Posts Tagged ‘சிறுபான்மையினர்’

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (2)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (2)

சொந்த பட்டா இடங்களில் தேவாலயம் கட்டிவிட்டு தடையின்மை சான்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்பது: சொந்த பட்டா இடங்களில் தேவாலயம் கட்டிவிட்டு அதன்பிறகு தடையின்மை சான்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கிறார்கள். அதுமுறையல்ல[1]. இடம் வாங்கிய உடன் தேவாலயம் கட்டுவதற்கு முன் அதற்கான தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சான்று பெறுவதில் சிக்கல் நீடித்தால் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுங்கள். அதன்பிறகு தீர்வு இல்லை என்றால் ஆணையத்தை அணுகலாம். இதுதொடர்பாக நிரந்தரமான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் உத்தரவு வரும்[2]. சரியில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு வழியையும் சொல்லிக் கொடுக்கிறார் மற்றும் விரைவில் உத்தரவு வரும் என்றும் சொல்வது கவனிக்கத் தக்கது. இதைத்தான், “திராவிடியன் மாடல்,” என்கிறாற் போலும். எஸ்ரா வழியில் நிலத்தை அபகரித்து, சர்ச் கட்டுங்கள், பீட்டர் அல்போன்ஸ் வழியில் சரிசெய்து விடுங்கள். பெரியாரிஸ-இந்துவிரோத முதலமைச்சர் உதவுவார் என்கிறார் போலும். 3000 வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் படப் போகின்றன என்றால், கோவில்கள் தான் இடிக்கப் பட்டு வருகின்றன. ஒரு மசூதி-சர்ச் என்று தொட்டால், அவர்கள் தடுக்கிறர்கள், அதிகாரிகளும் விட்டு விடுகிறார்கள். இதுதான் செக்யூலரிஸ சட்டமாக இருக்கிறது.

நிலம் பிரத்யேகமாக வாங்கி, அனுமதி பெற்று சர்ச்மசூதி கட்ட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “புதிய தேவாலயம், பள்ளிவாசல் கட்டுவதற்கு தடையின்மை சான்று கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தால் அது குறித்து அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு சமத்துவ கல்லறை தோட்டத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தனித்தனி கல்லறை தோட்டம் வேண்டும் என்றால் நிலத்தை வாங்கி தடையின்மை சான்று அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு கல்விக்கடன், பொருளாதார கடன், மகளிர் உதவும் சங்களுக்கான கடன் வழங்குவதை வேகப்படுத்தியுள்ளோம்”. “சமத்துவ கல்லறைத் தோட்டம்,” என்று நில அபகரிப்பு இனி ஆரம்பிக்கும். முன்னர், துலுக்கர், கோவில்கள், காட்டுகள் / படித்துறை, மடங்கள் போன்ற இடங்களில் பிணத்தைப் புதைத்து தான் ஆக்கிரமிப்பை ஆரம்பிப்பர். ஆக, அதே முறையை சொல்லிக் கொடுக்கிறார் போலும்.

தனிவீடுகளில் வழிபாடு, மைக் வைக்கக் கூடாது: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வழிபாடு நடத்த வேண்டும். மைக் வைத்துக்கொண்டு அதிகப்படியான சத்தத்துடன் வழிபாடு நடத்துவதை தவிர்க்க வேண்டும். மத பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். இது சமூக அமைதிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். தனி வீடுகளில் அமைதியாக வழிபாடு, ஜெபம், தொழுகை செய்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அந்த உரிமை அனைத்து மதத்தினருக்கும் உள்ளது. மைக் வைக்கக்கூடாது. வீட்டில் அமைதியாக 10, 15 பேர் ஜெபம் செய்தால் யாரும் தடுக்க முடியாது. கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களிடம் அளித்த மனுக்கள் தொடர்பாக வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தி முடிவு தெரிவிக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார். “தவிர்க்க வேண்டும்,” “தவிர்க்க வேண்டும்,” என்றுதான் கூறுகிறாரே தவிர, செய்யக் கூடாது, சட்டமீறல் என்று சொல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இத்தகைய கூட்டங்கள் மாமூலாக, சாதாரணமாகி விட்டது போலும். நவம்பர் 2021ல் நடந்த கூட்டத்திலும் இதே தான் பேசப் பட்டது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு நவம்பர் 2021 கூட்டம்: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 2021லும் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செயல்படாமல் இருந்த சிறுபான்மை நல ஆணையத்தை தூசிதட்டி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்[3]. கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட கிறிஸ்தவர்கள் தங்கள் ஆராதனை வழிபாடு நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மையின மக்கள் மிக பாதுகாக்க மிக கண்ணியத்தோடு வாழ கூடிய நிலை உள்ளது. ஜனநாயகத்தில் சிறுபான்மை என்பது ஒரு ஊனம்[4]. ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் உதவித்தொகை குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலையே நின்று விடுகிறது,” என்று கூறினார். பிறகு மற்ற 20க்கும் மேலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்ன நடக்கிறது? ஏதோ பேச வேண்டும் என்று பேசியது போலத்தானே இருக்கிறது.

