Archive for the ‘அய்யா’ Category

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ் – மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (1)

ஓகஸ்ட் 29, 2017

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ்மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (1)

Caldwell conference- tirunelveli- University-1

கால்டுவெல் கருத்தரங்கங்கள் தொடர்ந்த நடைபெற்று வரும் நிலை: கடந்த சில ஆண்டுகளாக கால்டுவெல் நினைவு கருத்தரங்க என்று நடத்தப்பட்டு வருகின்றது. “திராவிட மொழிகளுக்குக் கால்டுவெலின் பங்களிப்பு” என்று தேசிய கருத்தரங்கள் 11-08-2014 மற்றும் 12-08-2014 நாட்களில் மதுரையில், திருமலை நாயக்க்ர் கல்லூரியில் நடைப்பெற்றது[1]. அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி பெசன்ட் அரங்கம், தஞ்சையில் நடைபெற்றது[2]. 10.08.2014 ஞாயிறு எஸ்.எம்.எஸ். கல்யாண மகால், தாணப்ப முதலி தெரு, சென்ட்ரல் தியேட்டர் அருகில்,மதுரை – 1 யில் ராபர்ட் கால்டுவெல் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது[3]. 16.08.2014 மாலை 5 மணி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பனகல் பார்க் அருகில்) தியாகராய நகர், சென்னை –17 நடந்தது என்றுள்ளது[4].  16.08.2014 சனி மாலை 6 மணி நகர அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் நடந்தது என்றுள்ளது[5]. “மோடி அரசின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு  தேசிய இன, மொழி அடையாளங்களை அழிக்கும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!, களம் புகுவோம், தமிழறிஞர் கால்டுவெல் என்ற வாள் உயர்த்தி உழைக்கும் மக்களின் தமிழ் மரபைக் காப்போம்!”, என்று கடலூரில்  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் 25.09.2014 அன்று மாலை 5 மணி அளவில்,  கருத்தரங்கம் நடைபெற்றது[6].

Caldwell conference- CPMIL

பிரிவினை, தேசவிரோத போக்குக் கொண்ட கருத்தரங்கங்கள்: இவை ஏதோ தமிழுக்கு ஆதரவாக, மேம்பாட்டிற்காக, உன்னதிக்காக நிகழ்த்தப்படுவது போலக் காட்டிக் கொண்டாலும், பேச்சாளர்கள் “தமிழ் தேசியம்”, பிரிவினைவாதம் என்று ஆரம்பித்து, தேசவிரோத கருத்துகளில் முடிக்கிறார்கள். இன்றைக்கு விவரங்கள், தவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்கள் என்று எல்லாமே ஓரளவிற்கு வெளிப்படையாகக் கிடைக்கின்றன. அதிலும் சமீபகால வரலாற்று நிகழ்வுகளை, விவரங்களை, அவற்றின் உண்மை தன்மையினை, பலமுக நோக்கில் ஆராய்ந்து, பாரபட்சமின்றி முடிவுக்கு வரும் வகையில் விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றை இக்கால இளைஞருக்கு முறைப்படி எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அந்நிலையில், இன்னும் பழைய, கட்டுக்கதை என்று தூக்கியெறியப் பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கால்டுவெல் ஒன்றும் சரித்திர ரீதியில் புனிதர் அல்ல, மதம் மாற்ற அனுப்பப்பட்ட பாதிரி, தமிழ் கற்று மக்களைப் பிரிக்க முயன்றது, இன்றைக்கு தெரிந்த விசயமாக இருக்கிறது. “திராவிட இனம்” ஒரு கட்டுக்கதை என்ற விசயம் இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருக்கிறது. அந்நிலையில், இன்னும் அத்தகைய கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு, பொருளாதாரம், படிப்பு, முன்னேற்றம் முதலியவற்றில் நாட்டம் கொள்ளாது, மக்களிடையே துவேசம், வெறுப்பு, காழ்ப்பு முதலியவற்றை தூண்டும், ஊக்குவிக்கும் போக்கில், இத்தகைய கருத்தரங்கங்கள் நடத்தப் படுவது கவனிக்கத் தக்கது.

Caldwell conference- Avvai college - 28-08-2017

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?: குணா போன்றோரே, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று முன்னமே எடுத்துக் காட்டினர். இப்பொழுது, இத்தகைய கேள்விகளும் எழுந்துள்ளன. தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது. திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை, “நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை.. …திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை. சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே.…போன்ற உண்மைகளை விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்[7]. இந்நிலையில், மறுபடி பொய்களை வைத்து கருத்தரங்கள் நடத்துவதினால் என்ன, யாருக்கு பிரயோஜனம் என்பதை கவனிக்க வேண்டும். கால்டுவெல் புராணம் பாடும், அடிமை தமிழர்களுக்கு ஒரு உதாரணம் எடுத்துக் காட்டப்படுகிறது.

Caldwell conference- Avvai college - 28-08-2017-inaugurated by Vigila

கால்டுவெல்லின் 800 கி.மீ தீர்த்தயாத்திரை? உண்மையில் கால்டுவெல் ஒன்றும் நடந்தே சென்றுவிடவில்லை. சாதாரணமாக ஐரோப்பியர்கள் எல்லோருமே பல்லக்கு அல்லது மாட்டுவண்டிகளில் தான் சொகுசாக உட்கார்ந்து கொண்டு செல்வார்கள். இந்திய கூலிகள் / வேலையாட்கள் அதற்கென பிரத்யேகமாக இருந்தனர். அவர்கள் தாம் கஷ்டப்பட்டு அந்த வேலைகளை செய்வார்கள். கால்டுவெல்லிற்கு, ஒரு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டதால், அதன்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அவர்களது சிந்தனைகள், பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை ஆராயச் சொன்னதால்தான் அவ்வாறு பல ஊர்களின் வழியாக சென்ன்னையிலிருந்து தனது ஆராய்ச்சி-பயணத்தை ஆரம்பித்தான். அதுதான், அவன் நாஜுக்காகச் சொல்கிறான் , “to get acquainted with the people and their ideas, manners, and to talk in a way in which I could never expect to do if I travelled in a palanquin or even a cart” !  எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவ்வாறுத்தான் பிரயாணம் செய்தான் என்பது உண்மையான விஷயம். நீலகிரி மலையில் சென்னை பிஷப்பான ஜியார்ஜ் ஸ்பென்ஸர் என்பரைப் பார்த்து விவரங்களைக் கேட்டுக் கொள்கிறான். ஒரு விசுவாச ஊழியனாக (Deacon) உறுதிமொழி எடுத்துக் கொள்கிறான். பிறகுதான், தனது ஊழியத்தைச் செய்வதாற்காக இடையன்குடிக்கு அனுபப்படுகிறான். 1841ல் வந்து சேர்கிறான். 1844ல் கல்யாணம்! பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்? பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல். இவனைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில், இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலி மனப்பாங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், தமிழாராய்ச்சியாளர்கள் மூலங்களைப் படிக்காமலேயே, கால்டுவெல், எல்லீஸ் முதலியோரைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்!

Dinamani 27-08-2017 - Caldwell seminar

கால்டுவெல் குடும்பத்தினரின் கலவர வேலைகள்: தமிழரது அடிமைத்தனம், கூலிமனப்பாங்கு, வெள்ளையனுக்கு இன்றும் அடிவருடும் தன்மைதான் இதில் வெளிப்படுகிறது, ஏனெனில், இங்கிலாந்திலேயே, இன்று இவர்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. பிரிவினைவாத, தேசவிரோத கூட்டங்கள் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. சாணர்களை தூஷித்து எழுதியதனால், இவரது புத்தகம் கண்டனத்திற்கு உள்ளாகியது. அதனால், அப்புத்தகம் பின்வாங்கப்பட்டு தடை செய்யப்பட்டது. சட்டவிரோதமாக, இவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளும் கண்டிக்கப்பட்டன. தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் கால்டுவெல் ரீல் விட்டதை சரித்திரம் என்று நம்ப முடியுமா? கால்டுவெல் மாமனார்-மாமியார்- மௌல்ட் தம்பதியர் பல பிரச்சினகளுக்குக் காரணம் என்று தெரிகிறது[8]. சாணர்களை மதம் மாற்றி, ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டதில் இவர்களது பங்கு புலப்படுகிறது. 1821ல் தமிழ் பேசப்பட்ட பகுதிகள் கொச்சிற்கு மற்றாப்பட்டபோதும், 1828-30களில் நடந்த ஜாதிக் கலவரங்களுக்கும் இவர்களே காரணம். ஆனால், கீழ்ஜாதி மக்கள், மேல்ஜாதி மக்களுக்குண்டான உரிமைகளை பெற்றபோது, இந்துக்கள் தங்களுடைய வீடுகளையெல்லாம் கொள்ளையெடித்தனர் என்று எழுதிவைத்துள்ளனர்!  அதாவது, இந்துக்களுக்கிடையில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டால், ஏன் இவர்கள் வீடுகள் கொள்ளையடிக்கப்படவேண்டும்? அதுமட்டுமல்லாது, கொவிலுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற வேலைகளும், இந்துக்களை கோபமடையச் செய்துள்ளன[9].

© வேதபிரகாஷ்

29-08-2017

Caldwell conference- Avvai college - 28-08-2017-Christian pastors

[1] http://govt-tdd-en.s3.amazonaws.com/UTS/Caldwell_Seminar_Invitation.pdf

[2] http://www.vinavu.com/2014/07/30/robert-caldwell-200th-anniversary-in-thanjavur/

[3] http://www.vinavu.com/2014/08/07/robert-caldwell-200th-anniversary-in-madurai/

[4] http://www.vinavu.com/2014/08/14/robert-caldwell-200th-anniversary-in-chennai/

[5] http://www.vinavu.com/2014/08/13/robert-caldwell-200th-anniversary-in-vellore/

[6] http://www.vinavu.com/2014/10/01/robert-caldwell-200th-anniversary-in-cuddalore/

[7] http://www.tamilcanadian.com/article/tamil/875

[8] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[9] http://www.britishempire.co.uk/article/faithandfamily.htm

 

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

அணு-உலை எதிர்ப்பு விஷயத்தில் இரட்டை வேடம்[1] போட்டு மக்களை ஏமாற்றியது தெரியவதுள்ள வேலையில்[2], அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள் பிஷப்புகள்[3]. வேடிக்கையென்னவென்றால், இவர்கள் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன[4]. ஆனால், அவற்றைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

  1. பற்பல பாதிரிகள், பாலியல் குற்றங்கள், சிறுவர் வன்புணர்ச்சி அக்கிரமங்கள், சிறுமியர் வன்புணர்ச்சி குரூரங்கள், கற்பழிப்பு பாதகங்கள், நிலமோசடிக:ள், பணக்கையாடல்கள் என மிகவும் அதிகமாக சட்டமீறல்களில் மாட்டியிருந்தாலும், அதைக் கண்டிப்பதில்லை. அரசு கண்டுக்கொள்வதே இல்லை. அப்படியென்றால், அரசு ஆதரிக்கிறதா?
  2. அப்படியென்ன இந்திய நாட்டில் கிருத்துவ சாமியார்களுக்கு சிறப்பு சலுகைகள்?
  3. அப்படிப்பட்ட விலக்கு இந்தியாவில் எப்படி கிருத்துவ குற்றவாளிகளுக்கு இருக்கிறது?
  4. இப்பொழுது கூட, இந்திய மீனவர்களை இலங்கையர் சுட்டால், ஒரு மாதிரி பிரச்சினையை கையாளுகிறார்கள். ஆனால், இத்தாலிய கிருத்துவர்கள் சுட்டுக் கொன்றாலும், வாடிகன் வரை விஷயம் செல்கிறது[5]. இந்திய கார்டினல்களே, வவடிகனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்[6], தாய்நாட்டுச் சட்டங்களையோ, கிருத்துவ மீனவர்களையோ மதிப்பதில்லை, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
  5. அப்படியென்றால், தமிழ் மீனவர்கள் மலையாளத்து மீனவர்களை விட குறைந்தவர்களா?
  6. அதிலும், இந்து மீனவர்கள் கிருத்துவ மீனவர்களை விட குறைந்தவர்களா?
  7. இந்தியாவில் சுட்டுக் கொலைசெய்து விட்டு, தங்கள் நாட்டு சட்டப்படி, தண்டனைக் கொடுப்போம் என்றால் என்ன?
  8. எல்லோருக்கும் ஒரு சட்டம் எனும்போது, கிருத்துவர்களுக்கு மட்டும், ஏன் சட்டங்கள் மாறுகின்றன? நாங்கள் ஊர்வலமாகச் செல்வோம் என்கின்றனர்.

மற்ற பாதிரிகள் சொன்னால், இந்த பாதிரிகள் கேட்பார்களா என்ன? அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை!

பாதிரிகள்       அணு உலை எதிர்ப்பு கூட்டம் / குழு போராட்டம் வேதபிரகாஷ்
11-03-2012


[4]  இதைபற்றி இந்த இணைதளத்தில் பல இடுகைகளை விவரங்களுடன் வெளியிட்டுள்ளேன்: https://christianityindia.wordpress.com/

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

வங்கிக் கணக்குளை முடக்குவது கிருத்துவர்களை அவமதிப்பதாகும்: சின்னப்பா தொடர்கிறார். “அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சோதனை நடத்தினார்கள். நாங்கள் கணக்கு காட்டினோம்[1]. அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் எப்.சி.ஆர்.ஏ. எண்ணை தடை

இடிந்தகரை கிராம மக்கள் போராடியது முதலில் அச்சத்திற்ககத்தான். ஆனால், ஒஇஷப்புகள் அதில் புகுந்து மதத்தை நுழைத்தனர். அய்யா-வழி பின் பற்றும் மக்களை மதம் மாற்றலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட்டது கிராம மக்களுக்கு தெரியும்.

செய்து, வங்கி கணக்கை முடக்கிவிட்டனர்[2]. தற்போது ரூ.1 கோடியே 60 லட்சம் பணம் வங்கியில் முடங்கி கிடக்கிறது. வங்கி கணக்கை முடக்கிய நடவடிக்கையால் ஆயர் பேரவை, பேரதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை, சிறுபான்மை கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துவது போல் ஆகும். தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடும்படி சி.பி.ஐ.யையும், தமிழக அரசையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி இருக்கிறார்[3]. கூடங்குளம் அணுஉலை குறித்து உருவாகி உள்ள விவாதங்களையும், போராட்டங்களையும் மனதில் கொண்டுதான் மத்திய அரசு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கும், பிற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த அணுஉலை, கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அணுஉலை தங்கள் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதால்தான் ஆட்சேபணை தெரிவித்து போராடி வருகிறார்கள்.

பிரச்சினை வந்ததும் செக்யூலார் சாயம் பூசப்பார்க்கிறார்கள் போலும்!: சின்னப்பா மேலுன் தொடர்கிறார், “அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் 217 இந்து பெண்கள் அணுஉலை திட்டத்தை நிறுத்த உதவி செய்ய வேண்டி உள்ளூர் பிள்ளையார் கோவிலுக்கு பால்குடம் சுமந்து வந்து சென்றனர். போராட்டத்தில்

பால் குடங்களை எடுத்து வந்தவர்களுக்கு, கோடிக்கணக்கில் அந்நியாநாடுகளிலிருந்து பணம் வரவில்லை. ஆனால், கிருத்துவ அமைப்புகளுக்கு வந்துள்ளது. இதுதான் முக்கியமான வித்தியாசம். அம்மக்கள் உண்மையாக போராடினர். ஆனால், கிருத்துவர்கள் அந்த போராட்டத்தை “ஹைஜேக்” செய்து, ஏதோ அவர்கள் தாம் உண்மையான போராளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ள நாடகம் ஆடுகின்றனர். மக்கள் இதனை புரிந்து கொண்டு விட்டனர்.

ஈடுபட்டு வரும் மக்களுக்கு திருச்சபை எவ்வித பொருளாதார உதவியும் செய்யவில்லை[4]. எனவே, கிறிஸ்தவர்கள்தான் அணுஉலை திட்டத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிராக உள்ளனர் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அந்த போராட்டத்திற்கு நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை அளிக்கிறோமே தவிர, போராட்டத்திற்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மின்சாரம் தேவை. அதற்கு நாங்கள் தடைபோடவில்லை[5].

பணப் போக்குவரத்து இல்லை என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே, சரியான கணக்கைக் காட்டியிருக்கலாமே?: சின்னப்ப விடுவதாக இல்லை, மற்ற விவகாரங்களையும் கூறுகிறார், “அணுஉலை தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் தங்கள் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படும் என்ற பயத்தில் உள்ளனர். பயத்திலும், துன்பத்திலும் உள்ள மக்களுடைய உணர்வுகளை மதிப்பது

முடியும் வரை சேதத்தை ஏற்படுத்திவிட்டு, இப்பொழுது நல்ல பேரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாடகம் ஆடுகின்றனர். சர்ச்சிற்கு சம்பந்தம் இல்லை என்றால், அவர்கள் விலகியிருக்கலாம். ஆனால், மக்களின் போராட்டை, தொஇசைத் திருபியது தான், மகளுக்கே சந்தேகம் வந்து, கிராம மக்கள் தனியாக சென்று வ்ட்டனர். கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யலாம் என்று மமதையில் உள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர்.

திருச்சபையின் இயல்பு மற்றும் தார்மீக கடமை[6]. அந்த வகையில்தான் போராட்டத்திற்கும், திருச்சபைக்கும் உள்ள தொடர்பே தவிர வேறு எவ்விதமான நிதி பரிவர்த்தனையோ இல்லை. மக்களின் பயத்தை போக்கி அணுலை திட்டம் குறித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அரசு முடிவு எடுக்குமானால் அதற்கு திருச்சபை குறுக்கே வராது. இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்”.

பாரம்பரியம் இருந்தால், அதனைக் கட்டிக் காக்க வேண்டியது தானே?: தடை செய்யப்பட்டு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமானது 90 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அமைப்பு. பதிவு செய்யப்பட்ட ஒரு

உண்மையை மறைக்க இப்படியல்லாம் கதையளப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஓவ்வொரு பிஷப்பும் தனியாக சங்கங்கள், நிறுவனங்கள் வைத்துக் கொண்டு, கம்பெனிகள் போன்று நடத்திக் கொண்டு, அதில் கோடிகளை அள்ளுவதுதான், பிரச்சினையில் முடிந்துள்ளது.

தொண்டு நிறுவனம். எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த அமைப்பு பொதுநலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று யாருமே குற்றம் சுமத்த முடியாது. ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் 2,100 ஆசிரியர்கள், 2 லட்சம் மாணவ-மாணவிகளை கொண்டுள்ள 230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1,200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

கிருத்துவப் பாதிரிகளே அரசியல் செய்யும் போது, காங்கிரஸ் அரசியல் செய்யாதா என்ன?: சின்னப்பா அரசியலையும் விட்டு வைக்கவில்லை, “அரசியலில் கிறிஸ்தவர்கள் மதசார்பற்ற கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி இப்போது தன்னுடைய முகத்தை காட்ட

இப்படியெல்லாம், பொய்களை அள்ளி வீசியுள்ளார். பிறகு சன் டிவியில் ஏன் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டும்[7] என்று இதே பாதிரிகள் பேசினர்? காங்கிரஸின் மதசார்பற்ற நிலை என்ற பொய்யை அனைவரும் அறிவர். சோனிசா மெய்னோ ஜெயித்தவுடன், கிருத்து ஆட்சி வந்து விட்டது என்று ஜெபகூட்டங்கள் நடத்தி வ்ட்டு, இப்பொழுது இப்படி வேடம் பேசுகின்றனர்.

தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை மட்டும் மத்திய அரசு குறிவைத்து தாக்குவது ஏன்? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றனர்.

மற்ற கிராமத்து மக்களை ஒதுக்கி விட்டு, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு பிஷப்புகள் போடும் நாடகம்: கடந்த அக்டோபர் 2011ல் மன்மோஹன் சிங், கூடங்குள திட்டத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்[8]. ஆனால், கிருத்துவகள் அமெரிக்க மற்றும் இதர அந்நிய நாட்டு கிருத்துவர்கள் மூலம், ஜெயலலிதாவை எதிர்க்க செய்தியை அனுப்பினர். இவர்கள் தாம் முன்பு “தங்கத் தாரகை” பட்டத்தை அளித்து, மதமாற்றச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்தனர். இதனால் மைத்ரேயன் தலைமையில், அந்த திட்டத்தை நிறுத்துமாறு ஒரு குழு அனுப்பப்பட்டது. அப்பொழுதே, சர்ச்சுகள் / கிருத்துவர்கள், மக்கள் போராட்டத்தை அவர்கள் “ஹைஜாக்” செய்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது[9]. “அய்யா-வழி” என்ற இயக்கத்தைச் சேர்ந்த  பாலப்பிரஜாபதி அடிகளார், கிருத்துவர்கள் தமது போராட்டத்தை கவந்து விட்டார்களே என்று வருத்தத்துடன் சொல்லியிருந்தார்[10]. அரசு உத்திரவாதம் கொடுத்தப் பிறகுக் கூட, போராட்டத்தை நடத்துவதை, இவர் குறை கூறினார். தில்லிக்கு சென்ற குழுவில் இவரும் இருந்தார். ஏனெனில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தாம். ஆனால், பிறகு வந்த கூட்டங்களில், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. கிருத்துவர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்[11]. மீனவர்களை வைத்துக் கொண்டு கிறுத்துவர்கள் இத்தகைய நாகத்தை ஆடி வருகின்றனர். ஆனால், மீனவர்களைத் தவிர மற்ற மக்கள், பல கிராமங்களில் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள், கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்றவர்களை தனிமைப்படுத்தி, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு தாங்கள்தாம், இப்போராடத்திற்கு முக்கியஸ்தர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[12].

