Posts Tagged ‘சாந்தோம் சர்ச்’

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

திசெம்பர் 30, 2020

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

அடிப்படைவாத கிறிஸ்தவ தெய்வநாயகம் பிஷப் அந்தோனிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது (26-11-2020): சாந்தோம் தேவாலயத்தை கண்டித்து, “ஆன்மவியல்” அறக்கட்டளை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக வந்த, மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்[1]. சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில், “பழமையான” சாந்தோம் தேவாலயம் உள்ளது. இதன் பங்குத்தந்தையாக இருப்பவர், அந்தோணிசாமி, 52. இவர், நேற்று முன்தினம் இரவு 28-11-2020, மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ள தாவது: “நேற்று முன்தினம் காலை, தேவாலயத்திற்கு உலக சமயங்களை ஒன்றிணைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள, ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகம் என்பவர், மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து, டிச., 13ம் தேதி, 2020, தேவாலயத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது[2]. கடிதம் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?[3]:  “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?”மற்றும் “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம்” என்று இரண்டு தலைப்புகளில், “தினமலர்” மட்டும் தான் செய்தியை வெளியிட்டுள்ளது[4]. மற்ற நாளிதழ்களில் காண்ணப்படவில்லை. தெய்வநாயகம் ஒன்றும் மைலாப்பூர் ஆர்ச்பிஷப்புக்கு தெரியாத நபர் அல்லர். இருப்பினும், இவ்வாறு போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு, என்ன நிலைமை தீவிரம் ஆயிற்று என்று தெரியவில்லை. புகார் கடிதத்தில், “தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து,” என்று தான் உள்ளது. அப்படி என்ன –

  1. சாந்தோம் தேவாலயம் எப்படி தனியாக இயங்குகிறது?,
  2. என்ன செயலை, அப்படி பாதிக்கும் முறையில் செய்கிறது?
  3. அதனை மற்றவர்களுக்குப் புரியாத அறியாத நிலையில் தெய்வநாயகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கிறது?
  4. கத்தோலிக்க முறையை விட்டு விலகி தனியாக, எதையாவது செய்கிறதா?
  5. இவருக்கு மட்டும் தான் கண்டிக்க உணர்வு வந்ததா?
  6. மற்ற விசுவாசமான கத்தோலிக்க பக்தர்களுக்கு தெரியாதா, தெரிந்தும் சுரணை வரவில்லையா?
  7. தெய்வநாயகமே கத்தோல்லிக்கர் இல்லை என்பதும் தெரிந்த விசயம், பிறகு அவருக்கு இதில் என்ன அக்கரை?
  8. மேலும், தெய்வநாயகம் முந்தைய பிஷப்புகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார், பிறகு, இந்த அந்தோணியுடன் ஏதாவது பிரச்சினை உள்ளதா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன, அவற்றிற்கு விடை சொல்லியாக வேண்டும்.

கத்தோலிக்க சர்ச் திருப்பலி முதலிய கிரியைகள்சடங்குகள் நடத்துவதில் முறை தவறுகிறதா?: முன்னர் 2013-14 ஆண்டுகளில், மைக்கேல் பிரபு என்பவர், சாந்தோம் சர்ச்சில் முறையாக திருப்பலி முதலிய கிரியைகள்-சடங்குகள் நடத்தப் படுவதில்லை என்று கடிதங்கள் எழுதி அனுப்பினார். அதற்கு, அந்தோணிசாமியும் பதில் அளித்துள்ளார்[5].  ஆனால், அவையெல்லாம், கத்தோலிக்க சர்ச்சின் உள்-விவகாரங்கள் போன்றிருந்தன, ஏனெனில், கிரியைகள்-சடங்குகள் நடத்தும் முறைகள், “இடம், பொருள், ஏவல்” என்றும், நாடு, மக்கள், மொழி, சமூகம் போன்ற காரணிகளால் மாறத்தான் செய்யும். மேலும், “உள்-கலாச்சாரமயமாக்கல்,” “மதங்களுக்கு இடையே உரையாடல்” போன்ற தேவையற்ற வேலைகளையும், திட்டங்களையும் செய்து வருவதால், பற்பல முறையற்ற நிகழ்வுகள் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடந்து வருவதை, அடிப்படை கத்தோலிக்கவாதிகள், சென்னையிலேயே எ திர்த்துள்ளனர். சுவாமி குலந்தைசாமி போன்றோர், கண்டித்து, “லைதி” மற்றும் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள். மைக்கேல் பிரபு என்பவர் தொடர்ந்து, தனது இணைதளத்தில் எடுத்துக் காட்டி வருகிறார்.

13-12-2020 அன்று ஏன் தெய்வநாயகம் போராட்டம் நடத்தவில்லை?: சரி, யார் இந்த நபர்கள், கிருத்துவர்களாக இருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டை போடுகிறார்களா? இல்லவே இல்லை. முன்பு பிஷப்பாக இருந்த சின்னப்பா, இவருக்கு இடம், ஆதரவு கொடுத்து, மாநாடு நடத்தியுள்ளார். “மாதவி பொன் மயிலாள்,” என்று பாட்டெல்லாம் பாடி அசத்தியுயுள்ளார். அதற்கும் முன்னர், அருளப்பா, கேட்கவே வேண்டாம், நீதிமன்ற தீர்ப்புகள் சொல்லும் அவர்களுடைய மோசடிகளை! பின்னர், இதென்ன கலாட்டா நாடகம்?  ஒருவேளை, விளம்பரத்திற்காக செய்திருக்கலாம் என்று எண்ணவும் செய்யலாம். பிப்ரவரியில், அர்ஜுன் சம்பந்த் வந்து கலாட்டா செய்தது போல, விளம்பரத்திற்காக, நாளிதழ்களில் செய்தி வரவேண்டும் என்றும் செய்திருக்கலாம் என்று யோசிக்கலாம். அர்ஜுன் சம்பந்த் விஜயம் பற்றி சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது.

2009ல் இல்லாத ஆர்வம் அர்ஜுன் சம்பத்திற்கு 2020ல் எப்படி வந்தது? (பிப்ரவரி 2020): சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து இந்து கோயில் இருந்த இடம் என்று கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி சர்ச்சையை கிளப்பினார்[6]. இதையடுத்து இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[7]. இப்படி இந்த செய்தியை பல இணைதளங்களில் செய்தியாக, காப்பி அடித்துப் போட்டன. அவற்றில் எதுவுமே நேரில் சென்று, விவரங்களை அறிந்து போடவில்லை என்று தெரிந்தது. அர்ஜுன் சம்பத்திற்குக் கூட, ஏன், எப்படி, எதற்காக திடீரென்று, இதில் ஆர்வம், விருப்பம், கவலை வந்தது என்று தெரியவில்லை.  2009ல் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற கருத்தரங்கம் நடைபெற்ற போது, இது பற்றிய பிரச்சினைகளை [இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை] விவாதிக்க சம்பந்தப் பட்ட பல ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் முதலியோர் வழவழைக்கப் பட்டு விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் பாலாறாவாயன்[8], சுப்பாராவ்[9], வேதபிரகாஷ்[10], ஈஸ்வர் ஷரண்[11], என பலர் விவாதங்களில் பங்கு கொண்டனர். அந்த கருத்தரங்கத்தில் அர்ஜுன் சம்பத்தும் கலந்து கொண்டு, “தமிழர் சமயம் இந்து சமயமே,” என்ற ஆய்வு கட்டுரை வாசித்தார்.  அது தொகுப்பில் பிரசுரம் ஆகியது[12]. ஆனால், அந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, இவருக்கு திடீரென்று ஆர்வம் வந்தது வியப்பாக இருக்கிறது. மறுபடியும் வருவேன் என்று சொன்ன அர்ஜுன் சம்பத் வரவில்லை, அதே போல 13-12-2020 அன்று போராட்டம் நடத்துவேன் என்ற தெய்வநாயகமும் வரவில்லை.

சர்வமத கிறிஸ்துவ விழாவுக்கு ஏன் தெய்வநாயகம் அழைக்கப் படவில்லை? (24-12-2020): ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் என்ற நிலையில், தெய்வநாயகம், தன்னையும் சர்வமத கிறிஸ்துமஸ் விழாவுக்கு, அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதற்கான முயற்சியும் மேற்கொண்டார் எனத் தெரிகிறது. சைவசித்தாந்தம் பேசப் படுகின்ற நிலையில், “விவிலியம், சைவசித்தாந்தம்,” ஒப்பீட்டை செய்த, தான், அவர்களுக்கு இணையாகப் பேச தகுதியுள்ளவர் என்றெல்லாம் சொல்லிப் பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால், இவர் கலந்து கொண்டால், பிரச்சினை பெரிதாகி விடும் என்று மறுக்கப் பட்டது. மேலும், போராட்டத்தையும் கைவிடச் சொல்லி, அறிவுருத்தப் பட்டது. மாறாக, முன்னர், “தமிழ் கிறிஸ்தவ மாநாடு,” ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போன்று, ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கலாம். எப்படியோ 13-12-2020 மற்றும் 24-12-2020 நாட்களில் தெய்வநாயகம் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, அடங்கினாரா, அடக்கப் பட்டாரா, சமரசம்-உடன்படிக்கை நடந்ததா என்பதெல்லாம், இனிமேல் தான் தெரிய வரும் எனலாம்.


© வேதபிரகாஷ்

30-12-2020


[1] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம், Added : நவ 30, 2020 06:00.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662109

[3] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?, Added : நவ 30, 2020 06:09.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662123

[5] http://www.ephesians-511.net/

[6] தினகரன், இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்ததுசாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு, 2020-02-29@ 03:56:28.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567764

[8] மறுப்பு நூல் எழுதிய திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன், இலயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் [ஓய்வு].

[9] ஆர்ச் பிஷப் அருளப்பா வெர்சஸ் கணேஷ் ஐயர் வழக்கில், கணேஷ் ஐயர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வாக்கறிஞர்.

[10] முதன் முதலாக, இந்த பிரச்சினை பற்றி ஆய்ந்து, “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற புத்தகத்தை 1989ல் வெளியிட்டவர்.

[11] ஆங்கிலத்தில், இப்பிரச்சினை பற்றி எழுடியவர். 2020ல் ஐந்தாவது பதிப்பும் வெளிவந்துள்ளது.

[12] வேதபிரகாஷ், மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, திராவிடச் சான்றோர் பேரவை, சென்னை, ப.112-124

கட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட கிறிஸ்துராஜ் விவகாரத்தை மறைப்பது ஏன்? கன்னியாஸ்திரியின் உரிமைகள் பற்றி ஏன் விவாதிக்கப்படவில்லை?

ஒக்ரோபர் 1, 2017

கட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட கிறிஸ்துராஜ் விவகாரத்தை மறைப்பது ஏன்? கன்னியாஸ்திரியின் உரிமைகள் பற்றி ஏன் விவாதிக்கப்படவில்லை?

Saint Patrick School - Priest, Nun kissing 21-09-2017-DM

கன்னியாஸ்திரிக்கு முத்தம் கொடுத்த பாதிரி: சென்னை, பரங்கிமலை பகுதியில், செயின்ட் பேட்ரிக் சர்ச்[1] என்ற, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது[2]. இத்தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பிரபலமான பள்ளி என்பதால் பெரிய பணக்காரர்களின் குழந்தைகள்தான் படித்து வருகின்றனர். இங்கு இடம் கிடைப்பதே மிக அரிது. அங்குள்ள, பாதிரியார் கிறிஸ்துராஜும், ஒரு கன்னியாஸ்திரியும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம், சமூகவலை தளங்களில், பரவி வருகிறது[3]. அங்குள்ள பள்ளியில், பாதிரியார் கிறிஸ்துராஜ், தாளாளராகவும்; அந்த கன்னியாஸ்திரி, ஆசிரியையாகவும் பணி புரிகின்றனர். அவர்கள் இருவரும் முத்தமிட்டு கொள்வது போன்ற படம் மற்றும் செல்பி படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்த உண்மை தன்மையை, ஆலய மறை மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது. இந்த புகைப்படம், தேவாலய பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, அவர்களின் நெருக்கமான படத்தோடு, குரங்கு முத்தமிட்டு கொள்வது போன்ற படங்களை இணைத்து, சிலர், சமூக வலைதளங்களில், ‘மீம்ஸ்’ வெளியிட்டுள்ளனர்[4].

Saint Patrick School - Priest, Nun kissing 21-09-2017-Dinakaran

கிறிஸ்தவ செக்ஸ் விவகாரங்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்: சென்னை, தமிழகத்தைப் பொறுத்த வரையில், கிருத்துவ பாலியல் விவகாரங்கள் தொடர்ச்சியாக வெளியில் வந்து அசிங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை சரிசெய்து கொள்ளாமல், தங்களாது அதிகாரம், பணபலம் முதலியவற்றை வைத்துக் கொண்டு அமுக்கவே பார்க்கின்றனர். இச்செய்தி கூட தினமலர் மற்றும் தினகரன் என்ற தமிழ் நாளிதழ்களில் வந்துள்ளனவே அன்று மற்றவற்றில் வந்ததாகத் தெரியவில்லை. ஆங்கில ஊடகத்தில் எதுவுமே வரவில்லை என்றே தெரிகிறது. அந்த “குர்மித் ராம் ரஹீம்” பற்றி கொஞ்சம் செய்திகள் வந்தன ஆனால், அடங்கி விட்டன. செக்யூலரிஸத்தில் இதை கவனிக்கும் போது அபாயகரமாக உள்ளது. பள்ளி என்றால் ஒழுக்கம், அதெல்லாம் வேண்டும் என்ற நிலையுள்ளதே, ஆனால், கிறிஸ்தவர்கள் ஏன் இவற்றை மறாஇக்கப் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை. இதெல்லாம் காமலீலைகள் மற்றும் செக்ஸின் வக்கிரங்களே ஆகும். இவற்றைப் பார்க்கும் யாரும் தெவீகத்தை நினைத்துப் பார்க்க மாட்டார்கள். ஏதோ, திரைப்படத்தைப் பார்க்க்கும் உணர்வுதான் கொள்வார்கள்.

G. Christu Raj, Rector, Parish priest, St.Patrick Church, Parangai malai

கட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்டும் காட்சிகள் பரவிய சமாசாரம்: அப்படி போட்டி நிறைந்த இந்த பள்ளியின் தாளாளர் ஒருவர் ஆசிரியையுடன் பள்ளியின் அலுவலக அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5]. சென்னையில் தற்போது இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பள்ளி தாளாளரும், ஆசிரியையும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து முத்தமிட்டு கொள்ளும் காட்சியை செல்பியாக எடுத்துள்ளனரா அல்லது வேறு யாராவது எடுத்து அதை சமூக வலை தளங்களில் பரப்பினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[6]. இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையற்றது என்றே தெரிகிறது. அந்த ஆசிரியையும் மறுப்பு தெரிவிக்காமல் அவருடன் சிரித்த முகத்துடனே முத்தங்களை பரிமாறிக் கொள்வதால் ஏற்கனவே இருவருக்கும் தொடர்பு இருக்கும் என்றே தெரிகிறது. என்று தினகரன் விவரிக்கிறது. படங்கள் உண்மை, அந்த இரு நபர்களும் உண்மை, செய்திகளும் வந்து விட்டன. கத்தோலிக்கத்தைப் பொறுத்த வரையில், திருமணம் செய்து கொள்ளலாம் என்றால், திருமணம் செய்து கொண்டு, விசயத்தை நிறுத்தி விடலாம்.இல்லையென்றாலும், அமுக்கத்தான் போகிறார்கள்.

