Archive for the ‘பால் தினகரன்’ Category

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு – “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

பிப்ரவரி 9, 2023

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடுஉத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு

இனிகோ இருதயராஜ்…

பீட்டர்ஸ் அல்போன்ஸ்……

பால் தினகரன்…..

மற்றவர்…….

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு: த்தகைய செய்திகள் எல்லாம் முன்னால் ஊடகங்களில் வருவதில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகய கிருத்துவ கூட்டங்கள், மாநாடுகள் அடிக்கடி நடப்ப்து விசித்திரமாக இருக்கிறது. பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு, அவனியாபுரம்-மதுரை வளையங்குளத்தில் நடைபெற்றது[1]. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்[2]. இன்னொரு ஊடகம் 6000 என்கிறது. வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[3]. மற்ற பெந்தகோஸ்தே அமைப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்[4]. இனிகோ இருதயராஜின் அழைப்பின் பேரில் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. ஈரோடு தேர்தல் முக்கியத்துவத்தால், ஆன்லைனில் பேசியதாக சொல்லப் படுகிறது. அப்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.

என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்: அப்போது பேசிய முதல்வர் கூறுகையில், “என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் மதுரைக்கே வந்தாலும் சென்னையில் இருந்தபடி பேசினாலும் என்றும் உங்களோடு இருப்பவன் உங்களில் ஒருவன் நான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே தூரம் அதிகமாக இருந்தாலும் அன்பு நம்மை இணைக்கிறது. நம்பிக்கை நம்மை இணைக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை தான் சொல்ல முடியும்[5]. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம், அனைவரிடம் சேர்ந்து வாழ்வதுதான் ஒற்றுமை, ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம், ஏழைக்கு குரல் கொடு என்பதுதான் நீதி மற்றவர்களுக்காக வாதாடு என்பதன் தியாகம், உன்னிடம் இருப்பதை இல்லாதவர்க்கு கொடு என்பதுதான் பகிர்தல் இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அது தான் சமத்துவ நாடாக அமையும்[6].

உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி: இப்படியெல்லாம் பேசுவது செக்யூலரிஸத் தனமாகுமா, கம்யூனலிஸம் ஆகுமா, சமதர்மம், சமத்துவம், திராவிடத்துவம் ஆகுமா என்று கூட ஆராய வேண்டியுள்ளது. முதலமைச்சராக பேசுவதற்கும், ஸ்டாலின் என்ற திமுக தலைவராக பேசுவது, அல்லது கிருத்துவர் உதயநிதியின் தந்தை என்றெல்லாம் கூட பேசலாம். ஆனால், நிச்சயமாக, வரம்புகள் மீறப்படுகின்றன. சித்தாந்தங்கள் தீவிரமாகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், தொழில், வளர்ச்சி, மேலாண்மை, மகளிர்,  மேம்பாடு,  குழந்தைகள்  நலன், சிறுபான்மையினர் நலன் என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆகும் பணிகளை செய்து வருவதாகவும் கூறினார்.  குறிப்பாக கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் , தேவாயங்களை சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ,  அதைவிட அதிக நம்பிக்கையை இந்த 20 மாத காலத்தில் பெற்றிருக்கிறோம் என்றும்,  இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது உழைப்பு;  அந்த உழைப்புக்கு பின்னால் இருப்பது உண்மை;  மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்த பாராட்டுக்கள்,  அதிகம் உழைக்க தூண்டுகோலாக அமையும் என்று கூறினார்[7]. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் நமது அரசு தனது நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம் இது எனது அரசு அல்ல நமது அரசு உத்தரவிடுங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்றார்[8]. ஆனால், இதில் யாரோ வரமாட்டார்கள் என்பது போலிருக்கிறது.

விசுவாசத்துடன் பேசிய அமைச்சர்: தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி கூறுகையில், உங்களுடைய எண்ணங்களையும் உணர்கிறேன் புரிந்து முதல்வர் சொல்லியுள்ளார் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை நம் முதல்வர் எதெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதை எல்லாம் நிறைவேற்றுவார், கிறிஸ்தவ சமூகத்தின் பாதுகாவலனாக முதல்வர் என்றைக்கும் இருப்பார். மதவாதிகளினால் ஆபத்து வரும் என்று முதல்வர் சொன்னார். எக்காலத்திலும் முதல்வர் இருக்கும் வரை யாரும் உங்களை நெருங்க முடியாது. அவர் உங்களின் பாதுகாவலனாக இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த சிறுபான்மையினர் சமுதாயத்தின் பாதுகாவலனாக இருப்பார் என்றார். இவ்வாறு தொடர்ந்து பேசி வருவதும் கவனிக்கத் தக்கது. சில நாட்களுக்கு முன்னர், உதயநிதி தான் கிருத்துவர் தான் என்று கிருத்துவ கூட்டத்தில் பேசியிருப்பதை கவனிக்கலாம். அதே கூட்டத்தில், இந்து அறநிலைய அமைச்சர், அல்லேலூயா என்று மூன்று முறை கத்தி கோஷம் போட்டதும் நினைவிருக்கலாம். ஆக, இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள் ஆகி விட்டார்களா, பிரச்சாரகர்களாகி வேலையில் இறங்கி விட்டர்களா என்று தெரியவில்லை.

கிருத்துவதிராவிடத்துவ கூட்டணி செக்யூலரிஸம் ஆகுமா?: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 6000 மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பெந்தகோஸ்தே நான்காவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டனர். பீட்டர்ஸ் அல்போன்ஸ், டேவிட் பிரசாதம், ஏசு அழைக்கிறார் பால் தினகரன், இனிகோ இருதயராஜ் என்று பல பிரிவினரும் கலந்து கொண்டனர். ஆக கத்தோலிக்கர் அல்லாத கூட்டத்தினர் கூட இவ்வாறு ஒன்று சேர்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் ஊழல், பாலியல் குற்றங்கள், வழக்குகள், கைதுகள், சிறை தண்டனை என்றெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், யாரும் வெட்கப் படுவதாக இல்லை. அரசியல்வாதிகளும் கைகோர்ந்து கொண்டு உல்லா வந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சாராக இருக்கும் அரசியல்வாதி, “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்”  என்று பேசுகிறார். பிறகு, சட்டம்-ஒழுங்கு பற்றி நினைப்பவர் என்ன செய்ய முடியும்? போலீஸாரே யோசிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். பதிப்பு நாளிதழ்களில் விவரங்கள் வந்திருந்தாலும், இணைதளங்களில் வராமல் இருப்பதும் விசித்திரமாக இருக்கிறது. ஒரு சில வரிகளுடன் நிறுத்திக் கொண்டிருப்பதும், நோக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

09-02-2023.


[1] தினத்தந்தி, உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி, By தந்தி டிவி, 9 பிப்ரவரி 2023 7:49 AM

[2] https://www.thanthitv.com/latest-news/you-give-orders-and-we-deliver-the-assurance-given-by-chief-minister-stalin-166594

[3] தினமலர், தேசிய மாநாடு, Added : பிப் 09, 2023 00:57 …

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3237641

[5] தினகரன், சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும்: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, 2023-02-08@ 21:08:19

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=837381

[7] டாப்.தமிழ்.நியூஸ், எல்லாருக்கும் எல்லான் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம்..’ – முதலமைச்சர் ஸ்டாலின்.., By RAMYA K Thu, 9 Feb 20238:23:27 AM

[8] https://www.toptamilnews.com/thamizhagam/elan-for-all-is-the-basic-objective-of-the-dravidian-model/cid9936977.htm

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

திசெம்பர் 16, 2013

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

2009-2014 காலகட்டம்: கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில், திராவிடக் கட்சிகளைக் கவர, கிறிஸ்தவர்கள் விதவிதமான நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். திமுகவை எக்கச்சக்கமாக ஆதரித்து, அது தோல்வியடைந்தவுடன், நிலைமையை சரிகட்ட ஜெயலலிதாவுடன் தாஜா செய்ய ஆரம்பித்தன. 2011ல் இவ்வாறேல்லாம் நடக்கும் என்று ஊகித்து கீழ் கண்ட இடுகைகள் என்னால் இடப்பட்டன:

  1. குல்லா  போய்  தொப்பி  வந்தது  டும், டும், டும்,  கஞ்சி  போய் கேக் வந்தது  அம், அம், அம்:  திராவிட  கட்சிகளின் கிருஸ்துமஸ்  விழாவும்,  வாக்குறுதிகளும்[1], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
  2. குல்லா…………..மிரட்டல்களும்[2] (3).
  3. குல்லா…………..மிரட்டல்களும்[3] (2).
  4. 4.       குல்லா…………..மிரட்டல்களும்[4] (1).

 

ஜெருசலேம்போகமானியம் (2011 கிருஸ்துமஸ்விழா)[5]: ஜெருசலேம் போக மானியம் என்று அறிவித்து விட்டார். பகுத்தறிவுகள் அமுங்கி விட்டன, பொத்திக் கொண்டு விட்டன. இப்படியாக அரசியல்வாதிகள் “செல்யூலரிஸம்” போர்வையில், இந்துக்களுக்கு குல்லா போட ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டுகள் என்ன, 600 ஆண்டுகள் கடந்தாலும், இவர்கள் புத்தி மாறாது. 700 ஆண்டுகள் முஸ்லீம்கள் மற்றும் 300 ஆண்டுகள் கிருத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிரென்சு, ஆங்கில மிஷனரிகள் / கம்பெனிகள்) ஆண்ட காலங்களில் இந்துக்கள் அனுபவிப்பதைவிட, மிக கடுமையான விளைவுகளையே அவர்கள் கண்டு வருகிறார்கள். இப்பொழுது, இந்துக்களே “இந்துக்கள்” போர்வையில், இந்துக்களுக்கு எதிராக வேறு செயல்பட்டு வருகிறார்கள்.

2013   கிருஸ்துமஸ்  விழா: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது[6], இப்படி செய்திகள் வந்துள்ளன.

  • விழாவுக்கு சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமை வகித்து பேசுகிறார்.
  • சென்னை – மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலை வகிக்கிறார்[7].
  • தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகிறார்[8].
  • விழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் படுகிறார்கள்[9].
    • முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்,
    • சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா,
    • இந்தியன் மலங்கரா ஆர்த்தோடாக்ஸ்,
    • திருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ்,
    • ஈ.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம்,
    • பெந்தகொஸ்தே திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன்,
    • ஆங்கிலிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார்,
    • தமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல்,
    • சி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன்,
    • அருட் சகோதரி கில்பர்ட்டா,
    • டாக்டர் பால்ரெங்கநாதன்,
    • ஆண்ட்ரூ பி.நடராஜன்,
    • டாக்டர் எலிசபெத் வர்கீஸ்

ஆகியோர் பேசுகிறார்கள்.

  • டாக்டர் நீதிநாதன்,
  • சவுந்தர்ராஜ்,
  • ஆனந்த்,
  • பால்சுந்தர்சிங்,
  • அருள்,
  • மதர் லீமாரோஸ்,
  • தயானந்தன்,
  • அருள்சந்திரன்

உள்பட கிறிஸ்தவ பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்[10]. அன்று மாலை ஆல்பர்ட் சாலமோன், நபேல் கூத்தூர் ஆகியோரின் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ். இனிகோ இருதயராஜ் செய்து வருகிறார். விழாவில் அனைத்து சமய சமூக மக்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திசைஜெரி, ஜெமிம்மா ஜெயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கிறிஸ்டோபர் நன்றி கூறுகிறார்[11].

