கிருத்துவ அறக்கட்டளை நடத்தி, பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!

கிருத்துவ அறக்கட்டளை நடத்தி, பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!

தேவபிரியாஜி, கர்த்தர் உங்கள் பணத்தை 5 மடங்காக்கித் தருவார். பாதிரியார் 35 கோடி மோசடி. தலைமறைவுஓட்டம் என்று பதிவு செய்திருந்தார்[1]. இருப்பினும், அதில் விவரங்கள் இல்லாமல் இருந்தது. விசாரித்ததில் சில விஷயங்கள் கிடைத்தன. ஆனால், பணம் கொடுத்தவர்கள் கூட, மேலும் விஷயங்களை சொல்ல மறுப்பது தெரிகிறது. அதில் பெரும்பான்மையோர் கிருத்துவர்கள் மற்றும், கிருத்துவ பாதிரிகள், அறைக்கட்டளைகள் சம்பந்தப் பட்டிருப்பதால், அவற்றைக் காக்கவே அமுக்கி வாசிக்கின்றனர் என்று தெரிகிறது.  திருநின்றவூர் வடிவேல் நகரை சேர்ந்த பாஸ்டர் கோபு, திருமுல்லைவவயல் பாஸ்டர் கிருபாகரன் மீது புகார் கொடுக்க, அவர் கைது செய்யப்பட்டதால் அம்பத்தூர் பாஸ்டர் ஜான் பிரபாகரன் தலைமறைவானார். இவரைப் பிடித்து விசாரித்தால் மற்ற பாஸ்டர்களின் விவகாரங்கள் வெளிவந்துவிடும் என்று அஞ்சியே, இந்த விஷயத்தை திசைத் திருப்பவும் முயற்சி செய்யப்படுகிறது.

கிருத்துவ அறக்கட்டளை நிறுவனருக்கு போலீஸ் வலை 5 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றி 35 கோடி மோசடி[2]: வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தருவதாக கூறி ரூ. 35 1/2 கோடி வசூலித்து, மோசடி செய்த கிறிஸ்தவ பாதிரியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்[3]. சென்னையை அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (43), அறக்கட்டளை நடத்தி வரும் கிருத்துவ மதபோதகர். இவரது நண்பர் அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாஸ்டர் பிரபாகரன். இருவரும் சேர்ந்து கொண்டு, பணம் பெருக்கும் திட்டம் ஒன்று அறிமுகப் படுத்து, அதன் மூலம் மக்களிடமிருந்து பணம் கறக்கத் திட்டம் தீட்டினர். பிறகு ஆந்திர மாநிலத்தில் உள்ள சர்ச்சுகளை தொடர்பு கொண்டு, அவர்கள் உதவியுடன், அத்திட்டத்தைச் செயல்படுத்தினர். இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர தமிழகம், ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து பிரபாகரனிடம் கொடுத்துள்ளார் கிருபாகரன்[4]. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம் கிருத்துவ பாதிரிகள் / பாஸ்டர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர்.

அம்பத்தூர் பிரபாகரன், திருமுல்லைவவயல் கிருபாகரன்,: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (43). மத போதகர். இவரது நண்பர் அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாஸ்டர் பிரபாகரன். இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதில் உறுப்பினராக சேர–

  • மாதம் ரூ. 2,100 கட்டினால்,
  • முதல் 2 மாதம் ரூ 600,
  • மூன்றாம் மாதம் முதல் 11 மாதம் வரை ரூ. 1,200
    • என மொத்தம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.
  • அதேபோல ரூ 5,250 கட்டினால் 11 மாதத்தில் ரூ.27 ஆயிரம்,
  • ரூ 10,500 கட்டினால் 11 மாதத்தில் ரூ 54 ஆயிரம்,
  • ரூ 26,250 கட்டினால் 11 மாதத்தில் ரூ 1 லட்சத்து 23,800

வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர தமிழகம், ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து பிரபாகரனிடம் கொடுத்துள்ளார் கிருபாகரன், அதன்படி இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக அறிவித்தபடி பிரபாகரன் பணமும் கொடுத்துள்ளார். ஆனால், கடந்த 3 மாதமாக பணம் கொடுக்கப்படவில்லை.
பாஸ்டர் மீது பாஸ்டர் புகார் – தலைமறைவா, கடத்தலா? இதுகுறித்து, பணம் வசூலித்துக் கொடுத்த பாஸ்டர்கள், கிருபாகரனை சந்தித்து விசாரித்தனர். அவர் பணம் வாங்கித் தருவதாகக் கூறி காலம் கடத்தியிருக்கிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, கிருபாகரன் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான திருநின்றவூர் வடிவேல் நகரை சேர்ந்த பாஸ்டர் கோபு, திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்  பதிவு செய்து விசாரித்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கிருபாகரன் மனைவி ராகிலுக்கு ஒருவர் போன் செய்து, ‘உங்கள் கணவர் கிருபாகரனை கடத்தி வைத்துள்ளோம். 5 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு அவரை அழைத்துச்செல்லுங்கள்’ என்றனர். அதிர்ச்சி அடைந்த ராகில், திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திருமுல்லைவாயல் போலீஸ்  இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு சென்று அவரை மீட்டு வந்தனர். அவரை கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் மோசடி செய்த பாதிரிகள் / பாஸ்டர்கள்: மீட்கப்பட்ட கிருபாகரனிடம் விசாரித்தபோது, உறுப்பினர்களிடமிருந்து ரூ 35 கோடி வசூலித்து ஏமாற்றிய விவரம் தெரியவந்தது. மதபோதகரை கடத்திவைத்ததாக, கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆபிரகாம் (36), திருவல்லிக்கேணி மகேஷ்குமார் (25), சுதாகர் ராவ் (28), மாதவன் (40) ஆந்திராவை சேர்ந்த ஏசுபாபு (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்[5].  அறக்கட்டளை  நடத்திய பிரபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திரபிரதேசம் கிருத்துவ ஊழலுக்கு உதவுகிறதா? முன்பு பல ஆயிரம் கோடி சுனாமி ஊழலில், கிருத்துவர்கள் இரு மாநிலங்களிலும் உள்ளவர்கள் மூலம், ஒரு அமெரிக்க கிருத்துவ நிறுவனத்திலிருந்து Rs 1,763 பெற்று, அதை சுனாமி பாதித்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று பணம் வாங்கி, அதிலிருந்து கோடிகளை சுருட்டியதில் ஆந்திர மாநில கிருத்துவர்கள் பெரும்பங்கு வகித்தனர். இவரங்களுக்கு கீழ்காணும் செய்தியைப் படிக்கவும்.

OVER RS 7 CR FROM US BASED NGO ROBBED CSI kin swindles tsunami aid funds

Oct. 11, 2009 : The city police on Sunday arrested the daughter of the former general secretary of Church of South India and her relative for allegedly swindling over Rs 7 crore from the fund allotted by a US NGO for rehabilitation of tsunami victims. The arrested were identified as Ms Benedicta and Robert Sunil. According to a press release from the central crime branch of Chennai police, the arrest was made on a complaint from Rev Moses Jayakumar, currently the general of secretary of CSI. In his complaint it was alleged that former CSI general secretary had swindled nearly Rs 7.5 crore by spending on cars and bungalows. “The American NGO named Episcopal Relief and Development had given Rs 1,763 crore to CSI for rehabilitation works like construction of houses for victims, medical assistance etc. To implement the project, Ms Pauline Sathyamurthy and the former general secretary of CSI allegedly appointed her relatives with fancy salaries. Sathyamurthy was an employee in a bank. Her daughter, Mrs Benedicta is a doctor who resides in Royapettah. Her cousin Robert Sunil is from Sulurpet, Andhra Pradesh,” the police said. After arresting the two, sleuths from CCB seized two sport utility vehicles from the accused. “We are trying to find out the details of the assets of the accused to ascertain the exact amount of money they had swindled,” the police said.

இதனால், ஆந்திரபிரதேசம் கிருத்துவர்களுக்கு சாதகமாக இருப்பதால், அல்லது அங்கிருந்து பணத்தை இங்கு எடுத்துவர, இத்தகைய யுக்திகளை கையாளலாம் என்ற திட்டத்துடன் செயல்படுகிறதா என்று தெரியவில்லை. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்த போது, கிருத்துவர்கள் வெளிப்படையாக மிகவும் வேகமாக, சுறுசுறுப்பாக வேலகளை செய்து வந்தனர்.

ஆந்திராவிலிருந்து கார்களில் வந்த ரூ.1 கோடி பறிமுதல் – ஜான் பிரபாகரன் கைது: அம்பத்தூர் தொண்டு நிறுவனத்துக்கு ஆந்திராவில் இருந்து கார்களில் வந்த ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். பணத்துக்கு சரியான ஆவணங்களை காட்டாத 24 பேர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் போலீஸ்காரர் கோதண்டன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அம்பத்தூர் & செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள ராக்கி தியேட்டர் அருகே சந்தேகத்துக்கு இடமாக 3 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். கார்களையும் சோதனையிட்டனர். உள்ளே துணிப்பையில் 1000, 500, 100 என கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதுபற்றி போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் வலுக்கவே, கார்களுடன் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜான் ஜோசப், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் 3 கார்களிலும் இருந்து ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கார்களில் வந்தவர்கள் மனோஜ்குமார் (38), ஆஞ்சநேயலு (39), சுரேஷ் (30), ரோசய்யா (38) உள்ளிட்ட 24 பேரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பிரகாசம் தாலுகாவை சேர்ந்தவர்கள். அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உறுப்பினர்களிடம் வசூலித்த பணம் என்று அவர்கள் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி பிரபாகரனை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சரியான ஆவணங்களை காட்டவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். இதையடுத்து 24 பேரையும் போலீசார் கைது செய்தனர்[6]. பறிமுதல் செய்த பணத்தையும் கார்களையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதிலிருந்து, அதே பிரபாகரன் தான் இப்பொழுது தேடப்படும் ஜான் பிரபாகரன் என்று தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட ஜான் பிரபகாரன் எப்படி விடுதலை செய்யப் பட்டான்? அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உறுப்பினர்களிடம் வசூலித்த பணம், சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி பிரபாகரன், அவனை அழைத்து போலீசார் விசாரித்தனர் எனும்போது,  இந்த இரண்டு “ஜான் பிரபாகரன்”க்ளும் ஒருவரே என்று தெரிகிறது. அம்பத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டதால், ஜான் பிரபாகரனின் விவரங்கள் வழக்குப் பதிவில் இருக்கும். எனவே, அவன் அதே குற்றத்திற்காக அல்லது சம்பந்தப் பட்ட குற்றத்தில் தேடப்படுவது வியப்பாக இருக்கிறது. இந்த இரண்டு-மூன்று மாதங்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.


[1] தேவபிரியாஜி, கர்த்தர் உங்கள் பணத்தை 5 மடங்காக்கித் தருவார். பாதிரியார் 35 கோடி மோசடி. தலைமறைவுஓட்டம், http://saintthomasfables.wordpress.com/2011/10/23/1205/

[2] தினகரன், றக்கட்டளை நிறுவனருக்கு போலீஸ் வலை 5 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றி 35 கோடி மோசடி, பதிவு செய்த நாள் : 10/23/2011 6:33:8; http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=7460

[6] தினகரன், ஆந்திராவிலிருந்து கார்களில் வந்த ரூ.1 கோடி பறிமுதல், பதிவு செய்த நாள் : 8/24/2011 2:37:33; http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3783

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

6 பதில்கள் to “கிருத்துவ அறக்கட்டளை நடத்தி, பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!”

  1. ram Says:

    இதே ஒரு சாமியார் செய்திருந்தால் இன்றைக்கெல்லாம் சன் டிவியும் விஜய்டிவியும் பொத்துக்கொண்டு பெரிதாக செய்தி போட்டிருக்கும்.

  2. S. Ezhilan Says:

    கிருத்துவர்களுக்கு இதே பிழைப்பாக போய்விட்டது. பாஸ்டர், போதகர், பாதிரி என்ற பதவி கிடைத்ததும், இவர்கள் ஏதோ சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் போல நடந்து கொள்கின்றனர். என்ன செய்தாலும் யாரும் ஒன்று செய்து விட முடியாது என்ற எண்ணமும் வலுத்துள்ளது. மைனாரிட்டி / சிறுபான்மையினர் என்பதனால் போலீஸாரிடத்தில் புகார் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை, அப்படியே புகார் கொடுத்தாலும் பதிவு செய்வதில்லை; பதிவு செய்தாலும் நடவைக்கை எடூபதில்லை; நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து வழக்கை விசாரிப்பதில்லை; அதற்குள் குற்றவாளிகள் ஆதாரங்களை அழித்து விடுகின்றனர் அல்லது சம்பந்தப்பட்டவர்களை சர்ச் உயர் அதிகாரிகள் மூலம் அடக்க வைத்து அல்லது மிரட்டி பணிய வைத்து விடுகின்றனர். சில வழக்குகளில் புகார் கொடுத்தவர்களே, அதனை வாபஸ் வாங்கும் வகையில் செய்து விடுகின்றனர். இதனால் தான் கிருத்துவர்கள் இந்நாட்டில் தப்பித்துக் கொள்கின்றனர். தொடர்ந்து சட்டமீறல்களையும் செய்து வருகின்றனர். அவர்கள் அதைப் பற்றி வெட்கபடுவதும் இல்லை. உதாரணத்திற்கு – வி.ஜி.பி, மார்ட்டீன், சின்னப்பா மற்றும் பல பிஷப்புகள், பாதிரிகள்.

  3. CECIL PAUL RAJ.T Says:

    VERY IMPORTANT DETAILS. THANK YOU

  4. கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்பு Says:

    […] [5] https://christianityindia.wordpress.com/2011/10/26/christian-trust-swindles-crores-pastors-arrested/ […]

  5. கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவி Says:

    […] [1] https://christianityindia.wordpress.com/2011/10/26/christian-trust-swindles-crores-pastors-arrested/ […]

  6. கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகள Says:

    […] [13] https://christianityindia.wordpress.com/2011/10/26/christian-trust-swindles-crores-pastors-arrested/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: