Archive for the ‘பேராயம்’ Category

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுகஎம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

ஜூன் 28, 2023

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

துரைமுருகன் நோட்டீஸ் கண்டுகொள்ளாத எம்.பி: சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடக்கும் விவகாரங்கள் குறித்த தகவல் தி.மு.க தலைமைக்குச் சென்றது[1]. அதனால் கட்சித் தலைமை ஞானதிரவியம் எம்.பி மீது அதிருப்தியடைந்துள்ளது[2]. அதனால் அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்[3]. அதில், கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஏழு தினங்களுக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது[4], இதனிடையே, சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்[5]. அத்துடன், ஞானதிரவியம் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட சிலர் பேர் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. காட்ப்ரே நோபுள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்[7]. அவர்கள்மீது 147 (கலகம் செய்தல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 506 (2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது[8]. விகடன் கேட்டபோது[9], “சி.எஸ்.ஐ அலுவலகத்தில் மோதல் நடந்தபோது நான் சம்பவ இடத்திலேயே கிடையாது. ஆனாலும் என்னையும் திட்டமிட்டு அந்த வழக்கில் சேர்த்திருக்கின்றனர். விசாரணையின்போது உண்மை தெரியவரும். என்னிடம் விளக்கம் கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுப்பேன்” என்று ஞானதிரவியம் முடித்துக் கொண்டார்[10].

ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான லாரிகளில் கனிமங்கள் கடத்தல்: சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நெல்லை திருமண்டலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் சி.எஸ்.ஐ உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஞானதிரவியம் எம்.பி செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தி.மு.க தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றவண்ணம் இருப்பதால் கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. 21-06-2023 கடிதத்தின் படி அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியானது. அதைத் தொடர்ந்து கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி கனிம கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த டாரஸ் லாரிகள் இரண்டும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது[11]. அதனால் போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, பிடிபட்டது 9 லாரிகள் என்றும் அவற்றை விடுவிக்குமாறு தி.மு.க-வின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால் ஏழு லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்[12]. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்>

பின்னணியில் அ.தி.மு.க.,திமுக எம்.பி குற்றச்சாட்டு: இவ்வழக்கு குறித்து எம்.பி., ஞான திரவியம் கூறியதாவது[13]: “காட்ப்ரே நோபுள், அடியாட்களுடன், டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கும், சி.எஸ்.ஐ., சபையினருக்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ கிடையாது. திருமண்டலத்தைச் சேர்ந்த ஜானிடம் தகராறு செய்யும் நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெனி தலைமையில், 30 பேருடன் டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டேன். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் நான், சம்பவ இடத்தில் இல்லை. அப்படி இருந்தும், காட்ப்ரே நோபுள் புகார் அடிப்படையில் காவல் துறையினர்.

எந்தவித விசாரணையும் இன்றி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, அதில் என்னையும் சேர்த்துள்ளனர். இது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்ப்ரே நோபுள், அ.தி.மு.க.,வுக்கு மிகவும் சாதகமானவர். அவர் ஏற்கனவே, ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் மற்றும் 2021 சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பணியாற்றிஉள்ளார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவரை, தற்போதைய பிஷப்பும், அ.தி.மு.க, ஒன்றிய செயலருமான, கே.பி.கே.செல்வராஜ், அ.தி.மு.க., பகுதி செயலர் ஜெனி ஆகியோர், பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர். பிஷப்பும், இவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தான் உண்மை,”இவ்வாறு தெரிவித்து உள்ளார்[14]..

2022லிருந்து தொடரும் கனிமவள கொள்ளை புகார்: அனுமதியின்றி கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளம் கடத்திய தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் மகன் தினகரன் கைதாவாரா என, கேள்வி எழுந்துள்ளது[15]. ஏற்கனவே, பொதுமேடையில் கலெக்டருடன் மோதல் ஏற்படுத்திய தி.மு.க., – எம்.பி., மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லாரிகளின் உரிமையாளர் திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பதால், போலீசார் ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லும்படி கூறினர்[16]. லாரி உரிமையாளர் தினகரன் உடனடியாக வரவில்லை. அவர் மீது, 379 பிரிவில் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். தற்போது டிரைவர்கள் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர். தி.மு.க., – எம்.பி., மகன் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாவட்ட நிர்வாகம் மீது கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சமீபத்தில் திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும், பிரச்னை அவருக்கு எதிராகவே திரும்பியது.அவரது மற்றொரு மகன் ராஜா மீதும் லாரி மணல் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது தினகரன் மீதும் மணல் திருட்டு வழக்கு, போலீஸ் தேடல் என, சர்ச்சை தொடர்கிறது.

© வேதபிரகாஷ்

28-06-2023


[1] தமிழ்.நியூஸ்.18, பாதிரியார் மீது தாக்குதல்திமுக எம்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, Published By :Arunkumar A, TIRUNELVELI, First published: June 27, 2023, 10:30 IST, LAST UPDATED : JUNE 27, 2023, 10:30 IST.

[2]  https://tamil.news18.com/tirunelveli/5-case-filed-against-dmk-mp-gnana-thiraviyam-reason-for-attack-nellai-father-1038153.html

[3] தமிழ்.இந்து, சிஎஸ்ஐ திருமண்டல மோதல் விவகாரம் | திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு, செய்திப்பிரிவு, Published : 27 Jun 2023 11:52 AM, Last Updated : 27 Jun 2023 11:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1027770-case-registered-against-33-people-including-dmk-mp-gnana-dhiraviyam.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சிஎஸ்ஐ மதபோதகர் மீது தாக்குதல்.. நெல்லை எம்.பி ஞானதிரவியம் மீது திமுக நடவடிக்கை.. பாய்ந்த வழக்கு, By Jeyalakshmi C Updated: Tuesday, June 27, 2023, 12:01 [IST]

[6] https://tamil.oneindia.com/news/thirunelveli/attack-on-csi-preacher-dmk-action-against-mp-gnana-thiraviyam-of-tirunelvely-police-booked-518539.html

[7] தினமணி,  மத போதகா் மீது தாக்குதல்: எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், By DIN  |   Published On : 28th June 2023 01:56 AM  |   Last Updated : 28th June 2023 01:56 AM

[8] https://www.dinamani.com/tamilnadu/2023/jun/28/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-4028548.html

[9] விகடன், என் மீது எந்தத் தவறும் கிடையாது!” – சி.எஸ். விவகாரம் தொடர்பாக ஞானதிரவியம் எம்.பி விளக்கம், பி.ஆண்டனிராஜ், Vikatan, Published:27-06-2023 at 4 PM’ Updated: 27-06-2-23 at 4 PM

[10] https://www.vikatan.com/crime/dmk-mp-gnanadiraviyam-clarification-on-the-tirunelveli-csi-issue

[11] விகடன், கனிம கடத்தல் வழக்கு! – நெல்லை எம்.பி மகன் தலைமறைவு, பி.ஆண்டனிராஜ் Published:15 Sep 2022 8 PMUpdated:15 Sep 2022 8 PM

[12] https://www.vikatan.com/government-and-politics/nellai-mp-son-booked-for-the-mineral-smuggling-case-and-he-is-absconded

[13] தினமலர், திமுக  எம்.பி மீது 5 பிரிவுகளில் வழக்கு, Updated: juun 28, 2023; 00:01; juun 27, 2023 23:55.

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=3359892

[15] தினமலர், மணல் கடத்தல், குவாரிகளால் சர்ச்சைகளில் சிக்கும் தி.மு.., – எம்.பி., ஞான திரவியம், மாற்றம் செய்த நாள்: செப் 17,2022 06:48.; https://m.dinamalar.com/detail.php?id=3125004

[16] https://m.dinamalar.com/detail.php?id=3125004

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஒக்ரோபர் 17, 2022

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].

கொரோனா காலத்தில் கிருத்துவம் படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.

இந்தியாவை குறி வைக்கிறதா, ஆயர் மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரிய சக்திகளின் கைகளில் அகப் பட்டுச் சிக்கி தவிக்கிறது ஆசியா. குடியரசு தீய சக்திகளின் கைகளில் உள்ளது. நோய், பஞ்சம், பட்டினி என்று மனித சமுதாயம் அழுது வருகின்றது. மனிதர்களால் உண்டாக்கப் பட்டு வரும் அழிவுகளிலிருந்து விடுபட வேண்டும். சர்ச் இதற்காக எழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.

மாநாட்டின் குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion  வெறும்  8 percent  ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.

1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:

  1. நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news], 
  2. ஞான ஸ்தானம் பெற்ற விசுவாசிகளின் நம்பிக்கைகளுக்கு ஏற்ற முறையில் நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized];  மற்றும்
  3. மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]

அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில்  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..

செய்ய வேண்டிய திட்டப் பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul   என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

© வேதபிரகாஷ்

17-10-2022.


[1]  ஆசிய பிஷப் கான்பரன்ஸ்களின் கூட்டமைப்பின் இணை தளம் –https://fabc.org/

[2] https://businessmirror.com.ph/2022/10/16/asias-catholic-bishops-open2-week-conference-in-bangkok/

[3] வாடிகன்.செய்தி, ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள், மெரினா ராஜ் – வத்திக்கான், 15 October 2022, 14:16.

[4] https://www.vaticannews.va/ta/church/news/2022-10/fabc-info-and-material-relating-to-the-general-conference-of-t.html

[5] Bangkok Post, Asia’s bishops gather, Published; 12 October 2022, at 04:00.

[6] https://www.bangkokpost.com/thailand/general/2412288/asias-bishops-gather

[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.

[8] http://www.fides.org/en/news/72916-ASIA_The_jubilee_assembly_of_the_Federation_of_Asian_Bishops_Conferences_And_they_took_another_path

[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022

[10]  Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.

The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.

https://cruxnow.com/church-in-asia/2022/10/asian-church-exists-to-evangelize-cardinal-tells-bishops

[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said

Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor

https://cruxnow.com/church-in-asia/2022/10/cardinal-says-asian-church-must-remain-prophetic-relevant-responsive

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும், ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! –மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

ஓகஸ்ட் 19, 2022

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும் ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! – மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

இறையியல் ரீதியாக கிருத்துவ மதமாற்றம் தோற்றது: கிருத்துவ மிஷினரிகள் இந்தியர்களை / இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற போக்கு, கொள்கை மற்றும் சமூக அடக்குமுறை போர்ச்சுகீசியர் காலத்திலேயே கொடியமுறையில் பின்பற்றப் பட்டு வந்தது. சுதந்திரம் பெற்றப் பிறகு, கோடிக் கணக்கில் இருக்கும் சொத்துக்களை அனுபவிக்க, கத்தோலிக்கம் மற்றும் கத்தோலிக்கர் அல்லாத என்ற பிரிவுகளாகப் பிரிந்து, ஆளுமையை, அதிகாரத்தை, கட்டுப்பாடுகளை தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டனர். பெரும்பாலும், வெள்ளைக்காரர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், உயர்ஜாதி-கிருத்துவர்கள் என்று தான் பெரிய பதவிகளில் தங்களை நிலைநிறுத்துக் கொண்டு, அனுபவித்து வந்தனர். எஸ்.சி, எஸ்.டி போன்றோரை ஏமாற்றி மதம் மாற்றினாலும், மறுபடியும், சர்ச்சிற்குள் இருக்கும் இறையியல் சித்தாந்த ரீதியில், இருக்க வேண்டிய கட்டுப் பாட்டை அறிந்து-புரிந்து கொண்டனர். “விடுதலை இறையியல்” எல்லாம் பொய்த்துப் போய், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் முடிந்தன. இதனால், சர்ச்சில் இருக்கும் அத்தகைய இறையியல்-ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தனர்.  கத்தோலிக்கக் கிருத்துவ ஆதிக்கத்தினர் மட்டும் ஆதிக்கம், பணம், அதிகாரம் முதலியவற்றை ஐத்துக் கொண்டு, இந்திய ஜாதியம், வர்ணாஷ்ரமம் என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால், உண்மை வெளிவந்தது. சூசை தீர்ப்புக் கூட அவர்களது முகமூடியைக் கிழித்தது. இருப்பினும், அம்பேத்கரின் ஆணையினையே எதிர்க்க முற்பட்டனர்.

பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு வர முயற்சி: பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் உள்ள பிரிவை மாற்ற வேண்டும் என்று போலித் தனமாக போராட்டங்களை நடத்தி, திசைத் திருப்பப் பார்த்தது. ஆனால், அது இந்துக்களுக்கு என்பது சட்டரீதியாக எல்லோருக்கும் தெரியும். இதனால், எஸ்.சி மற்றும் மதம் மாறிய எஸ்.சி-கிருத்துவர்களிடையே துவேசம், எதிர்ப்பு, மோதல்கள் கூட ஏற்பட்டன.  இருப்பினும், ஆகஸ்ட் 10 அன்றை கருப்புநாள் என்று கொண்டாடுவோம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். இதனை, பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை என்றாலும், தங்களது அரசியல், பலம், பணம், அனைத்துலக சக்தி முதலியவற்றின் மூலம், இந்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.. பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு 2/3 எம்.பிக்களின் ஆதரவு தேவை. ஒரு முறை, பிஜேபி எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து, கையெழுத்துப் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.  எஸ்ரா சற்குணத்திற்குப் பிறகு, இன்னொரு எஸ்.சி கிருத்துவர் பிஷப் ஆவது, அடக்கித் தான் வாசிக்கப் பட்டுள்ளது.

சி.எஸ். / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆகியுள்ளார்: தென்னிந்திய திருச்சபையின் அங்கமாக மதுரை- இராமநாதபுரம் மண்டல 7வது பேராயராக பாதிரியார் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் 17-07-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்[1]. மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜோசப்பின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவா் அண்மையில் ஓய்வு பெற்றார்[2]. இதைத்தொடா்ந்து புதிய பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் []Jeyasingh Prince Prabhakaran தோ்ந்தெடுக்கப்பட்டார்.  இவ்விழாவில், சிறப்புத் திருப்பலி ஆராதனையைத் தொடா்ந்து மதுரை-ராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார்[3]. தென்னிந்திய திருச்சபையின் தலைமைப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசலம் புதிய பேராயருக்கு அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார்[4]. முன்னதாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் மதுரை இராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் முறைப்படி ஆராதனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சபையின் பேராயர்கள் அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் மோதிரத்தை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்த 11 பேராயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்சி / தலித் பிரச்சினை கிருத்துவமத உள்விவகாரம் ஆகிவிட்டது: வின்சென்ட் மனோஹரன் ஒரு தலித் பிஷப்பாக பதவி ஏற்பதை பாராட்டி, அதே நேரத்தில், சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[5]. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இவ்விசயத்தில் போராட வேண்டும் என்று வற்புருத்தி பேசினார்[6]. ஏற்கெனவே மற்ற சர்ச்சுகளிலும் இப்பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் மாறி எஸ்சி அந்தஸ்து இழப்பதால், பல கிருத்துவர்கள் அதம் மாறியும், சலுகைக்காக, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சினை ஏர்ப்ட்டு மோதல்களில் முடிகின்றன. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், ஏற்கெனவே எண்ணிக்கை ரீதியில் சலுகைப் பெற்று வருவதால், “உள்-ஒதுக்கீடு” கூட தேவையில்லை என்று அறிவித்துள்ளதை ஞாபகத்தில் கொள்ளலாம். எனவே, இந்துக்களாக இருந்தே எஸ்சி சலுகைகளை அனுபவிக்கலாம், சமூகப் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம் என்ற கருத்து கூட வலுப்பட்டு வருகிறது.

சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதியப் பிரச்சினைமே 2022: தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் மருத்துவர் மேரிஜான் தலைமையில் மே 15, 2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இயக்கத்தைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான் கூறியதாவது[7]:- “தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திருச்சபையில் இந்த இயக்கம் சமத்துவம் சம உரிமை பெற போராடிக் கொண்டிருக்கிறது. திருச்சபை அதிகாரிகள் இதுவரை தீர்வு காணவில்லை. இந்திய ஆயர் பேரவை, இந்திய கத்தோலிக்க பேரவையும் அறிவித்த கொள்கைப்படி தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர் பதவிகளில் 64% வழங்காமல் இன்றும் ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில் தலித் கிறிஸ்தவர்கள் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போது கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மன்ற மாவட்டத்தில் காலியாக உள்ள ஆயர் பதவிக்கு தலித் ஆயிரை நியமனம் செய்யவேண்டும், தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் அரசியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது,” இவ்வாறு கூறினார்[8].

மதமா, ஜாதியமா, இறையியலா, எது?: இந்நிலையில் தான், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருமவளவனை ஆதரித்துப் பேசியதை வைத்து, “குமுதம் ரிப்போர்ட்டர்”  இக்கதையினை உருட்டியுள்ளது[9]. கிருத்துவ மதத்தில் மாறியும் சமத்துவம் ஏற்படவில்லை என்றால், அது அம்மதத்தின் பிரச்சினை ஆகிறது. ஏனெனில், பைபிளின் படி சமத்துவம் கிடையாது, எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. மரம் வெட்டுகிறவன், மாம் வெட்ட வேண்டும்; தண்ணீர் இழுத்த்க் கொட்டுகிறவன், அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன………. ஆரம்பத்திலிருந்தே, கிருத்துவத்தில் வேறுபாடுகள், சமூகக் கட்டமைப்புகள், இந்திய-ஜாதியத்தை விட இறுக்கமாக கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனை உலகெங்கும், எல்லா கண்டங்களிலும் பார்க்கலாம். வெள்ளையர் மற்றவர்களை அல வழிகளில் அடக்கி ஆண்டுதான், வருகிறார்கள். கருப்பினத்தவர்கள் தங்களது உழைப்பினை கடினமான காரியங்களில் காட்டித்தான் முன்னேறியுள்ளனர், பிரபலமாகியுள்ளனர். தங்களது, சமூக நிலை அல்லது சலுகை வைத்து முன்னேறி விடவில்லை. இன்று ஐ.டி-தொழிற்நுட்பம் என்றெல்லாம் பார்த்தாலும், வெள்ளையர் அல்லாதவர்கள் முதலாளிகளாக இருப்பவர் சிலரே. எனவே, இந்திய, அதிலும், தமிழகத்து நிலையில், இப்பிரச்சினையை திசைத் திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு எது தேவை என்பதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜாதிதான், எஸ்சி-அந்தஸ்து தான், இல்லை மதம் தான் என்றால், அவ்வாறே நேர்மையாக நம்பிக் கொண்டு இருக்கலாம். கடவுளை, முன்னோர்களை, பெற்றோர்களை, சொந்தக்காரர்களை, சமூகத்தினரை ஏமாற்ற வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-08-2022


[1] டாப்.நியூஸ்.தமிழ், மதுரை ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபையின் ஏழாவது பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், By admin, July 18, 2022

[2] https://www.topnewsthamizh.com/jayasinghe-prince-prabhakaran-assumed-office-today-as-the-seventh-archbishop-of-madurai-ramanathapuram-church-of-south-india/

[3] தினமணி, தென்னிந்திய திருச்சபையின் மதுரைராமநாதபுரம் திருமண்டல பேராயா் பதவியேற்பு, By DIN  |   Published On : 17th July 2022 11:08 PM  |   Last Updated : 17th July 2022 11:08 PM. 

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jul/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3881887.html

[5] First Dalit Bishop is appointed for Madurai – Ramnad, CSI Diocese, Tamilnadu< By Dalit Christian Digest -July 18, 2022.

[6] The National Dalit Christian Watch (NDCW), a National Platform which is committed to cleanse the Church and Society by annihilating caste and its inhuman oppressive dynamics mainly to ensure equality, justice and rightful space for Dalit Christians within Church and its Institutions, looks forward to the serious interventions by the newly appointed Bishop, who held several positions in this Diocese already, not only to perform his pastoral services but also through his prophetic voice and deeds to uphold justice and peace both within Church and Society, especially for the dignified life and rightful space of the Dalit Christians.

[7] சமயம்.தமிழ், ஆயர் நியமனத்தில் ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்துவர்கள்பகீர் தகவல்!, Govindaraji Rj | Samayam Tami, Updated: 16 May 2022, 5:21 pm

[8] https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dalit-christian-liberation-movement-slams-for-the-bishop-appointment-in-trichy/articleshow/91572892.cms

[9]  டி. பாலமுருகன், சர்ச்சையில் மதுரை பேராயர்மதம் கசக்குது, சலுகை இனிக்கிதா?, குமுதம் ரிப்போர்ட்டர், 19-08-2022, பக்கங்கள்.14-15.

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை:  பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய ரூ.3000 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் தற்போது விரைவாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் பேட்டிசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால், ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை. பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் அமைக்காதீர்கள். புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும்போது, அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!

இந்துவிரோதி எஸ்டா சற்குணத்தின் பேச்சு ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது பொன்றிருந்த கூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1]  M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு ! மத போதகர் எஸ்றா சற்குணம் மீது வழக்குப் பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST

https://tamil.asianetnews.com/politics/esra-srgunam-case-file-ptgi8u

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? – கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

மார்ச் 30, 2022

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

பிரான்சிஸ் கலிஸ்ட் உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டது எஸ்சி கிருத்துவ எதிர்ப்பு: பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) என்ற உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்-புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டிருப்பதால், எஸ்.சி கிருத்துவ அமைப்பினர் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய அறிவித்தனர்[1]. தலித் கிருத்துவ விடுதலை இயக்கம் (Dalit Christian Liberation Movement, DCLM) ஏப்ரல் 11 மற்றும் 29 தேதிகளில் புதுச்சேரியில் ஆர்பாட்டம் செய்யப் போவதாக கூறினர்[2]. ஜார்ஜ் அந்தோனிசாமி அந்தோனி பாப்புசாமி போன்ற பிஷப்புகள் எஸ்சியினர் பிஷப்பாக வரக்கூடாது என்று வேலை செய்து வருகின்றனர்.  வெள்ளாலர், உடையார், வன்னியர், நாடார், மீனவர் என்று மாறி-மாறி  பிஷப் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது, தொடர்ந்து உயர் ஜாதியினரே பிஷப்பாக வந்து கொண்டிருக்கின்றனர். 1980களிலிருந்து போராடி வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடக்கியாண்டு வருகின்றனர்[3]. ஆனால், அவர்கள் மேடைகளில் பேசும் பொழுது, ஏதோ சமத்துவத்தி உண்டாக்கி விட்டது போல பேசுவார்கள்.  இவரை எதிர்த்து சர்ச்சுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்[4]. கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[5]. ஆனால், கத்தோலிக்க சர்ச் கண்டுகொள்ளவில்லை.

வாடிகன் செய்தி கூறுவது 19-03-2022[6]: ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்[7]. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்[8]. 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப் படுத்தப்பட்டார்[9]. 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்.  1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார்.

2020ல் எஸ்.சி கிருத்துவ கூட்டங்கள் கோரிக்கைகள்: மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது[10]. இத்தகைய கூட்டங்கள் 1980களிலிருந்து நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸில் அதிகமாகவே செய்திகள், வஆகர் கடிதங்கள் என்று காரசாரமாக வாத-விவாதங்கள் நடந்தன. அவற்றில் கத்தொலிக்கச் சர்ச்சின் இரட்டை வேடங்கள், பிஷப்புகளின் ஜாதிய நாடகங்கள், “தலித்” போர்வையில் நடந்த பேரங்கள் என்றேல்லாம் வெளி வந்தன. தீவிரமாக போராடிய, அப்படி காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது அமைதியாகி, சந்தோசமாக உள்ளனர்[11]. திருச்சியில் 2020ல் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்[12], தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சார்லஸ் கூறியது: “தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமார் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை. வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி 2020 திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார். பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

1980-2022 காலாட்டங்களில் கிருத்துவ ஜாதியம் மாறவில்லை: “தலித்” என்று சொல்லிக் கொண்டு கிருத்துவர்கள் அதிகமாகவே ஏமாற்றி வருகின்றனர். இப்பொழுதும், ஊடகங்கள் அவ்வார்த்தை பிரயோகம் கூடாது என்றாலும், வேண்டுமென்றே உபயோகித்து வருகின்றது. பிஜேபியும் சில நேரங்களில் இதற்கு ஆதரவு காட்டுவதால், குளிர் விட்டுப் போய், அப்பிரயோகம் மறுபடியும் அதிகமாகி விட்டது. எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்.

அரசியலாக்கப் படும்தலித்பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.

©  வேதபிரகாஷ்

30-03-2022


[1]  The Hindu, Dalit Christians to protest appointment of non-Dalit Bishop as Archbishop of Archdiocese of Tamil Nadu and Pondicherry, Udhav Naig, CHENNAI, MARCH 29, 2022 20:52 IST; UPDATED: MARCH 29, 2022 20:52 IS.

[2] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-christians-to-protest-appointment-of-non-dalit-bishop-as-archbishop-of-archdiocese-of-tamil-nadu-and-pondicherry/article65271233.ece

[3] Members of the Dalit Christian Liberation Movement on Tuesday said they would launch a protest against the appointment of non-Dalit Bishop Francis Kalist as the Archbishop of Archdiocese of Cuddalore-Pondicherry in Puducherry on April 11 and April 29, when he would be consecrated as the Archbishop, citing the ‘discriminatory attitude’ against the Dalits by the Catholic Church in India in appointments of Bishops and Archbishops. DCLM claimed that the Tamil Nadu Bishop Council president Archbishop George Antonysamy and former president Archbishop Antony Pappusamy acted in a discriminatory manner against Dalits and demanded they resign from their posts taking responsibility. DCLM State president Mary John alleged the Dioceses in Tamil Nadu are dominated by Vellalar, Udayar, Vanniyar, Nadar and fisherman communities. “Most of the Bishops and Arch Bishops in Tamil Nadu-Pondicherry Dioceses routinely come from Vellalar, Udayar, Vanniyar, Nadar and Fisherman community. This is an injustice despite 75% of the Catholics in Tamil Nadu being Dalits,” he said. He claimed that only 11 out of 180 Bishops are Dalits and only 2 out of 31 Archbishops in India are Dalits. “There are 17 Bishops in Tamil Nadu and Pondicherry but only one is a Dalit. This marginalisation and exclusion is widespread in appointments, education, employment opportunities, financial assistance in the Catholic Church despite Dalits being 64% of Indian catholic population and 75% of Tamil Nadu-Pondicherry Archdiocese. This can be corrected only when Dalits are appointed as Arch Bishops and Bishops,” he said.

[4] தினமலர், பேராயரை எதிர்த்து கறுப்பு கொடி, மார்ச் 21,2022 | 12:07 IST.

[5] https://www.dinamalar.com/video_main.asp?news_id=211048&cat=1585

[6] வத்திகன் செய்தி, பாண்டிச்சேரிகடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர், 19 March 2022, 15:41.

[7] https://www.vaticannews.va/ta/pope/news/2022-03/bishop-francis-kalist-appointed-new-archbishop-pondicherry.html

[8] தினத்தந்தி, புதுவை கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம், பதிவு: மார்ச் 19,  2022 20:46 PM.

[9] https://www.dailythanthi.com/News/State/2022/03/19204631/Francis-Callist-appointed-Archbishop-of-puducherryCuddalore.vpf

[10] தினமணி, பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல், By DIN  |   Published on : 13th October 2020 02:41 AM  |  Last Updated : 13th October 2020 02:41 AM.

[11] 40 ஆண்டுகள் மேலாகி விட்டாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பெயர்களை வைத்து, அவர்களை இன்றைக்கும் அடையாளம் காணலாம். சிலர் காலமாகி விட்டனர். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது.

[12] https://www.dinamani.com/all-editions/edition-trichy/2020/oct/13/insisting-on-nominating-dalit-christians-for-peraya-posts-3484004.html

சி.எஸ்.ஐ. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

ஒக்ரோபர் 25, 2015

சி.எஸ்.. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

மார்த்தாண்டம் பிரச்சினை - நியூஸ்.7. போட்டோ

மார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ

கிறிஸ்தவ மதபோதகர்கள் திராவிட சித்தாந்தம் மற்றும் இந்துவிரோத பகுத்தறிவு கொள்கைகளினால் ஊக்குவிக்கபடுகிறார்களா?: தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்த ஆட்சியாளர்களின் கீழ் மதநம்பிக்கையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளாளர்கள். குறிப்பாக, அவர்கள் நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டால் கூட, இந்து-விரோத சித்தாந்திகளாகத்தான் இருந்து வருகிறார்கள். கோவில்கள், அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆட்டிப்படைத்து வருகிறார்கள். கோடி-கோடிக்கணக்கில் உள்ள அச்சொத்துகளை மாறி-மாறி குத்தகை, ஆக்கிரமிப்பு, பட்டா-மாற்றம் போன்ற வழிகளில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு இடங்கள் அவற்றின் சொத்துகளை அம்மாதிரியே செய்யும் போது கூட அரசு தலையிட முடியாத நிலையுள்ளது. அந்நிலையில் அவர்களே அத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்குள்ளேயே சண்டைகள் வந்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளார்கள், அவற்றில் மதத்தலைவர்கள் முதல், கீழுள்ள நிர்வாகிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் என்று எல்லோருமே அடக்கம். சி.எஸ்.ஐ பற்றி சொல்லவே வேண்டாம். நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றின் மூலம் அவர்களது விவகாரங்கள் பல வெளிவந்துள்ளன. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் வணிக வளாக வாடகை பிரச்சினை தொடர்பாக போதகர்கள்–வியாபாரிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று வரும் செய்தி வியப்பாக உள்ளது.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

சி.எஸ்.. பேராயத்திற்கு வணிக வளாகம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. ஆலயம், ஆலய வளாகம் முதலியவை உள்ளது பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகம் தான் இப்பொழுதைய பிரச்சினையில் வந்துள்ளது[1]. இங்கு 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அக்கடைகள் பல வணிகர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்த வணிக வளாகம் இருப்பதால் எப்போதும், இங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் கணிசமான பணம் சி.எஸ்.ஐக்குக் கிடைத்து வருகிறது. இந்த கடைகளின் வாடகை மற்றும் வைப்புத்தொகையை அதிகரித்து தர வேண்டும் என பேராய நிர்வாகிகள் அங்கு கடைகளை நடத்தி வருபவர்களிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், ஒருசில கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

போதகர்கள் மற்றும் வணிகர்களுக்குன் இடையில் கைகலப்பு[2]: இந்தநிலையில், 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர். எல்லோரும் அவரது மத-உடைகளோடு படைப்போல அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் உரிமையாளரிடம் பேராயம் நிர்ணயித்த தொகையை தர வேண்டும் எனவும், வாடகை பாக்கியை முழுமையாக கட்ட வேண்டும் எனவும் கூறினர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பிரச்சினை முற்றி கைகலப்பு மூண்டது[3]. கிறிஸ்தவ போதகர்கள் அங்கிகளுடன் வணிகர்ளுடன் இவ்வாறு தள்ளுமுள்ளு மற்றும் கைக்கலப்புகளில் ஈடுபட்டது, ஏதோ சினிமா பார்ப்பது போன்றிருந்தது[4]. போதகர்களுக்கு ஆதரவாகவும், கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். அதற்கு யாரும் உடன்படாததால் பதற்றம் அதிகரித்தது. இதனை வேடிக்கை பார்க்க நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரும் பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். அதன்பின்பு, போதகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

இருதரப்புகளிடையே நடந்த பேச்சுவார்த்தை[5]: இதைத்தொடர்ந்து, 20-10-2025 அன்று மாலை சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேராயம் சார்பில் ராபர்ட் புரூஸ், மற்றும் ஜெங்கின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகர்கள் சார்பில் ஓரிரு கடைக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் வாடகை தொடர்பாக இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா, ஒப்புக்கொள்வார்களா என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், வர்த்தகர்களில் சிலர் இவ்விசயமாக போராட்டம் நடத்தவும், கோர்ட்டுக்குச் செல்லவும் தயாக இருப்பதாகக் கூறியுள்ளனர்[6]. அவ்வணிகர்களில் கணிசமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

சி.எஸ்.. பேராயத்திற்கும் வியாபாரத்திற்கும் தொடர்பு உள்ளதா?: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகத்தில் 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன என்று பார்த்தோம். 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் மத-உடைகளோடு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர்.  இப்படி 200 கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட  மதபோதகர்கள் என்பது கவனத்தில் ஈர்ப்பதாக உள்ளது. 200 கடைகளுக்கும் இவ்வாறு 200 மதபோதர்களை பொறுப்பில் போட்டுள்ளார்களா, அவர்களை வாடகை வசூல், வாடகை ஏற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனெனில், அவர்களை அவ்வேலையை செய்தது மட்டுமல்லாது, வணிகர்களுடன் சண்டையும் போட்டுள்ளார்கள். மதவுடைகள் அணிந்து கொண்டு, அத்தகைய மதம் சம்பந்தமில்லாத காரியங்களில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டனர் என்று நோக்கத்தக்கது. அப்படியென்றால், மதவிவகாரங்களைத் தவிர, இவர்களுக்கு இத்தகைய மதம்-சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய அனுமதி உள்ளதா அல்லது இரட்டை வேடம் போட்டு வருகிறார்களா, அல்லது அவ்வுடைகளைப் போட்டு மதச்சாயம் பூசி மிரட்ட வந்தார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது[7]. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அவ்வாறு மதவுடைகளுடன் 200 பேருக்கும் மேலாக போதகர்கள் வந்தார்கள் என்றால், அது தீர ஆலோசித்து, திட்டமிட்டு, முடிவெடுத்த காரியம் என்றாகிறது. திடீரென்று சாதாரணமாக அவ்வாறு வந்துவிட முடியாது. அப்படியென்றால், இவர்களுடைய தலைவர் யார், இவர்களை இவ்வாறு தயார் படுத்தி அனுப்பியது யார், வியாபார விவகாரங்களில் கிறிஸ்த அமைப்புகள் ஏன் ஈடுபடுகின்றன, போன்ற கேள்விகளும் எழுகின்றன.

CSR Marthandam

CSR Marthandam

தாக்கிய பாஸ்டர்மீது வழக்கு[8]: மார்த்தாண்டம் வணிக மையம் [Marthandam Chamber of Commerce] இந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 சதவீதத்திற்கு மேலாக வாடகை உயர்த்தப்பட்டது, குறித்து எதிர்ப்பு தெரிவித்தது. மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இதைப்பற்றி வர்த்தகர்கள் புகாரும் அளித்துள்ளனர்[9].  20-10-2015 அன்று நடந்த வணிகர்கள்-போதகர்கள் கைகலப்பு படம்பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில், மத போதகர் சுரேஷ் செல்வகுமார் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. “புதிய தலைமுறை” நிருபர் கே. மது, போதகர்களினால் தாக்கப்பட்டார். குறிப்பாக சுரேஷ் செல்லக்குமார் என்ற பாஸ்டர் தாக்கியதால் அவர்மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 341, 294 (b), 323 மற்றும் 506 (i) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[11].

CSI Shopping complex,  Marthandam

CSI Shopping complex, Marthandam

திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது யார்?: வியாபார விவகாரங்களில் கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால், வியாபாரமும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாகிறது. தீவிரவாதிகள் (ஜிஹாதிகள் முதலியோர்) இந்திய ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்து, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறார்கள் என்று முன்னரே செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதைய நிதியமைச்சர் சிதம்பரமே அதைப் பற்றி பேசியுள்ளார். இப்பொழுது ஆன்-லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. அதில் யார் பணத்தை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள் என்று தெரியாது.  ஷேர்களை, பொருட்களை வாங்கினால் மட்டும் போறாது, அவற்றை நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த அளவுக்கு இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதும், தெளிவாகிறது. இந்நிலையில் சாதாரண மக்கள் இத்தகைய திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. பொதுவாக, பண்டிகைக் காலங்களில் தான் இத்தகைய காரியங்கள் நடந்து வருகின்றன. அப்படியென்றால், அப்பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களைக் குறிவைத்து, இத்தகைய நாணயமற்ற மற்றும் பொருளாதாரத்த்யை சீர்குலைக்கும், சாதாரண மக்களை சுரண்டும் வேலைகள் நடந்து வருகின்றனவா என்று கவனிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

21-10-2015

[1]  தினத்தந்தி, வணிக வளாக வாடகை பிரச்சினை: போதகர்கள்வியாபாரிகள் கைகலப்பு மார்த்தாண்டத்தில் பரபரப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 5:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 1:47 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[3] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[4] அதாவது பலத்தை, சக்தியை எம்முறையிலும் உபயோகப்படுத்தத் தயாராக உள்ளனர், அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்றாகிறது.

[5] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[6]  கோவில் சொத்துகள் என்றால், வேறுவிதமாக இருக்கும், இங்கு உண்மையிலேயே அவ்வாறு செல்வார்களா அல்லது சரசமாகி விடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

[7]  செக்யூலரிஸத்தில், மதத்தையும் மற்ற மதம் சம்பந்தமில்லாத காரியங்களையும் சேர்க்கக் கூடாது என்றுள்ளது. “சர்ச் மற்றும் ஸ்டேட்” தனித்தனி என்று கூறிக்கொள்கிறார்கள்.

[8]  The Hindu, Case registered against pastor, Nagerkoil, October.24, 2015; Updated: October 24, 2015 05:45 IST

[9] நியூஸ்.7, மார்த்தாண்டத்தில் தாக்குதல் தொடர்பாக மதபோதகர் மீது வழக்கு, Updated on October 23, 2015.

[10] http://ns7.tv/ta/case-filed-against-piest-marthandam-attacking.html

[11] In connection with an attack on a reporter of a private television channel, a case has been registered against Suresh Chellakumar, Pastor, CSI church, Thalakkanvilai, by Marthandam police on Thursday. According to the police, K. Mathu (44), working for Puthiya Thalaimurai Television, along with a few other reporters, rushed to the CSI shopping complex in Marthandam on Wednesday for recording the scuffle between members of the Marthandam Chamber of Commerce and CSI pastors. Angered by recording of the scuffle, a few CSI pastors are alleged to have abused Mr. Mathu. The reporter was also allegedly attacked and threatened with dire consequences. Accompanying reporters A. Arul Kumar and Shagayakumar tried to safeguard Mathu from the attack but in vain. Mathu refused to get admitted to a hospital for treatment. Marthandam police have registered a case under Sections 341, 294 (b), 323 and 506 (i) of Indian Penal Code against Suresh alias Suresh Kumar, Pastor, CSI church, Thalakkanvilai, based on complaint lodged by Arul Kumar. Further investigation is on.