Posts Tagged ‘சர்ச் நடத்துதல்’

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (1)

திசெம்பர் 1, 2022

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (1)

15-08-2022 முதல் 23-08-2022 வரை: 15-08-2022 அன்று மீனவர்கள் தங்களது விழிஞ்ஞம் துறைமுகம்-எதிர்ப்புப் போராட்டத்தைத் துவங்கியதாகத் தெரிகிறது. கேரள கத்தோலிக்க சர்ச், இதற்கு கொடுக்கும் அதரவு பிரமிப்பதாக உள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தின் வரவிருக்கும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் முள்ளூர் கிராமத்தில் உள்ள துறைமுக நுழைவாயிலில் இரவு பகலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் எட்டாவது நாளாகப் போராட்டம் நடத்தினர். . மக்கள் வாயில்களில் இருந்த தடுப்புகளைத் தாண்டி, அணிவகுத்துச் சென்று கௌதம் அதானியின் உருவ பொம்மையை எரித்தனர்; இதற்கிடையில், மற்ற மீனவர்கள் தங்கள் சிறிய மீன்பிடி படகுகளில் தங்கள் எதிர்ப்பை கடலுக்கு எடுத்துச் சென்றனர்.

சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்த கத்தோலிக்க சர்ச், வன்முறையில் ஈடுபடுவது ஏன்?: கேரள கத்தோலிக்க சர்ச், விழிஞ்ஞம் துறைமுகம் விசயத்தில், இந்த அளவுக்குத் தீவிரமாக ஏன் செயல்பட்டு, மீனவர்களைத் தூண்டி விட்டி, வன்முறையிலும் இறங்கி போராடி வருகின்றது என்பது திகைப்பாக இருக்கிறது. முன்பு, “விடுதலை இறையியல்,” என்ற சித்தாந்தத்தை பின்பற்றுகிறேன் என ஆரம்பித்து, கொலை, கொள்ளை என்று மிகுந்த வன்முறை, குற்றங்கள் என்றாகி, அதில் கத்தோலிக்க பிஷப்புகள், பாஸ்டர்கள் கைதாகி, சிறைக்குச் சென்ற நிலையில், வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது. ஆனால், இப்பொழுது நடக்கும் வன்முறைகளைக் கவனிக்கும் பொழுது, ஒரு வேளை, மறுபடியும் அந்த “விடுதலை இறையியல்,” சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்த ஆரம்பித்து விட்டனரா அல்லது சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னொரு “அத்தகைய சித்தாந்தத்தை” உருவாக்கி செயல்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது. சௌரி-சௌரா வன்முறைக்குப் பிறகு, ஒரு போலீஸ் ஷ்டேசன் தாக்கப் பட்ட பிறகு, மஹாத்மா காந்தியே, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தை நிறுத்தி வைத்தார். ஏனெனில், அது அஹிம்சையை மீறி, வன்முறையில் முடிந்தது. ஆனால், இங்கோ சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்தாலும், ஆர்ச்-பிஷப் முதல் மற்ற பிஷப்புகள் அகம்பாவத்துடன், ஆணவத்துடன் மற்றும் உறுதியாக  போராட்டத்தைத் தொடருவோம் என்று தான் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, நடத்தப் படும் போராட்டம்: ஆரம்பம் முதல் உன்னிப்பாக கவனித்தாலோ, செய்திகளை படித்து வந்தாலோ, சர்ச்சின் பின்னணியை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். கேரளவாவில், பல சர்ச்சுகள் [கத்தோலிக்கர் அல்லாத] இருந்தாலும், கத்தோலிக்கர் தமது ஆதிக்கத்தை செல்லுத்த விரும்புகின்றனர். இதற்கு, அவ்வப்பொழுது, ஏதாவது விவகாரம் கிடைத்தால், அதனை அரசியல் ஆக்கி, லாபம் பெற முயல்கின்றனர். வெற்றி பெறுகின்றனர், ஒதுங்கி விடுகின்றனர். இப்பொழுது பிஷப்புகள் முதல், பாஸ்டர்கள் வரை தீவிரமாக இருப்பது இதனை உறுதியாக்குகிறது. சர்ச்சிற்குள் இருந்து, பலி, போதனை என்றில்லாமல், தெருக்களில் இறங்கி, வன்முறைகளில் ஈடுபடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாது, குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, ஊர்வலம் செல்வது, போராட்டம் நடத்துவது, மற்ற தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைக்களை ஞாபகப் படுத்துகிறது, ஒத்துப் போகிறது.

அதானி குழுமத்தின் கேரள அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்தை எதிர்த்து போராட்டம்:  திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான விழிஞ்ஞத்தில் அரசு-தனியார் பங்களிப்புடன் கேரள அரசு சார்பில் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. அதானி குழுமம் இதற்கான கட்டுமானப் பணிகளைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. துறைமுக பணிகளில் இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடிவடைந்துள்ளன. கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்[1]. கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவ்வித தடையையும் ஏற்படுத்த மாட்டோம் என கடந்த நவம்பா் 22-ஆம் தேதி கேரள உயா்நீதிமன்றத்தில் போராட்டக்காரா்கள் உறுதியளித்திருந்த நிலையில்[2], சனிக்கிழமை கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை அவா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும் துறைமுக திட்ட ஆதரவாளா்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கம்:

  1. கத்தோலிக்க சர்ச் விழிஞம் துறைமுக திட்டத்தை எதிர்த்து நேரிடையாக வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது…
  2. குழந்தைகள், பெண்கள் உட்பட…………………….மீனவர்களை முன்னிருத்தி நடத்துகிறது.
  3. கன்னியாஸ்திரிக்கள், பாஸ்டர்கள் …………………………………………..பிஷப் உடன் போராட்டம் நடத்தப் படுகிறது………………………..
  4. நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது……………….
  5. நீதிமன்ற சட்டம்-ஒழுங்குமுறை ஏன் இல்லை…….என்றெல்லாம் கேட்கிறது…………………….
  6. அஹமது தேவர்கோவில், துறைமுக அமைச்சர், இவ்விசயம் மதரீதியில் எடுத்துச் செல்லக் கூடாது என்று உறுதியாகக் கூறுகிறார்………………………………….
  7. கத்தோலிக்கச் சர்ச் இப்போராட்டம் தொடரும் என்கிறது…………………

26-11-2022 மற்றும் 27-11-2022 அன்று நடந்தேறிய வன்முறை சம்பவங்கள்: திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் அதானி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அங்குள்ள மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் துறைமுகம் கட்ட ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. அதானி துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். விழிஞ்சம் துறைமுகத்தில் நடைபெறும் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து நடத்த, 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆயர் கடிதம் அனுப்பப்பட்டு, லத்தீன் பேராயர் வலுப்படுத்த வலியுறுத்தி முடிவு செய்துள்ளது. போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த சமர சமிதி முடிவு செய்துள்ளது[3]. லத்தீன் மறைமாவட்ட முன்னாள் பேராயர் எம்.சூசபாக்கியம் எதிர்வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் பல்வேறு ஆயர்களும், மதத் தலைவர்களும் இணைந்து கொள்வார்கள். அதானி குழுமத்துடன் கைகோர்த்து போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக சமர சமிதியின் பொது அழைப்பாளர் யூஜின் எச் பெரேரா தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

30-11-2022


[1] தினமணி, விழிஞ்ஞம் துறைமுக எதிர்ப்பு போராட்ட வன்முறை:15 பாதிரியார்கள் மீது வழக்கு, By DIN  |  Published On : 28th November 2022 05:49 AM  |   Last Updated : 28th November 2022 05:49 AM.

[2]https://www.dinamani.com/india/2022/nov/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8815-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3957371.html

[3] The Samara Samithi has also decided to hold an indefinite hunger strike from Monday as part of intensifying the protest measures. Former archbishop of Latin archdiocese M Soosapakyam will undergo a hunger strike on Monday 28-11-2022 and various bishops and religious leaders will join in the coming days.
The general convener of Samara Samithi, Eugine H Pereira said that some people have made attempts to sabotage the stir by joining hands with the Adani Group

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை:  பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய ரூ.3000 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் தற்போது விரைவாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் பேட்டிசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால், ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை. பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் அமைக்காதீர்கள். புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும்போது, அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!

இந்துவிரோதி எஸ்டா சற்குணத்தின் பேச்சு ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது பொன்றிருந்த கூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1]  M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு ! மத போதகர் எஸ்றா சற்குணம் மீது வழக்குப் பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST

https://tamil.asianetnews.com/politics/esra-srgunam-case-file-ptgi8u

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (2)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (2)

சொந்த பட்டா இடங்களில் தேவாலயம் கட்டிவிட்டு தடையின்மை சான்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்பது: சொந்த பட்டா இடங்களில் தேவாலயம் கட்டிவிட்டு அதன்பிறகு தடையின்மை சான்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கிறார்கள். அதுமுறையல்ல[1]. இடம் வாங்கிய உடன் தேவாலயம் கட்டுவதற்கு முன் அதற்கான தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சான்று பெறுவதில் சிக்கல் நீடித்தால் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுங்கள். அதன்பிறகு தீர்வு இல்லை என்றால் ஆணையத்தை அணுகலாம். இதுதொடர்பாக நிரந்தரமான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் உத்தரவு வரும்[2]. சரியில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு வழியையும் சொல்லிக் கொடுக்கிறார் மற்றும் விரைவில் உத்தரவு வரும் என்றும் சொல்வது கவனிக்கத் தக்கது. இதைத்தான், “திராவிடியன் மாடல்,” என்கிறாற் போலும். எஸ்ரா வழியில் நிலத்தை அபகரித்து, சர்ச் கட்டுங்கள், பீட்டர் அல்போன்ஸ் வழியில் சரிசெய்து விடுங்கள். பெரியாரிஸ-இந்துவிரோத முதலமைச்சர் உதவுவார் என்கிறார் போலும். 3000 வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் படப் போகின்றன என்றால், கோவில்கள் தான் இடிக்கப் பட்டு வருகின்றன. ஒரு மசூதி-சர்ச் என்று தொட்டால், அவர்கள் தடுக்கிறர்கள், அதிகாரிகளும் விட்டு விடுகிறார்கள். இதுதான் செக்யூலரிஸ சட்டமாக இருக்கிறது.

நிலம் பிரத்யேகமாக வாங்கி, அனுமதி பெற்று சர்ச்மசூதி கட்ட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “புதிய தேவாலயம், பள்ளிவாசல் கட்டுவதற்கு தடையின்மை சான்று கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தால் அது குறித்து அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு சமத்துவ கல்லறை தோட்டத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தனித்தனி கல்லறை தோட்டம் வேண்டும் என்றால் நிலத்தை வாங்கி தடையின்மை சான்று அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு கல்விக்கடன், பொருளாதார கடன், மகளிர் உதவும் சங்களுக்கான கடன் வழங்குவதை வேகப்படுத்தியுள்ளோம்”. “சமத்துவ கல்லறைத் தோட்டம்,” என்று நில அபகரிப்பு இனி ஆரம்பிக்கும். முன்னர், துலுக்கர், கோவில்கள், காட்டுகள் / படித்துறை, மடங்கள் போன்ற இடங்களில் பிணத்தைப் புதைத்து தான் ஆக்கிரமிப்பை ஆரம்பிப்பர். ஆக, அதே முறையை சொல்லிக் கொடுக்கிறார் போலும்.

தனிவீடுகளில் வழிபாடு, மைக் வைக்கக் கூடாது: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வழிபாடு நடத்த வேண்டும். மைக் வைத்துக்கொண்டு அதிகப்படியான சத்தத்துடன் வழிபாடு நடத்துவதை தவிர்க்க வேண்டும். மத பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். இது சமூக அமைதிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். தனி வீடுகளில் அமைதியாக வழிபாடு, ஜெபம், தொழுகை செய்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அந்த உரிமை அனைத்து மதத்தினருக்கும் உள்ளது. மைக் வைக்கக்கூடாது. வீட்டில் அமைதியாக 10, 15 பேர் ஜெபம் செய்தால் யாரும் தடுக்க முடியாது. கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களிடம் அளித்த மனுக்கள் தொடர்பாக வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தி முடிவு தெரிவிக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார். “தவிர்க்க வேண்டும்,” “தவிர்க்க வேண்டும்,” என்றுதான் கூறுகிறாரே தவிர, செய்யக் கூடாது, சட்டமீறல் என்று சொல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இத்தகைய கூட்டங்கள் மாமூலாக, சாதாரணமாகி விட்டது போலும். நவம்பர் 2021ல் நடந்த கூட்டத்திலும் இதே தான் பேசப் பட்டது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு நவம்பர் 2021 கூட்டம்: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 2021லும் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செயல்படாமல் இருந்த சிறுபான்மை நல ஆணையத்தை தூசிதட்டி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்[3]. கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட கிறிஸ்தவர்கள் தங்கள் ஆராதனை வழிபாடு நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மையின மக்கள் மிக பாதுகாக்க மிக கண்ணியத்தோடு வாழ கூடிய நிலை உள்ளது. ஜனநாயகத்தில் சிறுபான்மை என்பது ஒரு ஊனம்[4]. ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் உதவித்தொகை குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலையே நின்று விடுகிறது,” என்று கூறினார். பிறகு மற்ற 20க்கும் மேலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்ன நடக்கிறது? ஏதோ பேச வேண்டும் என்று பேசியது போலத்தானே இருக்கிறது.

நவம்பர் 2021 – புறம்போக்கு நிலங்களில் கட்டிய சர்ச்சுகளுக்கு அனுமதி கிடையாது: குறிப்பாக புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கு அனுமதி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும்போது[5], பலர் அரசு புறம்போக்கு இடத்தில் தேவாலயங்களை கட்டிவிட்டு அனுமதி கேட்பதாகவும், அது போன்ற இடங்களுக்கு யார் நினைத்தாலும் அனுமதி கொடுக்க முடியாது என்றும் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார்[6]. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர், சுமார் 18 லட்சம் மதிப்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. அத்தகைய சட்டமீறல் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு கட்டப் பட்ட சர்ச்சுகள் இடிக்கப் படும் என்று சொல்லவில்லை.

சமத்துவ கல்லறைத் தோட்டம்பல இடங்களில் கல்லறைகளில், மத வேறுபாடுகள் இருப்பதால், சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர்: அதனையடுத்து ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவு நீரை பெருக்கவில்லை என்று பெரிய போராட்டம் நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள். இதேபோல் தயவுசெய்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமரே அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டப்படாமல் இருக்கிறது. அதற்காகவும் அவர் ஒரு ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சமத்துவ கல்லறைத் தோட்டம்பல இடங்களில் கல்லறைகளில், மத வேறுபாடுகள் இருப்பதால், சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர்[7]. எனவே, சாதி மத வேறுபாடின்றி சமத்துவ கல்லறைகளை உருவாக்கித் தர முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.”. அப்படியென்றால் அது கிருத்துவப் பிரச்சினை ஆகிறது, அதற்கு எப்படி நாத்திக திமுக அரசு தலைவர் உதவுவார் என்று தெரியவில்லை. போப், கார்டினல், பிஷப் சொல்வதை எல்லாம் மதிக்காத கிருத்டுவர்கள் ஸ்டாலின் சொல்லிக் கேட்பார்களா? பிறகு, ஸ்டாலின் தான் கிருத்துவர்களின் தலைவரா? வழக்கம் போல ஜெயின், பௌத்த உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்று சொல்லப்படவில்லை.

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தினத்தந்தி, தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்தால் 1 மாதத்தில் முடிவை தெரிவிக்க வேண்டும், மார்ச் 30, 06:07 PM.

[2] https://www.dailythanthi.com/amp/News/Districts/2022/03/30180716/If-you-apply-for-proof-of-inviolability-you-will-be.vpf

[3]  பிறகு ரம்ஜான் கஞ்சிக்கு டன் – டன்னாக அரிசி எப்படி கிடைத்தது, ஹஜ்-ஜெருசலேம் மானியங்கள் எப்படி கிடைத்தன என்பனவெல்லாம் தெரியவில்லை.

[4]  ஆனால் நாட்டையே துண்டாடி, இன்றும் ஆட்டிப் படைத்து வருகின்றனர். தீவிரவாதம் தொடர்ந்து நடக்கிறது. பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றனர். இதையெல்லாம் ஏன் விவாதிக்க்ப் படவில்லை.

[5] இ.டிவி.பாரத், புறம்போக்கு நிலங்களில் தேவாலயங்கள் கட்ட அனுமதி கோர வேண்டாம்பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை!, Published on: Nov 10, 2021, 6:29 PM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/do-not-ask-permission-to-build-churches-on-poramboke-land-says-peter-alphonse/tamil-nadu20211110182918719

[7]  அது கிருத்துவ மதப் பிரச்சினையேயன்றி, பொதுப் பிரச்சினை அல்ல. இத்தனை மெத்தப் படித்த, அதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்கள் எல்லாம் இருந்தும் அப்படி நடக்கிறது என்றால், அது கிருத்துவத்தின் அடக்கு முறையே ஆகும்.

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

29-03-2022 அன்று நடந்த சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?

தனிப்பட்ட பிரார்த்தனை, வழிபாடுகளுக்கு பிரச்சினை இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ, சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளனர். அதே சமயம், சிறுபான்மையின மக்கள் ஆராதனை, வேண்டுதல் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எந்த அளவுக்கு சமூக அமைதி நிலவுகிறதோ, அந்த அளவுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சமூக அமைதியை சீர்குலைக்கவும், மக்களை மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.

29-03-2022 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், வங்கி கிளை வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். சிறுபான்மை இன மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டும் மேடை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துறந்துவிட்டு தான் செல்ல வேண்டும். முதல்வரின் எண்ணமும் அதுதான். மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.

 “அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையின மக்களுக்கு உரிமை இருப்பது போல், கடமைகளும் உள்ளன. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்; நாமும் அவர்களால் வாழ வேண்டும். பிற சமூக மக்களுக்கும் உதவிகளை செய்து, மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். ஜாதி, மதத்தை மறந்து, எல்லாரும் தமிழர்களாக ஒன்றிணைந்து, எழுந்து நிற்க வேண்டும்.அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி, அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது. கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின் கட்ட வேண்டும். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, மத பிரசாரம் செய்வது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தமிழ்.இந்து,  மத ரீதியாக மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர்பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு, டி.ஜி.ரகுபதி, Published : 29 Mar 2022 22:04 pm; Updated : 29 Mar 2022 22:04 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/782764-some-are-trying-to-divide-the-people-religiously-and-do-politics-accuses-peter-alphonse.html

[3] தினமலர், அரசு நிலத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாதுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் அறிவுரை,  Added : மார் 31, 2022  00:52.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2995988

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் – காலத்தைக் குறிப்பிட்டு நூறாண்டுகளாக சட்டமீறல்களில், ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள திட்டம் முதலியன! (2)

திசெம்பர் 24, 2021

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் – காலத்தைக் குறிப்பிட்டு நூறாண்டுகளாக சட்டமீறல்களில், ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள திட்டம் முதலியன! (2)

இந்த சர்ச்சின் பேஸ்புக் கொடுக்கும் விவரங்கள்: 1905 முதல் இப்பொழுது வரை என்ன நடந்த்து என்று கிருத்துவர்கள் பதிவு செய்துள்ள விவரங்கள்:

  • கி.பி. 1905 – ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் என்ற கிராமத்தில் இருந்து மொன்னான் குடும்பத்தைச் சார்ந்த தாவீது என்பவர், தற்போது உள்ள இளையாங்கண்ணி பகுதிக்கு வந்து குறவர்களோடு தங்கி விவசாயம் செய்து வந்தார்.
  • அதன் பிறகு எறையூர், விரியூர், மேமலூர் போன்ற ஊர்களிலிருந்து சில பேர் இங்கு வந்து விவசாய பணிகளை செய்து நிரந்தரமாக குடியேறினர்.
  • வந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் தாங்கள் வழிபாடு நடத்த கூரையில் ஒரு கோவிலை கட்டி வழிபட்டனர். நாளடைவில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருதயம்பட்டு பங்கின் கிளைப்பங்காக இளையாங்கண்ணி செயல்பட்டது.
  • 1911- இல் சிறு ஆலயம் கட்டப்பட்டு 1938 – இல் அருட்பணி. P.J. ஜேக்கப் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
  • 1953 – இல் அருட்பணி. J.C. ராயன் பொறுப்பில் இளையாங்கண்ணி தனிப் பங்காக உருவானது. மைக்கேல்புரம், தானிப்பாடி போன்ற கிராமங்களின் பொறுப்பையும் அருட்தந்தை கவனித்து வந்தார்.
  • அதன் பிறகு அருட்பணி. கரோப் அவர்கள் இளையாங்கண்ணியில் மூன்று நாட்களும், மைக்கேல்புரத்தில் மூன்று நாட்களும் தங்கி இறை பணி செய்து வந்தார். 1970  – இல் வேலூர் மறைமாவட்டத்துடன் இளையாங்கண்ணி இணைந்தது.
  • 16-03 -1970 பங்கின் பொறுப்பை அருட்பணி. குரியன் அடிகள் ஏற்றார். அருட்தந்தை அவர்களின் முயற்சியால் மேரியின் மகள்கள் (D.M) சபை கன்னியர்கள் தங்கள் இறைப்பணியை தொடங்கினர்.
  • மக்களின் வசதிக்காக மருத்துவமனை தொடங்கப்பட்டது. அருட்சகோதரிகள் கல்விப்பணி, ஆலய பணி, மருத்துவப் பணி, சமுதாயப் பணி ஆகியவற்றை இன்றளவும் செய்து வருகின்றனர்.
  • 1982 – இல் அருட்தந்தை பிலோமின் ராஜ் பங்கு பொறுப்பை ஏற்ற பிறகு பங்கின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. மலையின் மேல் கார்மேல் அன்னைக்கு அழகான சிற்றாலயமும், மக்கள் சென்றுவர வசதியான படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டன.
  • தற்போது உள்ள மிகபெரிய அழகான பங்கு ஆலயம், அருட்பணி. பிலோமின் ராஜ் அவர்களின் முயற்சியாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும், அருகில் வாழும் பிறசமய அன்பர்களின் உதவியுடனும் கட்டப்பட்டு, 12.12.1990 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
  • மலையடிவாரத்தில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இவர் காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மலைமேல் உள்ள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. சுற்றிலும் உள்ள கிராமங்களிலிருந்து மத வேறுபாடுகளை களைந்து அனைத்து தரப்பு மக்களும் வந்து அன்னையின் அருளை பெற்று செல்கின்றனர். இன்றளவும் இது தொடர்கிறது. ஏற்கனவே நடந்து கொண்டிருந்த பாஸ்கா ஒலி ஒளி காட்சியானது இவர் காலத்தில் மலைக்கோயில்  தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் மக்கள் காணும் வகையில் தொடர்ந்து நடந்து வருகிறது.
  • தொடர்ந்து பணிபுரிந்த அருட்தந்தையர்கள் பங்கின் வளர்ச்சிக்காக மிகச்சிறப்பாக உழைத்தனர்.
  • அருட்தந்தை. அமிர்தநாதன் அவர்கள் ஆலய மேற்கோபுரம் திருத்தி அமைத்தார், கல்லறைகள் வரிசையாக அமைத்து ஒழுங்கு செய்தார்.
  • 1995ல் அருட்தந்தை வனத்தையன்  காலத்தில்  உயர்நிலைப்பள்ளி உருவானது.
  • 21.04.1995ல் கிளைப் பங்கான நாவக்கொல்லை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. அருட்தந்தை. பங்கிராஸ் அவர்கள் ஆலயத்திற்கு மின்விசிறிகள் அமைத்தார்.
  • 1997 – இல் அருட்தந்தை சூசைநாதன் பணியேற்றபின் பங்கில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருந்தது. மாணவர்கள் அதிகமாக மேற்படிப்புக்கு சென்றனர். மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு மிகப் பெரிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன. மாணவர் இல்லமும் தொடங்கப்பட்டது.
  • அருட்பணி. ஜான் போஸ்கோ காலத்தில் மலைக்கோவிலுக்கு சாலை வசதி அமைக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் திரளாக வர ஆரம்பித்தனர்.
  • அருட்தந்தை. ஜெயசீலன் காலத்தில் குருவகம் புதுப்பிக்கப்பட்டது. பங்கு ஆலயம் புதுபிக்கப்பட்டது. 2015 ஆம் கல்வி ஆண்டிலிருந்து அருட்தந்தை. பால் வேளாங்கண்ணி தாளாளராக சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.
  • தற்போது 2019 முதல் அருட்பணி சார்லஸ் இயேசுதாஸ் அவர்கள் பங்கு தந்தையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
  • பங்கு மக்களின் உதவியுடன் சிலுவைப்பாதை நிலைகள் மலையில் அமைக்கப்பட்டு 2018 ஜூலை 16, அன்று அர்ச்சிக்கப்பட்டது. பங்கு ஆலயத்திற்கு முன்பு கொடிமரம் அமைக்கப்பட்டது. இறைமக்கள் கூடி திருப்பலியில் பங்கெடுக்க மலைகோயில் முன்பு கூடாரம் அமைக்கப்பட்டது. பங்கு ஆலயத்தில் ஒலி அமைப்பு (Sound System) புதுப்பிக்கப்பட்டது.

இந்த விவரங்கள் எப்படி, கிருத்துவர்கள் முனைப்புடன், தீவிரமாக, வேலை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது.

ஆணையிட்டும் சட்டமீறல் சர்ச்சுகள் ஏன் இடிக்கப் படாமல் இருக்கின்றன?: அக்னிமுரசு என்ற இணைதளம் “மலைமீது கிறிஸ்தவ கோவில்” என்று குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது[1]. ஆட்சியாளர் மற்ற அலுவலர்களுடன் வந்தது, பார்வையிட்டது, நிலத்தை அளந்தது முதலியவற்றை செய்தயாக புகைப் படங்களுடன், 18-12-2021ம் தேதியே வெளியிட்டுள்ளது[2]. 20-12-2021 தான் தினமலரில் வருகிறது. இப்படி ஆரம்பித்தது, ஒருவேளை, கிருத்துவர்களே செய்தியை போட வைத்து, அரசு ஏதோ நடவடிக்கை எடுப்பது / எடுத்தது போலக் காட்டி, பிறகு அபராதம் வாங்கிக் கொண்டு, சரிகட்டும் வேலைக்கு திட்டம் போட்டு, நாடகம் ஆடும் போக்கு மாதிரியும் தெரிகிறது. ஏனெனில், உயர்நீதி மன்றம் சில வழக்குகளில் சட்டத்திற்குப் புரம்பாக கட்டியுள்ள சர்ச்சுகளை அப்புறப்படுத்தும் படி / இடிக்கும்படி, தீர்ப்பளித்து / ஆணையிட்டுள்ளது. ஆனால், அவை நிறைவேற்றப் படாமல் உள்ளன. அத்தகைய சட்டம் மீறிய சர்ச்சுகள் இன்று வழிபாட்டில் உள்ளன. புகார் கொடுத்த இந்து அமைப்புகளும் அத்துடன் விட்டு விடுகின்றனர். தொடர்ந்து என்னவாயிற்று என்று கவனிப்பதில்லை. திண்டிவனம் / அச்சரப்பக்கம் மலை ஆக்கிரமித்து கட்டியுள்ள சர்ச் விவகாரமும் அவ்வாறே உள்ளது.

நடக்கும் நிகழ்வுகளை மாற்ற வேண்டும்: திருவண்ணாமலை திண்டிவனம் – தாம்பரம் வழியில் நூற்றுக் கணக்கான கோவில்கள், மடங்கள் உள்ளன. கவனிப்பார் அற்று, பூஜைகள் இல்லாமல், தனித்து விடப்பட்ட அனாதைகள் போலக் கிடக்கின்றன. அவையெல்லாம் சோழகாலத்து புராதன கோவில்கள் ஆகும். சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த, சிலைகள், கலைப்பாடுகள் மிக்க தூண்கள், கட்டிட அமைப்புகள் கொண்ட கோவில்கள் ஆகும். இந்திய தொல்துறையோ, தமிழக தொல்துறையோ கூட கண்டுகொள்ளமல் இருக்கின்றன. இதனால், கலைத் திருடர்களும் வசதியாகிறது. சரித்திரம், அகழாய்வு, ஆராய்ச்சி என்று ஈடுபடும், ஈடுபட்டுள்ளவர்கள் அவ்வப்போது வந்து சென்றல் கூட, விழிப்புணர்வு இருக்கும். ஆனால், அவர்கள் ஜாலிக்காக குறிப்பிட்ட பிரபலமான கோவில்களுக்கு வந்து சென்று விடுகிறார்கள். உழவாரப் பணி குழுக்கள் இங்கு தாராளமாக வந்து செல்லலாம். அப்படி வந்தால், கோவில்களும் சுத்தமாக இருக்கும், ஊர்மக்களும் விழிப்புணர்வு கொள்வர். லட்சக் கணக்கில் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்து விட்டு செல்லும் பக்தர்கள் ஏன் இந்த கோவில்களுக்கு வருவது இல்லை என்று தெரியவில்லை.

பக்தர்கள் வந்து சென்று கொண்டிருந்தால், கிருத்துவர்களின் அராஜகம் குறைந்திருக்கும்: அத்தகைய போக்குவரத்து, இருந்திருந்தல், கிருத்துவர்கள் இத்தகைய வேலைகளை செய்திருக்க முடியாது. குறிப்பாக மதமாற்றம் முதலியவையும் தடுக்கப் பட்டிருக்கலாம். ஏனெனில், இம்மக்கள் இந்துமத நம்பிக்கைகளில் அந்த அளவுக்குப் பிடிப்புள்ளவர்கள். ஆனால், ஏழ்மை, வசதி இல்லாமை, கல்வி-மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பது, வேலையில்லாமை…….போன்றவை  மதமாற்றங்களுக்கு உதவுகிறது “சோமண்ணத் துடி” நன்றாகவே வேலை செய்கிறது, ஆனால், அந்த சோமண்ணன் போல, இவர்கள் எல்லோரும் உறுதியாக இல்லை. சோமண்ணனின் சகோதரன் போல, பெண்ணிற்காக, பணத்திற்காக மதம் மாறி விடுகிறார்கள், அவர்களே இந்துவிரோதிகளாகவும் மாறுகிறார்கள். கோவிலளாக்கிரமிப்புகள், கொள்ளைகள் முதலியவற்றில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்..

© வேதபிரகாஷ்

24-12-2021



[1] அக்னிமுரசு, மலைமீது கிறிஸ்தவ கோவில் கட்டிடங்கள், டிசம்பர் 18, 2021.

[2] https://www.agnimurasu.com/2021/12/blog-post_18.html

அச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்! [2]

மார்ச் 22, 2020

அச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்! [2]

Hillock encroached,NewsJ

2004 வரை சர்ச் கட்டுமானங்கள் இல்லை: ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, தமிழக அரசு, தொல்லியல் ஆய்வுத்துறை, மலை மாதா தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது[1]. அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதாக்கோயில் ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் 25.2.2020 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்னும் சில தினங்களில் அதிகாரிகள் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.  மழைமலை மாதாக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பௌர்ணமி வழிபாடு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிக அளவிலான பக்தர்கள் மழைமலை மாதாக்கோயிலுக்கு வரத்தொடங்கினர். மலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் சிதைக்கப்பட்டு அங்கு கட்டடங்கள் உருவாகத் தொடங்கின. சிவன் ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் மாதாக்கோயில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகச் சர்ச்சைகள் கிளம்பின. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அந்த கோயில் சிக்கிவந்தது.

Lawrence Pius, Pushpam visit to hillock

1965-ம் ஆண்டு `புஷ்பம் அடிகளார்’ என்ற கத்தோலிக்க பாதிரியார், அச்சிறுப்பாக்கம் ரோமன் கத்தோலிக் புனித சூசையப்பர் ஆலயத்துக்குப் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி, மழலைப் பள்ளி ஆகியவை தொடங்கப்பட்டன. அப்போது அருகில் உள்ள மலைக்குன்றில் ஒரு மாதா சிலையை நிறுவினார் புஷ்பம் அடிகளார். 2004 வரை அந்த இடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் செய்யப்படாமல் இருந்துவந்தது[2].

Hillock encroached,News 18

2004 பிறகு கட்டுமானங்கள் ஆரம்பித்தது: 2004-ல் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்ற பாக்கிய ரெஜிஸ், மலைக்குன்றில் உள்ள அந்தச் சிலையைச் சுற்றிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். மலைக்குன்றின் பகுதிகள், வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் உருவாகின. பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குச் சொந்தமான மலைக்குன்று புறம்போக்கு பகுதியில் பல அடுக்குமாடி கட்டடங்கள் உருவாகின. ஆடுமாடுகளை மேய்க்கச் செல்பவர்களுக்குப் பாதைகள் அடைக்கப்பட்டன. 2005-லிருந்து மழைமலை மாதாக்கோயிலிலும் பௌர்ணமி வழிபாடு தொடங்கப்பட்டு வேகமாகப் பிரபலமடையத் தொடங்கியது. அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் எதிர்ப்பும் அதிகரிக்கத் தொடங்கின. புகார் எழும்போதெல்லாம் சம்பிரதாயத்துக்காக வருவாய்த்துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்புவார்கள். கோயில் நிர்வாகத்தினரின் அதிகாரிகளுடனான `பேச்சுவார்த்தை’யில் சர்ச்சைகள் அமுக்கப்பட்டுவிடும். இப்படி ஒப்புக் கொள்வதில் ஊடகங்கள் மற்றும் சம்பந்தப் பட்டவர்களும், ஏதோ யோக்கியமாக எடுத்துரைப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள். பிறகு 16 வருடங்களாக அமுக்கி வைத்த போது, இந்து அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன? இல்லை கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் புகார் கொடுத்ததை ஏன் அரசுத்துறை அதிகாரிகள் உதாசீனப் படுத்தின? அப்படியென்றால், நிச்சயமாக சர்ச் அவர்களைக் கவனித்துக் கொண்டது என்றாகிறது. அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தை என்றாகிறது.

Mazhai Madha Church - myth floated-complex-2

வழக்கு தொடர்ந்த ராஜா சொல்வது: இதுகுறித்து ராஜாவிடம் பேசினோம். “ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினரிடம் கேட்டபோது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 4 ஏக்கரில் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் பதில் அளித்தனர். ஆனால், அந்த இடத்துக்குச் சென்று பார்க்கும்போது 60 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. வனத்துறைக்குச் சொந்தமான மலைப்பகுதி, பாதை மற்றும் மேய்க்கால் புறம்போக்கு, தொல்லியல்துறைக்குச் சொந்தமான இடங்கள் என ஆக்கிரமிப்புகள் பெரிய அளவிலிருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை, மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்டவர்களுக்கு பதிவுத்தபாலில் புகார் அனுப்பினேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் மழைமலை மாதாக்கோயில் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்கள். இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்,” என்கிறார். வெறும் கடிதங்கள் அனுப்புவதில் எந்த பலனும் இல்லை என்பது தெரிந்த விசயம் தான். தப்பு செய்திருந்தால், அவன் மீதாக புகார் எழுதி, அவனுக்கே, புகார் கடிதம் அனுப்புவதில் எந்த பலனும் இல்லை. எனவே, ராஜா, சுப்ரமணியம் சாமி போன்றோரை அணுகி, முறையாக வழக்கை நடத்த வேண்டும்.

The 31st Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India (CCBI) of the Latin Church held in January 2019

திட்டமிட்டு கட்டப் பட்ட சர்ச் வளாகம்: இப்பொழுது கட்டப் பட்டுள்ள வளாகம், வீடுகள், விருந்தினர் மாளிகை, ஓட்டல், வண்டிகள் செல்ல சாலை, படிகட்டுகள் முதலியவற்றை பார்த்தால், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. நூற்றுக் கணக்கான லாரிகளில் கற்கள், சிமென்ட், கம்பிகள் மற்ற கட்டுமான பொருட்கள் சென்றுள்ளன. அதே போல நுற்றுக் கணக்கான பலத்ரப் பட்ட வேலையாட்கள் வேலை செய்துள்ளனர். இத்தனை வேலைகள் ஒரே நாளில் நடக்கவில்லை, ஆண்டுகளாக நடந்து முடிந்துள்ளன. இதற்கான ஆவணங்கள் பல இருக்கும். பணம் கொடுத்த ஆவணங்களும் இருக்கும். ஆகவே, மாநில அரசு துறைகள் உதவியுட இவை நடந்துள்ளன.

Lawrence Pius, Pushpam and others visit to hillock

சட்டப்புறம்பாக, புறம்போக்கு, அதிலும் மலைப் பகுதியை ஆக்கிரமித்துக் கட்டியுள்ளார்கள் எனும் போது, எத்தனை பேர்களின் உதவியுடன், இந்த சட்டமீறல் காரியங்கள், அயோக்கியத்தனங்கள் நடந்துள்ளன என்பது தெளிவாகிறது. கிருத்துவ சர்ச்சுகள் எனும் போது, எவ்வாறு, ஏன் எல்லோரும் ஒத்துழைக்கின்றனர் என்றும் கவனிக்க வேண்டும். பஞ்சாயத்து, மின்சாரம், காடு, மலை, சுற்றுப்புறச்சூழல், என பலதுறை அதிகாரிகள் சட்டங்களை மீறி அனுமதித்தது எவ்வாறு என்று கவனிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் 25.2.2020 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது இப்பொழுது கூட என்னவாயிற்று என்று தெரியவில்லை.

The Hindu, PIL accuses Malaimada church management of encroaching hillock, Legal Correspondent,, CHENNAIFEBRUARY 26, 2020 01:22 IST, UPDATED: FEBRUARY 26, 2020 01:22 IST

https://www.thehindu.com/news/national/tamil-nadu/pil-accuses-malaimada-church-management-of-encroaching-hillock/article30917396.ece

A public interest litigation petition has been filed in the Madras High Court accusing the management of Malaimada church situated atop a hillock in Maduranthakam Taluk near here of encroaching upon adjoining areas including forest lands for construction of shops and other structures.

Justices M. Sathyanarayanan and R. Hemalatha on Tuesday directed Additional Government Pleader R. Vijay Kumar to take notice on behalf of the Revenue Secretary as well as the Chengelpet Collector and obtain instructions by next month. R. Raja, 45, a local resident, had filed the PIL petition with a plea to remove the encroachments.

The petitioner claimed that the church itself had been constructed about five decades ago on a piece of land classified as Meikaal Poromboke (land meant for grazing). Thereafter, the management laid a road and began disturbing the ecology of the hill, he alleged and accused it of having constructed many shops last year.

Unabated constructions had caused great damage to the animals on the hillock and also the archaeological sites on the foothills, he alleged.

 

Hillock encroached,CBCI discussed about it Jan.2019-1

Pushpam addressing at the hillock

வழக்கு முறைப்படி நடத்தப் பட வேண்டும்: விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது[3] என்ற நிலையில் அன்று யார் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. 25-02-2020 முதல் 27-03-2020 வரை ஆக்கிரமிப்புகள் பற்றி என்ன சர்வே நடந்தது அல்லது இல்லை என்ற விவரங்கள் தெரியவில்லை. கோவில்களை மீட்போம், கோவில் நிலங்களை மீட்போம் என்று பல இயங்கங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவை, இவ்வழக்கை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஓரளவிற்கு நீதிமன்றத்திற்கு வந்திருப்பதால், இவ்வழக்கை ஒழுங்காக நடத்த வேண்டும். ஏனெனில், ஏற்கெனவே கோடிகளில் பணத்தைச் செலவழித்துள்ள சர்ச், இன்னும் கொஞ்சம் லட்சங்கள் செலவழிப்பதில் ஒன்றும் தயங்கப் போவதில்லை. ஆகவே, இதில் சம்பந் தப் பட்ட தனிநபர்கள், இந்து இயக்கங்கள் முதலியன எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இடையில் யார் சமராத்திற்கு செனாலும், வழக்கு ஒன்றில்லாமல்போய் விடும். ஒருவேளை 99 வருடம் குத்தகை எடுத்திருந்தால், அதனை ரத்து செய்யாவிட்டால், இருப்பது நிரந்தரமாகி, மேலும் கட்டடங்கள் பெருகி, அவ்விடமே மாறி விடும். ஆகவே, பொறுமையாக, இந்து அமைப்புகள், சுப்ரமணிய சுவாமி போன்றோரிடம், இவ்வழக்கை ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில், சர்ச் மற்றவர்களை சுலபமாக விலைக்கு வாங்கி விடும்.

Lawrence addressing at the hillock

Hillock encroached,CBCI discussed about it Jan.2019-2

சென்னை ஆர்ச் பிஷப் முதல் வாடிகன் வரை கிடைக்கும் ஆதரவு முதலியன: இந்துத்துவ வாதிகள், செய்திகளில், இணைதளங்களில் குறிப்பாக என்னுடைய பிளாக்குகளில் காப்பியடித்து, அரைகுறை விசயங்களுடன் காபி அடித்து எழுதுகிறார்கள். இப்பொழுது வீடியோ என்று படங்களைக் காட்டி, ஏதோ இவர் தான் எல்லாவற்றையும் கண்டு பிடித்தது போலவும் சுற்றில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிருத்துவர்கள் அவர்களுக்கு எல்லாம் பல்மடங்கு கில்லாடிகள். ஜனவரி 9, 2019 அன்று லத்தீன் சர்ச்சின் பிரிவான கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸின் 31வது முக்கிய கூடுதல் [the 31st Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India (CCBI) of the Latin Church] நடைபெற்றது. அதில் வாடிகனின் பிரதிநிதி ஆர்ச்பிஷப் ஜியாம்பஸ்டிஸ்டா டிக்யாத்ரோ [Archbishop Giambattista Diquattro, the Apostolic Nuncio to India and Nepal] என்பவர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். ஓஸ்வால்ட் கார்டினல் கிரேசியாஸ் [His Eminence Oswald Cardinal Gracias] தனது தலைமை உரையில், மதமாற்றத்திற்கு எப்படி உயிரூட்ட வேண்டும், மிஷன் எப்படி இருக்க வேண்டும் என்று பேசினார்[4].

Pushpam and another addressing at the hillock

செங்கல்பட்டு பிஷப் ஏ.நீதிநாதன் வரவேற்றுப் பேசியபோது, அந்த கூடுதலில் ஏன் செங்கல்பட்டு முக்கியத்துவம் பெறுகிறது என்று விளக்கினார்[5]. அப்போஸ்தலர் செரின்ட் தாமஸ் தியாக பலியுண்ட புனிதமலை இங்குதான் உள்ளது. செயின்ட் ஜோசப் அந்த சர்ச்சைக் காக்கிறார். மழைமாதா சர்ச் அவருடன் உறுதுணையாக இருந்து காக்கிறார் என்றெல்லாம் பேசினார். பிறகு ஏழு நாட்கள் நடந்த கூட்டங்களில் எப்படி மதமாற்றம் செய்யப் படவேண்டும் என்றெல்லாம் தாராளமாக பேசினர்[6]. பிராடு தாமஸ்-ஆக்கிரமிப்பு மேரி-மோசடி ஜோசப் என்று முடிச்சு போடுகிறார்கள் வெட்கமில்லாத கிருத்துவ பொய்யர்கள் [unblushing Christian liars]. ஆக அந்த அளவில் இந்துக்கள் விழிப்பாக இருந்தால் தான் நடக்கும், இல்லை புலம்பிக் கொண்டே சாக வேண்டியது தான்!

© வேதபிரகாஷ்

21-03-2020

Mazhai Madha Church - massive constructions.suppoted by the bishops

[1] நியூஸ்.ஜே, மலையை ஆக்கிரமித்து தேவாலயம் அமைப்பு : தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, Feb 25, 2020 06:18 PM

https://www.newsj.tv/view/tructure-of-the-church-occupying-the-mountain-:-High-Court-orders-response-of-the-Government-of-Tamil-Nadu-36956

[2] விகடன்,  அத்துமீறிய மழைமலை மாதா நிர்வாகம்சிதைக்கப்பட்ட மலைக்குன்று! உயர்நீதிமன்ற கெடுபிடி, பா. ஜெயவேல் Published:26-02-2020 at 7 PMUpdated:Yesterday at 7 PM

https://www.vikatan.com/news/controversy/madras-high-court-seeks-a-report-on-acharapakkam-madha-shrine-land-issue

[3] நியூஸ்.ஜே, மலையை ஆக்கிரமித்து தேவாலயம் அமைப்பு : தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, Feb 25, 2020 06:18 PM

https://www.newsj.tv/view/tructure-of-the-church-occupying-the-mountain-:-High-Court-orders-response-of-the-Government-of-Tamil-Nadu-36956

[4] His Eminence Oswald Cardinal Gracias, in his presidential address made an appeal to the Church in India to revitalise the Evangelization and added to it he insisted “our Evangelization should be full of life, full of love for mission.”

https://indiancatholicmatters.org/pay-attention-to-the-needs-of-humanity-apostolic-nuncio-urges-church/

[5] The Inaugural session began with the lighting of lamp by the dignitaries. Most Rev. Dr. A. Neethinathan the Bishop of Chingleput in his welcome address listed out the reasons why Chingleput is the right place for this 31st Assembly, as it is the land of St. Thomas the Apostle, the Apostle of India and has as part of its diocese the Holy Hill of His Martyrdom. “The patron saint of the diocese St. Joseph, father figure of the Church who guards the Church. Mazhai Malai Madha our co-patroness the mother of the Church – who accompanied the early Church,” he said.

https://indiancatholicmatters.org/pay-attention-to-the-needs-of-humanity-apostolic-nuncio-urges-church/

[6] The seven days meeting of the Bishops will discuss the Theme “The Joy of the Gospel” and will look at the new forms of evangelization and the ways and means – to foster the Evangelization. The assembly will also discuss the matters affecting the Latin Catholic Church in India.

https://indiancatholicmatters.org/pay-attention-to-the-needs-of-humanity-apostolic-nuncio-urges-church/

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்-ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்-வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (3)

செப்ரெம்பர் 5, 2015

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (3)

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.4

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.4

ஆங்கில ஊடகங்கள் இதே செய்தியை வெளியிட்டுள்ள விதம்: ஆங்கில ஊடகங்கள் வழக்கம் போல இச்செய்தியை வேறுவிதமாகத்தான் வெளியிட்டுள்ளன. “65 வயதானவர் இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்”, என்று தலைப்பிட்டு செய்தியைக் கொடுத்துள்ளது[1]. அதாவது, ஏதோ பெருசு, சிறுசைக் கற்பழித்தது என்ற ரீதியில் உள்ளது[2]. இந்தியன் எக்ஸ்பிரஸ், “பாதுகாப்பு இல்லத்தில் இளம்பெண் உள்

65-years old arrestred for raping girl in chennai-Sept.4, 2015, The Hindu

65-years old arrestred for raping girl in chennai-Sept.4, 2015, The Hindu

ளூரில் உருவான வில்லனால் செக்ஸ்-தொல்லைக்குள்ளானாள்”, என்று தலைப்பிட்டு செய்தி கொடுக்கிறது[3]. குழந்தை கண்காணிப்பு சமூக ஆர்வலர் ஏ. நாராயணன் அந்நிய பணத்தின் மூலம் இவ்வாறு காப்பகங்களை வைத்து, நன்றாக வியாபாரம் செய்கிறார்கள் என்றது மட்டும் தான் புதிய விசயம்[4].

Padam A Narayanan, child activist

Padam A Narayanan, child activist

“டைம்ஸ் ஆப் இந்தியாவோ”, “இளம்பெண் குழந்தை பெற்றெடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, மூத்த குடிமகன் பிடிபட்டார்”, என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[5]. பால் இம்மானுவேல், சேலையூக்கு அருகில் காந்தி நகரில் நடத்திவரும் குட்செப்ஹர்ட் குழந்தை இல்லத்தில் [Good Shepherd Children’s Home at Gandhi Nagar near Selaiyur] அப்பெண் 2014ல் இருந்தாள் என்ற விசயம் உள்ளது[6]. டெக்கான் க்ரோனிகல், “14-வயது குமரியை கற்பழித்தற்காக எழுபதுகளில் உள்ளவர் பிடிபட்டார்”, என்று தலைப்பிட்டு செய்தியைக் கொடுத்துள்ளது[7]. அந்த சிறார் இல்லத்தின் பெயர் “வல்லமை தாராயோ” என்று குறிப்பிடுகிறது. அது மாம்பாக்கத்தில் நூதன்சேரியில் உள்ளது என்று போலீஸார் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளது[8]. ஏ. நாராயணன் குறிப்பிட்டதை, “பாடம்” நாராயணன் சொன்னார் என்று அதையும் சேர்த்துள்ளது. ஆனால், எல்லாமே அவர் பாதிரி என்பதை குறிப்பிடாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

Times of India news, 04-09-2015 - senior citizen held

Times of India news, 04-09-2015 – senior citizen held

கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் செக்யூலரிஸ மயக்காமாக்கப் படுகின்றனவா?: தி இந்து[9] “65 வயதானவர் இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்”, எனும்போது, பெருசு, சிறுசைக் கற்பழித்தது என்ற ரீதியில் உள்ளது ஆனால், அதாவது, இப்பொழுதெல்லாம் தாத்தாக்கள் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள், கற்பழிக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. அதுபோல, இதையும் எடுத்துக் கொள்ளலாம்., என்ற போக்கில் உள்ளது அதில் எங்குமே அவர் பாதிரி என்பது குறிப்பிடப்படவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ், “பாதுகாப்பு இல்லத்தில் இளம்பெண் உள்ளூரில் உருவான வில்லனால் செக்ஸ்-தொல்லைக்குள்ளானாள்”, எனும்போது, இப்பொழுது தீவிரவாதத்தை “உள்ளூர் தீவிரவாதம்” என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோல, இது உள்ளூர் வில்லன்களின் செக்ஸ்-குற்றங்கள் என்று சொல்கிறது போலும். “இந்தியன் மேட் பாரின் லிக்கர் [Indian Made Foreign Liquor – IMFL]/ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்நியநாட்டு சரக்கு” என்பது போல, “அந்நியநாட்டு செக்ஸ்முறைகள் இந்தியர்கள் பின்பற்றுகிறார்கள்” என்று புரிந்து கொள்ள சொல்கிறார்கள் போலும். “டைம்ஸ் ஆப் இந்தியா”, “இளம்பெண் குழந்தை பெற்றெடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, மூத்த குடிமகன் பிடிபட்டார்”, எனும்போதும், அதுசாதாரண கற்பழிப்பு செயல், அவ்வளவுதான் எபது போலுள்ளது. ஆனால், அந்த செய்தி நிருபர் டேனியல் ஜார்ஜ் ஒரு கிருத்துவர், அவர் இந்த செய்தியை வெளியிட்டிருந்தாலும், ஒரு கிருத்துவராக, விசயங்களை மறைத்தாரா அல்லது செய்தியை செக்யூலரிஸப்படுத்தியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அதாவது, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் செய்தால் செக்யூலரிஸக் குற்றம், ஆனால் மற்றவர்கள் செய்தால், அது கம்யூனல் குற்றம், அதாவது, இந்துக்கள் செய்த குற்றம்!

Zonta Research Centre, Madambakkam- Amaidhi

Zonta Research Centre, Madambakkam- Amaidhi

சர்ச் நடத்தும் பால் இமானுவேல், ஜே. பிரபுதாஸ் முதலியோர் பாதிரிகள் இல்லையா?: ஜோன்ட் மையத்தின் கல்பனா ஷண்முகம் புகாரில், ‘‘மகளிர் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான 45 செண்டு நிலம் ரூ.4½ கோடி மதிப்பு உள்ளது. இந்த தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பால் இமானுவேல் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து குழந்தைகள் காப்பகம் மற்றும் சர்ச் நடத்தி வருகிறார். மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அங்கு சென்று நியாயம் கேட்கும்போது அவர்களை ஆட்களை வைத்து மிரட்டி அனுப்புகிறார். மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை ஆக்கிரமித்து வைத்து உள்ள அவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தரவேண்டும்’’ என கூறி இருந்தார்[10], என்று தெளிவாக உள்ளது. சர்ச் நடத்துவது வேடிக்கைக்காகவா இல்லை வேறெதற்காகவா என்று ஆங்கில ஊடகங்கள் தாம் தெளிவு படுத்த வேண்டும். சர்ச் மற்றும் குழந்தைகள் காப்பகம் பாலியல், செக்ஸ் மற்றும் கற்பழிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்களா? இதெல்லாம் கூட, உள்ளூர் சமாசாரங்களா? ஆகவே, கீழ்கண்டவாறு தலைப்பிட்டு ஏன் செய்திகளை வெலியிடவில்லை என்று கேட்கமுடியுமா?:

  • “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்,
  • “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை பிரபுதாஸ்” என்ற 65 வயதானவர் இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்”,
  • “பாதுகாப்பு இல்லத்தில் இளம்பெண் உள்ளூரில் உருவான “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை பிரபுதாஸ்” என்ற வில்லனால் செக்ஸ்-தொல்லைக்குள்ளானாள்”,
  • “இளம்பெண் குழந்தை பெற்றெடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, உருவான “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை பிரபுதாஸ்” என்கின்ற மூத்த குடிமகன் பிடிபட்டார்”,

இப்படி கேள்விகள் கேட்டால் கம்யூனலிஸமாகி விடுமா? இல்லை இந்துத்துவம் என்று கூட முத்திரைக் குத்தப்படலாம். சமீபத்தில் “ராதே மா” விசயத்தில், செய்திகளையும், படங்களையும், வீடியோக்களையும் அள்ளி வீசிய ஊடகங்கள், மற்ற அதே போல குற்றங்களில் ஈடுபட்டவர்களின் விசயங்களில் ஏன் செயல்படவில்லை என்று மக்கள் கேட்க ஆரம்பித்தவுடன், குறைத்துக் கொண்டதை கவனிக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில், நித்தியானந்தாவை வைத்துக் கொண்டு, இன்றும் கிண்டலடித்து வருகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியாரைவும் விடுவதில்லை. இது பாரபட்சமாக இருக்கிறதே என்று சாதாரண இந்தியனுக்கு இப்பொழுது தெரிந்து விட்டதே! பிறகு, இத்தகைய அணுகுமூறையை என்ன பெயர் சொல்லிக் குறிப்பிடுவது?

வேதபிரகாஷ்

© 05-09-2015

[1] The Hindu, 65-year-old arrested for raping girl in Chennai, CHENNAI, September 4, 2015, Updated: September 4, 2015 09:13 IST.

[2]  A 65-year-old man, who was in charge of the administration of a children’s home near Tambaram, was picked up by the police on Thursday on charges of raping a teenaged girl staying there. The 14-year-old girl, who was among the children rescued from the home, had delivered a baby girl in a government hospital in the city on August 31, 2015.  When doctors at the hospital grew suspicious, they informed the police. Based on a complaint from Kalpana Shanmugham, founder of the NGO Zonta Research Centre, police arrested Prabhudass and he was remanded to custody later in the day. After the preliminary inquiry by the police, the girl said that Prabhudass, who runs the home along with his son and daughter-in-law, had raped her many times, police added. J. Prabhudass, his son, P. Paul Immanuel and daughter-in-law Jothi Plasingh (28) are out on bail, having been arrested on charges of land grabbing and intimidation in July 2015.

http://www.thehindu.com/news/cities/chennai/65yearold-arrested-for-raping-girl-in-chennai/article7613781.ece

[3] Express News Service,  Home-grown Villain Sexually Abuses Girl at Shelter Home , Posted on Sep 4, 2015 in Chennai.

[4]  http://m.newindianexpress.com/chennai/531626

[5] Times of India, Senior citizen held on rape charges two days after girl gives birth to child in Chennai, Daniel George, TNN | Sep 3, 2015, 01.45 PM IST.

[6] http://timesofindia.indiatimes.com/city/chennai/Senior-citizen-held-on-rape-charges-two-days-after-girl-gives-birth-to-child-in-Chennai/articleshow/48786403.cms

[7] Deccan Chronicle, Sexagenarian held for raping 14-year-old girl, September 04, 2015, 03.06 am IST

[8] The police arrested Prabhu Das, father of Immanuel, who runs a ‘charity home’ (Vallamai tharayo) at  Noothanchery in Madambakkam, a southern city suburb.

http://www.deccanchronicle.com/150904/nation-crime/article/sexagenarian-held-raping-14-year-old-girl

[9] The Hindu, 65-year-old arrested for raping girl in Chennai, CHENNAI, September 4, 2015, Updated: September 4, 2015 09:13 IST.

[10]  தினத்தந்தி, போலி ஆவணங்கள் மூலம் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்த 3 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST

பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST.