Posts Tagged ‘இடிந்தகரை’

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

அணு-உலை எதிர்ப்பு விஷயத்தில் இரட்டை வேடம்[1] போட்டு மக்களை ஏமாற்றியது தெரியவதுள்ள வேலையில்[2], அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள் பிஷப்புகள்[3]. வேடிக்கையென்னவென்றால், இவர்கள் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன[4]. ஆனால், அவற்றைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

  1. பற்பல பாதிரிகள், பாலியல் குற்றங்கள், சிறுவர் வன்புணர்ச்சி அக்கிரமங்கள், சிறுமியர் வன்புணர்ச்சி குரூரங்கள், கற்பழிப்பு பாதகங்கள், நிலமோசடிக:ள், பணக்கையாடல்கள் என மிகவும் அதிகமாக சட்டமீறல்களில் மாட்டியிருந்தாலும், அதைக் கண்டிப்பதில்லை. அரசு கண்டுக்கொள்வதே இல்லை. அப்படியென்றால், அரசு ஆதரிக்கிறதா?
  2. அப்படியென்ன இந்திய நாட்டில் கிருத்துவ சாமியார்களுக்கு சிறப்பு சலுகைகள்?
  3. அப்படிப்பட்ட விலக்கு இந்தியாவில் எப்படி கிருத்துவ குற்றவாளிகளுக்கு இருக்கிறது?
  4. இப்பொழுது கூட, இந்திய மீனவர்களை இலங்கையர் சுட்டால், ஒரு மாதிரி பிரச்சினையை கையாளுகிறார்கள். ஆனால், இத்தாலிய கிருத்துவர்கள் சுட்டுக் கொன்றாலும், வாடிகன் வரை விஷயம் செல்கிறது[5]. இந்திய கார்டினல்களே, வவடிகனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்[6], தாய்நாட்டுச் சட்டங்களையோ, கிருத்துவ மீனவர்களையோ மதிப்பதில்லை, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
  5. அப்படியென்றால், தமிழ் மீனவர்கள் மலையாளத்து மீனவர்களை விட குறைந்தவர்களா?
  6. அதிலும், இந்து மீனவர்கள் கிருத்துவ மீனவர்களை விட குறைந்தவர்களா?
  7. இந்தியாவில் சுட்டுக் கொலைசெய்து விட்டு, தங்கள் நாட்டு சட்டப்படி, தண்டனைக் கொடுப்போம் என்றால் என்ன?
  8. எல்லோருக்கும் ஒரு சட்டம் எனும்போது, கிருத்துவர்களுக்கு மட்டும், ஏன் சட்டங்கள் மாறுகின்றன? நாங்கள் ஊர்வலமாகச் செல்வோம் என்கின்றனர்.

மற்ற பாதிரிகள் சொன்னால், இந்த பாதிரிகள் கேட்பார்களா என்ன? அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை!

பாதிரிகள்       அணு உலை எதிர்ப்பு கூட்டம் / குழு போராட்டம் வேதபிரகாஷ்
11-03-2012


[4]  இதைபற்றி இந்த இணைதளத்தில் பல இடுகைகளை விவரங்களுடன் வெளியிட்டுள்ளேன்: https://christianityindia.wordpress.com/