Archive for the ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ Category

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப்படுவது, மதம்-உயர்வு, ஜாதி-கீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! (1)

மே 7, 2023

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்உயர்வு, ஜாதிகீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! (1)

தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல்: எப்படி கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல திராவிடத்துவ வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை. அல்லது, திராவிடத்துவ வாதிகளுக்கு எப்படி ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல கிறிஸ்தவர்களுக்கு வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை, எனலாம். கேட்டால் “திராவிட மாடல்” என்று சொல்லிக் கொள்வார்கள். கிறிஸ்தவர்களாக மாறினால், அப்படியே உயர்ந்து விடுகின்றனர், உச்சத்தைத் தொட்டு, சொர்க்கத்திற்கே சென்று விடுகின்றனர் என்பது தான் பிரச்சாரம், இறையியல் கவர்ச்சி, எல்லாம். பிறகு, இல்லை, சாதி இருக்கிறது, ஜாதி இருக்கிறது, தீட்டு இருக்கிறது, தீண்டாமை இருக்கிறது, என்றெல்லாம் புலம்புவது ஏன் என்று தெரியவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, தமாசாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரையும் மிஞ்சும் ஸ்டாலின்:  தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது[1]. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது[2]. ஏப்ரல் 18, 2023 அன்று மத மாறிய எஸ்.சி கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து அந்த எஸ்.சி அந்தஸ்து, இடவொதிக்கீடு முதலிய சலுகைகள் அளிக்கப் பட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது[3]. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்டியிலன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப்பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்[4]. அதாவது, அபேத்கரையும் மிஞ்சும் சட்டஞானம் பெற்று, இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் கூறியது கவனிக்கத் தக்கது.

ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. என்று வாதிக்கும் திராவிட மாடல், திராவிடத்துவம் தமாஷாக இருக்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார். அப்பொழுது, சட்டநிலை என்பதை எல்லாம் கவனிக்காமல், அரசியல் ரீதியில் அவ்வாறு செய்தது விமர்சனத்தை எதிர்கொண்டது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா உச்சநீதி மன்ற தீர்ப்பே, தமிழகத்திலிருந்து தான் உருவாகியது. அப்பொழுது, சென்னை உயர்நீதி மன்றம் மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தபொழுது, அதனை ஆதரித்து மனு தாக்கல் செய்தது. ஆனால், சூசை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார், ஆனால், தோல்வியடைந்தார். அதாவது, மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து எந்த சீராய்வு மனுவை யாரும் தாக்கல் செய்யவில்லை. அப்பொழுது, உச்சநீதி மன்றம் எடுத்துக் காட்டியது, “கிறிஸ்துவர்கள் தங்கள் மதத்தில் ஜாதி மற்றும் தீண்டாமை உண்டு,” என்று மெய்ப்பித்தால், ஒருவேளை அவ்வாறு கேட்கலாம் என்று கோடிட்டு காட்டியது.

கிறிஸ்துவாஜாதியாதீண்டாமையா?: கிறிஸ்துவர்கள் உஷாராகி, இவ்விசயத்தில் கப்சிப் என்றாகினர். இருப்பினும், அவ்வப்பொழுது, “தலித் கிறிஸ்துவர்” என்று கலாட்டா செய்து வருவர். ஆனால், இப்பொழுது 2023ல் முரண்பட்ட நிலைகளை தமிழக அரசு எடுப்பது, மாநிலத்திற்கு மட்டுமல்ல, சட்டநிலைக்கும் இழுக்காகும். சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இவ்வாறான, நாடகங்களை, திமுக அரங்கேற்றி வருகிறது. பொதாகுறைக்கு, “ஆதிதிராவிடர்” என்ற பிரயோகத்தையும் கவனிக்க வேண்டும். கருணாநிதி 35% உள்-ஒதுக்கீடு என்றபோது, கிறிஸ்துவர் தேவையில்லை என்று ஒதுங்கினர், ஏனெனில், சில பகுதிகளில், அதை விட அதிகமாக சலுகை பெற்று வருகின்றனர். எனவே, இப்பொழுதும், பிரச்சினை இறையியல் ரீதியில் இருக்கிறது. இருப்பினும், அதனை மறைத்து, கிறிஸ்துவர் நாடகம் ஆடுகின்றனர். ஸ்டாலின் நன்றாக மாட்டி விட்டாரோ என்று கலங்கின்றனர். எனவே இரண்டு கூட்டங்களும் எவ்வாறு நாடகம் ஆடுகின்றன என்பதனை கவனிக்க வேண்டும்.

லாவண்யா தற்கொலையில் வெளிப்பட்ட மதம் மாற்றம்: பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யாவின் தற்கொலைக்கான அடிப்படை காரணத்தை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்தும், அச்சுறுத்தியும் நடைபெறும் மதமாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் மதமாற்ற தடை சட்டத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் 01-05-2023 செய்யப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் லாவண்யாவின் தற்கொலையை தமக்கு சாதகமாக திசை திருப்ப மனுதாரர் முயல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்பி வில்சன் சமர்ப்பித்த பதில் மனு: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தஞ்சை லாவண்யா பேசியதாக வெளியான வீடியோவை சிபிஐ விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை என்றும், மனுதாரரின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது[6]. மேலும்,  ‘மதம் என்பது சுதந்திரமானது[7]. எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது[8] என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை,” என்றால், மதமாற்றம் இல்லை என்று சொல்லவில்லை. அதேபோல, “கட்டாய மதமாற்றம்” சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்றும் பொருள் கொள்ளலாம். இந்து மதத்திற்கு எதிராக மட்டும் வேலை செய்யும் பெரியாரிஸம், திராவிட மாடல், இப்பொழுது, கிறிஸ்தவ ஆதரவாக வாதிட்டாலும், எதிர்ப்பது இந்துமத விரோதமாகத்தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

02-05-2023


[1] தமிழ்.நியூஸ்.18, தமிழ்நாட்டில் மதமாற்றம் நடக்கிறதா? தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்!.., NEWS18 TAMIL, First published: May 01, 2023, 13:31 IST, LAST UPDATED : MAY 01, 2023, 13:31 IST

[2] https://tamil.news18.com/national/anti-conversion-laws-and-lavanya-suicide-case-supreme-court-960615.html

[3] தினத்தந்தி, “கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் தனித்தீர்மானம், தினத்தந்தி ஏப்ரல் 19, 12:56 pm (Updated: ஏப்ரல் 19, 1:21 pm)

[4] https://www.dailythanthi.com/News/State/10-km-walktrainee-constable-fainted-955548?infinitescroll=1

[5] தினத்தந்தி/தந்திடிவி, பணம், பரிசு கொடுத்து அளித்து மதமாற்றம்..  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு, By தந்தி டிவி 1 மே 2023 10:07 PM

[6].https://www.thanthitv.com/latest-news/conversion-of-religion-by-giving-money-gifts-tamil-nadu-governments-reply-in-supreme-court-183670

[7] கலைஞர்.டிவி, தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றமே கிடையாது, பாஜக பொய்யை பரப்புகிறதுஉச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!,  , Praveen, Updated on : 1 May 2023, 02:07 PM

[8] https://www.kalaignarseithigal.com/politics/2023/05/01/there-is-no-forced-conversion-in-tamil-nadu-bjp-is-spreading-lies-tn-government-petition-in-supreme-court

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

ஜனவரி 13, 2023

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

தமிழகத்தில் மதமாற்ற முயற்சிகள்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகையால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது[1]. நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் மதமாற்றம் நடக்கிறது[2]. இதிலும், தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் மத மாற்றம் நடந்து வருகிறது[3]. இதுவும் தி.மு.க. ஆட்சியின்போதுதான் அதிகளவில் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இது வெட்ட வெளிச்சமானது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் நெற்றியில் விபூதி அணிந்து வரக்கூடாது, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, கையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் காப்பு, கயிறு அணியக் கூடாது என்றெல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறியது அம்பலமானது. மேலும், பகவத்கீதை கெட்டது, பைபிள்தான் நல்லது என்றும் கூறி மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம்: இவ்வாறு மதம் மாற்றுபவர்கள், ஏழை மக்களிடம் பணத்தாசை காட்டியும், படித்தவர்களிடம் மைனாரிட்டி என்பதால் எளிதில் அரசு வேலை கிடைக்கும் என்றும் கூறி மதம் மாற்றி வருகின்றனர். ஆனால், இவை எல்லாம் மறைமுகமாக நடந்து வந்த நிலையில், தற்போது பொதுவெளியிலேயே விளம்பரம் செய்து மதமாற்றம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் வேதனை. சென்னையில்தான் இப்படியொரு அவலம் நடந்திருக்கிறது. அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது[4]. அந்த விளம்பரத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள், தி.மு.க. அரசால் சலுகைகள் கிடைக்கும். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது[5].

உதயநிதி நான் கிறிஸ்தவன் என்றது, ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது: கடந்த வாரம் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும், எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்தான் என்றும், தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் ஹிந்துக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனிடையே, மேற்கண்ட விளம்பரப் பலகை குறித்து ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.

உண்மை அறிவோம்- ஹாக் செய்யப் பட்டது என்பது: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம்[6]. அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, தென்னாட்டு காந்தி அண்ணா நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்குச் சொந்தமான இடத்தில் அகமது இப்ராஹிம், என்பவர் ‘ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட்’ என்ற பெயரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இப்ராஹிம், கிளினிக் முன்பாக எல்.இ.டி., விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட் அண்டு ட்ரடிஷனல் ட்ரீட்மென்ட் என்ற வாசகத்தை ஒளிர செய்திருக்கிறார். இதனை யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஹேக் செய்து, அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள்; தி.மு.க., அரசால் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 10 லட்சம் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார். இதுபற்றி இப்ராஹிம் கிளினிக்கில் பணிபுரியும் கரீம் என்பவர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபரை தேடி வருகிறோம்,’’ என்றனர். எனவே, இது ஹேக்கிங் முறையில் நிகழ்ந்த தவறு, இப்படி யாரும் விளம்பரம் செய்யவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது[7].

ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் (Hack, hacking): மின்னணு துறையில், குறிப்பாக, மென்பொருள், உற்பத்தி, சாப்ஃட்வார் உருவாக்கத்தில் ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் என்பது சர்வ சாதாரணமான விசயமாகி விட்டது. ஒரு புரோக்ராம், எப்பொழுது ஒரு நபருக்கு மேல் தெரிய வருகிறதோ, அப்பொழுதே அந்த மின்னணு முறையில் ஊடுருவதல், திருடுதல், மாற்றுரு செய்தல், போலி தயாரித்தல், அவை மூலம் ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது என்றெல்லாம் சகஜமாகி விட்டது. இதனால், இன்னும் பலர் இவ்விசயங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர் கிறிஸ்துவர்களைப் பொறுத்த வரையில், இவையெல்லாம் அவர்களும் சர்வ சாதாரண விசயம் தான், சகஜமானது தான். பணத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரச்சினை இல்லை, அறுவடை தான் முக்கியம். சமீபத்தில் நடந்த அகில உலக மாநாட்டில் கூட, இதைப் பற்றி அதிகமாகவே விவாதிக்கப் பட்டது. ஹாக் செய்தாலும், அது நடந்துள்ளது உண்மையாகிறது. பிறகு அந்த ஹாக்கர் பைத்தியக்காரத் தனமாகவோ, முட்டாள் தனமாகவோ அத்தகைய ஹாக்கிங்கை, அவ்வாறு சிரமப் பட்டு செய்திருக்க மாட்டான். “ஐ லவ் யூ” என்று கூட போட்டிருப்பான். ஆகவே, இது திட்டமிட்டு செய்யப் பட்ட ஹாக்கிங் எனலாம். சொல்லி வைத்தது போல, இவ்விவகாரம் அப்படியே அமுக்கப் பட்டு விட்டது. இதற்கு மேல் எந்த செய்தியும் இல்லை, விவாதமும் இல்லை. கப்சிப் என்றாகி விட்டது.

© வேதபிரகாஷ்

12-01-2022


[1]  தினமலர், 31-12-2022.

[2] மீடியான்.காம், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 லட்சம்: விளம்பர பலகையால் சர்ச்சை; உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?!, Karthikeyan Mediyaan News

[3] https://mediyaan.com/chennai-ambattur-advertisement-christian-conversion/

[4] தினமலர், மத மாற்ற விளம்பரம் அம்பத்துாரில் சலசலப்பு, Added : ஜன 01, 2023  00:16

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3207595

[6] பேக்ட்.செக், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?, January 12, 2023 Fact Crescendo Team.

[7] https://tamil.factcrescendo.com/dmk-govt-not-paying-10-lakh-for-those-who-converting-to-christianity/

கலைவாணர் அரங்கத்தில் இந்து மத மாநாடு, தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார் – இப்படி தடாலடியாக கிருத்துவர் நடத்தும் நிகழ்ச்சி! (1)

ஒக்ரோபர் 22, 2022

கலைவாணர் அரங்கத்தில் இந்து மத மாநாடு, தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார்இப்படி தடாலடியாக கிருத்துவர் நடத்தும் நிகழ்ச்சி! (1)

கிருத்துவர் நடத்தும் இந்துமத மாநாடு: “இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[1]. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் தாக்கல் செய்துள்ள வழக்கில்[2], தனக்கு சம்பந்தமே இல்லாத விவகாரங்களைக் குறிப்பிட்டு வழக்கு போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது. இதுவரை, அவர் மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் கிருத்துவ பிஷப்புகள் கத்தோலிக்க நிறுவனங்கள் மற்ற இயக்கங்களின் செயல்பாடுகளை கவனித்தால், வேண்டுமென்றே பிரபலம் பெற வேண்டும், நீதிமன்றம் வைத்துக் கொண்டு விளம்பரம்  பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தொடரப் பட்ட வழக்கு என்பதனை தெரிந்து கொள்ளலாம். முன்பே இவ்வாறு பலமுறை பல இடங்களில் மாநாடு நடத்துகிறேன் என்று கலாட்டா செய்திருக்கிறார்[3].

மனுவில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது?: மனுவில் சொல்லப் பட்டுள்ளதாவது, “இந்து ராஷ்ட்ரா என்ற பெயரில் புதிய வரைவு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்து ஆர்எஸ்எஸ் திட்டமிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது[4]. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்வித பங்கையும் அளிக்காத ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்து மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கும் வகையிலும், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் வரைவு அரசியலமைப்பை உருவாக்கி இருக்கிறது[5]. மத சார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், யாரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடனும் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது[6]. இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்கபாலீஸ்வரர் கோவிலின் கல்வெட்டிலிருந்து இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்என்ற தலைப்பில் மாநாடு நடத்த அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார். கூட்டத்திற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே எனது மனுவை பரிசீலித்து, மாநாட்டிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தினசரி,” என்ற இணைதளம் அதை அப்படியே காப்பியடித்து செய்தியாகப் போட்டுள்ளது[7]. இந்த செய்தி ஏன், இதன் பின்னணி என்ன, போன்ற விசயங்களை ஆய்வதில்லை, படிப்பவர்களுக்குத் தெரிவிப்பது இல்லை. இணைதளத்தில் என்ன கிடைத்தாலும், காப்பியடித்து போட்டு விடவேண்டும் என்ற ஒருவிதமான வெறியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனை இந்துத்துவவாதிகளும் செய்து வருகிறார்கள்.

இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்என்ற தலைப்பில் மாநாடு: என்று அந்த தன்னை “ஆராய்ச்சியாளர்” என்று சொல்லிக் கொண்டு உலா வரும் அந்த நபர், அடிப்படைவாத கிருத்துவர், இந்துமத துவேசி மற்றும் ஓப்பீட்டு ஆராய்ச்சி போர்வைவில் அரைகுறை வேக்காட்டுகளை புத்தகங்களாக போட்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார், போன்றவை விவாதத்தில் இருந்து வருகின்றன. “கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர்” என்று பிரகடனப் படுத்திக் கொள்வதால், அவருக்கு – தெய்வநாயகம்- ஏதாவது லாபம் கிட்டுமே தவிர, அக்கல்லூரிக்கு இழுக்கு தான் ஏற்படும்[8]. ஒருவேளை அக்கல்லூரியே அத்தகைய, போலி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், அங்கிருந்து தான் “மோசஸ் மைக்கேல் பாரடே,” என்ற பெயரில், ஒருவர் “சித்தர் ஆராய்ச்சி” என்று புரட்டி வருகிறார். “அகத்தியர் ஞானம்” மோசடி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[9]. இப்படி இத்தகைய கிருத்துவர்கள், இந்து மதத்தை தெரிந்து கொள்வோம் என்று மாநாடு நடத்துகிறேன் என்று கிளம்பியுள்ளதை கவனிக்க வேண்டும்.

இந்துவிரோதிகள்இந்துத்துவவாதிகள் ஒத்துழைப்பது ஏன்?: அரசியல் காரணங்களுக்காக, இந்துத்துவவாதிகளும், கிருத்துவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்களோ என்று கூட சந்தேகிக்க வேண்டியுள்ளது[10]. முழு விவரங்களை புகைப்படங்களுடன் ஐந்து பாகங்களாக பதிவு செய்துள்ளேன்[11]. 2017ல் எல்லீஸர் விருது கொடுக்கும் விழா என்று, அவர்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்[12]. இதைப் பற்றிய முழு விவரங்களை புகைப்படங்களுடன் 17 பாகங்களாக பதிவு செய்துள்ளேன். கடந்த நவம்பர் 2021லும் இவர்களும் தெய்வநாயகத்திற்கு ஜால்றா அடித்ததும் திகைப்பாக இருக்கிறது. மதம் மாறிய கிருத்துவர் மற்றும் முஸிம் எஸ்.சி / பட்டியல் ஜாதியினருக்கும் இந்துக்களைப் போன்றே இடவொதிக்கீடு கொடுக்க கமிஷனை அரசு உண்டாக்கியுள்ளது. இந்துத்துவவாதிகள் அரசியலில் ஊறி விட்டதாலும், பலன்களை அனுபவிக்க ஆரம்பித்து விட்டதாலும், சித்தாந்தம் நீர்த்துப் போக ஆரம்பித்து விட்டது. இதை இந்துவிரோதிகள் நன்றாக அறிந்து கொண்டுள்ளார்கள். இதனால் தான் திருமாவளவன், சீமான் போன்றோரும், திக-திமுகவினரும் தொடந்து இந்துமதத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பல நேரங்களில் சேர்ந்தும் செயல்படுகிறார்கள். ஆனால், இந்து-இந்துத்துவம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தான் பிரிந்து கிடக்கிறார்கள். அதனால், மற்ற இந்துக்கள் இவர்கள் அனைவராலும் பாதிக்கப் படுகின்றனர்.

திராவிடத்துவம் நோக்கிச் செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது:  திராவிடம் நோக்கி செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கிருத்துவர்கள் மதங்களுக்கு இடையிலான உரையாடல், உள்-கலச்சாரமயமாக்கல், போன்ற திட்டங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு இவைப் பற்றி தெரியாமலேயே இருக்கின்றனர் (இதைப் பற்றியெல்லாம் நிறைய பதிவு செய்துள்ளேன்). இப்பொழுது பணம், பதவி, விருது போன்றவற்றிற்கு ஆசைப் பட்டு வேலை செய்யும் இந்துத்துவவாதிகளை “அரசியல் இந்துத்துவவாதிகள்” என்று அடையாளம் காண வேண்டியுள்ளது. நிச்சயமாக இவர்கள் அரசியல் ரீதியில் பல விசயங்களில் கொள்கைகளை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்கிறார்கள்(compromise, negotiate and / or  surrender), உடன்படிக்கை ஏற்பட்டால் சரண்டரும் ஆகி விடுகின்றனர். சில குறிப்பிட்ட மனிதர்களை ஊக்குவிக்கும் பொழுது, மற்றவர்கள் அவர்களுக்கு துணையாக விவரங்களை சேகரித்துக் கொடுக்க வேண்டும். அப்பொழுது, ஏஜென்டுகளாகவும் செயல்படுகின்றனர். இங்கும் இந்துத்துவா நீர்த்து விடுகிறது. போதாகுறைக்கு, சில இந்துக்கள் தெரிந்தும்-தெரியாமலும் இத்தகைய திட்டங்களுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவி வருகின்றனர். தெரிந்த சில இந்துக்களும் ஒன்றாக செயல்படாமல், தனித்தனியாக வேலை செய்கின்றனர். ஒருவேளை கிருத்துவர்களே அத்தகைய நிலை உருவாக, வேலைசெய்து, பிரிக்கிறார்கள் எனலாம். ஏனெனில், அவர்கள் பைபிளை குறைகூறுகிறேன், என்று விமர்சித்து, அடங்கி விடுகின்றனர். இதனால் தான் திராவிடத்துவம் நோக்கிச் செல்லும், இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. மறுபடியும் இன்னொரு அரசியல் நாடகம் அரங்கேறப் போகிறது. பாதிக்கப் படப் போவது அப்பாவி ஆனால் உண்மையான இந்துக்கள் தான்!

© வேதபிரகாஷ்

21-10-2022.


[1] தமிழ்.இந்து, இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாடு நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 20 Oct 2022 06:26 PM; Last Updated : 20 Oct 2022 06:26 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/885445-petition-filed-in-high-court-seeking-permission-to-knowing-hinduism-conference.html

[3]  இதுபோல, சில ஆண்டுகளுக்கு முன்னர், மயிலை மாங்கொல்லை என்ற இடத்தில் கூட்டம் போடுகிறேன் என்று கலாட்டா செய்தபோது, போலீஸ் இவருக்கு அனுமதி மறுத்து, சிவகாமிக்கு இடம் கொடுத்தனர்.

[4] தினசரி, இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாடு ந்டத்த உயர்நீதி மன்றத்தில் மனு, சக்தி பரமசிவம், 21-10-2022, 9.00 PM IST.

[5] https://dhinasari.com/latest-news/268333-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A.html

[6] இ.டிவி.பாரத், இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாட்டுக்கு அனுமதி வழங்க மனு..!, 21-10-2022, 6.00 PM IST.

[7]https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/petition-to-high-court-to-grant-permission-to-lets-know-hinduism-conference/tamil-nadu20221020223339612612234

[8]  இவர் லயோலா கல்லூரியில் வேலை செய்ததாகவும் உள்ளது, பிறகு அங்கு எப்படி, எந்த பதவியில் இருந்தார் என்று தெரிவிக்கப் படவில்லை.

[9] ஆச்சார்யா பாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், அருளப்பாவின், “”புனித தோமையார்” என்ற புத்தகம் “குட் பாஸ்டர் பிரஸ்”, சென்னை – 600 001 என்ற அச்சகத்தினரால் வெளியிடப்படுகிறது[8]. உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, “முதல் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு” என்று திருச்சியில் டிசம்பர் 28 முதல் 30 வரை 1981ல் நடத்தியது.  ஞானசிகாமணி “அகத்தியர் ஞானம் [விளக்கவுரை]” என்ற புத்தகத்தை அங்கு வெளியிடுகிறார். அதற்கு “பாராட்டுரை” எழுதியது, பொன்னு ஆ. சத்திய சாட்சி! ஞானசிகாமணி வேதாகம மாணவர் பதிப்பகம் என்று வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை முடிக்கி விட்டார். திடீரென்று பிராமண எதிர்ப்பும் வெளிப்படுகிறது. எஸ். இம்மானுவேல் நரசுராமன் எழுதியதாக, “ஒரு பிராமணன் கண்ட பரப்பிரம்மம்” என்ற பிரச்சாரப் பிரசுரம் (ஏப்ரல் 1983) இவரது அறிமுகத்துடன் வெளியிடப்படுகின்றது. தெய்நாயகமும் தீவிரமாக செயல்பட்டார். 1984ல் சென்னை பல்கலைக்கழகத்தில் “கிறிஸ்தவ படிப்பிற்காக” ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆரவாரமாக, தெரஸா அம்மையாரை வைத்தே திறந்து வைக்கப்பட்டது[10]. இதற்கும் அருளப்பா தான் நிதியுதவி அளித்தார். பிப்ரவரி 5, 1986ல் போப் ஜான் பால் II சென்னைக்கு விஜயம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அருளப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

[10]  வேதபிரகாஷ், கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1), பிப்ரவரி 19, 2009.

[11] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[12]  வேதபிரகாஷ், திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1),

அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம், வலதுசாரிகள்! (2)

ஜூன் 21, 2022

அறியப்படாத கிறிஸ்தவம்என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம், வலதுசாரிகள்! (2)

அறியாமையாலோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ செய்யப்படுவது: இந்த நூலுக்குத் தென்னிந்தியாவின் முக்கியமான மானுடவியலர்களில் ஒருவரான பக்தவத்சல பாரதி ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார்; அவர் ஓர் இந்து. இன்னொருவர், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மேனாள் துணைக் கண்காணிப்புத் தொல்லியலரும் ஆராய்ச்சி வல்லுநருமான முனைவர் மார்க்ஸிய காந்தி. இவரும் இந்துதான். எனவேதான், தமிழக முதல்வருக்குப் பரிசாக வழங்கப்படத் தகுதியுள்ள நூல்தான் இது என்று கவிதா ராமு தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவரும் ஓர் இந்துதான். எல்லா நூல்களையும் போலவே, இந்த நூலும் விமர்சனத்துக்கும் உட்படுத்தப்படக் கூடியதுதான். ஆனால், அந்த விமர்சனம் அறிவையும் ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, இது ஒரு மதப் பரப்புரை நூல், இதை முதல்வருக்குப் பரிசாகக் கொடுப்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தூக்கிப்பிடிக்கிற செயல், அது அரசமைப்புக்கு விரோதமானது என்று பேசுவது அறியாமையாலோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ செய்யப்படுவது தவிர வேறல்ல[1]. ‘மூத்த மார்க்ஸிய-பெரியாரியச் சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை” தமிழ்.இந்துவில் இவ்வாறு எழுதி பதிப்பாகி இருப்பதில், எந்த ஆச்சரியமும் இல்லை. இப்பொழுது மத்தியில் பிஜேபி ஆட்சியில் உள்ளது என்ற ஒரே காரணத்தால், இந்துத்துவ வாதிகள் இவ்வாறு விருவிறுப்பாக இருக்கின்றனரேயன்றி, இல்லையென்றால், இருக்கும் இடமே தெரியாமல் இருப்பார்கள்.

பத்ரி சேஷாத்ரி, கிழக்குப் பதிப்பகம்: மெட்ராஸ் லிடெரரி சொசைட்டி [Madras Literary Society] கட்டிடத்தில் 26-02-2022 அன்று நூல் வெளியீட்டு விழாவில், பத்ரி பேசியது, ‘இப்புத்தகத்தில் உள்ள விவரங்கள் பற்றி மற்றவர்கள் பேசி விட்டார்கள், ஆகையால், அதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. என்னுடைய ஜாதி, மதம், அரசியல் சார்பு என்ற ரீதியில் விமர்சனங்கள் வருகின்றன. ………என்னைப் பொறுத்த வரையில் இது “commercial venture,” இவர் இது போன்ற புத்தகங்களை வெளியிடுவதை வியாபாரமாகப் பார்க்கிறார். அதாவது, ஒரு வேளை நிவேதிதா லூயிஸ், ஏதாவது கான்ட்ராக்ட் / உடன்படிக்கை போட்டிருப்பார் பொலிருக்கிறது. எப்படியோ, இந்துத்துவ வாதிகள் மூலமும் அதிர்மறை விளம்பரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆக, அந்த “commercial venture,” லாபத்தில் முடியும் எனலாம். நிவேதிதாவின் மண்டையோடு, எலும்புக் கூடு ஆராய்ச்சிகளும் தொடரலாம். மார்க்சீய, கம்யூனிஸ மற்றும் வலதுசாரி ஆதரவும் கிடைக்கலாம். கேரளாவில் ஏற்கெனவே இந்துத்துவ வாதிகளுக்கும், சர்ச்சுகளுக்கும் புரிதல்கள் உள்ளன என்று அரசியல் ரீதியில் சொல்லப் படுகின்றன. ஆக, அத்தகைய முயற்சிகள் தமிழ்நாட்டிலும் நடக்கலாம். முன்னர், சில பாஸ்டர்கள் கும்பலாக, பிஜேபியில் சேர்ந்து, அடுத்த நாளே விலகி விட்டதை கவனிக்கலாம். ஆகையால், இனி கவனமாகத்தான் வேலை செய்வார்கள்.

வேதிதா லூயிஸ் எழுதியஅறியப்படாத கிறிஸ்தவம்:  நிவேதிதா லூயிஸ், எவ்வாறு தாமஸ் கட்டுக் கதையை திறமையாகப் பரப்பி வருகிறார் என்பதை முன்னமே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்- எடுத்துக் காட்டியுள்ளேன்[2].  நேரமில்லாததால், தமிழில் பதிவு செய்ய முடியவில்லை. நிவேதிதா எந்த சப்ஜெக்டை எடுத்துக் கொண்டாலும், அதில், லாவகமாக தாமஸ் கட்டுக் கதையை நுழைத்து விடுவார். உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation] போர்வையில் தனது திருப்பணியை செய்து வருகிறார். சாந்தோம் சர்ச்சைப்பற்றிய பேஸ்புக் பதிவுகளை கவனிக்கலாம். அர்ஜுன் சம்பத் விவகாரம் போது, இவர் தமது விசுவாசத்தை வெளியில் காட்டிக் கொண்டார். ஆனால், அர்ஜுன் சம்பத் அதை அப்படியே விட்டு விட்டார். இந்த அம்மையார் மறக்கவில்லை, “அறியப் படாத கிறிஸ்தவம்” என்று வெளிப்பட்டுள்ளது.  பத்ரி போன்றவர்களின் நல்லாசிகளுடன், “நற்செய்தி” இனி எல்லோருக்கும் சென்றடையும். வாய்ப்புகளும் பெருகிவிட்டன. “தமிழகம்” முழுவதும் சென்று பரப்புங்கள் என்ற எக்காளம் ஒலிக்கிறது, தேவனின் மகிமை வெளிப்படுகிறது.

நடராஜர் அட்டைப் படத்துடன் கிறிஸ்தவ புத்தகம்: திருநெல்வேலியில் பேராசிரியர் கட்டளை கைலாசம், பாதிரியார் ஆனந்த் அமலதாஸ் எழுதிய ‘தமிழ் மரபில் கிறிஸ்தவம் ‘ என்ற நுால் மாவட்ட மைய நுாலகத்தில் வியாழக்கிழமை 28—04-2022 ஆன்று மாலை வெளியிடுவதாக இருந்தது.நூல் அட்டை முகப்பில் நடராஜர் படம் இருந்தது[3]. கிறிஸ்தவர்களால் வெளியிடவும், பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது. கிறிஸ்தவ நுாலில் நடராஜர் படம் எதற்கு, மதமாற்றத்திற்கு மைய நுாலகம் துணை போகிறதா என கேள்வி எழுப்பி ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் சுடலை உள்ளிட்டோர் நுாலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்[4]. இதையடுத்து நுால் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

  • நிவேதிதா லூயிஸ், ஆனந்த அமல்ராஜ், மார்க்சீய காந்தி, எஸ்.வி. ராஜதுரை என்றால் புரிகிறது, ….கிறிஸ்தவம்-மார்க்சிஸம் இணைவதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனெனில், இவர்கள் எல்லோரும் சித்தாந்தம் மற்றும் அவற்றுடன் கூடிய பலன்களால் ஒன்றுபட்டவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகின்றனர்.
  • நிவேதிதா லூயிஸ், தாமஸ் கட்டுக் கதையைப் பரப்புவதில் வல்லவர். திறமையாக செய்து கொண்டிருக்கிறார்…ஆதிலும் ஒன்றும் விசேஷமில்லை…….கிறிஸ்தவர் என்ற விசுவாசத்துடன் செய்து வருகிறார்.
  • ஆனால், இவர்களுடனான இந்துத்துவ வாதிகளின் உறவுகள் புரியவில்லை… உள்-கலாச்சாரமயமாக்கல் (inculturation) இனிக்கிறதா, பாதிக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அரசியல் ஆதாயம் என்று வந்த பிறகு, இந்துத்துவ வாதிகள் கெட்டு விட்டர்கள் எனலாம். பணம் புரள ஆரம்பித்தவுடன், கொள்கையெல்லாம் மறந்து விட்டன.
  • அறியப்படாத கிறிஸ்தவம் – இதை வெளிப்படுத்த அத்தனை உற்சாகமா, ஆர்வமா, பரிசுத்த ஆவியின் வேலையா? அரசியல் சமரசமா – உரையாடல்? என்றெல்லாம் இல்லை. பணம் தான்,
  • அவரவர் அவர்களின் வேலைகளை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் போது, இந்துத்துவ வாதிகள் மட்டும் ஏன் மாறுகிறார்கள்? என்ன நடக்கிறது? என்றால் இந்த பணம் தான், காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா, என்பது பழிய பாட்டல்ல, இப்பொழுதும் பொறுந்தும்.

  • “தாமஸ் கட்டுக்கதை” போன்ற புத்தகத்தை எந்த கிறிஸ்தவனும், கிறிஸ்தவ பதிப்பாளரும் வெளியிட மாட்டான். திக-மார்க்சிஸ்ட் வகையறாக்கள் கூட செய்ய மாட்டார்கள்!
  • ஆனால், கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. ஆனந்த அமல்ராஜ் நினைத்தால் சத்திய நிலையம்[5] அல்லது ஐக்கிய ஆலயமே வெளியிடலாம், கிழக்குப் பதிப்பகம் எல்லாம் தேவையில்லை. ஆனால், அவ்வாறுதான் செய்யவேண்டும் என்றால், அவ்விருப்பத்துடனே நடக்கிறது.
  • எனது, “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது” புத்தகத்தை வெளிவராமல், பல இந்துத்துவாதிகள் அமுக்கி விட்டனர்! இதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னரே எனது பிளாக்கில் விவரமாக எழுதி விட்டேன். அதாவது, அத்தகைய வேலையை…நம்மாட்களே செய்து விடுவர்.
  • நிவேதிதா லூயிஸ், அறியப்படாத கிறிஸ்தவம் என்றால் இனிக்கிறது “தமிழகம்” முழுவதும் சென்று பரப்புங்கள் என்ற எக்காளம் ஒலிக்கிறது, தேவனின் மகிமை வெளிப்படுகிறது. மோஹன் சி. லாசரஸ் தேவையில்லை.
  • ஆனந்த் அமலதாஸும் சளைத்தவர் அல்ல, இரண்டே மாதத்தில், ‘தமிழ் மரபில் கிறிஸ்தவம்’ என்று நடராஜர் படத்துடன் தன் புத்தகம் வெளியீடு…28-04-2022 அன்று.
  • சென்னையில் 26-02-2022 நிவேதிதா லூயிஸ் புத்தகம் வெளியீடு என்றால், பாளையங்கோட்டையில் 28-04-2022 ஆனந்த் அமல்தாஸ் புத்தகம், கலெக்டர், முதலமைச்சருக்குக் கொடுத்தது 08-06-2022, வாழ்க செக்யூலரிஸம்…

© வேதபிரகாஷ்

21-06-2022


[1] மூத்த மார்க்ஸிய-பெரியாரியச் சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரை.

[2] Vedaprakash, Christian music, Christian Tamil music,  Christian keerthanais and Kutchery: All with “Thomas myth”,  the way, Nivedita Louis spreads it!, 06-07-2020.

[3] தினமலர், ஹிந்து முன்னணி முற்றுகை சர்ச்சை நுால் வெளியீடு ரத்து, பதிவு செய்த நாள்: ஏப் 29, 2022 01:46

[4] https://m.dinamalar.com/detail.php?id=3018301

[5]  சத்திய நிலையம் – திருவான்மியூரில் ஒரு பெரிய நிறுவனத்தை கிருத்துவர்கள் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். Inculturation, inter-religious dialogue போன்ற விசயங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால், இந்துத்துவவாதிகள் இவ்விசயங்களில் பூஜ்யம் என்றே சொல்லலாம். ஓரிருவர் தமக்கு எல்லாம் தெரிந்தது போல தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பர். இது போன்ற பிரச்சினை வரும் போது, எதிர்கொள்ளக் கூட முடியாமல், ஒதுங்கி விடுவர்.

‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஜூன் 21, 2022

அறியப்படாத கிறிஸ்தவம்என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஸ்டாலின், கவிதா ராமு முதலியோர் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கிய ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூல் தொடா்பாக எழுந்த சா்ச்சை 13-06-2022 திங்கள்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது[1]. கடந்த 8ஆம் தேதி (08-06-2022, புதன் கிழமை) புதுக்கோட்டை வந்த முதல்வா் ஸ்டாலினை வரவேற்ற ஆட்சியா் கவிதா ராமு, அவரது தோழி நிவேதிதா லூயிஸ் எழுதிய ’அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைப் பரிசளித்தார்[2]. மேலும் அப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[3]. இதையடுத்து, இதுதொடா்பான சா்ச்சை எழுந்தது. கடந்த 11ஆம் தேதி [11-06-2022] மாவட்ட பாஜக தலைவா் பிஆா். செல்வம் அழகப்பன், முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் மத வேற்றுமையை விதைக்கும் வகையில் செயல்பட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்[4]. ஸ்டாலின் மாலை / சால்வை பதிலாக புத்தகம் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்திருந்தார். ஆனால், அதுவே “திராவிட மாடலில்” சர்ச்சையில் தான் சென்று கொண்டிருக்கிறது[5].

வழக்கம் போல இடதுசாரி போர்வையில் வகையறாக்கள் ஆதரவு: இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், இந்நூல், கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் உள் முரண்களையும், மோதல்கள் குறித்தும் ஓரச்சார்பின்றிப் பேசுகிறது. எனவே, ஆட்சியா் நடுநிலை தவறிவிட்டார் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனா்[6]. இதேபோல, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து, புத்தகத்தின் அட்டை, தலைப்பை வைத்துக் கொண்டு, அப்புத்தகம் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்கிறது என்ற முடிவுக்கு பாஜகவினா் வர வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்[7]. ஆனால், வலதுசாரி இயக்கத்தினர் வழக்கம் போல, எதிர்மறை பிரச்சாரம் செய்து விளம்பரம் கொடுத்துள்ளனர் எனலாம். அவர்களிடத்தில் இத்தகைய ஆளுமையும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இந்தச் சூழலில், ஆட்சியா் கவிதா ராமு தனது முகநூல் பதிவை அகற்றியுள்ளதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மாவட்ட பாஜக தலைவா் செல்வம் அழகப்பன் திங்கள்கிழமை 13-06-2022 ஆட்சியருக்கு ஒரு கடிதம் அளித்துள்ளார்[8]. அத்துடன் கவிஞா் கண்ணதாசன் எழுதிய ‘அா்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை ஆட்சியருக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்[9]. பரிசளிக்கப்பட்ட நூல் குறித்து எழுந்த சா்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது[10]. இப்படியாக ஊடகங்கள் தலைப்பை மட்டும் மாற்றி, அரைத்த மாவையே அரைத்து ஊற்றியுள்ளன[11]. இதில் யாராவது அப்புத்தகத்தைப் படித்து, எழுதியுள்ளார்களா என்று தெரியவில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் ஆதரவுபிரீமியம்கட்டுரை[12]: தமிழ்நாட்டின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என்று பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ளார், அந்த மாவட்ட பாஜக தலைவர்[13]. ஆட்சியர் செய்த குற்றம் என்ன? – இரு பாகங்கள் கொண்டதும், நிவேதிதா லூயிஸ் எழுதியதுமான ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைத் தமிழக முதல்வருக்கு அவர் பரிசாக அளித்ததுடன் அதற்கான காரணத்தை ஆட்சியரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் என்பதுதான்![14]சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர், ஒரு மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்,” என்று அத்தலைவர் தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாகவும், இதனால் ஒரு பெரும் ‘சர்ச்சை’ வெடித்துள்ளதாகவும், ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது[15].

மார்க்சீய காந்தியின் முன்னுரை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீதான பாஜக தலைவரின் குற்றச்சாட்டு, அந்த நூல் மீதும் அதை எழுதியவர் மீதுமான குற்றச்சாட்டுமாகும். .‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், “நேருவின், காந்தியின், போஸின் இந்தியாவின் ஒரு துளிஎன்று அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும், “என் பெயர் நான் விரும்பியோ, விரும்பாமலோ என் அடையாளமாகிவிட்டது. அதை நான் மாற்றுவதற்கில்லை. ஆனால், அது என் மதம், சாதி சார்ந்த அடையாளமல்ல,” என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை, “கிறிஸ்தவம் என்ற மதம் இம்மண்ணில் வெளியிலிருந்து வந்ததே என்பதை மறுப்பதற்கில்லைஇதுதான் என் மண். இந்த நிலம் என் மூதாதையர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த நிலம். தமிழ் எங்கள் அடையாளம், உயிர் மூச்சு. அந்த உணர்வே முதல். மற்றவை எல்லாம்அது சாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர்தான்தமிழக தேவாலயங்களுக்கானகைடு புக்அல்ல இந்நூல்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்[16].

© வேதபிரகாஷ்

21-06-2022


[1] தினமணி, முதல்வருக்கு நூல் பரிசளிப்புசா்ச்சைக்கு ஆட்சியா் முடிவு, By DIN  |   Published On : 14th June 2022 12:36 AM  |   Last Updated : 14th June 2022 12:36 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2022/jun/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3861607.html

[3] கதிர்.நியூஸ், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ புத்தகத்தை பரிசளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!, By : Thangavelu  |  12 June 2022 4:30 PM.

[4]https://kathir.news/tamil-nadu/–1373752

[5]  பாலகிருஷ்ணனின் புத்தகம் ஊக்குவிக்கப் பட்டு, வியாபாரம் நடக்கிறது. ஸ்டாலினே, அப்புத்தகத்தை மற்ற அரசியல் தலைவர்களுக்குக் கொடுத்து வருவதை கவனிக்கலாம்.

[6] NEWS18 TAMIL, முதல்வர் ஸ்டாலினிடம் கிறிஸ்தவ புத்தகம் கொடுத்த கவிதா ஐஏஎஸ்அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பாஜக பதிலடி, LAST UPDATED : JUNE 14, 2022, 10:38 IST.

[7] https://tamil.news18.com/news/pudukkottai/kavita-ias-who-gave-christian-book-to-chief-minister-stalin-rather-bjp-gave-arthamulla-indhumadham-sur-758015.html

[8] ஏசியாநெட்.நியூஸ், முதல்வருக்கு கிறிஸ்தவ மத புத்தகம் வழங்கிய கலெக்டர்.. அர்த்த முள்ள இந்து மதம் புத்தகம் கொடுத்து அலறவிட்ட பாஜக.Ezhilarasan Babu, Chennai, First Published Jun 14, 2022, 1:32 PM IST; Last Updated Jun 14, 2022, 1:32 PM IST.

[9] https://tamil.asianetnews.com/politics/the-collector-who-gave-a-christian-religious-book-to-the-chief-minister-the-bjp-who-gave-a-meaningful-hindu-religious-book–rdgjo1

[10] தமிழ்.ஒன்.இந்தியா, ஸ்டாலினிடம்கிறிஸ்துவபுத்தகத்தை தந்த கவிதா ஐஏஎஸ்! சீறிய பாஜக.. அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பதிலடி, By Shyamsundar I Published: Monday, June 13, 2022, 13:40 [IST]

[11] https://tamil.oneindia.com/news/chennai/bjp-opposes-pudukottai-ias-kavitha-ramu-for-giving-a-christian-book-cm-stalin-462035.html

[12] அதாவது, காசு கொடுத்து தான், இந்த செய்தியைப் படிக்க முடியும். அவர் / அவாள் பொதுவுடமை எல்லாம் பேசலாம், ஆனால் காசில்லை என்றால், கம்யூனிஸம்-மார்க்சிஸம் எல்லாம் பேசாது.

[13] தமிழ்.இந்து, அறிவுத் தளத்தின் மீது இன்னொரு தாக்குதல், எஸ்.வி.ராஜதுரை, Published : 15 Jun 2022 07:56 AM; Last Updated : 15 Jun 2022 07:56 AM

[14] https://www.hindutamil.in/news/opinion/columns/814163-knowledge-base.html

[15] தமிழ்நாடு.லைவ்.நியூஸ், முதல்வருக்கு பரிசாக அளிக்கப்பட்ட நூலை முன்வைத்து பாஜகசர்ச்சை‘ – அறியாமையா, அரசியல் ஆதாயமா? – Hindu Tamil, சனி, ஜூன் 18 2022

[16]http://tnlivenews.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/