Posts Tagged ‘இந்து தூஷணம்’

பாஜக-இந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன் – அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சமரசம் என்ன? (2)

திசெம்பர் 23, 2023

பாஜகஇந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சமரசம் என்ன? (2)

பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு நாங்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்கிறோம்: கேரள மாநில பா.ஜ.க சார்பில் `சினேக யாத்திரை’ என்ற பெயரில் கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் சர்ச்சுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து செல்லும் நிகழ்ச்சி 21-12-2023அன்று தொடங்கியது[1]. சீரோ மலபார் சபையின் செயின்ட் தாமஸ் மவுன்ட்டிலிருந்து இந்த யாத்திரையை பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தொடங்கினார்[2]. இது போன்று அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கிறிஸ்தவ மத தலைவர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். இது குறித்து கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேவாலயங்களுக்கும் சென்று சந்திக்கும் சினேக யாத்திரை என்ற மிகப்பெரிய கேம்பைன் தொடங்கிவிட்டது. பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு நாங்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனைத்து வீடுகளுக்கும் சொல்வது மட்டும்தான், இந்த சினேக யாத்திரையின் லட்சியம்.

2022ல் ஆரம்பித்த யாத்திரை 2023லும் தொடர்வது: சமுதாய சமத்துவம், சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்த யாத்திரை மேற்கொள்கிறோம். கடந்த ஆண்டும் சினேக யாத்திரை நடத்தினோம். ஆனால் எல்லா வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்ல முடியவில்லை. இந்த முறை அனைத்து வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்லவிருக்கிறோம். 21-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் சொல்ல உள்ளோம். காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் சொல்வதுபோல நாங்கள் இதில் எந்த அரசியலும் பார்க்கவில்லை. தேர்தலுக்காக இந்த யாத்திரையை நடத்தவில்லை. அரசியல் லாபம், நஷ்டம் குறித்த கணக்குகளை நாங்கள் பார்க்கவில்லை. எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல தான் இப்பேச்சு இருக்கிறது. ஏனெனில் கேரளாவில் சிபிஎம், காங்கிரஸ் முதல் கட்சிகள் எல்லாம் ஏமாந்த சோனகிரிகள் இல்லை. அவர்கள் நிச்சயமாக பிஜேபிக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். மேலும் சிபிஎம், காங்கிரஸ் எல்லாம் ஆட்சியில் இருந்து அதிகாரத்துடன் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அங்கு பிஜேபி இப்பொழுது தான் வளர்ந்து வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்சியை பிடிக்க முடியாது என்றாலும் அவர்கள் இத்தகைய முறைகளை எல்லாம் கையாண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயமே. ஆகையால் இது நிச்சயமாக அரசியல் தான், சர்ச்சுக்கும் பாஜக பரஸ்பர உறவுகள் என்பது மாநிலத்தில் அந்த அளவுக்கு இல்லாமல் இருந்தாலும், தேசிய அளவில் மற்றும் உலக ரீதியில் நிறைய சந்தர்ப்பங்கள், உரையாடல்கள் முதலியவை நடந்து வருகின்றன என்பதை மற்றவற்றிலிருந்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் கிறிஸ்துவர்கள் பிஜேபிக்கு சாதகமாக இருப்பார்களா?: மணிப்பூர் பிரச்சனையை மிசோரம் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய பிரசாரமாக முன்னெடுத்து சென்றது. ஆனால், காங்கிரஸுக்கு கடந்த முறை இருந்த சீட்டுகளும் பறிபோனது. கிறிஸ்தவ சமூகத்தை, பொய் பிரச்சாரம் மூலம் திசை திருப்ப முடியாது. 99 சதவிகித கிறிஸ்தவ மக்கள் உள்ள மிசோராமில் எங்களுக்கு இரண்டு மடங்கு சீட்டுகள் கிடைத்தன. ஓட்டும்  இரட்டிப்பாகி உள்ளது. காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. அவர்களின் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த சினேக யாத்திரை பயனுள்ளதாக இருக்கும். காங்கிரஸைவிட சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சதீசனை யாராவது நம்புவார்களா. சதீசன் அகங்காரமாக செயல்படுகிறார். இது அனைவரும் சேர்ந்த ஒரு நாடு. காங்கிரஸை விட நம்பிக்கையும் ஆதரவும் பா.ஜ.க-வுக்கு சிறுபான்மை சமூகம் மத்தியில் உள்ளது” என்றார்.

