மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா? அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?

மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா? அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?

கிருத்துவர்களும், நிலம் ஆக்கிரமிப்பு மோசடிகளும்[1]: கிருத்துவர்களின் நில ஆக்கிரமிப்பு கடந்த 300 வருடங்களாக இந்தியாவில் நடந்து வருகிறது. இருப்பினும், உண்மைகளை மறைத்து, ஏதோ அவர்கள் நியாயவான்களைப் போன்று காட்டிக் கொள்வார்கள்.  சர்ச்சின் பெயரில் நிலத்தை ஆக்கிரமித்து, பிறகு “ரியல் எஸ்டேட்” பாணியில் அதிக விலைக்கு விற்று கோடிகளை சம்பாதித்து வந்தனர், வருகின்றனர்[2]. இடத்தை வளைத்துப் போடுவதில், அத்தகைய வேலைகளை செய்துவருகின்றனர்[3]. விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 2010,  சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. ஆனால், ஒன்றுமே நடக்காதது மாதிரி, கலர்-கலராக சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டு, கூட்டத்தைச் சேர்ந்த்கொண்டு தனது சித்தப்பாவுடன் சேர்ந்து கொண்டு, கிருத்துவ விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதி தினகரன் கூட நில மோசடி வழக்குகளால் பதவி இழந்து, அவமானப் பட்டுள்ளார். ஆனால், தான் கிருத்துவர் என்பதால்தான், அவ்வாறு நடத்தப்படுகிறார் என்று டிவிசெனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார்[5]. இப்படி எல்லா நிலையிலும் கிருத்துவர்கள் நிலமோசடிகளில் ஈடுபட்டுள்ளது, ஏதோ ஒரு பின்னணியைக் காட்டுகிறது.

சென்னை பேராயர் மீது நிலமோசடி வழக்கு: சபை நிலத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுத்தார்[6]: சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னப்பா ஏற்கெனவே “தாமஸ் கட்டுக் கதை” மொசடியிலும் சம்பந்தப்பட்டுள்ளார்[7].  இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவொன்றும் புதிய வழக்கல்ல, ஏனென்றால் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பிஷப்புகள் நன்றாகவே சம்பாதித்து விட்டனர்.

1990-2000களில் நிலமோசடியில் ஈடுபட்ட பிஷப்புகள்; கோடிக்கணக்கில் நடந்துள்ள நில மோசடியில், சென்னை பிஷப்புகள் ஈடுபட்டுள்ளதாக, சென்னை நீதிமன்ற தீர்ப்பு மூலம் தெரிகிறது[8]. எல். எம். மென்ஸிஸ் (L.M.Menezes), ஜோஸப் குரியகோஸ்  (Joseph C.Kuriacose) மற்றும் ஹெரால்ட் டி’சில்வா  (Harold D’Silva) என்ற மூவர் சர். ஜான் டி மான்டே[9] டிரஸ்டின் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை, டிரஸ்டின் விதிகளுக்குப் புறம்பாக ஜேப்பியார் என்பவருக்கு விற்றுவிட்டதாக, சென்னை ஆர்ச் பிஷப், மற்ற பிஷப்புகள், கத்தோலிக்க பிஷப் குழுமம் முதலியவர்களின் மீது வழக்கு தொடர்ந்தனர்[10]. அதுமட்டுமல்லாது லாரன்ஸ் பயஸ் என்ற பிஷப், வெகுகால குத்தகைக்கு ஜேப்பியாருக்கு கொடுப்பதையும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்[11][11]. ரூ.600-650 கோடி மதிப்புள்ள சொத்தை ரூ.75 கோடி மற்றும் மாதம் ரூ.15,000/- என்ற வீதத்தில் குத்தகைக் கொடுததும் பல கேல்விகளை எழுப்பின. இதில் வேடிக்கையென்னவென்றால், 2001-2002 வாக்கில், லாரன்ஸ் பயஸ் பிஷப்பே, அத்தகைய பேரத்தில் ஈடுபட்டு, பிறகு, ஒன்றும் தெரியாதது போல நடித்து வருகின்றார். இவையெல்லாம் 2001 – 2007 காலக்கட்டத்தில் நடந்தேறின.

