Posts Tagged ‘திக்விஜய் சிங்’

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்துவிரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]

Jhabua 3 nubs raped 1998

1998 – ஜாபுவா [Jhabua] கற்பழிப்பு நாடகம்: 1998ல், இதைப்பற்றி, வாடிக்கையாக, ஊடகங்களில் “ஜாபுவா கற்பழிப்பு” என்று அதிகமாக செய்திகளை, விதவிதமாக வெளிவந்தன, டிவிக்களில் விவாதங்களும் நடந்தன[1]. மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று ஜாபுவா, இங்கு நான்கு / மூன்று கன்னியாஸ்திரிகள், 24 வனவாசிகளால் கற்பழிக்கப்பட்டதாக, முதலில் செய்திகள் வந்தன[2]. உண்மையில் பில் என்ற வனவாசிகள் சம்பந்தப் பட்டதால்[3] / இவர்கள் “கிரிமினல் டிரப்ஸ்” [Criminal Tribes] என்பதால் அமைதியாகினர்[4]. பிறகு இந்துக்கள் கற்பழித்தனர், இந்து இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்களால் கற்ழிக்கப் பட்டனர் என்று செய்திகள் மாறின. அதற்கு, முதலமைச்சர் திக்விஜய் சிங் தான் காரணம், ஏனெனில், அவர்தான் அப்படி சொல்லி பிரச்சினையை திசைத் திருப்பப் பார்த்தார்[5]. ஆனால், இது பொய் என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தனது அதிகாரத்தை வைத்து தப்பித்துக் கொண்டார். ஆனால், அத்தகைய பொய் செய்திகள் உலகம் முழுவது பரவின. இதற்குள் விசாரணையில், கற்பழித்த வனவாசிகள் எல்லோருமே கிருத்துவர்கள் என்று தெரிய வந்தது. அதவாது, கிருத்துவர்களே, கன்னியாஸ்திரிக்களை கற்பழித்தார்கள் என்றாயிற்று[6]. இதனால் இந்தியாவிற்காக அவப்பெயர் தான் உண்டாக்கப்பட்டது. இந்துக்கள் செய்தார்கள் என்ற பிரச்சரத்தால், இந்துக்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், உண்மை வெளிவந்த பிறகு, ஊடகங்கள், பழைய செய்திகளை மறக்கவில்லை.

Jhabua 4 nubs raped 1998

Jabua nun case 2003

40 raped nun, Australian press 2008

The Nun, reportedly raped in Kandhamal

2008 – கந்தமால் கன்னியாஸ்திரீ கற்பழிப்பு: ஸ்வாமி லக்ஷ்மணானந்த 23-08-2008 அன்று கிருத்துவ-மாவோயிற்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில் வனவாசிகள், எஸ்சிக்கள் முதலியோர் ஈடுபட்டதால், வன்முறை அதிகமாகவே இருந்தது. இதற்குள், “40 பேர் சேர்ந்து என்னை கற்பழித்தனர்,” என்று ஒரு கன்னியாஸ்திரீ டிவியில் பேட்டி கொடுத்தாள் என்று உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகின. 25-08-2008 அன்று கற்பழிக்கப் பட்டாள் என்று 30-09-2008லிருந்து செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டதை தெரிவிக்கப் பட்டது. அதாவது, கற்பழிப்பு நடந்தது உறுதியாக சொல்லமுடியாது என்றாகிறது. பிறகு 12 பேர் கற்பழித்தனர் என மாறியது. அதற்கும் பிறகு 9 என்றாகியது. மார்ச் 2014ல், தான் கற்பழிக்கப்படவில்லை என்று பேட்டி கொடுத்தாள். 12 போஈஸ்காரர்கள் முன்பாக தன்னை நடத்திச் சென்றனர் என்றாள். போலீஸாரே தாமதப் படுத்தினர் என்றனர். “துரித நீதிமன்றம்” உண்டாக்கப் பட்டு வழக்கு விசார்க்கப்படவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 29-06-2010 அன்று, நீதிமன்றம் மூன்று பேருக்கு தண்டனை அளித்து மற்ற ஆறுபேரை, ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது.  அந்த மூன்று பேர் – ம்துவா என்கின்ற சந்தோஷ் பட்நாயக், கஜேந்திர திகல், சரோஜ் பன்டேய் என்று குறிப்பிடப்பட்டது. இவர்கள் கிருத்துவரா, இந்துக்களா என்று தெரியவில்லை.

Raped nun,medical report, NDTV 2008

26-03-2015 – ரனாகட், நாடியா, மேற்கு வங்காள 71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு:  மார்ச் 2015ல் “71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு” என்று அதிரடியாக செய்தி வெளியாகியது. இந்தியாவில், கிருத்துவர்களுக்கு பாதுகாப்பே இல்லை, கன்னியாஸ்திரீக்கள் தினம் – தினம் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று ஆரம்பித்தனர்….இருவர் கைது செய்யப் பட்டனர், சந்தேகத்தின் மீது இருவர் கைது செய்யப் பட்டனர் என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிறகு, அவர்கள்ன்முகில் ஆலம் [வயது 28] மற்றும் மொஹம்மது மஜித் [29], பங்களாதேச முஸ்லிம்கள் என்று தெரிய வந்தது. உடனே எல்லோரும் அடங்கி விட்டனர். அதாவது, இந்திய ஊடகக்காரர்கள் நிலை என்பது கேள்விக்குறியாகிறது. “இந்துக்கள்” என்றால், புல்லரிக்கிறது, குஷியாக இருக்கிறது, முஸ்லிம்கள் / கிருத்துவர்கள் என்றால், அவை இல்லாமல் போகிறதா? அப்படியென்றால், கற்பழிப்புகளிலும், மதம் பார்க்கப் படுகிறதா? இந்த எண்ணம் என்ன, மனப்பாங்கு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

John Dayal and the Nun, reportedly raped in Kandhamal

பாரபட்சம் கொண்ட ஊடகங்கள், எழுத்தாளர்கள்: எழுத்தாளர்களும் பாரபட்சத்துடன் எழுதி வருகிறார்கள். ஸ்டைஸின் கொலை, ஒரு பெரிய தியாகம் போன்று வர்ணிக்கப் படுகிறது[7]. கிருத்துவர்கள் ஏன் தண்டிக்கப் படுகிறார்கள் என்று கேள்வி கேட்ப்ச்தை விட, அந்த அளவிற்கு அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். பொதுவாக இந்தியர்கள் மற்றவர்கள போலில்லாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்று தான் வாழ்ந்து கொண்டிருப்பான். கடந்த 900 ஆண்டுகளாக அவன் தான் மற்றவகளால் பாதிக்கப் பட்டுள்ளான். இந்த பிரச்சாரம் உலகம் முழுவதும் இன்றும் செய்யப் படுகிறது[8]. “கிருத்துவ-விரோத வன்முறை” என்று சொல்லப் படுவதே தவறானடாகும், ஏனெனில், எந்த கலவரம் நடந்தாலும், அதிகமாக பாதிக்கப் படுவது இந்துக்கள் தாம். ஆனால், அதைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை. கிளாடிஸ், ஏதோ, பெண்தேய்வம் போன்று போற்றப் படுவதும் தெரிகிறது. வாத்வா கமிஷன் விமர்சிக்கப் படுகிறது. லக்ஷமணானந்தரின் கொலையை சிறுமைப் படுத்தி, கிருத்துவர்கள் தண்டிக்கப் பட்டனர் என்று கிருத்துவ பிரச்சாரகர்கள் எழுதி தள்ளியுள்ளர்[9]. இந்துத்துவத்தைத் தாக்கும் கொள்கை கொண்ட, ஜே.என்.யூ கோஷ்டிகள், மற்றவர்களுக்குத் தீனி போடும் வேலையை செய்து வருகின்றன[10]. அவை இந்துக்களின் நலன், உரிமைகள் முதலியவற்றைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.

Vinavu against Sarangi-1

Vinavu against Sarangi-2

Vinavu against Sarangi-3

கருத்திற்கொள்ள வேண்டிய விசயங்கள்: இனி, மேற்குறிப்பிடப் பட்ட விசயங்களுடன், சேர்த்து, இந்த விசயங்களையும் படித்தால், உண்மை விளங்கும்:

  1. சுவாமி லக்ஷமணானந்த ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  2. 82 கிழவர் என்று பாராமல், நடு இரவில், கிருஷ்ணாஸ்டமி பூஜையின் போது, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ளின.
  3. பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், பழங்குடிகளுக்கு சேவை செய்தார், கிருத்துவராக மாற்றமுடியவில்லை என்றது தான் பிரச்சினை.
  4. 1999ல் கிராம் ஸ்டைன்ஸ் கொலை செய்யப்பட்டபோது, இவர் பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், அதனால், இவர் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
  5. இப்பொழுது, ஊடகங்கள் சம்பந்தம் இல்லாமல், பிரச்சாரம் செய்கின்றன, ஆனால், என்ன குற்றம் என்று சொல்லவில்லை.
  6. 2002 கலவர வழக்கில் மட்டும் தான், நிலுவையில் உள்ளது, அதனை, தன்னுடைய தேர்தல் படிவத்தில் குரிப்பிட்டுள்ளார்.
  7. ஆனால், அந்தகைய குரூர-கொலைகார கிருத்துவ-மோவோயிஸ்டுகள் பற்றி, இந்த நவீன ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன!
  8. ஷாம்நாத் பகல் கொலைவழக்கில் நந்தினி சுந்தர், அர்ச்சன பிரசாத், வினீத் திவாரி, ஜோஷி அதிகார் சன்ஸ்தான், சஞ்சய் பரதே சிக்கினர்.
  9. நந்தினி சுந்தர் – தில்லி பல்கலை Prof, பார்ச்சன பிரசாத் JNU-Prof, சஞ்சய் பரதே CPI[M] தலைவர் – இவர்களை கொலைகாரர்கள்[11] என்று என்னென்றும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?
  10. இந்து விரோதத் தனத்தைத் தான், ஆங்கில ஊடகங்கள், இவ்வாறு, பொய்மையுடன் கொட்டித் தீர்க்கின்றன! மற்றவை பின்தொடரும்.

© வேதபிரகாஷ்

05-06-2019

Kadhmal rape etc falsified - outlook, Balbir Punj

[1] The Frontline, Communal outrages in M.P., V. VENKATESAN, Vol. 15 :: No. 21 :: Oct. 10 – 23, 1998

[2] https://frontline.thehindu.com/static/html/fl1521/15210300.htm

[3] Rediff.com, ‘I never thought something like this could happen in our village. The nuns were so good to us’, Syed Firdaus Ashraf in Jhabua, September 28, 1998

[4]  https://m.rediff.com/news/1998/sep/28jhab.htm

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironic that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians.

[6]  At that time the incident had caused a lot of outrage with many prominent Christians and human rights activists appealing to UK for sanctions against India. Many Hindu organisations were blamed without proof and the whole country was maligned. The incident captured much front space on newspapers. Later on rapists were found to be Christians themselves and tribals (whom Indian Christians don’t consider as Hindus); this news was not covered so prominently as now Hindu organisations could not be blamed and was found in inside pages of very few newspapers. Madhya Pradesh Chief Minister Digvijay Singh insinuated that Hindus were responsible for the gang-rape. However, later reports found that there were just six families of tribal converts in the two villages. Arun Shourie in his book Harvesting our Souls writes that false allegations were made to malign Hindus.

[7] Hoefer, Herbert. Why are Christians persecuted in India? Roots, reasons, responsesInternational Journal of Frontier Missions 18.1 (2001): 7-12.

[8] Trapnell, Judson B. The Controversy and its Theological ImplicationsJournal of Hindu-Christian Studies 15.1 (2002): 7.

[9] Malec, Joanna. Anti-Christian violence in the Indian State of Orissa in 2008 in the reports of non‑governmental organizations, Orientalia Christiana Cracoviensia 3 (2011): 91-106.

[10] Sarkar, Tanika. Who Rules India? A Few Notes on the Hindu Right. (2018).

[11] In FIR, the following were mentioned accused”

  1. Shamnath Baghel, a resident of Nama village in Sukma district, who was allegedly killed by Maoists on November 4, 2016.
  2. Delhi University professor Nandini Sundar
  3. Jawaharlal Nehru University professor Archana Prasad,
  4. Vineet Tiwari from Delhi’s Joshi Adhikar Sansthan,
  5. Chhattisgarh Communist Party of India (Marxist) leader Sanjay Parate
  6. local sarpanch Manju Kawasi
  7. a villager, Mangla Ram Verma,