Posts Tagged ‘புதைத்தல்’

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

மே 15, 2023

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

கென்யாவில் பட்டினி வழிபாடு நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல்  26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].

பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7].  அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8].  பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

15-05-2023


[1] தினமலர், கென்யாவில் பட்டினி வழிபாட்டில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு, மாற்றம் செய்த நாள்: மே 15, 2023 05:33

[2] https://m.dinamalar.com/detail.php?id=3320972

[3] ஏபிபிலைவ், கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!,By: பாண்டிம்மா தேவி | Updated at : 24 Apr 2023 12:25 PM (IST);  Published at : 24 Apr 2023 12:25 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/world/to-meet-jesus-47-cult-members-in-kenya-allegedly-starve-to-death-5-facts-113425

[5] தினத்தந்தி, கடவுளை காணலாம்கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு, தினத்தந்தி மே 15, 6:32 pm.

[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.

https://theconversation.com/kenya-cult-deaths-a-new-era-in-the-battle-against-religious-extremism-205051

[7] https://www.dailythanthi.com/News/World/god-can-be-found-atrocity-in-kenya-201-bodies-including-children-were-dug-up-and-recovered-964949

[8] தந்தி டிவி, கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு – 201 பேர் பலி, By தினத்தந்தி, 15 மே 2023 2:02 PM.

[9] https://www.thanthitv.com/latest-news/desperate-to-see-god-in-person-201-people-died-186330

[10] குமுதம், கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் – 213 பேரை தேடும் பணி தீவிரம், S. Joseph Raj, மே 15, 2023.

https://www.kumudam.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-213-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

[11]