Archive for the ‘கிறிஸ்தவ சங்கம்’ Category

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுகஎம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

ஜூன் 28, 2023

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

துரைமுருகன் நோட்டீஸ் கண்டுகொள்ளாத எம்.பி: சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடக்கும் விவகாரங்கள் குறித்த தகவல் தி.மு.க தலைமைக்குச் சென்றது[1]. அதனால் கட்சித் தலைமை ஞானதிரவியம் எம்.பி மீது அதிருப்தியடைந்துள்ளது[2]. அதனால் அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்[3]. அதில், கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஏழு தினங்களுக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது[4], இதனிடையே, சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்[5]. அத்துடன், ஞானதிரவியம் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட சிலர் பேர் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. காட்ப்ரே நோபுள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்[7]. அவர்கள்மீது 147 (கலகம் செய்தல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 506 (2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது[8]. விகடன் கேட்டபோது[9], “சி.எஸ்.ஐ அலுவலகத்தில் மோதல் நடந்தபோது நான் சம்பவ இடத்திலேயே கிடையாது. ஆனாலும் என்னையும் திட்டமிட்டு அந்த வழக்கில் சேர்த்திருக்கின்றனர். விசாரணையின்போது உண்மை தெரியவரும். என்னிடம் விளக்கம் கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுப்பேன்” என்று ஞானதிரவியம் முடித்துக் கொண்டார்[10].

ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான லாரிகளில் கனிமங்கள் கடத்தல்: சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நெல்லை திருமண்டலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் சி.எஸ்.ஐ உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஞானதிரவியம் எம்.பி செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தி.மு.க தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றவண்ணம் இருப்பதால் கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. 21-06-2023 கடிதத்தின் படி அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியானது. அதைத் தொடர்ந்து கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி கனிம கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த டாரஸ் லாரிகள் இரண்டும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது[11]. அதனால் போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, பிடிபட்டது 9 லாரிகள் என்றும் அவற்றை விடுவிக்குமாறு தி.மு.க-வின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால் ஏழு லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்[12]. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்>

பின்னணியில் அ.தி.மு.க.,திமுக எம்.பி குற்றச்சாட்டு: இவ்வழக்கு குறித்து எம்.பி., ஞான திரவியம் கூறியதாவது[13]: “காட்ப்ரே நோபுள், அடியாட்களுடன், டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கும், சி.எஸ்.ஐ., சபையினருக்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ கிடையாது. திருமண்டலத்தைச் சேர்ந்த ஜானிடம் தகராறு செய்யும் நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெனி தலைமையில், 30 பேருடன் டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டேன். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் நான், சம்பவ இடத்தில் இல்லை. அப்படி இருந்தும், காட்ப்ரே நோபுள் புகார் அடிப்படையில் காவல் துறையினர்.

எந்தவித விசாரணையும் இன்றி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, அதில் என்னையும் சேர்த்துள்ளனர். இது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்ப்ரே நோபுள், அ.தி.மு.க.,வுக்கு மிகவும் சாதகமானவர். அவர் ஏற்கனவே, ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் மற்றும் 2021 சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பணியாற்றிஉள்ளார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவரை, தற்போதைய பிஷப்பும், அ.தி.மு.க, ஒன்றிய செயலருமான, கே.பி.கே.செல்வராஜ், அ.தி.மு.க., பகுதி செயலர் ஜெனி ஆகியோர், பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர். பிஷப்பும், இவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தான் உண்மை,”இவ்வாறு தெரிவித்து உள்ளார்[14]..

2022லிருந்து தொடரும் கனிமவள கொள்ளை புகார்: அனுமதியின்றி கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளம் கடத்திய தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் மகன் தினகரன் கைதாவாரா என, கேள்வி எழுந்துள்ளது[15]. ஏற்கனவே, பொதுமேடையில் கலெக்டருடன் மோதல் ஏற்படுத்திய தி.மு.க., – எம்.பி., மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லாரிகளின் உரிமையாளர் திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பதால், போலீசார் ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லும்படி கூறினர்[16]. லாரி உரிமையாளர் தினகரன் உடனடியாக வரவில்லை. அவர் மீது, 379 பிரிவில் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். தற்போது டிரைவர்கள் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர். தி.மு.க., – எம்.பி., மகன் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாவட்ட நிர்வாகம் மீது கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சமீபத்தில் திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும், பிரச்னை அவருக்கு எதிராகவே திரும்பியது.அவரது மற்றொரு மகன் ராஜா மீதும் லாரி மணல் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது தினகரன் மீதும் மணல் திருட்டு வழக்கு, போலீஸ் தேடல் என, சர்ச்சை தொடர்கிறது.

© வேதபிரகாஷ்

28-06-2023


[1] தமிழ்.நியூஸ்.18, பாதிரியார் மீது தாக்குதல்திமுக எம்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, Published By :Arunkumar A, TIRUNELVELI, First published: June 27, 2023, 10:30 IST, LAST UPDATED : JUNE 27, 2023, 10:30 IST.

[2]  https://tamil.news18.com/tirunelveli/5-case-filed-against-dmk-mp-gnana-thiraviyam-reason-for-attack-nellai-father-1038153.html

[3] தமிழ்.இந்து, சிஎஸ்ஐ திருமண்டல மோதல் விவகாரம் | திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு, செய்திப்பிரிவு, Published : 27 Jun 2023 11:52 AM, Last Updated : 27 Jun 2023 11:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1027770-case-registered-against-33-people-including-dmk-mp-gnana-dhiraviyam.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சிஎஸ்ஐ மதபோதகர் மீது தாக்குதல்.. நெல்லை எம்.பி ஞானதிரவியம் மீது திமுக நடவடிக்கை.. பாய்ந்த வழக்கு, By Jeyalakshmi C Updated: Tuesday, June 27, 2023, 12:01 [IST]

[6] https://tamil.oneindia.com/news/thirunelveli/attack-on-csi-preacher-dmk-action-against-mp-gnana-thiraviyam-of-tirunelvely-police-booked-518539.html

[7] தினமணி,  மத போதகா் மீது தாக்குதல்: எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், By DIN  |   Published On : 28th June 2023 01:56 AM  |   Last Updated : 28th June 2023 01:56 AM

[8] https://www.dinamani.com/tamilnadu/2023/jun/28/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-4028548.html

[9] விகடன், என் மீது எந்தத் தவறும் கிடையாது!” – சி.எஸ். விவகாரம் தொடர்பாக ஞானதிரவியம் எம்.பி விளக்கம், பி.ஆண்டனிராஜ், Vikatan, Published:27-06-2023 at 4 PM’ Updated: 27-06-2-23 at 4 PM

[10] https://www.vikatan.com/crime/dmk-mp-gnanadiraviyam-clarification-on-the-tirunelveli-csi-issue

[11] விகடன், கனிம கடத்தல் வழக்கு! – நெல்லை எம்.பி மகன் தலைமறைவு, பி.ஆண்டனிராஜ் Published:15 Sep 2022 8 PMUpdated:15 Sep 2022 8 PM

[12] https://www.vikatan.com/government-and-politics/nellai-mp-son-booked-for-the-mineral-smuggling-case-and-he-is-absconded

[13] தினமலர், திமுக  எம்.பி மீது 5 பிரிவுகளில் வழக்கு, Updated: juun 28, 2023; 00:01; juun 27, 2023 23:55.

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=3359892

[15] தினமலர், மணல் கடத்தல், குவாரிகளால் சர்ச்சைகளில் சிக்கும் தி.மு.., – எம்.பி., ஞான திரவியம், மாற்றம் செய்த நாள்: செப் 17,2022 06:48.; https://m.dinamalar.com/detail.php?id=3125004

[16] https://m.dinamalar.com/detail.php?id=3125004

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? (1)

ஜூன் 28, 2023

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? (1)

பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக தேர்ந்தெடுக்கப் படுதல்: தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயரைத் தேர்வுசெய்வதற்கான பெயர் பட்டியல் தேர்வு 2021 செப்டம்பரில் நடைபெற்றது. இதில் ARGST பர்னபாஸ், A. பீட்டர் தேவதாஸ், TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ARGST பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதே 2021ல் திருநெல்வேலி பெருமண்டல உறுப்பினராக தேர்வானார் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம். இதற்குப் பிறகு திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் கல்வி நிலவரக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கடுத்த ஆறு மாதம் வரை பர்னபாஸ், ஞானதிரவியம் ஆகியோர் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர். இதற்குப் பிறகு ரெவரண்ட்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு வைக்கப்பட்டது. இதில் சிலரைத் தேர்வு செய்யும்படி ஞானதிரவியம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடிவுகள் வெளியானபோது ஞானதிரவியம் சொன்ன ஆட்களில் சிலர் தேர்வாகவில்லை.

ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் ஆரம்பித்த உரசல்கள்: தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே ரெவரண்ட்கள் தேர்வானதாக பர்னபாஸ் தரப்பு கூறியது. இதற்குப் பிறகு ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன. இதற்குப் பிறகு நடந்த கமிட்டி கூட்டங்களில் எல்லாம் இரு தரப்புக்கும் இடையில் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இந்தத் திருமண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போதும் இடமாற்றல்கள் செய்யும்போதும் ஞானதிரவியத்தின் பரிந்துரைப்படி நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது[1]. இதற்குப் பிறகு, பார்னபாஸைச் சுற்றியிருந்த சிலரை நீக்கும்படி ஞான திரவியம் கூறியபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார்[2]. இதற்குப் பிறகு கமிட்டி கூட்டம் நடக்கும் அறையில் சொத்து அலுவலரால் சிசிடிவி பொருத்தப்பட்டது. இதனால், சொத்து அலுவலரை மாற்றும்படி கூறினார் ஞானதிரவியம். இதனையடுத்தே சொத்து அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார் ஞானதிரவியம். புதிதாக ஒரு சொத்து அலுவலரையும் நியமித்தார். ஆனால், இதனால் திருமண்டலத்தின் அலுவல்கள் பாதிக்கப்படுவதாகவும் சொத்து அலுவல கதவைத் திறந்துவிடும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பர்னபாஸ். ஆனால், அதனை ஞானதிரவியம் தரப்பு ஏற்கவில்லை.

ஞானதிரவியம் எம்.பி, தென்னிந்திய திருச்சபை நிர்வாகம், சொத்து விற்பனை: தென்னிந்திய திருச்சபை எனப்படும் சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. கோடிக்கணக்கில் சொத்துகளைக் கொண்ட நெல்லை திருமண்டலத்தில் பிஷப்பாக பர்னபாஸ் உள்ளார். திருமண்டல செயலாளராக டி.எஸ்.ஜெயசிங் உள்ளார். இவரது ஆதரவோடு பிஷப் ஆனவர் தான் பர்னபாஸ். இருப்பினும் பொறுப்புக்கு வந்த பின் இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர். இந்த நிர்வாகத்தில் ஞானதிரவியம் எம்.பி முக்கிய பங்காற்றி வந்த நிலையில், அவருக்கும் பிஷப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கல்வி நிலைக்குழுச் செயலாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி, பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சில சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்ய தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தன்னை எதிர்த்தவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு பிஷப் பர்னபாஸ் மறுத்ததால் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

25-06-2023 – CSI நம்பிக்கையாளர்களுக்குள் சச்சரவு, அறைகளுக்கு பூட்டு: கடந்த 25ம் தேதி டயோசீஸ் அலுவலகத்தில் இரு தரப்பினர் கூடினர். அங்கு ஞான திரவியம் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிஷப் தலைமையில் கல்வி நிலைக்குழுக் கூட்டம் நடந்தபோது அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிஷப் முன்னிலையில் அருவருக்கத்தக்க வகையில் ஞானதிரவியம் பேசியுள்ளார்[3]. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது[4]. அதைப் பார்த்த சி.எஸ்.ஐ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும், ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்[5]. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்[6]. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்ததோடு, சி.எஸ்.ஐ அலுவலகத்தின் சில அறைகளை அவரது ஆதரவாளர்கள் பூட்டிச் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க-வின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிஷப் தரப்பினர் கட்சித் தலைமையிடம் புகார் அளித்தனர். அத்துடன், உளவுத்துறை மூலமாகவும் இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு புகார் சென்றது.

பிஷப் காட்ப்ரே நோபுள் ஞானதிரவியம் எம்.பி மீது வீடியோகுற்றச்சாட்டு: நெல்லை திருமண்டலத்தில் ஆளும் தி.மு.க-வின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தும்  முயற்சியில் ஞானதிரவியம் எம்.பி ஈடுபடுவதாக அனைத்திந்திய ஜனநாயக பாதுகப்பு கழகம் கட்சியின் தலைவரும் ஜே.எஸ்.எம் என்ற தனித்திருச்சபை நடத்திவரும் பிஷப் காட்ப்ரே நோபுள் என்பவர் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். வழக்கு, சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர். நாலுமாவடி மத போதகர் மோகன் சி லாசரசின் சகலைஅதில் ஞானதிரவியம் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில், 26—06-2023 அன்று பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ அலுவலகத்தை ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் கைப்பற்றப் போவதாக தகவல் பரவியது[7]. அதனால் பிஷப் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது அங்கு காட்ப்ரே நோபுளும் இருந்தார்[8]. அப்போது அங்கு வந்த ஞானதிரவியம் ஆதரவாளர்கள், காட்ப்ரே நோபுள் மீது தாக்குதல் நடத்தினார்கள்[9]. அவர் தப்பி ஓட முயன்றபோது, அவரைத் துரத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்கினர். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்[10]. அவரது சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர்[11]. கிழிந்த சட்டையுடன் அவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார்[12]. பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வைரலானது. 

எல்லோருமே கிருத்துவர்கள் தான், ஆனால், அரசியல், பணம் முதலியன பிரிக்கின்றன: பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஞானதிரவியத்தை நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய தாளாளருக்கும், ஞானதிரவியம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றிருந்தது[13]. பேராயர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[14]. எல்லோருமே கிருத்துவர்களாக இருந்தாலும், டினாமினேஷன்களால் பிரிந்திருக்கிறார்கள். ஆனால், பணம், அந்தஸ்து, சொத்து, சுகம் என்றெல்லாம் இருக்கும் பொழுது, அரசியல் கூட்டுடன் கொள்ளையடிக்க முயல்கின்றனர். போதாகுறைக்கு, கனிமகொள்லைகளில் இந்த பகுதி பிஷப்புகள், பாதிரிகள் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் அரசியல் ஆதரவு இல்லாமல் நடக்குமா என்று தெரியவில்லை. இங்கு செக்யூலரிஸத்தில், கம்யூனலிஸத்தில், பெரியாரிஸத்தில், திராவிட மாடலில், எதில் ஒன்று படுகிறார்கள்-வேறுபடுகிறார்கள் என்பதும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

28-06-2023


[1] தமிழ்.பிபிசி, மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.. எம்.பி. மீது வழக்குப் பதிவுஎன்ன நடந்தது?, 27 ஜூன் 2023

[2] https://www.bbc.com/tamil/articles/c6pd6608ew9o

[3] தினசரி.காம், thinasari.kaam, சிஎஸ்ஐ., பிஷப்பை அடித்து ஓட ஓட விரட்டிய நெல்லை திமுக., எம்.பி. ஞானதிரவியம் ஆட்கள்,  Dhinasari Reporter, June 27, 2923 12.31 PM

[4] https://dhinasari.com/latest-news/289818-csi-bishop-attacked-by-dmk-mp-goons.html

[5] பத்திரிக்கை.காம், திருநெல்வேலி எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், JUN 27, 2023 p

[6] https://patrikai.com/duraimurugan-notice-gnanathiraviam-mp/

[7] விகடன், பாதிரியார் மீது தாக்குதல்ஆபாச பேச்சுதிமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு!, பி.ஆண்டனிராஜ், 11.00 ஜூன்.27, 2023 காலை.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-secretary-has-issued-notice-to-gnanadiraviyam-mp-for-misbehaving-in-csi-diocese

[9] தினமலர், சி.எஸ்.., அலுவலகத்தில் பிஷப்புக்கு அடி, உதை, பதிவு செய்த நாள்: ஜூன் 27,2023 01:33, https://m.dinamalar.com/detail.php?id=3358976

[10] https://m.dinamalar.com/detail.php?id=3358976

[11] நியூஸ்.18தமிழ், பாதிரியார் மீது தாக்குதல்ஆபாச பேச்சுதிமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு! || News18Tamil, gmrtech, Last updated: 2023/06/27 at 5:49 AM.

[12]https://www.news18tamil.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/

[13] குமுதம், பாதிரியார் மீது தாக்குதல்: நெல்லை தி.மு.., எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு, Kumudam News Desk, 12.00 HRS, june 27, 2023.

[14] https://www.kumudam.com/news/politics/dmk-mp-case-registered-against-33-people-including-gnana-thiraviyam

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஒக்ரோபர் 17, 2022

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].

கொரோனா காலத்தில் கிருத்துவம் படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.

இந்தியாவை குறி வைக்கிறதா, ஆயர் மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரிய சக்திகளின் கைகளில் அகப் பட்டுச் சிக்கி தவிக்கிறது ஆசியா. குடியரசு தீய சக்திகளின் கைகளில் உள்ளது. நோய், பஞ்சம், பட்டினி என்று மனித சமுதாயம் அழுது வருகின்றது. மனிதர்களால் உண்டாக்கப் பட்டு வரும் அழிவுகளிலிருந்து விடுபட வேண்டும். சர்ச் இதற்காக எழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.

மாநாட்டின் குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion  வெறும்  8 percent  ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.

1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:

  1. நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news], 
  2. ஞான ஸ்தானம் பெற்ற விசுவாசிகளின் நம்பிக்கைகளுக்கு ஏற்ற முறையில் நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized];  மற்றும்
  3. மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]

அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில்  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..

செய்ய வேண்டிய திட்டப் பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul   என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

© வேதபிரகாஷ்

17-10-2022.


[1]  ஆசிய பிஷப் கான்பரன்ஸ்களின் கூட்டமைப்பின் இணை தளம் –https://fabc.org/

[2] https://businessmirror.com.ph/2022/10/16/asias-catholic-bishops-open2-week-conference-in-bangkok/

[3] வாடிகன்.செய்தி, ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள், மெரினா ராஜ் – வத்திக்கான், 15 October 2022, 14:16.

[4] https://www.vaticannews.va/ta/church/news/2022-10/fabc-info-and-material-relating-to-the-general-conference-of-t.html

[5] Bangkok Post, Asia’s bishops gather, Published; 12 October 2022, at 04:00.

[6] https://www.bangkokpost.com/thailand/general/2412288/asias-bishops-gather

[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.

[8] http://www.fides.org/en/news/72916-ASIA_The_jubilee_assembly_of_the_Federation_of_Asian_Bishops_Conferences_And_they_took_another_path

[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022

[10]  Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.

The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.

https://cruxnow.com/church-in-asia/2022/10/asian-church-exists-to-evangelize-cardinal-tells-bishops

[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said

Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor

https://cruxnow.com/church-in-asia/2022/10/cardinal-says-asian-church-must-remain-prophetic-relevant-responsive

“திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம்!

திசெம்பர் 23, 2021

திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம்!

இந்து மக்கள் கட்சி சார்பில் திருக்குறள் மாநாடு நடந்தது: மாநாட்டிற்கு அழைப்பு என்று ஒரு வீடியோ உள்ளது[1]. சிவ.தாமோதரன் என்பவர் அழைப்பு விடுத்துள்ளார்[2]. இது அர்ஜுன் சம்பத் பேஸ்புக்கில் உள்ளது. ஆனால், இது எல்லோருக்கும் தெரிந்ததாக இல்லை. ஏனெனில், தெரிந்திருந்தால், கட்டாயம் நானே அங்கு சென்றிருப்பேன். மேலும், ஆய்வுகட்டுரைகள் வாசித்தனரா, விவாதம் இருந்ததா, எத்தனை பேர் பங்கேற்றனர் போன்ற விவரங்கள் இல்லை. ஆக, இந்துத்துவவாதிகள் இப்படித்தான் “மாநாடுகள்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 10-20 பேர் வந்தாலும், அவர்களுக்குள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல இப்படி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பர். ஒருவருக்கு ஒருவர் ஜால்றா அடித்து, பாராட்டுத் தெரிவித்துக் கொள்ள வேண்டியது தான்! இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சதிகளை, திட்டங்களை முறையாக அறிந்து கொண்டு, சரியாக செயல்பட வேண்டும். அதில், இந்துக்களுக்கு ஒற்றுமை இருக்க வேண்டும். தனித்தனியாக வேலை செய்து கொண்டு, ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டு, இருட்டடிப்பு செய்து கொண்டு, எதிர்த்தால், எதிரிகள் சுலபமாக இந்துக்களை வென்று விடுவர். இத்தனை ஆண்டுகள் சரித்திர உண்மைகள் தெரிந்தால், இந்துக்கள் அப்படியேத் தான், குழித் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்!

கிருத்துப் புரட்டுகளுக்கு தமிழறிஞர்கள் வாய் திறக்காதது ஏன்?: ”திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் எனவும், திருக்குறள் பைபிள் வழி வந்த நுால் எனவும் பரப்பப்படும் புரட்டுகளுக்கு தமிழறிஞர்கள் வாய் திறக்காதது ஏன்,” என பேராசிரியர் சாமி தியாகராஜன் கேள்வி எழுப்பினார்[3]. இவரே இப்பொழுது தான் வாயைத் திறந்து பேச ஆரம்பித்துள்ளார். இருப்பினும் கிருத்துவர்களை ஆதரித்தும் வருகிறார். இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை தி.நகரில் உள்ள தருமை ஆதீனத்தில், 19-12-2021 அன்று திருக்குறள் மாநாடு நடந்தது[4], என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,  ‘திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், பேராசிரியர் சாமி தியாகராஜன் பேசியதாவது: “திருக்குறள் உலக மக்களுக்கான நெறிகளை சொல்கிறது. இந்தியர்கள், ஹிந்துக்களின் தர்மங்களை தாங்கி உள்ளதுஆனால், தமிழக அரசின் சார்பில் இயங்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சா.வே.சுப்பிரமணியன், கா.சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலில், தெய்வநாயகம் என்பவர், திருக்குறளுக்கு உரை எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.”

பேராசிரியர் சாமி ஆவேசத்துடன் தியாகராஜன் பேசியது[5]: “அதில், திருக்குறள் என்பது ஏசுவின் போதனைகள் என்றும், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் என்றும் விளக்கி உள்ளார். இதற்கு முன், ஜி.யு.போப் அதற்கான விதையை துாவி உள்ளார்.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், திருச்சியில் நடந்த மாநாட்டில், அதை ஏற்கும் வகையில் பேசியுள்ளார். இதுபோல, தமிழ் நுால்கள் அனைத்தையும், கிறிஸ்துவர்கள் சுவீகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, தமிழர்களே வக்காலத்து வாங்கும் நிலையும் உருவாகி உள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய தமிழறிஞர்கள், திராவிடர் என்ற சொல்லால் நீர்த்து போயுள்ளனர். திருவள்ளுவர், தமிழர்களின் வாழ்வியலை தான் பதிவு செய்துள்ளார். ஆனால், திருக்குறளுக்கு உரை எழுதியோர் எல்லாம் பொய்யாக எழுதியுள்ளதாகவும், கிறிஸ்தவ நெறிகளை போதிப்பதாகவும், ஒவ்வொரு குறளுக்கும் இட்டுக்கட்டிய தெளிவுரையையும் தெய்வநாயகம் விளக்கியுள்ளார். அவர், அதிகாரத்தில் உள்ள உலக கிறிஸ்துவர்களுடன் தொடர்பில் உள்ளவர். அவர் எழுதியதை, உலகம் முழுக்க பரவலாக்கி ஆவணப்படுத்த துடிக்கிறார். இதை எதிர்க்க தமிழர்கள் ஒருங்கிணையாவிட்டால், தமிழனின் மொழியும், இனமும், பண்பாடும் சூறையாடப்படும் ஆபத்து உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார்[6].

அர்ஜுன் சம்பத் பேசியது[7]: இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: “தமிழர்களின் ஆதி சமயங்களான சைவமும், வைணவமும் விவிலியத்தில் இருந்து தோன்றியவை என தெய்வநாயகம் சொல்கிறார். இதுபோன்ற, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, தமிழர்களை பிளவுபடுத்தி குளிர்காயும் வகையில் தான், திருக்குறளுக்கு மிகவும் மோசமான வகையில் உரை எழுதியுள்ளார். இதை பல்கலையும் அங்கீகரித்துள்ளது. இதனால், திருவள்ளுவரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது. இதை தடுத்தாக வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார். கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் கல்யாணசுந்தரம், இந்து மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் சடகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர், என்றுள்ளது[8]. ஆகையால் அவர்கள் பேசினார்களா இல்லையா என்று தெரியவில்லை. பிறகு விசாரித்ததில், அவர்களும் பேசினார்கள் என்று சொல்லப் படுகிறது. கவிஞர் நந்தலாலா ஓம்காராநந்த ஆசிடரமத்தில் இருப்பவர். பேராசிரியர் கல்யாணசுந்தரம் “நாம் தமிழர் கட்சி”யில் இருந்து, அதிமுகவில் சேர்ந்தவர் என்கிறார்கள். ஆனால், இவர்கள் பேசியது செய்திகளில் வரவில்லை.

முறையாக ஆவணப்படுத்தப் படுத்தப் பட வேண்டும்: கிருத்துவர்களை மறுத்து நடத்தப் படும் “மாநாடுகள்”, கூட்டங்கள் முதலியவற்றிற்கு உரிய விளம்பரம், அறிவிப்புகள் கொடுக்கப் பட வேண்டும். ஏதோ நான்கு சுவர்களுக்குள் நடப்பது போல நடக்கக் கூடாது. வீடியோ எடுத்து, போட வேண்டும் இல்லை “கூகுள் மீட்” போன்ற லிங்குகள் / இணைப்புகள் கொடுக்க வேண்டும். இதில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்பவர்கள், விவரங்கள் தெரிந்தவர்களை அழைக்க வேண்டும். ஏதோ “கவி சம்மேளனம்” போன்று நடத்தினாலும், பிரயோஜனம் இல்லை. மேலும், ஏசு, கிறிஸ்து அல்லது ஏசு கிறிஸ்து சரித்திர ரீதியில் இருந்ததே கேள்விக்குறியாக உள்ளது. அதனை முதலில் எடுத்துக் காட்ட வேண்டும். கட்டுக்கதைகளின் மீது புனையப் பட்ட, அதுவே மாயை-பொய்-சரித்திரம் இல்லை என்றாகும் போது இத்தகைய அர்த்தமற்ற விசயங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

சாமி தியாகராஜன் மற்றவர்களிடம் கேட்டறிந்த அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு உளறியது: கிருத்துவ கட்டுக்கதைகள், மோசடிகள், களவாணித் தனங்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் விரித்த வலையில் வீழ்வது ஏன் என்று புரியவில்லை! சாமி தியாகராஜனுக்கு இதைப் பற்றிய முழு விவரங்கள் தெரியாமல், மற்றவர்களிடம் கேட்டறிந்த அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு உளறியுள்ளார். அவரது பொய்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன:

1. திருக்குறளுக்கு உரை எழுதி பட்டம் பெறவில்லை.

2. ச.வே. சுப்ரமணியம் மட்டும் தான் உதவி செய்தார். மற்றபடி, அருளப்பா நாற்காலியை உருவாக்கி இந்த போலி ஆராய்ச்சிக்கு வழிவகுத்தார்.

3. அப்புத்தகத்தில் / ஆய்வில் ஞான ஸ்நானம் பெற்றார் என்றெல்லாம் இல்லை…

4. 1985-87களில் இவரே வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார்……..

5. உண்மையைச் சொல்வதானால், ஒன்றும் தெரியாது எனலாம்!

பலதடவை எடுத்துக் காட்டியது போல, தேவபிரியாஜி போன்று எல்லாம், என்னுடைய விசயங்களைத் திருடி வியாபாரம் செய்து கொண்டிருப்பது போல, இவர்களும் இறங்கி விட்டனர் என்று தெரிகிறது.

கிருத்துவர்களுக்குத் துணை போகும் இந்துத்துவ வாதிகள்!:  இதில் சாமி தியாகராஜன் ஏற்கெனவே விஜி.சந்தோஷத்திற்கு பாராட்டு விழா நடத்தி, பரிசு கொடுத்தவர்! இதைப் பற்றி விவரமாக ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன். இப்பொழுது, ராஜீவ் மல்ஹோத்ரா-அரவிந்தன் நீலகண்டன் மாதிரி (கிருத்துவர்களே ஒப்புக் கொண்டது) மறுபடியும் விளம்பரம் கொடுக்கின்றனர்! இனி மற்றவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை! இந்துவிரோதிகளின் வஞ்சக திட்டம்,   தூண்டில் போடும் விதம்,  வலை விரிக்கும் தன்மை,  கிருத்துவயியல்………… பொய்களை – சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்லும் மாய்மாலம்……….. இவற்றையெல்லாம் ஆராயாமல், அவர்கள் சொன்னதை மட்டும் இல்லை-இல்லை என்று மறுத்துக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை! அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்……. இந்துத்துவவாதிகளும் அவ்வாறே உதவிக் கொண்டிருக்கின்றனர்!

© வேதபிரகாஷ்

23-12-2021


[1] திருவள்ளுவர் கிறிஸ்தவரா ? | திருவள்ளுவர் மாநாட்டில் பங்கெடுக்க அழைப்பு | சிவ தாமோதரன் | Arjunsampath, Dec 18, 2021.

[2] https://www.youtube.com/watch?v=oRolNmXSgn0

[3] தினமலர், திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம், Updated : டிச 21, 2021  02:13 |  Added : டிச 19, 2021.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2917359

[5] தமிழ்நாடு.நியூஸ், திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம், Updated : டிச 21, 2021 

[6] https://twnews.co.uk/in-news/tiruvlllluvr-kirristuvr-ennnptu-poy-kruttrngkil-caami-tiyaakraajnnn-aaveecm

[7] சஃபக்னா,திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம், Updated : டிச 21, 2021 . https://in.shafaqna.com/IN/AL/4027012

[8] https://in.shafaqna.com/IN/AL/4027012

நான்கு கிறிஸ்தவ சர்ச்சுகளின் வெளிநாட்டு நிதியுதவி தடுக்கப் பட்டது ஏன்? வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை!

செப்ரெம்பர் 8, 2020

நான்கு கிறிஸ்தவ சர்ச்சுகளின் வெளிநாட்டு நிதியுதவி தடுக்கப் பட்டது ஏன்? வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை!

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-tamil-hindu-08-09-2020.jpg

ஊடகங்கள் கிருத்துவ நிறுவனங்களை ஆதரிப்பது ஏன்?: கிறிஸ்தவ சுவிசேஷ அமைப்புகள் மீதான புதிய ஒடுக்குமுறையில், உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) இந்த ஆண்டு நான்கு கிறிஸ்தவ சங்கங்களின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எஃப்.சி.ஆர்.ஏ) உரிமங்களை நிறுத்தியுள்ளது, என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன[1]. எந்தவொரு நிறுவனத்திற்கும் வெளிநாட்டு நிதியைப் பெற உள்துறை அமைச்சகத்திலிருந்து எஃப்.சி.ஆர்.ஏ அனுமதி பெறுவது கட்டாயமாகும்[2]. ஆங்கில ஊடகங்கள் ஏன் அவ்வாறு நிதிகள் தடுக்கப் படவேண்டும் என்று சொல்லவில்லை. தி இந்து கூட இதனால், குஷ்டநோய் ஆஸ்பத்திரிகள் முடக்கப் படும் என்றெல்லாம், முதல் பக்கத்திலேயே செய்தியை வெளியிட்டு பெரிய ஆர்பாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. பிறகு, விதிமுறைகள் மீறியதை விளக்குகிறது[4]. சட்டகளை மதிக்காமல், சர்ச்சுகள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், சேவை என்ற முகமூடிக்குப் பின்னால், மறைந்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆவளவு சரிசனம், அக்கறை அவர்கள் மீது இருக்கின்றன என்றால், இதே ஊடகங்கள், சட்டங்களை, விதிமுறைகளை மீறாதீர்கள் என்று அவரளுக்குச் சொல்லலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-the-hindu-07-09-2020.1.jpg


சட்டமீறல்கள், விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பது ஏன்?: இந்தியாவில் செயல்படும் பல அரசு சாரா சமூக அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று வருகின்றன[5]. இதன்படி 22 ஆயிரத்து 457 சமூக அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்று வந்தன[6]. இந்த ஆண்டு 6 என்.ஜி.ஓ.க்கள் அமைப்பின் வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் 4 கிறித்துவ அமைப்புகளும் அடங்கும். அயல்நாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. எனப்படும் வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவது அவசியமாகும்[7]. 6702 தொண்டு நிறுவனங்களின் லைசென்ஸ் காலாவதியாகிவிட்டது. மும்பையில் கடந்த ஏப்ரலிலும், கடந்த ஆண்டு செப்டம்பரிலும் நியூலைஃப் பெலோஷிப் அசோசியேஷனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தை பஜ்ரங் தள் அமைப்பு இடையூறு செய்து தடுத்தது. மதமாற்றம் செய்கின்றனர் என்பது பஜ்ரங் தள் வாதமாகும். நியூ லைஃப் அமைப்பின் அயல்நாட்டு நிதிபெறும் உரிமம் பிப்ரவரி 10ம் தேதி ரத்து செய்யப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலாகும். 1964களிலிருந்து இது செயல்பட்டு வருகிறது[8]. பஜ்ரங் தள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆங்கில ஊடகங்களுக்கு அத்தகைய கரிசனம் இருப்பதால், அவர்கள் நேரிலே சென்று, பாரபட்சம் இல்லாமல், ஆராய்ந்து செய்திகளை வெளியிடலாம்.

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-the-hindu-07-09-2020.2.jpg

சர்ச்சுகள் உருவான புராணத்தைப் பாடும் ஊடகங்கள்[9]: நியூசிலாந்தில் உள்ள நியூ லைஃப் தேவாலயங்களில் இருந்து மிஷனரிகள் வந்ததைத் தொடர்ந்து, 1964 ஆம் ஆண்டில் இந்தியாவில் அவர்களது சர்ச்சுகள் உருவாயின. புதிய வாழ்க்கை பெல்லோஷிப் சங்கம் நடைமுறைக்கு வந்தது. 2020 பிப்ரவரி 10 அன்று அரசாங்கம் அதன் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தியது. முன்னதாக, பஜ்ரங் தளம் 2019 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சங்கத்தால் நடத்தப்பட்ட ‘பிரார்த்தனைக் கூட்டங்களை’ சீர்குலைத்து, மக்களை மாற்றுவதற்கான தளத்தை பயன்படுத்தியதாக போலீசில் புகார் அளித்தது. இதேபோல், எவாஞ்சலிகல் சர்ச்ஸ் அசோசியேஷனின் தோற்றம் 1910 இல் இந்தியாவுக்கு வந்த ஒரு வெல்ஷ் பிரஸ்பைடிரியன் மிஷனரிலிருந்து ஆரம்பிக்கிறது. இது 1952 ஆம் ஆண்டில் ஒரு முழுமையான சங்கமாக மாறி மணிப்பூரிலிருந்து இயக்கப்பட்டது. அண்மையில் எஃப்.சி.ஆர்.ஏ உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ரியோசோகுலிஸ் வடமேற்கு கோஸ்னர் எவாஞ்சலிகல், ஜார்கண்டின் சோட்டானக்பூரில் ஜெர்மனியின் கோஸ்னர் பணியைக் காணலாம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. வடக்கு எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச், 1987 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிறுவப்பட்டது, மேலும் 99 நாடுகளில் 7.7 கோடி கிறிஸ்தவர்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளனர்[10].

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-the-hindu-07-09-2020.3.jpg

பெந்தகோஸ்தே சர்ச்சுகளுக்கு பரிதாபப் படும் ஊடகங்கள்: “கடந்த ஆண்டு, தென்னிந்தியாவில் பல பெந்தேகோஸ்தேக்கள் நிதி உதவி காரணமாக தங்கள் மத பிரச்சாரங்களை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போதகர்கள் தங்கள் நற்செய்தி வேலைக்காக இனி சம்பளத்தைப் பெறவில்லை. அவர்களால் இப்போது தங்கள் வீடுகளுக்காக எடுக்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை மற்றும் வாகனங்கள் வாங்க முடியவில்லை. கேரளாவில் மட்டும், 100 க்கும் மேற்பட்ட பெந்தேகோஸ்தே தூதரகங்கள் பொது இடங்களில் மற்றும் சாலையோரங்களில் பிரசங்கிக்கின்றன. பெந்தேகோஸ்தே பணிகள் முக்கியமாக வெளிநாட்டு நிதியைப் பொறுத்ததுள்ளது. மோடி அரசாங்கத்தின் கடுமையான பொருளாதார பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்த வெளிநாட்டு நிதிகளில் பாரிய குறைப்பைக் கொண்டு வந்தன. 2014 வரை கேரளாவிற்கு ஆண்டுக்கு ரூ .100 கோடிக்கு மேல் நிதி வந்துள்ளது, இது மத்திய அரசு விவரங்களையும் நிதி ஆதாரங்களையும் கோரியதைத் தொடர்ந்து திடீரென நிறுத்தப்பட்டது. அமைப்பாளரால் அறிவிக்கப்பட்டபடி, எஃப்.சி.ஆர்.ஏ ஒடுக்குமுறை விளைவாக 40% வெளிநாட்டு நிதிகளின் உள்ளே வருவது நின்று விட்டது,” என்று புலம்புவது திகைப்பாக இருக்கிறது. மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டுகளில், எஃப்.சி.ஆர்.ஏ விதிகளை மீறியதாக 14,800 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்படவில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் ecreosoculis-north-western-gossner-evangelical.jpg


நான்கு நிறுவனங்களுக்கு நிதியுதவி பெற தடை: இவ்வாறு செயல்படும் சமூக அமைப்புகள் எந்த வித லாப நோக்கத்துடனும் செயல்பட கூடாது. சமூக உதவிகளை செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதை மீறி செயல்பட்ட 20 ஆயிரத்து 674 சமூக அமைப்புகள் வெளி நாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்து நிதி பெற வேண்டும் என்றால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு சட்டப்படி அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிதான் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் இப்போது மேலும் 6 அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 4 அமைப்புகள் கிறிஸ்தவ மதம் சார்ந்தவை ஆகும். இதன்படி –

  1. ஜார்கண்டில் செயல்பட்ட காஸ்னர் இவாஞ்சலிக்கல்,
  2. மணிப்பூர் இவாஞ்சலிக்கல்,
  3. ஜார்கண்ட் வடக்கு இவாஞ்சலிக்கல் லுத்தரன் சர்ச்,
  4. மும்பை நியூ லைப் பெல்லோஷிப்

ஆகிய கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் வேறு சில கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செவன்டே அட்வென் டிஸ்ட், பாப்டிஸ் சர்ச் போன்றவை குறித்தும் புகார்கள் வந்துள்ளன. அதுபற்றியும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் ecreosoculis-north-western-gossner-evangelical-church.png

வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை: இது தொடர்பாக முன்னாள் உள்துறை செயலாளர் ராஜிவ் மெர்ஸி கூறும்போது, அமெரிக்காவை சேர்ந்த கம்பேஸன் அமைப்பு வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை[11]. அதனால்தான் அந்த நிறுவனம் இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தடை விதிக்கப்பட்டது[12]. இதேபோல், அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான மைக்கேல் புளும்பர்க் நடத்திவரும் புளும்பர்க் பிலந்தெரபிஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடைகளை வழங்க உள்துறை தடை விதித்தது. கடந்த 2015ல் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சென்றபோது நியூயார்க் மேயருடன் இணைந்து இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டிகளை அமைப்பதற்கு புளும்பர்க் நிறுவனத்தின் நிதி உதவி தொடர்பான ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் northern-evangelical-lutheran-church-symbol.jpg

சேவை எனும்போது, தன்னலம் இல்லாமல், சுத்தமாக சேவை செய்ய வேண்டும்: கிருத்துவ அமைப்புகள், நிறுவனங்கள் பற்றி, பொதுவாக யாரும் கவலைப் படுவது கிடையாது, அவையே, சட்டங்களை மீறி காரியங்களை செய்யும் போது, வெளியே தெரியும் போது மாட்டிக் கொள்கிறார்கள். சில எடுத்துக் காட்டப் படுகின்றன.

 

  1. அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் பெற்ற பணத்தை அதற்குரிய செயலுக்குப் பயன்படுத்தாது.
  2. நிதியை குறிப்பிட்ட சேவைக்கு அல்லாது, வேறு காரியகளுக்குப்ப் பயன்படுத்தியது.
  3. படிவங்களை தாக்கல் செய்யாமல் இருத்தல், முழுமையான விவரங்களைக் கொடுக்காமல் இருத்தல், குறிப்பாக பணம் வரவு-செலவு பற்றிய விவரங்களை தாக்கல் செய்யாமல் இருத்தல்.
  4. நடக்காத சேவைகளுக்கு பணம் செலவானது போலக் காட்டுதல், போலி ரசீதுகள், கணக்குகள் காட்டுவது முதலியன.
  5. மதம் மாற்ற நிகழ்ச்சிகளுக்கு உபயோகப் படுத்தியது. எவாஞ்சலிஸம் என்பதை தவறாகப் பயன்படுத்துவது.
  6. தனிநபர்கள் நிதியை கையாடல் செய்வது, உறுப்பினர்கள் பரஸ்பர குற்றாச்சாட்டுகள் வைப்பது, நீதிமன்றகளுக்குச் செல்வது முதலியன.

ஆகவே, அவர்களுடைய உள்-பிரச்சினைகள், சட்டமீறல்கள், மோசடிகள் முதலியவற்றிற்கு, அரசு மீது, சேவை போர்வையில் பழி போட முடியாது. சேவை எனும்போது, தன்னலம் இல்லாமல், சுத்தமாக சேவை செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்நாட்டின் சட்டங்களை மீறியதற்கான தண்டனையைப் பெற்றாக வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

08-09-2020

[1] Op.India, Centre cracks down on foreign funding of Christian evangelical organisations, suspends FCRA licences of four, 7 September, 2020.

[2] https://www.opindia.com/2020/09/home-ministry-fcra-license-four-christian-evangelical-organisations-foreign-funding-church/

[3]  The Hindu, Government suspends FCRA clearance of 4 Christian groups, Vijaita SinghNEW DELHI , SEPTEMBER 06, 2020 17:58 IST, UPDATED: SEPTEMBER 07, 2020 09:09 IST.

[4] https://www.thehindu.com/news/national/government-suspends-fcra-clearance-of-4-christian-groups/article32535766.ece

http://eca.org.in/

[5] மாலைமலர், 4 கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை – மத்திய அரசு நடவடிக்கை, பதிவு: செப்டம்பர் 07, 2020 18:12 IST

[6] https://www.maalaimalar.com/news/national/2020/09/07181227/1855609/4-Christian-organizations-banned-from-receiving-foreign.vpf

[7] தமிழ்.இந்து, நான்கு கிறித்துவ என்.ஜி.ஓ. அமைப்புகளின் உரிமம் ரத்து: வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை, விஜய்தா சிங், Published : 07 Sep 2020 08:45 AM, Last Updated : 07 Sep 2020 08:45 AM.

[8] https://www.hindutamil.in/news/india/575466-government-suspends-fcra-clearance-of-4-christian-groups.html

[9] Op.India, Centre cracks down on foreign funding of Christian evangelical organisations, suspends FCRA licences of four, 7 September, 2020.

[10] https://www.opindia.com/2020/09/home-ministry-fcra-license-four-christian-evangelical-organisations-foreign-funding-church/

[11] தினகரன், வெளிநாட்டு நன்கொடை பெற 4 கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தடை: மத்திய உள்துறை அதிரடி நடவடிக்கை, 2020-09-08@ 01:14:03

[12] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=615549