கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

அணு-உலை எதிர்ப்பு விஷயத்தில் இரட்டை வேடம்[1] போட்டு மக்களை ஏமாற்றியது தெரியவதுள்ள வேலையில்[2], அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள் பிஷப்புகள்[3]. வேடிக்கையென்னவென்றால், இவர்கள் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன[4]. ஆனால், அவற்றைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

 1. பற்பல பாதிரிகள், பாலியல் குற்றங்கள், சிறுவர் வன்புணர்ச்சி அக்கிரமங்கள், சிறுமியர் வன்புணர்ச்சி குரூரங்கள், கற்பழிப்பு பாதகங்கள், நிலமோசடிக:ள், பணக்கையாடல்கள் என மிகவும் அதிகமாக சட்டமீறல்களில் மாட்டியிருந்தாலும், அதைக் கண்டிப்பதில்லை. அரசு கண்டுக்கொள்வதே இல்லை. அப்படியென்றால், அரசு ஆதரிக்கிறதா?
 2. அப்படியென்ன இந்திய நாட்டில் கிருத்துவ சாமியார்களுக்கு சிறப்பு சலுகைகள்?
 3. அப்படிப்பட்ட விலக்கு இந்தியாவில் எப்படி கிருத்துவ குற்றவாளிகளுக்கு இருக்கிறது?
 4. இப்பொழுது கூட, இந்திய மீனவர்களை இலங்கையர் சுட்டால், ஒரு மாதிரி பிரச்சினையை கையாளுகிறார்கள். ஆனால், இத்தாலிய கிருத்துவர்கள் சுட்டுக் கொன்றாலும், வாடிகன் வரை விஷயம் செல்கிறது[5]. இந்திய கார்டினல்களே, வவடிகனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்[6], தாய்நாட்டுச் சட்டங்களையோ, கிருத்துவ மீனவர்களையோ மதிப்பதில்லை, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
 5. அப்படியென்றால், தமிழ் மீனவர்கள் மலையாளத்து மீனவர்களை விட குறைந்தவர்களா?
 6. அதிலும், இந்து மீனவர்கள் கிருத்துவ மீனவர்களை விட குறைந்தவர்களா?
 7. இந்தியாவில் சுட்டுக் கொலைசெய்து விட்டு, தங்கள் நாட்டு சட்டப்படி, தண்டனைக் கொடுப்போம் என்றால் என்ன?
 8. எல்லோருக்கும் ஒரு சட்டம் எனும்போது, கிருத்துவர்களுக்கு மட்டும், ஏன் சட்டங்கள் மாறுகின்றன? நாங்கள் ஊர்வலமாகச் செல்வோம் என்கின்றனர்.

மற்ற பாதிரிகள் சொன்னால், இந்த பாதிரிகள் கேட்பார்களா என்ன? அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை!

பாதிரிகள்       அணு உலை எதிர்ப்பு கூட்டம் / குழு போராட்டம் வேதபிரகாஷ்
11-03-2012


[4]  இதைபற்றி இந்த இணைதளத்தில் பல இடுகைகளை விவரங்களுடன் வெளியிட்டுள்ளேன்: https://christianityindia.wordpress.com/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!”

 1. vedaprakash Says:

  கூடங்குளம் போராட்டமும்… ஆயர்களின் ஆதரவும்…: விசுவாசிகள் சந்தேகம்

  பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012,23:24 IST

  கூடங்குளம் போராட்ட ஆதரவு தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிதி வரத்தை ரத்து செய்ததால், மத்திய அரசு மீது கத்தோலிக்க அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால், பிரச்னையை தீர்க்க தேவாலயங்கள் ஏன் முன்வரவில்லை என, பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  ஆலய வளாகத்தில்…:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், நெல்லை மாவட்ட கடலோர கிராமமான இடிந்தகரையில், லூர்து மாதா கிறித்துவ ஆலய வளாகத்தில் பந்தலிட்டு நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தை லூர்து மாதா ஆலய பாதிரியார் ஜெயக்குமார், அனைத்து விதமான உதவிகளும் செய்து வருகிறார்.
  போராட்டம் நடக்கும் ஆலய வளாகம், கத்தோலிக்க பிஷப்களின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரின் நேரடி நிர்வாகத்தில் உள்ளது.
  போராட்டத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நேரடி ஆதரவு தந்து, போராட்ட களத்தில் பலமுறை பங்கேற்றார்.

  வழக்குகள்:மேலும், சேரன்மகாதேவி பாதிரியார் மைபா ஜேசுராஜன், கூத்தங்குளி பாதிரியார் ரட்சகநாதன், கூடங்குளம் பாதிரியார் பதேயூஸ் ராஜன், கூட்டப்புளி பாதிரியார் சுசிலன் உள்ளிட்டோரும் நேரடியாக போராட்டத்தில் பங்கேற்றனர். போலீஸ் அனுமதியின்றி நடக்கும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக, இவான் அம்ப்ரோஸ் உட்பட ஆறு பாதிரியார்கள் மீதும், கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம், கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி வருவதாக, மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. மத்திய உள்துறை அதிகாரிகள், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், 12 தொண்டு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம் ஆகிய தொண்டு நிறுவனங்களின், வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமை எண்ணை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதிவரத்து முடங்கிவிட்டது. இந்த நடவடிக்கையால், கத்தோலிக்க பேராயர் தலைமையிலான ஆயர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன், பேராயர் சின்னப்பா அளித்த பேட்டியில், “இந்த போராட்டம் கிறித்துவ போராட்டமல்ல. கூடங்குளம் போராட்டத்திற்கு நாங்கள் நிதியுதவி தரவில்லை’ என கூறியுள்ளார்.

  ஆதரவும், சந்தேகமும்:போராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிறித்துவ நிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்றால், எதற்காக கிறித்துவ ஆலய வளாகத்தில் போராட்டம் நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்திற்கு தொடர்பில்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமாரும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள அமலி நகரை சேர்ந்த இடிந்தகரை பாதிரியார் ஜெயக்குமாரும், முதல்முறையாக ஏன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை துவக்கி வைத்தனர். எங்கோ நடக்கும் போராட்டத்திற்கு தூத்துக்குடியில் உள்ள மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் ஏன் நேரில் வந்து பங்கேற்க வேண்டும் என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.

  கேள்விகள்:பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கூடங்குளம் போராட்டத்திற்கு மதத்திற்கு அப்பாற்பட்டு ஆதரவு தருவதாக கத்தோலிக்க ஆயர்கள் கூறுகின்றனர். இதேபோல், கேரளாவுக்கு எதிரான, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி போராட்டமான முல்லைப்பெரியாறு பிரச்னையில், ஏன் பங்கேற்கவில்லை. கர்நாடகாவிற்கு எதிரான காவிரி பிரச்னையில் ஏன் கலந்து கொள்ளவில்லை. மின்வெட்டுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் தராததை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களில் ஆயர்கள் ஆதரவு தராதது ஏன்? என பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந் துள்ளன.மத்திய அரசின் சார்பிலான விஞ்ஞானி ஆபிரகாம் முத்துநாயகம் தலைமையிலான நிபுணர் குழுவின் மீதும், தமிழகத்தில் சிறந்த பல்கலையான அண்ணா பல்கலை பேராசிரியர் இனியன் தலைமையிலான நிபுணர் குழு மீதும், உலகில் சிறந்த இந்திய விஞ்ஞானியாக கருதப்படும் அப்துல்கலாம் மீதும், அவர்களது அறிவியல் ரீதியிலான ஆய்வறிக்கைகள் மீதும், கத்தோலிக்க ஆயர்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?

  புதிர்:எந்த அறிவியல் பூர்வ ஆய்வையும் மேற்கொள்ளாத, சொன்னதையே திரும்ப
  திரும்ப சொல்லும் விதண்டாவாதியான உதயகுமார் மற்றும் பீதியூட்டும் குழுவினர் மீதுதான், பிஷப்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா என்ற கேள்விகள் அனைவர் உள்ளத்திலும் எழுந்துள்ளன. இதற்கு தார்மீக ரீதியான, மனசாட்சியும், உளஉறுதியும் கொண்ட பதில்களை, ஆயர்கள் மீது அளவற்ற பற்று கொண்ட மதத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசிகளான தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்திய மக்களின் வரிப்பணமான 14,000 கோடி ரூபாய் பணத்தை, பல ஆண்டுகள் ஆய்வுகளின் போதும், அதற்கு பிறகும், அணுமின் நிலையமாக அமைக்கும் வரை, இந்த ஆயர்களும், தார்மீக ஆதரவளிக்கும் ஆலய வளாகங்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்பது விடை தெரியாத மில்லியன் அமெரிக்க டாலர் கேள்வியாக உள்ளது.

  – நமது சிறப்பு நிருபர் –

 2. W. Lawrence Jebamani Says:

  Though I am a Christian, I am telling these Christians are anti-national and have been planning to subvert India.

  From north to south, they want to create trouble

 3. dupakoor Says:

  “dubakoor” wanted to say something, but, it is not clear.

  He is requested to type either in Tamil or English instead of typing in “Da vinci code” type!

 4. dupakoor Says:

  when u construct RAMAR BRIDGE? !!!!!!!!!!!!!!!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: