Archive for the ‘விஷ அம்பு’ Category

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [2]

நவம்பர் 28, 2018

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [2]

Andaman tribes killed missionary - 21-11-2018.2

ஜான் ஆலன் சௌ பற்றிய விவரங்களை அம்மெரிக்கத் தூதரகம் கொடுக்க மறுத்தது / மறுப்பது ஏன்?: வடக்கு சென்டினல் தீவில் உள்ள அலனின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பழங்குடியினத்தவருக்கான தேசிய ஆணையம், அலன் கொலை சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையையும், வெளிநாட்டினர் உள்ளிட்ட பிறர் செல்ல தடை விதிக்கப்பட்ட தீவுகள் குறித்த விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான்- நிகோபார் தீவு நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.    “அந்த தீவில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் நிற்கிறோம். ஆனால், இன்னமும் ஜான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு இன்னமும் சில நாட்கள் ஆகலாம்” என்று ஏ.எஃப்.பி [AFP] செய்தி முகமையிடம் கூறியுள்ளார் அந்தமான் நிக்கோபர் தீவின் தலைமை இயக்குநர் தேவேந்திர பதக். நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பதில் உதவுவதற்கு அவர்கள் மானுடவியலாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பழங்குடி நல அலுவலர்கள் உள்ளிட்ட கள வல்லுநர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். எவ்விதத்திலும் அவர்களையோ, அவர்களது வாழ்விடத்தையோ தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தேவேந்திர பதக் கூறியுள்ளார். அதேநேரம், அமெரிக்கப் பயணி குறித்த தகவல்களைத் தர அமெரிக்க தூதரகம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது[1].

Survival international warning 26-11-2018

சென்டினல் தீவின் பழங்குடிகள், அவர்களது வாழ்க்கை முறை பாதுகாக்கவேண்டும்: சென்டினல் தீவில் இருப்பவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக அந்தத் தீவை நெருங்குவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது. ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும்[2]. இதனால்தான் அவர்களது தனிமை பேணப்படுகிறது. அந்நிலையில், இவன் அங்கு ஏன் செல்லவேண்டும்? “வாழும் உரிமை இயக்கம்” முன்னமே, அவன் அங்கு சென்றதைக் கண்டித்துள்ளது[3]. இப்பொழுதும், அவனது உடலை வெளியே எடுத்து வரவேண்டாம், அப்படி செய்தால், அனைவருக்கும் ஆபத்து என்று எச்சரித்துள்ளது[4]. அவனுடலை எடுத்து வந்தால், எடுத்து வரும் நபர்கள் / போலீஸார் மற்றும் அந்த பழங்குடிகளும் ஆபத்து உள்ளது[5]. அவர்கள் எல்லோருமே அழிந்து விடுவர், அதாவது, ஏதாவது, மர்மமான நோய் வந்து இறந்து விடுவர் என்ற ரீதியில் எச்சரித்துள்ளது[6]. அது மட்டுமா, முன்னர் அவர்கள் “டிரைப்ஸ்” நாகரிகமற்றவர் என்ற தொனியில் பேசி, அறிக்கை விட்ட தோரணையை மாற்றி மேனாட்டவர் அறிக்கை விட ஆரம்பித்துள்ளனர்[7]. ஆஸ்திரேலிய சர்ச்சைக்குரிய பாலைன் ஹான்ஸன், சென்டினல் கலாச்சாரம் அழகானது, அருமையானது, போற்றப் படக் கூடியது என்றெல்லாம் வாரி இறைத்திருக்கிறார்[8].

Andaman tribes killed missionary - 21-11-2018.Tamil news cutting

கிறுக்கனா, பைபிள் வெறியனா, ஆபத்தானவனா?: அவரன் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளான். அந்த தீவை நோக்கி தாம் மேற்கொண்ட முந்திய பயணம் ஒன்றின்போது அவன் “என் பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று அவர் பழங்குடிகளைப் பார்த்து கத்தியதாகவும், ஒரு பழங்குடி எறிந்த அம்பு அவரது பைபிளை துளைத்ததாகவும் வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது குடும்பத்துக்கு அவன் எழுதிய கடைசி குறிப்பில், “நான் கிறுக்கன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசுவை அந்த மக்களுக்கு பிரகடனப்படுத்துவது அவசியமானது என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், ‘கடவுளே நான் இறக்க விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கத்தரிக்கோல், ஊக்கு பின், கால்பந்து ஆகியவற்றை ஜான் அந்த பழங்குடியினருக்கு பரிசளிக்க எடுத்துச் சென்றதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

John Chau letter - plan to convert

இயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே அவன் அவ்வாறு செய்தானாம்![9]: இயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே இப்படிச் செய்வதாகவும், தாம் கொல்லப்பட்டால் பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம் என்றும் அவன் கூறியதாக, அந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்[10]. இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது. “ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார். சென்டிலீஸ் பழங்குடிகள் மீது அவருக்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறிய அவர்கள், அவர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், எனவே கைது செய்யப்பட்ட அவரது அந்தமான் நண்பர்களை விடுவித்துவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.

John Chau -illegal entry-- plan to convert-landed

ஜான் ஆலன் சௌ யார்?: ஏதோ ஒற்றனைப் போல ரகசியமாக, திருட்டுத் தனமாக சென்ற இந்த ஜான் யார் என்று பிபிசி கொடுக்கும் தகவல்கள்[11]:

  1. கிருத்துவ மிஷினரி: எல்லோராலும் ஒப்புக் கொண்ட விசயம் இது. அவன் படித்ததே ஊழியம் செய்வதற்குத் தான்.
  2. ஊரைச் சுற்றிப் பார்ப்பவன்: சமூக ஊடகங்களில் தன்னை ஒரு ஊர்சுற்றுவதில் விருப்பம் கொண்டவன் போல சித்தரித்துள்ளான்.
  3. சட்டத்தை மீறி உள்ளே நுழைந்தவன்: ஐந்தாறு முறை அவன் சட்டத்திற்கு புறம்பாக, சென்டினல் தீவிற்கு சென்றுள்ளான். மீனவர்களுக்கு பணம் கொடுத்து சென்றான்.
  4. அரைகுறை வைத்தியன்: கொஞ்சம் மருத்துவம் படித்துள்ளவனாக தெரிகிறது என்கின்றனர் சிலர்.
  5. பழங்குடி மக்களை அழிக்கக் கூடிய ஆபத்தானவன்[12]: ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று தெரிந்தும் அவன் சென்றிருக்கிறான்.

© வேதபிரகாஷ்

28-11-2018

John Chau -bble-rejected by sentinel

[1] https://www.vikatan.com/news/india/142814-american-killed-by-sentinelese-tribe-on-restricted-andaman-island.html

[2] USA TODAY, Don’t recover American missionary’s body from Indian island, advocacy group urges police, Ashley May, Published 8:35 a.m. ET Nov. 27, 2018 | Updated 11:27 a.m. ET Nov. 27, 2018

[3] https://www.usatoday.com/story/news/world/2018/11/27/dont-recover-john-allen-chaus-body-indian-tribe-group-warns/2123399002/

[4] Survival International’s Director Stephen Corry today issued the following statement: “We urge the Indian authorities to abandon efforts to recover John Allen Chau’s body. Any such attempt is incredibly dangerous, both for the Indian officials, but also for the Sentinelese, who face being wiped out if any outside diseases are introduced.

“The risk of a deadly epidemic of flu, measles or other outside disease is very real, and increases with every such contact. Such efforts in similar cases in the past have ended with the Sentinelese attempting to defend their island by force.

“Mr Chau’s body should be left alone, as should the Sentinelese. The weakening of the restrictions on visiting the islands must be revoked, and the exclusion zone around the island properly enforced.”

[5] Survival International, Survival International urges “no recovery” of body in Sentinelese case, November 26, 2018.

[6] https://www.survivalinternational.org/news/12036

[7] NewsHub, Pauline Hanson supports Sentinelese tribe’s ‘beautiful’ culture, immigration policy, by  Jamie Ensor, 28/11/2018

[8] https://www.newshub.co.nz/home/world/2018/11/pauline-hanson-supports-sentinelese-tribe-s-beautiful-culture-immigration-policy.html

[9] பிபிசி. தமிழ், அந்தமானில் அமெரிக்கரை கொன்ற பழங்குடிகள் : யார் இவர்கள்? என்ன நடந்தது?, 22 நவம்பர் 2018.

[10] https://www.bbc.com/tamil/global-46304158

[11]  BBC, John Allen Chau: Who was US man killed in remote islands?, 21 November 2018.

[12] https://www.bbc.com/news/world-us-canada-46293221