அமெரிக்கக் கம்பெனிகள்- கிருத்துப் பிஷப்புகள் கூட்டு: ராபர்ட்-டி-நொபிலி[13] என்ற பாதிரி, வெடியுப்பு சப்ளை செய்ய கமிஷன் பெற்று வந்தார். அதே முறையைத்தான் இப்பொழுதுள்ளவர்களும் செய்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவிடமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ர்ஷ்யா போன்றே, இந்நாட்டுகளுக்கு உதிரி பாகங்களைச் செய்யத் தெரிரியும், இந்தியாவிற்கு சம்ளை செய்யவும் தெரியும். அதற்கான கமிஷனையும் இந்த பிஷப்புகள் பெற்றுக் கொள்வர். இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றனர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், 12-11-2011 அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

இனி ஜெருசலேம் பிரயாணம் தான் பாக்கி: இப்பொழுது இந்த பிஷப்புகள் தங்களது நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். சோனியாவைப் பொறுத்த வரைக்கும், உபியில் பருப்பு வேகாததால், பட்ஜெட் ஒன்று தான் பாக்கி. அதன் பிறகு, முஸ்லீம் பிரச்சினையை ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனெவே காங்கிரஸ் இல்லாத எல்ல மாநிலங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டாகியாயிற்று. இதனால், எதிர்கட்சிகளும், வழக்கம் போல மூன்றாவது அணி / இடைதேர்தல் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர். பிஜேபியை செக்-செய்து விட்டதால், மற்ற கட்சிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் சோனியா. ஜெயலலிதாவை மடக்கியவுடன், கூடங்குளம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இந்த பிஷப்புகள் வேறுவிதமாக பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். முதல் கிருத்துவ கூட்டம், ஜெருசலேம் பிரயாணத்திற்கு தயாராகி விடுவர்!

வேதபிரகாஷ்
11-02-2012


[1] இதுவும் பொய்யான வாதம், அந்நியாநாட்டுப் பணம், தனியா நிறுவனங்களுக்கு திருப்பியனுப்பப் பட்டு, அதிலிருந்து, இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பணம் கொடுப்பதால்தான், அத்தகய வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன. அவற்றிற்கும், கிருத்துவகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்றால், உண்மையை ஒப்புக்க்கொண்டது போலாடிற்று.

[2] எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

[3] திருவாளர் சிதம்பரம் அவ்வாறு செய்து விடுவாரா என்ன, இதெல்லாம் நாடகம் என்பது எஸ்ரா சற்குணமே ஒரு மாதிரியாக சொல்லியிருக்கிறாரா?

[4] ஆமாம், அவர்கள் தாம் சாத்தானை வழிபடும் இந்துக்கள் ஆயிற்றே, எப்படி பணம் கொடுப்பாய்? கிருத்துவனாக மாறினால் கொடுப்பாய். அதனை சொல்லாமல் சொல்லும் விதம் தான் இது.

[5] ஆஹா, அம்மாதிரியான அதிகாரங்கள் கூட அவர்களுக்கு உண்டு என்று மறைமுகமாக சொல்கிறார்கள் போலும். அப்படியென்றால், இவ்வளவு நாட்களாக, இவர்கள் தாம் இம்மாதிரி கலாட்டா செய்து மக்களை கடுமையாக பாதித்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[6] அதனால்தான், அய்யா-வழி மக்களை துச்சமாக மதித்து, அவர்கள் தலைவரையும் அவமானப் படுத்தி, இந்த போராட்டத்திலிருந்தே, விலகிக்கொள்ளும் படி, தந்திரமாக நரித்தன வேலையை, இந்த பிஷப்புகள் செய்தனர்.

[10] Though the poster boy of the agitation, S P Udayakumar, does not belong to the fisherman community and hails from Nagercoil, Balaprajathipathi Adigalar, the head priest of the Ayyavazhi cult in Kanyakumari district, feels that the church leaders have appropriated the protests.

[11] He criticises the present leaders for resuming the protest even after the government gave an assurance that it would look into the issue. Initially, Adigalar had addressed the crowds in Idinthakarai when the indefinite fast was held. He was also invited to be part of the delegation that went to meet the Prime Minister in New Delhi.

