பள்ளி சிறுமி பாலியல் வழக்கு:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

பள்ளி சிறுமி பாலியல் வழக்கு:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

 

பெண் ஆசிரியைகள் சிறுமியை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியது: சென்னை, செப். 27, 2011- பள்ளி சிறுமி பாலியல் வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார்[1].   மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- “கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில்யு.கே.ஜி.” படிக்கும் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அப்பள்ளி தலைமை ஆசிரியை லெசி பாஸ்கோ, வகுப்பு ஆசிரியை போசியா ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியை கைது செய்யப்படவில்லை.   இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த கள்ளக்குறிச்சி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே, இச்சம்பவம் குறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.மேலும் இந்த வழக்கை சி.பி.சி..டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்”, என்று கூறியுள்ளார்.

 

லெசி போஸ்கோ, போசியா ஏன் அத்தகைய வக்கிரத்தன்மையைப் பெற்றுள்ளனர்: தொடர்ந்து கிருத்துவர்கள் இத்தகைய வக்கிரமான செக்ஸ்-டார்ச்சர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதை சாதாரணமான நிகழ்ச்சிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரே வாரத்தில்[2] இப்படி கிருத்துவப் பள்ளிகளில் சிறுமிகள், மாணவிகள் பலவித கொடுமைகளுக்குள்ளாவது மிகக்குரூரமான நிலையைக் காட்டுகிறது. மனித மிருகங்கள் உலா வருவதைத்தான், இது எடுத்துக் காட்டுகிறது. பெற்றோர்கள் கொடுத்துள்ள புகாரில் உள்ள விஷயங்கள், அதை உறுதிப் படுத்துகிறது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஒரு புகார் அளித்தார்.  “கள்ளக்குறிச்சி .கே.டி. பள்ளியில் நான்கு வயதான எனது மகள் யு.கே.ஜி. படித்து வருகிறார். இந்நிலையில், அந்தப் பள்ளியின் முதல்வர் லேசி போஸ்கோ, ஆசிரியை போஷியா ஆகியோர் எனது மகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து பாலியல் ரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.  இந்த பாலியல் கொடுமை குறித்து மிகவும் தயங்கிக் கொண்டே எனது மகள் என்னிடம் சொல்லியபோது எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எனது மகள் முழு சம்பவத்தையும் எங்களிடம் கூற மிகவும் பயந்தாள். அவளுக்கு தைரியமூட்டிய பிறகே, முழு விவரத்தையும் கூறினாள்.  இந்த சம்பவத்தால் எனது மகள் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.  எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

போலீஸார் ஏன் .கே.டி. பள்ளிக்கு உதவ வேண்டும்? ஆகஸ்ட் 3ம் தேதி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துதான், போலீஸார் வேலை செய்வார்கள் என்பது வியப்பான விஷயம். எந்த போலீஸாரது மகளுக்கு அத்தகைய கொடுமை நடந்திருந்தால், அவர் சும்ம இருந்திருப்பாரா? குரூரக்காரர்களை மறைக்க உதவுவாரா? இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒஸ்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். நேற்று நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றொருவர் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. காட்டுமிராண்டித்தனமானது. ஆனால் அதில் போலீசார் சரியாக செயல்படவில்லை. மேலும் கைது செய்யப்படாத குற்றவாளியின் பெயரையும், பதில் மனுவில் தெரிவிக்கவில்லை. . நான்கு வயது சிறுமியிடம், கொடூரமான குற்றம் புரிந்த, பெயர் குறிப்பிடப்பட்ட நபரை, போலீசாரால் கைது செய்ய இயலாத நிலை என்பது வியப்பாக உள்ளது[3]. எனவே, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தர விட்டனர்[4].

 

வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற உத்தரவு: அதைத் தொடர்ந்து இன்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு விசாரித்து 4 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மக்கள் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்[5]. ஆனால் அதே நேரத்தில், சென்னையில் இந்து முன்னணியினர், இம்மானுவேல் மெத்தோடிஸ்ட் சர்ச் பள்ளியில் ரம்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமாரி.ஜே கைது செய்யப்படவேண்டும்  என்று ஆர்பாட்டம் செய்ய முயன்ற போது போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. அதில் ரம்யாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.  போலீஸாரிடம் மனு கொடுத்து விட்டு, அமைதியாக கலைந்து சென்றனர்.

வேதபிரகாஷ் 28-09-2011


குறிச்சொற்கள்: , , , , , , , ,

8 பதில்கள் to “பள்ளி சிறுமி பாலியல் வழக்கு:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு!”

 1. J. Rajiv Robertson Says:

  The Christian institutions should be transparent in dealing with such dealings.

  They cannot behave as if they are above Indian judicial system.

  There is no difference between the fugitive American evangelist and these educational institution, as both try to hide behind their international power arrogance and anti-judicialism.

 2. தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு வ Says:

  […] [7] https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/ […]

 3. 14 / 16 வயது கன்னியை கற்பழித்ததை, குழந்தையைக் கற்பழித்ததாக செய்திகளைப் போடுகிறார்கள், ஏன்? « இந்த Says:

  […] [15] https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/ […]

 4. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

  […] [2] https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/ […]

 5. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

  […] [2] https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/ […]

 6. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

  […] [2] https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/ […]

 7. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

  […] https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/ […]

 8. கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்த Says:

  […] [13]https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: