Posts Tagged ‘கடற்கரையில் இருந்த கோயில்’

சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

ஏப்ரல் 20, 2010

சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

முன்பு கடற்கரையில் இருந்த புனிதமான கபாலீஸ்வரர் கோயிலை கத்தோலிக்க மதவெறியோடு 16ம் நூற்றாண்டில் இடித்துத் தள்ளி அங்கு சாந்தோம் சர்ச் மற்றும் பிஷப் இல்லம் என்றெல்லாம் கட்டிக் கொண்டு பிழைப்பு நடத்தும் கிருத்துவக் கூட்டங்களுக்கு சில கேள்விகள்:

1. சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

2. பிஷப் இல்லத்தை இடித்துவிட்டு வெளியேறுவார்களா?

3. மறைத்து வைக்கப் பட்டுள்ள சிற்பங்களைத் திருப்பித் தருவார்களா?

4. சாந்தோம் சர்ச்சின் வராண்டாவில் இருந்த, கல்வெட்டுத்துறையினரால், 12ன் நூற்றாண்டு கல்வெட்டு என்ற்ய் படுத்துக் காட்டப்பட்ட, நடராஜர்க்கு இரவ்ல் விளக்கெரிக்க வரியில்லாமல் கொடுக்கப் பட்ட நில மானியத்தைக் குறிக்கின்ற அந்த கல்வெட்டு எங்கே?.

5. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்திலுள்ள சமஸ்கிருத கல்வெட்டு, சர்ச்சின் மேற்கு திசையில் 100 முழ தூரத்தில் கிடைத்தது.  அது எங்கே போயிற்று?

8. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வேட்டு, சாந்தோம் செமினரியின் பிரதான கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலது புறத்தில் காணப்பட்டது. இப்பொழுது சாந்தோ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கிருத்துவர்கள் கூறுகிறார்கள். அது எங்கே?

9. இதைத் தவிர, தாமரைப்பூ உருவம் பொத்தித்த சிற்பங்கள் சர்ச்சின் வலப்புற வெளியில் நேர்பகுதியில் இரண்டும், பிஷப் இல்லத்திற்கு செல்லும் வாயிலின் இருபுறபும் இரண்டு 1990 வரை இருந்தன. ஆனால்,  இன்று எல்லாமே மறைந்து விட்டன! அவையெல்லாம் எங்கே போயிற்று?

10. தொல்பொருட்துறை / அகழ்வாய்வுத் துறைகளுக்குத் தெரியாமல், அறிவிக்காமல் எப்படி அவை அப்புறப்படுத்தப் பட்டிருக்க முடியும் அல்லது மறைக்கப் பட்டிருக்கக்கூடும்?

கோயிலைப் பற்றிய உண்மைகளை, ஆதாரங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? பின்னணி என்ன?

சரித்திரத்தையே மறைக்கும் செயலாகிறது. பிறகு எப்படி பொறுப்புள்ள சரித்திர ஆசிரியர்கள், பழங்கால கட்டிடங்களைப் போற்றவேண்டும் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஆர். முத்தையா போன்ற ஆட்கள் மௌனமாக இருக்கிறார்கள்?