கிருத்துவ தர்ம ஸ்தாபன நிலம் பணமுதலைகளுக்கு நெடுங்கால குத்தகைக்கு விட்டது: சென்னையில் கடந்த 1919 ம் ஆண்டில் வாழ்ந்தவர் டி. மாண்டி. இவர் போர்ச்சூக்கிய நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ( ராஜா அண்ணாமலை புரம் ) இடங்களை கத்தோலிக்க சபைக்கு உயில் எழுதி , இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை ஏழை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த ஆவணத்தில் கூறியுள்ளார். இந்த நிலங்கள் சபையின் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடி ஆகும். அதாவது எம்.ஜி.ஆர்., காலத்தில் பலம் மிக்கவராக இருந்து வந்த ஜேப்பியார், மற்றும் எம்.ஜி.எம்,. நிறுவனத்திற்கு இந்த இடங்களை 95 ஆண்டு காலம் வரை நீண்ட கால ஒத்திகைக்கு மறைமாவட்ட சபை வழங்கியுள்ளது.

பிஷப்புகள் கூட்டமிட்டு கொள்ளையடித்தது: இத்தகைய குத்தகைக்கு காரணமான பிஷப், ஜேப்பியார், குமார், லாரன்ஸ், கபீர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் போலீசாரிடம் வழங்கினார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளனர். நிலமோசடிக்கென உருவாக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

இந்த மோசடி மதப்பிரச்சினையா, சமூகப்பிரச்சினையா? கத்தோலிக்க சபையை பொறுத்த மட்டில் மறைமாவட்டம் என்றும் , அந்தஸ்து கொண்ட உயர்மறைமாவட்டம் என்றும் இரு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையும், சென்னையும் உயர் மறைமாவட்டம் ஆகும்.  இதற்கிடையில் இந்த நிலங்கள் தொடர்பாக ஏற்கனவே எழுந்த சர்ச்சையின் கீழ் சபைக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று சபை தரப்பில் கூறப்பட்டாலும், ஆவணங்கள் முறையாக இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.

2000-2010களில்செக்ஸ், பாலியல், பாலியல்வன்புணர்ச்சிகள், ஆபாசங்கள், அடிதடி, அடாவடித்தனங்களில்ஈடுபடும்பிஷப்புகள்; எந்த அளவிற்கு ஒரு ஆசிரியையை பாடுபடுத்தியிருந்தால், நீதிமன்றத்திற்கு சென்றிருப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், ஏனெனில், இவர்கள் எல்லோரும் பொதுவாக, நீதி மன்றத்திற்குச் செல்லாமலேயே விஷயத்தை அமுக்கி தமக்குள் விவகாரங்களை முடித்துக் கொண்டு விடுவர்[13]. இதே நிலைதான், இப்பொழுது 2010ல் ஊடகக்காரகளை பிடித்து வைத்தது, அடித்தது, கேமராவைப் பிடுங்கு வைத்துக் கொண்டது போன்ற அடாவடித்தன வேலைகளில் தெரிய வருகிறது.

மோசடி பிஷப் மனுடிஸ்மிஸ்[14]: இதைத்தவிர மற்ற பிஷப்புகள் கோடிக்கணக்கான பண னோசடி, மற்ற விவகாரங்களில் சிக்கியுள்ளனர். வழக்குகளும் நடந்து வருகின்றன. இதோ இன்னொரு உதாரணம் – கோவை: பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, கோவை கோர்ட் தள்ளுபடி செய்தது. கோவை மண்டல சி.எஸ்.ஐ., திருச்சபை பேராயராக இருந்தவர் மாணிக்கம் துரை. இவர் மீது, திருச்சபை உறுப்பினர்கள் மோசடிப் புகார் கூறியதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மூன்று கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இவ்வழக்கு, தற்போது மாவட்டத் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடக்கிறது. சமீபத்தில், “அவசர வேலையாக வெளிநாடு செல்ல இருப்பதால், முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்’ என்று கோரி, கோர்ட்டில் மாணிக்கம் துரை சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சி.பி.சி.ஐ.டி., தரப்பில், எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு மனுக்கள் மீதான வாதம், நேற்று முன்தினம் நடந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சீனிவாசன், பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, “டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டார்.


