Posts Tagged ‘பாலியல் குற்றச்சாட்டு’

மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லை – சூசைப்பிரகாஷம், ஆதிசிவன், மற்றும் போக்சோவில் கைது, சிறை முதலியன!

ஜனவரி 24, 2024

மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லைசூசைப்பிரகாஷம், ஆதிசிவன், மற்றும் போக்சோவில் கைது, சிறை முதலியன!

மாஷா டிரஸ்ட் ஆரம்பிக்கப் பட்டது: MASHA TRUST (தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட எண்.814/2005) – முதன்மையாக ஒரு சமூக சேவை அமைப்பு. இது ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் இயலாமைக்காக செயல்படுகிறது. இது 1996 ஆம் ஆண்டில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்த சில கருணையுள்ள இதயங்களால் நிறுவப்பட்டது. இது ஏழைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, அவர்களின் பிரச்சனைகளை முதலில் உணரவும், அடையாளம் காணவும் செய்கிறது. MASHA இன் இறுதி இலக்கு அவர்கள் தங்களுக்கு உதவ உதவுவதாகும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை அடையாளம் காண கற்றுக்கொண்டவுடன், அதைத் தீர்க்க MASHA அவர்களுக்கு உதவுகிறது. கூட்டு முயற்சிதான் தீர்வு. மாஷா அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறார்கள். இது அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை மாசுபடாமல் வைத்திருப்பது ஆகியவற்றை கற்பிக்கிறது.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

காப்பகம் இல்லம் ஆரம்பிக்கப் பட்ட நோக்கம்: ஆதரவற்ற குழந்தைகள், வெறிச்சோடிய அபல பெண்கள், புறக்கணிக்கப்பட்ட வயதான மூத்த குடிமக்கள் தங்குமிடம் மற்றும் அன்பு, பாசம், அக்கறை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வழிதவறிச் சென்று சமூகவிரோத சக்திகளின் கைகளில் இரையாகக்கூடிய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அது அவர்களை சமூக ரீதியாக பயனுள்ள மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்குகிறது. பலருக்கும் மனவலியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம் என்று ஒரு ஊடகம் பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா அறக்கட்டளையானது நியோமி அன்பு இல்லத்தை நடத்திவருகிறது[1]. 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்[2]. அங்கு ஆதரவற்ற நிலையிலுள்ள 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

சூசைப்பிரகாஷம் காப்பகத்தை ஏன் துவக்கினேன் என்று விளக்கினார்: இப்படி ஒரு இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் தனக்குள் உருவானதன் பின்னணியைச் சொல்கிறார் அதனை நிர்வகித்துவரும் சூசைப்பிரகாசம்[3]. “இந்தியாவில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிவருபவர்களாக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியானது நம் தேசத்தில் பரவலாக உள்ளது. அதனாலேயே, சிறுமிகளுக்காக இப்படி ஒரு இல்லத்தைத் தொடங்கினேன்.” என்கிறார்[4]. அப்படித்தான், பற்பல அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கூநோக்கு இல்லங்கள் என்றெல்லாம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன, படுகின்றன. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்கள் அதிகமாகவே இவற்றை ஆரம்பித்து நடத்துகின்றன. அவை தான் பெரும்பாலான இத்தகைய பாலியல் குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளன. செய்திகளில், ஊடகங்களிலியே நூற்றுக் கணக்கான விவகாரங்கள், கைதுகள், வழக்குகள் என்றெல்லாம் வந்துள்ளன.

ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தது…

ஆதிசிவன் பாலியல் வன்ம குற்றத்தில் கைது மற்றும் சிறை: இந்நிலையில், காப்பகத்தின் அறங்காவலரான கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன், அங்குள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்[5]. இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் காவல் சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்[6]. இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆதிசிவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்[7]. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ எனச் சொல்வதுபோல, நியோமி அன்பு இல்லத்தில், ஏடாகூடமாக என்னென்னவோ நடந்து தொலைத்திருக்கிறது. அதனால்தான், அந்த இல்லத்தின் இன்னொரு நிர்வாகியான ஆதிசிவன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான கிரேஸ் ஷோபியாபாய்[8].  

ஆதிசிவன் கைதான பின்னணி இது: ஆதிசிவன் அவ்வில்லத்தில் படித்துவரும் சிறுமிகள் நால்வரிடம் அத்துமீறி நடந்துகொண்டது, மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரை புகாரானது. உடனே, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், நியோமி அன்பு இல்லத்துக்கே வந்து மாணவிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும், இல்லத்தின் அலுவலகத்தில் வைத்து ஆதிசிவன் தங்களை எவ்வாறு தொந்தரவு செய்தார் என்பதையும்,  வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதையும் அழுதபடி கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்முகம் அளித்த புகாரை விசாரித்து, ஆதிசிவனைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நியோமி அன்பு இல்லத்தின் நிர்வாகி சூசைப்பிரகாசத்திடம் நடந்த அத்துமீறல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த 4 மாணவிகளும் மதுரை – முத்துப்பட்டியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.  

ஆதிசிவனா……..

சூஷைப்பிரகாசமும், ஆதிசிவனும்: சமயநல்லூர் வட்டாரத்தில்  “34 குழந்தைகளின் அப்பா என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சூசைப்பிரகாசம், மற்ற காப்பகங்களிலிலிருந்து இருந்து இது வேறுபட்டது என்பார். எப்படியென்றால், வெளிநாட்டு நிதி உதவியை நம்பாமல், தன் சொந்த முயற்சியால் நடத்தப்படும் இல்லம் எனச் சொல்வார். அன்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்று அப்போது அவர் கூறியதென்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஆதிசிவனால் அங்கு நடந்த செயல் கொடூரமானதாக அல்லவா இருக்கிறது?,” என்கிறார்கள் ஆதங்கத்துடன். அனாதை சிறுமிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில், காப்பக சுவர்களைத் தாண்டி தங்களின் அத்துமீறல் வெளியில் வராது என்ற நினைப்பில், ஒருசிலர் வெறிகொண்ட மனித மிருகங்களாக நடந்துகொள்வது கொடுமையானது! அத்தகையோருக்கு, ‘தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்சத்தை,  இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று நம்புவது மட்டுமே தற்காலிக ஆறுதலாக உள்ளது.

குறிப்பு: இது 2019ல் நடந்த விவகாரம் ஆகும். பொதுவாக, செய்தித் தாள்களைப் படித்து, விவரங்களை சேகரித்து, சரிபார்த்து, எழுதி, ஆதாரங்களைத் தொகுத்து, தேவையான செய்தித்தாள் கட்டிங்ஸ், புகைப் படைங்கள் முதலியவற்றை சேர்த்து, பிளாக் போட சுமார் 3 முதல் 5 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் குறிப்பிட்டல் நாளில், வாரத்தில் அதிகமான முக்கியமான செய்திகள் வரும் பொழுது அவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட, ஏன் தயாராக இருக்கும் கட்டுரையைக் கூட இணைதளத்தில் ஏற்ற முடியாமல் போகிறது. ஏன் சில நாட்கள் ஆனால் மறந்தும் போகிறது. இதனால், திடீரென்று, இணை தளத்தில் எதையோ தேடும் பொழுது, சில செய்திகள் காணப்படுகின்றன. அடடா, இது தெரிந்த விசயமாயிற்றே, நாம் கூட பிளாக் போட்டிருக்கிறோமே என்ற எண்ணம் வரும். ஆனால், தேடிப் பார்த்தால் கிடைக்காது, இருக்காது பிறகு, நாம் போடவில்லை என்பது தெரிய வரும். அவ்வாறு கிடைத்தது தான் இது. நடந்தது 2019 இப்பொழுது 2024, ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் ஆணப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது இன்று பதிவு செய்யப் படுகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2024

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்- கட்டிடம்.


[1]  MASHA TRUST (Tamilnadu Govt. approved No.814/2005) – is primarily a social service organization. It works for the upliftment, progress and enabling of the poor, downtrodden people. https://www.maduraidirectory.com/masha.php

[2] நக்கீரன், ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில்! –அனாதை சிறுமிகளிடம் அத்துமீறல்!, அதிதேஜா, Published on 13/08/2019 | Edited on 13/08/2019, wa

[3] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/under-guise-supporting-orphaned-little-girls

[4] தமிழ்.நியூஸ்.18, ஆதரவற்றோர் காப்பகத்தில் 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நிர்வாகி கைது!, LAST UPDATED : AUGUST 13, 2019, 8:54 PM IST.

[5] https://tamil.news18.com/news/tamil-nadu/orphanage-administrator-arrested-for-raped-girl-children-skd-192979.html

[6] ஜெயா.பிளஸ், காப்பக உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுமதுரை, Aug 13, 2019

[7] https://www.youtube.com/watch?v=HFMC8fUabkQ

[8] மதுரை மாவட்டம் சமூக ஊடகம், Maduraidistrictsocialmedia, 13 ஆகஸ்ட், 2019 ; https://www.facebook.com/photo/?fbid=2793452697350139&set=pb.100068849632048.-2207520000

போர்வைக்குள் ஜெபம், ஆடை கழட்டச் சொன்ன பாதிரி, பேய் ஓட்டுகிறேன் என்று உடலுறவு கொண்ட விவகாரம்!

ஒக்ரோபர் 15, 2023

போர்வைக்குள் ஜெபம், ஆடை கழட்டச் சொன்ன பாதிரி, பேய் ஓட்டுகிறேன் என்று உடலுறவு கொண்ட விவகாரம்!

கிருத்துவர்களின் செக்௶ குற்றங்கள் தொடர்வதேன்?: தமிழகத்தில் அடிக்கடி கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் வக்கிரங்கள், பாலியல் சதாய்ப்புகள், கற்பழிப்புகள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், பெண்ணுரிமை என்றெல்லாம் கூவும் எந்த மங்கையும், பெண்ணும், நாரீமணியும் இவற்றைப் பற்றி கவலைப் பட்டதாகவோ, மாநாடு நடத்தியதாகவோத் தெரியவில்லை. சமீபத்தில் கிறிஸ்தவ கல்லூரிகள் உலக அமைதி மாநாடுகள் என்றெல்லாம் நடத்தின. ஆனால், இத்தகைய செக்ஸ் குற்றங்கள் சர்ச்சுகளில் நடைபெறுவதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள். வருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல், ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்ட விவகாரங்களும் நடந்து வருகின்றன. ஆனால், அவ்ர்களைத் திருத்த சர்ச் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

சென்னை ஆசிரியை தூத்துக்குடி பாதிரியிடம் மாட்டிக் கொண்டது: சென்னை ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து ரூ.5 லட்சத்தை அபகரித்த தூத்துக்குடி தியான மைய ஊழியர் மீதும், இதுபற்றி புகார் செய்தபோது தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீதும் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[1], என்று இப்பொழுது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட ஸ்டீபன் என்பவரது மகள் கேத்தரின் (32). இவர், திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்[2]. இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. கேத்தரினுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்[3]. இதனால் மன அழுத்ததில் இருந்த கேத்தரின், சொந்த ஊரான தூத்துக்குடி வந்துள்ளார்[4]. இங்கு மன ஆறுதலுக்காக தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தியான இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார்.

தியான இல்ல பாதிரி மூலம் அறிமுகமான ஜோஸ்வா: அப்போது தியான இல்ல பாதிரியார் மைக்கேல் என்கிற மகிழன் (62) மூலம் மைய உதவியாளர் ஜோஸ்வா (எ) இசக்கி அறிமுகமாகி உள்ளார். கேத்தரினுக்கு ஆறுதல் கூறி வந்த ஜோஸ்வா, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி கேத்தரினிடம் இருந்து ரூ.5 லட்சத்தையும் ஜோஸ்வா பெற்றுள்ளார். இந்நிலையில் கேத்தரினை ஜோஸ்வா திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து போதகர் மகிழனிடம் கூறியபோது அவரும் கேத்தரினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு வர்ணனையுடன் செய்திகள் வெலியிடப் பட்டுள்ளன. அதே நேரத்தில் இன்னொரு வர்ணனையுடனும் செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன.

பெண்மணிக்கு பேய் பிடித்திருக்கிறது: அதன் படி, அந்த பெண் வந்தபோது, ஜோஸ்வா, “உங்கள் உடலில் பயங்கர பேய் ஒன்று குடிவந்துள்ளது. இந்த பேயை விரட்ட நாம் ஒன்றாக ஜெபம் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்[5]. இதனால் பயந்துபோன அப்பெண்ணும், ஜோஸ்வா உடன் ஜெபம் செய்ய தொடங்கினார்[6]. சில நாட்கள் கழித்ததும், அந்தப் பேய் உங்கள் உடலை விட்டு போக மாட்டேன் என அடம்பிடிக்கிறது. அதனால் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்த பேய் சென்றுவிடும் என கூறியுள்ளார். இந்நிலையில், நேரில் சென்ற ஆசிரியரிடம் பேசிய பாதிரியார் “உங்க உடம்பில் பயங்கர பேய் ஒன்று இருக்கிறது.. அந்த பேய் உங்கள் உடம்பைவிட்டு போகாது.. அதை விரட்டவேண்டுமானால், என்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்,” என்று கூறியுள்ளார்[7]. இதை நம்பி, அந்த பெண் ஒப்புக் கொண்டு உடலுறவு வைத்துக் கொண்டாள்[8]. அதன்படி, ஆடையைக் கழட்டச் சொல்லி, போர்வைக்குள் ஜெபம் செய்தானாம்[9].  அப்பொழுது பேய் வெளி வந்ததா, இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. எக்ஸார்ஸிஸ்ட் போன்ற புதிய படத்தையே எடுத்து விடலாம் போலிருக்கிறது.

போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள்: போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள் எல்லாம் பாஸ்டர்கள் / பாதிரிகள் எப்படி கையாளுகிறார்கள், எந்த செமினரியில் இதெற்கெல்லாம் பயிற்சி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த பாஸ்டர். பிறகு, உடலுறவிலும் ஈடுபட்டிருக்கிறான். இதைப் பற்றிய வீடியோ செய்திகள் வேறு வெளியிடப் பட்டுள்ளது[10]. ஆனால், பேய் போகவில்லை என்று சொல்லி, அந்த ஆசிரியரும் அவரை நம்பி பலமுறை உறவில் இருந்துள்ளனர்[11]. அடம் பிடிக்கும் பேய் என்று ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ள்து நோக்கத்தக்கது[12].பேய் ஓட்டுவதாக கூறி நடுத்தர வயது பெண்ணை ஏமாற்றி அவரிடம் காமக்களியாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியாரை தூத்துக்குடி போலீஸார் தேடி வருகின்றனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை தேடுவதை விட்டுவிட்டு, கடவுளின் தூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளை தேடி சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு இந்தப் பெண்ணின் கதையே சிறந்த உதாரணம்.

பாதிரியின் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது: பாதிரி தன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன், மகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து பணத்தையும் பறித்துள்ளான். அதனால், திருமணம் செய்து கொள் என்று வற்புருத்திய போது, அதே போல் வரும் பெண்களை தன்னிடம் சிக்க வைக்க உதவ வேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறான். இதனால் கொதித்துப் போன அப்பெண்  ஒடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறாள். மறுத்ததால், போலீசிடம் புகார் கொடுத்தாள். இதையடுத்து தன்னை ஏமாற்றிய ஜோஸ்வா மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த போதகர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேத்தரின் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் இளம்பெண் கேத்தரினை ஏமாற்றி, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததாக, தியான மைய ஊழியர் ஜோஸ்வா மற்றும் பாதிரியார் மகிழன் மீது 294 (பி), 420, 417, 506 (1) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

15-10-2023


[1] தினகரன், தூத்துக்குடி அருகே தியானத்திற்கு வந்த சென்னை ஆசிரியையுடன் உல்லாசம் தியான மைய ஊழியர் மீது வழக்கு: தவறாக நடக்க முயன்றதாக பாதிரியார் மீதும் புகார், October 15, 2023, 12:17 am

[2] https://www.dinakaran.com/thoothukudi_teacher_ullasam_meditationcenter_employee_case/

[3] ஐபிசி.தமிழ்நாடு, ஜெபத்திற்கு வந்த ஆசிரியை; பேய் விரட்ட பாதிரியார் செய்த காரியம்போலீசார் வழக்கு பதிவு!, By Jiyath, , October 15, 2023, 12:00 am

[4]  https://ibctamilnadu.com/article/the-priest-sexually-assaulted-teacher-thoothukudi-1697347578

[5] சமயம், பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணிடம் காமக்களியாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார்.. அலறும் தூத்துக்குடி, Authored By ஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | Updated: 14 Oct 2023, 12:09 am.

[6] https://tamil.samayam.com/latest-news/crime/christian-priest-in-thoothukudi-sexually-abuses-a-woman-in-the-pretext-of-exorcism/articleshow/104408323.cms

[7] ஐபிசி.தமிழ்நாடு, என்னுடன் பாலியல் உறவு வைத்தால் பேய் போய்விடும்.. பாதிரியாரை நம்பி மொத்தமாக இழந்த ஆசிரியர்!, வினோதினி , October 15, 2023, 12:00 am

[8] https://ibctamilnadu.com/article/church-pastor-harrased-and-faked-a-teacher-1697349355

[9] தினத்தந்தி, பெண்ணின் உடலில் குடியிருந்த பேய்ஆடையை கழட்ட சொன்ன பாதிரியார்போர்வைக்குள் ஜெபம்.. அதிர்ச்சி வீடியோ, By தந்தி டிவி 13 அக்டோபர் 2023 10:28 PM.

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/ed-officials-raid-government-sand-quarry-in-cuddalore-219511?infinitescroll=1

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தூத்துக்குடியே திணறுது.. ஓவர் நெருக்கம்.. டீச்சர் உடம்பை விட்டு போக மறுத்து அடம் பிடிக்கும்பேய்“,  By Hemavandhana Updated: Sunday, October 15, 2023, 10:49 [IST].

[12] https://tamil.oneindia.com/news/tuticorin/thoothukudi-priest-and-why-did-the-school-teacher-complaint-against-the-church-pastor-548165.html

செக்யூலரிஸ, திராவிடத்துவ, பெரியாரிஸ அரசு கிறிஸ்தவ ஆதரவாகப் பேசிவரும் நிலையில், கிறிஸ்தவ பாதிரிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களை செய்து வருவது ஏன்?

ஒக்ரோபர் 2, 2023

செக்யூலரிஸ, திராவிடத்துவ, பெரியாரிஸ அரசு கிறிஸ்தவ ஆதரவாகப் பேசி வரும் நிலையில், கிறிஸ்தவ பாதிரிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களை செய்து வருவது ஏன்?

கிறிஸ்தவ சர்ச்சுகள் பெருகுவது, பெருக்குவது அவர்களது பலத்தை அல்லது பலவீனத்தைக் காட்டுகிறதா?: திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதிகளில் சர்ச்சுகள், சர்ச்சுகளில் பாலியல் விவகாரங்கள், செக்ச் வக்கிரங்கள், பிடோபைல் குற்றங்கள் என்று வகைவகையாக சட்டமீறல்கள் செய்திகளாக வருவது சகஜமாகி விட்டது. இதற்கு சர்ச்சுகளோ, கிறிஸ்தவ உயர் தலைவர்கள், முதலியோரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும், இத்தகைய செக்ஸ் வக்கிரங்களைத் தடுக்க வேண்டும் என்ற அமைப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேன்மேலும் அத்தகைய குற்றங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன்,39 வயதானவர்[1]. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். குமரி மாவட்டம் தச்சநல்லுாரில், அருணாச்சலம் என்பவரது இடத்தில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார், போதகம் நடத்தி வருகிறார்[2]. இவ்வாறு ஆளுக்கு ஆள் ஏதோ சர்ச்சை ஆரம்பித்து, தங்களது வேலைகளை செய்யலாம், எந்த கட்டுப்பாடும் இல்லையா போன்ற விவகாரங்களும் புரிவதில்லை.

குறிப்பிட்ட விதவை பெண்ணை தொல்லைக்கு உண்டாக்கியது: இருப்பினும், ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஆட்கள் வருவது, அல்லேலுயா என்று கத்துவது, போன்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தனியாக தொலைவில், ஒரு இடத்தில் நடக்கும் பட்சத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. சுற்றிலும் வீடுகள் இருந்து, மற்றர்களுக்கு தொந்தரவு ஆகும் பட்சத்தில் புகார் கொடுக்கப் படுகிறது. இங்கு, வழிபாட்டிற்கு வந்த, 39 வயது / 40 வயது பெண் வந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்பொழுது, அப்பெண்ணின் தொடர்புக்கு என்று மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார்[4]. முதலில் சாதாரணமாக பேசி வந்தாராம். அப்பெண்ணும் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற பெண்களை விடுத்து, இந்த பெண்ணை ஏன் குறி வைத்தார் என்பதெல்லாம் கடவுளுக்கும், பாதிரியாருக்கும் தான் தெரியும் போலிருக்கிறது. கடவுளை நம்பும் இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா, எப்படி பெண்களை இவ்வாறு கொடுமைப் படுத்துகின்றனர் என்பதும் புரியவில்லை.

பாதிரி பாலியல் தொல்லை கொடுத்த விதம்: பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்[5]. அதாவது விதவைகளுக்கு அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பதை சர்ச் ஏற்கிறதா என்பதையும் ஆராய வேண்டியுளளது. “சொசைடி ஆப் ஜீசஸ்” போன்ற பாதிரிகளுக்கு விதவைகளை குறி வைக்க வேண்டும் என்று குறிப்புகள் இருப்பதாக எடுத்துக் காட்டப் படுகிறது. நாளுக்கு நாள் இந்த டார்ச்சர் அதிகமாகிய போது, மனமுடைந்த வாழ்க்கையில் வெறுப்படைந்தாள்[6]. பெண், 30-09-2023 சனிக்கிழமை அன்று 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்[7]. இந்த அளவுக்கு நடந்திருக்கிறது எனும் பொழுது, அப்பாதிரி எப்படி பொறுப்பற்ற முறையில் இருந்துள்ளான் என்பதும் நோக்கத் தக்கது. வீட்டில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை, உறவினர்கள் மீட்டி, ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்[8]. ஆக, இங்கிருந்து தான் உண்மை வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆனால், முழு செய்திகள் வெளிவராதலால், அவை மறைக்கப் படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.

தேடப் பட்ட பாதிரி மாட்டிக் கொண்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும்: அந்த பாதிரியாரின் பாலியல் தொல்லைப் பற்றி, இது குறித்து தச்சநல்லூர் போலீஸாரிடம் புகார் கொடுக்கப் பட்டது[9]. முதலில் அந்த ஆள் காணவில்லை, போலீசார் தேடி வந்தனர், என்றெல்லாம் செய்திகள் வந்தன[10]. பிறகு, மாட்டிக் கொண்டான், கைது என்று செய்திகள் வெளியிடப் பட்டன[11]. விசாரணை நடத்திய பிறகு, பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் தற்கொலைக்குத் தூண்டியதாக, போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது செல்போன் பரிசோதனை செய்யப் பட்டது, தொந்தரவு செய்தது நிரூபனம் ஆனது, மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டு வந்தது, போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டது எல்லாம் புரிந்து கொள்ளலாம். அதே போல, இந்த பாதிரியாரை குறிப்பிட்ட சர்ச் தள்ளிவைத்ததா இல்லையா, இந்த ஆபாசத்திற்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது என்பதெல்லாம், கர்த்தர், மேரி, ஜோசப் அல்லது எந்த அப்போஸ்தலர் யார் என்று தெரியவில்லை.

செக்யூலரிஸ தமிழகமா, நாத்திக இந்துவிரோதமா, கிறிஸ்தவ ஆதரவா?: சமீபத்தில் வரை தொடர்ந்து தமிழக சபாநாயகர், முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், இந்து அறநிலைய அமைச்சர் உட்பட கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக அதே நேரத்தில் இந்துமதத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். அந்நிலையில், எப்படி கிறிஸ்தவர்கள் இத்தகைய குற்றங்களை செய்து வருகிறார்கள் என்று அவர்களால் விளக்கம் அளிக்க முடியுமா, விளக்கம் அளிப்பார்களா? செக்யூலரிஸம் எனும்பொழுது, அவர்களது நாத்திகம் இந்துவிரோதமாகத் தான் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது, இவ்வாறு மற்ற பல விவகாரங்களிலும் அதே போக்குக் காணப் படுகிறது. நாத்திகம், பெரியாரி\சம் பேசும் தமிழக அரசு, அப்படியே செக்யூலரிஸத்துடன் செயல்பட்டால், எல்லோருக்கும் நல்லது.

© வேதபிரகாஷ்

02-10-2023


[1] தமிழ்.கெட்.லோகலாப், நெல்லை: பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த பாதிரியார், By MEERAN, Oct 02, 2023, 11:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thirunelveli/nellai-city/the-priest-who-disturbed-the-woman-11620865

[3] தினமலர், பாலியல் தொல்லை: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: அக் 02,2023 07:31

[4] https://m.dinamalar.com/detail.php?id=3446649

[5] மாலைமலர், 40 துாக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்ற பெண்போனில் ஆபாச தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது புகார், அக்டோபர் 1, 2023, 4.35 PM

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-teachers-continue-protest-as-talks-with-minister-fail-669754?infinitescroll=1

[7] தமிழ்.இந்தியா.ஒன், தினமும் செல்போனில் அந்த மாதிரி பேசி டார்ச்சர்தூக்கமாத்திரையை போட்ட பெண்.. வசமாக சிக்கிய பாதிரியார், By Velmurugan P Updated: Monday, October 2, 2023, 13:17 [IST]

[8] https://tamil.oneindia.com/news/thirunelveli/harassing-woman-who-came-to-worship-by-talking-on-cell-phone-nellai-priest-arrested-544349.html

[9] தினத்தந்தி, பெண் தற்கொலை முயற்சி; மத போதகருக்கு வலை வீச்சு, அக்டோபர் 2, 2023, .02.53 PM

[10] https://www.dailythanthi.com/News/State/female-suicide-attempt-attack-on-the-religious-teacher-1064475

[11] சமயம், நெல்லையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடும் பெண்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 2 Oct 2023, 3:56 pm

[12] https://tamil.samayam.com/latest-news/tirunelveli/the-woman-attempted-suicide-due-to-the-priest-who-sexually-molested-her-in-nellai/articleshow/104106584.cms

லியோ ஸ்டான்லி பாலியல் விவகாரம் – போக்சோ சட்டம் – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அந்த உதவி பேராசிரியரை சஸ்பெண்ட் செய்தது!

செப்ரெம்பர் 10, 2023

லியோ ஸ்டான்லி பாலியல் விவகாரம் – போக்சோ சட்டம் – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அந்த உதவி பேராசிரியரை சஸ்பெண்ட் செய்தது!

செயின்ட் ஜோசப் கல்லூரி லியோ ஸ்டான்லி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது: திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபலமான தனியார் கல்லூரி – செயின்ட் ஜோசப் கல்லூரி – ஒன்று செயல்பட்டு வருகிறது. இச்செய்தியை சில ஊடகங்களே வெளிட்டன என்றாலும், கல்லூரி பெயரைக் குறிப்பிடாமல், தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது, அந்த ஊடகத்தின் பின்னணியும் காட்டுகிறது எனலாம். ஆனால், வெளியில் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். போக்சோ சட்டத்தைப் பொறுத்த வரையில், பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள் தான் வெளியிடக் கூடாது. ஆனால், குற்றம் சாட்டப் பட்ட, குற்றவாளிகளின் அடையாளங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக லியோ ஸ்டான்லி / லியோ ஸ்டான்டலி / லியோ ஸ்டாண்டலி என்பவர் ரசாயனவியல் துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது படிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், திறமைகள் என்று ஆறு பக்கங்களுக்கு விவரங்களைக் கொடுத்திருப்பதை, அக்கல்லூரி இணைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இருப்பினும்,  இவன் தான் இத்தகைய குற்றத்தை செய்திருக்கிறான்.

கிறிஸ்தவ ஊழியம் செய்தேன் என்று பெருமை பேசும் இவன் இத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது: கிறிஸ்தவ ஊழியம் செய்தேன், குழந்தைகளுடன் வேலை செய்தேன் என்றெல்லாம் பெருமைப் பீழ்த்திக் கொள்ளும் இந்த ஆள்[1] இத்தகைய பெண்டாளும் வேலைகளிலும் வல்லவன் என்பது போல பாலியலில் ஈடுபட்டுள்ளான். “இக்னேசிய கல்விமுறைகள் மூலம் எனது கற்பித்தலில் இக்னேசிய மதிப்பைக் கொண்டிருப்பதன் மூலம் இளம் மாணவர்களை மற்றவர்களுக்கு ஆண்களாகவும் பெண்களாகவும் உருவாக்குவதில் ஜேசுயிட்களின் பணியில் நான் பங்கேற்கிறேன்.”. ஒருவேளை “பீடோபைல்”  வகையறாவும் இருக்குமோ என்று தெரியவில்லை. கிறிஸ்தவ இறையியல் இவர்களுக்கு நல்ல ஒழுக்கம் முதலியவற்றைக் கொடுக்காமல், இவ்வாறு பாலியல் குற்றங்களை செய்ய எவ்வாறு ஊக்குவித்தது என்று தெரியவில்லை. இன்றைக்கு பெரும்பாலான கிறிஸ்தவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று பலர் அடிக்கை செக் குற்றங்களில் மாட்டிக் கொள்வது, செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பாலியல் விவகாரங்களால் புகார் எழுந்தது: இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் லியோ ஸ்டான்லி பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[2]. ஏதோ இன்னும் நிரூபிக்கப் படவில்லை போன்ற ரீதியில் காமதேனு செய்தி வெளியிட்டுள்ளது[3]. தாயும்-மகளும் எப்படி மாட்டிக் கொண்டனர் என்பதும் புதிராக உள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார்[4]. ஆக, இப்பிரச்சினை எத்தனை காலமாக இருந்தது என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது[5]. இது பிரச்சினை வெளியே வரக்கூடாது என்பதாலா அல்லது கிறிஸ்தவ நிறுவனம் தனது பாலியல் குற்ரங்களை மறைக்க போட்ட திட்டமா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.

மாணவி தற்கொலை முயற்சியால், விசாரணை நடந்தது, பாலியல் சதாய்ப்பு மெய்ப்பிக்கப் பட்டது: இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார்[6]. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி காப்பாற்றப்பட்டார்[7]ஆக, ஆஸ்பத்திரி ஆவணங்களில் சிகிச்சை, சிகிச்சை  விவரங்கள் முதலியனவும் பதிவாகி இருக்கும். அந்நிலைகளிலும் செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அதாவது, ஊடகஙளுக்குத் தெரியாமல் மறைத்தனரா அல்லது சரிகட்டினரா என்று தெரியவில்லை. சிவசங்கர் பாபா, கலாக்ஷேத்திரா போன்ற விசயங்கள், ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக தினம்-தினம் செய்திகள் வெளியிட்டு வந்தன. டிவிசெனல்களில் விவாதங்களையும் நடத்தின. ஆனால், இவ்விசயத்தில் ஒன்றும் தெரியாதது போல அமைதியாக இருந்த போலும். அக, இங்கு, மாணவி தற்கொலை முயற்சிக்குச் சென்று, ஆஸ்பத்திரியில் அனுமதி செய்யப் பட்டு, சிகிச்சை பெற்றதால், விவகாரம் வெளிவந்து விட்டது என்று தெரிகிறது.

தாய்மகள் என்று பாராமல், இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தது: இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டியினர் விசாரணை நடத்தினர்[8]. அப்படியென்றால் கமிட்டி உறுப்பினர்களும் தெரிந்திருக்கிறது. கல்லூரி கோப்புகளிலும் பதிவாகி இருக்கிறது. அப்போது, மாணவிக்கும், அவரது தாயாருக்கும், உதவி பேராசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்தது உண்மை என தெரியவந்தது[9]. இவையெல்லாம் எத்தனை மாதங்களாக நடந்தன என்பதையும் ஊடகங்கள் குறிப்பிடவில்லை. மேலும் அவன் மற்ற மாணவிகளிடமும் அவ்வாறு நடத்திருக்கிறான் என்று தெரிய வருகிறது[10]. ஆனால், அவ்விவகாரங்கள், விவரங்கள் தெரியவில்லை, கொடுக்கப் படவில்லை. இதையடுத்து உதவி பேராசிரியர் லியோ ஸ்டான்லியை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து[11]  பணியிட நீக்கம் செய்து கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது[12] என்று இப்பொழுது செய்தி வந்துளளது. சரி, அவன் ஏன் கைது செய்யப் படவில்லை என்றும் தெரியவில்லை. பாலியல் குற்றங்கள் கூட பாரபட்சமாகத்தான் போலீசாற், நீதிமன்றங்கள் முதலியவை கையாண்டு வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்லலாம். மேலும் சாதி ரீதியில் செல்லும் இப்பிரச்சினை விசிக மற்றும் பாமக கையில் எடுத்திருப்பதால், அரசியல் மயமாக்கப் படும் என்றும் தெரிகிறது.

இவ்விவகாரத்தில் ஊடகங்கள் அமைதியாக இருப்பது: இக்கல்லூரி பாலியல் குற்றங்களில் சிக்குவது சகஜமாகி விட்டது போலிருக்கிறது. 2011ல் கன்னியாஸ்திரி கற்பழிப்பு விவகாரம், பூதாகாரமாகி, பிஷப்பு, பாஸ்டர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டனர். ஆதிக்கம், அரசியல், தாக்கம் முதலியவை இருப்பதனால் பிரச்சினைகளை மறைத்து விடுகின்றனர் போலும். இவ்விசயத்தில் கூட, எல்லைகளை மீறி வெளிவ்ந்த நிலையில், சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. இருப்பினும், முதன்மை ஊடகங்கள் அமைதியாகவே இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

10-09-2023


[1] I take part the mission of the Jesuits in forming the young students as men and women for others by having Ignatian value in my teaching through Ignatian pedagogies. xhttps://www.sjctni.edu/Department/StaffProfile/F12CH90.pdf

[2] காமதேனு, திருச்சி : கல்லூரி மாணவி, தாயாருக்கு பாலியல் தொல்லைபேராசிரியர் சஸ்பெண்ட்!, Updated on : 09 Sep 2023, 5:31 pm

[3] https://kamadenu.hindutamil.in/news/college-student-sex-torture-professor-suspend

[4] இ.தமிழ்.நியூஸ், மாணவிக்கு பாலியல் தொல்லைதிருச்சி ஜோசப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்!, Senthil, September 9, 2023.

[5] https://etamilnews.com/sexsual-harrasement-trichy-professor-suspend/

[6] செய்திப்புனல், திருச்சி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்புகாரால் சிக்கிய அவலம், Kaviya, 09-09-2023 06:01:33 PM.

[7] https://www.seithipunal.com/tamilnadu/professer-arrested-for-harassment-case-in-trichy-sathiram

[8] தினமலர், மாணவிக்கு தொல்லை பேராசிரியர்சஸ்பெண்ட், Added : செப் 10, 2023  01:18.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=3427603

[10]  இதை, “தமிழக அரசியல்” என்ற வார சஞ்சிகை வெளியிட்டுள்ளது. 14-09-2023, பக்கம்.42-43.

[11] தினகரன், திருச்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்..!!, September 9, 2023, 11:49 am .

[12] https://www.dinakaran.com/trichy_student_sexualharassment_collegeprofessor_suspended/

வினோத் ஜோஸ்வா பாதிரி சிறுமியை வன்கொடுமை செய்து வந்திருக்கிறான், சில ஆண்டுகளுக்குப் பிறகு புகாரின் மீது கைதாகி இருக்கிறான்!

ஜூன் 21, 2023

வினோத் ஜோஸ்வா பாதிரி சிறுமியை வன்கொடுமை செய்து வந்திருக்கிறான், சில ஆண்டுகளுக்குப் பிறகு புகாரின் மீது கைதாகி இருக்கிறான்!

பெந்தகோஸ்தே சர்ச்சில் இன்னொரு செக்ஸ் விவகாரம்: மறுபடியும் இன்னொரு பாதிரி, கற்பழிப்பு, தொடர்ந்து வரும் செய்தி, இதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை என்றாகி விட்டது போலும். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ளது கீழக்கோட்டை கிராமம். இங்கு ஆசிர்வாத சகோதர சபை என்கிற பெயரில் பெந்தேகோஸ்தே தேவாலயம் செயல்பட்டு வருகிறது[1]. பெந்தகோஸ்தே செக்ஸ் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்து வருகிறது போலும். இப்படி ஆளுக்கு ஆள் ஒரு சர்ச்சைக் கட்டிக் கொண்டு, வருகின்ற பெண்களிடம் இவ்வாறு பாலியல் லீலைகளை செய்து வரருவது வாடிக்கையாகி விட்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் உள்ள வழக்குகளை வைத்து, ஆராய்ச்சி செய்தால், ஒருவேளை இவர்களது எண்ணிக்கை கத்தோலிக்க செக்ஸ் வழக்குகளை மிஞ்சி விடும் போலிருக்கிறது. “ரேப்” பாதிரிகள் ஜாலியாகத் தான் உள்ளனர். பிஷப்புகள் கூட எப்படியோ தப்பித்துக் கொள்கின்றனர்.

2018 முதல் ஜோஸ்வா பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்: இந்த தேவாலயத்தில் வேலூர் மாவட்டம்- எழில்நகர் பகுதியைச்  சேர்ந்த வினோத் ஜோஸ்வா (40) என்பவர் பாதிரியாராக இருந்து வந்தார்[2]. இங்கு கூட, இன்னும் “தேவாலயம்” மாதா கோவில், என்றெல்லாம் குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது, சர்ச் என்றே சொல்லி விடலாம். ஏனெனில், கிருத்துவர்களுக்கு மற்றவர்களுக்கு இப்பொழுதெல்லாம் எல்லா விவரங்களும் தெரிந்திருக்கின்றன. 40 வயதாகும் இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்[3]. ஏசு இதையெல்லாம் கண்டுகொள்லவில்லை போலும். “விடுதலை” போன்ற நாளிதழ்களும் அவ்வாறு தலைப்பிட்டு செய்திகள் வெலியிடவில்லை. ஏனெனில், அத்தகைய நாத்திக-இந்துவிரோதிகளுக்கு கிருத்துவர்-துலுக்கர் செய்யும் குற்றங்கள் கண்களுக்குத் தெரியாது, தெரிந்தாலும் கண்டு கொள்ல மாட்டார்கள்.

வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், பயந்துகொண்டு சிறுமி யாரிடமும் சொல்லவில்லை: அதே தேவாலயத்திற்கு அடிக்கடி பிரார்த்தனைக்கு செல்வது அப்பெண்ணின் வழக்கம்[4]. பிறகு, அப்பெண் எப்படி மாட்டிக் கொண்டாள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை இறையியல் சொல்லிக் கொடுக்கிறேன், ஏசுமகிமையைக் காட்டுகிறேன் என்று வசியம் செய்திருப்பான் போலிருக்கிறது. பாவம், சிறிய பெண் மாட்டிக் கொண்டு விட்டாள். மேலும், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை உடலுறவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது[5]. ஆக, விருப்பப் பட்டு உடலுறவு கொண்டாள் என்றெல்லாம் கூட கதை விடுவார்கள். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், பயந்துகொண்டு சிறுமி யாரிடமும் சொல்லவில்லை[6]. இதுவும் வழக்கம் போல, மற்ற கற்பழிப்புகளில் வருகின்ற விவகாரம் தான். அப்படியே சொல்லி வைத்தால் போல, செய்தி. தொடர்ந்து நடந்து வருகிறது எனும்பொழுது, எப்படி கொஞ்சம் கூட பெற்றோர், உற்றோர், மற்றவர்களுக்கு தெரியாமல் போனது என்பதும் விசித்திரமாக இருக்கிறது.

கல்யாணம் ஆன பிறகும் தொல்லை கொடுத்ததால் புகார் கொடுத்த பெண்: இந்த நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த அப்பெண்ணுக்கு கடந்தாண்டு திருமணமானது[7]. எப்பொழுது 18 வயது வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது போல இருக்கிறது. இப்படி இந்த ரத்தின சுருக்கமான செய்தி, பல விவரங்கள், விவகாரங்கள், உண்மைகளை மறைக்கின்றது என்பது நன்றாகவே தெரிகிறது. தொடர்ந்து நடக்கும் இத்தகைய குற்றங்களை போலீசார் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதோ கிருத்துவர்-மைனாரிடி சமாசாரம் என்று இருப்பதால் தான், இத்தகைய குறறங்கள் தொடர்ந்த நடக்கின்றன. அதிலும், கிருத்துவர்கள் தான் அவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 2022ல் திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது[8]. தற்போது, 2023ல் அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்[9]. ஆனாலும் விடாத பாதிரியார் வினோத் ஜோஸ்வா, அப்பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்[10]. ருசி கண்ட பூனை விடவில்லை போலும். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்[11].

ஓடிப் போன பாதிரியைத் தேடிப் பிடித்த போலீஸ்: அப்பாடா, இப்பொழுதாவது, தைரியம் வந்து புகார் கொடுத்திருக்கிறார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[12]. இதில் பாதிரியார் வினோத் ஜோஸ்வா, பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான பாதிரியாரை போலீஸார் தேடி வந்தனர்[13]. அதாவது, உடனே, பாதிரி ஓடிவிட்டான் போலும். இதுவும் வழக்கம் போல நடப்பது தான். பாவம், எத்தனை நாட்கள் தேடி வந்தனரோ தெரியவில்லை. ஒரு வேளை இவனைப் பிடிக்க நான்கு போலீஸ் படைகள் ஏற்படுத்தப் பட்டன என்றெல்லாம் செய்திகள் வரவில்லை போலும். இந்த சூழலில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வைத்து பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர்[14]. அதென்ன தொடர்ந்து, “நிலையம் முன்பு வைத்து” கைது செய்வது என்பதும் புரியவில்லை[15]. அதாவது, கோர்ட்டுக்குக் கூட்டிச் சென்று, உத்தரவுடன் செய்திருப்பர் போலும். பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்[16].

சிறையில் அடைக்கப் பட்ட வினோத் ஜோஸ்வா: இப்படியாக, வினோத் ஜோஸ்வா செக்ஸ் விவகாரம் முடிந்து, சிறையில் அடைக்கப் பட்டது. வழக்கம் போல, எல்லா நாளிதழ்களும், இணைதளங்களும் அப்படியே பிடிஐ பாணியில் இச்செய்தியை வெளியிட்டு அடங்கி விட்டன. நக்கீரன் போன்ற அதிரடி புலன் விசாரணைக் காரர்கள் கண்டுகொள்லளவில்லை போலும். தெரிந்திருந்தால், வீடியோ எல்லாம் எடுத்திருப்பர். சன் குழுமத்தில் தினம்-தினம் செய்தியாக போட்டிருப்பர். முன்பு நித்தியானந்தா விவகாரத்தை மிஞ்சும் வகையில் லெனின் வீடியோ எடுத்திருப்பார். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை.

© வேதபிரகாஷ்

21-06-2023


[1] தினமலர், சிறுமிக்கு தொந்தரவு: பாதிரியார் கைது, Added : ஜூன் 20, 2023  01:19

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3352561

[3] டிவி.பாரத், பாலியல் வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?, Published: 23 hours ago

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thoothukudi/a-priest-was-arrested-for-sexually-harassing-a-woman-at-keezhakottai-near-ottapidaram-thoothukudi/tamil-nadu20230619214847881881272

[5] பாலிமர் செய்தி, தேவாலயத்துக்கு வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ர்த பாதிரியார் போக்சோவில் கைது, ஜூன்.19, 2023, 03;18:30 மாலை

[6] https://www.polimernews.com/dnews/204478

[7] தமிழ்.சமயம், 15 வயதிலிருந்து பாலியல் தொல்லை.. விடாது துன்புறுத்திய பாதிரியார்.. தூத்துக்குடி பெண் பரபரப்பு புகார்!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 19 Jun 2023, 4:15 pm

[8] https://tamil.samayam.com/latest-news/thoothukudi/priest-arrested-for-sexually-harassing-woman-in-thoothukudi-has-created-a-stir/articleshow/101107092.cms

[9] காமதேனு, 5 வருடம் பாலியல் பலாத்காரம்; தொல்லை தாங்காமல் இளம்பெண் புகார்: சிக்கிய பாதிரியார், காமதேனு, Updated on : 19 Jun, 2023, 8:50 pm

[10] https://kamadenu.hindutamil.in/crime-corner/pastor-arrested-for-threatening-and-sexually-assaulting-a-young-girl

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஒரு பாதிரியார் செய்யுற வேலையா இது? கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.., Ramya s, First Published Jun 19, 2023, 6:46 PM IST, Last Updated Jun 19, 2023, 6:46 PM IST

https://tamil.asianetnews.com/crime/a-priest-gives-sexual-torcher-to-pregnant-woman-arresed-rwi4uv

[12] https://tamil.asianetnews.com/crime/a-priest-gives-sexual-torcher-to-pregnant-woman-arresed-rwi4uv

[13] தினகரன், இளம்பெண்ணை மிரட்டி 5 ஆண்டாக பலாத்காரம் பாதிரியார் கைது, June 20, 2023, 12:31 am

[14] https://www.dinakaran.com/teenager_bully_rape_priest_arrest/

[15] மீடியான், 14 வயது சிறுமியில் இருந்து தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் போக்ஸோவில் கைது!, Karthikeyan Mediyaan News, 9.10 மாலை

[16] https://mediyaan.com/priest-arrested-pocso-sexually-harassing-woman/

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டி-விரட்டி கைது-விசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ஜூன் 10, 2021

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டிவிரட்டி கைதுவிசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ராஜகோபாலனுக்கும், எபி. ஜார்ஜுக்கும் என்ன வித்தியாசம்?: “பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை,” என்று ஊடகங்கள் குறிப்பிட்டு செய்தியை முடித்துக் கொண்டுள்ளன. ராஜகோபாலனை கவனித்த விதத்தில், இங்கு எபி. ஜார்ஜ் கவனிக்கப் படவில்லை. தொலைக் காட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, விவாதங்கள் நடத்தவில்லை.  பாலியல் விவகாரத்தில், இப்பள்ளி ஆசிரியரின் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது[1]. ஆனால், அந்நிர்வாகம், அசைவதாகத் தெரியவில்லை. மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், இப்பள்ளி சார்பில் யாரும் ஆஜராக வில்லை[2]. கைதும் செய்யப் படவில்லை. இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

07-06-2021 அன்று செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை: முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஶ்ரீதர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (திங்கள் அன்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை[3]. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்[4].

சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜரானார்: மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது[5]. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், “பள்ளி நிர்வாகம் மற்றும் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளி நிர்வாகிகள், வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தனர்[6]. பள்ளியில் குற்றங்கள் நடந்ததற்கு என்னிடம் இருந்த ஏழு ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளேன். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில், ’பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளீர்கள்என கூறியுள்ளது. அதற்காக அவரின் சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய்யை பிடித்தம் செய்துள்ளது. இது குறித்து அவரின் பணிப்பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளேன்[7]. பள்ளியின் சார்பில், மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஜராக முடியவில்லை,” என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறது தினமலர்[8].. 

கமல் ஹஸன் தெரிவித்த கருத்து[9]: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாதரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்வை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது . தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் திகழ்ந்த நிகழும் பாலியல் துன்பறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விராரிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வது[11]: “இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தமகாநதிஇன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்வைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நமது பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும். இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலை நாட்ட வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[12].

ஜாதியம்மதம் என்று சொல்லி செக்யூலரிஸமாக்கப் படும் பாலியல் விவகாரங்கள்: ஊடகங்கள் இவற்றை செக்யூலரிஸமாக்க முயற்சிக்கின்றன, அதாவது, ஜாதியம், மதம் என்று இரண்டிலும் இணைத்து, அதன் மூலம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பப் பார்க்கின்றனர். சிக்கியுள்ள எல்லா பள்ளிகளும் சாதி அடிப்படையிலானது, அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளாகவே இருக்கிறது[13]. செயின்ட் ஜார்ஜ் போன்றவை மத அடிப்படையிலான பள்ளிகளாகவும், பிஎஸ்பிபி போன்ற பள்ளிகள் சாதி அடிப்படையிலானதாகவும் இருக்கிறது[14]. இன்று வரையில், இதனை, ஜாதி ரீதியில், குறிப்பாக “பிராமண எதிர்ப்பு” முறையில் கடுமையாக, சாடி விமர்சங்கள், சமூக மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 09-06-2021 அன்று “டைம்ஸ்.நௌ” தொலைக்காட்சி பேட்டியில், முதலில் பேசிய பெண்-வழக்கறிஞர் குறிப்பிட்ட பள்ளியை விமர்சித்தேப் பேசி முடித்தார். பிறகு சின்மயி,  “செக்யூலரிஸ” முறையில் விமர்சித்தாலு,ம், அரசியலாக்குவதைக் கண்டித்தார். வைரமுத்துவை பெயர் சொல்லியே தாக்கினார். அவர் எவ்வாறு  பெரிய ஆட்களால் காப்பாற்றப் பட்டு வருகிறார் என்று எடுத்துக் காட்டினார். இதனால், கடையாக பேசிய சுப்ரமணியன் சுவாமி எவ்வாறு லயோலா கல்லூரி ஏழு பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறது, கிருத்துவ சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்று கனிமொழியையம் குறிப்பிட்டு பேசினார். நேரியாளர் திடீரென்று பேட்டியை முடித்துக் கொண்டதிலிருந்து, மற்ற கருத்துகள், உண்மைகள் வெளி வர ஊடகங்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

10-06-2021


[1] பாலிமர் செய்தி, பள்ளியல் பாலியல் தொந்தரவு: 900 முன்னாள் மாணவர்கள் கூட்டாக புகார், மே.30, 2021 06:06:19:18 PM. https://www.polimernews.com/dnews/147236

[2] https://www.polimernews.com/dnews/147236

[3] தமிழ்.இந்து, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை, Published : 08 Jun 2021 03:13 am; Updated : 08 Jun 2021 06:35 am..

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/679722-st-george-school-teacher.html

[5] ஈநாடு.டிவி.செய்தி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான பாலியல் புகாரின் விசாரணை ஒத்திவைப்பு, Published on: Jun 7, 2021, 4:01 PM IST.

[6] தினமலர், பள்ளி நிர்வாகிகளுக்கு மீண்டும், ‘சம்மன், Added : ஜூன் 08, 2021  10:07

[7] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/scpcr-postponed-investigation-of-sexual-abuse-allegations-on-st-george-school/tamil-nadu20210607160138357?fbclid=IwAR0BeGRkB498q_4hAg7oXF4shfqhv48iyQImxbH0–kXSwE-KNU4wE0Gilc

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2780932

[9] ஏசியா.நெட்.நியூஸ், தப்பு செஞ்சவங்க எந்த ஜாதியாக இருந்தாலும் தண்டிக்கணும்இரண்டு பெண்களின் தகப்பனாக பொங்கி எழுந்த கமல்…!, Kanimozhi Pannerselvam, Chennai, First Published May 26, 2021, 3:08 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/makkal-needhi-maiam-leader-kamal-hassan-condemnation-to-psbb-sexual-harassment-complaint-qtpk4q

[11] மாலைமலர், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும்தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை, பதிவு: மே 27, 2021 10:05 IST.

[12] https://www.maalaimalar.com/news/district/2021/05/27100546/2675385/Tamil-News-Kamal-Haasan-request-to-TN-government-to.vpf

[13] ஏசியாவில், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் குழந்தை திருமணங்கள்நாம் மறந்து கடந்து செல்கிறோம்! நினைவில் கொள்ளுங்கள், By Abisha Bovas • 03/06/2021 at 11:03AM

[14] https://www.asiaville.in/article/women-and-child-against-issue-in-recent-time-detail-interview-with-shalin-maria-lawrence-71708

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,