உலக அளவில் மோடி மற்றும் இந்தியாவின் முக்கியத்துவம் அமரச்த்துடன் தான் நடந்து வருகிறது: மோடி உலக அளவில் பிரபலம் பெற்று வருகிறார் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த தலைவராகவும் உருவாகி அறியப்பட்டு வருகிறார். அதே முறையில் இந்தியாவும் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்பதை எல்லாம் கவனிக்கும் பொழுது, நிச்சயமாக உலக அளவில் கிறிஸ்தவர்களின் ஆதரவு இல்லாமல் அவ்வாறு நடக்க முடியாது, என்பதையும் உலக அளவில் அறிந்து கொள்ளலாம். இதனால் தான் வடகிழக்கில் பொதுவாக கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் இடையில் பர்மா பிரச்சனை, மற்றும் வங்காள முஸ்லிம்களின் ஊடுருவல் பிரச்சினை இவையெல்லாம் சேர்ந்து வரும் நிலையில், அது இந்தியர்களுக்கு மட்டுமல்ல இது அதாவது இந்து மதத்தினருக்கு மட்டும் இல்லை, அது அங்கிருக்கும் பெரும்பான்மையான கிறிஸ்துவர்களையும் பாதிக்கப்பட்ட வருகிறது என்பது முக்கியமான விஷயமாகிறது.

மணிப்பூர் பிரச்சினையின் தீவிரம் மற்றும் தாக்கம் உலக அளவில் இருப்பதால், எதிர்கட்சிகளின் விமர்சனம் குறைந்து விட்டது: மணிப்பூர் பிரச்சினை மிகவும் தீவிரமான மற்றும் அதே நேரத்தில் எவரையும் பாதிக்க கூடிய மிகவும் மென்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாகவும் உள்ளது. அங்கு மத பிரச்சனை என்பதைவிட பல இடங்களில் எல்லைகளை மீறிய தீவிரவாத செயல்கள், தீவிரவாதிகளின் போக்குவரத்து, போதை மருந்து விநியோகம், வியாபாரம் முதலியவை நடந்து வருவதால், அச்செயல்களில் ஈடுபட்டு இருக்கின்ற எல்லா குழும்பங்களுமே மிகவும் ஜாக்கிரதையாக, உக்கிரமாக என்ன நிகழும் அல்லது என்ன நிகழக் கூடாது என்று கணக்குப் போட்டுக் கொண்டு செயல்பாடுகளை நடத்தி வருகின்றன. அதனால் தான், முரண்பட்ட செய்திகள் வருகின்றன, சம்பந்தப் பட்ட எல்லோருமே அடக்கி வாசிக்கின்றன. ஆகையால், அரசியல் கட்சிகளும், முன்பு ஏதோ பெரிய அளவில் கேள்விகள் கேட்டு கலாட்டா-ஆர்பாட்டம் செய்தாலும், விலைவுகளை அறிந்து மௌனமாகி விட்டன.

இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவது அரசியலா, அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா?: ஒரு பக்கம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதார இணைப்புகள், உறவுகள், பரஸ்பர ஏற்றுமதி இறக்குமதிகள் முதலிய எல்லாம் பேசப்படுகின்றன. பொருளாதார ரீதியில் உலக வங்கியின் கடன், அமெரிக்கா ஐரோப்பிய நாட்டு தொழிலதிபர்களின் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள், எல்லாமே மற்ற அயல்நாடுகளில் திடீரென்று இந்திய நாட்டு வம்சாவளியினரின் ஆதிக்கம் அரசியல் ரீதியிலும் வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. ஏனெனில் பொதுவாக முன்னரெல்லாம் இந்தியர்களுக்கு அத்தகைய உயர்ந்த பதவிகள் எல்லாம் கொடுக்கப்பட்டது இல்லை. இப்பொழுதும் இதில் குறிப்பாக அமெரிக்க பிரதி இங்கிலாந்து பிரஜை என்ற முறையில் தான் இவர்கள் அந்த பதவிகளை ஜனநாயக ரீதியில் பெற்றடைந்து உள்ளார்கள். முன்னால் எப்படி எவ்வாறு திடீரென்று இந்தியர்களுக்கு உலக அழகி பட்டங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு, ஊக்கிவிக்கப் பட்டார்களோ அதே போல இப்பொழுது இந்த விதமான அரசியல் மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்க-ஐயோப்பிய உறவுகளுக்கு காரணம் பொருளாதாரமா, மதமா?: இல்லை இத்தகைய மாற்றங்களை மதரீதியில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால், இதே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் இந்திய இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள் ஏற்படும் நிலை, இந்திய வம்சாவளியினருக்கு உயர்ப்பகுதியில் அழிக்கப்படும் போக்கு மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமான ஏற்படும் உறவுகள், இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது நிச்சயமாக கிறிஸ்துவ-இந்து உரையாடல்கள் பல நிலைகளில் ஏற்பட ஊக்குவிக்கப்படுகிறது என்பதனை புரிந்து கொள்ளலாம். எப்படி இருந்தாலும், ஒரு பக்கம் உலக அளவில் இஸ்லாமிய தீவிரவாதம், அதன் மூலமாக ஏற்படுகின்ற பொருளாதாரத் தாக்கம், குறிப்பாக எண்ணை வர்த்தகம் பாதிப்பு மூலம் எவ்வாறு உலகம் கஷ்டப்பட போகிறது என்ற கோணத்திலும் இப்பிரச்சனை அணுக வேண்டியுள்ளது. ஒருவேளை இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் இருப்பதாலும், அதனை சுற்றி உள்ள நாடுகளில் இஸ்லாம் மதம் தாக்கம் கொண்ட நாடுகள் சூழ்ந்திருப்பதினாலும், நிச்சயமாக மற்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஆனால் ஒருவேளை பொருளாதார ரீதியில் அரசியல் ரீதியில் உலக சமரசங்களுடன் இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்றும் சொல்லலாம்.

© வேதபிரகாஷ்

23-12-2023.


[1] விகடன், கேரளா `கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸைவிட பாஜக மீதுதான் அதிக நம்பிக்கை‘- சினேக யாத்திரை சென்ற பாஜகவினர், சிந்து ஆர், Published: 22-12-2023 at 7 AM; Updated: @2-12-2023 at 7 AM.

[2] https://www.vikatan.com/government-and-politics/bjp-relaunches-sneha-yatra-to-connect-with-christians-in-kerala

கலைவாணர் அரங்கத்தில் இந்து மத மாநாடு, தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார் – இப்படி தடாலடியாக கிருத்துவர் நடத்தும் நிகழ்ச்சி! (1)

ஒக்ரோபர் 22, 2022

கலைவாணர் அரங்கத்தில் இந்து மத மாநாடு, தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார்இப்படி தடாலடியாக கிருத்துவர் நடத்தும் நிகழ்ச்சி! (1)

கிருத்துவர் நடத்தும் இந்துமத மாநாடு: “இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[1]. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் தாக்கல் செய்துள்ள வழக்கில்[2], தனக்கு சம்பந்தமே இல்லாத விவகாரங்களைக் குறிப்பிட்டு வழக்கு போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது. இதுவரை, அவர் மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் கிருத்துவ பிஷப்புகள் கத்தோலிக்க நிறுவனங்கள் மற்ற இயக்கங்களின் செயல்பாடுகளை கவனித்தால், வேண்டுமென்றே பிரபலம் பெற வேண்டும், நீதிமன்றம் வைத்துக் கொண்டு விளம்பரம்  பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தொடரப் பட்ட வழக்கு என்பதனை தெரிந்து கொள்ளலாம். முன்பே இவ்வாறு பலமுறை பல இடங்களில் மாநாடு நடத்துகிறேன் என்று கலாட்டா செய்திருக்கிறார்[3].

