Archive for the ‘தேவன்’ Category

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

மே 5, 2013

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

Christian priest fraud - money doubling - Ravi 2013

பரிசுத்தஆவி, பிதா, மகன்: கிருத்துவத்தில் மூனிறில் ஒன்றா, ஒன்றில் மூன்றா என்று விவாதிக்கப்படலாம். ஆனால், மோசடிகளில், எல்லாமே ஒன்று என்கிறார்கள். கிருத்துவப் பாதிரிகள் என்று குறிப்பிடும் போது, அவர்களின் “டினாமினேசன்”, மதப்பிரிவு தெரிவிக்கப் படுவதில்லை.  ஆனால், அவர்களின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா என்று புரியவில்லை! இதோ இன்னொன்று:

பெயர் ரவி
விலாசம் சஞ்சீவி நகர், வியாசர்பாடி
மனைவியின் பெயர் வேளாங்கன்னி
மதம் கிருத்துவம்
தொழில் பாதிரி
இதர தொழில் பணம் இரட்டிப்பு, பண வசூல்
காவல் நிலையம் எம்.கே.பி. நகர்
புகார் கொடுக்கப்பட்டது, ஆனால் போலீஸார் வாங்க மறுப்பு
ஏன் புளியந்தோப்பு துணை ஆணையரிடம் செல்லுமாறு கூறல்
முந்தைய புகார் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பணம் கொடுத்தவர் நிலை அலைந்து கொண்டிருக்கின்றனர்

 

அயல்நாடுகளிலிருந்து ஏகப்பட்ட பணம் வரும் நிலையில் இவ்வாறு ஏமாறுவதன் ரகசியம் என்ன? அயல்நாட்களினின்று கோடிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் செலவழித்து, தங்களுக்கும் எடுத்துக் கொள்வதாக அவர்களே பல நேரங்களில் மெய்ப்பித்துள்ளார்கள். பிறகு, உள்நாட்டில் இவ்வாறு ஏன் ஏமாற்றுகிறார்கள்? ஒருவேளை, இந்தியாவை ஒட்டு மொத்தமாக சுரண்ட வேண்டும் என்று ஏதாவது ஒரு திட்டம் உள்ளதா?

 

முந்தைய இடுகைகள்: பணம் மோசடி, நிலம் மோசடி என்று கிருத்துவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்கள் தொடர்ந்து தான் ஈடுபடுகிறார்கள்.  உதாரணத்திற்கு சில:

  • ·         கிருத்துவ அறக்கட்டளை நடத்தி[1], பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!
  • ·         நில மோசடியில் இன்னுமொரு பிஷப்[2]: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!
  • கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை[3].
  • ·         மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா[4], அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?

ஆனால், செய்திகள் வருவதோடு சரி, அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று அறிவிக்கப்படுவதில்லை.

வேதபிரகாஷ்

05-05-2013


நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

ஏப்ரல் 28, 2013

நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

Yeshua Ben Maryam Al-Masih

ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்தவர் வியாசேஸ்லவ் (49), தான் கடவுளின் மைந்தன், “மேசியா” என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றியுள்ளாராம்[1]. ஏனெனில் அவன் எப்பொழுதும் “பரிசுத்த ஆவி”யுடன் பேசிக்கொண்டு இருப்பானாம்[2]. அதனால் ஏசுவைப் போல தானும் ஜெருசலேம் சென்றால், அவ்வாறே மாறிவிடலாம் என்று நினைத்துக் கொள்கிறானாம். ஏசுவைப் போலவே தலைமுடு வளர்த்துக் கொண்டு, உடையை அணிந்து கொண்டு, பொது இடங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தனது பெயரை 4 முறை மாற்றி, குடும்பப் பெயர், தனிப்பெயர் முதலியவற்றைச் சேர்த்து பாஸ்போர்ட்டிலும் பதிவு செய்துள்ளார்.

Photo1011

அங்கு வந்து பதிவு செய்யும், போது, இருந்த பெண் அதிகாரி “என்ன பெயரை இப்படி எழுதியிருக்கிறீர்களே”, என்ற கேட்டபோது, “நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன்”, என்று உறுதியாக சொன்னானாம். Photo1008

இம்முறை, அவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் தனது பெயரை ‘யஷுவா பென் மர்யம் அல்-மசி’ (Yeshua Ben Maryam Al-Masih) என்று மாற்றிக் கொண்டுள்ளார், அதாவது யூதராக பதிவு செய்துள்ளார். மேற்கண்ட எபிரேய பெயருக்கு தமிழில் ‘மேரியின் மகனும் கிருஸ்துவுமான இயேசு’ என்று பொருள்[3]. Photo1010இந்த தகவலை வெளியிட்ட உள்ளூர் செய்தி நிறுவனம், ‘வியாசேஸ்லவ் எப்போதுமே சுவிசேஷம் பற்றி பேசி வந்தார்[4]. Photo1015

ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் ஏசு கிருஸ்து வாழ்கிறார்” என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டது. இயேசு கிருஸ்து என்று பெயர் மாற்றிக் கொள்வதால், ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் செல்லவும், இஸ்ரேல் நாட்டின் குடிமகனாகவும் வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கருதி இருக்கக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது[5]. Photo1012

ஆனால் அவன் அவ்வாறே ஜெருசலேத்திற்குச் சென்று, ஒரு வீட்டில் மனைவி, மகன் உடன் வசித்துக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கும் பைபிளில் வரும் பெயர்களை வைத்துள்ளான். ஒரு கழுதையினையும் வாங்கி வைத்துக் கொண்டு, அதன் மீது சவாரி செய்து கொண்டு வருகிறான்[6], என்றும் செய்திகள் வந்துள்ளன. Photo1013உள்ளூர் மக்கள், யாத்திரிகள் அவரை தமாஷாகப் பார்க்கிறார்களாம். ஏனெனில், பண்டிகைகளின் போது, அவ்வாறு வேடமிட்டு நடித்துக் காட்டுவது சகஜமான விஷயம்தான். இருப்பினும், இவர் விஷயம் அப்படியில்லை, ஏனெனில், இவர் தம்மையே ஏசுகிருஸ்து என்று சொல்லிக் கொள்கிறார். அவ்வாறே மாறத்துடிக்கிறார். Appearing in Russin websiteஇதில் வேடிக்கை என்னவென்றால், ஏசுகிருஸ்துவும், தன்னை “மேசியா” என்றுக் காட்டிக் கொள்ள[7], இதே மாதிரி கழுதைக் குட்டி மீது உட்கார்ந்து கொண்டு, ஜெருசலேத்தில் நுழைந்தாராம்[8]. ஆனால், யூதர்கள் அவரை “ஒரு வேடதாரி, போலி” என்று சொல்லி ஒதுக்கி விட்டது[9], என்று பைபிள் கூறுகிறது. இவ்விவரங்கள் முழுவதையும் கீழ்கண்ட யூ-டியூப்பிலும் காணலாம்[10].

வேதபிரகாஷ்

28-04-2013


[5] மாலைமலர், இஸ்ரேலில்குடியேறவசதியாகஇயேசுகிருஸ்துஎன்றுபெயரைமாற்றிக்கொண்டரஷ்யர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2:19 AM IST

[8] Donkeys and mules were used by important persons and kings in the Old Testament (for example, Judg 10:4; 12:14; 2 Sam 13:29; 18:9), including David himself (1 Kings 1:33), but the contrast in this context in Zechariah 9 is between the warhorses (v. 10) and the donkey on which the king rides (v. 9) is a striking image of humility.

[9] Accursed – Margin, “Anathema” (ἀνάθημα anathēma); see the Acts 23:14 note; Romans 9:3 note; compare 1 Corinthians 16:22Galatians 1:8-9. The word is one of execration, or cursing; and means, that no one under the influence of the Holy Spirit could curse the name of Jesus, or denounce him as execrable and as an impostor.

தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்!

ஒக்ரோபர் 18, 2011

தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்!

