கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

அடிப்படைவாத கிறிஸ்தவ தெய்வநாயகம் பிஷப் அந்தோனிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது (26-11-2020): சாந்தோம் தேவாலயத்தை கண்டித்து, “ஆன்மவியல்” அறக்கட்டளை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக வந்த, மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்[1]. சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில், “பழமையான” சாந்தோம் தேவாலயம் உள்ளது. இதன் பங்குத்தந்தையாக இருப்பவர், அந்தோணிசாமி, 52. இவர், நேற்று முன்தினம் இரவு 28-11-2020, மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ள தாவது: “நேற்று முன்தினம் காலை, தேவாலயத்திற்கு உலக சமயங்களை ஒன்றிணைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள, ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகம் என்பவர், மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து, டிச., 13ம் தேதி, 2020, தேவாலயத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது[2]. கடிதம் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?[3]:  “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?”மற்றும் “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம்” என்று இரண்டு தலைப்புகளில், “தினமலர்” மட்டும் தான் செய்தியை வெளியிட்டுள்ளது[4]. மற்ற நாளிதழ்களில் காண்ணப்படவில்லை. தெய்வநாயகம் ஒன்றும் மைலாப்பூர் ஆர்ச்பிஷப்புக்கு தெரியாத நபர் அல்லர். இருப்பினும், இவ்வாறு போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு, என்ன நிலைமை தீவிரம் ஆயிற்று என்று தெரியவில்லை. புகார் கடிதத்தில், “தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து,” என்று தான் உள்ளது. அப்படி என்ன –

  1. சாந்தோம் தேவாலயம் எப்படி தனியாக இயங்குகிறது?,
  2. என்ன செயலை, அப்படி பாதிக்கும் முறையில் செய்கிறது?
  3. அதனை மற்றவர்களுக்குப் புரியாத அறியாத நிலையில் தெய்வநாயகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கிறது?
  4. கத்தோலிக்க முறையை விட்டு விலகி தனியாக, எதையாவது செய்கிறதா?
  5. இவருக்கு மட்டும் தான் கண்டிக்க உணர்வு வந்ததா?
  6. மற்ற விசுவாசமான கத்தோலிக்க பக்தர்களுக்கு தெரியாதா, தெரிந்தும் சுரணை வரவில்லையா?
  7. தெய்வநாயகமே கத்தோல்லிக்கர் இல்லை என்பதும் தெரிந்த விசயம், பிறகு அவருக்கு இதில் என்ன அக்கரை?
  8. மேலும், தெய்வநாயகம் முந்தைய பிஷப்புகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார், பிறகு, இந்த அந்தோணியுடன் ஏதாவது பிரச்சினை உள்ளதா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன, அவற்றிற்கு விடை சொல்லியாக வேண்டும்.

கத்தோலிக்க சர்ச் திருப்பலி முதலிய கிரியைகள்சடங்குகள் நடத்துவதில் முறை தவறுகிறதா?: முன்னர் 2013-14 ஆண்டுகளில், மைக்கேல் பிரபு என்பவர், சாந்தோம் சர்ச்சில் முறையாக திருப்பலி முதலிய கிரியைகள்-சடங்குகள் நடத்தப் படுவதில்லை என்று கடிதங்கள் எழுதி அனுப்பினார். அதற்கு, அந்தோணிசாமியும் பதில் அளித்துள்ளார்[5].  ஆனால், அவையெல்லாம், கத்தோலிக்க சர்ச்சின் உள்-விவகாரங்கள் போன்றிருந்தன, ஏனெனில், கிரியைகள்-சடங்குகள் நடத்தும் முறைகள், “இடம், பொருள், ஏவல்” என்றும், நாடு, மக்கள், மொழி, சமூகம் போன்ற காரணிகளால் மாறத்தான் செய்யும். மேலும், “உள்-கலாச்சாரமயமாக்கல்,” “மதங்களுக்கு இடையே உரையாடல்” போன்ற தேவையற்ற வேலைகளையும், திட்டங்களையும் செய்து வருவதால், பற்பல முறையற்ற நிகழ்வுகள் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடந்து வருவதை, அடிப்படை கத்தோலிக்கவாதிகள், சென்னையிலேயே எ திர்த்துள்ளனர். சுவாமி குலந்தைசாமி போன்றோர், கண்டித்து, “லைதி” மற்றும் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள். மைக்கேல் பிரபு என்பவர் தொடர்ந்து, தனது இணைதளத்தில் எடுத்துக் காட்டி வருகிறார்.

13-12-2020 அன்று ஏன் தெய்வநாயகம் போராட்டம் நடத்தவில்லை?: சரி, யார் இந்த நபர்கள், கிருத்துவர்களாக இருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டை போடுகிறார்களா? இல்லவே இல்லை. முன்பு பிஷப்பாக இருந்த சின்னப்பா, இவருக்கு இடம், ஆதரவு கொடுத்து, மாநாடு நடத்தியுள்ளார். “மாதவி பொன் மயிலாள்,” என்று பாட்டெல்லாம் பாடி அசத்தியுயுள்ளார். அதற்கும் முன்னர், அருளப்பா, கேட்கவே வேண்டாம், நீதிமன்ற தீர்ப்புகள் சொல்லும் அவர்களுடைய மோசடிகளை! பின்னர், இதென்ன கலாட்டா நாடகம்?  ஒருவேளை, விளம்பரத்திற்காக செய்திருக்கலாம் என்று எண்ணவும் செய்யலாம். பிப்ரவரியில், அர்ஜுன் சம்பந்த் வந்து கலாட்டா செய்தது போல, விளம்பரத்திற்காக, நாளிதழ்களில் செய்தி வரவேண்டும் என்றும் செய்திருக்கலாம் என்று யோசிக்கலாம். அர்ஜுன் சம்பந்த் விஜயம் பற்றி சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது.

2009ல் இல்லாத ஆர்வம் அர்ஜுன் சம்பத்திற்கு 2020ல் எப்படி வந்தது? (பிப்ரவரி 2020): சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து இந்து கோயில் இருந்த இடம் என்று கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி சர்ச்சையை கிளப்பினார்[6]. இதையடுத்து இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[7]. இப்படி இந்த செய்தியை பல இணைதளங்களில் செய்தியாக, காப்பி அடித்துப் போட்டன. அவற்றில் எதுவுமே நேரில் சென்று, விவரங்களை அறிந்து போடவில்லை என்று தெரிந்தது. அர்ஜுன் சம்பத்திற்குக் கூட, ஏன், எப்படி, எதற்காக திடீரென்று, இதில் ஆர்வம், விருப்பம், கவலை வந்தது என்று தெரியவில்லை.  2009ல் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற கருத்தரங்கம் நடைபெற்ற போது, இது பற்றிய பிரச்சினைகளை [இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை] விவாதிக்க சம்பந்தப் பட்ட பல ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் முதலியோர் வழவழைக்கப் பட்டு விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் பாலாறாவாயன்[8], சுப்பாராவ்[9], வேதபிரகாஷ்[10], ஈஸ்வர் ஷரண்[11], என பலர் விவாதங்களில் பங்கு கொண்டனர். அந்த கருத்தரங்கத்தில் அர்ஜுன் சம்பத்தும் கலந்து கொண்டு, “தமிழர் சமயம் இந்து சமயமே,” என்ற ஆய்வு கட்டுரை வாசித்தார்.  அது தொகுப்பில் பிரசுரம் ஆகியது[12]. ஆனால், அந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, இவருக்கு திடீரென்று ஆர்வம் வந்தது வியப்பாக இருக்கிறது. மறுபடியும் வருவேன் என்று சொன்ன அர்ஜுன் சம்பத் வரவில்லை, அதே போல 13-12-2020 அன்று போராட்டம் நடத்துவேன் என்ற தெய்வநாயகமும் வரவில்லை.

சர்வமத கிறிஸ்துவ விழாவுக்கு ஏன் தெய்வநாயகம் அழைக்கப் படவில்லை? (24-12-2020): ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் என்ற நிலையில், தெய்வநாயகம், தன்னையும் சர்வமத கிறிஸ்துமஸ் விழாவுக்கு, அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதற்கான முயற்சியும் மேற்கொண்டார் எனத் தெரிகிறது. சைவசித்தாந்தம் பேசப் படுகின்ற நிலையில், “விவிலியம், சைவசித்தாந்தம்,” ஒப்பீட்டை செய்த, தான், அவர்களுக்கு இணையாகப் பேச தகுதியுள்ளவர் என்றெல்லாம் சொல்லிப் பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால், இவர் கலந்து கொண்டால், பிரச்சினை பெரிதாகி விடும் என்று மறுக்கப் பட்டது. மேலும், போராட்டத்தையும் கைவிடச் சொல்லி, அறிவுருத்தப் பட்டது. மாறாக, முன்னர், “தமிழ் கிறிஸ்தவ மாநாடு,” ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போன்று, ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கலாம். எப்படியோ 13-12-2020 மற்றும் 24-12-2020 நாட்களில் தெய்வநாயகம் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, அடங்கினாரா, அடக்கப் பட்டாரா, சமரசம்-உடன்படிக்கை நடந்ததா என்பதெல்லாம், இனிமேல் தான் தெரிய வரும் எனலாம்.


© வேதபிரகாஷ்

30-12-2020


[1] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம், Added : நவ 30, 2020 06:00.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662109

[3] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?, Added : நவ 30, 2020 06:09.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662123

[5] http://www.ephesians-511.net/

[6] தினகரன், இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்ததுசாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு, 2020-02-29@ 03:56:28.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567764

[8] மறுப்பு நூல் எழுதிய திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன், இலயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் [ஓய்வு].

[9] ஆர்ச் பிஷப் அருளப்பா வெர்சஸ் கணேஷ் ஐயர் வழக்கில், கணேஷ் ஐயர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வாக்கறிஞர்.

[10] முதன் முதலாக, இந்த பிரச்சினை பற்றி ஆய்ந்து, “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற புத்தகத்தை 1989ல் வெளியிட்டவர்.

[11] ஆங்கிலத்தில், இப்பிரச்சினை பற்றி எழுடியவர். 2020ல் ஐந்தாவது பதிப்பும் வெளிவந்துள்ளது.

[12] வேதபிரகாஷ், மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, திராவிடச் சான்றோர் பேரவை, சென்னை, ப.112-124

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.