Posts Tagged ‘பூ’

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்காக தண்டனை கொடுத்த கிருத்துவப் பள்ளி! செக்யூலரிஸ போதையா, சட்டத்தின் அலங்கோலமா அல்லது இந்துக்களை அடக்கியாளும் தன்மையா? (2)

ஒக்ரோபர் 23, 2017

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்காக தண்டனை கொடுத்த கிருத்துவப் பள்ளி! செக்யூலரிஸ போதையா, சட்டத்தின் அலங்கோலமா அல்லது இந்துக்களை அடக்கியாளும் தன்மையா? (2)

School kids made o apologize for celebrating Deepavali

பெற்றோர் புகார், போலீஸார் விவாரணை: இதையடுத்து பெற்றோர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்[1]. இது தொடர்பாக எஸ். சேதுராமன் என்பவராலும் பாலக்கரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது[2]. போலீஸ் அப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியை மீது நோட்டீஸ் [CSR (Community Service Register) ] அனுப்பியுள்ளது[3]. சனிக்கிழமை, 21-10-2017 அன்று அவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டது[4]. தலைமை ஆசிரியை, முன்னர் சொன்னதையே, திரும்பச் சொன்னார். இந்த சம்பவம் 20-10-2017 அன்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது[5].  குழந்தைகளை இவ்வாறு நடத்தலாமா என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. தொடர்ந்து வந்துள்ள புகார் மற்றும் இணைதள இணைதள கருத்துருவாக்க அழுத்தத்தினால், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Servite Matericulation school- punished for celebrating Deepavali- 19-10-2017

மாசை மறைக்க மாசு கொண்ட தீயர் வேடமிட்டு வந்தது: மாசுக்கட்டுப்பாடு என்ற போர்வையில் சமீபகாலத்தில் தீபாவளியை எதிர்க்கிறேன் என்று பல இயக்கங்கள் கிளம்பியுள்ளன. புகை மற்றும் சப்தம் என்று மட்டும், இவ்விசயத்தை அணுகுவதாக இருந்தால், வருடம் முழுவதும் அத்தகைய சட்டமீறல்களுடன் நடக்கும் நிகழ்வுகள் யாவை என்று அவை கவனித்ததாகத் தெரியவில்லை. பேரூந்துகள், மோட்டார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் தான் அதிக அளவு மாசு உண்டாகிறது. இன்றைய அதிநவீன தொழிற்சாலைகளின் கழிவுகள் – பெயின்ட், தோல், ரசாயனம், முதலியவை – நிலத்தடி நீரை மாசுப்படுத்தி வருகின்றன. ஆஸ்பத்திரி போன்ற நச்சுக்கழிவுகளைப் பற்றி அமுக்கியே வாசிக்கின்றனர். அதைப்பற்றி குறைவாகவே எதிர்ப்பு உள்ளது. பணம் வாங்கிக் கொண்டு அடங்கி விடுகின்றன என்ற புகார் வெளிப்படையாகவே உள்ளது.

Servite Matericulation school- punished girl for mehendi- celebrating Deepavali- 19-10-2017

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[6]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[7]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[8]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களமாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகுறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

FIR - against -Servite Matriculation school- punished girl for mehendi- celebrating Deepavali- 19-10-201FIR 7

குழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[9]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[10]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை? கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை? இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும்! இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்! ஆக இவ்வழக்குகள் போட்டவர்களின் பின்னணியை ஆராய வேண்டும். செக்யூலரிஸ ரீதியில் வழக்குத் தொடுப்பதாக இருந்தால், எல்லா மாசு உண்டாக்கும் செயல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வழக்குகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், தீபாவளியை மட்டும் எதிர்ப்பது, அவர்களது பாரபட்சத்தைத் தான் காட்டுகிறது, மற்றும் செக்யூலரிஸ போலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, இந்துவிரோத போக்கைக் காட்டுகிறது.

Doveton school fined boy for having Henna- 2015

ஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது:  சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட்போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப் படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனால், இப்பொழுது 2017ல் – இவர்கள் ஏன் அடங்கி விட்டார்கள் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

23-10-2017

No crackers - nothing- on Deepavali 2017

[1] The Hindu, Tiruchi school faces probe over ‘Deepavali punishment’, Special Correspondent, Tiruchi, October 23, 2017 07.49 IST, Updated: , October 23, 2017 07.52 IST.

[2] http://www.thehindu.com/news/national/tamil-nadu/tiruchi-school-faces-probe-over-deepavali-punishment/article19904505.ece

[3] The Palakkarai police station under whose jurisdiction the school falls has issued a CSR (Community Service Register) upon receiving the complaint from S. Sethuraman against the school headmaster and physical education teacher.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tiruchi-school-faces-probe-over-deepavali-punishment/article19904505.ece

[4] The Times of India, School makes kids apologize for setting off crackers, TNN, October.22, 2017 IST.

[5] https://timesofindia.indiatimes.com/city/trichy/school-makes-kids-apologise-for-setting-off-fireworks/articleshow/61169124.cms

[6] http://scroll.in/article/764796/would-banning-diwali-crackers-really-infringe-religious-rights-as-the-supreme-court-has-ruled

[7] http://articles.economictimes.indiatimes.com/2011-10-23/news/30310755_1_firecracker-sivakasi-child-labour

[8] http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=22160

[9] http://www.thehindu.com/news/national/three-toddlers-move-sc-against-delhis-peaking-pollution-graph/article7703036.ece

[10] In late October, the Supreme Court deferred to February the request by two eight-month-olds, Arjun Gopal and Aarav Bhandari, and 16-month-old Zoya Rao Bhasin, to ban firecrackers during Diwali. In September, “the toddlers”, as they are referred to, had filed a writ petition in the Supreme Court (SC) through their advocate fathers, seeking measures to control air pollution in the Capital and exercise their right to clean air, guaranteed under Article 21 of the Constitution.

 http://www.livemint.com/Leisure/fwznyZ9bJVLnMwUFpL3KSO/Clean-air-for-our-children.html

 

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

செப்ரெம்பர் 13, 2015

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

இம்மானுவேல் = கடவுள் எங்களுடன் இருக்கிறார்: இம்மானுவேல் என்றல் “கடவுள் எங்களுடன் இருக்கிறார்” என்று அர்த்தமாம்[1]. அதற்கு கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள்;

IMMANUEL (proper noun.):
1. GOD IS WITH US; a name and description of Jesus Christ 

G

Growing strong Christians who are biblically faithful and evangelically passionate

 O

Outreach ministry that expresses God’s love for all through service

 D

Developing the faith of children and youth

I

Inspiring and equipping lay leaders and staff for ministry

S

Showing how faith and the scriptures are lived out in our daily lives

 W

 Wesleyan Theology and Heritage

 I

 Investing in developing, supporting and enjoying our Christian community

T

Transforming lives through group study and prayer

H

High quality and diversity in Worship and Music expressing our love and faith for God

 U

Understanding and building relationships with those who do not yet know Christ

S

Sending people out to share Christ and grow His church

எங்களது குறிக்கோள் என்று குறிப்பிடும் போது, உலகமெலாம் சென்று “பாப்டிஸம் செய்யுங்கள்”, “ஞானஸ்நானம்” செய்து வைப்பீர்களாக, அதாவது மதமாற்றம் செய்யுங்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்[2]. மற்ற விவரங்களைப் படித்து பார்த்தால், இது ஒரு அடிப்படைவாத கிருத்துவ அமைப்புப் போன்று உள்ளது. ஜெர்மனியில் ஆரம்பித்து மற்ற நாடுகளில் பரவியுள்ளது. இந்த சர்ச்சை சேர்ந்த பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்[3]. ஆனால் சென்னையின் இந்த சர்ச்சிற்குண்டான பிரத்யேகமான இணைத்தளம் 22-09-2011 அன்றிலிருந்து வேலை செய்வதை நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது[4]. இதேப் போலத்தான் திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி இணைத்தளத்தையும் முடக்கி வைத்து விட்டார்கள்[5]. இத்தகைய களவு வேலைகளில், ஆதாரங்களை மறைப்பதில் கிருத்துவர்கள் கைத்தேர்ந்தவர்கள் தாம்!

பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வளையல்கள் போடாதே!: பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வலையல்கள் போட்டாதே என்பதெல்லாம் ஏதோ புரட்சிகரமான பெண்ணின் அடையாளங்கள் என்று, அல்லது அப்படி வைத்துக் கொண்டுள்ளா பெண் பழம் பஞ்சாங்கம் என்றோ ஆகிவிடாது. இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல. உண்மையில் அப்படி சொல்பவர்களின் மனங்களில் தான் சாத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அப்படி சொன்னாலும் சந்தோஷப்படும் கிருத்துவ அடிப்படைவாத குழுக்கள் / சர்ச்சுகள் உண்டு[6]. அதன் மீதான கிருத்துவ இறையில் சித்தாந்தங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதையன மேனாடுகளிலேயே உள்ளன. அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி வந்தது தான் இந்த உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் சர்ச்[7].

கிருத்துவ அடிப்படவாத, தீவிரவாத, பயங்கரவாத போக்குகளை அடையாளங்காணுதல்: படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள்; மருத்துவ உதவி செய்கிறார்கள்; முதியோர் இல்லம் கட்டுகிறார்கள்: – எல்லாம்  சரிதான் ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்தியக் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை விரோதிப்பது, எதிரியாக பாவிப்பது, அதனை அழிக்க வேண்டும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு, அதற்கேற்ற முறையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத எண்ணங்களை மனங்களில் வைத்துக் கொண்டு, தினசரி வாழ்க்கையில் செயல்பட்டுவருதால் தான், கிருத்துவர்களுக்கு இத்தகைய கொடிய சமூக விரோத, மனித விரோத எண்ணங்கள் எழுகின்றன, செயல்படுகின்றன – விளைவுகள் – அப்பாவி இந்துக்கள் பலியாகிறார்கள். ஆனால், இது திட்டமிட்டக் கொலை என்றே சொல்லலாம். ஏனெனில், இறையியல் என்ற போர்வையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத போதனைகள் செய்யப் படுவதால் – இந்துக்கள் பாவிகள், சாத்தானின் குழந்தைகள், ஒன்று அவர்களை கிருத்துவர்களாக மதம் மாற்ற வேண்டும், இல்லை கொலைசெய்யப் படவேண்டும், அதற்கு எந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அது இறைப்பணியில் ஈடுபட்டு செய்வதால், பரிசுத்த ஆவியால் புண்ணியமே கிடைக்கும், ரட்சிக்கப் படுவீர்கள் என்றேல்லாம் போதிக்கப் படுவதால், முஸ்லீம்-ஜிஹாதிகளைப் போல இவர்களும் உருவாகி வருகிறார்கள்.

சேவை செய்ய வந்த கன்னியாஸ்திரீ ஏன் குரூரமாக இருக்க வேண்டும்? ஜே என்ற அந்த கிருத்துவப் பெண் / கன்னியாஸ்திரி எதற்காக அவ்வளவு குரூரமாக நடந்து கொளண்டாள்? நிச்சயமாக ஜே ஒரு பெண்ணாக இருந்து பெறவேண்டியதைப் பெறவில்லை. மற்ற சாதாரண பெண்களைப் போல பொட்டு வைத்துக் கொண்டு, பூச்சூடி, வளையல்கள் அணிந்து வாழவில்லை. எனவே, இவற்றையெல்லாம் துறந்த இவள், மற்ற பெண்கள் வைத்துக் கொள்வதைப் பார்த்தால் பொறாமையாக இருப்பது நிச்சயம். அவற்றை எதிர்க்க அல்லது அவற்றை உபயோகப் படுத்தும் மற்ற பெண்களை தடுக்க அவளுக்கு மதம் ஒரு கருவியாக அமைந்து, மற்ற பெண்களை சதாய்ப்பதற்கு, துன்புறுத்துவதற்கு உதவுகிறது. அந்நிலையில் தான் அத்தகைய குரூர எண்ணத்துடன் செயல்படுகிறாள். இதற்கு மதம், மதபோதனை, முதலியவை காரணமாகின்றன.

பெண்கள் தீவிரவாதிகளாக மாறுவது, மாற்றுவது: பெண்களின் மனங்களை எளிதில் மாற்றலாம் அல்லது மூளைச்சலவைக்கூட செய்யலாம், அதனால் அவள் எதற்கும் துணிந்து விடுவாள் – உதாரணம் ராஜிவ் கொலையில் பெண்கள் ஈடுபட்டது, இப்பொழுது ஜிஹாதி பயங்கரவாதம் – குண்டு வெடுப்புகள், தற்கொலை படை, தற்கொலை / மனித வெடிகுண்டாக செயல்படுவது. ஆகவே, பள்ளிகளில், கல்லுரிகளில் போதிக்கும் கிருத்துவப் பெண்கள் அத்தகையவர்களாக மாறிவிட்டால், மாறியிருந்தால், இந்தியா இன்னொரு தீவிரவாதத்தை எதிர் நோக்கியுள்ளது எனலாம். இத்தகைய படித்தவர்களின் தீவிரவாத செயல்களைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ளக் கூட காலம் ஆகும், ஆனால் அவற்றை கண்டு பிடித்தால் உடனே அழித்து விடிவது நல்லது. இல்லையென்றால்;, அது சமூகத்தை, நாட்டை, ஏன் உலகத்தை அழித்து விடும். இதில் கூட சில கிருத்துவ அடிப்படைவாத இஅயக்கங்கள் வேலை செய்து வருகின்றன. அதாவது, உலகம் எப்படியாவது சீக்கிரம் அழிக்கப்பட வேண்டும், அப்பொழுதுதாகன், ஏசு கிருஸ்து சீக்கிரமாக இரண்டாவது தடவை தோன்றுவார், கிருத்துவர்கள் ரட்சிக்கப்படுவார்கள் என்ற கொடிய எண்ணத்துடன் “அர்மகடான்” குழுக்கள் வேலை செய்து வருகின்றன.

கிருத்துவர்களின் போலித்தனம் – உள்கலாச்சாரமயமாக்கலும், இந்திய-இந்து எதிர்ப்பும்:

உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்ந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள்[8]. பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue)[9], மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர்[10]. இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Proestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடமன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

வேதபிரகாஷ்

26-09-2011


[1] IMMANUEL – which means “God is with us.”   We praise God for the blessings we have shared and for the ways God has used this congregation to advance the cause of Christ in this world.

http://www.immanuelumc.org/asp/about.asp?ID=100028

[4] http://www.emcchennai.org/

This is Google’s cache of http://www.emcchennai.org/. It is a snapshot of the page as it appeared on 22 Sep 2011 06:16:51 GMT. The current page could have changed in the meantime. Learn more

[5] பிஷப் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்த விவரங்களை எனது மற்ற பதிவுகளில் விவரமாகக் காணலாம்.

[6] “ஏன்டி கிரைஸ்ட்” (கிருத்துவிற்கு எதிராக உள்ள கிரைஸ்ட்), “பிளாக் சர்ச்” (கருப்பு சர்ச்), அர்மகெடான், அந்திகாலம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கூட்டங்கள் உள்ளன.