மனுவில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது?: மனுவில் சொல்லப் பட்டுள்ளதாவது, “இந்து ராஷ்ட்ரா என்ற பெயரில் புதிய வரைவு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்து ஆர்எஸ்எஸ் திட்டமிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது[4]. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்வித பங்கையும் அளிக்காத ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்து மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கும் வகையிலும், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் வரைவு அரசியலமைப்பை உருவாக்கி இருக்கிறது[5]. மத சார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், யாரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடனும் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது[6]. இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்கபாலீஸ்வரர் கோவிலின் கல்வெட்டிலிருந்து இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்என்ற தலைப்பில் மாநாடு நடத்த அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார். கூட்டத்திற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே எனது மனுவை பரிசீலித்து, மாநாட்டிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தினசரி,” என்ற இணைதளம் அதை அப்படியே காப்பியடித்து செய்தியாகப் போட்டுள்ளது[7]. இந்த செய்தி ஏன், இதன் பின்னணி என்ன, போன்ற விசயங்களை ஆய்வதில்லை, படிப்பவர்களுக்குத் தெரிவிப்பது இல்லை. இணைதளத்தில் என்ன கிடைத்தாலும், காப்பியடித்து போட்டு விடவேண்டும் என்ற ஒருவிதமான வெறியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனை இந்துத்துவவாதிகளும் செய்து வருகிறார்கள்.

இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்என்ற தலைப்பில் மாநாடு: என்று அந்த தன்னை “ஆராய்ச்சியாளர்” என்று சொல்லிக் கொண்டு உலா வரும் அந்த நபர், அடிப்படைவாத கிருத்துவர், இந்துமத துவேசி மற்றும் ஓப்பீட்டு ஆராய்ச்சி போர்வைவில் அரைகுறை வேக்காட்டுகளை புத்தகங்களாக போட்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார், போன்றவை விவாதத்தில் இருந்து வருகின்றன. “கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர்” என்று பிரகடனப் படுத்திக் கொள்வதால், அவருக்கு – தெய்வநாயகம்- ஏதாவது லாபம் கிட்டுமே தவிர, அக்கல்லூரிக்கு இழுக்கு தான் ஏற்படும்[8]. ஒருவேளை அக்கல்லூரியே அத்தகைய, போலி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், அங்கிருந்து தான் “மோசஸ் மைக்கேல் பாரடே,” என்ற பெயரில், ஒருவர் “சித்தர் ஆராய்ச்சி” என்று புரட்டி வருகிறார். “அகத்தியர் ஞானம்” மோசடி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[9]. இப்படி இத்தகைய கிருத்துவர்கள், இந்து மதத்தை தெரிந்து கொள்வோம் என்று மாநாடு நடத்துகிறேன் என்று கிளம்பியுள்ளதை கவனிக்க வேண்டும்.

இந்துவிரோதிகள்இந்துத்துவவாதிகள் ஒத்துழைப்பது ஏன்?: அரசியல் காரணங்களுக்காக, இந்துத்துவவாதிகளும், கிருத்துவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்களோ என்று கூட சந்தேகிக்க வேண்டியுள்ளது[10]. முழு விவரங்களை புகைப்படங்களுடன் ஐந்து பாகங்களாக பதிவு செய்துள்ளேன்[11]. 2017ல் எல்லீஸர் விருது கொடுக்கும் விழா என்று, அவர்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்[12]. இதைப் பற்றிய முழு விவரங்களை புகைப்படங்களுடன் 17 பாகங்களாக பதிவு செய்துள்ளேன். கடந்த நவம்பர் 2021லும் இவர்களும் தெய்வநாயகத்திற்கு ஜால்றா அடித்ததும் திகைப்பாக இருக்கிறது. மதம் மாறிய கிருத்துவர் மற்றும் முஸிம் எஸ்.சி / பட்டியல் ஜாதியினருக்கும் இந்துக்களைப் போன்றே இடவொதிக்கீடு கொடுக்க கமிஷனை அரசு உண்டாக்கியுள்ளது. இந்துத்துவவாதிகள் அரசியலில் ஊறி விட்டதாலும், பலன்களை அனுபவிக்க ஆரம்பித்து விட்டதாலும், சித்தாந்தம் நீர்த்துப் போக ஆரம்பித்து விட்டது. இதை இந்துவிரோதிகள் நன்றாக அறிந்து கொண்டுள்ளார்கள். இதனால் தான் திருமாவளவன், சீமான் போன்றோரும், திக-திமுகவினரும் தொடந்து இந்துமதத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பல நேரங்களில் சேர்ந்தும் செயல்படுகிறார்கள். ஆனால், இந்து-இந்துத்துவம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தான் பிரிந்து கிடக்கிறார்கள். அதனால், மற்ற இந்துக்கள் இவர்கள் அனைவராலும் பாதிக்கப் படுகின்றனர்.

திராவிடத்துவம் நோக்கிச் செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது:  திராவிடம் நோக்கி செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கிருத்துவர்கள் மதங்களுக்கு இடையிலான உரையாடல், உள்-கலச்சாரமயமாக்கல், போன்ற திட்டங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு இவைப் பற்றி தெரியாமலேயே இருக்கின்றனர் (இதைப் பற்றியெல்லாம் நிறைய பதிவு செய்துள்ளேன்). இப்பொழுது பணம், பதவி, விருது போன்றவற்றிற்கு ஆசைப் பட்டு வேலை செய்யும் இந்துத்துவவாதிகளை “அரசியல் இந்துத்துவவாதிகள்” என்று அடையாளம் காண வேண்டியுள்ளது. நிச்சயமாக இவர்கள் அரசியல் ரீதியில் பல விசயங்களில் கொள்கைகளை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்கிறார்கள்(compromise, negotiate and / or  surrender), உடன்படிக்கை ஏற்பட்டால் சரண்டரும் ஆகி விடுகின்றனர். சில குறிப்பிட்ட மனிதர்களை ஊக்குவிக்கும் பொழுது, மற்றவர்கள் அவர்களுக்கு துணையாக விவரங்களை சேகரித்துக் கொடுக்க வேண்டும். அப்பொழுது, ஏஜென்டுகளாகவும் செயல்படுகின்றனர். இங்கும் இந்துத்துவா நீர்த்து விடுகிறது. போதாகுறைக்கு, சில இந்துக்கள் தெரிந்தும்-தெரியாமலும் இத்தகைய திட்டங்களுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவி வருகின்றனர். தெரிந்த சில இந்துக்களும் ஒன்றாக செயல்படாமல், தனித்தனியாக வேலை செய்கின்றனர். ஒருவேளை கிருத்துவர்களே அத்தகைய நிலை உருவாக, வேலைசெய்து, பிரிக்கிறார்கள் எனலாம். ஏனெனில், அவர்கள் பைபிளை குறைகூறுகிறேன், என்று விமர்சித்து, அடங்கி விடுகின்றனர். இதனால் தான் திராவிடத்துவம் நோக்கிச் செல்லும், இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. மறுபடியும் இன்னொரு அரசியல் நாடகம் அரங்கேறப் போகிறது. பாதிக்கப் படப் போவது அப்பாவி ஆனால் உண்மையான இந்துக்கள் தான்!

© வேதபிரகாஷ்

21-10-2022.


[1] தமிழ்.இந்து, இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாடு நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 20 Oct 2022 06:26 PM; Last Updated : 20 Oct 2022 06:26 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/885445-petition-filed-in-high-court-seeking-permission-to-knowing-hinduism-conference.html

[3]  இதுபோல, சில ஆண்டுகளுக்கு முன்னர், மயிலை மாங்கொல்லை என்ற இடத்தில் கூட்டம் போடுகிறேன் என்று கலாட்டா செய்தபோது, போலீஸ் இவருக்கு அனுமதி மறுத்து, சிவகாமிக்கு இடம் கொடுத்தனர்.

[4] தினசரி, இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாடு ந்டத்த உயர்நீதி மன்றத்தில் மனு, சக்தி பரமசிவம், 21-10-2022, 9.00 PM IST.

[5] https://dhinasari.com/latest-news/268333-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A.html

[6] இ.டிவி.பாரத், இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாட்டுக்கு அனுமதி வழங்க மனு..!, 21-10-2022, 6.00 PM IST.

[7]https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/petition-to-high-court-to-grant-permission-to-lets-know-hinduism-conference/tamil-nadu20221020223339612612234

[8]  இவர் லயோலா கல்லூரியில் வேலை செய்ததாகவும் உள்ளது, பிறகு அங்கு எப்படி, எந்த பதவியில் இருந்தார் என்று தெரிவிக்கப் படவில்லை.

[9] ஆச்சார்யா பாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், அருளப்பாவின், “”புனித தோமையார்” என்ற புத்தகம் “குட் பாஸ்டர் பிரஸ்”, சென்னை – 600 001 என்ற அச்சகத்தினரால் வெளியிடப்படுகிறது[8]. உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, “முதல் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு” என்று திருச்சியில் டிசம்பர் 28 முதல் 30 வரை 1981ல் நடத்தியது.  ஞானசிகாமணி “அகத்தியர் ஞானம் [விளக்கவுரை]” என்ற புத்தகத்தை அங்கு வெளியிடுகிறார். அதற்கு “பாராட்டுரை” எழுதியது, பொன்னு ஆ. சத்திய சாட்சி! ஞானசிகாமணி வேதாகம மாணவர் பதிப்பகம் என்று வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை முடிக்கி விட்டார். திடீரென்று பிராமண எதிர்ப்பும் வெளிப்படுகிறது. எஸ். இம்மானுவேல் நரசுராமன் எழுதியதாக, “ஒரு பிராமணன் கண்ட பரப்பிரம்மம்” என்ற பிரச்சாரப் பிரசுரம் (ஏப்ரல் 1983) இவரது அறிமுகத்துடன் வெளியிடப்படுகின்றது. தெய்நாயகமும் தீவிரமாக செயல்பட்டார். 1984ல் சென்னை பல்கலைக்கழகத்தில் “கிறிஸ்தவ படிப்பிற்காக” ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆரவாரமாக, தெரஸா அம்மையாரை வைத்தே திறந்து வைக்கப்பட்டது[10]. இதற்கும் அருளப்பா தான் நிதியுதவி அளித்தார். பிப்ரவரி 5, 1986ல் போப் ஜான் பால் II சென்னைக்கு விஜயம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அருளப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

[10]  வேதபிரகாஷ், கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1), பிப்ரவரி 19, 2009.

[11] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[12]  வேதபிரகாஷ், திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1),

2016 முதல் 2021 வரை அருமையாக நாடகம் போட்டு, சட்டப் படியில் இருந்து தப்பித்துக் கொண்ட, தூஷண பாதிரி மோகன் சி. லாசரஸ்!

பிப்ரவரி 6, 2021

2016 முதல் 2021 வரை அருமையாக நாடகம் போட்டு, சட்டப் படியில் இருந்து தப்பித்துக் கொண்ட, தூஷண பாதிரி மோகன் சி. லாசரஸ்!

Lazarus petion filed dismissed- The Hindu

‘இயேசு விடுவிக்கிறார்’ பாதிரி இந்து தூஷணத்தில் ஈடுபட்டது (2016): சென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த மதபோதனை கூட்டத்தில் பேசிய கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ், இந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ஹிந்து மத கோவில்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதாக, ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற அமைப்பின் நிறுவனரான மோகன் சி.லாசரஸுக்கு எதிராக, கோவை, சேலம், அரியலுார் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில், புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றில், சில புகார்களில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, மோகன் சி.லாசரஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன் சி.லாசரஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

Lazarus petion filed dismissed- The Dinamalar

உள்நோக்கம் இல்லை (2021): இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற உள் அரங்கு கூட்டத்தில், பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு மோகன் சி. லாசரஸ் பதில் அளித்துள்ளார். யார் மத உணர்வையும் புண்படுத்துவது அவரது நோக்கம் இல்லை. பொது கூட்டத்தில் அவர் பேசவில்லை. ஒத்த கருத்துடையோர் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குதான் அவர் பதில் அளித்துள்ளார்,” என்று வாதிட்டார். அதாவது, வக்கீல் மூலம், வக்காலது சமர்ப்பித்து வாதிட்டார். நேரில் ஆஜராகவில்லை.

Mohan Lazarus clarification-1


மோகன் சி லாசரஸ் வருத்தம் தெரிவித்தார்: இதையடுத்து நீதிபதி, மனுதாரர்தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் கூறியிருந்தார். மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திய வகையில், இடம் கொடுத்த சம்பவத்துக்காக நான் வருந்துகிறேன்[1].’ இத்தகைய எண்ணத்தை, ஹிந்துக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க, போதிய கவனம் செலுத்துகிறேன்’ என, கூறப்பட்டுள்ளது[2]. இதை ஏற்றுக்கொள்வதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

Mohan Lazarus clarification-2


இயேசுவின் கருத்து – நீதிபதியின் வியாக்கியானம், விளக்கம்: பல்வேறு மதங்களும், பன்முக கலாசாரமும் நமது நாட்டின் தனித்துவமாக உள்ளன. எனவே நாட்டின் இந்த பன்முகத் தன்மைக் கொண்ட மதம், கலாசார உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதேநேரம் ஒவ்வொரு மதபோதகர்களையும் ஏராளமானவர்கள் பின்தொடர்கின்றனர். அப்படியிருக்கும் போது, மதபோதகர்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். மத பிரசாரம் செய்பவர்களுக்கு, அதிக பொறுப்புணர்வு வேண்டும். மற்ற மதத்தினர் மீது விஷம் கக்குவது, மதத்தின் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு வார்த்தையையும் வெளிப்படுத்தும் போது, பொறுப்புணர்வு தேவை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது[3]. அந்த நம்பிக்கையால் ஏற்படும் உணர்வுகளுக்கு எதிராக விமர்சனம் வரும் போது, அதற்கான எதிர்வினையும் கடுமையாக வருகிறது. மத நம்பிக்கையில், பலர் கண்மூடித்தனமாக ஒன்றிப் போயுள்ளனர். மற்ற மதங்களுக்கு எதிராக, அவமரியாதையாக பேசுகின்றனர். அடுத்தவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக, விஷத்தை கக்குவது; அவர்களிடம் வெறுப்புணர்வை வளர்ப்பது, மதத்தின் நோக்கத்துக்கு எதிரானது[4].

 ஏசுநாதரே சொல்லியிருக்கிறார் என்று நீதிபதி விவரித்தது: குறிப்பாக மற்ற மதங்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தையும், கடவுளையும் தவறாக சித்தரித்து கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டியது இல்லை என இயேசு நாதரே கூறியிருக்கிறார்[5].  மனுதாரர் ஒன்றும் போட்டி வணிகம் நடத்தவில்லை. அதனால், மற்ற மதங்களை விட, தான் சார்ந்துள்ள மதம் உயர்ந்தது என, காட்டுவதற்காக, இப்படி பேச தேவையில்லை. ஒருவேளை மனுதாரர் அப்படி கருதினால், அவரது நன்மைக்கும், அவரைப் பின்பற்றுபவர்களின் நன்மைக்குமாக, திருந்திக் கொள்ள வேண்டும்[6]. மனுதாரர் மட்டுமல்லாமல், அவரை போன்றவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகுந்த பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்[7].  மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது அனைத்து குடிமக்களின் பொறுப்பு[8]. இதை பின்பற்றவில்லை என்றால், மதச்சார்பின்மைக்கு ஆபத்தாகி விடும். தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளர். எனவே, மனுதாரருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன,” இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


இந்துத்துவ வாதிக்கு நீதிபதி கண்டனம்[9]: “இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவை பார்த்தேன். இந்துமத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மாற்று மதத்தினரை குறித்து தெரிவித்த அவரது கருத்தை நீதிபதியாகிய நான் ஆதரிப்பது போல் அவர் பேசியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. என்ன தைரியம் இருந்தால் இதுபோன்ற கருத்துகளை நீதிபதியை தொடர்புபடுத்தி அவர் பேசியிருப்பார்’ என்று கண்டனம் தெரிவித்து பேசினார்[10]. சட்டத்தின் பிடியிலிருந்துத் தப்பித்துக் கொள்ளவே, இரண்டு அண்டுகளாக திட்டமிட்டு, செயல் பட்டு, சாதித்து இருப்பது தெரிகிறது[11]. 2019லேயே வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு அடித்தளம் போட்டு, அவரது வக்கீல்கள் சட்டத்தை சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்[12]. இந்துத்துவ வாதிகள் தான் மறுபடியும் முட்டாள்கள் ஆகியுள்ளனர். வழக்குப் போட்டவர்கள் நிச்சயமாக இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். ஏனெனில், இதையே முன்னுதாரணமாகக் கொண்டு, எஸ்ரா சற்குணம் போன்ற விசமிகள் தப்பித்துக் கொள்வர்.

© வேதபிரகாஷ்

06-02-2021


[1] புதியதலைமுறை, இந்துமதம் குறித்த கருத்து : நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் மோகன் சி லாசரஸ், Web Team, Published :05,Feb 2021 09:52 PM

[2] http://www.puthiyathalaimurai.com/newsview/92838/Mohan-C-Lazarus-regretted-for-his-speech

[3] தினமணி, மதபோதகா்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம், By DIN | Published on : 06th February 2021 05:16 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/feb/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3557763.html

[5] தினமலர், மற்ற மதத்தினர் மீது விஷம் கக்குவது கூடாது!: மோகன் சி.லாசரஸுக்கு ஐகோர்ட் குட்டு, Updated : பிப் 06, 2021 00:34 | Added : பிப் 05, 2021 23:03.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2703437

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நாட்டின் கலாச்சார பாதுகாப்புஒவ்வொருவரின் கடமைசென்னை ஐகோர்ட் அறிவுரை, By Sivam | Updated: Friday, February 5, 2021, 21:56 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-highcourt-adviced-that-cultural-protection-of-the-country-is-everyone-s-duty-411141.html

[9] தினத்தந்தி, இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து, பதிவு: பிப்ரவரி 06, 2021 00:13 AM

[10] https://www.dailythanthi.com/News/State/2021/02/06001328/Controversial-opinion-on-Hinduism-Cases-against-Mohan.vpf

[11] Vedaprakash, Whether the complaint made against Lazarus, FIR filed etc., have been stage-managed or really meant for persecuting the rabble riser evangelist who abused and even blasphemed!, November.23, 2019.

[12] https://indiainteracts.wordpress.com/2019/11/23/whether-the-complaint-made-against-lazarus-fir-filed-etc-have-been-stage-managed-or-really-meant-for-persecuting-the-rabble-riser-evangelist-who-abused-and-even-blasphemed/