Archive for the ‘ஞான ஸ்நானம்’ Category

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர், ஜீசஸ்: ரஜினி கிருத்துவராகி ஊழியம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?

பிப்ரவரி 5, 2017

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர், ஜீசஸ்: ரஜினி கிருத்துவராகி ஊழியம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?

nicolas-notovitich-myth-maker-myth-developed

கிருஷ்ணர்ஜீசஸ்என்றெல்லாம் சேர்த்து பேசி குழப்பத்தை ஏற்படுத்தியது: “‘சினிமா சக்தி வாய்ந்தது. ஆயிரம் சுவாமிகள் சொல்லாத விஷயங்கள் சினிமா மூலம் மக்களை எளிதாக சென்று சேரும். ஆன்மிக விஷயங்களையும் சினிமாவில் சொல்லலாம்’, என்று அறிவுறுத்தினார்.” அதனால், தொடர்ந்து சினிமாவில் நடக்கிறேன் என்றால், நடிகன் இவ்வாறு, “கிருஷ்ணர்-ஜீசஸ்” என்றெல்லாம் சேர்த்து பேசக்கூடாதே? அத்தகைய பேச்சுகளாலும், பொய்யானவற்றை மக்களுக்கு சொல்வதைப் போன்றாகி விடுகிறது. “கிருஷ்ணர்-ஜீசஸ்” ஒப்புமை பேச்சு, தான் கிருத்துவராக மாறினார் என்பதால் பேசினாரா, யோகத சத்சங்கத்தில் அத்தகைய முயற்சி நடப்பதால் பேச வைக்கப் பட்டாரா, அல்லது, இவரே ஒப்புக் கொண்டு அத்தகைய நாடகத்தை, அப்புத்தகம் வெளியீட்டு விழாவில், வேண்டுமென்றே அரங்கேற்றி வைத்தாரா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும், சுவாமி விவேகானந்தர் மறுத்ததை, யோகத சத் சங்கமோ, ரஜினி காந்தோ வேண்டுமென்றே பரப்ப துணிந்தால், அவர்களுக்கு உள்ளூக்குள் ஏதோ திட்டம் இருப்பது உறுதியாகிறது. ஆகையால், இந்துக்கள் சும்மா இருக்க முடியாது.

rajnikanth-converted-to-christianity

ரஜினி கிருத்துவராக மதம் மாறினாரா?: 2014ல் ரஜினுக்கு உடம்பு சரியாகவில்லை என்ற நிலையில், அவர் பல கோவில்களுக்கு சென்று வந்தார். அவரது ரசிகர்களும், எல்லா வழிபாட்டு ஸ்தலங்களிலும் பிரார்த்தனை செய்தனர். அந்நிலையில், திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தவுடன், சம்மி தங்கையா என்ற பாஸ்டர், ரஜினி காந்த் வீட்டிற்குச் சென்று, அவரது உடல் நலம் குறித்து பிரார்த்தனை செய்தார் என்று ஒரு வீடீயோ சுற்றில் வந்தது[1]. அந்த பாஸ்டர் ரஜினியின் மார்பின் மீது கை வைத்து, நீண்ட ஆயுளுக்கு பிரார்த்தனை செய்ததாக சொல்லப்பட்டது. இதுதான், ரஜினி மாற்று மதத்தினரிடம் ஆசிர்வாதம் பெற்றது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[2]. அது தவிர சமீபத்தில் “கபாலி” படப்பிடிப்பிற்காக, நியூயார்க் சென்றிருந்தபோது, 50 நாட்கள் தங்கினார் என்றும், அப்பொழுது, ஒரு சர்ச்சிலிருந்து, அவருக்கு அழைப்பு வந்ததால், அங்கு சென்றார் என்றும், அப்பொழுது தற்செயலாக இவ்வாறு நடந்தது என்றும், ஆனால் ரஜினி மதம் மாறவில்லை என்றும் அவரது ரசிகர் சொன்னார் என்று வீடியோ கூறுகிறது[3]. எது எப்படியாகிலும், இது உண்மை என்றோ-பொய் என்றோ யாரும் தெளிவாக, வெளிப்படையாக, உறுதியாக சொல்லவில்லை. கிருத்துவர்களைப் பொறுத்த வரையில் பிரச்சாரத்தில் எத்தர்கள் என்பது தெரிந்த விசயமே. ரஜினுக்கு ஜான ஸ்தானம் செய்விக்கப்பட்டது என்றதற்கு பிறகு, ஏசு ஒரு பிராமணர் என்று ரஜினியை சேர்த்து தமாஷா செய்ய ஆரம்பித்தனர்[4]. மதத்திற்காக அவர்கள் எத்தகைய கீழ்த்தரமான வேலையையும் செய்யக் கூடியவர்கள்[5]. ஆகையால், ரஜினி தெளிவு படுத்தாமல் இருப்பதும் விசித்திரமானதே.

rajnikanth-sammy-thangaiah-prayer-tamil

பாபாஜியைப் பற்றிய வாதங்கள், விவாதங்கள்: பிற மதங்கள் என்று வரும் போது, அவர்களில் பெரும்பாலோர் மிகவும் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது; அவர்களுக்கு அம்மதங்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளே தெரியாமல் இருந்தது; இருப்பினும் தெரிந்தது போல அடித்து பேசிக் கொண்டிருந்தார்கள்; தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் வாதித்து / சாதித்துக் கொண்டிருந்தார்கள்; குறிப்பாக ஏசு இந்தியாவிற்கு வந்தார் போன்ற கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருந்தது விசித்திரமாக இருந்தது. யோகானந்தரே, “ஏசுவின் இரண்டாவது வருகை” போன்ற புத்தகங்கள், சிடி முதலியவற்றை வெளியிட்டுள்ளார்[6]. கிருத்துவர்களும், முகமதியர்களும் இந்துக்களை புனைந்த மாயைகளால் பெருமளவில் பாதித்திருந்தாலும், பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருப்பது வருத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்துக்கள் இவ்விசயத்தில் அப்பாவிகளாக, ஏமாளிகளாக, சாதுக்களாக இருப்பதுதான் நிதர்சனமாக உள்ளது. பாபாஜி விசயத்தில் ஏசுவை இணத்து கட்டிவிட்ட கதைகள் உள்ளன என்றும், அவைத்தான் இவர்களின் வாதங்களுக்கு காரணம் என்றும் பிறகு புரிந்தது. யுக்தேஸ்வர் கிரி என்பவர் எழுதிய  அத்தகைய புத்தகத்தை யோகத சத்சங்கமே வெளியிட்டுள்ளது[7]. அதை எடுத்துக் காட்டினாலும், அவர்கள் ஒப்புக்கொள்வதாக்ல இல்லை. யோகானந்தரே சொல்லியிருக்கிறார் என்று அடித்து பேசுகிறார்கள். விவேகானந்தர் தவறு என்றதை படிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தெரிந்தும், தெரியாதது போல நடிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

rajnikanth-sammy-thangaiah-prayer

ஏசு மாயை, கிருஸ்து கட்டுக்கதை, மற்றும் ஏசுகிருஸ்து புனைப்பு பரப்பப்படும் விதம்: ஏசு, கிருஸ்து மற்றும் ஏசு கிருஸ்து என்பன வெவ்வேறான மூன்று விதமான தத்துவங்கள். “ஏசு” என்பது வருபவர், காப்பவர், எதிர்பார்க்கப்படுபவர் என்று யூதர்கள் நம்பிக்கையில் இருந்தது. “கிருஸ்து” என்றால், எண்ணை வார்க்கப்பட்டவர், எண்ணையினால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று கிரேக்கத்தில் பொருள். கிரேக்கர்களைப் பொறுத்தவரையில், ஆசிரியன், அரசன், ஊருக்குப் பெரியவன் என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர், குருவினால், எண்ணையினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அறிவிக்கப்படுகிறான். பிறகு தான், மக்களால் அவன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அதனால், பால் என்பவர் பிறகு வந்தபோது, ஒரு சமூகங்களில், பிரபலமாக இருந்த இந்த இரு தத்துவங்களையும் சேர்த்து “ஏசு கிருஸ்து” என்ற நபரை, கற்பனையில் உருவாக்கினார். அதுதான், கிருஸ்துவ மதத்தின் கடவுளாக மாற்றப்பட்டார். ஆனால், 18-19ம் நூற்றான்டுகளில், கிருஸ்துவை, கிருஸ்துவ மதத்தை ஆராய்ச்சி செய்வர்கள், இதெற்கெல்லாம் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை என்று கண்டறிந்து, அவையெல்லாம் மாயை, கட்டுக்கதை மற்றும் புனையப்பட்டவை என்று நிரூபித்தனர். எனினும், வாடிகன் விடாமல், அவற்றை மெய்யாக்க, அவ்வபோது, முன்னுக்கு முரணான புதிய கட்டுக்கதைகளை உருவாக்கி, பரப்பி, புழங்கவிட்டு ஆராய்ச்சி செய்து வருகிறது. அம்முறையில் தான் “இந்தியாவில் ஏசு” என்ற கட்டுக்கதை உருவாக்கப் பட்டது.

rajnikanth-converted-to-christianity-in-usa

நிக்கோலஸ் நோட்டோவிசின் கட்டுக்கதையும், யோகானந்தரும்: நிக்கோலஸ் நோடோவிட்ச் என்ற ரஷ்ய பிரயாணி தான், ஹிமி புத்த மடாலயத்தில் ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், பிராமணர்களில் வேதங்களைக் கற்றுக் கொண்டார், வேதங்களை போதித்தார்…பொன்ற விவரங்கள் இருந்ததாக குறிப்பிட்டான். “யாருக்கும் தெரியாத ஏசுகிருஸ்துவின் மர்மமான வாழ்க்கை” என்ற புத்தகத்தை எழுதி நன்றாகவே பணம் சம்பாதித்தான்[8]. ஆனால், மாக்ஸ்முல்லர் இதை ஆராயுமாறு ஆணையிட்டார். அதன்படியே, ஆங்கில அதிகாரிகள், அந்த மடாலயத்திற்கு சென்று விசாரித்தபோது, அத்தகைய ஓலைச்சுவடி அங்கில்லை என்றும், ஆனால், நிக்கோலஸ் நோடோவிட்ச், அடிபட்டதால் அங்கு வந்து தங்கினான் என்று மடத்தில் அறிவித்தனர். இதனால், மாக்ஸ்முல்லர், அப்புத்தகத்தை ஒரு மோசடி என்று அறிவித்தார். சுமாமி விவேகானந்தரும் இதனை எடுத்துக் காட்டினர். ஆனால், முன்னர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்து சாமியார், இதனை விடாமல் பரப்பி வந்தார்[9]. அப்புத்தகத்தை வெளியிடவும் செய்தார். யோகானந்தர் தனது புத்தகத்தில் இக்கட்டுக்கதையை சேர்த்ததால், மறுபடியும், இது பிரபலமாகியது. கிருத்துவர்களுக்கோ கொண்டாட்டம் தான்[10]. இப்பொழுது ரஜினிகாந்த, அந்த கும்பலோடு சேர்ந்திருப்பதால், அந்த ஈர்ப்பில், இக்கட்டுக்கதைக்ககுதவுவது போன்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-02-2017

nicolas-notovitich-myth-refuted-by-swami-vivekananda

[1] Kolly-talk, Rajini gets blessed by Christian priests at residence, Jan 30, 2014

[2] A special prayer was conducted at the residence of superstar Rajinikanth by Sammy Thangaiah, a noted Christian priest. Rajini,A believer in all faiths,  was spotted at the holy abode of Lord Venkateshwara at the Tirupathi Tirumala Hills along with eldest daughter Aishwarya last week.  Mean while Rajini is said to have senta message for Samimy Thangaiah, a noted Christian priest, soon after his return from Tirupathi. Thangaiah met the superstar at his Poes Garden residence. The priest conducted special prayers and prayed to the Almighty for Rajini’s healthy long life. He placed his hands on Rajini’s chest and chanted biblical lyrics. Rajini did appear to be deeply involved in those prayers. It may be noted that this is not the first time that Rajini is seeking blessings from priests of other religions.

http://www.kollytalk.com/cinenews/rajini-gets-blessed-christian-priests-residence-134733.html/attachment/rajnikanth-sammy-thangaiah-prayer

[3] https://www.youtube.com/watch?v=RXNzAKXrHdk

[4] Mid-day.com, Rahul Da Cunha: Jesus was a Tam-Brahm, By Rahul Da Cunha | Posted 27-Feb-2016.

[5] http://www.mid-day.com/articles/rahul-da-cunha-jesus-was-a-tam-brahm/16993192

[6] In his book The Second Coming of Christ, Yogananda states that Jesus Christ went to India and conferred with Mahavatar Babaji.

Yogananda, Paramahansa (2004). The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You,  p. Los Angeles, CA: Self-Realization Fellowship.

[7] Yukteswar Giri, The Holy Science, Yogoda Satsanga Society, 1949.

[8]  Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.

[9] Abhayananda, Swami. “Journey Into Kashmir and Tibet: With the Life of Jesus by Nicolas Notovitch.”, Advaida Ashrama, Calcutta,  (1987).

[10] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

செப்ரெம்பர் 13, 2015

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

இம்மானுவேல் = கடவுள் எங்களுடன் இருக்கிறார்: இம்மானுவேல் என்றல் “கடவுள் எங்களுடன் இருக்கிறார்” என்று அர்த்தமாம்[1]. அதற்கு கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள்;

IMMANUEL (proper noun.):
1. GOD IS WITH US; a name and description of Jesus Christ 

G

Growing strong Christians who are biblically faithful and evangelically passionate

 O

Outreach ministry that expresses God’s love for all through service

 D

Developing the faith of children and youth

I

Inspiring and equipping lay leaders and staff for ministry

S

Showing how faith and the scriptures are lived out in our daily lives

 W

 Wesleyan Theology and Heritage

 I

 Investing in developing, supporting and enjoying our Christian community

T

Transforming lives through group study and prayer

H

High quality and diversity in Worship and Music expressing our love and faith for God

 U

Understanding and building relationships with those who do not yet know Christ

S

Sending people out to share Christ and grow His church

எங்களது குறிக்கோள் என்று குறிப்பிடும் போது, உலகமெலாம் சென்று “பாப்டிஸம் செய்யுங்கள்”, “ஞானஸ்நானம்” செய்து வைப்பீர்களாக, அதாவது மதமாற்றம் செய்யுங்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்[2]. மற்ற விவரங்களைப் படித்து பார்த்தால், இது ஒரு அடிப்படைவாத கிருத்துவ அமைப்புப் போன்று உள்ளது. ஜெர்மனியில் ஆரம்பித்து மற்ற நாடுகளில் பரவியுள்ளது. இந்த சர்ச்சை சேர்ந்த பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்[3]. ஆனால் சென்னையின் இந்த சர்ச்சிற்குண்டான பிரத்யேகமான இணைத்தளம் 22-09-2011 அன்றிலிருந்து வேலை செய்வதை நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது[4]. இதேப் போலத்தான் திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி இணைத்தளத்தையும் முடக்கி வைத்து விட்டார்கள்[5]. இத்தகைய களவு வேலைகளில், ஆதாரங்களை மறைப்பதில் கிருத்துவர்கள் கைத்தேர்ந்தவர்கள் தாம்!

பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வளையல்கள் போடாதே!: பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வலையல்கள் போட்டாதே என்பதெல்லாம் ஏதோ புரட்சிகரமான பெண்ணின் அடையாளங்கள் என்று, அல்லது அப்படி வைத்துக் கொண்டுள்ளா பெண் பழம் பஞ்சாங்கம் என்றோ ஆகிவிடாது. இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல. உண்மையில் அப்படி சொல்பவர்களின் மனங்களில் தான் சாத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அப்படி சொன்னாலும் சந்தோஷப்படும் கிருத்துவ அடிப்படைவாத குழுக்கள் / சர்ச்சுகள் உண்டு[6]. அதன் மீதான கிருத்துவ இறையில் சித்தாந்தங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதையன மேனாடுகளிலேயே உள்ளன. அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி வந்தது தான் இந்த உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் சர்ச்[7].

கிருத்துவ அடிப்படவாத, தீவிரவாத, பயங்கரவாத போக்குகளை அடையாளங்காணுதல்: படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள்; மருத்துவ உதவி செய்கிறார்கள்; முதியோர் இல்லம் கட்டுகிறார்கள்: – எல்லாம்  சரிதான் ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்தியக் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை விரோதிப்பது, எதிரியாக பாவிப்பது, அதனை அழிக்க வேண்டும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு, அதற்கேற்ற முறையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத எண்ணங்களை மனங்களில் வைத்துக் கொண்டு, தினசரி வாழ்க்கையில் செயல்பட்டுவருதால் தான், கிருத்துவர்களுக்கு இத்தகைய கொடிய சமூக விரோத, மனித விரோத எண்ணங்கள் எழுகின்றன, செயல்படுகின்றன – விளைவுகள் – அப்பாவி இந்துக்கள் பலியாகிறார்கள். ஆனால், இது திட்டமிட்டக் கொலை என்றே சொல்லலாம். ஏனெனில், இறையியல் என்ற போர்வையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத போதனைகள் செய்யப் படுவதால் – இந்துக்கள் பாவிகள், சாத்தானின் குழந்தைகள், ஒன்று அவர்களை கிருத்துவர்களாக மதம் மாற்ற வேண்டும், இல்லை கொலைசெய்யப் படவேண்டும், அதற்கு எந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அது இறைப்பணியில் ஈடுபட்டு செய்வதால், பரிசுத்த ஆவியால் புண்ணியமே கிடைக்கும், ரட்சிக்கப் படுவீர்கள் என்றேல்லாம் போதிக்கப் படுவதால், முஸ்லீம்-ஜிஹாதிகளைப் போல இவர்களும் உருவாகி வருகிறார்கள்.

சேவை செய்ய வந்த கன்னியாஸ்திரீ ஏன் குரூரமாக இருக்க வேண்டும்? ஜே என்ற அந்த கிருத்துவப் பெண் / கன்னியாஸ்திரி எதற்காக அவ்வளவு குரூரமாக நடந்து கொளண்டாள்? நிச்சயமாக ஜே ஒரு பெண்ணாக இருந்து பெறவேண்டியதைப் பெறவில்லை. மற்ற சாதாரண பெண்களைப் போல பொட்டு வைத்துக் கொண்டு, பூச்சூடி, வளையல்கள் அணிந்து வாழவில்லை. எனவே, இவற்றையெல்லாம் துறந்த இவள், மற்ற பெண்கள் வைத்துக் கொள்வதைப் பார்த்தால் பொறாமையாக இருப்பது நிச்சயம். அவற்றை எதிர்க்க அல்லது அவற்றை உபயோகப் படுத்தும் மற்ற பெண்களை தடுக்க அவளுக்கு மதம் ஒரு கருவியாக அமைந்து, மற்ற பெண்களை சதாய்ப்பதற்கு, துன்புறுத்துவதற்கு உதவுகிறது. அந்நிலையில் தான் அத்தகைய குரூர எண்ணத்துடன் செயல்படுகிறாள். இதற்கு மதம், மதபோதனை, முதலியவை காரணமாகின்றன.

பெண்கள் தீவிரவாதிகளாக மாறுவது, மாற்றுவது: பெண்களின் மனங்களை எளிதில் மாற்றலாம் அல்லது மூளைச்சலவைக்கூட செய்யலாம், அதனால் அவள் எதற்கும் துணிந்து விடுவாள் – உதாரணம் ராஜிவ் கொலையில் பெண்கள் ஈடுபட்டது, இப்பொழுது ஜிஹாதி பயங்கரவாதம் – குண்டு வெடுப்புகள், தற்கொலை படை, தற்கொலை / மனித வெடிகுண்டாக செயல்படுவது. ஆகவே, பள்ளிகளில், கல்லுரிகளில் போதிக்கும் கிருத்துவப் பெண்கள் அத்தகையவர்களாக மாறிவிட்டால், மாறியிருந்தால், இந்தியா இன்னொரு தீவிரவாதத்தை எதிர் நோக்கியுள்ளது எனலாம். இத்தகைய படித்தவர்களின் தீவிரவாத செயல்களைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ளக் கூட காலம் ஆகும், ஆனால் அவற்றை கண்டு பிடித்தால் உடனே அழித்து விடிவது நல்லது. இல்லையென்றால்;, அது சமூகத்தை, நாட்டை, ஏன் உலகத்தை அழித்து விடும். இதில் கூட சில கிருத்துவ அடிப்படைவாத இஅயக்கங்கள் வேலை செய்து வருகின்றன. அதாவது, உலகம் எப்படியாவது சீக்கிரம் அழிக்கப்பட வேண்டும், அப்பொழுதுதாகன், ஏசு கிருஸ்து சீக்கிரமாக இரண்டாவது தடவை தோன்றுவார், கிருத்துவர்கள் ரட்சிக்கப்படுவார்கள் என்ற கொடிய எண்ணத்துடன் “அர்மகடான்” குழுக்கள் வேலை செய்து வருகின்றன.

கிருத்துவர்களின் போலித்தனம் – உள்கலாச்சாரமயமாக்கலும், இந்திய-இந்து எதிர்ப்பும்:

உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்ந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள்[8]. பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue)[9], மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர்[10]. இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Proestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடமன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

வேதபிரகாஷ்

26-09-2011


[1] IMMANUEL – which means “God is with us.”   We praise God for the blessings we have shared and for the ways God has used this congregation to advance the cause of Christ in this world.

http://www.immanuelumc.org/asp/about.asp?ID=100028

[4] http://www.emcchennai.org/

This is Google’s cache of http://www.emcchennai.org/. It is a snapshot of the page as it appeared on 22 Sep 2011 06:16:51 GMT. The current page could have changed in the meantime. Learn more

[5] பிஷப் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்த விவரங்களை எனது மற்ற பதிவுகளில் விவரமாகக் காணலாம்.

[6] “ஏன்டி கிரைஸ்ட்” (கிருத்துவிற்கு எதிராக உள்ள கிரைஸ்ட்), “பிளாக் சர்ச்” (கருப்பு சர்ச்), அர்மகெடான், அந்திகாலம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கூட்டங்கள் உள்ளன.