கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

வங்கிக் கணக்குளை முடக்குவது கிருத்துவர்களை அவமதிப்பதாகும்: சின்னப்பா தொடர்கிறார். “அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சோதனை நடத்தினார்கள். நாங்கள் கணக்கு காட்டினோம்[1]. அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் எப்.சி.ஆர்.ஏ. எண்ணை தடை

இடிந்தகரை கிராம மக்கள் போராடியது முதலில் அச்சத்திற்ககத்தான். ஆனால், ஒஇஷப்புகள் அதில் புகுந்து மதத்தை நுழைத்தனர். அய்யா-வழி பின் பற்றும் மக்களை மதம் மாற்றலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட்டது கிராம மக்களுக்கு தெரியும்.

செய்து, வங்கி கணக்கை முடக்கிவிட்டனர்[2]. தற்போது ரூ.1 கோடியே 60 லட்சம் பணம் வங்கியில் முடங்கி கிடக்கிறது. வங்கி கணக்கை முடக்கிய நடவடிக்கையால் ஆயர் பேரவை, பேரதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை, சிறுபான்மை கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துவது போல் ஆகும். தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடும்படி சி.பி.ஐ.யையும், தமிழக அரசையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி இருக்கிறார்[3]. கூடங்குளம் அணுஉலை குறித்து உருவாகி உள்ள விவாதங்களையும், போராட்டங்களையும் மனதில் கொண்டுதான் மத்திய அரசு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கும், பிற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த அணுஉலை, கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அணுஉலை தங்கள் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதால்தான் ஆட்சேபணை தெரிவித்து போராடி வருகிறார்கள்.

பிரச்சினை வந்ததும் செக்யூலார் சாயம் பூசப்பார்க்கிறார்கள் போலும்!: சின்னப்பா மேலுன் தொடர்கிறார், “அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் 217 இந்து பெண்கள் அணுஉலை திட்டத்தை நிறுத்த உதவி செய்ய வேண்டி உள்ளூர் பிள்ளையார் கோவிலுக்கு பால்குடம் சுமந்து வந்து சென்றனர். போராட்டத்தில்

பால் குடங்களை எடுத்து வந்தவர்களுக்கு, கோடிக்கணக்கில் அந்நியாநாடுகளிலிருந்து பணம் வரவில்லை. ஆனால், கிருத்துவ அமைப்புகளுக்கு வந்துள்ளது. இதுதான் முக்கியமான வித்தியாசம். அம்மக்கள் உண்மையாக போராடினர். ஆனால், கிருத்துவர்கள் அந்த போராட்டத்தை “ஹைஜேக்” செய்து, ஏதோ அவர்கள் தாம் உண்மையான போராளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ள நாடகம் ஆடுகின்றனர். மக்கள் இதனை புரிந்து கொண்டு விட்டனர்.

ஈடுபட்டு வரும் மக்களுக்கு திருச்சபை எவ்வித பொருளாதார உதவியும் செய்யவில்லை[4]. எனவே, கிறிஸ்தவர்கள்தான் அணுஉலை திட்டத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிராக உள்ளனர் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அந்த போராட்டத்திற்கு நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை அளிக்கிறோமே தவிர, போராட்டத்திற்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மின்சாரம் தேவை. அதற்கு நாங்கள் தடைபோடவில்லை[5].

பணப் போக்குவரத்து இல்லை என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே, சரியான கணக்கைக் காட்டியிருக்கலாமே?: சின்னப்ப விடுவதாக இல்லை, மற்ற விவகாரங்களையும் கூறுகிறார், “அணுஉலை தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் தங்கள் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படும் என்ற பயத்தில் உள்ளனர். பயத்திலும், துன்பத்திலும் உள்ள மக்களுடைய உணர்வுகளை மதிப்பது

முடியும் வரை சேதத்தை ஏற்படுத்திவிட்டு, இப்பொழுது நல்ல பேரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாடகம் ஆடுகின்றனர். சர்ச்சிற்கு சம்பந்தம் இல்லை என்றால், அவர்கள் விலகியிருக்கலாம். ஆனால், மக்களின் போராட்டை, தொஇசைத் திருபியது தான், மகளுக்கே சந்தேகம் வந்து, கிராம மக்கள் தனியாக சென்று வ்ட்டனர். கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யலாம் என்று மமதையில் உள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர்.

திருச்சபையின் இயல்பு மற்றும் தார்மீக கடமை[6]. அந்த வகையில்தான் போராட்டத்திற்கும், திருச்சபைக்கும் உள்ள தொடர்பே தவிர வேறு எவ்விதமான நிதி பரிவர்த்தனையோ இல்லை. மக்களின் பயத்தை போக்கி அணுலை திட்டம் குறித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அரசு முடிவு எடுக்குமானால் அதற்கு திருச்சபை குறுக்கே வராது. இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்”.

பாரம்பரியம் இருந்தால், அதனைக் கட்டிக் காக்க வேண்டியது தானே?: தடை செய்யப்பட்டு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமானது 90 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அமைப்பு. பதிவு செய்யப்பட்ட ஒரு

உண்மையை மறைக்க இப்படியல்லாம் கதையளப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஓவ்வொரு பிஷப்பும் தனியாக சங்கங்கள், நிறுவனங்கள் வைத்துக் கொண்டு, கம்பெனிகள் போன்று நடத்திக் கொண்டு, அதில் கோடிகளை அள்ளுவதுதான், பிரச்சினையில் முடிந்துள்ளது.

தொண்டு நிறுவனம். எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த அமைப்பு பொதுநலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று யாருமே குற்றம் சுமத்த முடியாது. ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் 2,100 ஆசிரியர்கள், 2 லட்சம் மாணவ-மாணவிகளை கொண்டுள்ள 230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1,200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

கிருத்துவப் பாதிரிகளே அரசியல் செய்யும் போது, காங்கிரஸ் அரசியல் செய்யாதா என்ன?: சின்னப்பா அரசியலையும் விட்டு வைக்கவில்லை, “அரசியலில் கிறிஸ்தவர்கள் மதசார்பற்ற கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி இப்போது தன்னுடைய முகத்தை காட்ட

இப்படியெல்லாம், பொய்களை அள்ளி வீசியுள்ளார். பிறகு சன் டிவியில் ஏன் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டும்[7] என்று இதே பாதிரிகள் பேசினர்? காங்கிரஸின் மதசார்பற்ற நிலை என்ற பொய்யை அனைவரும் அறிவர். சோனிசா மெய்னோ ஜெயித்தவுடன், கிருத்து ஆட்சி வந்து விட்டது என்று ஜெபகூட்டங்கள் நடத்தி வ்ட்டு, இப்பொழுது இப்படி வேடம் பேசுகின்றனர்.

தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை மட்டும் மத்திய அரசு குறிவைத்து தாக்குவது ஏன்? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றனர்.

மற்ற கிராமத்து மக்களை ஒதுக்கி விட்டு, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு பிஷப்புகள் போடும் நாடகம்: கடந்த அக்டோபர் 2011ல் மன்மோஹன் சிங், கூடங்குள திட்டத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்[8]. ஆனால், கிருத்துவகள் அமெரிக்க மற்றும் இதர அந்நிய நாட்டு கிருத்துவர்கள் மூலம், ஜெயலலிதாவை எதிர்க்க செய்தியை அனுப்பினர். இவர்கள் தாம் முன்பு “தங்கத் தாரகை” பட்டத்தை அளித்து, மதமாற்றச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்தனர். இதனால் மைத்ரேயன் தலைமையில், அந்த திட்டத்தை நிறுத்துமாறு ஒரு குழு அனுப்பப்பட்டது. அப்பொழுதே, சர்ச்சுகள் / கிருத்துவர்கள், மக்கள் போராட்டத்தை அவர்கள் “ஹைஜாக்” செய்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது[9]. “அய்யா-வழி” என்ற இயக்கத்தைச் சேர்ந்த  பாலப்பிரஜாபதி அடிகளார், கிருத்துவர்கள் தமது போராட்டத்தை கவந்து விட்டார்களே என்று வருத்தத்துடன் சொல்லியிருந்தார்[10]. அரசு உத்திரவாதம் கொடுத்தப் பிறகுக் கூட, போராட்டத்தை நடத்துவதை, இவர் குறை கூறினார். தில்லிக்கு சென்ற குழுவில் இவரும் இருந்தார். ஏனெனில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தாம். ஆனால், பிறகு வந்த கூட்டங்களில், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. கிருத்துவர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்[11]. மீனவர்களை வைத்துக் கொண்டு கிறுத்துவர்கள் இத்தகைய நாகத்தை ஆடி வருகின்றனர். ஆனால், மீனவர்களைத் தவிர மற்ற மக்கள், பல கிராமங்களில் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள், கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்றவர்களை தனிமைப்படுத்தி, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு தாங்கள்தாம், இப்போராடத்திற்கு முக்கியஸ்தர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[12].

அமெரிக்கக் கம்பெனிகள்- கிருத்துப் பிஷப்புகள் கூட்டு: ராபர்ட்-டி-நொபிலி[13] என்ற பாதிரி, வெடியுப்பு சப்ளை செய்ய கமிஷன் பெற்று வந்தார். அதே முறையைத்தான் இப்பொழுதுள்ளவர்களும் செய்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவிடமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ர்ஷ்யா போன்றே, இந்நாட்டுகளுக்கு உதிரி பாகங்களைச் செய்யத் தெரிரியும், இந்தியாவிற்கு சம்ளை செய்யவும் தெரியும். அதற்கான கமிஷனையும் இந்த பிஷப்புகள் பெற்றுக் கொள்வர். இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றனர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், 12-11-2011 அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

இனி ஜெருசலேம் பிரயாணம் தான் பாக்கி: இப்பொழுது இந்த பிஷப்புகள் தங்களது நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். சோனியாவைப் பொறுத்த வரைக்கும், உபியில் பருப்பு வேகாததால், பட்ஜெட் ஒன்று தான் பாக்கி. அதன் பிறகு, முஸ்லீம் பிரச்சினையை ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனெவே காங்கிரஸ் இல்லாத எல்ல மாநிலங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டாகியாயிற்று. இதனால், எதிர்கட்சிகளும், வழக்கம் போல மூன்றாவது அணி / இடைதேர்தல் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர். பிஜேபியை செக்-செய்து விட்டதால், மற்ற கட்சிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் சோனியா. ஜெயலலிதாவை மடக்கியவுடன், கூடங்குளம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இந்த பிஷப்புகள் வேறுவிதமாக பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். முதல் கிருத்துவ கூட்டம், ஜெருசலேம் பிரயாணத்திற்கு தயாராகி விடுவர்!

வேதபிரகாஷ்
11-02-2012


[1] இதுவும் பொய்யான வாதம், அந்நியாநாட்டுப் பணம், தனியா நிறுவனங்களுக்கு திருப்பியனுப்பப் பட்டு, அதிலிருந்து, இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பணம் கொடுப்பதால்தான், அத்தகய வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன. அவற்றிற்கும், கிருத்துவகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்றால், உண்மையை ஒப்புக்க்கொண்டது போலாடிற்று.

[2] எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

[3] திருவாளர் சிதம்பரம் அவ்வாறு செய்து விடுவாரா என்ன, இதெல்லாம் நாடகம் என்பது எஸ்ரா சற்குணமே ஒரு மாதிரியாக சொல்லியிருக்கிறாரா?

[4] ஆமாம், அவர்கள் தாம் சாத்தானை வழிபடும் இந்துக்கள் ஆயிற்றே, எப்படி பணம் கொடுப்பாய்? கிருத்துவனாக மாறினால் கொடுப்பாய். அதனை சொல்லாமல் சொல்லும் விதம் தான் இது.

[5] ஆஹா, அம்மாதிரியான அதிகாரங்கள் கூட அவர்களுக்கு உண்டு என்று மறைமுகமாக சொல்கிறார்கள் போலும். அப்படியென்றால், இவ்வளவு நாட்களாக, இவர்கள் தாம் இம்மாதிரி கலாட்டா செய்து மக்களை கடுமையாக பாதித்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[6] அதனால்தான், அய்யா-வழி மக்களை துச்சமாக மதித்து, அவர்கள் தலைவரையும் அவமானப் படுத்தி, இந்த போராட்டத்திலிருந்தே, விலகிக்கொள்ளும் படி, தந்திரமாக நரித்தன வேலையை, இந்த பிஷப்புகள் செய்தனர்.

[10] Though the poster boy of the agitation, S P Udayakumar, does not belong to the fisherman community and hails from Nagercoil, Balaprajathipathi Adigalar, the head priest of the Ayyavazhi cult in Kanyakumari district, feels that the church leaders have appropriated the protests.

[11] He criticises the present leaders for resuming the protest even after the government gave an assurance that it would look into the issue. Initially, Adigalar had addressed the crowds in Idinthakarai when the indefinite fast was held. He was also invited to be part of the delegation that went to meet the Prime Minister in New Delhi.

[13] காவி உடைகளைப் போட்டுக் கொண்டு, மதுரைக்கு வந்து, பிராமணன் போல நடித்து, சில இந்தியர்களை மதம் மாற்றிய, போலிக் கிருத்துவ சாமியார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

3 பதில்கள் to “கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!”

 1. vedaprakash Says:

  சர்ச் வளாகத்திலிருந்து, கூடங்குளம்: காங்கிரஸ், மார்ச் 10,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=423675

  சர்ச் வளாகத்திலிருந்து, கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்காரர்களை வெளியேற்ற வேண்டுமென, பிஷப் கவுன்சிலுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்திற்கும், கிறிஸ்தவர்களுக்கும் தொடர்பில்லை.

  இது கிறிஸ்தவ போராட்டமல்ல. நாட்டுக்கும், மக்களுக்கும் இடையிலான போராட்டமென்று, தமிழ்நாடு கத்தோலிக்க பிஷப் கவுன்சில் கூறியுள்ளது. அப்படியென்றால், இடிந்தகரை சர்ச் வளாகத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை துவங்கியது ஏன்? அதற்கு இடிந்தகரை பாதிரியார் உதவி செய்தது ஏன்? என்பதை, பேராயர் மற்றும் பாதிரியார்கள் விளக்க வேண்டும். இடிந்தகரை சர்ச் வளாகத்திலிருந்து, உடனடியாக போராட்டக்காரர்களை வெளியேற்ற வேண்டும்.

  தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வருவதை முடக்கியவுடன், அதனால் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என, பேராயர் கூறுகின்றார். ஆனால், கிறித்தவ திருச்சபைகளால் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளாகும். அவற்றுக்கு அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிதி உதவிகளை அரசே கொடுக்கிறது.எனவே, தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை, மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் கண்காணிக்க வேண்டும். தொண்டு நிறுவனத்திற்கு வரும் நிதி, முறையாக செலவிடப்படுகிறதா என்பதையும் வரைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு சத்தியசீலன் பேட்டியில் கூறினார்.

 2. கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)! « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] […]

 3. vedaprakash Says:

  கூடங்குளம் போராட்டமும்… ஆயர்களின் ஆதரவும்…: விசுவாசிகள் சந்தேகம்

  பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012,23:24 IST
  http://www.dinamalar.com/News_detail.asp?Id=424570

  கூடங்குளம் போராட்ட ஆதரவு தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிதி வரத்தை ரத்து செய்ததால், மத்திய அரசு மீது கத்தோலிக்க அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால், பிரச்னையை தீர்க்க தேவாலயங்கள் ஏன் முன்வரவில்லை என, பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  ஆலய வளாகத்தில்…:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், நெல்லை மாவட்ட கடலோர கிராமமான இடிந்தகரையில், லூர்து மாதா கிறித்துவ ஆலய வளாகத்தில் பந்தலிட்டு நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தை லூர்து மாதா ஆலய பாதிரியார் ஜெயக்குமார், அனைத்து விதமான உதவிகளும் செய்து வருகிறார்.
  போராட்டம் நடக்கும் ஆலய வளாகம், கத்தோலிக்க பிஷப்களின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரின் நேரடி நிர்வாகத்தில் உள்ளது.
  போராட்டத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நேரடி ஆதரவு தந்து, போராட்ட களத்தில் பலமுறை பங்கேற்றார்.

  வழக்குகள்:மேலும், சேரன்மகாதேவி பாதிரியார் மைபா ஜேசுராஜன், கூத்தங்குளி பாதிரியார் ரட்சகநாதன், கூடங்குளம் பாதிரியார் பதேயூஸ் ராஜன், கூட்டப்புளி பாதிரியார் சுசிலன் உள்ளிட்டோரும் நேரடியாக போராட்டத்தில் பங்கேற்றனர். போலீஸ் அனுமதியின்றி நடக்கும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக, இவான் அம்ப்ரோஸ் உட்பட ஆறு பாதிரியார்கள் மீதும், கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம், கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி வருவதாக, மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. மத்திய உள்துறை அதிகாரிகள், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், 12 தொண்டு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம் ஆகிய தொண்டு நிறுவனங்களின், வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமை எண்ணை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதிவரத்து முடங்கிவிட்டது. இந்த நடவடிக்கையால், கத்தோலிக்க பேராயர் தலைமையிலான ஆயர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன், பேராயர் சின்னப்பா அளித்த பேட்டியில், “இந்த போராட்டம் கிறித்துவ போராட்டமல்ல. கூடங்குளம் போராட்டத்திற்கு நாங்கள் நிதியுதவி தரவில்லை’ என கூறியுள்ளார்.

  ஆதரவும், சந்தேகமும்:போராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிறித்துவ நிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்றால், எதற்காக கிறித்துவ ஆலய வளாகத்தில் போராட்டம் நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்திற்கு தொடர்பில்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமாரும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள அமலி நகரை சேர்ந்த இடிந்தகரை பாதிரியார் ஜெயக்குமாரும், முதல்முறையாக ஏன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை துவக்கி வைத்தனர். எங்கோ நடக்கும் போராட்டத்திற்கு தூத்துக்குடியில் உள்ள மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் ஏன் நேரில் வந்து பங்கேற்க வேண்டும் என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.

  கேள்விகள்:பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கூடங்குளம் போராட்டத்திற்கு மதத்திற்கு அப்பாற்பட்டு ஆதரவு தருவதாக கத்தோலிக்க ஆயர்கள் கூறுகின்றனர். இதேபோல், கேரளாவுக்கு எதிரான, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி போராட்டமான முல்லைப்பெரியாறு பிரச்னையில், ஏன் பங்கேற்கவில்லை. கர்நாடகாவிற்கு எதிரான காவிரி பிரச்னையில் ஏன் கலந்து கொள்ளவில்லை. மின்வெட்டுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் தராததை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களில் ஆயர்கள் ஆதரவு தராதது ஏன்? என பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந் துள்ளன.மத்திய அரசின் சார்பிலான விஞ்ஞானி ஆபிரகாம் முத்துநாயகம் தலைமையிலான நிபுணர் குழுவின் மீதும், தமிழகத்தில் சிறந்த பல்கலையான அண்ணா பல்கலை பேராசிரியர் இனியன் தலைமையிலான நிபுணர் குழு மீதும், உலகில் சிறந்த இந்திய விஞ்ஞானியாக கருதப்படும் அப்துல்கலாம் மீதும், அவர்களது அறிவியல் ரீதியிலான ஆய்வறிக்கைகள் மீதும், கத்தோலிக்க ஆயர்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?

  புதிர்:எந்த அறிவியல் பூர்வ ஆய்வையும் மேற்கொள்ளாத, சொன்னதையே திரும்ப
  திரும்ப சொல்லும் விதண்டாவாதியான உதயகுமார் மற்றும் பீதியூட்டும் குழுவினர் மீதுதான், பிஷப்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா என்ற கேள்விகள் அனைவர் உள்ளத்திலும் எழுந்துள்ளன. இதற்கு தார்மீக ரீதியான, மனசாட்சியும், உளஉறுதியும் கொண்ட பதில்களை, ஆயர்கள் மீது அளவற்ற பற்று கொண்ட மதத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசிகளான தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்திய மக்களின் வரிப்பணமான 14,000 கோடி ரூபாய் பணத்தை, பல ஆண்டுகள் ஆய்வுகளின் போதும், அதற்கு பிறகும், அணுமின் நிலையமாக அமைக்கும் வரை, இந்த ஆயர்களும், தார்மீக ஆதரவளிக்கும் ஆலய வளாகங்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்பது விடை தெரியாத மில்லியன் அமெரிக்க டாலர் கேள்வியாக உள்ளது.

  – நமது சிறப்பு நிருபர் –

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: