Archive for the ‘ரவி’ Category

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

மே 5, 2013

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

Christian priest fraud - money doubling - Ravi 2013

பரிசுத்தஆவி, பிதா, மகன்: கிருத்துவத்தில் மூனிறில் ஒன்றா, ஒன்றில் மூன்றா என்று விவாதிக்கப்படலாம். ஆனால், மோசடிகளில், எல்லாமே ஒன்று என்கிறார்கள். கிருத்துவப் பாதிரிகள் என்று குறிப்பிடும் போது, அவர்களின் “டினாமினேசன்”, மதப்பிரிவு தெரிவிக்கப் படுவதில்லை.  ஆனால், அவர்களின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா என்று புரியவில்லை! இதோ இன்னொன்று:

பெயர் ரவி
விலாசம் சஞ்சீவி நகர், வியாசர்பாடி
மனைவியின் பெயர் வேளாங்கன்னி
மதம் கிருத்துவம்
தொழில் பாதிரி
இதர தொழில் பணம் இரட்டிப்பு, பண வசூல்
காவல் நிலையம் எம்.கே.பி. நகர்
புகார் கொடுக்கப்பட்டது, ஆனால் போலீஸார் வாங்க மறுப்பு
ஏன் புளியந்தோப்பு துணை ஆணையரிடம் செல்லுமாறு கூறல்
முந்தைய புகார் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பணம் கொடுத்தவர் நிலை அலைந்து கொண்டிருக்கின்றனர்

 

அயல்நாடுகளிலிருந்து ஏகப்பட்ட பணம் வரும் நிலையில் இவ்வாறு ஏமாறுவதன் ரகசியம் என்ன? அயல்நாட்களினின்று கோடிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் செலவழித்து, தங்களுக்கும் எடுத்துக் கொள்வதாக அவர்களே பல நேரங்களில் மெய்ப்பித்துள்ளார்கள். பிறகு, உள்நாட்டில் இவ்வாறு ஏன் ஏமாற்றுகிறார்கள்? ஒருவேளை, இந்தியாவை ஒட்டு மொத்தமாக சுரண்ட வேண்டும் என்று ஏதாவது ஒரு திட்டம் உள்ளதா?

 

முந்தைய இடுகைகள்: பணம் மோசடி, நிலம் மோசடி என்று கிருத்துவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்கள் தொடர்ந்து தான் ஈடுபடுகிறார்கள்.  உதாரணத்திற்கு சில:

  • ·         கிருத்துவ அறக்கட்டளை நடத்தி[1], பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!
  • ·         நில மோசடியில் இன்னுமொரு பிஷப்[2]: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!
  • கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை[3].
  • ·         மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா[4], அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?

ஆனால், செய்திகள் வருவதோடு சரி, அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று அறிவிக்கப்படுவதில்லை.

வேதபிரகாஷ்

05-05-2013