G. Christu Raj Gali, Rector, Parish priest, St.Patrick Church, Parangai malai-5

சர்ச்சின் பாதிரி கொக்கோகத்தில் ஈடுபட்டது ஏன்?: ஆனால், பள்ளி வளாகத்தில் இதுபோன்ற காரியங்களில் தாளாளரும், ஆசிரியையும் ஈடுபட்டு அதை செல்போனில் பதிவு செய்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த புகைப்படங்கள் அனைத்தும் மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாளாளரின் இந்த காம லீலைகள் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. தாளாளர் மற்றும் ஆசிரியையிடம் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் தொடர்பாக பலர் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டது என்றும், மற்றவர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தும் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றாலும், போலீசார் விசாரணை நடத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பள்ளியின் தாளாளர் தற்போது பரங்கிமலையில் உள்ள ஒரு தேவாலயத்தின் பாதிரியாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்புள்ள பாதிரி கொக்கோகத்தில் ஈடுபட்டது ஏன் என்று கவனிக்காமல், சுற்றி வளைத்து விவாதிப்பது ஏன்?

G. Christu Raj Gali, Rector, Parish priest, St.Patrick Church, Parangai malai-2

யார் இந்த கிறிஸ்துராஜ் பாதிரி?: ஜி. கிறிஸ்துராஜ் பாதிரி, பாஸ்டர், தாளாளர் என்று பல பொறுப்புகளில் இருக்கும் இவர், பாதர் கிறிஸ்துதாஸ் கலி என்ற பெயரிலும் அறியப்படுகிறார்[7]. தெலுங்குக்காரராக இருப்பார் போலும். செயின்ட் பேட்ரிக் சர்ச் மற்றும் அந்த கட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் பொறுப்பிலும் இருப்பது தெரிகிறது[8]. கூகுள்-பிளஸ்-ல் இருக்கும் படங்களில் இவர் பல பெண்களுக்கு ஆசிர்வாதம் செய்வது போல இருக்கிறது. ஆக, போலிகள் கூட இப்போலிகள் எல்லாம் சேர்ந்து விட்டன போலும். எனவே, இனி கட்டுக்கதை, பள்ளியின் மானம், முதலியவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் மெத்தப் படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகாரிகள்….. என்றெல்லாம் இருப்பவர்கள் அனைத்தையும் அமுக்கி விடவே பார்ப்பர். இனி அந்த கன்னியாஸ்திரியின் உரிமைகள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள், இன்று சினிமா நடிகையின் உருமைகள் பற்றி டிவி செனல்களில் பிரமாதமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், கன்னியாஸ்திரிக்கள் இவ்வாறு பாலியக்ல் ரீதியில் சதாய்ப்பது பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை, கிருத்துவ சமாச்சாரம் என்றால், சும்மா இருக்க வேண்டும் என்று ஆணையிடப் பட்டுள்ளது போலும். அதிமுக விவகாரத்தைப் பற்றி தினமும் ஒப்பாறி வைக்கும் தமிழ் செனல்கள் கூட இவற்றைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

G. Christu Raj Gali, Rector, Parish priest, St.Patrick Church, Parangai malai

கிறிஸ்தவ பள்ளி விவகாரங்களை மைனாரிடி ரீதியிலேயே அமுக்கி விடலாமா?: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லப் பட்டனர் என்று விவாதம். ஆனால், கிறிஸ்தவ பள்ளி-கல்லூரிகளில் பல பிரச்சினைகளுக்கு மாணவ-மாணவியர்களை தெருக்களுக்குக் கொண்டு வந்ததையும், அவற்றைப் பற்றிய புகைப் படங்கள் வந்ததையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. பிரச்சினை ஒன்று என்றால், அப்பிரச்சினை ஒரே மாதிரியாக அணுகப்பட வேண்டும், அலசப்பட வேண்டும், முடிவுகள்-தீர்பவுகள் காணப்படவேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது. அந்நிலையில் இந்த கிஸ் அடிக்கும் படங்களும் அமுக்கப்படும், விவாகாரமும் குழித் தோண்டி புதைக்கப்படும். இதே பாதிரி, நாளைக்கு, கருத்தரங்க்களில் பெண்ணியம், பெண்ணிய உரிமைகள், அவற்றைப் போற்றிக் காப்பது எப்படி என்றெல்லாம் பேசுவார். அவற்றை ஆங்கில ஊடகங்கள் தாராளாமாக படங்களுடன் செய்திகளை வெளியிடும். அப்பொழுது  கட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட கிறிஸ்துராஜ் தானா இது என்று யாரும் கேட்க மாட்டார்கள்!

 

© வேதபிரகாஷ்

30-09-2017

G. Christu Raj Gali, Rector, Parish priest, St.Patrick Church, Parangai malai-3

[1]  தினமலர் “சென்ட் பேட்ரிக்” என்று குறிப்பிட்டது, திருத்தப்பட்டுள்ளது.

[2] St. Patrick’s Church – Rev. Fr. G. Christuraj – Rector & Parish Priest –  http://stpatrickschurch.in/reach.php</p>

[3] தினமலர், பாதிரியார் ‘கிஸ்’விவகாரம்: வலைதளங்களில் கிண்டல், பதிவு செய்த நாள். செப்டம்பர்.21, 2017.00..19.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1859580

[5] தினகரன், பரங்கிமலையில் பிரபல பள்ளியின் தாளாளர்ஆசிரியை நெருக்கம்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் போட்டோக்களால் பரபரப்பு, 2017-09-21@ 00:38:35.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=337270

[7]Fr.christuraj Gali – https://plus.google.com/110646873759867618222

[8] http://www.stthomasmount.org/contact.php

மேரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வழிபாடு செய்கிறோம்!

ஜூன் 14, 2010

மேரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வழிபாடு செய்கிறோம்!

லிங்கத்தை, மேரியைத் தொடலாமா? கிருத்துவர்கள் தேவையில்லாமல் இந்த பிரச்சினையைக் கிளப்பி விட்டிருக்கிறார்களா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா என்பது போகப்போகத் தெரியும். கிருத்துவ-கத்தோலிக்க ஏஜென்ட் தெய்வநாயகம் முதலில் சாந்தோம் சர்ச்சில் சென்று வழிபடுவேன் என்று ஆரம்பித்த கதை இப்பொழுது திசைத் திரும்பியிருக்கிறது.  லிங்கத்தைத் தொட்டு வழிபட வேண்டும் என்று கிருத்துவர்கள் ஆரம்பித்தபோது, வேறொரு கூட்டம், மேரியை தொட்டு வணங்க வேண்டும் என்று சாந்தோம் சர்ச்சில் நுழைய திட்டமிட்டதாகத் தெரிகிறது[1]. பயந்து போன சின்னப்பா, தெய்வநாயகத்தை வேறுவிதமாக முடுக்கிவிட்டிருக்கிறார்.

கிருத்துவ செபாஸ்டியன் சீமான்-தெய்வநாயகம் முதலியோருக்கு என்ன அப்படி ஆசை? கபாலீஸ்வரர் லிங்கத்தை காசி விஸ்வநாதர் லிங்கத்தைப் போல தொட்டு வழிபாடு செய்ய ஆசையாம். அதற்கு கிருத்துவ செபாஸ்டியன் சீமான்-தெய்வநாயகம் கோஷ்டி போராட்டமாம். இப்பொழுதைக்கு, இவர்களுக்கு வேறு வேலையில்லை எனத்தெரிகிறது. பிரபாகரனை வைத்து வியாபாரம் செய்ததெல்லாம், இப்பொழுது பருப்பு வேகுவதில்லை போலும். ஆகவே, இப்படி, மற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்துப் பார்க்கின்றார்கள்.

மேரியைத் தொடலாமா, கட்டிப் பிடிக்கலாமா? ஆமாம், அதே மாதிரி மேரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வழிபாடு செய்கிறோம் என்று இந்துக்களோ அல்லது இந்த கிருத்துவ செபாஸ்டியன் சீமான்-தெய்வநாயகம் கோஷ்டிகளோ கிளம்பிவிட்டாலோ என்ன செய்வது? ஆனால், அத்தகைய பழக்க-வழக்கம் கிருத்துவத்தில் உள்ளது. கிருத்துவர்கள், மேரியின் சிலைகளைத் தொட்டு, தடவி, ஏன் முத்தம் கூட கொடுப்பது உண்டு. ஆகவே, தெய்வநாயகம் போன்ற கிருத்துவர்கள் அவ்வாறு ஆசைப்பட்டால், மேரியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவரது இஷ்டப்படி வழிபடலாம். ஆனால், கபாலீஸ்வரர் கோவிலிற்குள் நுழைவேன், லிங்கத்தைத் தொடுவேன், தொட்டு வழிபடுவேன் என்றெல்லாம், அந்த கிருத்துவன் உளறிக்கொண்டிருந்தால், பாவலர் ராமசந்திரன் போன்ற கிறுக்குகள் யோசிக்காமல், இப்படி நடந்து கொள்வது சைவத்திற்கே இழுக்கு. ஆறுமுக நாவலர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இந்த பைத்தியங்களுக்கெல்லாம் சரியான வைத்தியம் பாத்திருப்பார்.

Salus Populi Romani

St. Luke is said to have written the famous “Salus Populi Romani” (“Protector of the Roman People”) Hodegetria-style icon, shown at right, which was brought from the Holy Land to Rome by Helena, Constantine’s mother. Salus Populi Romani by St. Luke

Our Lady With Three Hands

Another Hodegetria-style icon you should be familiar with is the icon known as “Virgin Tricherousa,” or “Our Lady With Three Hands.”

Our Lady of Czestochowa

The icon of Our Lady of Czestochowa — another icon in the Hodegetria style —  One of the “Black Madonnas,” she can be recognized by her dark skin tone.

கிருத்துவத்தில் அத்தகைய வழிபாடோ, சடங்கோ புதியது அல்ல. அவர்களைப் பொறுத்தவரைக்கும் தொட்டுத்தான், கட்டியணைத்துதான், ஏன் முத்தமிட்டுதான் வழிபாடு செய்வது வழக்கம். அதுமட்டமல்லாது, முட்ட முட்ட மது-சாராயம் குடித்து விட்டு, மாமிசத்தையும் புசித்துவிட்டு, அத்தகைய சால்லாப வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.

கிருத்துவரான தெய்வநாயகம், அவரது மகள் தேவகலா, செபாஸ்டியன் சீமான்,  முதலியோருக்கு அந்த ஞாபகம் வந்து விட்டது போலும்.

தொடுதல், எச்சில் செய்தல், முதலியன:

  1. அப்பத்தை எச்சில் படுத்தி கொடுப்பதை பிரசாதமாக உண்கிறார்கள்; அதேபோல மேரியையும் விட்டுவிடுவார்களா?
  2. உண்மையான கிருத்துவர்கள் நம்பிக்கையாக யூகேரிஸ்டில் ரொட்டி-சாராயம், ஏசுவினது உடலாகவும், ரத்தமாகவும் மாறுவதாகா நினைத்துப் புசித்திட-குடித்திட வேண்டும்[2].
  3. அதைவிடுத்து, உண்மையாகவே பிணத்தை வைத்துக் கொண்டு அவ்வாறு செய்வார்களா?
  4. இவ்வாறு, எல்லாவற்றையும் நிதர்சனமாகவே செய்யவேண்டும் என்றால், இந்தியமுறைப்படி தொடலாம் என்றால், மேனாட்டு முறைப்படிக் கட்டிக் கொள்ளலாம், காபாவிற்கு முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுக்கலாம்.
  5. முதலில் அதுமாதிரி சர்ச்சில் செய்து பழகிக்கொள்ளலாமே?
  6. அதை விடுத்து கிருத்துவர்கள், கபாலீஸ்வரர் கோவிலின் மீது ஏன் கண் வைக்க வேண்டும்?

[1] இதுவும் கிருத்துவர்களின் தூண்டுதல் பேரிலேயே உருவானது. கிருத்துவ பின்னணி தெரிந்து விடுமோ, என்று பயந்து பின்வாங்கிவிட்டனர்.

[2] குற்றப்பத்திரிக்கை / டாவின்ஸி கோட் – புத்தகம் / திரைப்படத்தில், இதற்கான விவரங்கள் உள்ளன.

சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

ஏப்ரல் 20, 2010

சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

முன்பு கடற்கரையில் இருந்த புனிதமான கபாலீஸ்வரர் கோயிலை கத்தோலிக்க மதவெறியோடு 16ம் நூற்றாண்டில் இடித்துத் தள்ளி அங்கு சாந்தோம் சர்ச் மற்றும் பிஷப் இல்லம் என்றெல்லாம் கட்டிக் கொண்டு பிழைப்பு நடத்தும் கிருத்துவக் கூட்டங்களுக்கு சில கேள்விகள்:

1. சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

2. பிஷப் இல்லத்தை இடித்துவிட்டு வெளியேறுவார்களா?

3. மறைத்து வைக்கப் பட்டுள்ள சிற்பங்களைத் திருப்பித் தருவார்களா?

4. சாந்தோம் சர்ச்சின் வராண்டாவில் இருந்த, கல்வெட்டுத்துறையினரால், 12ன் நூற்றாண்டு கல்வெட்டு என்ற்ய் படுத்துக் காட்டப்பட்ட, நடராஜர்க்கு இரவ்ல் விளக்கெரிக்க வரியில்லாமல் கொடுக்கப் பட்ட நில மானியத்தைக் குறிக்கின்ற அந்த கல்வெட்டு எங்கே?.

5. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்திலுள்ள சமஸ்கிருத கல்வெட்டு, சர்ச்சின் மேற்கு திசையில் 100 முழ தூரத்தில் கிடைத்தது.  அது எங்கே போயிற்று?

8. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வேட்டு, சாந்தோம் செமினரியின் பிரதான கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலது புறத்தில் காணப்பட்டது. இப்பொழுது சாந்தோ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கிருத்துவர்கள் கூறுகிறார்கள். அது எங்கே?

9. இதைத் தவிர, தாமரைப்பூ உருவம் பொத்தித்த சிற்பங்கள் சர்ச்சின் வலப்புற வெளியில் நேர்பகுதியில் இரண்டும், பிஷப் இல்லத்திற்கு செல்லும் வாயிலின் இருபுறபும் இரண்டு 1990 வரை இருந்தன. ஆனால்,  இன்று எல்லாமே மறைந்து விட்டன! அவையெல்லாம் எங்கே போயிற்று?

10. தொல்பொருட்துறை / அகழ்வாய்வுத் துறைகளுக்குத் தெரியாமல், அறிவிக்காமல் எப்படி அவை அப்புறப்படுத்தப் பட்டிருக்க முடியும் அல்லது மறைக்கப் பட்டிருக்கக்கூடும்?

கோயிலைப் பற்றிய உண்மைகளை, ஆதாரங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? பின்னணி என்ன?

சரித்திரத்தையே மறைக்கும் செயலாகிறது. பிறகு எப்படி பொறுப்புள்ள சரித்திர ஆசிரியர்கள், பழங்கால கட்டிடங்களைப் போற்றவேண்டும் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஆர். முத்தையா போன்ற ஆட்கள் மௌனமாக இருக்கிறார்கள்?