Posts Tagged ‘அன்னை இந்திரா’

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

ஜனவரி 4, 2021

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

மனைவி மதம் மாறியதால், பிரிந்து போன கணவர்: திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரசரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா (வயது 38). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கணவர் பால்ராஜ் – இவர்களுக்கு ரட்சகன் (11), மெர்சி (8) என குழந்தைகள் உள்ளனர். 2018ல் இந்திரா, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறார்[1]. இதனால் பால்ராஜுக்கும் அன்னை இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது[2]. கிறிஸ்தவம் எவ்வாறு கணவன்  – மனைவி உறவுகளை உடைக்கிறது என்பது வெளிப்படுகிறது. இந்திராவிடமிருந்து பிரிந்த பால்ராஜ், தேனி மாவட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், அன்னை இந்திரா, தனது இரண்டு குழந்தைகளுடன், திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஷரி காலனியில் வாடகை வீட்டில் வசித்துவந்திருக்கிறார். உடல் நிலை சரியில்லாத அன்னை இந்திராவுக்கு, ஜெபக் கூட்டங்கள் நடத்தி வரும் எரியோடு வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக அன்னை இந்திராவுடன் சுதர்சனனும் தங்கியிருந்துள்ளார்.

பாதிரி ஆன்டர்சன் வாசுகியோடு, வீட்டிற்கு வந்து தங்கியது: இவர்களுடன், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனம் ஆகியோர் அதே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். கணவர் பிரிந்து வாழும் நிலையில், பாதிரியை வீட்டில் தங்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக, 2019ல்  விருப்ப ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் விண்ணப்பித்தார் அன்னை இந்திரா. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, அவரை திண்டுக்கல்லில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்தார்.கடந்த அக்டோபர் / நவம்பர்[3] 16-ம் தேதி 2020 மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு வேற்பட்ட தகவல்களைக் கொடுக்கின்றன. 26-ந்தேதி / 31ம் தேதி பணியில் சேர வேண்டும். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பாத அன்னை இந்திராவைப் பற்றி விசாரிக்க, அவரது வீட்டுக்கு இரண்டு பெண் காவலர்கள் சென்றிருக்கிறார்கள்.

பூட்டிய அறைக்குள் பிணம் இருந்தது: பெண் போலீஸார் வந்த போது, வீட்டில் உள்ளவர்கள் அன்னை இந்திரா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார்கள். வீட்டில் இல்லை எனும் கூறினர். மேலும், வீட்டின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு, அதிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாடிக்கொம்பு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்[4]. அருகில் உள்ளவரும் அவ்வாறே புகார் கொடுத்ததாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார், பூட்டிய அறையைத் திறந்து பார்த்தனர்[5]. அங்கே, இறந்தநிலையில் அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது[6]. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும், அவர் 10 நாள்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது[7]. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது[8]. அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் மத பிரசாரம் செய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன[9]. அதாவது, அந்த அளவுக்கு, மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், பிரார்த்தனை செய்தது – 07-2-2020 அன்று இறந்தது: அதைத் தொடர்ந்து சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கடந்த டிசம்பர் 7-ம் தேதி 2020 அன்று படுக்கையிலிருந்த இந்திரா சுயநினைவை இழந்திருக்கிறார். ஜெபம் சொல்லி சரிசெய்வதாகக் கூறி, மதபோதகர் சுதர்சன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார். கண்விழிக்காத உடலிலிருந்து இரண்டு நாள்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. அப்போதும், அன்னை இந்திரா உயிர்தெழுவார் என்றும், இயேசு ரட்சிப்பார் என்றும் கூறியிருக்கிறார் சுதர்சன். மேலும், இரண்டு குழந்தைகள், சகோதரி வாசுகி ஆகியோர் தினமும் இந்திராவின் உடல் அருகே அமர்ந்து ஜெபம் சொல்லிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குழந்தைகளையும், அவ்வாறு நம்ப வைத்து, தாய் இறந்ததை மறைத்தது, திகைப்பாக இருக்கிறது.

தாய் இறந்ததை அறியாமல் இருந்த பாதிக்கப் பட்ட குழந்தைகள்: உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முயன்றபோது, அதை வாசுகியும் சுதர்சனும் தடுத்திருக்கிறார்கள். இதுவும், அவர்களின் அடிப்படைவாதம் மற்றும் மூடநம்பிக்கையினை எடுத்துக் காட்டியது. “அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் உயிர்தெழுவார்,” எனக் கூறியிருக்கிறார்கள். இருவரையும் சமாதானம் செய்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் தனது தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது[10].  குழந்தைகளையும் அந்த அளவுக்கு மூளைசலவை செய்திருப்பது தெரிகிறது.

