Archive for the ‘சடலம்’ Category

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

Vatican changedd Bible in 1969-1

1969ல் வாடிகன் தினசரி பிரார்த்தனையில் மேரி மேக்தலீன் பற்றிய விவரங்களை மாற்றியது: இடைகாலத்தில் மேரி மேக்தலீன் கட்டுக் கதை எவ்வாறு பாரிஸில் வளர்க்கப்பட்டது என்பது விவரிக்கப் பட்டது. வாடிகனுக்கு ஆரம்த்திலிருந்தே, மேரி மேக்தலீனை உயர்த்து வைப்பதை குறைத்து வந்தது. மேரி என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை விட, ஏசுவின் விறையை பாதுகாத்து, வம்சத்தைப் பெருக்குவாள் போன்ற கதைகள் இடித்தன, பயமூட்டின. ஆனால், பிரான்சில், இதை நம்பும் பக்தர்கள், விசுவாசிகள் அதிகமாகவே இருந்தனர். மேரிக்கு இணையாக வளர்ந்து விடுவாளோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், காலத்தின் கட்டாயம், அவளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 1969ல் வாடிகன், போப் பால் VIன் அனுமதியுடன்  தனது தினசரி லத்தீனில் செய்யப் படும் பிரார்த்தனையில் சிறிது மாற்றங்களை செய்தது.  லூக் பைபிளில் ஏழாவது அதிகரத்தில், ஒரு பெயர் குறிப்பிடாத பெண் ஏசு இருந்த வீட்டில் நுழைந்தாள் என்ற விவரம் உள்ளது.

Vatican changedd Bible in 1969-2

லூக்கா, அத்தியாயம்.7ல் உள்ளது: முதலில் மேரி மேக்தலீன் ஒரு வேசி, விபச்சாரி என்றெல்லாம் தான் அறியப் பட்டாள், சித்டரிக்கப் பட்டாள்: லூக்கா சொல்வது:

37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,

38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

………………………………………………..

47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

இந்த கதையானது ஜான் பைபிளில் உள்ள 20 அத்தியாயத்தில் வரும் கதையை வைத்து மாற்றப் பட்டது. அங்கு அப்பெண் மேரி மேக்தலீன் என்று அடையாளம் காணப்படுகிறாள். அவள் பாவப்பட்டவள் என்பதால் அல்ல உயிர்த்தெழுந்த பின்னர், தன்னை அவளிடம் அடையாளம் காட்டிக் கொண்டதால், முக்கியத்துவம் பெறுகிறாள்.

Mary Magdalelene - raised to GODHEAD

ஜான், அத்தியாயம் 20ல் உள்ள விவரங்கள்: ஜான் அவள், ஏசு உயர்த்தெழுந்ததுடன் தொடர்பு படுத்துகிறது:

11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18 மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

Mary Magdalene teaching apostles

இதுவரை, மேரி மேதலீனை விபச்சாரி, வேசி என்றெல்லாம் தான் அறியப்பட்டு வந்தது. ஆனால், அவள் தான் முதன்முதலில் உயிர்த்தெழுந்த ஏசுவைக் கண்டவள். அதனால், அவள் மதத்திற்கே மையக்கருவாக இருக்கிறாள். எது எப்படியாக இருந்தாலும், அடுத்த ஆண்டே, 1970ல் “ஜீசஸ் கிரைஸ்ட் சூப்பர் ஸ்டார்” என்ற படம் வந்து ஹிட் ஆனது. அதே போல 1971 மற்றும் 1973 ஆண்டுகளில் பாடல்கள் வெளியிடப் பட்டு பிரபலம் ஆகியது. ஆக இவ்வாறு, பைபிள் மாற்றப் பட்டுக் கொண்ட்தான் வருகிறது[1]. அவள் எப்படி படிப்படியாக உயர்த்தப் பட்டு, கடவுளாகப் பட்டாள் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[2].

