Archive for the ‘உயிர்த்தெழுதல்’ Category

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

ஜனவரி 1, 2021

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

தலைமை பெண் காவர், குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தது: தேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ் (நக்கீரன்) /  பால்ராஜ் (என்கிறது NEWS18 TAMIL)[1]. இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்தார்[2]. மகளின் பெயர் மெர்சி என்று குறிப்பிட்டு, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடப் படவில்லை. குழ்ந்தைகளின் பெயர்கள் இந்து0கிறிஸ்தவ பெயர்களாக இருப்பதனால், ஒருவேளை மாற்றுமத திருமணத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு த்னித்து வாழ்கிறார்கள் போலும். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[3] என்று நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.


கிறிஸ்தவரான இந்திரா நோய்வாய்ப்பட்டது, சிகிச்சைப் பெற்றது, விடுமுறையில் சென்றது: இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்திராவின் சகோதரியான வாசுகியும் இவர்களுடனேயே தங்கிவிட்டார். ஏற்கனவே சிறுநீரகத் தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த காவலர் இந்திரா, காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், அவர் விருப்ப ஓய்வு பெறுவது குறித்து எந்தத் தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 16.10.20 முதல் அன்னை இந்திரா மெடிக்கல் விடுமுறையில் சென்றுள்ளார். 25.12.20 அன்று அவர் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும்[4]. ஆனால் அவர் 31ஆம் தேதி வரை பணிக்கு திரும்பாததால், அவர் அடிக்கடி விடுப்பு எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த 8-ஆம் தேதி இந்திராவின் வீட்டிற்கு, போலீஸார் / இரு பெண் காவலர்கள் சென்றுள்ளனர்[5].


விசாரிக்க வந்த போலீஸார், இந்திராவின் பிணத்தைக் கண்டது: ஆனால், இந்திரா வீட்டில் இல்லை எனக்கூறி இந்திராவின் குழந்தைகளும் அவரது சகோதரியும் போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகிலிருந்தோர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார், இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழுகிய உடல் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள் என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், ‘எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்’ என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார். உடல் மிகவும் அழுகிய காரணத்தினால் வீட்டிலேயே டாக்டர்கள் உடற்கூறாய்வு செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


சர்ச் பாதிரியாரிடம் ஏன், எப்படி பழக்கம் ஏற்பட்டது, யார் அந்த பாதிரி?: கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[6]. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த இந்திராவை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்துள்ளனர். சர்ச் பாதிரியாரின் இந்தத் தொடர் நடவடிக்கையின் காரணமாக, இந்திராவின் இரு குழந்தைகளும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்[7]. தந்தைக்குப் பதிலாக, பாதிரியுடன் பழகும் தாயைக் கண்டு, குழந்தைகள் குழம்பி, மனம் பாதிக்கப் பட்டிருக்கலாம். அந்நிலையில், பாதிரி வந்து அவர்களுக்கு போதனை செய்து, மூளை சலவை செய்ததால், இறந்தவர் உயிர்த்தெழுவர் போன்ற நம்பிக்கைகளைப் பெற்றிருக்கலாம். அப்படியென்றால், இறந்த தமது தந்தை ஏன் உயிரோடு வரக்கூடாது என்றும் நினைத்திருக்கலாம், பாதிரியாரிடம் கேட்டிருக்கலாம்.


20-22 நாட்களாக பிணத்துடன் இருந்ததால், போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருவது: அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டிசம்பர் 7ம் தேதி இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக (நக்கீரன்) / 20 நாட்கள் (தினமலர்) வீட்டில் இருந்த சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8]. உயிரிழந்த காவலர் இந்திரா, கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[9]. தினமலர், வாசுகி, ஆன்டர்சனிடம் / சுதர்சன் என்று மற்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர், என்று முடிக்கிறது[10]. திடீரென்று “ஆன்டர்சன்,” வந்தது என்று தெரியவில்லை. தினமலர் நிருபர், ஏதோ அடக்கி வாசிக்கின்றாரா அல்லது மறைக்கிறாரா என்று தெரியவில்லை[11]. ஊடகங்களும், உண்மையினை சொல்லாமல், மூடநம்பிக்கை என்றால், இதையும் விமர்சிக்காமல், கிறிஸ்தவ நம்பிக்கை என்பதால், அடக்கி வாசிப்பதுப் போலத் தெரிகிறது.

30 நாட்களுக்குப் பிறகு, உயிர்த்தெழுவார்களா?: இதே போல, கிறிஸ்தவ குடும்பத்தில் வயதான பெண் ஒருவர் இறந்து விட்டார். குடும்பத்தினர், இந்தத் தகவலை வெளியே சொல்லவில்லை. மாறாகச் சிறிய அறைக்குள் இறந்து போனவரின் சடலத்தை வைத்தனர். தினமும் சடலத்தின் அருகே மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தி வந்துள்ளனர்.  சடலத்தின் மீது  வாசனைத் திரவியங்களையும் தொடர்ந்து அடித்து வந்துள்ளனர்.  முப்பது நாள்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால்  இறந்தவர் உயிருடன் வந்து விடுவார் என்பது அவர்களின் நம்பிக்கை[12]. ஐ.பி.எஸ் அதிகாரியே மூடநம்பிக்கையில் தந்தையின் உடலைப் பாதுகாத்து வந்ததைக் கண்டு போபால் நகரம் அதிர்ந்து போய் கிடக்கிறது. மத்தியப் பிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பியாக இருப்பவர் ராஜேந்திரக் குமார். இவரின் தந்தை 84 வயது கல்முனி மிஷ்ராவின் இறந்த உடலை வைத்து பிரார்த்தனை செய்தார்[13]. இத்தகைய நம்பிக்கைக் கொள்வது, திகைப்பாக இருக்கிறது.

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?:

இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு,ணவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

01-01-2021


[1] நியூஸ்.18.தமிழ், உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக பெண் காவலர் சடலத்தை வைத்திருந்த உறவினர், NEWS18 TAMIL, LAST UPDATED: DECEMBER 31, 2020, 10:11 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/dindigul-women-police-died-police-started-investigation-riz-387813.html

[3] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[4] நியூஸ்.டி.எம், மரணமடைந்த பெண் உயிர்த்தெழுவார் என சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்த கொடூரம்!, By Aruna NewsTM | Fri, 1 Jan 2021.

[5] https://newstm.in/tamilnadu/the-cruelty-of-keeping-the-corpse-for-22-days-as-the-dead/cid1954389.htm

[6] நக்கீரன், அம்மா உயிருடன் வருவார்…!” தாயின் சடலத்தோடு 22 நாட்கள் இருந்த குழந்தைகள்!, சக்தி, Published on 31/12/2020 (19:23) | Edited on 31/12/2020 (19:58)

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shocking-incident-dindigul

[8] தினகரன், திண்டுக்கல்லில் சடலத்தை வைத்து 22 நாட்களாக பிரார்த்தனை, 2020-12-31@ 16:39:22.

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[10] தினமலர், சடலத்துடன் 20 நாள் பிரார்த்தனை, Added : ஜன 01, 2021 00:26.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2681276

[12] விகடன், “தந்தை உயிருடன் எழுவார்”- சடலத்துக்கு வீட்டில் ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்த .பி.எஸ் அதிகாரி, எம்.குமரேசன், Published:15 Feb 2019 8 PMUpdated:17 Feb 2019 3 PM

[13] https://www.vikatan.com/social-affairs/controversy/149796-father-dies-in-hospital-ips-officer-takes-body-home-starts-ayurveda-treatment-in-bhopal

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

திசெம்பர் 30, 2020

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

அடிப்படைவாத கிறிஸ்தவ தெய்வநாயகம் பிஷப் அந்தோனிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது (26-11-2020): சாந்தோம் தேவாலயத்தை கண்டித்து, “ஆன்மவியல்” அறக்கட்டளை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக வந்த, மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்[1]. சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில், “பழமையான” சாந்தோம் தேவாலயம் உள்ளது. இதன் பங்குத்தந்தையாக இருப்பவர், அந்தோணிசாமி, 52. இவர், நேற்று முன்தினம் இரவு 28-11-2020, மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ள தாவது: “நேற்று முன்தினம் காலை, தேவாலயத்திற்கு உலக சமயங்களை ஒன்றிணைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள, ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகம் என்பவர், மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து, டிச., 13ம் தேதி, 2020, தேவாலயத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது[2]. கடிதம் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?[3]:  “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?”மற்றும் “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம்” என்று இரண்டு தலைப்புகளில், “தினமலர்” மட்டும் தான் செய்தியை வெளியிட்டுள்ளது[4]. மற்ற நாளிதழ்களில் காண்ணப்படவில்லை. தெய்வநாயகம் ஒன்றும் மைலாப்பூர் ஆர்ச்பிஷப்புக்கு தெரியாத நபர் அல்லர். இருப்பினும், இவ்வாறு போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு, என்ன நிலைமை தீவிரம் ஆயிற்று என்று தெரியவில்லை. புகார் கடிதத்தில், “தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து,” என்று தான் உள்ளது. அப்படி என்ன –

  1. சாந்தோம் தேவாலயம் எப்படி தனியாக இயங்குகிறது?,
  2. என்ன செயலை, அப்படி பாதிக்கும் முறையில் செய்கிறது?
  3. அதனை மற்றவர்களுக்குப் புரியாத அறியாத நிலையில் தெய்வநாயகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கிறது?
  4. கத்தோலிக்க முறையை விட்டு விலகி தனியாக, எதையாவது செய்கிறதா?
  5. இவருக்கு மட்டும் தான் கண்டிக்க உணர்வு வந்ததா?
  6. மற்ற விசுவாசமான கத்தோலிக்க பக்தர்களுக்கு தெரியாதா, தெரிந்தும் சுரணை வரவில்லையா?
  7. தெய்வநாயகமே கத்தோல்லிக்கர் இல்லை என்பதும் தெரிந்த விசயம், பிறகு அவருக்கு இதில் என்ன அக்கரை?
  8. மேலும், தெய்வநாயகம் முந்தைய பிஷப்புகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார், பிறகு, இந்த அந்தோணியுடன் ஏதாவது பிரச்சினை உள்ளதா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன, அவற்றிற்கு விடை சொல்லியாக வேண்டும்.

கத்தோலிக்க சர்ச் திருப்பலி முதலிய கிரியைகள்சடங்குகள் நடத்துவதில் முறை தவறுகிறதா?: முன்னர் 2013-14 ஆண்டுகளில், மைக்கேல் பிரபு என்பவர், சாந்தோம் சர்ச்சில் முறையாக திருப்பலி முதலிய கிரியைகள்-சடங்குகள் நடத்தப் படுவதில்லை என்று கடிதங்கள் எழுதி அனுப்பினார். அதற்கு, அந்தோணிசாமியும் பதில் அளித்துள்ளார்[5].  ஆனால், அவையெல்லாம், கத்தோலிக்க சர்ச்சின் உள்-விவகாரங்கள் போன்றிருந்தன, ஏனெனில், கிரியைகள்-சடங்குகள் நடத்தும் முறைகள், “இடம், பொருள், ஏவல்” என்றும், நாடு, மக்கள், மொழி, சமூகம் போன்ற காரணிகளால் மாறத்தான் செய்யும். மேலும், “உள்-கலாச்சாரமயமாக்கல்,” “மதங்களுக்கு இடையே உரையாடல்” போன்ற தேவையற்ற வேலைகளையும், திட்டங்களையும் செய்து வருவதால், பற்பல முறையற்ற நிகழ்வுகள் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடந்து வருவதை, அடிப்படை கத்தோலிக்கவாதிகள், சென்னையிலேயே எ திர்த்துள்ளனர். சுவாமி குலந்தைசாமி போன்றோர், கண்டித்து, “லைதி” மற்றும் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள். மைக்கேல் பிரபு என்பவர் தொடர்ந்து, தனது இணைதளத்தில் எடுத்துக் காட்டி வருகிறார்.

13-12-2020 அன்று ஏன் தெய்வநாயகம் போராட்டம் நடத்தவில்லை?: சரி, யார் இந்த நபர்கள், கிருத்துவர்களாக இருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டை போடுகிறார்களா? இல்லவே இல்லை. முன்பு பிஷப்பாக இருந்த சின்னப்பா, இவருக்கு இடம், ஆதரவு கொடுத்து, மாநாடு நடத்தியுள்ளார். “மாதவி பொன் மயிலாள்,” என்று பாட்டெல்லாம் பாடி அசத்தியுயுள்ளார். அதற்கும் முன்னர், அருளப்பா, கேட்கவே வேண்டாம், நீதிமன்ற தீர்ப்புகள் சொல்லும் அவர்களுடைய மோசடிகளை! பின்னர், இதென்ன கலாட்டா நாடகம்?  ஒருவேளை, விளம்பரத்திற்காக செய்திருக்கலாம் என்று எண்ணவும் செய்யலாம். பிப்ரவரியில், அர்ஜுன் சம்பந்த் வந்து கலாட்டா செய்தது போல, விளம்பரத்திற்காக, நாளிதழ்களில் செய்தி வரவேண்டும் என்றும் செய்திருக்கலாம் என்று யோசிக்கலாம். அர்ஜுன் சம்பந்த் விஜயம் பற்றி சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது.

2009ல் இல்லாத ஆர்வம் அர்ஜுன் சம்பத்திற்கு 2020ல் எப்படி வந்தது? (பிப்ரவரி 2020): சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து இந்து கோயில் இருந்த இடம் என்று கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி சர்ச்சையை கிளப்பினார்[6]. இதையடுத்து இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[7]. இப்படி இந்த செய்தியை பல இணைதளங்களில் செய்தியாக, காப்பி அடித்துப் போட்டன. அவற்றில் எதுவுமே நேரில் சென்று, விவரங்களை அறிந்து போடவில்லை என்று தெரிந்தது. அர்ஜுன் சம்பத்திற்குக் கூட, ஏன், எப்படி, எதற்காக திடீரென்று, இதில் ஆர்வம், விருப்பம், கவலை வந்தது என்று தெரியவில்லை.  2009ல் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற கருத்தரங்கம் நடைபெற்ற போது, இது பற்றிய பிரச்சினைகளை [இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை] விவாதிக்க சம்பந்தப் பட்ட பல ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் முதலியோர் வழவழைக்கப் பட்டு விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் பாலாறாவாயன்[8], சுப்பாராவ்[9], வேதபிரகாஷ்[10], ஈஸ்வர் ஷரண்[11], என பலர் விவாதங்களில் பங்கு கொண்டனர். அந்த கருத்தரங்கத்தில் அர்ஜுன் சம்பத்தும் கலந்து கொண்டு, “தமிழர் சமயம் இந்து சமயமே,” என்ற ஆய்வு கட்டுரை வாசித்தார்.  அது தொகுப்பில் பிரசுரம் ஆகியது[12]. ஆனால், அந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, இவருக்கு திடீரென்று ஆர்வம் வந்தது வியப்பாக இருக்கிறது. மறுபடியும் வருவேன் என்று சொன்ன அர்ஜுன் சம்பத் வரவில்லை, அதே போல 13-12-2020 அன்று போராட்டம் நடத்துவேன் என்ற தெய்வநாயகமும் வரவில்லை.

சர்வமத கிறிஸ்துவ விழாவுக்கு ஏன் தெய்வநாயகம் அழைக்கப் படவில்லை? (24-12-2020): ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் என்ற நிலையில், தெய்வநாயகம், தன்னையும் சர்வமத கிறிஸ்துமஸ் விழாவுக்கு, அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதற்கான முயற்சியும் மேற்கொண்டார் எனத் தெரிகிறது. சைவசித்தாந்தம் பேசப் படுகின்ற நிலையில், “விவிலியம், சைவசித்தாந்தம்,” ஒப்பீட்டை செய்த, தான், அவர்களுக்கு இணையாகப் பேச தகுதியுள்ளவர் என்றெல்லாம் சொல்லிப் பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால், இவர் கலந்து கொண்டால், பிரச்சினை பெரிதாகி விடும் என்று மறுக்கப் பட்டது. மேலும், போராட்டத்தையும் கைவிடச் சொல்லி, அறிவுருத்தப் பட்டது. மாறாக, முன்னர், “தமிழ் கிறிஸ்தவ மாநாடு,” ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போன்று, ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கலாம். எப்படியோ 13-12-2020 மற்றும் 24-12-2020 நாட்களில் தெய்வநாயகம் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, அடங்கினாரா, அடக்கப் பட்டாரா, சமரசம்-உடன்படிக்கை நடந்ததா என்பதெல்லாம், இனிமேல் தான் தெரிய வரும் எனலாம்.


© வேதபிரகாஷ்

30-12-2020


[1] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம், Added : நவ 30, 2020 06:00.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662109

[3] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?, Added : நவ 30, 2020 06:09.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662123

[5] http://www.ephesians-511.net/

[6] தினகரன், இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்ததுசாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு, 2020-02-29@ 03:56:28.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567764

[8] மறுப்பு நூல் எழுதிய திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன், இலயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் [ஓய்வு].

[9] ஆர்ச் பிஷப் அருளப்பா வெர்சஸ் கணேஷ் ஐயர் வழக்கில், கணேஷ் ஐயர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வாக்கறிஞர்.

[10] முதன் முதலாக, இந்த பிரச்சினை பற்றி ஆய்ந்து, “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற புத்தகத்தை 1989ல் வெளியிட்டவர்.

[11] ஆங்கிலத்தில், இப்பிரச்சினை பற்றி எழுடியவர். 2020ல் ஐந்தாவது பதிப்பும் வெளிவந்துள்ளது.

[12] வேதபிரகாஷ், மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, திராவிடச் சான்றோர் பேரவை, சென்னை, ப.112-124

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

Vatican changedd Bible in 1969-1

1969ல் வாடிகன் தினசரி பிரார்த்தனையில் மேரி மேக்தலீன் பற்றிய விவரங்களை மாற்றியது: இடைகாலத்தில் மேரி மேக்தலீன் கட்டுக் கதை எவ்வாறு பாரிஸில் வளர்க்கப்பட்டது என்பது விவரிக்கப் பட்டது. வாடிகனுக்கு ஆரம்த்திலிருந்தே, மேரி மேக்தலீனை உயர்த்து வைப்பதை குறைத்து வந்தது. மேரி என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை விட, ஏசுவின் விறையை பாதுகாத்து, வம்சத்தைப் பெருக்குவாள் போன்ற கதைகள் இடித்தன, பயமூட்டின. ஆனால், பிரான்சில், இதை நம்பும் பக்தர்கள், விசுவாசிகள் அதிகமாகவே இருந்தனர். மேரிக்கு இணையாக வளர்ந்து விடுவாளோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், காலத்தின் கட்டாயம், அவளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 1969ல் வாடிகன், போப் பால் VIன் அனுமதியுடன்  தனது தினசரி லத்தீனில் செய்யப் படும் பிரார்த்தனையில் சிறிது மாற்றங்களை செய்தது.  லூக் பைபிளில் ஏழாவது அதிகரத்தில், ஒரு பெயர் குறிப்பிடாத பெண் ஏசு இருந்த வீட்டில் நுழைந்தாள் என்ற விவரம் உள்ளது.

Vatican changedd Bible in 1969-2

லூக்கா, அத்தியாயம்.7ல் உள்ளது: முதலில் மேரி மேக்தலீன் ஒரு வேசி, விபச்சாரி என்றெல்லாம் தான் அறியப் பட்டாள், சித்டரிக்கப் பட்டாள்: லூக்கா சொல்வது:

37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,

38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

………………………………………………..

47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

இந்த கதையானது ஜான் பைபிளில் உள்ள 20 அத்தியாயத்தில் வரும் கதையை வைத்து மாற்றப் பட்டது. அங்கு அப்பெண் மேரி மேக்தலீன் என்று அடையாளம் காணப்படுகிறாள். அவள் பாவப்பட்டவள் என்பதால் அல்ல உயிர்த்தெழுந்த பின்னர், தன்னை அவளிடம் அடையாளம் காட்டிக் கொண்டதால், முக்கியத்துவம் பெறுகிறாள்.

Mary Magdalelene - raised to GODHEAD

ஜான், அத்தியாயம் 20ல் உள்ள விவரங்கள்: ஜான் அவள், ஏசு உயர்த்தெழுந்ததுடன் தொடர்பு படுத்துகிறது:

11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18 மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

Mary Magdalene teaching apostles

இதுவரை, மேரி மேதலீனை விபச்சாரி, வேசி என்றெல்லாம் தான் அறியப்பட்டு வந்தது. ஆனால், அவள் தான் முதன்முதலில் உயிர்த்தெழுந்த ஏசுவைக் கண்டவள். அதனால், அவள் மதத்திற்கே மையக்கருவாக இருக்கிறாள். எது எப்படியாக இருந்தாலும், அடுத்த ஆண்டே, 1970ல் “ஜீசஸ் கிரைஸ்ட் சூப்பர் ஸ்டார்” என்ற படம் வந்து ஹிட் ஆனது. அதே போல 1971 மற்றும் 1973 ஆண்டுகளில் பாடல்கள் வெளியிடப் பட்டு பிரபலம் ஆகியது. ஆக இவ்வாறு, பைபிள் மாற்றப் பட்டுக் கொண்ட்தான் வருகிறது[1]. அவள் எப்படி படிப்படியாக உயர்த்தப் பட்டு, கடவுளாகப் பட்டாள் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[2].

Jesus in India books manufactured- 1

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை[3]: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறி எழுதப்பட்ட புத்தகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யார்க் பல்கலைக்கழக (கனடா) பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் “The Lost Gospel”. இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை, புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது இந்த புத்தகம். ஆராமெய்க் மொழியில் தங்களிடமிருந்த அந்த புத்தகத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறி பிரிட்டீஷ் நூலகம் இந்த விவகாரத்தில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டுள்ளது[4].

Jesus in India books manufactured- 2

கட்டுக் கதை வளர்க்கும் விதம் – ஆதரவு-எதிர்ப்பு[5]: “வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது” என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும். ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக ‘தி லாஸ்ட் கோஸ்பல்’ புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[6].

© வேதபிரகாஷ்

17-03-2019

Jesus in India books manufactured- 3

[1] Michael Haag, The Quest For Mary Magdalene: History & Legend, Profile Books, London, 2016.

[2] Beavis, Mary Ann. The Deification of Mary MagdaleneFeminist Theology 21.2 (2012): 145-154.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[4] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் சுப்ரமணியன் சாமியின் பங்கு [3]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் சுப்ரமணியன் சாமியின் பங்கு [3]

Grail myth- books-Subramanian swami- 4

காஷ்மீரில் ஏன் ஏசு கட்டுக் கதைகளை வளர்க்கிறார்கள்?: காஷ்மீர் மக்களுக்கு அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், 1980களில் ஆரம்பித்து வைத்த தீவிரவாதத்தால், அம்மாநிலமே அழிந்து வருகிறது. சரித்திர ரீதியில் பெயரில் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தாலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அவ்விடங்கள் அழிப்பிற்கு உட்பட்டுள்ளன. கோவில்கள் முழுக்கவே இடித்து தள்ளப்பட்டுள்ளன. ரோசா பெல் சொல்லப்படும் கூடிய ஒரு மசூதியானது பிரபலமாக இருந்து வருகிறது. ஏனெனில் இங்கு இயேசு இறந்த பின்னர் அவரது உடல் புதைக்கப் பட்டு அதன்மீது அந்த சமாதி கட்டப்பட்டதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. இதற்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தாலும் உள்ளூர் வாசிகள் இக்கதையை பிரபலப்படுத்த விரும்புகின்றனர்.

Mirza Ghulam Ahmad - Jesus in Kashmir

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு அல்லது வேண்டுமென்றே அவர்களுக்கே தெரிந்த சில திட்டங்களுடன், அதற்காக இத்தகைய ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை ஆராய்ச்சி என்ற பெயரில் வந்து, புகைப்படங்கள் பிடித்து, உள்ளூர்வாசிகள் சிலருடன் பேட்டி எடுத்து, ஏதோ புதியதாக கண்டு பிடித்ததைப் போல புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர்[1]. ஒரு இஸ்லாமிய அஹ்மதியா பிரிவின் தலைவர் தான் இந்த கட்டுக்கதைக்கு காரணகர்த்தாவாக தெரிகிறது. உண்மையில் எந்த கிறிஸ்துவ விசுவாசிகள் இத்தகைய கட்டுக்கதையை நம்புவதில்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மேரிமெக்டலின் உடன் தப்பி வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு இங்கு தான் பிறந்து சமாதி ஆனார் என்பது அவர்களுடைய அடிப்படை நம்பிக்கைகளுக்கு அறவே ஒவ்வாதது, அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருப்பினும் ஏன் இத்தகைய போதை பொருட்கள் மற்றும் சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை பரப்பப்படுகின்றன என்பது மிகவும் கவனமாக நோக்கத்தக்கது.Grail myth- books-Subramanian swami- 1

2006ல் குமுதம் பத்திரிக்கையில் வந்த கட்டுக்கதை[2]: ஏற்கெனவே ஆங்கில நாளிதழ்களில் வந்த விவரங்களை “குமுதம்” வெளியிட்டது. ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்றாலே அதிர்ச்சி, பரபரப்புச் செய்திகள்தான். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர், ‘‘ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அங்கேயே இறந்துவிடவில்லை. உயிர் தப்பி காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைத் தழுவி எண்பது வயது வரை வாழ்ந்து, அதன் பிறகே இறந்திருக்கிறார். வரலாற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, ஓர் அறிஞர்கள் ‘குழு’வை வைத்து ஆராய உள்ளேன்’’ என்ற அதிர்ச்சிக் குண்டை வீசியிருக்கிறார். ‘தி டாவின்சி கோட்’ பட சர்ச்சை ஓய்வதற்குள் இப்படியரு விஷயத்தைச் சொல்லியிருக்கும் டாக்டர் சுவாமியைச் சந்தித்தோம். ‘‘கடந்த ஆறாம் தேதி எங்கள் கட்சிப் பொதுக் கூட்டத்திற்காக, காஷ்மீர் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருந்த போது, ‘டாவின்சி கோட்’ பற்றி விவாதம் வந்தது. ‘ஏசுவுக்கு மனைவி உண்டா? இல்லையா? என்ற கலந்துரையாடலின்போது , ஒருவர் சொன்ன தகவல் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதாவது, ‘காஷ்மீரில் ஏசு அவரது மனைவி மற்றும் மோஸஸின் கல்லறை இன்றும் இருக்கிறது. அதைச் சிலர் பராமரித்து வருகிறார்கள்’ என்றார்[3].

Grail myth- books-Subramanian swami- 2

நிக்கோலஸ் நோடோவிட்ச் கட்டுக் கதையை மறுபடி அவிழ்த்து விட்டதேன்?[4]: உடனே நான் அங்கேயிருந்த ஓர் அரசு உயரதிகாரியிடம் பேசினேன். ‘‘லடாக் பகுதியிலுள்ள ‘லே’ என்ற இடத்திற்கு முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில், ஹெமிஸ் கோம்பா  என்ற புத்த ஆசிரமம் உள்ளது. அங்கே தான் ஜீஸஸ் ஆரம்பக்காலத்தில் படித்திருக்கின்றார். யோகா, தியானம் உள்பட பலவும் கற்றுத் தேறியிருக்கின்றார். அதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன’’ என்று சொன்னார். பைபிளிலேயே, ‘ஜீஸஸ் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமில் பிறந்தார். யூத மன்னர்கள் மற்றும் மத குருமார்களுக்குப் பயந்து, பிறந்தவுடனேயே எகிப்துக்குத் தப்பி ஓடினார்கள். பிறகு பத்து வருடங்கள் கழித்துத்தான் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். பத்து வயது முதல் பதினான்கு வயதுவரை ஜீஸஸ் அங்கேயே இருந்தார்’ என்றெல்லாம் உள்ளது. பிறகு, அந்தப் பதினான்கு வயதிலிருந்து அடுத்த ஏழு ஆண்டுகள் அவர் எங்கே சென்றார் என்பது கூறப்படவில்லை. அது மர்மமாக உள்ளது. ஏழாண்டுகள் கழித்து இருபத்தொராவது வயதில்தான் மீண்டும் ஜெருசலேம் செல்கிறார். இடைப்பட்ட ஏழாண்டுகளில் அவர் எங்கே இருந்தார் என்பதுதான் கேள்வி. அந்தச் சமயத்தில்தான் ஏசு இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்கு வந்து பௌத்த மத ஆசிரமத்தில் பலவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு விஷயமும் உள்ளது. ஏசு பிறந்தவுடன் எகிப்துக்குத் தப்பிச் சென்றார்கள் இல்லையா? பத்து ஆண்டுகாலம் அங்கே இருந்த போது, எகிப்திலும் பௌத்த ஆசிரமத்தில் சேர்ந்து கற்றிருக்கிறார்.

Grail myth- books-Subramanian swami- 3

சாமி கட்டுக்கதையை பரப்புகிறாரா, மறுக்கிறாரா?[5]: ஏசு சொன்ன போதனைகளைக் கவனித்தால், அது இந்து, புத்த மதத்தோடு ஒன்றி வருவதைக் காண முடியும். இன்னொன்றையும் கூறலாம் ஏசுவுக்கு முன்பிருந்தவர்களோ அல்லது அவருக்குப் பின்பிருந்த சீடர்களோ அவரைப்போன்று ‘அதிசயங்களை’ செய்யவில்லை. குருடனுக்குப் பார்வையளித்தது, ஊனமுற்றவரை நடக்க வைத்தது, இறந்தவரை உயிர்ப்பித்ததென்று ஏசுதான் செய்தார். இந்த ‘சித்து’ வேலைகளும் இந்தியத் தன்மை கொண்டவையே. அதுமட்டுமல்ல, பைபிளில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு உள்ளது. புதிய ஏற்பாடுதான் ஏசுவின் போதனையைப் பற்றிக் கூறுகிறது. அது கூட ஏசு எழுதியது இல்லை. அவருக்குப் பின் வந்த சீடர் புனித செயிண்ட் பால் என்பவரால்தான் எழுதப்பட்டது. ஏசு சொன்னதாக பால் எழுதியது, எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?’’ மாறுபாடுகள் இருக்கலாம் அல்லவா?’’ என்று விளக்கங்களை முன் வைத்தார் சுவாமி[6].

Grail myth- books-1

பவிஷ்ய புராணம் ஒரு மோசடிபோலி புராணம்[7]: மேலும், ‘‘நமது பழைமையான புராணங்களில் ஒன்றானபவிஷியா மகாபுராணம்என்ற நூலில் கூட, சில சுலோகங்கள் ஏசு போன்ற ஒருவர் பற்றியும் கூறுகின்றன. அதாவது காஷ்மீர் பகுதி மன்னர் ஒருவர், அவரிடம்நீ யார்?’ என்று கேட்பதாக வருகிறது. அதற்கு அவர், ‘நான் கடவுளின் மகன். கன்னிப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஆழ்ந்த இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தலைவன். இடைவிடாத உண்மையைத் தேடுபவன் என்று கூறுவார்கள்என்றும், ‘என் பெயர் ஈஸா_மாஸிஎன்றும் கூறியிருப்பதாக உள்ளது.

பழங்கால காஷ்மீர் மன்னர்களான சாலிவாஹனா மற்றும் கனிஷ்கர் ஆகியோரின் அரசுப் பதிவேடுகள் கூட, ஏசு இங்கே இருந்ததைக் கூறுகின்றன. இப்படித் தெரியவரும் சில ஆதாரங்கள்படி பார்த்தால், ஏசு, காஷ்மீரில்கனியார்என்ற இடத்தில் வாழ்ந்து இறந்து, அடக்கம் செய்யப்பட்டார் எனத் தெரிய வருகிறது.

சுப்ரமணியன் சுவாமி சாமி வேண்டுமென்றே இக்கட்டுக் கதையைக் கிளப்பி பிரபலம் தேடுகிறார் என்றேதெரிந்தது. மேலும், டா வின்சி கோட் கதையைக் கட்டுப் படுத்த, அவ்வாறு கூறியிருக்கலாம், 300 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு தெரியாமலா போயிற்று?

இது ஆதாரபூர்வமானதல்ல. ஆனால், அதற்காக விட்டுவிடாமல், இதில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஒரு நிபுணர்கள் குழு மூலம் இவற்றை ஆராய வேண்டும்.

ஏசு கடைசிக் கட்டத்தில் சிலுவையில் அறையப்பட்டு மரணத்தைத் தழுவிய போது, அவரது உடலில் சுற்றியிருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள் இன்னும் இத்தாலியில் உள்ளடூரின்சர்ச்சில் இருக்கிறது என்கின்றனர். அதுதான் உண்மை என்றால், அதை டி.என்.. சோதனைக்கு உட்படுத்த வேண்டும். காஷ்மீர்லேபகுதியில் உள்ள ஏசுவின் மனைவி சமாதி என்று சொல்லப்படுவதையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்து, டி.என்.. சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

இது ஆதாரபூர்வமானதல்ல. ஆனால், அதற்காக விட்டுவிடாமல், இதில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஒரு நிபுணர்கள் குழு மூலம் இவற்றை ஆராய வேண்டும்.,” என்றெல்லாம் சொல்வதிலிருந்தே, எதிர்மறை பிரச்சாரம் மூலம் கிரூத்துவர்களுக்கு உதவும் போக்கும் வெளிப்படுகிறது.

அதே போன்று சரியான வரலாற்று ஆய்வுகளையும் நடத்த வேண்டும். உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம்’’ என்று முடித்தார் சுவாமி[8].

© வேதபிரகாஷ்

17-03-2019

Grail myth- books-2

[1] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.

[2] THE ASIAN AGE. Tracing the ‘lost’ Israeli roots of Kashmiris, | YUSUF JAMEEL Published : Oct 30, 2017, 6:52 am IST Updated : Oct 30, 2017, 6:54 am IST.

[3] http://www.asianage.com/india/all-india/301017/tracing-the-lost-israeli-roots-of-kashmiris.html

[4] Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.

[5] ZeeNews, New interest in j&k ‘Jesus grave’: The Asian Age, Updated:Jun 12, 2006, 00:00 AM IST

[6] https://zeenews.india.com/home/new-interest-in-jandk-jesus-grave-the-asian-age_301657.html

[7] Sam Miller,  Tourists flock to ‘Jesus’s tomb’ in Kashmir, Srinagar, Page last updated at 12:08 GMT, Saturday, 27 March 2010.

[8] http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/8587838.stm

சாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமென்ட் அடுக்கு கல்லறை: ரகசியமாக குடியிருப்புப் பகுதிகளில் பிணங்கள் புதைக்கப் படுவது!

திசெம்பர் 28, 2018

சாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமென்ட் அடுக்கு கல்லறை: ரகசியமாக குடியிருப்புப் பகுதிகளில் பிணங்கள் புதைக்கப் படுவது!

St Alphonsa Syro-Malabar Catholic Church, Pozhichallur

சாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமின்ட் அடுக்கு கல்லறை[1]: ஆறு மாதங்களுக்கு முன்புதான் சாலவாக்கத்தில் எலும்பு தாமஸின் இறந்தவர்களின் உடல் கான்கிரீட் கலவைகளில் வைத்து அடக்கம் செய்யப்படுவதாகவும் அவற்றின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் பதிவேடுகளில் குறிப்பிடாமல் இருந்தன போன்ற புகார்கள் எழுந்து, ஊடகங்களில் அதிரடியாக செய்திகளாக வெளிவந்தாலும், அதே வேகத்தில் அவை அமுங்கி விட்டன. ஆனால் இப்பொழுது அதே போன்ற ஒரு காங்கிரீட் அடுக்கு சமாதி அமைப்புகளில் இறந்தவர்களின் உடல்கள் சர்ச்சின் வளாகத்திலேயே அமைக்கப்பட்டு புதைக்கப் படுகின்றன என்று தெரியவந்துள்ளது. செயின்ட் அல்போன்சா சிரிய மலபார் கத்தோலிக்க சர்ச் எனப்படுகின்ற அது பொழிச்சலூரில் உள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பொழிச்சலூர் விநாயகர் கோவில் தெருவில் அந்த சர்ச் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை 26 ஆம் தேதி வளாகத்தில் ஒரு பிணத்தை உள்ளே எடுத்துச் சென்றதை அங்கிருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால், அவர்களுக்கு திகைப்பு ஏற்பட்டு, போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த விவரம் சமூக ஊடகங்களில் பரவியதால் அன்று மாலையிலேயே அங்கு கூட்டம் கூடியது.

St Alphonsa -Pozhichallur-concrete vault-News Today

குடியிருப்புப் பகுதியில் ரகசியமாக கல்லறையில் பிணங்கள் புதைத்தது: கடந்த 18-12-2018ம்-தேதி உடல் நலம் இல்லாமல் இறந்த பம்மலை சேர்ந்த லோனப்பன் (வயது72) என்பவர் உடலை இங்கு அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது[2]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் தாம்பரம் கோட்டாச்சியர் மற்றும் பல்லாவரம் தாசில் தார் அலுவலகத்தில் புகார் செய்தனர்[3]. வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதியில், அவ்வாறு உடலை புதைக்க எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அதில் இருந்த உடலை போலீசார் வருவாய்துறையினர் அப்புறப்படுத்தினர்[4]. சர்ச்சில் அடுக்கு கல்லறை அமைத்து இறந்தவர் உடலை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 26-12-2018 அன்று மாலை வருவாய்துறையினர் மற்றும் சங்கர் நகர் போலீசார் சர்ச்சிற்கு திடீர் சோதனை நடத்த வந்தனர். அப்போது சர்ச்சின் பின்பகுதியில் உள்ள அறை ஒன்றில் உடல்களை உள்ளே வைத்து அடக்கம் செய்யும் வகையில் அடுக்கு கல்லறை கட்டப்பட்டிருந்தது. அதில் லோனப்பன் உடலை வைத்து சிமெண்டால் பூசியதும் தெரியவந்தது.