நவம்பர் 2021 – புறம்போக்கு நிலங்களில் கட்டிய சர்ச்சுகளுக்கு அனுமதி கிடையாது: குறிப்பாக புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கு அனுமதி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும்போது[5], பலர் அரசு புறம்போக்கு இடத்தில் தேவாலயங்களை கட்டிவிட்டு அனுமதி கேட்பதாகவும், அது போன்ற இடங்களுக்கு யார் நினைத்தாலும் அனுமதி கொடுக்க முடியாது என்றும் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார்[6]. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர், சுமார் 18 லட்சம் மதிப்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. அத்தகைய சட்டமீறல் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு கட்டப் பட்ட சர்ச்சுகள் இடிக்கப் படும் என்று சொல்லவில்லை.

சமத்துவ கல்லறைத் தோட்டம்பல இடங்களில் கல்லறைகளில், மத வேறுபாடுகள் இருப்பதால், சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர்: அதனையடுத்து ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவு நீரை பெருக்கவில்லை என்று பெரிய போராட்டம் நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள். இதேபோல் தயவுசெய்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமரே அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டப்படாமல் இருக்கிறது. அதற்காகவும் அவர் ஒரு ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சமத்துவ கல்லறைத் தோட்டம்பல இடங்களில் கல்லறைகளில், மத வேறுபாடுகள் இருப்பதால், சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர்[7]. எனவே, சாதி மத வேறுபாடின்றி சமத்துவ கல்லறைகளை உருவாக்கித் தர முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.”. அப்படியென்றால் அது கிருத்துவப் பிரச்சினை ஆகிறது, அதற்கு எப்படி நாத்திக திமுக அரசு தலைவர் உதவுவார் என்று தெரியவில்லை. போப், கார்டினல், பிஷப் சொல்வதை எல்லாம் மதிக்காத கிருத்டுவர்கள் ஸ்டாலின் சொல்லிக் கேட்பார்களா? பிறகு, ஸ்டாலின் தான் கிருத்துவர்களின் தலைவரா? வழக்கம் போல ஜெயின், பௌத்த உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்று சொல்லப்படவில்லை.

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தினத்தந்தி, தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்தால் 1 மாதத்தில் முடிவை தெரிவிக்க வேண்டும், மார்ச் 30, 06:07 PM.

[2] https://www.dailythanthi.com/amp/News/Districts/2022/03/30180716/If-you-apply-for-proof-of-inviolability-you-will-be.vpf

[3]  பிறகு ரம்ஜான் கஞ்சிக்கு டன் – டன்னாக அரிசி எப்படி கிடைத்தது, ஹஜ்-ஜெருசலேம் மானியங்கள் எப்படி கிடைத்தன என்பனவெல்லாம் தெரியவில்லை.

[4]  ஆனால் நாட்டையே துண்டாடி, இன்றும் ஆட்டிப் படைத்து வருகின்றனர். தீவிரவாதம் தொடர்ந்து நடக்கிறது. பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றனர். இதையெல்லாம் ஏன் விவாதிக்க்ப் படவில்லை.

[5] இ.டிவி.பாரத், புறம்போக்கு நிலங்களில் தேவாலயங்கள் கட்ட அனுமதி கோர வேண்டாம்பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை!, Published on: Nov 10, 2021, 6:29 PM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/do-not-ask-permission-to-build-churches-on-poramboke-land-says-peter-alphonse/tamil-nadu20211110182918719

[7]  அது கிருத்துவ மதப் பிரச்சினையேயன்றி, பொதுப் பிரச்சினை அல்ல. இத்தனை மெத்தப் படித்த, அதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்கள் எல்லாம் இருந்தும் அப்படி நடக்கிறது என்றால், அது கிருத்துவத்தின் அடக்கு முறையே ஆகும்.

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

29-03-2022 அன்று நடந்த சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?

தனிப்பட்ட பிரார்த்தனை, வழிபாடுகளுக்கு பிரச்சினை இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ, சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளனர். அதே சமயம், சிறுபான்மையின மக்கள் ஆராதனை, வேண்டுதல் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எந்த அளவுக்கு சமூக அமைதி நிலவுகிறதோ, அந்த அளவுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சமூக அமைதியை சீர்குலைக்கவும், மக்களை மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.

29-03-2022 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், வங்கி கிளை வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். சிறுபான்மை இன மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டும் மேடை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துறந்துவிட்டு தான் செல்ல வேண்டும். முதல்வரின் எண்ணமும் அதுதான். மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.

 “அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையின மக்களுக்கு உரிமை இருப்பது போல், கடமைகளும் உள்ளன. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்; நாமும் அவர்களால் வாழ வேண்டும். பிற சமூக மக்களுக்கும் உதவிகளை செய்து, மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். ஜாதி, மதத்தை மறந்து, எல்லாரும் தமிழர்களாக ஒன்றிணைந்து, எழுந்து நிற்க வேண்டும்.அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி, அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது. கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின் கட்ட வேண்டும். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, மத பிரசாரம் செய்வது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தமிழ்.இந்து,  மத ரீதியாக மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர்பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு, டி.ஜி.ரகுபதி, Published : 29 Mar 2022 22:04 pm; Updated : 29 Mar 2022 22:04 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/782764-some-are-trying-to-divide-the-people-religiously-and-do-politics-accuses-peter-alphonse.html

[3] தினமலர், அரசு நிலத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாதுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் அறிவுரை,  Added : மார் 31, 2022  00:52.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2995988