Jesus in India books manufactured- 1

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை[3]: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறி எழுதப்பட்ட புத்தகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யார்க் பல்கலைக்கழக (கனடா) பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் “The Lost Gospel”. இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை, புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது இந்த புத்தகம். ஆராமெய்க் மொழியில் தங்களிடமிருந்த அந்த புத்தகத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறி பிரிட்டீஷ் நூலகம் இந்த விவகாரத்தில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டுள்ளது[4].

Jesus in India books manufactured- 2

கட்டுக் கதை வளர்க்கும் விதம் – ஆதரவு-எதிர்ப்பு[5]: “வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது” என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும். ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக ‘தி லாஸ்ட் கோஸ்பல்’ புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[6].

© வேதபிரகாஷ்

17-03-2019

Jesus in India books manufactured- 3

[1] Michael Haag, The Quest For Mary Magdalene: History & Legend, Profile Books, London, 2016.

[2] Beavis, Mary Ann. The Deification of Mary MagdaleneFeminist Theology 21.2 (2012): 145-154.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[4] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

மடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது – கத்தோலிக்க ஊடகங்களுக்கு கத்தோலிக்கர் இறந்தது தான் தெரிகிறது (2)

மே 27, 2018

மடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது கத்தோலிக்க ஊடகங்களுக்கு கத்தோலிக்கர் இறந்தது தான் தெரிகிறது (2)

Tuticorin - UCA news Catholic killed changed to massacre - 23-05-2018

படுகாயம் அடைந்துள்ளதால், இறந்தவர் எண்ணிக்கை உயரக் கூடும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் சொன்னது: “படுகாயம் அடைந்துள்ளதால், இறந்தவர் எண்ணிக்கை உயரக் கூடும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் [Father Norbert Thomas, chancellor of Tuticorin Diocese] “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார்[1]. மற்ற ஊரகங்களுக்கி சொல்லவில்லை போலும். யுவான் ஆம்ப்ரோஸ், தூத்துக்குடி பிஷப், “….போலீஸ் துப்பாக்கி சூடு முறையற்றது…..இப்போராட்டம் சர்ச்சினால் தூண்டிவிடப்பட்டது என்ற பிரச்சாரம் எழுந்துள்ளது, ஆனால், இது பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம்,” என்று “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார். “மஹாத்மா காந்தியின் சத்யாகிரக பாணியில் ஐந்து கிமீ போராட்டக் காரர்கள் நடந்து சென்றனர். பிறகு தான் யாரோ போலீஸார் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்…  லியோ ஜெயசீலன் என்ற ஒரு கத்தோலிக்க சாமியாரும் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார், இப்பொழுது தேறி வருகிறார்.” இந்த ஆலை, கத்தோலிக்க பாரிஷ் அதிகாரத்தில் வருகிறது, இங்கு ஒரு லட்ச கத்தோலிக்கருக்கு ஆதரவாக செயல் படுகிறது. சமூகப் பிரச்சினை என்று வந்தால், அவர்கள், சர்ச்சுக்கு வந்து ஆலோசனை கேட்பர் என்பது பாரம்பரியமான விசயம் ஆகும்…இருப்பினும், இந்த போராட்டத்திற்கும் எங்களுக்கு சம்பஎதம் இல்லை, இது மக்களின் போராட்டம் ஆகும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் விளக்கம் கொடுத்தார்[2].

Tuticorin - Independent Catholic news- 25-05-2018

இறந்த 12 பேரில் நால்வர் கத்தோலிக்கர் என்று, இன்னொரு கத்தோலிக்க செய்தி ஏஜென்சி செய்தி (24-05-2018)[3]: லிடியா ஜேம்ஸ் என்ற லண்டன் மார்க்கடிங் மைனிங் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர் கூறியது, “லண்டனில் இக்கம்பெனி பதிவாகியுள்ளது. 1994லிலிருந்து, அக்கம்பெனியின் மீது மாசுபற்றிய புகார்கள் உள்ளன,” என்று சேர்த்து, மேலே குறிப்பிட்ட அதே செய்தியை வெளிட்டுள்ளது[4]. யுவான் ஆம்புரோஸ், “மஹாத்மா காந்தியின் சத்யாகிரக பாணியில் ஐந்து கிமீ போராட்டக் காரர்கள் நடந்து சென்றனர். பிறகு தான் யாரோ போலீஸார் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்….. ” என்றால், வீடியோக்களும், செய்திகளும் வன்முறையைத்தானே காட்டுகின்றன. போலீஸ்கரர்கள் மீது கல்லெறிதல், பெட்ரோல் குண்டு போடுதல், போலீஸாரே ஓடுவது, …. போன்ற காட்சிகள் தானே காணப்படுகின்றன. பிறகு, காந்தியாவது, சத்தியாகிரகமாவது? கிருத்துவர்களின் போலித்தனத்தை, பொய் பிரச்சாரத்தைத் தான் இது காட்டுகிறது. “வன்முறை” என்றதும், சௌரி சௌரா கலவரத்திற்குப் பிறகு, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தைக் கைவிட்டார். ஆனால், கிருத்துவர்கள் தொடர்கிறார்கள். 22-05-2018 அன்று கூட 144 தடை உத்தரவையும் மீறி, பனிமாதா சர்ச்சிலிருந்து ஊர்வலமாக சென்றனர்ரிதிலும் “சர்ச்சிற்குள், சர்ச் வளாக்த்தில், வெளியே” போன்ற விவரங்கள் மாறுபடுகின்றன. அப்பொழுது தான் வன்முறை ஆரம்பித்து கலவரத்தில் முடிந்தது.

Tuticorin - Bishop condemns - Vatican Radio - 24-05-2018

தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் இரங்கல் என்று வாடிகன் ரேடியா செய்தி (24-05-2018)[5]: இவ்விகாரத்தைப் பற்றி தூத்துக்குடி பிஷப்பின் பேட்டி / அறிக்கை தமிழ் ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், வாடிகன் ரேடியோவில் வந்தது, என்று “வத்திக்கான் வானொலி” செய்தி வெளியிட்டிருப்பதும் நோக்கத் தக்கது. அது சொல்வதாவது, “மே,24,2018. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் எழுச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், “தங்களுடைய வாழ்வுரிமைக்காகப் போராடிய மக்கள் மீது, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், துப்பாக்கிச்சூடு நடத்தி, பல உயிர்கள் இழப்புக்குக் காரணமாயிருந்தவர்களை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்”, என்றும், அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறோம் என்றும் கூறியுள்ளார். “ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த நூறு நாள்களாக, தூத்துக்குடி நகரையும், புறநகரையும் சார்ந்த பல ஆயிரம் மக்கள், எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் இல்லாமல் அமைதியாக அறவழியில் போராடி வந்துள்ளனர், மே 22ம் தேதியான இச்செவ்வாயன்றும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் எண்ணத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் சென்றபோதும்கூட, மக்கள் எந்த வன்முறைக்கும் இடமளித்தது கிடையாது, அப்படியானால் மக்களுக்கு எதிராக இந்த வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்வி எழுகின்றது”, என்றும், ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களின் அறிக்கை கூறுகின்றது[6]. தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

15-04-2018 - Panimayamata church, hub of anti-sterlite-1

சர்ச்சிலிருந்து தடையை மீறிப் புறப்பட்ட போராளிகளும் கல்லெறி கலட்டா கலவரத்தில் முடிந்ததும்: ஆங்கில ஊடகங்கள், 5000 போராட்டக் காரர்கள் தடையை மீறி உள்ளூர் சர்ச்சுக்கு அருகில் கூடினர்[7]. 144-தடையை மீறி கலெக்டர் அலுவலம் நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். பிறகு அங்கிருந்து, ஸ்டெர்லைட் ஆலைக்குச் செல்லவும் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸார் சொன்னதாக “பர்ஸ்ட் போஸ்ட்” கூறுகிறது[8]. அனுமதி மறுத்தாலும், அவர்கள் செல்ல பிடிவாதமாக இருந்தனர். ஆனால் “டைம்ஸ் ஆப் இந்தியா” அதனை “மனிமாதா சர்ச் ”[the Church of the Lady of Snow in Tuticorin] என்று தெளிவாகக் குறிப்பிட்டது[9]. கருப்புக் கொடி போராட்டத்தவரின் ஒரு குழுவினர் அங்குதான் கூடினர். இன்னொன்று, மடத்தூர் கிராமத்திலிருந்து புறப்பட்டது[10]. ஆனால், சர்ச் அருகில் கூடினர், அங்கிருந்து புறப்பட்டன, தடையை மீறினர், போலீஸார் மீது கல்லெறிந்தனர்[11], கலெக்டர் வளாகத்திலும் புகுந்து, வாகனங்களை எரித்தனர் என்று வீடியோக்கள், செய்திகள் தெளிவாகக் காட்டுகின்றன[12]. மஹாத்மா காந்தி முறையை பின்பற்றிய போராட்டக் காரர்கள் ஏன், வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்.

Tuticorin - procession against police action christians - 26-05-2018

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரீதியில் மனு கொடுத்தது: 26-05-2018 அன்று குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்[13]. அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர்[14]. சர்ச்சுக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, கத்தோலிக்கர் இறந்தனர் என்பது, பிஷப்பே அறிக்கை விடுவது, அது வாடிகன் ரேடியோ மூலம் அறிவிப்பது, கடைசியாக மனு கொடுப்பது முதலியன கிருத்துவர்களின் பங்கை மெய்ப்பித்து விட்டது. கோடானு கோடிகள் செலவழித்து கம்பெனி வைத்டுள்ள போது, அரசியல்வாதிகள், உள்ளூர் பிரபலங்கள், ஆதிக்கநிலையில் உள்ள சர்ச் என்று எல்லோருமே ஸ்டெர்லைட் இடமில்ருந்து பலனை பெற்றிருக்கின்றனர். எதிர்ப்பது என்பது, இருந்தாலும், தார்மீக நிலையில், எந்த தொடர்பினையும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், இக்கிலாந்து சர்ச்சே, இக்கம்பெனியில் கனிசமான பங்குகளை 2010 வரை வைத்திருந்தது. அதனால், சர்ச்சுக்கு, முதலீடு செய்வது, லாபம் பார்ப்பது ஏன் என்ற கேள்வியுன் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

27-05-2018

15-04-2018 - Panimayamata church, hub of anti-sterlite-using children5

[1] https://www.ucanews.com/news/catholics-among-11-dead-as-police-fire-on-india-protest/82392

[2] Among the injured is Father Leo Jayaseelan. A bullet went through his stomach but he was operated on and is stable now, the chancellor priest said. He said the polluting plant operates within the city limits and people have been adversely affected by toxic fumes. In recent years, the area has reported increased cases of cancer. The plant comes under the area of a parish and affects 19 parishes in the city, which together caters to about 100,000 Catholics. “It is natural for the very traditional Catholics here to come to the church and consult in the parish when they face social issues,” Father Thomas said. “However, the protest has nothing to do with religion. It is a people’s protest.”

https://www.ucanews.com/news/catholics-among-11-dead-as-police-fire-on-india-protest/82392

[3] Independent Catholic news, India: Catholics killed by police during protest over toxic copper processing plant, May 25th, 2018

[4] https://www.indcatholicnews.com/news/34964

[5] வத்திக்கான் வானொலி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு கண்டனம், 24/05/2018 16:38.

[6]http://ta.radiovaticana.va/news/2018/05/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/1375074

[7] The First Post, Nine dead after Tamil Nadu Police opens fire on anti-Sterlite protesters in Tuticorin demanding ban on industries, India FP Staff May 23, 2018 07:37:01 IST

[8] Police said nearly 5,000 protesters gathered near a local church and insisted on taking a out a rally to the district collectorate after they were denied permission to march to the copper smelter plant.

https://www.firstpost.com/india/nine-dead-after-tamil-nadu-police-opens-fire-on-anti-sterlite-protesters-in-tuticorin-demanding-ban-on-industries-4478343.html

[9] Times of India, Anti-Sterlite protest turns violent in Tamil Nadu’s Tuticorin, nine killed, Padmini Sivarajah | TNN | Updated: May 22, 2018, 17:30 IST .