[1] வேதபிரகாஷ், கிருத்துவர்களின்நிலம்அபகரிப்பு தொடர்கிறது!, https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/

[2] வேதபிரகாஷ், நிலமோசடி, ஆக்கிரமிப்புசெய்வதில்ஒன்றும்தவறில்லைசொல்வதுஎஸ்ராசற்குணம்! , https://christianityindia.wordpress.com/2010/09/27/nothing-illegal-in-encroaching-land-for-church/

[3] வேதபிரகாஷ், நிலமோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!, https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/

[4] வேதபிரகாஷ், நிலமோசடியில்விஜிபிஇயக்குனர்கைது!, https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/

[5] ஆங்கில டிவி-செனல்களில் அத்தகைய பிரச்சார ரீதியிலான, பேட்டிகள், செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

[6] தினமலர், சென்னைபேராயர்மீதுநிலமோசடிவழக்கு ; சபைநிலத்தைநீண்டகாலஒத்திக்குகொடுத்தார், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=285959

[7] இவரது முந்தையவர் அருளாப்பாப் போன்று, இவரும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆச்சார்யா பால் என்றால், இவருக்கு தெய்வநாயகன் என்பவர் இருக்கிறார்.

[8]  http://www.rishabhdara.com/sc/view.php?case=73009

L.M. Menezes And Ors. vs Most Rev. Arul Das Jamas And Ors. on 6 January, 2003; http://www.indiankanoon.org/doc/1379270/

L.M.Menezes vs Rt.Rev.Dr.Lawrence Pius on 22 December, 2003;http://www.indiankanoon.org/doc/1852617/

“Memorandum of Setllement” dated 20-01-1985 between Arulappa and Acharya Paul, p.no.7.

[9] இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆள் சென்னையில் போர்ச்சுகீசியர் ஆக்கிரமித்த நிலங்களை, வளைத்துப் பிடித்து வாங்கியவர். மேலும் இவருக்கு “சர்” என்ற பட்டம் கொடுக்கப்படவேயில்லை! இதுதான் அவர்களது சரித்திரம்.

[10] The appellants herein made allegations against the respondents that the properties of the Trust were being mismanaged in violation of the instructions of the testator and a substantial extent of immovable properties were sold. One of the properties of the Trust is comprised in R.S.No.3923 of Mylapore Village of a total extent of 257 grounds and 81 sq.ft., consisting of buildings, which is commonly known as Bens Garden, which was proposed to be leased for long term to the seventh respondent, without proper advertisement or notice to the general public. The second respondent filed O.P.before the original side of this Court, seeking permission for long term lease to be given to the seventh respondent, which was also objected to by the appellants herein.

[11] The Hindu, Madras High Court refuses to approve the land lease agreements, Sunday, Jul 23, 2006, http://www.hindu.com/2006/07/23/stories/2006072305380400.htm

[13] Archbishop Arulappa vs. Acharya Paul – C. S. No. 318 of 1980 Arulappa vs Ganesh Iyer; Application No. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985. இது செட்டில்மன்ட் வழாக்கானதால் கோர்ட்டிற்கு செல்லவேண்டியதாயிற்று! இல்லையென்றால், இதுவும் மக்களின் பார்வைக்கு வந்திருக்காது, அத்தகைய மோசடிகள் வெளிவந்திருக்காது.

[14] தினமலர், பிஷப்மனுடிஸ்மிஸ், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=289433

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா? அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?”

  1. தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு வ Says:

    […] [10] https://christianityindia.wordpress.com/2011/08/13/bishops-caught-in-land-grabbing/ […]

  2. கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்பு Says:

    […] [3] https://christianityindia.wordpress.com/2011/08/13/bishops-caught-in-land-grabbing/ […]

  3. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [5] https://christianityindia.wordpress.com/2011/08/13/bishops-caught-in-land-grabbing/ […]

  4. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [5] https://christianityindia.wordpress.com/2011/08/13/bishops-caught-in-land-grabbing/ […]

  5. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [5] https://christianityindia.wordpress.com/2011/08/13/bishops-caught-in-land-grabbing/ […]

  6. கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவி Says:

    […] [4] https://christianityindia.wordpress.com/2011/08/13/bishops-caught-in-land-grabbing/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: