Archive for the ‘இரட்டிப்பு’ Category

கிறிஸ்தவ பெண் பிரசங்கி உட்பட நான்கு பேர் பண-இரட்டிப்பு மோசடியில் சென்னையில் கைது!

ஒக்ரோபர் 11, 2015

கிறிஸ்தவ பெண் பிரசங்கி உட்பட நான்கு பேர் பண-இரட்டிப்பு மோசடியில் சென்னையில் கைது!

கிறிஸ்தவப் பிரசங்கி கரூர் மல்லிகா

கிறிஸ்தவப் பிரசங்கி கரூர் மல்லிகா

2 பைகளுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டனர்[1]: 10-10-2015 அன்று பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் 2 பைகளுடன் 4 பேர் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட செம்பியம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து விசாரித்த போது அந்த கும்பல் பணம் இரட்டிப்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையில் 5 கருப்பு நோட்டு கட்டுகள் இருந்தன. மற்றொரு பையில் நூறு ரூபாய் அளவிற்கு வெற்று காகித கட்டுகள் இருந்தன. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர்[2]. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[3]. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[4]. இந்த மோசடியில் ஈடுபட்ட –

  1. கரூர் காந்திபுரம் நீலிமேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மா. மல்லிகா (52/56),
  2. தூத்துக்குடியைச் சேர்ந்த / கூடுவாஞ்சேரி நேதாஜிநகரைச் சேர்ந்த ராஜன் (39) என்ற ஜெயசிங் பாக்கியராஜ்,
  3. தூத்துக்குடி மட்டக்கடை தட்டார் தெருவைச் சேர்ந்த யா.தாம்சன் (24), மற்றும்
  4. மதுரை திடீர்நகர் அலாவுதீன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மு.சேர்ந்த முகமது யூசுப் (22)

ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

பணம் இரட்டிப்பு மல்லிகா, தாம்சன் கைது 2015

பணம் இரட்டிப்பு மல்லிகா, தாம்சன் கைது 2015

யாரிந்த கரூர் மல்லிகா – பெண்-பாஸ்டர் மல்லிகா?: 2013ல் கடத்தல் மற்றும் பணம் இரட்டிப்பு விவகாரங்களில் மல்லிகா என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். முருகேசன் என்பவர், இது விசயமாக போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார். புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன் மணிராஜ், அவரது மனைவி மல்லிகா (46), மகன் ராஜகாளீஸ்வரன், கருப்புச்சாமி ஆகியோர் எங்களிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் ரூ. 1 லட்சம் தருவதாக கூறினர். பணம் இரட்டிப்பு மோசடி செய்ததாக மணிராஜ், அவரது மனைவி மல்லிகா, மகன் ராஜாகாளீஸ்வரன், கருப்புச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்[5]. இப்பொழுது மோசடியில் ஈடுபட்ட மல்லிகாவும் (52) கரூரைச் சேர்ந்தவர் / காந்திபுரம் நீலிமேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மா.மல்லிகா (55)[6], என்றுள்ளது, ஆனால், வயது வித்தியாசம் இருக்கிறது.  தேவாலயம் ஒன்றில் பிரசங்கம் செய்து வந்தாள்[7], கிறிஸ்தவ பெண் பிரசங்கர் போலும்! மல்லிகா, வேப்பேரியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆக, இந்த பெண் பாஸ்டர் வேறு மல்லிகா போலும்!

ஏ.பி.எம். சர்ச் பண இரட்டிப்பு மோசடி 2011

ஏ.பி.எம். சர்ச் பண இரட்டிப்பு மோசடி 2011

 பாஸ்டர்கள் ஈடுபட்ட பணம் இரட்டிப்பு மோசடி: செம்பியத்தில், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, பலகோடி ரூபாய் மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், காந்தி கிராமம் நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா, 53. தேவாலயம் ஒன்றில் பிரசங்கம் செய்து வந்தாள்[8]. அங்கு, பொருளாதார பிரச்னைக்காக பிரார்த்தனை செய்ய வருவோரிடம், ‘பணத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கான வழிமுறைகள் தெரிந்த நபர்களை எனக்கு தெரியும்’ என கூறி, அவர்களை, துாத்துக்குடி மட்டக்கடை, தட்டார் தெருவைச் சேர்ந்த தாம்சன் என்ற ஜோயல், 24, என்பவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். தாம்சன், அந்த நபர்களிடம், பத்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தான். இவ்வாறு, ௧௫க்கும் மேற்பட்டோர், அவனிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெரம்பூர், எம்.பி.எம். தெருவைச் சேர்ந்த வடிவேல், 30, என்பவரிடம், மல்லிகாவும், தாம்சனும், இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டனர். சந்தேகம் அடைந்த வடிவேல், செம்பியம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீசார், மல்லிகா, தாம்சன், மதுரையை சேர்ந்த முகமது யூசுப், 22, துாத்துக்குடியை சேர்ந்த செபஸ்டின், 39, ஆகியோரை கைது செய்தனர்.

HIM JOhn Prabhakars wife Sukanya arrested June 2013

HIM JOhn Prabhakars wife Sukanya arrested June 2013

தூத்துக்குடி பிரதீப் தான் சொல்லி கொடுத்துள்ளான்கைதான நபர்கள் விசாரணையில் கூறியதாவது: எங்களுக்கு, இதுபோல் பணத்தை இரட்டிப்பாக்கி ஏமாற்றும் வித்தையை சொல்லி தந்தது துாத்துக்குடி, பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதீப், 40, என்பவன் தான். நிறைய பேருக்கு அவன் சொல்லி கொடுத்துள்ளான். அவர்களும் எங்களைப் போல், பல இடங்களில் மோசடி செய்து வருகின்றனர். நாங்கள் போலீசிடம் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், ‘இந்த நபர்களால் பாதிக்கப்பட்டோர் எங்களிடம் புகார் அளிக்கலாம். பிரதீப்பை பிடிக்க தனிப்படை துாத்துக்குடிக்கு விரைந்துள்ளது’ என்றனர். இச்செய்தியைப் படித்த பிறகும் பிரதீப் அங்கு இருப்பானா என்ன?

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

ஆட்டையை போட்டது எப்படி?[9]: கைது செய்யப்பட்டோர் அளித்த வாக்குமூலம்: தொழில் அதிபர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதலில் குறிவைப்போம். பின், அவர்களை அணுகி, கறுப்பு காகிதத்தை பணமாக மாற்றும் வித்தையை கற்று தருவதாக தெரிவிப்போம். அவர்களை பேச்சில் மயக்கி சம்மதம் பெறுவோம். எங்களிடம் மசியும் நபர்களை, ரகசிய இடத்திற்கு அழைத்து செல்வோம். அங்கு, ஒரு பாத்திரத்தில், காயத்திற்கு போடும் ‘டிஞ்ஜரை’ அளவுக்கு அதிகமாக ஊற்றுவோம். அதன் உள்ளே, அவர்களுக்கு தெரியாமல் ஏற்கனவே பணத்தை போட்டு வைத்து இருப்போம். பின், ‘டிஞ்ஜர்’ ஊற்றப்பட்ட பாத்திரத்தில், ரூபாய் நோட்டு அளவு கொண்ட கறுப்பு காகிதத்தை போடுவோம். அந்த காகிதம் டிஞ்ஜரில் கரைந்துவிடும் அதன் பின், பாத்திரத்தில் உள்ள டிஞ்ஜரை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, பாருங்கள், கறுப்பு நிற காகிதம் ரூபாய் நோட்டாக மாறிவிட்டது என, தெரிவிப்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம். டிஞ்ஜரில் மூழ்கடிக்கப்பட்ட காகிதம், நிறம் மாறி இருக்கும் என்பதால் பலர் சந்தேகம் அடைவர். அதற்காக, ‘புகைப்பட பிலிம் கழுவும் திரவத்தில் போட்டு எடுத்து, பளபளக்கும் ரூபாய் நோட்டுகளாக மாறிவிட்டது பாருங்கள்’ என்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது (செப்டம்பர் 2015)[10]: சென்ற மாதத்தில் கரூரில் இத்தகைய மோசடி நடந்துள்ளதால், அதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சேலத்தில் பண இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட முயன்ற கரூரைச் சேர்ந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை 25-09-2015 அன்று இரவு கைது செய்தனர். சேலம் சீலநாய்க்கன்பட்டி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40). பானிப் பூரி கடை வைத்துள்ளார். இவரிடம் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகே உள்ள காதப்பாறைப் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (38) என்பவர் பணத்தை  இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறினாராம்.  இதை நம்பிய மகேந்திரன், பாஸ்கரைத் தொடர்பு கொண்டதில், அவர் சீலநாயக்கன்பட்டி வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற மகேந்திரனிடம், பாஸ்கர் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஸ்கரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேந்திரன் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், மகேந்திரன் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து மகேந்திரன் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல இடங்களில் அவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை இரவு பாஸ்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்[11].

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

கிறிஸ்தவ பாஸ்டர்களும், பண இரட்டிப்பு மோசடிகளும்: கிறிஸ்தவ பாஸ்டர்கள் கடந்த ஆண்டுகளில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பண-இரட்டிப்பு மோசடிகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.பி.எம். சர்ச் அரக்கோணம், ஹெவன்லி இன்டர்நேஷனல் மிஷன் [Heavenly International Mission (HIM)] போன்ற மோசடிகளில் அவை வெளிப்பட்டன. டஜன் கணக்கில் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாகத்துடன் அவை நடந்தேறின[12]. அவர்களுக்குள் தொடர்பு இருந்திருந்தாலும், ஏதோ அழுத்தங்களினால் விசயங்கள் அமுக்கப்பட்டன, அமுங்கி விட்டன. சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்குள் நடந்த விவகாரமாக இருந்ததால், பணத்தைத் திருப்பக் கொடுத்த, புகார்களை வாபஸ் வாங்கிக் கொண்டு, வழக்குகளை சுமுகமாக முடித்துக் கொண்ண்டனர். அவ்வகையில் இப்பெண் கிறிஸ்தவ பிரசங்கியும், சர்ச்சில் தனது யுக்தியை ஆரம்பித்தாலும், பிறகு மற்றவர்களிடம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதில் செக்யூலரிஸ ரீதியில் மற்ற மதத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். ஆக, இனி செக்யூலரிஸ ரீதியில் அணுகப்பட்டு, முடிக்கப்பட்டுவிடுமா அல்லது மேலும் விசயங்கள் வெளிவருமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-10-2015

[1] மாலைமலர், சென்னையில் பணம் இரட்டிப்பு கும்பல் கைது: கட்டு கட்டாக நோட்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 10, 2:12 PM IST

[2] The Hindu, Four arrested for ‘money doubling’ scam, October 11, 2015.

Four persons, including a student, were arrested in Perambur on Friday – 10-10-2015 for allegedly being involved in a money doubling scam.  According to the police, money doubling gangs carry black sheets and a solution with them.  “The gang will apply the solution on two genuine notes, smeared with black paste, hidden in the bundle of black sheets. The targets are deceived when the colour fades and the real rupee is seen,” said a senior police officer. They only partially dip the notes in the liquid, claiming that it is very rare. They say that with the solution, they can convert black paper into real money and charge a huge amount for the solution and the black paper. “They collect the money and flee under the pretext of getting more liquid,” said an officer. In this case, the police employed a decoy to contact the suspect. They were called to Perambur. “The suspects said they would give him black paper and the solution for nearly Rs. 5 lakh,” said the officer.  Once the gang arrived, they were arrested. The suspects were identified as Thomson, Mallika, T Rajan and Mohammad Yusuff.

[3] http://www.thehindu.com/news/cities/chennai/four-arrested-for-money-doubling-scam/article7748596.ece

[4] http://www.maalaimalar.com/2015/10/10141214/money-cheating-gang-arrested-n.html

[5] http://www.maalaimalar.com/2013/11/29181445/Money-Doubling-Scam-of-same-fa.html

[6] தினமணி, ரூபாய் நோட்டு இரட்டிப்பு மோசடி:பெண் உள்பட 4 பேர் கைது, By சென்னை, First Published : 11 October 2015 03:33 AM IST

[7] தினமலர், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி, அக்டோபர்.11.2015, 01.48.

[8] தினமலர், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி, அக்டோபர்.11.2015, 01.48.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1361611

[10] தினமணி, பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது, By சேலம், First Published : 27 September 2015 05:55 AM IST

[11] http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/09/27/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-/article3050047.ece

[12] The Crime Investigation Department (CID) police who are investigating the money circulation fraud are planning to make an appeal the court to extend police custody for John Prabhakar. About 12 companies, mostly belonging to Tamil Nadu, and registered in the name of Christian missionary organisations and charitable trusts, collected some hundreds of crores of money from people assuring them to pay ten times more than the amount paid.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/cid-seeks-extension-of-john-prabhakars-custody/article2572141.ece

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

மே 5, 2013

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

Christian priest fraud - money doubling - Ravi 2013

பரிசுத்தஆவி, பிதா, மகன்: கிருத்துவத்தில் மூனிறில் ஒன்றா, ஒன்றில் மூன்றா என்று விவாதிக்கப்படலாம். ஆனால், மோசடிகளில், எல்லாமே ஒன்று என்கிறார்கள். கிருத்துவப் பாதிரிகள் என்று குறிப்பிடும் போது, அவர்களின் “டினாமினேசன்”, மதப்பிரிவு தெரிவிக்கப் படுவதில்லை.  ஆனால், அவர்களின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா என்று புரியவில்லை! இதோ இன்னொன்று:

பெயர் ரவி
விலாசம் சஞ்சீவி நகர், வியாசர்பாடி
மனைவியின் பெயர் வேளாங்கன்னி
மதம் கிருத்துவம்
தொழில் பாதிரி
இதர தொழில் பணம் இரட்டிப்பு, பண வசூல்
காவல் நிலையம் எம்.கே.பி. நகர்
புகார் கொடுக்கப்பட்டது, ஆனால் போலீஸார் வாங்க மறுப்பு
ஏன் புளியந்தோப்பு துணை ஆணையரிடம் செல்லுமாறு கூறல்
முந்தைய புகார் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பணம் கொடுத்தவர் நிலை அலைந்து கொண்டிருக்கின்றனர்

 

அயல்நாடுகளிலிருந்து ஏகப்பட்ட பணம் வரும் நிலையில் இவ்வாறு ஏமாறுவதன் ரகசியம் என்ன? அயல்நாட்களினின்று கோடிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் செலவழித்து, தங்களுக்கும் எடுத்துக் கொள்வதாக அவர்களே பல நேரங்களில் மெய்ப்பித்துள்ளார்கள். பிறகு, உள்நாட்டில் இவ்வாறு ஏன் ஏமாற்றுகிறார்கள்? ஒருவேளை, இந்தியாவை ஒட்டு மொத்தமாக சுரண்ட வேண்டும் என்று ஏதாவது ஒரு திட்டம் உள்ளதா?

 

முந்தைய இடுகைகள்: பணம் மோசடி, நிலம் மோசடி என்று கிருத்துவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்கள் தொடர்ந்து தான் ஈடுபடுகிறார்கள்.  உதாரணத்திற்கு சில:

  • ·         கிருத்துவ அறக்கட்டளை நடத்தி[1], பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!
  • ·         நில மோசடியில் இன்னுமொரு பிஷப்[2]: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!
  • கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை[3].
  • ·         மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா[4], அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?

ஆனால், செய்திகள் வருவதோடு சரி, அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று அறிவிக்கப்படுவதில்லை.

வேதபிரகாஷ்

05-05-2013