நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!

நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!

கொச்சிக்கு வந்த அமெரிக்க கிருத்துவ மதப்பிரசாரகர்: கொச்சியில் 12-10-2011 (புதன்) அன்று “இசை சிதறல்” 2011 (Splash 2011′ ) ஒரு கிருத்துக் கூட்டத்தில் பேசவிருந்த வில்லியம் ஏ. லீ என்ற பாதிரி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸார் தேடி வந்தனர்.  “நம்பிக்கை மூலம் நோய் தீர்க்கும் கடவுளின் சர்ச்” (Faith Healers Church of God) என்ற நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்திருந்தது[1]. அந்த கூட்டத்திற்கு வருகிறான் என்றறிந்து, பாலரிவட்டம் போலீஸார் அங்கு சென்று, அவனைப் பேசவிடாமல் தடுத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்[2]. அப்பொழுது போலீஸாருக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று வாகுறுதி கொடுத்தானாம். ஆனால், அங்கிருந்து அவன் திடீரென்று காணாமல் போய் விட்டான்[3].

பின்பக்கமாக தப்பி ஓடிய பாதிரி: ஆனால், உண்மையில், நடு ராத்திரிக்கு மேல் அதே இடத்தில் லீ பேசியுள்ளான். அதனை இரு போலீஸாரும் பார்த்துவிட்டார்களாம். பிறகு தான், பின்பக்கம் வழியாக அந்த பாதிரி தப்பி ஓடியுள்ளான்[4]. இதனால், எல்லா விமான நிலையங்களுக்கும் அவனைப்பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டன. மத்திய அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டு, விதிகளை மீறிய அவனைப் பிடிக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்காவைக் கேட்டுபக் கொள்ளவும் வேண்டியுள்ளனர். அக்டோபர் 5 அன்று, பல-நுழைவு கடவுச் சீட்டுடன் வந்து, திரிச்சூரிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் கிருத்துவப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளான். இதே மாதிரி, ஜூன் 13ல் மூன்று அமெரிக்க கிருத்துவ மதப் பிரச்சாரிகள் கடற்க்கரைப் பகுதியிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளானர். இதற்கு உள்ளூர் பாதிரிகள் ஏற்பாடு செய்து, உதவியுள்ளானர்[5]. சென்ற தடவை, ரோன் கெனோலி (Ron Kenoly) என்ற பாதிரி வந்து  “மிஸ்மோர்” என்ற கிருத்துவ இசை மதப்பிரச்சார நிகச்சியை திருவல்லா பதணம்திட்டா என்ற இடத்தில் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறான்[6]. கோடிக்கணக்கான பணம் கேரளாவில் மதமாற்றத்திற்காக வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

லீயுடன் வந்த பெண்கள் எங்கே? லீ மற்றும் ரோன் கெனோலி பிரச்சாரகர்களுடன் பெண்களும் வந்துள்ளார்கள். ஆனால், அந்த பெண்கள் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த பெண்கள் அர்த்த ராத்திரிலேயே லீயைப் போன்று ஓடிவிட்டனரா அல்லது கேரளாவில் எங்கேயாவது சர்ச்சுகளில், செமினரிகளில், கிருத்துவ விடுதிகளில் மறைந்துள்ளனரா என்று தேடப் பட்டு வருகின்றனர். செல்போன் எண்கள் மூலம் அவர்கள் எங்கே இருக்கலாம் என்று சோதித்து வருகின்றனர்[7]. இதற்குள், லீ கைது என்ற செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன[8]. இது அந்நிய நாட்டு பத்திரிக்கை மீது ஆதாரனமது, ஆனால், இந்திய பத்திரிக்கைகள், அவன் தேடப்பட்டு வருகிறான் என்றுதான் குறிப்பிட்டு வருகின்றன.

அயல்நாட்டு சக்திகளுடன், இந்தியர்களுடனான தொடர்புகள்: பாஸ்டர் ராய் டேனியல் மாத்யூ என்பவர் சிங்கப்பூர் கிருத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்[9]. இந்தியாவில் கிருத்துவத்தைப் பரப்ப தீவிரமாக வேலை செய்து வருபவர்[10]. இவரது தந்தையும் தீவிரமான இவாஞ்ஜெலிஸ்ட் (மதப்பரப்பாளர்). அதேபோல, வில்லியம் ஏ. லீ தந்தை, மகன் என்று இருவர் உள்ளனர் என்று தெரிகிறது. மலையாள மனோரமாவில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் மாறுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், www.faithleaders.org என்ற இணைத்தளத்தில் உள்ள புகைப்படம் மற்ற புகைப்படங்களுடன் ஒத்துப் போகிறது. ரோன் கெனோலி கிருத்துவ பாடகர்-எவாஞ்ஞெலிஸ்ட், அதாவது பாட்டுப் பாடி, மக்களை மயக்கி மதம் மாற்றுபவர். டேனியல் மாத்யூ மற்றும் ராய் டேனியல் மாத்யூ இந்த நிகழ்ச்சியில் பிரத்யேகமாக சம்பந்தப் பட்டுள்ளது தெரிகிறது. மிஸ்மோர், ஹார்மோனிக் மிஸ்மோர் மீடியா முதலிவை இந்த கூட்டத்தை நிர்வகித்துள்ளன.

அந்நிய பணம் எப்படி வருகிறது? மதமாற்ற வேலைகளுக்காக மில்லியன் / கோடிக்கணக்கில் குறிப்பாக கேரளவில் அந்நிய பணம் வருகிறது என்று அறிக்கைகள் சொல்கின்றன. “நம்பிக்கை தலைவர்கள்” என்ற இயக்கத்திற்கு அவ்விதமகவே வதுள்ளன என்று அறிக்கைகள் கூறுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளின் பின்னணியில் உள்ள பணபறிமாற்றங்களை அறிய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது[11]. வில்லியம் லீ மதபிரச்சாரக் கூட்டங்களை அக்டோபர் 7, 8, 9 என மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்ததாக உளவு அதிகாரிகள் கூறுகின்றனர். வில்லியம் லீ நிகழ்ச்சி நடத்தவேண்டும், அதே நெரத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும் அவர்களால் தடுக்க முடியாத அளவிற்கு, விழா நடத்தப் பட்டு, அவர் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று “நம்பிக்கை தலைவர்கள்” குழு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்[12]. அதாவது, உள்ளூர் கிருத்துவர்கள் தாம், இத்தகைய சட்டமீறல்களுக்கு உதவுவது என்று வெளிச்சம் ஆகிறது. மதம் என்ற பெயரில், நாட்டின் சட்ட-திட்டங்களை மீறுவது, நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது, தேசதுரோகம் செய்யக் கூடத் துணிவது, வேவு பார்ப்பது, நாட்டைப் பற்றிய விவரங்களைக் கொடுப்பது என பல வேலைகளை செய்து வருவது தெரிய வந்துள்ளன. இசை நிகழ்ச்சி என்ற பெயரில், இந்த “நம்பிக்கை தலைவர்கள்” கிருத்துவத்தை பர்டப்பவே செய்து வருகின்றனர். திருவல்லா, பதணம்திட்டா முதலிய இடங்களில் ஏற்கெனவே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளானர்[13].

சட்டத்தை மீறிய அமெரிக்கர்களுக்கு உதவியதாக மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு: மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[14]. ராய் டேனியல், டேனியல் மாத்யூ மற்றும் ஜேம்ஸ் ஜியார்ஜ் என்ற மூன்று கிருத்துவ நிறுவனத் தலைவர்கள் மீது, அமெரிக்க எவாஞ்ஞெலிஸ்டுகளுக்கு சட்டத்தை மீறி உதவியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[15].

வேதபிரகாஷ்

16-10-2011


[6] Like other, Faith Leaders programmes, Musical Splash 2011 in Kochi was planned as a three-day event to popularise their school of Christianity through “Gospel Music Pageantry”. Ron Kenoly and his music troupe, Mizmor Harmonic, had held such ‘pageantry’ in Thiruvalla Pathanamthitta in December last.

[11] There are reports that millions of rupees are flowing into India, especially Kerala, for evangelical activities. Huge sums of money have reportedly come in for the Faith Leaders programme as well. Sources in the police said efforts were on to find out the details of financial transactions behind such programmes.

http://www.dailypioneer.com/state-editions/kochi/12947-lookout-notice-for-us-evangelists.html

[12] Intelligence officials have learned that William Lee had held musical conventions for religious propagation at Kunnamkulam in Thrissur district on October 7, 8 and 9. There are also reports that he had told his close disciples in Faith Leaders that he was not planning to leave India soon and that the police would not be able to stop him from his mission.

http://www.dailypioneer.com/state-editions/kochi/12947-lookout-notice-for-us-evangelists.html

[13] Like other Faith Leaders programmes, Musical Splash 2011 in Kochi was planned as a three-day event to popularize their school of Christianity through “Gospel Music Pageantry”.  Ron Kenoly and his music troupe, Mizmor Harmonic, had held such “pageantry” in Thiruvalla, Pathanamthitta in December last.

http://www.dailypioneer.com/state-editions/kochi/12947-lookout-notice-for-us-evangelists.html

[14] The city police on Friday registered cases against three organizers of the gospel convention in which US-based pastor William Lee delivered a lecture violating visa norms.

http://timesofindia.indiatimes.com/city/kochi/Case-against-3-gospel-meet-organizers/articleshow/10360610.cms

[15] Cases were registered against the persons identified as Roy Daniel, Daniel Mathew and James George on charges of abetting the pastor in violating visa norms.

http://timesofindia.indiatimes.com/city/kochi/Case-against-3-gospel-meet-organizers/articleshow/10360610.cms

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!”

 1. S. Devadoss Says:

  மீசையுடன், மீசையில்லாமல் –
  மொட்டையுடன், மொட்டையில்லாமல் –
  கோட்-சூட் மற்றும் சாதாரண உடையில் –
  பெண்ணுடன் போஸ்…………..
  என்று பல அவதாரங்களுடன் இருக்கும் இந்த ஆள் நிச்சயமாக படே கில்லாடி ஆள்தான்.

  அதனால்தான், போலீஸாருக்கு, நடு இரவில் டிமிக்கிலக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான்.

  நன்றாகத்தான் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறான்!

 2. தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு வ Says:

  […] இந்தியாவில் கிருத்துவம் கிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்! « நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: