Archive for the ‘சாந்தி’ Category

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா?

ஜூன் 24, 2019

2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன்குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா?

Kollialai child traffickig Bangalore woman arrested

30 ஆண்டுகளாக நடந்து வரும் குழந்தை விற்பனை விவகாரத்தில் பலர் கைது: பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடமிருந்து ஏராளமான குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரித்து,

  1. ராசிபுரம் நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி,
  2. அவரது கணவர் ரவிச்சந்திரன்,
  3. சகோதரர் நந்தகுமார்,
  4. கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன்,
  5. ஈரோடு தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன்,
  6. சேலம் நர்ஸ் சாந்தி,
  7. பெங்களூரு அழகுக்கலை நிபுணர் ரேகா மற்றும்
  8. புரோக்கர் ஹசீனா,
  9. புரோக்கர் அருள்சாமி,
  10. புரோக்கர் லீலா,
  11. புரோக்கர் செல்வி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Gideon Jacob arrested by CBI in 2017

உசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.

Child traficking in India

வாடகை தாய் விவகாரம் இதில் ஏன் சம்பந்தப் பட வேண்டும்?: இதில் ரேகா என்ற பெண்ணை, பெங்களூரிலிருந்து கைது செய்தது, “வாடகை தாய் விவகாரம்,” என்று குறிப்பிடப் பட்டுள்ளது[1]. இது பற்றி தமிழ் ஊடகங்களில்  எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அரியலூரை அடுத்த ஆரியூர்நாடு கிழக்குவளவு – புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி [45] என்ற பாதிரியாரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பாதிரியார் பொன்னுசாமி கொல்லிமலை பகுதை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலரிடம் விற்பனை செய்தது ஆதார பூர்வமாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[3]. கைது செய்யப்பட்ட பொன்னுசாமி, திருப்புலிநாடு புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4].

Kollimalai child traficking pastor Krupakaran arrested 12-2001

2001 மற்றும் 2019 கைதுகள்: 2001 ல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நடந்து வந்த குழந்தைகள் கடத்தல் விவகாரம் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்த போது, கொல்லிமலை பாதிரி கைது செய்யப் பட்டது மறந்திருபர். திருப்பதியில் நடந்த அக்குற்றத்தில் ஈடுபட்டதாக, சென்னையை சேர்ந்த குற்றவாளிகள்[5]

  1. காவிரி[6] [Lotus Child Adoption Agency[7]] மற்றும் இன்னொரு நபர் கைது செய்யப்பட்டனர். தவிர,
  2. அவளுக்கு உதவிய சித்தூரைச் சேர்ந்த வினோத்குமார்
  3. சென்னையை சேர்ந்த சித்தீகி அப்துல் ரஹிம் மற்றும்
  4. கொல்லிமலையைச் சேர்ந்த கிருபாகரன் என்ற ஒரு கிருத்துவ பாதிரியார் கைது செய்யப்பட்டனர்.

 தவிர சென்னையை சேர்ந்த உஷா மற்றும் வசந்தா என்ற இரண்டு பெண்மணிகளும் குழந்தைகளை ஆகவே பார்த்துக் கொள்வது மற்றும் அவர்களுக்கு வேண்டிய பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் டிசம்பர் 2001 நடக்கிறது[8]. இங்கே கொல்லிமலையை சேர்ந்த கிருபாகரன் என்ற பாதிரி சம்பந்தப்பட்டிருப்பது தான் கவனிக்கப் பட வேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில், 2019ல் நடக்கின்ற இந்த குழந்தை கடத்தல் விற்பனை, கடத்தல் முதலிய குற்றங்களிலும், அதே பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி என்ற பாதிரி கைது செய்யப்பட்டிருப்பது கவனிக்க வேண்டும். அதாவது கொல்லிமலைப் பகுதிகளில் பல சர்ச்சுகள் இருக்கும் நிலை என்ன என்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு சிறிய பகுதியில், சுமார் 50 சர்ச்சுகள் ஏன் இருக்கின்றன? கத்தோலிக்க சர்ச் தவிர மற்ற சர்ச்சுகள் அதிகமாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் அந்நிய நாட்டிலிருந்து நிதி பெறுகின்றன. எனவே இத்தகைய சூழ்நிலையில் நினைவுபடுத்திக்கொண்டு ஆண்டாண்டு காலமாக இது ஒரு தொழிலாக வியாபாரமாக செய்து வருகின்றனர் என்ற சந்தேகம் நியாயமான முறையில் பெறுகின்றது.

Churches in Kollimalai - Google

கொல்லிமலையில் இருக்கின்ற சர்ச்சுகள்: ஒரு சிறிய இடத்தில் இத்தனை சர்ச்சுகள் ஏனிருக்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது.

பெயர் முகவரி
ரோமன் கத்தோலிக்க சர்ச் வளவந்தி நாடு, Tamil Nadu 637411
கிரேஸ் ரிபார்ம்ட் பேப்டிஸ்ட் சர்ச் Grace Reformed Baptist Church, Karavallicombai R.F., Tamil Nadu 637411
டையோசியன் மிஷனரி பிரேயர் பேன்ட் சர்ச் DMPB [Diocesan Missionary Prayer Band] Karayaankadu, Kariyankattu Patti Rd, Karayankattu Patti, Tamil Nadu 637411

 

தமிழ் பேப்டிஸ்ட் சர்ச் Strict Baptist Church, Valavanthinadu, Tamil Nadu 637411
நேஷனல் மிஷினரி சொசைடி ஆப் இந்தியா சர்ச் NMSI Church, Valavanthinadu, Tamil Nadu 637411
கே சுன்டே நாகிங் சர்ச் GSWG [Gay Sunday Walking Group]
கிரைஸ்ட் சர்ச், பிரான்ட் மெமரி சர்ச் Christ Church, Brand Memory Ministry
டாக்டர் பால் பிரான்ட் மெமோரியல் சர்ச் Dr Paul Brand Memorial Church
கொல்லிமலை சி.இ.ஆர்.எஸ்.டி சர்ச் Kollimalai CGRIST Church
ஜியோன் கன்மலை சர்ச் Zion Kanmalai Church
St Vasantha Church
அன்னை ஆரோக்கிய சர்ச் Annai Arogya church

இவற்றில், கிருபாகரன் மற்றும் பொன்னுசாமி எந்த சர்ச்சில் பாஸ்டர், பாதிரியாக இருந்தனர் என்று தெரியவில்லை. ஊடகங்கள் மறைத்து தான் வருகின்றன.

Namakkall child traffiking case

30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி[9]: இந்த இரு 2001 மற்றும் 2019 பாதிரிகள் கைது வைத்துப் பார்த்தால், சர்ச்சுகளின் சம்பந்தம் இதில் தெளிவாகிறது. இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா? “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்!

Kollimalai child traficking pastor Ponnusamy arrested 21-06-2019

மனித ஆள் கடத்தல் சர்வதேச பிரச்னையாக உள்ளது: தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி ஆண்டுதோறும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10% பேர் வெளிநாடுகளுக்கும், 90% பேர் மாநிலங்களுக்கும் கடத்தப்படுகின்றனர். அதில் 80% பேர் பாலியல் தொழிலுக்கும், மீதமுள்ள 20% பேர் பிற தொழில்களில் ஈடுபடுத்தவும் கடத்தப்படுகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மனித உரிமைகள் ஆணையக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 40,000 குழந்தைகள் வரை கடத்தப்படுகின்றனர்[10]. இதில் 11,000 குழந்தைகள் வரை மீட்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி குழந்தை கடத்தல் தொடர்பாக 6,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 96% அதிகம்[11]. இந்தியாவில் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஆள் கடத்தல் அதிகமாக உள்ளது.  இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது[12]. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என்பதும் அதிர்ச்சித் தகவல். டில்லியில் மட்டும் 2100 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. னால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 40 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

© வேதபிரகாஷ்

22-06-2019

Churches in Kollimalai - baptism

[1] Police said 40-year-old Rekha of Bengaluru was arrested, based on a statement of another accused in the case, Ms. Hasina. Ms. Rekha, who had allegedly been a go-between surrogate mothers who lend their embryos for a fee to help childless couples conceive through in-vitro fertilization techniques and potential parent-clients, had sourced babies from Amudha and allegedly sold them to affluent childless couples in Bengaluru.

DECCAN CHRONICLE. Baby sale case in Namakkal: Police arrest Bengaluru woman,| ZAKEER HUSSAIN, Published May 19, 2019, 1:58 am ISTUpdated May 19, 2019, 1:58 am IST

https://www.deccanchronicle.com/nation/crime/190519/baby-sale-case-in-namakkal-police-arrest-bengaluru-woman.html

[2] தினத்தந்தி, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியார்சிபிசிஐடி போலீசார் தீவிர வீசாரணை, பதிவு : ஜூன் 21, 2019, 03:22 PM

[3] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/21152251/1040772/Namakkal-Rasipuram-Babysale-Issue.vpf

[4] தினகரன், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை குழந்தைகள் விற்பனை வழக்கில் கொல்லிமலை மதபோதகர் கைது, 2019-06-22@ 00:41:12

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504537

[5] The Hindu, Child lifting racket busted, Saturday, Dec 22, 2001.

[6] Ms.Kaveri, the owner of `Lotus Child Adoption Agency’, was said to be the kingpin of the racket She was assisted in the crime by Vinodkumar of Vijayapuram in Chittoor district, Siddiqui and Abdul Rahim of Chennai, apart from a pastor, Krupakaran of Kollimalai in Tamil Nadu. She utilised the services of two Chennai-based sisters Usha and Vasantha for taking care of the children when the visa and passport were being readied. In case of abducted children, these women used to act as their mothers for passport and other purposes.

[7] https://www.lotusadoption.com/index.html;

[8] https://www.thehindu.com/2001/12/22/stories/2001122203080300.htm

[9]என்டிடிவி.தமிழ், ‘30 வருடங்களாக பிறந்தகுழந்தையை விற்று வருகிறேன்’.. செவிலியரின்அதிர்ச்சி ஆடியோ!, Press Trust of India | Updated: April 27, 2019 08:52 IST.

[2] https://www.ndtv.com/tamil/selling-newborns-for-30-years-audio-of-woman-goes-viral-tamil-nadu-cops-probe-2028840

[10] தினமணி, உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்: 2016-ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்!, By PTI | Published on : 08th July 2018 09:35 PM

[11] https://www.dinamani.com/latest-news/2018/jul/08/55000-children-kidnapped-in-2016-in-india-2955887.html

[12] தினமலர், ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல், Added : ஜூலை 09, 2018 09:02.

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=2057993