ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் – IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர் – நிலைமாறி பேசியது, நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (2)
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/austin-jayalal-double-game-christian-vs-aurvedasymbols-used.jpg?w=977)
சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) மீது குற்றஞ்சாட்டியது: இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது. FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) ‘மருத்துவ அறிவியலை’ தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக மதமாற்றத்தை பரப்ப 83.95 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சமூக சேவை என்ற பெயரில் இவை நடந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஜெயலால் இதன் ட்ரஸ்டீ ஆவார். CMAI வெளிப்படையாகவே சர்ச் மூடநம்பிக்கைகளை பரப்பிய போதும் இவட் அமைதியாகவே இருந்தார். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கம், இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் ஜானரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மற்றும் பலரை முன்னணி படுத்துகிறது. இவர்கள் அனைவரும் தங்களுடைய மதமாற்ற நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் பற்றி மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/dr-jitendra-nagar-letter-dated-25-07-2021-addressed-to-ima-about-austin-jeyalal.twitter.jpg?w=646)
கொரோனா காலத்தை வைத்து அறுவடை செய்ய திட்டம் போட்ட கிறிஸ்தவக் கூட்டங்கள்: இந்த அமைப்பின் சார்பாக நடந்த தேசிய மாநாட்டில் அருள் அங்கெட்டல் கூறுகையில், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம். நாம் பலவித சாதனைகள் செய்து வெற்றிகளை கொண்டு வருவோம். நாம் அனைவரும் இணைந்து ஒருமனதாக சுகாதார அமைப்பின் கடவுளாக இயேசு கிறிஸ்துவை ஆக்குவோம் என்று தெரிவித்திருந்தார். படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு மேலும் மருத்துவ அறிவியலை பயன்படுத்தி மதமாற்றங்கள் செய்வதற்கு பயிற்சிகளையும் நடத்துகிறது. அவர்கள் மத சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதாவது கிறிஸ்தவ மதமாற்றம். தற்பொழுது புதிதாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து வகுப்புகளையும் இந்த அமைப்பு நடத்துகிறது. இந்த அமைப்பின் நோக்கம் மத மாற்றம், அதற்கு பாதுகாப்பு அளிப்பது, இளம் தன்னார்வலர்களும் உதவியாளர்களையும் ஒன்றிணைத்து ஆன்மீக பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆன்லைன் டிரெயினிங் நடத்தப்படுகிறது. பல வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்களுக்கு பினாமி போல செயல்பட்டு, மருத்துவ விஷயங்கள் மூலமாக மத மாற்றங்களை நடத்திவருகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 (1) மற்றும் FCRA சட்டங்கள் 2010-ன் கீழும் குற்றமாகும்.
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/austin-jayalal-double-game-christian-vs-aurveda-kumudam-reporter-06-08-2021.1.jpg?w=1024)
கொரோனா தொற்றுக்காக என்ற போர்வையில் நிதி பெறுவது: சமூக சேவை நடவடிக்கையாக நன்கொடை பெறுவதாக கூறி சர்ச்சுகளுடனும், எவாஞ்சலிஸ்ட்களுடனும் கூட்டணி வைத்து மருத்துவ அறிவியலை பயன்படுத்தி வருவதாக LRO அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்கள் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு 116 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்து, விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நீதிமன்றத்திற்கு செல்லவும் தயார் என எல்லாரும் அறிவித்துள்ளனர். கிறிஸ்தவ மூடநம்பிக்கைகளையும் நவீன அலோபதி மருத்துவத்தை கலந்து தவறான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அமைப்பின் வெளிநாட்டு நன்கொடை பதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது[1].
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/austin-jayalal-double-game-christian-vs-aurveda-kumudam-reporter-06-08-2021.2.jpg?w=1024)
ஜூலை 11 2021: ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்[2]. அந்த வீடியோவில் அவர், “பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது போல் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். பெருங்கூட்டங்களைத் தவிர்ப்போம். அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு நாம் மூன்றாவது அலையை வரவேற்கும் எவ்வித ஆபத்தான செயலையும் செய்யாமல் இருப்போம்,” என்று கூறியுள்ளார்[3]. அதாவது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் மக்கள் ஊரடங்கு முறையில் இருக்கலாம் என்பது போல குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம். “பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது போல் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்,” என்கிறார். ஆனால், அங்கோ, அரசை மற்றும் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளதை கவனிக்கலாம்.
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/austin-jayalal-double-game-christian-vs-aurveda-kumudam-reporter-06-08-2021.3.jpg?w=1024)
06-08-2021 – ஆகஸ்டில் குமுதம் ரிப்போர்ட்டரின் கதை: இப்பொழுது, “குமுதம் ரிப்போர்ட்டர்,” நடந்துள்ள சில விவகாரங்களை சுருக்கி, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பற்றி விவரத்தைக் கொடுத்துள்ளது[4]. இது அலோபதிக் மற்றும் ஆயுர்வேத முறைகள் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைகள் போன்று சித்தரித்து, செய்தியை வெளியிட்டுள்ளது. நிருபர், ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும், அதற்கு தான் சொன்ன கருத்தை திரும்ப வாங்க மாட்டேன் என்றும், வழக்கு நிலுவையில் உள்ளதான், மேற்கொண்டு எதையும் சொல்லவிரும்பவில்லை என்றாராம். இருப்பினும், முழு விவரங்களைக் கொடுக்கவில்லை. மற்ற ஆங்கில-தமிழ் ஊடகங்களும், இதைப் பற்றி அமைதியாகவே இருக்கின்றன. ஆகவே, எவ்வாறு, கொரோனா காலங்களிலும், மருத்துவர்கள், மருத்துவ அமைப்புகள், மதம், மதப்பிரச்சாரம் போன்றவற்றை வைத்துக் கொண்டு, அரசியல் செய்கின்றன, குழப்பத்தை ஏற்படுகின்றன, சாதாரண மக்களின் நலத்தை விடுத்து, தமது கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை வைத்துக் கொண்டு செயல்படுகின்றன என்பதனை கவனிக்கலாம்.
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/complaint-filed-to-revoke-medical-licece-of-dr.-austin-jeyalal.jpg?w=682)
27-07-2021 செவ்வாய் கிழமை இவரது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்டது: மேலே குறிப்பிடப் பட்ட [(Ajay Goel) Vacation Judge/ADJ-04/Dwarka Courts/SW New Delhi/03.06.2021…..] நீதிமன்ற தீர்ப்புக்கு, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மேல் முறையீடு செய்ததாகத் தெரிகிறது[5]. இருப்பினும், IMA அந்தஸ்த்தை துர்பிரயோகம் செய்து, ஆயுர்வேத முறையை விமர்சிக்கவோ, கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கோ உபயோகப் படுத்தக் கூடாது என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி 27-07-2021 அன்று செய்தது[6]. ஆகவே, இவ்வாறு விவரங்கள் வெளிவரும் பொழுது, ஊடகங்கள் வேண்டுமென்று மறைக்கலாம், ஆனால், இருக்கின்ற ஆவணங்கள் சம்பந்தப் பட்டவர்களை வெளிப்படுத்திக் காட்டி விடும். ஒரு சாதாரண பார்வையாளர், செய்திகளைப் படிப்பவர் அல்லது என்ன நடக்கிறது என்று கவனிப்பவர்களுக்கு, இதெல்லாம் விசித்திரமாகத் தான் இருக்கிறது. மெத்தப் படித்த, பொறுப்புள்ள மருத்துவர்களின் சங்கம் IMA ஆகும். அதன் தலைவர் பொறுப்பில் இருப்பவர், தான் IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர் என்றெல்லாம் இருக்கும் போது, எந்நிலையில், எங்கு, அதை பேசுகிறார் என்பதை அவர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தனது நிலை மாறி பேசும் போது, அதற்கு அவர் பொறுப்பாகிறார். இங்கு, அதுதான் நடந்துள்ளது.
© வேதபிரகாஷ்
04-08-2021
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/dr-jitendra-letter-dated-29-05-2021-addressed-to-ima-about-austin-jeyalal.jpg?w=747)
[1] கதிர்.செய்தி, மதமாற்றத்திற்கு 80 கோடி? கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆப் இந்தியா மீது புகார்!, Wednesday, 02 Jun, 9.20 am, Kathir News.
[2] தமிழ்.இந்து, சுற்றுலா, ஆன்மிக பயணத்தை தற்காலிகமாக தவிர்க்கலாம்: கரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கும் இந்திய மருத்துவக் கழகம், செய்திப்பிரிவு, Published : 12 Jul 2021 04:43 PM; Last Updated : 12 Jul 2021 04:50 PM.
[3] https://www.hindutamil.in/news/india/692335-3rd-wave-imminent-doctors-body-ima-says-tourism-pilgrimage-can-wait-2.html
[4] குமுதம் ரிப்போர்ட்டர், இந்து மருத்துவ முறைகளுக்கு ஆபத்து…? வம்பிழுக்கும் கிறிஸ்தவ அலோபதி, 06-08-2021, ப.18-19.
[5] ANI, Delhi HC dismisses IMA President’s plea against trial court order criticising his Ayurveda remarks as ‘propagating Christianity’, Updated: Jul 27, 2021 12:14 IST
[6] The Delhi High Court on Tuesday dismissed the appeal filed by Indian Medical Association (IMA) president Dr Johnrose Austin Jayalal challenging a trial court order that criticised his remarks on Ayurveda in an interview as allegedly “propagating Christianity“.
![](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2021/08/johnrose-austin-jayalal-vs-rohit-jha-court-warning-him.jpg?w=886)