp-goons.html

[5] பத்திரிக்கை.காம், திருநெல்வேலி எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், JUN 27, 2023 p

[6] https://patrikai.com/duraimurugan-notice-gnanathiraviam-mp/

[7] விகடன், பாதிரியார் மீது தாக்குதல்ஆபாச பேச்சுதிமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு!, பி.ஆண்டனிராஜ், 11.00 ஜூன்.27, 2023 காலை.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-secretary-has-issued-notice-to-gnanadiraviyam-mp-for-misbehaving-in-csi-diocese

[9] தினமலர், சி.எஸ்.., அலுவலகத்தில் பிஷப்புக்கு அடி, உதை, பதிவு செய்த நாள்: ஜூன் 27,2023 01:33, https://m.dinamalar.com/detail.php?id=3358976

[10] https://m.dinamalar.com/detail.php?id=3358976

[11] நியூஸ்.18தமிழ், பாதிரியார் மீது தாக்குதல்ஆபாச பேச்சுதிமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு! || News18Tamil, gmrtech, Last updated: 2023/06/27 at 5:49 AM.

[12]https://www.news18tamil.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/

[13] குமுதம், பாதிரியார் மீது தாக்குதல்: நெல்லை தி.மு.., எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு, Kumudam News Desk, 12.00 HRS, june 27, 2023.

[14] https://www.kumudam.com/news/politics/dmk-mp-case-registered-against-33-people-including-gnana-thiraviyam

லாவண்யா வழக்கு – வீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

ஜனவரி 31, 2022

லாவண்யா வழக்குவீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

22-01-2022 – பெற்றோர் மதமாற்றம் பற்றி உறுதியாகச் சொன்னது: விசாரணை முடிந்ததும் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் சித்தி மற்றும் தந்தை, ‘எங்க பொண்ணை கட்டாயமா மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி இருக்காங்க. பாத்ரூம் கழுவுறதுன்னு ரொம்ப துன்புறுத்திட்டாங்க. எங்க பொண்ணுக்கு நியாயம் வேணும். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணாதான், நாங்க உடலை வாங்குவோம். எங்க பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க பொண்ணு தான் முதலும், முடிவா இருக்கணும்.வேற எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கவே கூடாது. கடந்த 2 வருடமாக இந்த கொடுமை நடந்துருக்கு. மதமாற சொன்ன ராக்லின் மேரி, சகாயமேரி இருவரையும் கைது செய்யனும்’ என்று கூறினார்கள்.  ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு வலுக்கட்டாயமாக வேண்டுமென்றே, அநாவசிய கேள்விகளை மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குள் மதுரை பிஷப் அறிக்கை விட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது.

23—01-2022 – கத்தோலிக் பிஷப் அமைப்பு தலைவர்அந்தோணி பாப்புசாமி அறிக்கை: தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது என்று தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவைத் தலைவா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்[1]. இதுதொடா்பாக அவா் 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மிக்கேல்பட்டியில் நடைபெற்ற மாணவியின் மரணத்துக்கு கத்தோலிக்க ஆயா் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாணவியின் மரணத்துக்கு மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டது தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. மாணவியின் மரணத்துக்கு மதத்சாயம் பூசக்கூடாது. மாணவியின் இறப்புக்கு காரணமாக யார் இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. மாணவியின் மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எடுத்துள்ள துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினா் ஆற்றிவரும் கல்விப் பணிகளை அனைவரும் அறிவா். இந்த பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பெண்களுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ மறை சார்ந்த பெண் துறவியரால் அா்ப்பணிப்பு உணா்வோடு நடத்தப்படும் பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பிலும் அவா்களின் வளா்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தப்படுவதையும் அனைவரும் அறிவா். …….”

23—01-2022 – பிஷப் அந்தோணி பாப்புசாமி அறிக்கை: அந்தோணி பாப்புசாமி தொடர்ந்து கூறியது, கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினரால் நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையினா் மதப்பெரும்பான்மையினா் என்பதையும் ஊரறியும். பள்ளிகளை நிர்வகிக்கும் துறவிகள் எப்போதும் மதமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை என்பதே உண்மை. ஆனால் உண்மைக் காரணத்தை காண முயலாத மதவாத அரசியல் சக்திகள்மதமாற்றம்என்ற பொய்யான குற்றச்சாட்டைக் கையிலெடுத்து பிரச்னையை திசை திருப்பி சமய நல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்கின்றன. மேலும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மாணவியின் மரணம் தொடா்பாக உரிய சட்டப்பூா்வ விசாரணையைத் தேடாமல் மதமாற்றம் எனும் முழக்கத்தை கையில் எடுத்திருப்பது வேடிக்கையானது. எனவே மாணவி மரண விவகாரத்தில் அரசும், காவல்துறையும் வழக்கை நடுநிலையோடு நடத்தி முடிக்க வேண்டும்,” என்றார்.

திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு கத்தோலிக்க தமிழக ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி[3]: 2016ல் வெளியிட்ட அறிக்கை: “கிறிஸ்தவ மதச் சிறுபான்மை யினர் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து ஏற்கும் கட்சிக்கு ஆதரவு தருவதென முடிவெடுக்கும்.இந்த தேர்தலில் இக்கோரிக் கைகளுக்கான ஒப்புதல் தமிழக ஆயர்களிடம் இருந்து பெறப்பட் டன. திமுக பொருளாளர்ஸ்டாலின் தொடர்புகொண்டு எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்கும் படி கோரினார். அதன்படி கோரிக்கைகளை முன்வைத் தோம். மத சார்பின்மையைக் காக்கவும், ஜனநாயக மதிப்பீடு களை வளர்க்கவும் திமுககாங் கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் அறிந்த கூட்டணிக் கட்சிகளில் குறைவான தீங்குகளை உடையன என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்[4]. இப்பொழுதைய 2021 தேர்தலிலும், ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஜார்ஜ் பொன்னையாவும் வெட்ட வெளிச்சமாக எல்லாவற்றையும் தெரிவித்தாகி விட்டது. பிறகு என்ன மதசாயம், வெங்காய எல்லாம். ஏற்கெனவே திட்டம் போட்டுதான் நடந்து கொள்கின்றனர் என்றாகிறது.

ஊடகக் காரர்களின் அடாவடித்தனம்: தற்கொலை செய்த மாணவியின் சித்தி பேசும் போது, மதமாற்றம் நடந்து 2வருசமா பன்றாங்கன்னு சொல்றீங்க, அப்போ ஏன் கேட்கல ? நீங்க ஏன் கேட்கல? மதமாற்றம் பண்ணாங்கன்னு சொல்றீங்களே டிசி வாங்கியிருக்கலாம்ல’ என்று மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஊடகக் காரகளுக்கு, இதெல்லாம் பொழுது போக்கு அம்சமாகி விட்டது. டிவிக்களில், இதைப் பற்றி ஒலி-ஒளிபரப்புவது மூலம், அவர்கள் பணம் பெறுகிறார்கள், அதே நேரத்தில், இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து, மக்களுக்கும் மரத்து போகிறது. சமூக பிரக்னை / உணர்வு குறைந்து போகிறது. இதைத்தான், இக்காலத்து, ஊடகங்கள் செய்து வருகின்றன. சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள் என்று, மக்கள் இறப்பது, குற்றங்கள் நடப்பது இவற்றை வைத்தே, கதைகளை உருவாக்கி, நேரத்தை விரயமாக்கி வருகின்றனர். அதாவது மக்களின் மனங்களை கெடுத்து வருகின்றனர்.

24-01-2022 – வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது[5]. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை 25-01-2022 காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்[6], வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[7]. அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்[8]. மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

27-01-2022 போலீஸார் ஆதாரங்கள் தாக்கல் செய்தனர்: மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார். இவ்வாறு ஆட்சியாளர், போலீஸார் முதலியவர்களிடமும், இருநிலை தெரிந்தது. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அவ்வாறான இரட்டைத் தன்மை இருந்திருக்காது. இதிலிருந்தே, அவர்களும் ஆட்சியளர்களின் அழுத்தத்தில்-தாக்கத்தில் இருக்கின்றனர் என்றாகிறது. முதலமைச்சர்-அமைச்சர் ஒருமாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், இவர்கள் அதற்கு மாறான காரியங்களை செய்ய முடியாது. இங்குதான், பின்னணியில் உள்ள கிருத்துவர்களின் தாக்கத்தை அறியலாம். அதற்கேற்ற போல, பீட்டர் அல்போன்ஸும், விசயத்தை விட்டு, பிஜேபி அரசியல் செய்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] தினமணி, தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது, By DIN |   Published on : 23rd January 2022 10:32 PM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jan/23/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3778894.html

[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணிக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவு,  செய்திப்பிரிவு, Published : 05 May 2016 09:29 AM; Last Updated : 05 May 2016 09:30 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/82860-.html

[5] தினத்தந்தி, மாணவி தற்கொலை விவகாரம்: வீடியோ பதிவு செய்தவர் நாளை விசாரணைக்கு ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜனவரி 24,  2022 18:23 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/24182323/Student-suicide-case-Madurai-High-Court-orders-video.vpf

[7] மாலைமலர், மாணவி லாவண்யா தற்கொலை வழக்குவீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு, பதிவு: ஜனவரி 24, 2022 17:47 ISTமாற்றம்: ஜனவரி 24, 2022 18:10 IST.  

[8] https://www.maalaimalar.com/news/district/2022/01/24174738/3414176/Lavanya-committed-suicide-The-person-who-recorded.vpf

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].

அரசியல், அரசியலாக்கப் பட்ட  நீதித்துறை, திராவிடத்துவ குழப்பங்கள்சமரசங்கள் முதலியவ்ற்றின் தக்கம் காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே.  ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.

நீதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாகத் தொடரப்பட்ட வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையான விமர்சனங்களுக்கோ மாற்றுக் கருத்துகளுக்கோ இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மதத் துவேஷக் கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் எனப் பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மாரிதாஸுக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது? மாரிதாஸுக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன? வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].

தீர்ப்பைப் பற்றிய என்னுடைய கமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:

1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!

3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!

4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!

5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!

6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..

7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!

8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!

9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….

10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.

மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] ஏபிபிலைவ், கிறிஸ்தவத்திற்கு எதிரான செயல்களை செய்ததற்காக ஜார்ஜ் பொன்னையாவை கடவுள் தண்டிப்பார்நீதிபதி, By: மனோஜ் குமார் | Updated : 08 Jan 2022 02:19 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/god-will-punish-george-ponniah-for-committing-acts-against-christianity-madurai-high-court-judge-gr-swaminathan-34339

[3] சமயம்.தமிழ், பிரதமர் குறித்து அவதூறு பேச்சுஜார்ஜ் பொன்னையாவிற்கு ஜாமீன் கிடைக்குமா?, Josephraj V | Samayam Tamil, Updated: 6 Jan 2022, 5:22 pm.

[4] https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-madurai-bench-adjourns-judgment-on-george-ponnaya-petition-till-7th/articleshow/88735042.cms

[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.

[6]  ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

[7] சமயம்.தமிழ், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து; மாறுபட்ட பார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/the-case-against-maridhas-and-the-verdict-have-triggered-a-lot-of-controversies/articleshow/88298429.cms

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html