[13] காவி உடைகளைப் போட்டுக் கொண்டு, மதுரைக்கு வந்து, பிராமணன் போல நடித்து, சில இந்தியர்களை மதம் மாற்றிய, போலிக் கிருத்துவ சாமியார்.

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (1)!

மார்ச் 10, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (1)!


கணக்கு, தணிக்கை என்றதுமே ஆடிப்போன கிருத்துவர்கள்: வரவு, செலவு, கணக்கு, தணிக்கை என்றதுமே, சர்ச்சுகள் பயந்து விட்டன. இவான் அம்ப்ரோஸ் நடத்தும் இரண்டு நிறுவனங்கள் அமெரிக்கா உட்பட ரூ. 54 கோடி பணம் பெற்றது தெரிய வந்துது[1]. இதெல்லாம் சோனியா மெய்னோ கிருத்துவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை அல்ல. ஆனால், கிருத்துவர்களுக்கிடையில் நடக்கும் நாடகம்[2]. இதனை முன்பே எடுத்துக் காட்டியாகி விட்டது[3]. இல்லையென்றால், சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு தைரியம் வராது[4]. பிரதமர் மீது வழக்குப் போடுவேன் என்று மிரட்ட முடியாது. இப்படி பல விஷயங்கள் அநாவசியமாக வெளிவருவதை கிருத்துவர்கள் விரும்பவில்லை.

பங்குத் தந்தைகளிடம் பங்குக் கேட்பார்கள் கிருத்துவர்கள்: முன்பெல்லாம், சர்ச்சுகள் / கிருத்துவர்கள் கோடிகளில் பணத்தைப் பெறுகிறார்கள் என்றுதான் சொல்வார்கள், ஆனால், இப்பொழுது அப்படி கோடிகளில் இன்னார்-இன்னார்களிடமிருந்து இவ்வளவு பெற்றனர் என்பதும், மற்றவர்கள் கணக்குக் கேட்கத்தான் செய்வார்கள். இப்பொழுது கார்டினல்கள், பிரஷப்புகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள், கிருத்துவ ஐயர்கள், கிருத்துவ முதலியார்கள்  முதலியொர் அவ்வளவு அள்ளுகின்றனர், அமுக்குகின்றனர் என்பது தெரிந்து விடும். இங்கு தமிழகத்தில் கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு கிறுத்துவர்கள் நாடகம் போடுகிறார்கள். ஆனால், கிருத்துவ மீனவர்களை, இத்தாலியக் கிருத்துவர்களே சுட்டுக் கொன்றபோது, வாடிகன் முதல் நமது உள்ளூர் பிஷப் வரை வக்காலத்து வாங்கி பேசுகிறார்கள்[5]. அங்கு வாடிகனின் அப்பட்டமான தலையீடு வெளிப்படுகிறது. இதே மமதை, ஆணவம், கொழுப்பு, திமிர் முதலியவை சின்னப்பாவின் வார்த்தைகளிலும் வெளிப்படுகின்றன, “இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்”.

பல பிஷப்புகள் கூடங்குள விவாகாரத்தில் எதிர்ப்பாளிகளை ஆதரித்துப் பேசுவது ஏன்: ஏ. எம். அருளப்பா (சென்னை), யுவான் ஆம்புரோஸ் (தூத்துக்குடி), வின்சென்ட் எம். கன்செஸ்ஸியோ (தில்லி) என்று பலர்[6] வக்காலத்து வாங்கி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கெனெவே அனைத்துலக ரீதியில், கிருத்துவர்கள் நடத்தி வரும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை சந்தோஷமாக ஆதரித்தும், பணவுதவி செய்தும் மற்ற சர்ச்சுகள் செய்திகளை வெளிப்படையாக வெளியிட்டுள்ளன.

இருகுரலில் பேசும் வேடதாரி கிருத்துவ பிஷப்புகள்: தமிழக பிஷப் கவுன்சில், இப்படி மத்திய அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று ஒப்பாரி வைக்கும் நேரத்தில், மற்ற பிஷப்புகள் மத்திய யு.பி.ஏ. அரசு அவ்வாறு செயல்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்கள்:

  • ஜி. தெய்வசகாயம் என்ற சி.எஸ்.ஐ. பிஷப் அம்மாதிரி ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை என்று சொல்லியுள்ளார்[7]. “நாங்களும் தான் தர்ம காரியங்களை செய்து வருகிறோம். ஆனால், அரசு எங்கள் மீது எந்த விதமான அழுத்தத்தை ஏற்படுத்துவதில்லை. நாங்கள் இப்போராட்டத்தில் குறிப்பிட்ட நிலயை எடுத்துக் கொள்ளவில்லை”.
  • ஜெபசந்திரன் என்ற எவாஞ்செலிகல் சர்ச் ஆப் இந்தியா (Head of the Evangelical Church of India) பேசும்போது, “அவர்கள் அந்நிய நாட்டு பணத்தை உபயோகிக்கக் கூடாது. தணிக்கைக்கள் உள்ளன. ஆகையால் அயல்நாட்டுப் பணத்தை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. நாங்கள் தார்மீக ரீதியில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம்”, என்று விளக்கம் அளித்தார்.
  • மற்றொரு பிஷப் எஸ்ரா சர்குணம்  (Bishop Ezra Sargunam ), பேசும்போது, ”யு.பி.ஏ. அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, அவர்களைத் துன்புறுத்துகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. உண்மையில் அது சிறுபான்மையினருக்கு பல சலுகைகளை அளிக்க முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கிருத்துவர்கள் அந்நியபணத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை என்பதையும் நம்பவில்லை”, என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த எஸ்ரா சற்குணம் மிகவும் பலமானர் மற்றும் சட்டங்களை மதிக்காமல் செயல் படுவதிலும் வல்லவர்[8].

கூடங்குளம் போராட்டத்தை மைய்யமாக வைத்து கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துகிறது மத்திய அரசு-பிஷப் சின்னப்பா[9]: கூடங்குளத்தில் நடந்து வருவது மக்களின் போராட்டம். அதில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எந்தவிதமான தொடர்பும்

இந்த சின்னப்பாவே பற்பல வழக்குகளில் சிக்கியுள்ளார். இதைப் பற்றி கேட்க வந்த. நிருபரை பூட்டி வைத்து அடித்துள்ளார்[10]. ஒரு ஆசிரியையை பதவி உயர்வு கொடுக்காமல் சதாய்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதைத்தவிர, கோடிக்கணக்கில் நில அபகரிப்பு வழக்கும் நிலுவயில் உள்ளது.[11]

இல்லை. அது கிறிஸ்தவர்களின் போராட்டமும் அல்ல. ஆனால் இந்தப் பிரச்சினையை வைத்து சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை மத்திய அரசு இழிவுபடுத்துகிறது என்று கிறிஸ்தவப் பேராயர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தமிழக ஆயர் பேரவை தலைவரும், சென்னை மயிலை மறை மாவட்ட பேராயருமான சின்னப்பா, தூத்துக்குடி பேராயர் இவான் அம்புரோஸ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமும், தூத்துக்குடி மறைமாவட்ட பல்நோக்கு சமூக சேவை சங்கமும் சாதி, மத பாகுபாடு இன்றி பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுக்கு வரும் நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 32 கேள்விகள் அடங்கிய ஒரு விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கேட்டிருந்தனர். நாங்கள் அதற்கு பதில் அனுப்பினோம். பின்னர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

வேதபிரகாஷ்
10-02-2012


[7] Times of India, Church divided on govt action against N-stir, Karthick S, TNN | Mar 10, 2012, 01.21AM IST, http://timesofindia.indiatimes.com/city/chennai/Church-divided-on-govt-action-against-N-stir/articleshow/12203039.cms

[8] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

https://christianityindia.wordpress.com/2010/09/27/nothing-illegal-in-encroaching-land-for-church/

[9] ஒன்-இந்தியா-தமிழ், கூடங்குளம் போராட்டத்தை மைய்மாக வைத்து கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துகிறது மத்திய அரசு-பிஷப் சின்னப்பா. வெள்ளிக்கிழமை, மார்ச் 9, 2012, 8:56 [IST]

http://tamil.oneindia.in/news/2012/03/09/tamilnadu-centre-harassing-christians-archbishop-am-chinnappa-aid0091.html

[10] வேதபிரகாஷ், பத்திரிக்கையாளர்கள்தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் –பிஷப்பும் உடந்தையா?!, https://christianityindia.wordpress.com/2010/09/16/பத்திரிக்கையாளர்கள்-தாக/

தினகரன், பிஷப்ஹவுசில்வைத்துதாக்கியதுஏன்?, 15-09 2010, http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6835