01-01-2021 அன்று பாதிரி மற்றும் ஆதரித்த வாசுகி கைது: இதனையடுத்து வாசுகி மற்றும் சுதர்சனை போலீசார் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகியையும் மதபோதகர் சுதர்சனையும் போலீஸார் 01-01-2021 அன்று கைதுசெய்தனர்[11]. மேலும், 176வது பிரிவு பொது ஊழியருக்கு தெரிவிக்க வேண்டிய கருத்தை தெரிவிக்காமல் மறைத்தது, பிரிவு 304 (A) (கொலை ஆகாத மரணம்) சிகிச்சை அளித்தால் உயிர் பிழைத்து விடுவார் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தது, பிரிவு 406 நம்பிக்கை துரோகம் செய்தல், பிரிவு 420 ஏமாற்றி பொருளைப் பறிப்பது ஆகிய நான்கு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்[12]. அன்னை இந்திராவின் குழந்தைகளைத் தற்காலிகமாக காப்பத்தில் சேர்ந்த போலீஸார், அவர்களின் தந்தை பால்ராஜுக்குத் தகவல் தெரிவித்தனர். உயிர்தெழுவார் என்று கூறி, இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில்வைத்து ஜெபம் சொன்ன சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்டர்சன் பாதிரி குடும்பத்தைக் கெடுத்து, குழந்தைகளையும் பாதித்துள்ளான்: இறந்த பிறகும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு இருந்தது கவனிக்கத் தக்கது. தங்களது நம்பிக்கை தவறு என்பதை அறிந்தும், மத-அடிப்படைவாத சிந்தனைகளால் குடும்பத்தை ஆன்டர்சன் பாதிரி பிரித்துள்ளான். அந்த வீட்டிலேயே வாழ்ந்து, குழந்தைகளை மூளைசலவை செய்துள்ளான். அதனால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது “தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்தோடு, தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காமல், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். வீட்டு வாசலில் பைபிள் வசனங்களை எழுதி வைத்து, அந்த வீட்டை ஒரு ஜெபகூடம் போல மாற்ற முயற்சித்துள்ளான். இவ்வாறு தம்பதியரைப் பிடித்து, குழந்தைகளை பாதித்து, மருத்துவமனையில் சேர்க்காமல், ஜெபம் என்று சொல்லி வீட்டிலேயே வைத்து, ஒரு பெண்ணை சாகடித்து, குழந்தைகளிடமும் “தாய் உயிர்த்தெழுவாள்,” என்று நமிக்கையை வளர்த்து, ஒரு குடும்பத்தையே நாசமாக்கியுள்ளான். மூடநம்பிக்கை என்று பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள் இந்துமத நம்பிக்கைகளைக் கடுமையாக, கொடுமையாக, ஏன் குரூரமாக்க விமர்சித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய குரூரங்களைக் கண்டு கொள்வதில்லை. இங்கெல்லாம் பகுத்தறிவு மழுங்கி விடுகிறது, நாத்திகம் நமைத்து போய் விடுகிறது, விஞ்ஞான சிந்தனை உளுத்து விடுகிறது. இதைப் பற்றி யாரும் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. ஆகவே, இந்துக்கள் இத்தகைய அடிப்படைவாத கிறிஸ்தவர்கள், கிருக்கு-பாதிரிகள் முதலியோருட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2021


[1] மாலைமலர், பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை, பதிவு: ஜனவரி 01, 2021 08:56 IST.

[2]  https://www.maalaimalar.com/news/district/2021/01/01085655/2212939/Tamil-News-police-investigation-to-female-police-body.vpf

[3]  “நவம்பர் 16-ந் தேதி” என்கிறது தினத்தந்தி. 

[4] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலுயா“.. பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் ஜெபம்.. மொத்தம் 20 நாள்.. அலறி அடித்து ஓடிய போலீஸ், By Hemavandhana

| Updated: Friday, January 1, 2021, 15:34 [IST]

[5] https://tamil.oneindia.com/news/dindigul/dindigul-female-police-deadbody-inside-locked-room/articlecontent-pf511963-407579.html

[6] தினமணி, 20 நாள்களுக்கு முன்பு இறந்த பெண் காவலர் சடலத்துடன் வீட்டிற்குள் ஜெபம்: திண்டுக்கல்லில் பரபரப்பு, By DIN | Published on : 31st December 2020 07:23 PM

[7] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/dec/31/prayer-inside-the-house-with-the-body-of-a-female-police-who-died-20-days-ago-3534963.html

[8] தினத்தந்தி, திண்டுக்கல் அருகே பரபரப்பு; பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்; உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை; பாதிரியாரிடம் விசாரணை, பதிவு: ஜனவரி 01, 2021 09:59 AM

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/01/01095932/Unrest-near-Dindigul-Female-police-corpse-inside-locked.vpf

[10] விகடன், `ஓய்வில் இருக்கிறார், உயிர்த்தெழுவார்’ –இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர், எம்.கணேஷ், ஈ.ஜெ.நந்தகுமார், Published: 02-01-2021 at 11 AM, Updated: 02-01-2021 at 11 AM.

[11] https://www.vikatan.com/social-affairs/crime/female-police-was-kept-in-home-after-she-lost-consciousness-dies

[12]  பிபிசி.தமிழ், உயிர்த்தெழுவார்என்று நம்பி சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்தவர்கள் கைது, 3 ஜனவரி 2021

https://www.bbc.com/tamil/india-55519884