 கிருத்துவர்களின் போலித்தனமான வாதங்கள்; சுவிசேஷம் பேசுகிறேன், ஜெபம் செய்கிறேன், பிரார்த்திக்கிறேன் என்று வந்த அமெரிக்கப் பாதிரி நடு இரவில் பின்பக்கமாக தப்பி ஓடிய செய்தி அறிந்ததே[1]. “சுற்றுலா” பெயரில் விசா வாங்கி வந்து, திருட்டுத் தனமாக கிருத்துவத்தைப் பரப்ப மேற்கொண்டு வரும் விவரங்களும் எடுத்துக் காட்டப்பட்டன[2]. சட்டமீறல்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் அந்த பாதிரியை ஆதரித்து கிருத்துவர்கள் நாடகம் போட்டு ஆட அரம்பித்துள்ளது அவர்களது அப்பட்டமான போலித்தனம், நாணயமின்மை, ஏமாற்றுத்தனம் முதலிய குணாதிசயங்களைத் தான் வெளிப்படுத்துகிறது. “கிருத்துவன்” என்பதனால் ஆதரித்தும், ஆனால், “அமெரிக்கன்” என்று வேறுவிதமாக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவது, எழுதுவது அவர்களது இரட்டைவேடங்களைக் காட்டுகிறது.

நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி:  பாதிரி சனிக்கிழமை 16-10-2011 பிடிக்கப் பட்டு துணை-ஜெயிலில் அடைக்கப்பட்டான். ஆனால், உடனே நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு கலாட்டா செய்யவே, கொச்சியிலுள்ள பொது மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்[3]1. இவனுக்கும் மற்ற இந்திய அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஏற்கெனெவே அம்மாதிரி சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டதோ என்னமோ? மற்றவர்களின் நோய்களை ஜெபித்தே தீர்க்கும் இவர்களுக்கு இப்படி நெஞ்சு / மார் வலி வருவது திகைப்பாகவே உள்ளது. இதற்குள் அவன் ஒரு இருதய நோயாளி என்று சொல்லப்படவே, திரிசூரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டான். அவனுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலி / மார்வலி வந்ததா, இல்லை அவ்வாறு நடித்தானா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று கூறப்பட்டது[4]. ஆன்கில பத்திரிக்கை ஒன்று இவ்வாறுதான் குறிப்பிட்டது, “Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday”.

சட்டத்தை மீறிய பாதிரிக்கு சட்டரீதியிலான ஆதரவு, பாதுகாப்பு முதலியன: இந்த பாதிரிக்கு சட்டமீறலில் ஒத்துழைத்தனர், சேர்ந்தே குற்றத்தைச் செய்தனர் என்று தான் னடானியல் மாத்யூ, ராய் டானியல் மாத்யூ மற்ற நிறுவங்களையும் சேர்த்து முதல் தகவல் அறிக்கை போலீஸார் தாக்குதல் செய்துள்ளனர். ஆனால், முதல் இருவரும் மறைந்து வாழ்கின்றனராம். எர்ணாகுளம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், வில்லியம் ஆர்தர் லீ ஆஜர் படுத்தப் பட்டு, இரண்டு வாரம் ஜெயிலில் ரிமேண்ட் / அடைக்கப்பட்டான். அதற்குள் அவனுக்கு ஜாமீன் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவனது பெயில் முறையீடு செவ்வாய் கிழமை – 18-10-2011 நீதிமன்றத்தில் வருகிறது. அவனது ஆரோக்யம் நன்றாகவே உள்ளது, மருத்துவர்கள் அவனை கண்காணித்து வருகின்றனர்[5] என்று ஊடகங்கள் கூற ஆரம்பித்து விட்டன4.

நோய் தீர்ப்பவர்களுக்கே நோய் எப்படி வருகிறது என்று தெரியவில்லை: மற்றவர்களின் நோய் தீர்க்கிறேன் என்று அறுவடை செய்யும் ஆசாமிகளுக்கு எப்படி, ஏன் நெஞ்சு / மார் வலி வருகிறது? இப்பொழுதெல்லாம் டிவி செனல்களில், கிருத்துவர்கள் பேயோட்டும் காட்சிகளை அதிகமாகவே காட்டி வருகின்றனர். எப்படி, கிருத்துவர்களை அப்படி பேய்-பிசாசுகள் பிடித்துக் கொள்கின்றன என்று தெரியவில்லை. “எக்ஸார்சிஸ்ட்” சினிமா வதபோது கூட, அவ்வாறு வரவில்லை, ஆனால், இப்பொழுது அடிக்கடி பேய்-பிசாசுகள் வந்து விடுகின்றன, கிருத்துவர்கச்ளைப் பிடித்துக் கொண்டு விடுகின்றன. உடனே இந்த பாதிரிகள், பாஸ்டர்கள், சுவிசேஷகர்கள் பேய்-பிசாசுகளை ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அதுபோலவே, மாட்டிக் கொண்ட, இப்பாதிரியாருக்கு நெஞ்சு / மார் வலி வந்து விட்டது. கர்த்தர் / ஏசு / பரிசுத்த ஆவி என்ன செய்தது என்று தெரியவில்லை. கிருத்துவர்களை விட்டு ஜெபிக்க செயதை விட்டுவிட்டு, மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்களா செக்யூலரிஸ போலீஸார்!

கிருத்துவ அமைப்புகள் புலம்பல்: சிறிது கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள், தண்டிக்கப் படுகிறார்கள் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள்[6].

  1. ஏனெனில், ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமியர்களை கற்பழித்து கெடுத்தது இந்தியர்களைக் கொடுமைப் படுத்துவது[7] ஆகாதா?
  2. லட்சக்கணக்கில் அவ்வாறான பாலியல் குற்றங்களை அந்நிய கிருத்துவர்கள் இந்தியாவில் வந்து செய்து விட்டு ஓடிவிடுகின்றனரே[8], அது இந்தியர்களை குரூரமாக சித்திரவதை செய்டவதாகாதா?
  3. இந்து மாணவியரை மனத்தளவில், உடலளவில் சித்திரவதை செய்து கொல்கிறார்களே அதாவது தற்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்களே[9] அது நியாயமா? எப்படி அத்தகைய கொலைக்யாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்?
  4. மோசடி பிஷப்புகளைப் பற்றி[10] ஏன் ஒன்றும் மூச்சுவிடுவதில்லை? காசு கொடுப்பதால், அமைதி காக்கிறார்களா?
  5. கொலை செய்து விட்டு, ஆண்டவனை வேண்டுவது[11] என்ன விதத்தில் நாகரிகம்? அத்தகைய ஆண்டவன் ஆண்டவனா அல்லது மிருகமா, பேயா, பிசாசா?
  6. செக்ஸிற்காக நாய்கள் போல உள்ளூக்குள் அடித்துக் கொள்கிறார்களே[12], வெட்கமில்லை?
  7. சிலரே தண்டனையில் அகப்பட்டு, பலர் ஓடிவிட்டனரே, அது எந்த வகையில் சேர்க்கப்பட வேண்டும்?
  8. வாடிகனே செக்ஸ் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறதே[13], வெட்கமில்லை?
  9. படித்து, கோட்-சூட் போட்டுக் கொண்டு, இப்படி சட்டமீறல்களை செய்ய வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டாமா?
  10. அத்தகைய அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்க எப்பர்டி கிருத்துவர்களுக்கு மனம் வருகிறது?

முன்பு, 90-வயதான லட்சுமணானந்தா என்ற இந்து சாமியார் ஒரிஸாவில் மிஷின் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது[14], எங்கு தம் மீது பழி வந்து விடுமோ[15] என்று அஞ்சி, கிருத்துவ அமைப்புகள் மாவோயிஸ்டுகள் மீது பழி போட்டன. இப்பொழுது உலக கிருத்துவ கவுன்சில் [The Global Council of Indian Christians (GCIC)], “அந்த பாதிரியின் கைது தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். அவன் ஒரு தீவிரவாதியைப் போல துரத்தப் பட்டான். இதெல்லாம் வலதுசாரி தீவிரவாதிகளைத் திருப்தி படுத்துவே அவ்வாறு செய்யப்பட்டது”. இந்திய செக்யூலரிஸமே பாதிக்கப்பட்டுள்ளது”. என்றெல்லாம் புலம்பித் தள்ளிவிட்டது[16]. வலதுசார்பு தீவிரவாதிகள் திடீரென்று, எங்கிருந்து இந்தியாவில் முளைத்தனர் என்று தெரியவில்லை. அப்படியென்றால், இடதுசாரி தீவிரவாதிகள் இந்தியாவில் ஏற்கெனெவே உள்ளனர் என்று கிருத்துவர்கள் ஒப்புக்கொள்வது தெரிகிறது. இந்த கவுன்சிலின் போலித்தனம், இன்னொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[17].

வேதபிரகாஷ்

18-10-2011


[1] வேதபிரகாஷ், நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!, https://christianityindia.wordpress.com/2011/10/17/midnight-mass-fugitive-evangelist/

[2] வேதபிரகாஷ், கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்!, https://christianityindia.wordpress.com/2011/10/14/american-evangelist-violates-indian-act-and-rules/

[4] Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday.

கிருத்துவர்களின் தாமஸ் மோசடி தொடர்கிறது! அருளப்பா மற்றும் ஆச்சார்ய பால் முதலியோர்களின் ஆவிகள் என்ன செய்யும்?

ஜனவரி 4, 2011

கிருத்துவர்களின் தாமஸ் மோசடி தொடர்கிறது! அருளப்பா மற்றும் ஆச்சார்ய பால் முதலியோர்களின் ஆவிகள் என்ன செய்யும்?

வெட்கங்கெட்ட மோசடிகள், போலித்தனங்கள்: கிருத்துவர்கள் தாமஸ் விஷயத்தில் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் மேன்மேலும் மோசடி செய்து வருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. பொய், மோசடி, கள்ள ஆவணங்கள், போலி தஸ்ஜாவேஜுகள், என எல்லாவற்றின் மொத்த உருவமாக இந்த தாமஸ் மோசடி, மாய்மாலங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. ஏதோ வாடிகனையும் விஞ்சியவர் தாம் என்ற போக்கில் இங்கு கிருத்துவர்கள் நடந்து கொள்வது போல இருக்கிறது.

செய்தி எனது விமர்சனம்
பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்தலமாகிறது. இதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தேர்தல் சமயத்தில் இப்படி அரசியல்வாதிகள் செய்யலாம். ஆனால், அவர்களும் அத்தகைய மோசடிகளுக்குத் துணை போகிறார்கள் என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். நாளைக்கு சரித்திரமும் இதை நினைவில் வைத்துக் கொள்ளும்.
பழமையான ஆலயம்: சென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கி.பி. 52-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பழமையான ஆலயமாகும். இந்த ஆலயம் தற்போது தமிழக திருத்தலமாக உள்ளது. இதை தேசிய திருத்தலமாக மாற்ற இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை முடிவு செய்து உள்ளது. உள்ள இந்துக் கோவிலை இடித்துவிட்டு, இது 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று முந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே தனது புத்தகத்தில் விவரமாக எழுதியுள்ளார். மேலும், அந்த கட்டிடம் புதுப்பிக்கத் தோண்டியபோது, சக்கிரம் வரைந்த கல் கிடைத்தது என்றும் எழுதியுள்ளார்.
இது பற்றி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் டாக்டர் ஏ.நீதிநாதன் நேற்று பரங்கிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஏசுநாதரின் சீடர் ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான தோமையார் மயிலை பகுதியில் நற்செயல்களை செய்து வந்தார். அவர் இந்த மலையில் கொல்லப்பட்டதால் புனித தோமையார் மலை என அழைக்கப்படுகிறது. இல்லாத ஆசாமி ஏன் இங்கு வருகிறான், கொல்லப் பட்டான் என்ற கட்டுக்கதைகளை விடும் இந்த கிருத்துவர்கள் முதலில் தமது கிருத்துவ சரித்திரத்தை படிக்கவேண்டும். இல்லையென்றால், உலகளவில், இவர்களது மானம் கப்பலேறிவிடும்.
இங்கு புனித இறைவனின் தாய் அன்னை மரியாள் ஓவியம் கண்டு எடுக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஏசு மற்றும் 12 சீடர்களின் ஓவியங்கள் உள்ளன. ஆமாம், கொண்டு வந்து போட்டால், கண்டு எடுக்கத்தான் செய்வார்கள். போர்ச்சுகீசியரே தாம்தான் கொண்டுவந்து போட்டேன் என்று எழுதி வைத்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஆலயம் செங்கல்பட்டு மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த ஆலயம் தமிழக திருத்தலமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. புனிதம்மிக்க இந்த ஆலயம் தேசிய திருத்தலமாக மாற்றப்பட உள்ளது. தமது சௌக்கியத்திற்கு கிருத்துவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், மற்ற கிருத்துவர்களும், இவர்களைக் கவனித்து வருகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் மதம் மாறினாலும், கிருத்துவ பாரம்பரியம் தெரியாமல் இப்படியான கூத்துகளை செய்ய கூடாது.
அகில இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம் வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க உள்ளது. அப்போது தேசிய ஆலயமாக்கி ஆணை வழங்கப்பட உள்ளது. வாடிகன் என்ன செய்யும்? ஏற்கெனெவே செக்ஸ் விவகாரங்கள் வெள்ளம் போல பெருகி வந்து மூழ்கடித்துள்ள போது, இத்தகைய கூத்துகளை மற்ற பொறுப்புள்ள கிருத்துவர்கள் கண்டிப்பார்கள்.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: இதற்கான விழா 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பரங்கிமலை புனித தோமையார் ஆலயத்தில் நடக்க உள்ளது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வதோர் பெனாக்கியோ தலைமையில் 120 ஆயர்கள் கலந்து கொண்டு அறிவிக்க உள்ளனர். இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சுரேஷ்ராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேசிய திருத்தலமாக மாற்றப்படும் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பரங்கிமலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தேர்தல் சமயத்தில் இப்படி அரசியல்வாதிகள் செய்யலாம். ஆனால், அவர்களும் அத்தகைய மோசடிகளுக்குத் துணை போகிறார்கள் என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். நாளைக்கு சரித்திரமும் இதை நினைவில் வைத்துக் கொள்ளும்.
புனிதமிக்க இந்த பரங்கிமலையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்று அவர் கூறினார். அப்போது திருத்தலதந்தை பாக்கியரெஜிஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதயராஜ், பங்குத்தந்தைகள் அன்பு ரோஸ், லூயிஸ்ராயர், சிரில்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர் அந்நிய சுற்றுலாவினர் வந்தால், சிரிக்கத்தான் செய்வார்கள். அடடா, இந்துவ கிருத்துவர்கள், இவ்வளவு கேவலமாக இருக்கிறார்களே, கொஞ்சம் கூட அறிவில்லாமல், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி உழலுகிறார்களே என்று தான் நினைப்பார்கள்!

அருளப்பா மற்றும் ஆச்சார்ய பால் முதலியோர்களின் ஆவிகள் என்ன செய்யும்? அதுமட்டுமல்லாது, ஆட்சியாளர்களையும் அத்தகைய மோசடிகளில் ஈடுபடுத்துவதால், போலிக்கு, மோசடிக்கு, கள்ளதனத்திற்கு…அங்கீகாரம், ஏற்ப்புத்தனமை, சரித்துவத்துவம்……………..எல்லாம் வந்துவிடும் என்று நினைத்தால், அருளப்பா ஆவி சும்மா விடாது. அந்த ஆச்சார்யா பாலின் ஆவியும் சும்மா விடாது!

உள்ள பொருட்கள் மற்றவற்றை கார்பன்-14 பரிசோதனை செய்தாலே வடவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்: மயிலை, சின்னமலை மற்ரும் பரங்கிமலை என்ற மூன்று  இடங்களில், மூன்று இந்து கோவில்களை இடித்துவிட்டு, இப்படி அடிக்கடி நாடகம் ஆடி, அதற்கு அப்பா-கருணாநிதி, மகன்-ஸ்டாலின் என்று கூட்டத்தை சேர்த்தால், மோசடிகள் ஆசிர்வதிக்கப் பட்டு, புனிதமாகி விடாது. இதெல்லாம், நரகத்திற்கு செல்லும் வழி என்பதனை, இந்த மதம் மாறிய கிருத்துவர்கள் நினைவில் வைத்துக் கொள்லவேண்டும். உள்ள கிருத்துவ சித்திரங்கள் / ஓவியங்கள், ஆர்மீனிய கல்வெட்டு முதலியவை எல்லாமே 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் கொண்டுவரப்பட்டவை ஆனால், வேறு-வேறு கதைகளை பின்னர் கட்டி விட்டனர். இப்பொழுது கூட இவற்றை தகுந்த ஆராய்ச்சி கூடங்களுக்கு, வாடிகனின் ஒப்புதலோடு முதலில் அனுப்பி சோதிக்க வேண்டும். அப்பொழுது உண்மை என்னவென்று தெரிந்துவிடும். அதற்கு பிறகுதான், இத்தகைய கதைகளை விடவேண்டும். அதற்கு கிருத்துவர்கள் தயாரா?

வேதபிரகாஷ்

04-01-2011

747ம் ஆண்டு கிறிஸ்து பிறந்தாராம், அப்படியென்றால் ஏசு எப்பொழுது பிறந்தார்?

திசெம்பர் 25, 2010

747ம் ஆண்டு கிறிஸ்து பிறந்தாராம், அப்படியென்றால் ஏசு எப்பொழுது பிறந்தார்?

தினமலர் சுவிசேஷப் பத்திரிக்கையாகியது[1]: இன்றைய “தினமலர்”, தினமலராக இல்லை, ஏதோ தினத்தூது அல்லது தினபூமி போல இருந்தது. ஏகப்பட்ட பக்கங்களில் கிருஸ்துமஸ் செய்திகள், விளம்பரங்கள். ஒரு கிருத்துவரேக் கூட இம்மமாதிரி வெளியிட்டிருக்க முடியாது. எதிர்பார்த்தபடியே, கிருத்துவர்கள் விளையாடியிருக்கிறார்கள்[2]. ஆர். கிருஷ்ணமூர்த்தி அளவுக்கு அதிகமாக அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டார் போலயிருக்கிறது. அவர்கள் இஷ்டத்திற்கு புளுகு மூட்டைகளை திறந்து, கட்டுக்கதைகளையும், மாய்மாலங்களையும் அள்ளி வீசியிருக்கிறார்கள்[3].

கிருத்துவர்களின் கட்டுக்கதைகள், மாய்மாலங்கள், வெட்கங்கெட்ட மோசடிகள்[4]: கிருத்துவர்கள் நம்பிக்கையோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தால், ஒன்றும் பிரச்சினையில்லை. அது அவரவர் நம்பிக்கையுள்ளவர்களின் உரிமை. ஆனால், இம்மாதிரி தங்களது பணபலம், அரசியல்பலம் முதலியவற்றோடு, பிரச்சார பீரங்கிகளோடு தாக்க ஆரம்பித்து, இந்திய மக்களின்மீது துர்பிரச்சாரத்தைத் திணிக்கும் போதுதான், பிரச்சினை வருகிறது. அதுவும் அத்தகைய கட்டுக்கதைகளை, பொய்களை, வெட்கமில்லாமல் சரித்திர ரீதியில் உள்ளது போல செய்யும் போது நிச்சயமாக, அவர்களை எச்சரிக்க வேண்டியுள்ளது.

பித்து, வெறி பிடித்தவர்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாது: அதிலும் அரசாங்க, பணபலம் உள்ள சமயப்பித்து, மதவெறி பிடித்தவர்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாதுதால்லது தெரிந்தும், தெரியாதது போல நடிப்பர், கிருத்துவர்கள் அப்படித்தான் உள்ளார்கள் போலும். இம்முறை தாமஸ் ஃபிராட் விஷயங்களுடன், ஒருவர் 747ம் ஆண்டு கிறிஸ்து பிறந்தார் என்று கதைவிட ஆரம்பித்துள்ளார்[5]. இதை படித்துவிட்டு, இனிமேல் விளக்கம் எல்லாம் கொடுப்பார்கள். நாளைக்கே, தினமலரில் அக்கதைகள் எல்லாம் வரும். இருப்பினும், சரித்திர ஆராய்ச்சி, நாணயவியல் நிபுணர் என்றெல்லாம் இருக்கும் தீருவாளர் கிருஷ்ணமூர்த்தி எப்படி தொடர்ந்து, இத்தகைய கட்டுக்கதைகளை அனுமதிக்கிறார்?

வேதபிரகாஷ்

© 25-12-2010


[1] தினமலர், இயேசுவின் சீடர் புனித தோமையார் வாழ்ந்த சின்ன மலை குகை, பதிவு செய்த நாள் : டிசம்பர் 24, 2010,23:44 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=152501

[2] தினமலர், அருள் பாலிக்கும் அருளானந்தர், பதிவு செய்த நாள் : டிசம்பர் 25, 2010,01:40 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=152671

[3] தினமலர், இயேசு பிறந்த பூமி அன்றும் இன்றும், பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010,23:25 IST, மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 24,2010,23:47 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=152480

[4] தினமலர், அடுத்தவரை வாழவைத்து பார்ப்பதே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 24, 2010,23:47 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=152505

[5] இனிகோ இருதயராஜ், (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்), மனிதனோடு மனிதனாக அவதரித்த இறைக்குழந்தை இயேசு, தினமலர், அடுத்தவரை வாழவைத்து பார்ப்பதே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 24, 2010,23:47 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=152505