The protesting public gathered for a black flag protest near the Church of the Lady of Snow in Tuticorin, while another group started to march from Madathur village.

[10] https://timesofindia.indiatimes.com/city/chennai/anti-sterlite-protest-in-tamil-nadu-turns-violent-20-injured/articleshow/64270597.cms

[11] Financial Express, Anti-Sterlite Protests in Tuticorin of Tamil Nadu: What really happened? How it all began? Top details and developments, By: FE Online | Updated: May 22, 2018 6:28 PM

[12] https://www.financialexpress.com/india-news/anti-sterlite-protest-movement-tuticorin-thoothukudi-tamil-nadu-violence-vedanta-violence-reason/1176956/

[13] மாலைமலர், தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய போலீசாருக்கு தண்டனை வழங்க வேண்டும்கலெக்டரிடம் மனு, பதிவு: மே 26, 2018 13:38

[14] https://www.maalaimalar.com/News/District/2018/05/26133837/1165811/police-should-be-punished-for-thoothukudi-gunfire.vpf

 

“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)

மார்ச் 10, 2018

தாமஸ் கட்டுக் கதைமுதல்எலும்பு தாமஸ்வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)

Joseph Hospices- Communist study group -08-03-2018

கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிய ஆழ்வு குழுவினர்: இதைத் தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக செய்தியார்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறாமல் களஆய்வுக்குழுவினர் மழுப்பினர். ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் தப்பித்துக் கொள்ள நினைத்தது, படு கேவலமாக இருந்தது. இது முதல் கட்ட ஆய்வு என்றெல்லாம் மழுப்பினர். தயார் செய்த குறிப்பைக் கொடுத்து “எஸ்கேப்” ஆக தீர்மானமாகஐருந்தனர். செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்து கலைந்து சென்றனர்[1]. இதிலிருந்து அவர்களின் செயல்பாடு என்ன என்பது பற்றி சந்தேகம் எழுகின்றது. 05-03-2018 அன்று மார்க்ஸ் இந்த நிறுவனத்தைப் பாராட்டி எழுதியுள்ளது, பிரச்சார ரீதியில் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. ஒரு புறம், “தீக்கதிர்” போன்ற கம்யூனிஸ நாளிதழ்கள் இரண்டு ஆண்டுகளாக அதுமீறல், சட்டமிறல் முதலிய்யவற்றை எடுத்துக் காட்டி வந்துள்ள நிலையில், மார்க்ஸ் எழுதியுள்ளது பாரபட்சமாக இருப்பதால் திட்டமிட்டது என்றாகிறது[3].

Joseph Hospices- Vasuki-Marxist study group -08-03-2018

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு வெளியிட்ட அறிக்கை[4]: இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில், அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோரை கொண்ட ஆய்வுக் குழு சமீபத்தில் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. அக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லம் சமூக நலத் துறையின் அனுமதியுடன் கடந்த 7 ஆண்டுகளாக பாதிரியார் தாமஸால் நடத்தப்படுகிறது. அது திருச்சபையால் நடத்தப்படவில்லை. அண்மையில் இந்த கருணை இல்லத்தின் ஆம்புலன்ஸில் இருந்து, ‘காப்பாற்றுங்கள்என்று அபயக்குரல் எழுப்பிய ஒரு பெண்மணியும், மயக்க நிலையில் இருந்த ஒரு முதியவரும் மீட்கப்பட்டனர். அத்துடன் இறந்தவரின் சடலம், கருணை இல்லத்துக்கான காய்கறி மூட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

Joseph Hospices-Thomas -Vasuki APM study

2011க்குப் பிறகு முறையான தடையில்லா சான்றிதழ் இல்லை: அறிக்கை தொடர்கிறது, “கருணை இல்லத்தில் உள்ள அடுக்குக் கல்லறை அமைப்புக்கு அனுமதி வாங்கியிருப்பதாக பாதிரியார் தாமஸ் கூறினார். ஆவணங்களைப் பார்த்ததில் 2011-ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தடையில்லா சான்றிதழ் அளித்ததை அனுமதி என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எஸ்.பி.க்கு பாதிரியார் தாமஸ் அனுப்பிய மனுவில், இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் மட்டுமின்றி, வழியில் இறந்துபோனால் அந்த சடலத்தையும் கொண்டுவந்து அடக்கம் செய்ய அனுமதி கோரியுள்ளார். இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. அனுப்பியுள்ளார். அதன்பிறகு, எஸ்.பி. நேரடியாக பாதிரியாருக்குதடையில்லா சான்றிதழ்போன்ற ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இதுபோன்ற சான்றிதழ் அளிக்க எஸ்.பி.க்கு அதிகாரம் இல்லை என்பதை மாவட்ட ஆட்சியரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தனியார் அமைப்பு, பொதுமக்களை அடக்கம் செய்யும் கல்லறையை தம் நிறுவனத்துக்குள் அமைத் துக் கொள்ள எப்படி அனுமதி வழங்க முடியும்?”

 Joseph Hospices-chingleput bishop-collector

எலும்பு விற்பனை நடக்கிறதா?: அறிக்கை தொடர்கிறது[5], “வேலூரில் இருந்துகூட சடலங்கள் இங்கு வருகின்றன என்கிறார்கள். எனவே, இதை வெறும் சேவை என்பதாகப் பார்க்க முடியவில்லை. எலும்புக் கூடு விற்பனை செய்யப்படுகிறதா, மருந்துகள் தயாரிக்க மனித எலும்புத் துகள்கள் பயன்படுத்தப்படு கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. உயிரோடு இருப்பவர்கள் உலவும் இடத்திலேயே கல்லறை இருப்பது அங்குள்ளவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் குன்றியவர்கள் மீது சிறப்பு கவனம் இருக்க வேண்டும். ஆனால் சாதாரணமாக இருப்பவர்களும், மனநலம் குன்றியவர்களும் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலரிடம் விசாரித்தபோது, மருத்துவரும் சரியாக வருவது கிடையாது. மருந்துகளும் கொடுப்பது இல்லை எனத் தெரிவித்தனர். இதனால், அங்கு இருப்பவர்கள் அப்படியே இறந்து போகட்டும் என விடப்படுகிறார்களா என்கிற சந்தேகமும் எழுகிறது.”

 Joseph Hospices-chingleput bishop-collector represented

கட்டாயப்படுத்தி தங்கவைப்பு: அறிக்கை தொடர்கிறது, “விருப்பம் இல்லாதவர்கள்கூட நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்படுகின்றனர். வீட்டுக்குப் போக விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தெரியவருகிறது. சமீபத்தில் ஆம்புலன்ஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்மணியும், ‘‘வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டனர். இறக்கி விடுங்கள் என்றாலும் கேட்கவில்லை’’ என்று கூறியது ஊடகங்களில் வெளியாகி இருந்தது. கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து வந்த ஒருவர், அரசு அதிகாரி ஒருவரிடம் செல்போனை வாங்கி, வீட்டுக்கு பேசினார். எங்கள் கண் முன்னாலேயே, ‘நான் இந்த இடத்தில் இருக்கிறேன், வீடு திரும்பி விடுவேன்என அவர் கூறியதைக் கேட்டோம். ஒரு முதியவர், ‘‘சளி அதிகம் என்பதால் தாம்பரம் சானடோரியம் சென்றுவிட்டு திரும் பிக் கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து இங்கு அழைத்து வந்துவிட்டனர். திரும்பிப் போக அனு மதிக்கவில்லை’’ என்றார்”.

 Joseph Hospices-Thomas supported by catholic church-DEMO-4

பெயர் மாற்றப்படும் முதியவர்கள்: அறிக்கை தொடர்கிறது, “மனநலம் குன்றியவர்கள் சிலர் ஆடையில்லாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிகிறது. இது மனித உரிமை மீறலாகும். அரசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே கடந்த 5 மாதங்களாக கருணை இல்லம் செயல்பட்டு வந்துள்ளது. இல்லத்துக்கு அழைத்து வரப்படுபவர்கள் குறித்த பதிவேடு முறையாக இல்லை. அங்குள்ள ஒருவரின் பெயர் வேறு. ஆனால், அவர் குத்தியிருந்த அடையாள அட்டையில் வேறு பெயர் இருந்தது. அவரிடம் கேட்டபோது, பெயர் மாற்றத்தை ஒப்புக்கொண்டார். இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து விவரம் தெரிந்த ஓர் இளைஞரைச் சில நாட்களாகக் காணவில்லை என்கின்றனர். காலையில் கஞ்சி, மதியமும், இரவும் ரேஷன் அரிசியில் சாம்பார் சாதம் மட்டுமே தருவதாக அங்கு தங்கியிருந்த சிலர் கூறினர்.

 Joseph Hospices-Thomas supported by catholic church-DEMO-3

இட்லியைப் பார்த்தே பல காலம் ஆகிறது: அறிக்கை தொடர்கிறது, “இட்லியைப் பார்த்தே பல காலம் ஆகிறது என்றனர். இது தொடர்பாக ஓர் உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இக்குற்றங்களுக்கு துணைபோன அரசு, காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுக்குப் போக விரும்பு பவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு, தனியார் நடத்தும் முதியோர் இல்லம், மனநலம் குன்றியோர் இல்லம் போன்றவற்றை முறையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரத்தில் இந்து முன்னணி ஏற்கெனவே மதச்சாயம் பூசத் தொடங்கிவிட்ட சூழலில், மத மோதல்கள் வராமல் தடுக்க வேண்டும். கடந்த 3-ம் தேதி முதல்வர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து கோரிக்கைகளை முன்வைத் தோம்”, இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Joseph Hospices-Thomas supported by catholic church-DEMO-2

தாமஸ் கட்டுக் கதைமுதல்எலும்பு தாமஸ்வரை: “தாமஸ் கட்டுக் கதையை” வைத்துக் கொண்டு, கத்தோலிக் சர்ச் அதிகமாகவே மோசடியில் ஈடுபட்டு, மூக்கை உடைத்துக் கொண்டது. தாமஸ் இருந்தது இல்லாதது தெரியாவிட்டாலும், பற்பல எலும்புகள், மண்டையோடுகள் கண்டெடுக்கப் பட்டு, எல்லாமே தாமஸுடையது என்று உறுதியாக சொன்னார்கள் பிஷப்புகள், பாதிரிகள். ஆனால், ஒரே ஆளுக்கு எப்படி அத்தனை எலும்புகள், மண்டையோடுகள் இருக்க முடியும் என்பதைப் பற்றியும் அவர்கள் வெட்கப் படவில்லை. இப்பொழுதும், அதே தாமஸின் பெயரில், எலும்புகள், மண்டையோடுகள் விவகாரங்கள் வெளிவந்தது, ஒரு சாதாரண நிகழ்வா அல்லது மறுபடியும் அவர்களது மோசடிகளை, மொய்மையை மறைக்கும் போக்கை வெளிப்படுத்தும் நிதர்சனமா என்று பார்க்க வேண்டும். இனி இந்த “எலும்பு தாமஸ்” என்ன செய்யப் போகிறார், சர்ச் என்ன கதை விடப்போகிறது என்று பார்க்கலாம். மைலாப்பூரில் ஒரு சிவன் போல, பாலேஸ்வரரத்தில், ஒரு ஈஸ்வரர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பலாம்! நாளைக்கு அவருக்கு எல்லோரும் பதில் சொல்ல வேண்டிருக்கும்.

 

© வேதபிரகாஷ்

10-03-2018

Joseph Hospices-Thomas supported by Bishop

[1] http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/mar/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2876374.html

 

[2] தமிழரசியல்,கண்ணியமான ஒரு மரணம் தொடர்பான பிரச்சனை” –.மார்க்ஸ், March 5, 2018.

[3]http://tamilarasial.com/2018/03/05/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/

[4] தி.இந்து, கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்படும் முதியவர்கள்: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மனித எலும்பு விற்பனை?- அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வுக் குழு, Published :  09 Mar 2018  10:05 IST; Updated :  09 Mar 2018  10:32 IST

[5] http://tamil.thehindu.com/tamilnadu/article22991371.ece