2012  கிருஸ்துமஸ்  விழா: சென்ற 2012ல் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாளை மாலை 5 மணி அளவில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி, மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரி வயலார் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பேராயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், டாக்டர் கே.பி. எடிசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவையொட்டி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்தல் போட்டியும், 12 மணி முதல் 4 மணி வரை கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகளும் நடநதது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் செய்தார்[12]. இவர்தான், முன்னர் கருணாநிதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி, ஜெயலலிதாவின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இனி 2013ல் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

 

வேதபிரகாஷ்

© 16-12-2013


[7] மாலைமலர், சென்னையில் 18–ந்தேதிகிறிஸ்துமஸ்விழாவில்மு..ஸ்டாலின்பங்கேற்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 9:43 AM IST

[9] தினபூமி, சென்னையில் 18ந்தேதிகிறிஸ்துமஸ்விழா, 16-12-2013.

[11] தமிள்-ஒன்-இந்தியா, 18ல்சென்னையில்நடக்கும்கிறிஸ்துமஸ்விழாவில்பங்கேற்கும்மு.. ஸ்டாலின், Posted by: Siva, Published: Sunday, December 15, 2013, 12:07 [IST]

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

ஒக்ரோபர் 22, 2013

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

அஸ்தம்பட்டியில் பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவர்களின் வழக்குகள், புகார்கள், சண்டைகள் எல்லாமே வருகின்றன. முதல் பதிவிற்குப் பிறகு[1], இரண்டு[2], பிறகு மூன்றாம் பதிவு தொடர்கின்றது “அஸ்தம்பட்டி புராணம்”!

CSI Polytechnic college Samson Ravindran

அஸ்தம்பட்டி போலீஸ் ஷ்டேசனில் பிஷப் மாணிக்கம் துரை மீது வழக்குப் பதிவு (ஜூலை 2010)[3]: சிஎஸ்ஐ பிஷப் மாணிக்கம் துரை மற்றும், 12 இதர கிறிஸ்தவர்களின் மீது ஏகப்பட்ட பண கையாடல், மோசடி வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அஸ்தப்பட்டி பொலீஸ் ஸ்டேசனிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டது. கென்னடி, இன்ஸ்பெக்டர், மூன்று கோடி மோசடி வழக்கு மற்றும் சிஎஸ்ஐ சேலம் பாலிடெக்னிக் ஊழல் விசயமாக, பிஷப் மாணிக்கம் துரை, அவரது மனைவ் மற்றும் இதர 11 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். கோயம்புத்தூர் மோசடி வழக்கில், சென்னை நீதி மன்றத்திலிருந்து ஏற்கெனவே பெயில் பெற்றுள்ளார்கள். இதனால், பால் வசந்தகுமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்[4]. பிறகு துரை வசந்தகுமாருக்கு எதிராக வழக்குகளைப் போட்டுள்ளார்[5].

CSI Polytechnic Samson Ravindran

அஸ்தம்பட்டிபகுதியில்தென்னிந்தியதிருச்சபையினர்அரசுக்குச்சொந்தமான 4.7 ஏக்கர்நிலத்தைஆக்கிரமித்துள்ளனர்: அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதனை ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களையும் சிறைப்பிடித்து தென்னிந்திய திருச்சபையினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தென்னிந்திய திருச்சபையினர் அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதி ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களை உள்ளே விடாமல் சி.எஸ்.ஐ நபர்கள் வெளியே துரத்தி அனுப்பினர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், நகர வருவாய்த் துறை அலுவலர் ஸ்ரீதர், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்றும் ஆய்வு செய்யச் சென்றனர். அவர்களை திருச்சபை ஊழியர்கள் சிறைப்பிடித்து வைத்தனர். இது  தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. சேலம் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் அலுவலர்களை சிறைப்பிடித்து, பணி செய்ய விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சேலம் வட்டத்தில் இருக்கும் 80 கிராம நிர்வாக அலுவலர்களும் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hasthampatti criminal case filed against Bishop Manickam Dorai

தம்பி. பால்தினகரனின்இனியுள்ளநிலை: பால் தினகரன் போன்ற மில்லியனர்-போதகர்கள் இங்கு வருவதும் வியப்பாக இருக்கிறது. ஒரு இணைதளத்தில், “சேலத்தில் அஸ்தம்பட்டி இம்மானுவேல் CSI ஆலயத்தில் ஞாயிறு காலை ஆராதனையில் தம்பி.பால் தினகரன் பேசும்போது என் தங்கை விபத்தில் மரித்த துக்கத்தில் எங்கள் குடும்பமே சொல்லொன்னா வேதனையில் இருந்த சமயம் ஒருசிலர் மட்டும் எங்களை தாக்கி எழுதி எங்கள் வேதனையை அதிமாக்கினார்கள் என்று ஆலயத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். என்னைத்தான் அப்படி குறிப்பிட்டார் என்று ஜனங்கள் அறிவார்கள்”, என்று இன்னொரு கிருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார்.  அதாவது, தினகரன் மகன்-மகள் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி அவரது மகள் இறந்த செய்தியுள்ளது.

dgs dhinakaran family

அஸ்தம்பட்டியில்  உள்ள  சி.எஸ்..,   பாலிடெக்னிக்[6]  நிர்வாகி  மீது  பல  கோடி  ரூபாய்  மோசடி  வழக்கு  பதிவு: சேலத்தில் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.., பாலிடெக்னிக் கல்லூரி ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவ மத அறக்கட்டளையான .எஸ்..டி.., மற்றும் சி.எஸ்.., டயாசிஸ் கோவை சட்ட திட்டங்களுக்கும் மற்றும் அந்த விதிகளுக்கும் உட்பட்ட நிறுவனம்இங்கு உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் கவுரவ நிர்வாகிகள். அவர்கள் கூட்டாக சேர்ந்து கல்லூரிக்கும், சபை மக்களுக்கும் போலி கணக்கு வழக்குகளை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். என்.பி.., அங்கீகாரம் வாங்குவதாகவும், கட்டுமான பணி நடப்பதாகவும், டி.சி.பி.சி., டிரெயினிங் புரோகிராம் டிரைனிங் என்ற தலைப்பிலும் வுமன் எம்பவர்மென்ட் புரோகிராம் எஞூற தலைப்பிலும், கல்லூரி வாகனத்தை முதல்வர் தன் பெயரில் பதிவு செய்ததும், கல்லூரி நிரந்தர இட்டுவைப்பினை சட்டத்திற்கு புறம்பாகவும், அன்றாட நிர்வாக செலவு பெட்டிகேஸ் என்ற தலைப்பிலும் உள்பட பல்வேறு வகைகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதற்குரிய ஆவணங்களையும் இணைத்துள்ளேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

CSI Polytechnic college Samson Ravindran

முதல்வர் முதல் மற்றவர்களின் மீது வழக்குப் பதிவு: தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா,

  • சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் தாளாளர் துரை,
  • கல்லூரி முன்னாள் முதல்வர் சாம்சன் ரவீந்திரன்,
  • நிர்வாக மேற்பார்வையாளர் அனிபால்ட்,
  • ஏரியா சேர்மன் பால்ராஜ்,
  • கவுரவ செயலாளர் ஸ்டேன்லி குமார்,
  • கவுரவ பொறுப்பாளர் அமிர்தம்,
  • உயர் மட்ட கல்வி நிறுவன கன்வீனர் பாக்கிராஜ்,
  • விரிவுரையாளர் ரவி மனோகரன்,
  • ஜோஸ்வா,
  • அசோக்,
  • ஜெபக்குமார்,
  • சூடாமணி

ஆகியோர் மீது ஐ.பி.சி., 420, 403, 409, 468, 471, 477ஏ மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

© வேதபிரகாஷ்


[4] A Criminal case was filed in Salem on Friday against Church of South India Bishop Manickam Dorai, who is already facing charges of misappropriation of CSI funds, and 12 others, a top police official said. The case was filed under seven sections of IPC including cheating in Hasthampatty police station. Inspector Kennedy said the case relates to misappropriation of funds totalling Rs. three crore.Besides the Bishop, a case was filed against his wife and 11 others including a CSI Salem polytechnic College Principal. The CB-CID is already investigating the alleged misappropriation of funds in Coimbatore, Udhagamandalam, Erode. The Bishop and his wife had already obtained anticipatory bail from the Madras High Court in the Coimbatore case. Following the alleged irregularities, Paul Vasanthakumar, Bishop of Tiruchi and Thanjavur Diocese had taken over additional charge of Coimbatore Diocese of the Church of South India.

http://www.hindustantimes.com/India-news/TamilNadu/Criminal-case-filed-against-Bishop/Article1-576418.aspx

[5] Madras High Court – Rt. Rev. Dr.M.Dorai vs 8 .Rt.Rev.S.Vasanthakumar on 5 April, 2013; Dated : 05.04.2013; http://www.indiankanoon.org/doc/121956762/

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தது, ஜெபித்தது – தீர்க்கதரிசன மாநாடு ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதாலா, மோடி ராஜாவாக வேண்டும் என்பதலா, ஏசுவின் ராஜ்யம் வரவேண்டும் என்ற ஆசையினாலா

ஒக்ரோபர் 13, 2013

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தது, ஜெபித்தது – தீர்க்கதரிசன மாநாடு ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதாலா, மோடி ராஜாவாக வேண்டும் என்பதலா, ஏசுவின் ராஜ்யம் வரவேண்டும் என்ற ஆசையினாலா?

 

பரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னதா?

பரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னதா?

பால்தினகரன்நரேந்திரமோடியைசந்தித்தது: குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை, பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் சந்தித்தார். காந்தி நகரில் உள்ள மோடியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது தேசிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[1]. மோடியின் நலனுக்காகவும், குஜராத் மக்களுக்காகவும் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தார் / ஜெபித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. இந்த சந்திப்பின் போது, கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையில் பால் தினகரன் ஆற்றி வரும் சேவைகளை மோடி வெகுவாக பாராட்டினார்[2]. பிறகு, இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் எல்லோரும் சோனியா மெய்னோவையும் மறந்து, பிஜேபிக்கு ஓட்டுப் போடப் போகின்றானரா?

 

பரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னது ஏன் - கர்த்தரே, இந்த மகத்துவத்தை விளக்க மாட்டீரா?

பரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னது ஏன் – கர்த்தரே, இந்த மகத்துவத்தை விளக்க மாட்டீரா?

பால்தினகரன்சொன்னதாகஉள்ளவை: “அந்த 15 நிமிட சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. அவர் என்னை வரவேற்ற விதம் மிகவும் அபரீதமாக இருந்தது. நான் அவரது காரியங்களுக்காகவும், நமது நாட்டிற்காகவும் வேண்டிக்கொண்டேன். அவரது வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மற்ற எல்லா மாநிலங்களிலும் எடுத்துச் செல்லப்படவேண்டும். நான் எந்த ஒரு பிரிவினையும் சேர்ந்தவன் இல்லை. மோடியிடம் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. நாம் நமது தேசிய தலைவர்களை ஆதரிக்க வேண்டும். வாழ்க்கையில் எனக்கான குறிக்கோள் பிரார்த்தனையாகும். பொதுவாக நான் நமது தலைவர்களுக்காக பிராத்தனை செய்வேன்……….இப்பொழுது மோடி தேசிய தேர்தலின் பலிபீடத்தின் அருகில் உள்ளார். ஆகையால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாகவும் சொல்லியிருக்கிறேன்”, என்று பால் தினகரன் சொன்னார்[3]. மேலெழுந்தவாரியாக படுக்கும் போது, ஒன்றும் புரியாமல் இருந்தாலும், ஒவ்வொரு வரிக்கும், பேபுக்கில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டு, பால் தினகரனே அதம் மகத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளார்.

 

சாத்தானை எதிர்த்து கர்த்தரின் பால் இழுக்கும் வல்லமை ஆவியின் மூலம் தான் முடியும் - கர்த்தரே எங்களை ஆசிர்வதியும்!

சாத்தானை எதிர்த்து கர்த்தரின் பால் இழுக்கும் வல்லமை ஆவியின் மூலம் தான் முடியும் – கர்த்தரே எங்களை ஆசிர்வதியும்!

ஏசுவின்ராஜ்யம்ஏற்படவேஜெபித்தேன்: பால் தினகரன் கோயம்புத்தூரில் உள்ள காருண்ய பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவர். மோடி பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பின்னர், முதன் முதலாக, ஒரு சிறுபான்மையின மதப்பிரச்சாரகர் சந்திப்பதாக உள்ளது. “பைபளில் ஆட்சி செய்கின்ற ராஜாக்களுக்காக ஜெபியுங்கள், என்றுள்ளதால் மோடிக்காக ஜெபித்ததாக” பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்[4] [Today I met with Shri Narendra Modi ji .Prayed with him to the Lord to bless his efforts for the people.Discussed national issues. As the Bible asks us to pray for the rulers so did I.]. மேலும் தொடர்கிறார், “மேலேயுள்ள புகைப்படம் குஜராத்தில் உள்ள அரங்கதினதாகும். அங்கு 2200 பேர் தீர்க்கதரிசன மாநாட்டில், தீர்க்கதரிசனமாக கடவுளிற்காகவும், நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், அவரது சாம்ராய்யம் அமைக்கக் கோரியும் ஜெபிக்க பயிற்சி கொடுக்கப்பட்டது,” [The photo in the Auditorium is in Gujarat where 2200 people are being trained in the Prophetic Conference to prophetically pray for God’s plan for the nation, the people and the ministries to build His kingdom . I am enjoying ministering and being with these saints who have sacrificially served the Lord. ACTS 2:17 IS HAPPENING!]. அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், சிறந்ததாகவும் இருந்தது. ………ஏற்படுகிறது. எவாஞ்சிலின் மற்றும் நான் இந்ந்துறவிகளுடனும் / செயின்டுகளுடன் ஆசிர்வதிக்கப்பட்டவராக உள்ளோம். [It was powerful and glorious. Acts 2:17 is happening.Evangeline and I are blessed being with these saints].

 

கர்த்தரே, மோடிக்காக நான் ஜெபீக்கிறேன், ஆண்டவரே அவரை ராஜாவாக்குங்கள். உமது ராஜ்யம் வரவேண்டுமானால், அவரை ராஜாவாக்குங்கள்! ஆமென்!

கர்த்தரே, மோடிக்காக நான் ஜெபீக்கிறேன், ஆண்டவரே அவரை ராஜாவாக்குங்கள். உமது ராஜ்யம் வரவேண்டுமானால், அவரை ராஜாவாக்குங்கள்! ஆமென்!

பால் தினகரின் தேர்தல் ஜெபிப்புகள் மற்றும் தீர்க்க தரிசனங்கள்: பால் தினகரன் தேர்தல்களைப் பற்றி தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானது, இவர்மேல் இறங்கி வந்து, தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று அப்படியே சொல்லிவிடுகிறது. அதன்படி, இதுவரை உள்ள தீர்க்கதரிசனங்கள் எல்லாம் சோனியா மெய்னோவிற்குத்தான் சாதகமாக இருந்து வந்துள்ளது. 2008 தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளது[5]. 2009 இவரது தீர்க்க தரிசனம் என்றுள்ளது[6]. அதில் சோனியா காங்கிரஸைத்தான் ஆதரிக்கப்பட்டுள்ளது[7]. மன்மோஹன் சிங் சமாதானத்தை கொண்டுவருவார் என்றுள்ளது[8]. இணைதளப் படத்தில் பிரதானமாக மன்மோஹன் சிங், சோனியா, கருணாநிதி, லல்லு பிரசாத் யாதவ், மாயாவதி என்றுதான் உள்ளது. ஆகவே, இப்பொழுது 2013ல் மோடிக்காக ஜெபிக்கிறேன் என்றால், அவ்வாறே, தனது இணைதளத்தில் போடுவாரா அல்லது வெறுமனே, “இன்று நான் மோடிஜியை சந்தித்தேன்” என்று பேஸ்புக்கில் போட்டு, சோனியாவை ஆதரிப்பாரா?

 

ஆவி ஏற-ஏற ஜெப்பிகிறோம் ஆண்டவரே, மோடியை ராஜாவாக்குங்கள், சோனியாவுக்கு சாந்தம் உண்டாக்குங்கள்! ஆமென்!

ஆவி ஏற-ஏற ஜெப்பிகிறோம் ஆண்டவரே, மோடியை ராஜாவாக்குங்கள், சோனியாவுக்கு சாந்தம் உண்டாக்குங்கள்! ஆமென்!

© வேதபிரகாஷ்

13-10-2013


குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!

திசெம்பர் 24, 2010

குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும்!

Karu-with-xian-cap

Karu-with-xian-cap

திராவிட கட்சிகளின் செக்யூல்சரிஸ விபச்சாரம்: திராவிடகட்சிகளின் கத்தோலிக்க சோனியாவுடன் தேர்தல் உறவை வைத்துக் கொள்ள எப்படி அரசியல் விபச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதனை ஏற்கெனெவே, அக்கட்சிகளின் “மெக்காலேக்கள்” தீர்மானித்து விட்டார்கள் போலும். விபச்சாரிகள் எப்படி நின்று கொண்டு, தத்தமது உடலை நெளிந்து, வளைத்து, அங்கங்களைக் காட்டி, சைகைகளுடன் தமது வாடிக்கையாளர்களை மயக்கி இழுக்கப் பார்ப்போர்களோ, அதே மாதிரி, நான் இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன் என்றெல்லாம் வேசித்தனம் பேசி, பரத்தைத்தனத்தைக் போட்டிப்போட்டுக் கொண்டு காட்ட ஆரம்பித்து விட்டனர். வெட்கங்கெட்ட செக்யூலரிஸ நிபுணர்கள் அமைதிக் காத்துக் கொண்டிருக்க, பால் தினகரமன் வெளிப்படையாகவே சொன்னது, “அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”!

Karu-cake-cutting-2010

Karu-cake-cutting-2010

“அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”! அதாவது தமிழக மக்கள் அந்த அளவிற்கு முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், அடிமைகள், கேனத்தனமானவர்கள்……………..என்று கிருத்துவர்கள் தீமானித்து விட்டார்கள் போலும். விஜயகாந்திற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது, ஒரு ஒத்திகைத்தான் போலும். சிறிய மீனைப் போட்டு, பெரிய மீனைப் பிடிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல. ஆகவே, கருணாநிதி, ஜெயலலிதா இப்படி கிருஸ்துமஸ் விழா கொண்டாடி பிதற்றிவரும் அதே நேரத்தில் அந்த கத்தோலிக்க சோனியா மெய்னோவின் மகன் ரௌல் ராபர்ட் என்கின்ற ராஹுல் காந்தி / கந்தி இங்கு சொன்னதாவது[1], “தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்”.

ஒரு இளைஞர் முதல் அமைச்சராக வர வாய்ப்பிருக்கிறது, ஆனால், கூட்டணியை அம்மாதான் தீர்மானிப்பார்: இப்படி ரௌல் ராஹுல் ஆருடம் சொன்னது வேடிக்கைதான். “நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது”, என்று கூட சொல்லமுடிந்தது[2],  ஆனால், கூட்டணியைப் பற்றி அம்மாதான் தீமானிப்பாராம்[3], “திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ள வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கடிதம் கொடுத்துள்ளனர். கூட்டணி குறித்த முடிவு எடுக்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைமையிடமும், சோனியா காந்தியிடமுமே உள்ளது. இருப்பினும், இக் கடிதத்தை காங்கிரஸ் தலைமையிடம் அளிப்பேன்”.

வேதபிரகாஷ்

© 24-12-2010


[1] தினமலர், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை அலப்படுத்தவெடெண்டும், பதிவு செய்த நாள் : டிசம்பர் 23 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151830

[3] தினமணி, கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்: ராகுல்காந்தி, First Published : 24 Dec 2010 12:17:20 AM IST,

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=350875&SectionID=130&Main….AF%8D%E0%AE%A4%E0%AE%BF