St Alphonsa Syro-Malabar Catholic Church, Pozhichallur-concrete vault

அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைப்பது: உரிய அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைக்க கூடாது என வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சர்ச் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த அடுக்கு கல்லறையில் இருந்து லோனப்பன் உடலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் வெளியில் எடுத்து பொழிச்சலூர் பகுதியில் வழக்கமாக கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்யும் கல்லறைக்கு கொண்டு சென்றனர்.  இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய அனுமதி இல்லாமல்அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்க கூடாது எனவும் வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொழிச்சலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

St Alphonsa Syro-Malabar Catholic Church, Pozhichallur- body burried

கத்தோலிக்க கிருத்துவர்கள் தமிழ்மலையாளம் என்று தனித்தனி சர்ச்சுகள் கட்டிக் கொள்வது ஏன்?: அப்போது அங்கே இருக்கும் ஒரு நபர்[5], “இது மலையாளத்து ரோமன் கத்தோலிக்க சர்ச், அவர்களும் ரோமன் கத்தோலிக்கர் என்றாலும் தமிழ் கிறிஸ்தவர்களிருந்து மாறுபட்டு இருக்கிறார்கள் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே சர்ச்சில் வழிபாடு செய்து வந்தார்கள். ஆனால் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் மொழி பேசும் கிருத்துவர்களிடம் கிரியைகள் விஷயமாக வேறுபாடுகள் ஏற்பட்டதும் அவர்கள் தனியாக இந்த சர்ச்சை கட்டிக்கொண்டார்கள். அதன்படி அவர்களில் இறப்பவர்களை சர்ச்வளாகத்திலேயே புதைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்”. கேரளத்தில் கூட அவ்வாறு செய்யப்படுகிறது[6]. ஆனால் இவ்வாறு ரோமன் கத்தோலிக்கர் என்று சொல்லிக்கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து சர்ச்சுகளை கட்டிக்கொண்டு, தனித்தனியாக இறந்தவர்களை புதைத்து கொண்டே போனால், இருக்கும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளில் எவ்வாறு அனைவருக்கும் உடலை புதைக்க இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆகவே இது உண்மையிலேயே நம்பிக்கையின் மீது செய்யப்படுகின்ற செயலா அல்லது மொழியி ரீதியில் அடிப்படைவாதத்தை தோற்றுவித்து மக்களை பிரிக்கும் போக்கா அல்லது இடத்தை ஆக்கிரமிக்கும் திட்டமா என்று உன்னிப்பாக நோக்கவேண்டியுள்ளது.

St Alphonsa -Pozhichallur-concrete vault-Deccan Chronicle

தாசில்தார் புதன் மாலை சோதனை இட்டது: இந்நிலையில் அந்த சர்ச்சின் சேர்மன் ஜூஸ் மற்றும் பொறுப்பாளர் ஜியோ என்ற இருவரும் தலைமறைவாகியுள்ளனர்[7]. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர் உள்ளூர்வாசிகள் காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையாவிடம் மனு கொடுத்தனர். இதனால், தாசில்தார் தலைமையில் தாம்பரம் ஆர் டி மற்றும் இதர அதிகாரிகள் புதன்  மாலை சர்ச்சுக்கு வந்து சோதனையிட்டனர்[8]. சங்கர் நகர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தனர்/ உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர்[9]. உரிய அனுமதி இல்லாமல், அந்த சிமென்ட் புதையிடம் கட்டப் பட்டுள்ளதாக தெரிந்தது[10]. இருப்பினும், இந்த நடவடிக்கை எல்லாம் தொடர்ந்து எடுக்கப்படுனா, அந்த ஜோஸ் மற்றும் ஜியோ கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களிடம் முறையாக விசாரணை கொள்ளப் படுமா அல்லது சாலவாக்கம் எலும்பு தாமஸ் வழக்கு போல, அப்படியே அமுக்கப்படுமா என்று மக்களுக்கு சந்தேகமாகவே உள்ளது.

Christian cremation - orde of the dau 2018

கிருத்துவர்களின் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டு மற்றும் தகனம் செய்யப் படுவது: 1963 ஆம் ஆண்டிலேயே போப் பால் – VI [Pope Paul VI] தகனத்திற்கு எதிராக இருந்த தடையை நீக்கி, ஆணையைப் பிறப்பித்தார்.  இருப்பினும் இந்திய கத்தோலிக்கர் அதனை 56 ஆண்டுகள் ஆகியும், இன்று வரை அதனை பின்பற்றாமல் இருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மேனாட்டு கிருத்துவர்கள், தகனத்தை ஏற்றுக்கொண்டு ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. அவர்களின் கணக்குப்படி உடலை புதைப்பதை விட எரிப்பதால் செலவு மிகவும் குறைவாகவே உள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றனர். உதாரணத்திற்கு புதைப்பதற்கு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கிரியைகள் செய்வதற்கு, சுமார் 10,000 டாலர் அதாவது ரூ. ஏழு லட்சம் வரை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் தகனம் செய்வதற்கு சுமார் 500 டாலர் முதல் 2000 வரை அதாவது சுமார் ரூ.5 ஆயிரம் முதல் 15,000/- வரை செலவு செய்தால் போதும்[11]. அதனால் உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் கிருத்தவர்கள் எல்லாருமே தங்களுடைய உடல் புதைக்கப்பட வேண்டும் என்றால் அதற்காக எத்தனை செலவாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இறந்தபிறகு செலவு செய்து பட முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

Dr William Price - On January 23, 1893

எரிக்கும் முறை எப்பொழுது வந்தது?: கிறித்துவத்தில் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது முன்னமே குறிப்பிட்டது படி 1963ல் போப் பால் – VI இந்த தடையை நீக்கினார் என்று தெரிகிறது[12]. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளைப் பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலங்களில் புதைக்கும் பழக்கம் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடல்களை எரிக்கும் பழக்கம்மும் இருந்து வந்தது. எனினும், சட்டரீதியாக குறிப்பிடும்போது, அவர்கள் மருத்துவர் வில்லியம் பிரைஸ் என்பவரின் வழக்கை முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்கள் 1883-84 காலகட்டத்தில் அந்த வில்லியம்ஸ் என்பவர் ஒரு மருத்துவராக இருந்தார். அவர் தனது குழந்தைக்கு ஏசு கிருஸ்து பிரைஸ் என்று பெயரிட்டார். ஆனால் குழந்தை பிறந்த சில காலத்தில் வலிப்பு நோய் வந்து இறந்து விட்டது. இதனால் அக்குழந்தை அவரது கிராமத்தின் அருகில் இருந்த ஒரு மலை மீது இதனை கவனித்த கிராம மக்கள் அதனை தடுத்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனால் நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்பட்ட அவர், தனக்கு தானே வாதாடினார். நீதிமன்றத்தில் குறிப்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன[13]:

  1. ஜனவரி 13 அன்று மத நம்பிக்கைக்கு-சட்டத்திற்கு புறம்பாக, தெரிந்தும் இவ்வாறு தகாத முறையில் ஒரு பிறந்த குழந்தையின் உடலை எரியூட்ட முனைந்துள்ளார்.
  2. இறந்த உடலுக்கு மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
  3. அவர் அவர் உடலை தகனம் செய்ய முற்பட்டபோது அவருக்கு ஒரு தடுப்பாணையும் கொடுக்கப்பட்டது.

 1884 பிப்ரவரி மாதத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது, தன்னுடைய நிலையை தானே விளக்கி வாதிட்டார். இறுதியில் தனது விருப்பத்தை கூற பணித்த போது, அவர் சொன்னது. “நான் இறக்க நேரிடும் போது, என்னுடைய உடலை யாராவது எரிக்க முன்வராவிட்டால், பிறகு ஆண்டவனின் ஆசிவாதத்துடன், நானே உயிர்த்தெழுந்து வந்து, எனது உடலை நானே எரித்துக் கொள்வேன்.” இவ்வாறு சொன்னதும் ஜூரி குழுவில் அமைந்திருந்த நீதிபதிகள்  அமைதியானார்கள். தமக்குள் ஆலோசனை செய்தும் விவாதித்துக் கொண்டார்கள். முடிவில், பிரஸை விட்டுவிட்டார்கள். ஜனவரி 23, 1893 அன்று இறந்தபோது, அவர் முறையாக கிரியைகளுடன் தகனம் செய்யுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது, செய்தது[14].

© வேதபிரகாஷ்

28-12-2018.

Dr William Price - On January 23, 1893-2 clear-full photo

[1] ஆங்கிலத்தில் பதிவு செய்த கட்டுரையைத் தழுவியது – Vedaprakash, Catholic burial vault in Chennai: As it is Residential area, Body exhumed and buried again in burial grounds!, https://indiainteracts.wordpress.com/2018/12/28/catholic-burial-vault-in-chennai-as-it-is-residential-area-body-exhumed-and-buried-again-in-burial-grounds/

[2] தமிழ்.ஒன்.இந்தியா, பல்லாவரம் அருகே பரபரப்பு.. சர்ச்சுக்குள் புதைக்கப்பட்ட உடல்.. போலீஸ் குவிப்பு!, By Alagesan | Updated: Thursday, December 27, 2018, 15:59 [IST]

[3] https://tamil.oneindia.com/news/chennai/dig-up-the-body-from-the-grave-near-pallavaram/articlecontent-pf344475-337462.html

[4]இந்த வீடியோவிலும் விவடங்களை காணலாம் –  https://www.youtube.com/watch?v=_oyi2zc36Ew

[5] NewsToday, Corpse found inside Church in Chennai; Chambers built to store bodies, Posted on December 27, 2018 by P T Usha

[6] https://newstodaynet.com/index.php/2018/12/27/corpse-found-inside-church-in-chennai-structures-built-to-store-bodies/

 

[7] Indian Express, Unauthorised multi-tier vault sealed in church premises in Chennai sburbs, by Sahaya Novinston, December 26, 2018 03:35 pm; Updated December 26, 2018 03:35 pm.

[8]  http://www.newindianexpress.com/cities/chennai/2018/dec/27/unauthorised-multi-tier-vault-sealed-in-church-premises-in-chennai-suburbs-1917220.html

[8] https://thefrisky.com/burial-or-cremation-what-is-the-right-choice/

[9]  DECCAN CHRONICLE, Chennai: Church officials in spot for illegal disposal of dead, Published Dec 27, 2018, 4:39 am IST, Updated Dec 27, 2018, 4:39 am IST

[10] https://www.deccanchronicle.com/nation/current-affairs/271218/chennai-church-officials-in-spot-for-illegal-disposal-of-dead.html

[11] The Frisky, Burial or Cremation – What is the Right choice, Danielle Granger, December 17, 2018.

[12]  https://thefrisky.com/burial-or-cremation-what-is-the-right-choice/

[13] Times of Malta, The trial that led to cremation’s legalisation in the UK,  Sunday, December 9, 2018, 11:34.

[14] https://www.timesofmalta.com/articles/view/20181209/life-features/the-trial-that-led-to-cremations-legalisation-in-the-uk.696309

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட ரகசியம், மறைக்கப் படும் விவரங்கள், தொடரரும் மர்மங்கள் [4]

திசெம்பர் 3, 2018

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட ரகசியம், மறைக்கப் படும் விவரங்கள், தொடரரும் மர்மங்கள் [4]

 

பைபிளை வைத்துக் கொண்டு, ஏன் வெறிபிடித்து அலைய வேண்டும்?: இரண்டு அமெரிக்க இருத்துவ மிஷினரிகள் தான், இவனைத் தூண்டியிருக்க வேண்டும் என்ற செய்தி வந்துள்ளது[1]. அந்த சென்டினல் மக்கள் ஏதோ நாகரிகமற்ற, நரமாமிசம் புசிக்கும் காட்டு மிராண்டிகள் என்றெல்லாம் ஜான் ஆலன் சௌவை நினைக்க செய்துள்ளனர்[2]. அதனால், அவர்களை எப்படியாகிலும் மாற்றுவேன் என்று, விசுவாசியாக, அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளான். இத்தகைய மனப்பாங்கு, கிருத்துவர்களை, ஒரு நோய் போல பிடித்து ஆட்டுகிறது. தாம் பைபிளில் இருப்பதை சொல்லி, அவர்கள் புத்திசாலித்தனம் அடைந்து, உய்யப் போகிறார்கள், சொர்க்கத்திற்கு போகப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதனால் தான் ஜான் ஆலன் சௌவும் வெறி பிடித்தது போல, அங்கு செல்லத் துடித்து, சென்றிருக்கிறான். பிறகு அவன் எப்படி இறந்தான் என்று தெரியவில்லை. உடலே கிடைக்காததால், பலவிதமான யூகங்களை சொல்லி வருகிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற ரீதியில் “shot dead” என்று தல்லைப்பிட்டு செய்தி போட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

நரமாமிசம் சாப்பிட்டவர்கள் யார்?: சென்டினல் தீவு மக்களை ஜான் ஆலன் சௌ தவறாக-திமிராக நினைத்துக் கொண்டு பாவித்தது தான், அவன் செய்த பெரிய குற்றம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன[3]. சென்டினல் மக்கள் நரமாமிசம் புசிப்பவர் என்ற கருத்தையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை ஊடகங்கள் கண்டித்துள்ளன[4]. இடைக்காலம் வரை ஐரோப்பியரே பழங்குடிகளாக இருந்து மனித மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதனால், அத்தகைய எண்ணம் கொண்டனர்! கிருத்துவராகியும், மனோபாங்கு மாறவில்லை, ஏனெனில், யூகாரிஸ்ட், அவர்களது நம்பிக்கையை வளர்த்து-இருக்கி நாகரிகத்தில் மறைத்து வைத்தது. யூகேரிஸ்ட் என்பது, பலியின் போது கொடுக்கும் ரொட்டியும், சாராயமும், ஏசுகிருத்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாகும் என்ற நம்பிக்கை ஆகும். ஆவ்வாறு நம்பாதவன் கிருத்துவன் ஆக மாட்டான்.

நாகரிகமாக இருப்பது யார், பழங்குடிகளா, அமெரிக்கஐரோப்பியரா?: அமெரிக்க-ஐரோப்பிய பப்புகளில், நிர்வாணமாக குடித்து ஆடும் பெண்கள்-ஆண்கள், புரோனோகிராபிக் வகையறாக்கள் நாகரிகம் பற்றி பேசுவது வேடிக்கையாகும். அவர்கள், சென்டினல் தீவு மக்களின் ஆடை அணிவது-அணியாதது பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. இடைக்காலம் வரை ஐரோப்பியர் உடை அணியாமல், உடம்புகளில் வண்ணம் பூசிக் கொண்டு காடு-மலைகளில் அலைந்து-திரிந்து கொண்டிருந்தனர். பல நாடுகளுக்குச் சென்று, அவர்களது நாகரிகத்தைக் கண்ட பிறகு தான், தாம் எந்த அளவுக்கு பிறப்பட்டு இருக்கிறோம் என்று அறிந்து கொண்டனர். உடனே, 18-19ம் நூற்றாண்டுகளில் ஒரேயடியாக புரட்சிகள் ஏற்பட்டு முன்னேறி விட்டனர்.    

ஆணைஆணை விரும்புவது, ரசிப்பதுஓரின சேர்க்கை முதலியன: மொரைஸ் விடால் போர்ட்மேன் [Maurice Vidal Portman] என்ற கடற்படை அதிகாரி, இருபது வருடங்களாக சென்டினல் மக்களுடன் வாழ்ந்து, இருந்தான் என்று தெரிகிறது[5]. அவன் அவர்களது கட்டு மஸ்தான உடல்வாகு, அமைப்பு முதலியவற்றைக் கண்டு, ஆச்சரியப் பட்டானாம்[6]. கிரேக்க சிற்பங்களில் சித்தரிக்கப் பட்டது போன்ற மக்களை அவ்வன் எங்குமே பார்த்ததில்லை. ஆனால், இங்கு, இவர்களைப் பார்த்துத் திகைத்து விட்டான். அவர்களை கடத்திச் சென்று[7], நிர்வாண கிரேக்க சிற்பங்களைப் போல [mock-Greek homoerotic compositions] நிற்க வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளான்[8]. அதாவது ஆணை-ஆணை விரும்புவது, ரசிப்பது என்பது, கிரேக்கத்தில் உள்ளது. மேனாட்டு நாகரிகம் தங்களுக்கு மூலம் என்று சொல்லிக் கொள்வதால், அந்நாகரிகம் எங்கு தோன்றியது என்று கடந்த 300 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் காணாமல் போன்ற 12 பழங்குடிகளை தேடுவதும் இவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. அதனால், அவர்களின் உடலைப் பார்த்து சொக்கியுள்ளான். பிறகு, உடல் அங்கத்தின் ஒவ்வொரு பகுதியினையும் அளந்து பார்த்துள்ளான்[9]. அந்த செக்ஸ்-புகைப்படங்கள் [homoerotic compositions] ஜான் ஆலன் பார்த்து, ஆசை பட்டு அங்கு போக துடித்திருக்கலாம்[10]. அதுவே அவனது இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த ஆங்கில ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[11].

ஜான் ஆலன் சௌ, அத்தகைய நிர்வாண புகைப்படங்களைப் பார்த்து மயங்கிச் சென்றானா?: கிருத்துவத்தைப் பொறுத்த வரையில் இதெல்லாம் ஒன்றும் புதியதல்ல. பைபிளிலேயே அத்தகைய உதாரணஙகள் உள்ளன, அவற்றை வேதவாக்காகக் கொண்டு கடைபிடித்து வருகின்றனர். பிடோபைல்-குழந்தை கற்பழிப்பு பற்றி சொல்ல வேன்டிய அவசியம் இல்லை. இந்தியாவில், நூற்றுக் கணக்கான வழக்குகள் உள்ளன. கன்னியாஸ்திரிக்களை புணர்வது என்பதும், ஒரு பிஷப் மூலம் வெளிப்பட்டு விட்டது. இந்நிலையில், ஜான் ஆலன், அத்தகைய சொர்க்கத்தை நோக்கிச் சென்றான் போலும். தனக்கு விரும்பியது கிடைக்காதலால், அதனை “சாத்தான் வாழும் இடம்”  என்றும் வர்ணித்தான் போலும்! இந்த ஆள், அத்தகைய ஓரின செக்ஸ் புகைப்படங்களை எடுத்தான், இது ஜானை தூண்டியிருக்கலாம்! ஒருவேளை ஜான் அவ்வாறு செய்திருந்தால், அவன் மூலம் புது நோய் பரவும், அதனால் தான், அவன் உடலை கொண்டு வராதே என்கின்றனர்! வெளிப்படையாக அவன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டானா அல்லது அதனால் வெகுண்ட மக்கள் அவனைக் கொன்றார்களா என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், ஆங்கில ஊடகங்கள் “TRIBAL TORTURE Royal Navy explorer’s creepy sex pics of Sentinelese tribe may have led to death of John Allen Chau” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள்! ஆமாம், எங்கே இந்துத்துவவாதி, கிருத்துவயியல் பண்டிதர்கள்? ஏன் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை? அந்தமானுக்கு போய்விட்டார்களா?

பழங்குடிகள் கிருமிகளால் அழிந்து விடுவார்களா?: மருத்துவ ரீதியாக இது எந்தளவுக்கு உண்மை என்பது பற்றி விளக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத்துறைப் பேராசிரியர் ரகுநந்தனன்[12], “பழங்குடி மக்களுக்குக் காட்டில் இயற்கையாகச் சூரிய ஒளி  நேரடியாகக் கிடைக்கிறது. சுத்தமான காற்றை சுவாசித்து வருகிறார்கள். நல்ல சுகாதாரமான தண்ணீரைக் குடித்து வாழ்கிறார்கள். இயற்கையான காய்கறிகள், பழங்கள் போன்றவை அங்கே கிடைக்கின்றன. அதைச் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான உடலமைப்புடன் இருக்கிறார்கள். காட்டில் நோய்களை உண்டாக்கக்கூடிய கிருமிகளும் குறைவாகத்தான் இருக்கும். அதனால், வெளியில் இருந்து யாராவது உள்ளே செல்லும்போது செல்பவர்களிடமிருந்து அவர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. நம்மைப் போன்று நோய்களுக்கான தடுப்பூசிகளும் அவர்கள் போட்டுக்கொண்டதில்லை. அதனால், மிகவிரைவாக நோய்கள் தாக்கிவிடும். அவர்களின் உணவுமுறை, மருத்துவமுறையும் நமக்குத் தெரியாது. அவர்கள் காட்டை விட்டு வெளியில் வந்தாலும் உடல் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதேபோல் வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்களுக்கும் ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி முறையாகத் தெரிந்துகொண்டு அவர்களை அணுகுவதே நல்லது,” என்கிறார் பேராசிரியர் ரகுநந்தனன்[13].

© வேதபிரகாஷ்

03-12-2018


[1] The Scroll.in, Andaman Police say two missionaries may have encouraged US man to illegally enter isolated island, Scroll Staff, 01-12-2018, · 12:22 pm

[2] https://scroll.in/latest/904231/andaman-police-say-two-missionaries-may-have-encouraged-us-man-to-illegally-enter-isolated-island

[3] The Daily Signal, John Allen Chau’s Crime Was Wanting to Promote ‘Wrong’ Beliefs, Katrina Trinko / @KatrinaTrinko / November 30, 2018.

[4] https://www.dailysignal.com/2018/11/30/john-allen-chaus-crime-was-wanting-to-promote-wrong-beliefs?fbclid=IwAR021hrR3wpk8P64T5rl58rtQHVoKkxcyDJyKoVHQpI6zizLZwBrYZmg-GU

[5] News.com.au, Creepy antics of British naval officer over 100 years ago had a profound impact on lost tribe, Ben Graham@bengrahamjourno

[6] India Today, Kidnappings once happened on Andaman island where John Chau died. What happened next,  November 23, 2018, UPDATED: November 23, 2018 20:19 IST

[7] https://www.indiatoday.in/india/story/andaman-sentinelese-maurice-vidal-portman-john-chau-1395021-2018-11-23

[8]  “He indulged his passion for photography by kidnapping members of various tribes and posing them in mock-Greek homoerotic compositions………..During his 20 years in a sexualised heart of darkness, Portman measured and catalogued every inch of his prisoner’s bodies, with an obsessive focus on genitalia.”

[9] https://www.news.com.au/travel/travel-updates/creepy-antics-of-british-naval-officer-over-100-years-ago-had-a-profound-impact-on-lost-tribe/news-story/1d6b9e58f92a43f1232a5363c8899b1d

[10] The Sun,TRIBAL TORTURE Royal Navy explorer’s creepy sex pics of Sentinelese tribe may have led to death of John Allen Chau, , By Aletha Adu and James Cox, 1st December 2018, 10:22 pm; Updated: 2nd December 2018, 3:10 am

[11] https://www.thesun.co.uk/news/7876723/sentinelese-john-allen-chau-maurice-vidal-portman-sex/

[12] விகடன் , `சென்டினல்கள் ஏன் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்..?’, இரா.செந்தில் குமார் இரா.செந்தில் குமார், வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (29/11/2018) கடைசி தொடர்பு:19:53 (29/11/2018)

[13] https://www.vikatan.com/news/health/143445-why-the-sentinels-are-attacking-the-outsiders.html

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [3]

நவம்பர் 28, 2018

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [3]

John Chau -illegal entry-body not traceable

ஜெருசலேத்திற்குச் சென்று அடிப்படைவாதியாகி விட்டானா?: ஒரு கிருத்துவ சுற்றுலா நிறுவனம், ஜான் சௌ ஜெருசலத்திற்கு ஆகஸ்ட் 2015ல் சென்றிருந்த போது, “ஹோலோ காஸ்ட்டிலிருந்து தப்பித்தவன்” [holocaust survivor] ஒருவனை சந்தித்துப் பேசியதாக சொல்கிறது[1]. அதாவது யூதர்களை ஜெர்மானிய நாஜிப் படை துன்புருத்திய போது, அந்த குரூர தண்டனைகளிலிருந்து தப்பித்தவனுடன் பேசிய போது, கடவுளின் மகிமையை உணர்ந்து கொண்டானாம். “இந்த புனித யாத்திரை எனது கண்களை முழுவதும் திறந்து விட்டது. எனக்கு உண்மையினை உணர்த்தி விட்டது. இப்பொழுது ஏசு இருந்திருந்தால், என்னுடைய வயது தான் இருந்திருக்கும்,” என்றெல்லாம் விவரித்து அந்த சுற்றுலா நிறுவனத்தின் இணைதளத்தில் பதிவு செய்தான்[2]. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக-இணைதளங்களிலும், தனது ஜெருசலேம் பிரயாண புகைப்படங்கள் முதலியவற்றை போட்ட்டுள்ளான். இப்படி பட்ட விசுவாசமான ஊழியனைக் கொன்றுவிட்டதால், சில மிஷினரி நிறுவனங்கள் பொங்கி அறிக்கை விட்டன[3]. வில்லியம் ஸ்டார்க் [William Stark, ICC’s regional manager] அமைப்பின் சார்பில் சொன்னது –  “நாங்கள் அமெரிக்க மிஷனரி இந்தியாவில் கொலை செய்யப்பட்டதற்கு மிகவும் கவனமாக இருக்கிறோம்……இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றெல்லாம் சொல்லியிருக்கிறது[4].

John Chau -rejected by sentinel

சென்டினல் தீவு மக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது: கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது. சென்டினல் மக்களை இதுவரை சந்தித்த ஒரே நபர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். கடந்த 1960களில் அங்குச் சென்றுவந்துள்ளார். அப்போது 90 பழங்குடிவரை வாழ்ந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு, சென்டினல் இன மக்களின் மக்கள் தொகை 40 என்று தெரியவந்தது[5]. இப்படி ஊடகங்களில் மாறுபட்ட விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. உலகின் மற்ற இடங்களுடனும் நபர்களுடனும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறையிடம் மீனவர்கள், ‘சென்டினல் தீவில், ஜான் தரையிறங்கியவுடன், அங்கிருந்த பழங்குடியினத்தவர்கள், அவரை வில் மற்றும் அம்பு கொண்டு தாக்கினர். அதன் பிறகு அவரை நாங்கள் பார்க்கவில்லை‘ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளது தெரிய வந்தது[6].

Pauline Hanson supports Sentinelese tribe's 'beautiful' culture, immigration policy

மானுடவியலாளர் டி.என். பண்டிட் கூறுவது[7]: நார்த் சென்டினல் தீவுக்குள் வெற்றிகரமாகத் தனது குழுவினர் 20 பேருடன் சென்றுவந்தவர் மானுடவியலாளர் டி.என். பண்டிட். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. அவர் சென்டினல் பழங்குடிகள் குறித்துக் கூறியதாவது: அந்தமானில் உள்ள இந்திய மானுவியல்துறையில் பணியில் இருந்தபோது கடந்த 1967-ம் ஆண்டு 20 பேர் கொண்ட குழுவாக நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றோம். நாங்கள் சென்றநேரம் யாரும் இல்லை என்பதால், காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் வரை நடந்தோம். அங்கு 18 குடிசைகள் வரை கட்டப்பட்டு இருந்தன. ஒரு குடிசையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. யாரே சிலர் சமையல் செய்து கொண்டிருந்து. மீன்களும், மாமிசத்தையும் தீயில் வாட்டிக்கொண்டிருந்தனர். பழங்களும் அந்த வீட்டில் இருந்தன. அவர்கள் எந்த உடையும் அணியவில்லை, இலைகளையும், மரத்தின் குச்சிகளையும் கோர்த்து ஆடைகளாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், நாங்கள் இருந்த ஒருமணிநேரத்தில் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. ஆனால், நார்த் சென்டினல் மக்கள் வருவதை அறிந்து நாங்கள் மீண்டும் படகில் ஏறிக்கொண்டு, அவர்களின் அம்பு வராத தொலைவுக்கு நின்று கொண்டு, தேங்காய்களையும், சில சமையல் பாத்திரங்களையும் தூக்கிவீசினோம். அவர்களுடைய மொழி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதைப் புரிந்துகொள்ள முடியாது. நான் பார்த்தவரை 90 வரை பேர் வாழ்ந்திருப்பார்கள். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது .சென்டினல் பழங்குடிமக்களைப் பொறுத்தவரை வெளியில் இருந்து வருபவர்கள் யாரையும் கைதிகளாகப் பிடிப்பதில்லை. தங்கள் பகுதிக்குள் வரும் மக்களை எச்சரிக்கிறார்கள், யாரையும் கொல்வதில்லை. யாருடைய இடத்தையும் ஆக்கிரமிப்பதில்லை. அவர்கள் கேட்பதில்லொம் “ எங்களைத் தனியாக விடுங்கள்” என்பது மட்டும்தான். வெளியுலக மக்களின் வருகையை அவர்கள் சிறிதுகூட விரும்பவில்லை. இவ்வாறு பண்டிட் தெரிவித்தார்[8].

Sentinel satans strongghold

மர்மங்கள் விலகுமா?:  இருப்பினும், அவனைப் பற்றிய பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லாமல் இருக்கின்றன:

  1. ஜான் சௌ இறப்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள்-உண்மைக்கள் ஏன் மறைக்கப் படுகின்றன? சட்டங்களை மீறி அவன் அங்கு எப்பட்டி சென்றான்?
  2. ஜான் சௌ இறந்தது அந்தமான் போலீஸுக்குத் தெரியவில்லை, ஆனால், அவனது தாயாரின் ஈ-மெயில் மூலம் அமெரிக்க தூதரகம் அறிந்திருக்கிறது.
  3. அந்தமான் போலீஸ், பிறகு ஏழு மீனவர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது, ஏனெனில், அவர்கள் தான் ஜானை அங்கு அழைத்துச் சென்றனராம்!
  4. சென்டினல் தீவில் பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தவர்கள்இருக்கிறார்கள், யாரும் அங்கு செல்லக் கூடாது என்ற நிலை.
  5. கடவுள் தான், எங்களை கடற்கரை காவலர்கள் மற்றும் இதர கண்காணிப்பாளர்களிலிருந்தும் மறைத்துக் கூட்டிச் சென்றார், என்றான் சௌ!
  6. நீரால் பாதிக்கப்படாத பைபிளை ஜான் சௌ எடுத்துச் செல்ல, அதில் அம்பு தைத்ததாம், ஆனால், இவன் தான் இறந்து விட்டானாம்!
  7. யாரிந்த ஜான் சௌ? ஊரைச் சுற்றுபவன், உல்லாசி, சுற்றுலா பயணி, கால் பந்து ஆடுபவன், அரைகுறை மருத்துவன், கிருத்துவ மிஷினரி.
  8. ஜெருசலேம் யாத்திரைச் சென்று, பக்தியில் மூழ்கி, ஊறி தானே ஏசு கிறிஸ்து [அவருக்கும் அதே வயது] என்று சொல்லிக் கொண்டானாம்!
  9. அப்படியென்றால், இனி சாத்தான் தான் தரிசனம் தரவேண்டும், ஆமாம், அந்த சென்டினல் தீவை சாத்தானின் இருப்பிடம் என்றான்!
  10. ஜான் சௌ உடல் கிடைக்கவில்லை, அவனது தாயார் அவன் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்! உயிர்த்தெழுந்து வரலாமோ?

 

© வேதபிரகாஷ்

28-11-2018

John Chau -Satanic sentinel

[1] Times of Israel, American missionary killed in India ‘grasped the humanity of Jesus’ in Israel, By TOI STAFF and AGENCIES, 22 November 2018, 12:01 pm

[2] https://www.timesofisrael.com/american-missionary-killed-in-india-grasped-the-humanity-of-jesus-in-israel/

[3] South China Morning Post, Why are they so angry’: US man John Allen Chau, killed by remote Sentinel Island tribe, was trying to convert them to Christianity, Novemver 24, 2018.

[4] https://www.scmp.com/news/asia/south-asia/article/2174420/why-are-they-so-angry-us-man-john-allen-chau-killed-remote – comments

[5] என்டிடிவி.தமிழ், அமெரிக்க சுற்றுலா பயணி அந்தமான் தீவில் கொலைதிடுக்கிடும் பின்னணி!, Edited By Debanish Achom | Updated: November 21, 2018 12:48 IST

[6] https://www.ndtv.com/tamil/an-american-tourist-was-killed-by-a-protected-tribe-in-the-andaman-and-nicobar-islands-1950929

[7] தமிழ்.இந்து, நார்த் சென்டினல் தீவில் எத்தனைப் பழங்குடியினர் வசிக்கிறார்கள்?– அங்கு சென்றுவந்த மானுடவியலாளர் சொல்வது என்ன?, Published : 26 Nov 2018 16:33 IST; Updated : 26 Nov 2018 16:33 IST

[8]  https://tamil.thehindu.com/india/article25597513.ece

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [2]

நவம்பர் 28, 2018

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [2]

Andaman tribes killed missionary - 21-11-2018.2

ஜான் ஆலன் சௌ பற்றிய விவரங்களை அம்மெரிக்கத் தூதரகம் கொடுக்க மறுத்தது / மறுப்பது ஏன்?: வடக்கு சென்டினல் தீவில் உள்ள அலனின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பழங்குடியினத்தவருக்கான தேசிய ஆணையம், அலன் கொலை சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையையும், வெளிநாட்டினர் உள்ளிட்ட பிறர் செல்ல தடை விதிக்கப்பட்ட தீவுகள் குறித்த விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான்- நிகோபார் தீவு நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.    “அந்த தீவில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் நிற்கிறோம். ஆனால், இன்னமும் ஜான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு இன்னமும் சில நாட்கள் ஆகலாம்” என்று ஏ.எஃப்.பி [AFP] செய்தி முகமையிடம் கூறியுள்ளார் அந்தமான் நிக்கோபர் தீவின் தலைமை இயக்குநர் தேவேந்திர பதக். நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பதில் உதவுவதற்கு அவர்கள் மானுடவியலாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பழங்குடி நல அலுவலர்கள் உள்ளிட்ட கள வல்லுநர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். எவ்விதத்திலும் அவர்களையோ, அவர்களது வாழ்விடத்தையோ தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தேவேந்திர பதக் கூறியுள்ளார். அதேநேரம், அமெரிக்கப் பயணி குறித்த தகவல்களைத் தர அமெரிக்க தூதரகம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது[1].

Survival international warning 26-11-2018

சென்டினல் தீவின் பழங்குடிகள், அவர்களது வாழ்க்கை முறை பாதுகாக்கவேண்டும்: சென்டினல் தீவில் இருப்பவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக அந்தத் தீவை நெருங்குவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது. ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும்[2]. இதனால்தான் அவர்களது தனிமை பேணப்படுகிறது. அந்நிலையில், இவன் அங்கு ஏன் செல்லவேண்டும்? “வாழும் உரிமை இயக்கம்” முன்னமே, அவன் அங்கு சென்றதைக் கண்டித்துள்ளது[3]. இப்பொழுதும், அவனது உடலை வெளியே எடுத்து வரவேண்டாம், அப்படி செய்தால், அனைவருக்கும் ஆபத்து என்று எச்சரித்துள்ளது[4]. அவனுடலை எடுத்து வந்தால், எடுத்து வரும் நபர்கள் / போலீஸார் மற்றும் அந்த பழங்குடிகளும் ஆபத்து உள்ளது[5]. அவர்கள் எல்லோருமே அழிந்து விடுவர், அதாவது, ஏதாவது, மர்மமான நோய் வந்து இறந்து விடுவர் என்ற ரீதியில் எச்சரித்துள்ளது[6]. அது மட்டுமா, முன்னர் அவர்கள் “டிரைப்ஸ்” நாகரிகமற்றவர் என்ற தொனியில் பேசி, அறிக்கை விட்ட தோரணையை மாற்றி மேனாட்டவர் அறிக்கை விட ஆரம்பித்துள்ளனர்[7]. ஆஸ்திரேலிய சர்ச்சைக்குரிய பாலைன் ஹான்ஸன், சென்டினல் கலாச்சாரம் அழகானது, அருமையானது, போற்றப் படக் கூடியது என்றெல்லாம் வாரி இறைத்திருக்கிறார்[8].

Andaman tribes killed missionary - 21-11-2018.Tamil news cutting

கிறுக்கனா, பைபிள் வெறியனா, ஆபத்தானவனா?: அவரன் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளான். அந்த தீவை நோக்கி தாம் மேற்கொண்ட முந்திய பயணம் ஒன்றின்போது அவன் “என் பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று அவர் பழங்குடிகளைப் பார்த்து கத்தியதாகவும், ஒரு பழங்குடி எறிந்த அம்பு அவரது பைபிளை துளைத்ததாகவும் வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது குடும்பத்துக்கு அவன் எழுதிய கடைசி குறிப்பில், “நான் கிறுக்கன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசுவை அந்த மக்களுக்கு பிரகடனப்படுத்துவது அவசியமானது என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், ‘கடவுளே நான் இறக்க விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கத்தரிக்கோல், ஊக்கு பின், கால்பந்து ஆகியவற்றை ஜான் அந்த பழங்குடியினருக்கு பரிசளிக்க எடுத்துச் சென்றதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

John Chau letter - plan to convert

இயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே அவன் அவ்வாறு செய்தானாம்![9]: இயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே இப்படிச் செய்வதாகவும், தாம் கொல்லப்பட்டால் பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம் என்றும் அவன் கூறியதாக, அந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்[10]. இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது. “ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார். சென்டிலீஸ் பழங்குடிகள் மீது அவருக்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறிய அவர்கள், அவர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், எனவே கைது செய்யப்பட்ட அவரது அந்தமான் நண்பர்களை விடுவித்துவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.

John Chau -illegal entry-- plan to convert-landed

ஜான் ஆலன் சௌ யார்?: ஏதோ ஒற்றனைப் போல ரகசியமாக, திருட்டுத் தனமாக சென்ற இந்த ஜான் யார் என்று பிபிசி கொடுக்கும் தகவல்கள்[11]:

  1. கிருத்துவ மிஷினரி: எல்லோராலும் ஒப்புக் கொண்ட விசயம் இது. அவன் படித்ததே ஊழியம் செய்வதற்குத் தான்.
  2. ஊரைச் சுற்றிப் பார்ப்பவன்: சமூக ஊடகங்களில் தன்னை ஒரு ஊர்சுற்றுவதில் விருப்பம் கொண்டவன் போல சித்தரித்துள்ளான்.
  3. சட்டத்தை மீறி உள்ளே நுழைந்தவன்: ஐந்தாறு முறை அவன் சட்டத்திற்கு புறம்பாக, சென்டினல் தீவிற்கு சென்றுள்ளான். மீனவர்களுக்கு பணம் கொடுத்து சென்றான்.
  4. அரைகுறை வைத்தியன்: கொஞ்சம் மருத்துவம் படித்துள்ளவனாக தெரிகிறது என்கின்றனர் சிலர்.
  5. பழங்குடி மக்களை அழிக்கக் கூடிய ஆபத்தானவன்[12]: ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று தெரிந்தும் அவன் சென்றிருக்கிறான்.

© வேதபிரகாஷ்

28-11-2018

John Chau -bble-rejected by sentinel

[1] https://www.vikatan.com/news/india/142814-american-killed-by-sentinelese-tribe-on-restricted-andaman-island.html

[2] USA TODAY, Don’t recover American missionary’s body from Indian island, advocacy group urges police, Ashley May, Published 8:35 a.m. ET Nov. 27, 2018 | Updated 11:27 a.m. ET Nov. 27, 2018

[3] https://www.usatoday.com/story/news/world/2018/11/27/dont-recover-john-allen-chaus-body-indian-tribe-group-warns/2123399002/

[4] Survival International’s Director Stephen Corry today issued the following statement: “We urge the Indian authorities to abandon efforts to recover John Allen Chau’s body. Any such attempt is incredibly dangerous, both for the Indian officials, but also for the Sentinelese, who face being wiped out if any outside diseases are introduced.

“The risk of a deadly epidemic of flu, measles or other outside disease is very real, and increases with every such contact. Such efforts in similar cases in the past have ended with the Sentinelese attempting to defend their island by force.

“Mr Chau’s body should be left alone, as should the Sentinelese. The weakening of the restrictions on visiting the islands must be revoked, and the exclusion zone around the island properly enforced.”

[5] Survival International, Survival International urges “no recovery” of body in Sentinelese case, November 26, 2018.

[6] https://www.survivalinternational.org/news/12036

[7] NewsHub, Pauline Hanson supports Sentinelese tribe’s ‘beautiful’ culture, immigration policy, by  Jamie Ensor, 28/11/2018

[8] https://www.newshub.co.nz/home/world/2018/11/pauline-hanson-supports-sentinelese-tribe-s-beautiful-culture-immigration-policy.html

[9] பிபிசி. தமிழ், அந்தமானில் அமெரிக்கரை கொன்ற பழங்குடிகள் : யார் இவர்கள்? என்ன நடந்தது?, 22 நவம்பர் 2018.

[10] https://www.bbc.com/tamil/global-46304158

[11]  BBC, John Allen Chau: Who was US man killed in remote islands?, 21 November 2018.

[12] https://www.bbc.com/news/world-us-canada-46293221

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [1]

நவம்பர் 28, 2018

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [1]

Location sentinel

26/11 நேரத்தில் வரும் செய்தியும், கிருத்துவ மிஷினைகளும்: சமீபத்தில் ஒரு லிருத்துவ மிஷனரி இளைஞன் சென்டினல் தீவில், அத்துமீறி நுழைந்ததால், கொல்லப்பட்டதைக் குறித்த செய்திகள், உலகம் மற்றும் இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளக வெளிவந்தன. முழு விவரங்கள் தெரியாமல் இருந்தாலும், ஆங்கில ஊடகங்களில் வந்தவற்றை வைத்து அரைகுறை விசயங்களை செய்திகளாக போட்டன.கிருத்துவ ஊடகங்கள் அவன் ஏதோ ஒரு பெரிய தியாகத்தை செய்து விட்டான், மதத்திற்காக உயிர் துறந்தான் என்ற ரீயிலிருந்து, இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள், பலியிடப் படுகிறார்கள் என்ற வரை நீட்டிக்க முயன்றனர்.. ஆனால், திடீரென்று வேகமாக எழுந்த அதே நிலையில், அப்படியே அடங்கி விட்டது. இதுதான் வியப்பாக இருக்கிறது. 26/11 விவகாரத்தில் கூட, ஒரு அமெரிக்க கிருத்துவ மிஷினரி மாட்டிக் கொண்டான். அதாவது, ஊடக அலுவலகங்களுக்கு, தாங்கள் இங்கெல்லாம் தாக்கப் போகிறோம் என்ற இ-மெயில்கள் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மூலம் அனுப்பப் பட்டது அறிந்து சென்றபோது, அது அந்த அமெரிக்க கிருத்துவ மிஷினரியின் இடமாக இருந்தது. உடனே, அமெரிக்க அரசு அவனை அப்படியே தூக்கிச் சென்று விட்டது, அச்செய்தியும் அமுக்கப் பட்டது. இப்பொழுதும் அதெ 26/11 நேரத்தில், இச்செய்தி வந்து அடங்கி விட்டது போல தோன்றுகிறது.

Andaman tribes killed missionary - 21-11-2018.Tamil news cutting.2

சட்டங்களை மீறி ஜான் ஆலன் சௌ சென்டினல் தீவுக்கு சென்றது: அந்தமானில் உள்ள பல்வேறு தீவுகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் தனிமையாக வசிக்கும் 29  தீவுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட யாரும் செல்லக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்திய அரசே அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், அங்கே சுற்றூலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது[1].   இந்நிலையில் சாகசங்களில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவை சேர்ந்த ஜான் அலன் சாவ் [John Allen Chau] என்ற இளைஞன் அந்தமான் சென்றுள்ளான். பலமுறை இந்தியா வந்துள்ள அவன், அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு தடையை மீறி ரகசியமாக செல்ல விரும்பினான். உள்ளூர் மீனவர்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்கள் உதவியுடன் படகில் கடந்த நவம்பர் 14 ந்தேதி 2018, புதன் கிழமை அன்று வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல முயன்றான். பணத்திற்கு ஆசைப்பட்டு, மீனவர்கள் அலனை தீவில் இறக்கி விட்டு சென்று விட்டனர். அதற்கு பிறகு நடந்தது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

Andaman tribes killed missionary - 21-11-2018.Tamil news cutting.3

கிருத்துவ மிஷனரிக்கு செல்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?: ஜான் ஆலன் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று கிறித்துவ மதத்தை போதித்து வந்திருக்கிறான்.  மூன்று ஆண்டுகளில் அந்தமான் தீவுக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறான் ஆலன். நவீன கொலம்பஸ் என தன்னைக் கருதிக்கொண்ட ஆலன், செண்டினல் பழங்குடிகளுக்கு கிறித்தவ மதத்தை போதித்து, ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யப் போவதாக தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறான்.’கிறிஸ்டியன் கர்சன்’ என்ற மத அமைப்பு, ஜான் ஆலன் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜான் ஆலன் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது. ஜான் ஆலனோ, தான் கொல்லப்பட்டால் பழங்குடிகளை மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளான். அவனுடைய குடும்ப அங்கத்தினர்கள் உலகம் முழுக்க  கிறித்தவ மதத்தைப் பரப்பச் சென்ற போதகர்களே. அத்தகையோர், பின்னாளில் காலனி ஆட்சிகளுக்கு வழிவகுத்தார்கள். இயற்கை மற்றும் இறந்தவர்களை வணங்குவதை சாத்தானை வணங்குவதாகச் சொல்லி ஜீசஸை அறிமுகப்படுத்தி, அவர்களை ‘விடுவிக்க’ பார்த்திருக்கிறான் ஆலன்[2]. அப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்கா சென்று செவ்விந்தியர்களை திருத்துவதாகச் சொல்லி இன்று வெள்ளையர்கள் அப்பழக்குடி மக்களை கிட்டத்தட்ட அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்[3].

Andaman tribes killed missionary - 21-11-2018-John Allen Chau

அமெரிக்க மிஷினரிகளுக்கு இந்தியாவில் என்ன வேலை?: முன்னர் பிடோபைல், குழந்தை கற்ப்பழிப்பாளி விவகாரங்களில் நிறை பேர் மாட்டிக் கொண்டதில் அமெரிக்கர் இருந்தனர். அதாவது, மனித உரிமை, சிறுவர் உரிமை பேசும் நாட்டிலிருந்து வந்தவர் தாம் அத்தகைய நீச குற்றங்களை செய்தது. இப்பொழுது, திருட்டுத் தனமாக ஊழியம் செய்ய, சாட்டங்களை மீறி இவன் நுழைந்திருக்கிறான்.  உலகில் அமெரிக்காதான் கடுங்கோட்பாட்டு கிறித்தவ மத பிற்போக்கு நம்பிக்கைகளுக்கு இன்றும் தலைமையகமாக திகழ்கிறது. கிராமத்தில், ஊரில் இருக்கும் பெந்தகோஸ்தே, ஆவிஎழுப்பு கூட்டங்கள் அனைத்திற்கும் ட்ரெண்ட் செட்டர் அமெரிக்காதான். அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் பதட்டம் காரணமாக அங்கே அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. இன்னொரு புறம் இத்தகைய மதவாதிகள் மக்களை பிடித்து பிற்போக்காய் வைத்திருக்கின்றனர். தனது சொந்த நாட்டின் சாத்தானாகிய முதலாளித்துவத்தை பார்க்க இயலாத ஆலன் இங்கே அப்பாவியான பழங்குடிகளை சாத்தானாக பார்த்து பரலோகம் சென்றிருக்கிறான்.

John Chau -Satanic sentinel

சென்டினல் மக்களின் தனியுரிமை மீறி நடக்க தைரியம் எப்படி வந்தது?: அந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956ன் கீழ் இம்மக்களின் தனியுரிமையை பாதுகாத்து வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் அனுமதியின்றி இப்பகுதியில் யாரும் செல்லக் கூடாது. அப்படி செல்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அவர்களை சந்திக்க விரும்புதல், உணவு, உடைகள் போன்றவற்றை தர முயற்சித்தல் போன்றவை சட்ட விரோதமாகும்.  மேலும் வடக்கு செண்டினல் தீவுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் உள் நுழையக் கூடாது என்று 1990களில் மத்திய அரசு அறிவித்தது. அப்படியிருக்க அவனே பெருமையாக சொல்லிக் கொண்டபடி, கப்பற்படை, கடற்பாதுகாப்பு போலீஸார்-ராணுவம், சுங்கம் முதலியவற்றைடெல்லாம் மீறி, எப்படி, ஏன் அவன் திருட்டுத் தனமாக நுழைந்தான்? ஆனால், அவன் நுழைந்தது, போர்ட் பிளையரில் இருக்கும் மிஷினரி, சென்னை அமெரிக்கத் தூதரகம், நண்பகள், மீனவர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆக, அத்தகைய சட்டமீறல் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?

John Chau letter - plan to convert-landed

ஏழு மீனவர்கள் கைது என்றால், அவன் அங்கு சென்றுள்ளான் என்றறிந்த மற்றவ்ர்களை ஏன் வீட்டு வைத்தார்கள்?: அமெரிக்காவில் இருக்கும் வாசிங்கடனைச் சேர்ந்த 26 வயது இளைஞரன் ஆலன். சாகச பயணங்களை அதிகம் விரும்புவன். ஓரல் ரோபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றான். வடக்கு செண்டினல் தீவில் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக அவரின் நண்பர்களிடம் கூறியிருக்கிறான். அந்த தீவிற்கு செல்லும் போது வாட்டர் ப்ரூஃப் பைபிள் வைத்திருந்தான். அப்பொழுது அங்குள்ள பழங்குடியின மக்கள் அம்புகளை எய்து தாக்கியதாக கூறப்படுகிறது[4]. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அலனை அங்கேயே விட்டு விட்டு தப்பி வந்துள்ளனர்[5]. மூன்று நாட்கள் கழித்து 17-11-2018 சனிக்கிழமை அன்று மீனவர்கள் மீண்டும் சென்று பார்த்த போது பழங்குடியின மக்கள் அலனை கொன்று மணலில் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தமான் திரும்பிய அந்த மீனவர்கள் அலனின் நண்பரான உள்ளூர் மதபோதகரிடம் கூறியுள்ளனர். அவர் அமெரிக்காவில் உள்ள அலனின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளார். அலனின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், அந்தமான் – நிகோபர் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளது. அதன் பேரில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி அலனுக்கு உதவிய ஏழு மீனவர்களை கைது செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

28-11-2018

Sentinel near to Myanmar, Thailand

[1] விகடன், அந்தமான் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி!, சா.ஜெ.முகில் தங்கம் வெளியிடப்பட்ட நேரம்:21:20 (21/11/2018), கடைசி தொடர்பு:21:20 (21/11/2018)

[2] தமிழ்.ஒன்.இந்தியா, யார் இந்த சென்டினல் பழங்குடியினர்.. ஆச்சரியம் தரும் அந்தமான் தீவு அதிசய மனிதர்கள்!, By Vishnupriya R Updated: Tuesday, November 27, 2018, 9:54 [IST]

[3] https://tamil.oneindia.com/news/india/who-are-sentinelese-here-are-some-facts-about-them-334925.html

[4] தினத்தந்தி, அந்தமான் தீவில் அமெரிக்க இளைஞர் கொலை : உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க பழங்குடியினத்தவர் தேசிய ஆணையம் கோரிக்கை, பதிவு : நவம்பர் 23, 2018, 07:15 AM மாற்றம் : நவம்பர் 23, 2018, 10:19 AM

[5] https://www.thanthitv.com/News/India/2018/11/23071533/1015984/US-national-John-Allen-Chau-killed-in-Andaman.vpf

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (3)

ஜூலை 30, 2018

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (3)

Bishop refused to leave causes unrest, The Tribune, 09-12-2000

2000ல் குஜராத்தில் நில அபகரிப்பு கலாட்டா: சிந்தியா என்ற கிராமத்தில், எஸ்ரா மக்களைத் தூண்டி விட்டு கலவரத்தை உண்டாக்க முயன்றார். “மைனாரிடி” அந்தஸ்து மற்றும் பிஷப் என்ற ரீதியில் அங்கு போராட்டத்தை 29-11-200 அன்று ஆரம்பித்தார். மதமாற்றங்களில் ஈடுபட்ட குழுக்களிடையே, நில-அபகரிப்பு செய்ய, இந்து கடவுள் விக்கிரங்களை நீக்கி, கிருத்துவக் கூட்டம் அத்துமீறி செயல் பட்டது. அப்போழுது தான், எஸ்ரா அங்கு நுழைந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால், போலீஸார் அவரை கைது செய்ய தீர்மானித்தனர். ஆனால், 14-12-200 அன்று பெயிலைப் பெற்றார்[1]. வியாரா மாவட்டத்தில் யாரும்நுழையக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது. அந்நிலையில், தான் தமிழ்நாடு மைனாரிடி கமிஷனின் துணைத் தலைவர் என்பதால், கருணாநிதி சொன்னால் தான் திரும்புவேன் என்று அடம் பிடித்தார்[2]. இதனால், குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, தகுந்த நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார். உள்துறை செயலரும், கருணாநிதிக்கு கடிதம் எழுத, நிலைமை மோசமான நிலையில், கருணாநிதி, அவரை உடனடியாக வருமாறு ஆணையிட்டார். தப்பித்தோம்-பிழைத்தோம் என்று எஸ்ரா ஓடிவிட்டார்[3]. அதாவது, குஜராத்தில் தமிழக பிஷப் எவ்வாறு கலாட்டா செய்யலாம் என்பதனை இது எடுத்துக் காட்டுகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை ஆங்கிலத்தில் சென்ற வருடம் எழுதியுள்ளேன்[4].

Karu asked Ezra Sargunam to return to TN, Dec.07, 2000 - The Hindu

கருணாநிதி, ஏசு, எஸ்ரா ஒப்பீடு – 2016: எஸ்ரா எப்பொழுதும், கருணாநிதியை ஏசுக்கு ஒப்பிட்டு பேசுவது வழக்கமாக இருக்கிறது. 2016ல், ஏசு கிறிஸ்துவை கருணாநிதியின் வடிவில் காண்கிறேன், என்று சொன்னது வேடிக்கையாக இருந்தது. கருணாநிதி உடல்நலம் இல்லாத போது வந்து, அவரது உடல்நலம் பெற்றி பேட்டி கொடுப்பதும் வழக்கமாக்கிக் கொண்டார். கருணாநிதி நலமாக இருக்கிறார், கண்ணசைத்தார், போன்று பேட்டி கொடுத்துள்ளார். ஒருமுறை ஏசு போக உயிர்த்தெழுவார் என்றபோது, மக்களுக்கு தமாஷாகி விட்டது. அதாவது, இறந்து, புதைக்கப் பட்டு, பிறகு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவர் போலும். இருப்பினும் திராவிட நம்பிக்கையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. கிருஸ்துமஸ் கொண்டாட்டம் என்ற சாக்கில், இவர் திமுக தலைவர்களுக்கு தொப்பி மாட்டி விடுவது, கேக் வெட்டி, வாயில் ஊட்டுவது போன்ற வேலைகளும் செய்து வருகிறார்.

Ezra compres Karu with Jesus often

வைமுத்து, செக்யூலரிஸம், பைபிள் – 2012: நீர்ப்பறவை திரைப்படத்தின் பாடல்கள் 2012ல் வெளியிடப்பட்டன. இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். இதில் ஒரு பாடலில் பைபிள் சொற்களை வைத்து பாட்டெழுதியிருந்தார். இதற்கு கிறிஸ்துவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது[5]. வைரமுத்துவை கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ கழக தலைவர் தலைமையில் 15 பேர் இன்று திடீரென கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்து வீட்டை முற்றுகையிட்டனர்[6]. அங்கு சிறிது நேரம் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய 15 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்[7]. பிறகு, அந்த பாடலில் இடம் பெற்ற சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறார்கள். பேரா.எஸ்ரா சற்குணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தில் பற.. பற.. என்கிற பாடலில் இடம் பெற்ற… ஸ்தோத்திரம் மற்றும் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறேன்.. என்கிற சொற்களை நீக்கியிருக்கிறார்கள்[8]. மேலும் நீர்ப்பறை திரைப்படம், சிறுபான்மை மக்களின் அன்பான வாழ்க்கையை சொல்லும் திரைப்படம் என அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Ezra -vairamuthu, neerparavai

2003ல் சேலத்தில் நரிக்குறவர்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தது: சேலத்தில் நரிக்குறவர்களை மதமாற்றம் செய்ததற்காக, சென்னை பிஷப் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவடம் இந்து முன்னணி அமைப்பு மனு கொடுத்துள்ளது[9]. ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்த பிறகு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வெள்ளையப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம், பஞ்சமதங்கம் ஏரிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்குஆக்கிரமித்து குடிசை போட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பலரும் உதவிகள் செய்தனர். ஆனால் சென்னையைச் சேர்ந்த பிஷப் எஸ்ரா சற்குணம், தனது இவாஞ்சலிகல் சர்ச் என்றஅமைப்பின் மூலம், நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்து, மூளைச் சலவை செய்து,கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளார்[10]. நரிக்குறவர்கள், ஏரிப் பகுதியை ஆக்கிரமித்துத் தங்கியிருந்தவர்கள். அவர்களுக்கு உதவுவதாக கூறி கட்டாயமதமாற்றம் செய்துள்ளனர். எனவே எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார் வெள்ளையப்பன்.

Bishop Sundar Singh was commissioned as the new presiding Bishop of ECI.

கத்தோலிக்ககத்தோலிக்கம் அல்லாத சண்டையில் எஸ்ரா ஈடுபட்டுள்ளாரா?: வைகோவுக்கும், எஸ்ராவுக்கும் தகராறு ஏற்பட்ட போது, வைகோ அவரை கள்ள தீர்க்கதரிசி, கருப்பு ஆடு ஏன்றெல்லாம் சாடியுள்ளார். லாசரஸ் போன்றோர் வைகோவை கிருத்துவர் என்கின்றனர். இருப்பினும், இவர்கள் எல்லோருமே சண்டைப் போட்டுக் கொள்வது கவனிக்கத் தக்கது. இதற்கு ஒருவர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார். “தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள்ஓர் ஆய்வுஎன்ற நூலை எழுதிய . மா. சாமி கிறிஸ்தவரல்லாத ஒரு பத்திரிகையாளர். அந்நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்து ஆசீர்வாதம் தந்தவர்கள் கத்தோலிக்க, ஆங்லிக்கன் மற்றும் சுவிசேஷ இயக்கத் தலைவர்கள். அந்நூல் முழுவதும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு அங்கமாகவே கருதி ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதை எந்தவொரு தமிழ் சுவிசேஷ இயக்கத் தலைவரும் திருத்தவோ கண்டிக்கவோ இல்லை; மாறாக தென்னிந்திய திருச்சபைத் தலைவர்களிலிருந்து தலித் தளபதி எஸ்ரா சற்குணம் வரை இதற்குப் பாராட்டுரை எழுதியிருக்கின்றனர். இதிலிருந்து தமிழர் மத்தியில் கிறிஸ்தவம் என்றால் என்ன? என்று புரியாத ஒரு குழப்பமான சூழ்நிலை இருப்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இக் குழப்பத்தாலேயே அநேகருக்கு கத்தோலிக்க சமயம் என்பது என்ன? என்பதும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத, கிறிஸ்தவப் போதனைகளுக்கு முரணானவற்றைப் போதிக்கும் ஒரு மதம் என்பதும் தெரியாமலிருக்கின்றது”, என்று வருத்தப்பட்டார்[11].

first-early-christianity-in-india-held-2005-santhosam-deivanayagam-john-samuel

எந்த மேடையாய் இருந்தாலும் எஸ்றா சற்குணம் அங்கே இருப்பார்: அரசியல் மேடை மற்றுமல்லாது, ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ போன்ற மோசடி ஆராய்ச்சி  மாநாடுகளிலும், இந்த எஸ்ரா பங்கு கொள்வது, இன்னுமொரு சதிதிட்டத்தை வெளிப்படுத்துகிறது எனலாம். ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான் சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற  2005ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு, ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றது. அதில், டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன்  முதலியோர் கலந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை”யை மேலும் விவாதித்தனர். ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறது படுவேடிக்கை. இருப்பினும், எஸ்ரா அங்கிருப்பது நோக்கத் தக்கது.

Santhosam, Samuel, Sargunam

குழப்பவாதம் செய்து, இந்துமதத்தைத் தாக்கும் எஸ்ரா சற்குணம்: முகலாயர், ஆங்கிலேயர் ஆட்சி பிரமாதமாக இருந்தது, இந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை, என்ற்றெல்லாம் பேட்டிகளில் கூறும் விதம் மற்ற மேடைகளில் “சலாம் அலைக்கும்” என்பதெல்லாம், இவரது போலித்தனம், அகம்பாவம், பொய்மை முதலியவற்றை வெளிப்படுத்துகிறது. வயதானாலும், பக்குவம் இல்லை அல்லது வேண்டுனென்றே திமிர்ரோடு இவ்வாறு பேசி வருகிறார் என்ற்று தெரிகிறது. தான் மைனாரிட்டி மற்றும் திமுக ஆதரவு கொடுக்கிறது என்ற கொழுப்பும் சேர்ந்துள்ளது எனலாம், குஜராத்தில் சென்று கலாட்டா செய்தபோது, கைது செய்யும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, கருணாநிதியே, திரும்பி வா என்று ஆணையிட்டார். அதாவது, கருணாநிதிக்கும், சர்ச்சுகளுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான இணைப்பை இதை காட்டுகிறது. ஒரு பக்கம் நாத்திகம், இன்னொரு பக்கம் பகுத்தறிவு, இன்னொமொரு பக்கம் இந்து-தூஷணம், இவையெல்லாவற்றையும் சேர்த்து, கிருத்துவ ஆதரவு, தாமஸ் கட்டுக்கதை போற்றல், தமிழை கேவலப்படுத்தும் “திருவள்ளுவர் பைபிள் காப்பி” கதைகளை ஊக்குவித்தல் என்ற வகைகளில் இவர்கள் 1960களிலிருந்து செயல்ப்ட்டு வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

30-07-2018

deivanayagam-johnson-basakara-dos-devalkaa-alva-edison-sameul

[1] The Hindu, Bail granted to Bishop, By Manas Dasgupta, Friday, December 15, 2000.

http://www.thehindu.com/2000/12/15/stories/02150005.htm

[2] The Tribune, Bishop’s refusal to leave causes unrest, December 9, 2000.

 http://www.tribuneindia.com/2000/20001210/nation.htm – 8

[3] UCAnews, Protestant bishop leaves after Hindu state head refuses to meet, December 15, 2000.

https://www.ucanews.com/story-archive/?post_name=/2000/12/15/protestant-bishop-leaves-after-hindu-state-head-refuses-to-meet&post_id=17391

[4] https://indiainteracts.wordpress.com/2017/11/14/ezra-sargunam-church-planting-land-grabbing-politics-and-communalization-under-the-guise-of-secularization/

[5] தமிழ் உள்ளூர்செய்தி, கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைது, Written By உள்ளூர் செய்திகள் on Saturday, October 13, 2012 | 5:43 PM.

[6] 4.தமிழ்.சினிமா, நீர்ப்பறவையில் நீக்கப்பட்ட வார்த்தைகள்..Oct 16, 2012

[7]  http://4tamilcinema.com/neer-paravai-news/

[8]http://ulloorseithikal.blogspot.com/2012/10/blog-post_9329.html

[9] ஒன்.இந்தியா, எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோருகிறது இந்து முன்னணி, Posted By: Published: Thursday, October 30, 2003, 5:30 [IST]

[10] https://tamil.oneindia.com/news/2003/10/30/hindu.html

[11]https://biblelamp.me/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA/