Posts Tagged ‘புதைப்பது’

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm