Posts Tagged ‘ஆசிய ஆயர்’

ஆசிய ஆயர் பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட ஆறுபெண்கள் – ஆசிய கிறிஸ்தவ பெண்கள், கன்னியாஸ்த்திரிக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவில்லை! (3)

நவம்பர் 20, 2022

ஆசிய ஆயர் பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட ஆறு பெண்கள்ஆசிய கிறிஸ்தவ பெண்கள், கன்னியாஸ்த்திரிக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவில்லை! (3)

ஆசிய ஆயர் பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட ஆறு பெண்கள்: பாங்காக்கில் நடந்த ஆசிய பிஷப் பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்[1]என்று வாடிகன் செய்தி கூறுகிறது. அவர்கள் கலந்து கொண்டது முக்கியமாகக் கருதப் படுகிறது. ஏனெனில் அவர்கள் பிராந்தியத்தில் உள்ள ஏழைகள், சிறுபான்மையினர், பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்[2], என்று தொடர்கிறது. முன்பு “எட்டு கன்னியாஸ்திரிகள்” கலந்து கொண்டார்கள் என்று செய்தி வந்தது. அதாவது ஐந்து / ஆறு கண்டங்களுக்கு ஒரு பெண் அல்லது அவ்வாறான ஆசிய கண்டத்தது நிலைக்கு, என்று எதோ, ஒப்புக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப் பட்டார்கள் போலிருக்கிறது. பாங்காக்கில் நடைபெறும் ஆசிய ஆயர்களின் பொது மாநாட்டில் (FABC) கலந்துகொள்ள அழைக்கப்பட்ட விருந்தினர்களில் பல மதப் பெண்களும் உள்ளனர்[3], என்றாலும், யார் கலந்து கொண்டனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் பாஸ்டர், பிஷப் போன்றெல்லாம் ஆக முடியாது என்று தான் உள்ளது.

முந்தைய செய்தி – போப்பும், ஆயர் மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில்  உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். அக்டோபர் 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினல்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[4]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[5].  ஆக நூற்றுக்கணக்கில் ஆண்-பாதிரி-பிஷப்புகள் கலந்து கொண்டபோது, இப்பொழுது, “பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்,” என்று செய்தி வந்துள்ளது.

மாநாட்டில் பெண்கள் மதம் சார்ந்தவர்கள் கலந்து கொள்வது ஏன் முக்கியம்: வாடிகன் செய்திக்கு அளித்த பேட்டியில், மாநாட்டில் பெண்கள் மதம் சார்ந்தவர்கள் கலந்து கொள்வது ஏன் முக்கியம் என்று பேசினர்[6]. தலிதா கும் (Talitha Kum) பிரதிநிதியாக, தாய்லாந்தின் செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரி, ஸ்ரீ பவுலா, மதம் சார்ந்த பெண்கள் இங்கு இருப்பது முக்கியம், எனவே மனித கடத்தல் பகுதியில் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆயர்கள் அறிவார்கள்[7]. “நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம், மேலும் அவர்கள் எங்கள் குரலைக் கேட்க வேண்டும் மற்றும் எங்கள் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் மற்றும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்[8]. தாய்லாந்தில் உள்ள தலிதா கும் உடன் தொடர்புடைய செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரியான சீனியர் பிரான்சுவா, ஆயர்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்களின் மறைமாவட்டங்களில் எங்கள் பணியை ஏற்றுக்கொள்ளவும் நான் விரும்புகிறேன்“, எனவே அவர்கள் மனித கடத்தலால்காயமடைந்தவர்களுக்குஉதவி வழங்க முடியும்,” என்று ஒப்புக்கொள்கிறார். “மனித கடத்தல்,” என்று குறிப்பிட்டாலும் அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதும், அவர்களை வைத்து நடக்கும் குற்றங்கள், குறிப்பாக, கத்தோலிக்க சர்ச்சுகள், கான்வென்டுகள் மற்றும் மடாலயங்களில் நடக்கும் பாலியல் வன்மங்கள் பற்றி மூச்சு விடவில்லை. போப்பே, பலமுறை அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிகிறது.

மதம் சார்ந்த பெண்கள், மதப்பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்: தாய்லாந்தில் உள்ள அனுமானத்தின் மதவாதியும், பிலிப்பைனா மிஷனரியுமான டியன்னா (Sr Deanna), அவர்களின் அருகை “அங்கு மிகவும் முக்கியமானது…….”எனது பிரசன்னம் நமது பிஷப்புகளுக்கு, மதம், குறிப்பாக மதம் சார்ந்த பெண்கள், மதப்பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை நினைவூட்டுவதாக நான் உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.” என்று கூறுகிறார். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அலுவலகத்தின் நிர்வாகச் செயலாளரின் பங்கு காரணமாக தனிப்பட்ட அளவில் இது முக்கியமானது. இங்கு “மதம் சார்ந்த பெண்கள், மதப்பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். அதாவது, பெண்கள் இக்காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவார்கள், ஆனால், ஆண்களுக்கு நிகராக அந்தஸ்து, சர்ச்சில் பதவிகள் கொடுக்கப் பட மாட்டாது என்படு உறுதியாகிறது.

இந்திய பெண்மணி இந்திய கன்னியாஸ்த்திரிக்களின் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை: இந்தியாவிலுள்ள செயின்ட் பாலின் மகளான சகோதரி ஜோயன்னா டிசோசா (Sr Joeyanna D’Souza, a Daughter of St Paul), “ஊடகங்கள் மூலம் நற்செய்தியை அறிவிப்பதில் முழு ஈடுபாடு கொண்டதால் தான் பவுலின் ஆக அழைக்கப்பட்டதாகக் கூறினார். இங்கே இருப்பது,” அவள் தொடர்ந்தாள், “நான் இங்கு இருப்பது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் FABC இன் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் கோணத்தில் என்னால் சிறந்த பங்களிப்பை வழங்குகிறேன்,” எனும் போது, இந்தியாவில் எவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் பிஷப்புகளால், பாஸ்டர்களால் பாலியல் சதாய்ப்புகளுக்கு உள்ளாகிறார்கள், கற்பழிக்கப் படுகிறார்கள், கருவுற்று குழந்தை பெறுகிறார்கள் போன்றவற்றைப் பற்றி பேசாமல் இருந்ததையும் கவனிக்கலாம். சமீபத்தில் மூலக்கல் கற்பழிப்பு எல்லோருக்கும் அறிந்த விசயமாயிற்று, ஆனால், நடவடிக்கை எடுக்கப் படாமல் தப்பித்துக் கொண்டார்.

மத நம்பிக்கையுள்ள பெண்கள் FABC இல் கலந்துகொள்வது முக்கியம்: சகோதரி வெல் (Sr Whel) சிஸ்டர்ஸ் ஆஃப் தி டிவைன் சேவியர், பிலிப்பைன்ஸ், “எனக்கு குரல் இருப்பதால், மத நம்பிக்கையுள்ள பெண்கள் FABC இல் கலந்துகொள்வது முக்கியம் என்று தான் நம்புவதாகக் கூறினார். பிறகு ஏன் ஆறு பெண்கள் மட்டுமே கலந்து கொன்டார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் யதார்த்தம் என்ன என்பதை நான் வெளிப்படுத்த வேண்டும், சூழ்நிலைகளில் மட்டுமல்ல, FABC ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆனால் நாங்கள் பங்களிக்க முடியும், எங்களுக்கு யோசனைகள் உள்ளன. வெல் தலிதா கும் உடன் இணைந்து பணியாற்றுகிறார். “அவர்களும் நாமும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்க வேண்டும் என்பதும் கவலை அளிக்கிறது. அனைத்து மதத்தினரையும், குறிப்பாக பெண்கள் கேட்க வேண்டியது முக்கியம்.

ஏழைகள்சிறுபான்மையினர்பாதிக்கப்படக்கூடியவர்கள்தரையில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் குரல்: “தலிதா கும் மற்றும் சிறுபான்மையினருடன் பணிபுரியும் குட் ஷெப்பர்ட் பிரதிநிதித்துவப்படுத்தும் FABC உடன் இங்கு வந்திருப்பதை நான் தனிப்பட்ட முறையில் ஆசீர்வதித்ததாக உணர்கிறேன்” என்று தாய்லாந்தில் உள்ள எங்கள் அறக்கட்டளையின் சகோதரியான Sr Sutisa தொடங்கினார். இது நேரம், “ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… தரையில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் குரல் FABC இன் மேஜையில் கேட்கப்படும்” என்று அவர் தொடர்ந்தார். “இதுவும் ஒரு சேனலாகும்,” அவள் தொடர்ந்தாள், “அது மாற்றத்தை கொண்டு வரும்…எதிர்காலத்தில்…மிக சமீப எதிர்காலத்தில் FABC ஒரு சேனலாகும் .” முதலில் அவர்களது பாதிப்புக் குரலே இதில் கேட்காமல் இருக்கிறது. ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… என்றெல்லாம் பேசினாலும், இவர்கள் கைப்பாவைகளாக வேலை செய்கிறார்கள் என்று தான் தெரிகிறது. தனித்து, சுதந்திரமாக, தமது கருத்தை, ஏன் உண்மையான நிலைமையைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை என்பது தான் நிதர்சனமாகிறது.

2022 – அக்டோபர் பிரச்சினை, நவம்பரிலும் தொடர்கிறது: அக்டோபரில் இம்மாநாடு நடந்து முடிந்தாலும், வாடிகனில், அப்பிரச்சினை அலசப் படத்தான் செய்கிறது. ஜெர்மனியின் மூத்த கத்தோலிக்க பிஷப் 19-11-2022 சனிக்கிழமையன்று, பெண் பாதிரியார்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதங்கள் மூடப்பட்டுவிட்டன என்ற வாடிகனின் கருத்தை எதிர்த்து, அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசினார்[9]. போப் பிரான்சிசுக்கும் வத்திக்கான் அதிகாரிகளுக்கும் ஒரு பக்கம், மற்றும் ஜெர்மனியின் பிஷப்கள் அனைவரும் இன்னொரு பக்கம் என அடத்திய ஒரு வார உரையாடல் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் பிஷப் ஜியார்ஜ் பேட்ஜிங் (Georg Baetzing)  இவ்வாறு பேசினார்[10].

© வேதபிரகாஷ்

20-11-2022.


[1] Vatican News, The voice of women religious at FABC General Conference, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 25 October 2022, 16:35.

[2] https://www.vaticannews.va/en/church/news/2022-10/women-religious-talitha-kum-fabc-general-conference-bangkok.html

[3] Usig.News, The voice of women religious at FABC General Conference,25 October 2022, 16:35.

[4] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM

[5] https://www.ucanews.com/news/bishops-regret-lack-of-chinese-presence-at-asian-gathering/99252

[6] https://www.uisg.org/en/news/The-voice-of-women-religious-at-FABC-General-Conference

[7] Herald Malaysia , The voice of women religious at FABC General Conference, Source Herald Malaysia, 26/10/2022 12:30:00 PM.

[8] https://headtopics.com/my/the-voice-of-women-religious-at-fabc-general-conference-31093271

[9] Reuters, Women priests, homosexuality, not closed debate in Church, German bishop says, By Philip Pullella November 19, 20225:49 PM GMT+5:30; Last Updated 4 hours ago

[10] https://www.reuters.com/world/europe/women-priests-homosexuality-not-closed-debate-church-german-bishop-says-2022-11-19/

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)

நவம்பர் 1, 2022

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)

Pope sends mesage for FABC 2022

போப்பும், ஆயர் மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில்  உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினால்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[1]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[2].

The Chinese cardinal- none attended from China

ஆசிய பிஷப் மாநாட்டில் சைனா பிஷப்புகள் கலந்து கொள்ளவில்லை: தொற்று என்றெல்லாம் காரணங்கள் சொல்லப் பட்டாலும், சைனா கிறிஸ்வத்திற்கு ஆதரவாக இல்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் சைனா பொருளாதார விசயங்களில் அதிரடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ மேலிடம் அனுமதி இல்லாமல், எந்த பிஷப்பும் ஒன்றும் செய்து விட முடியாது. அதுதான், சைனாவில் உள்ள நிலை. கம்யூனிஸ மாநாடு நடந்து, லி பிங் மறுபடியும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சைனா, மதரீதியிலாக எந்த பிரச்சினையையும் உண்டாக்கவோ, அல்லது அந்நாட்டில் உருவாக்கவோ விரும்புவதில்லை. பௌத்தம், ஷின்டோ போன்ற மதத்தினர் இருந்தாலும், அவை தங்களது இடங்களுக்குள், மடாலங்களுக்குள் பின்பற்ற வேண்டும். தெருக்களில் வரக் கூடாது. ஆகவே, கிறிச்துவர், முஸ்லிம்கள் மற்ற நாடுகளைப் போனூ சைனாவில், பிரச்சாரம் செய்வது, கூட்டங்கள் போடுவது, போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.

மதம் மாற்ற திட்டம் போடும் கூட்டம்: மாநாட்டின் போது, ஆசியாவில் வளர்ந்து வரும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மத உண்மைகளுக்கு பதிலளிப்பதற்காக ஆசியாவில் உள்ள தேவாலயத்திற்கான ஒரு கிறிஸ்துவ மேய்ப்பு திட்டத்தை – அதாவது மதமாற்றி- ஆடுமாடுகளைப் போன்ற கூட்டத்தை உண்டாக்க – உருவாக்க பங்கேற்பாளர்கள் பல ஆலோசனைகளில் சேர்ந்தனர். ஆசிய இளைஞர்களுக்கான பைபிளின் தனித்துவமான பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது[3]. “அடையாளம்: அடையாளம் கண்டதும், வாழ்க்கையில் உள்ள சவால்களை கடத்தல்” [‘Identity: Identified, Navigating the Challenges of Life] என்ற தலைப்பில் அந்த பைபிள் வெளியிடப் பட்டு, ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் மற்றும் சைமன் போஹ் பிஷப்புகளால் அவைக்குக் கொடுக்கப் பட்டது[4]. முன்பு கூட ஆசியாவிற்கான பைபிள், இந்தியாவிற்கான பைபிள் என்றெல்லாம் வெளியிட்டனர். ஆனால், சர்ச்சை உண்டானதால், அவற்றை சுற்றிலிருந்து அகற்றி விட்டனர். அதை மறந்தும் விட்டனர் எனலாம். கருத்துரிமை பேசுபவர்களுக்கும் கப்சிப் என்று தான் இருக்கிறார்கள்.

அக்டோபர் 12 முதல் 30 வரை பிஷப் மாநாடு நடக்கும் நேரத்தில் உலகம் முழுவதும், பல நாடுகளில் மக்கள் கொல்லப் படுதல்: இம்மாநாடு முடியும் தருவாயில், தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் அக்டோபர் 29 அன்று நடந்த ஹாலோவீன்[5] விழாவில்  ஒரு குறுகிய சந்துக்குள் ஒரு பெரிய ஹாலோவீன் பார்ட்டி கூட்டம் அலைமோதியதில் ஊட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர், நூற்றிற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[6]. பில்லிப்பைன்ஸிலும், பலத்த மழை, வெள்ளத்தினால், 45 பேர் கொல்லப் பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர்[7].  30-10-2022 அன்று தொங்கு பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 150 பேர் பலியாகினர். உக்ரைனில் தொடர்ந்து போர்; பாலஸ்தீனத்தில் கலவரம் கொலை; ஈரான் ஆர்பாட்டத்தில் 150 பேர் கொலை, என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன-இருக்கின்றன. 29-10-2022 அன்று தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகளில் நூற்றிற்கும் மேலானோர் சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் கொல்லப் பட்டனர். ஆசியாவின் ஆயர்களின் கூட்டத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்களின் தூதுவர் தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிலிப்பைன்ஸில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்[8]. தாங்கள் எப்பொழுதும், அவர்களுடன் இருந்து, உதவுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்[9].

Traditional Thailand dance – Inculturation

ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்தன்மை குறைந்திருக்க வேண்டும்: ஆசியாவில் உள்ள தேவாலயங்கள், திருச்சபையின் ஆசியத் தன்மையை வலியுறுத்தும் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் போப் பிரான்சிஸ் திருச்சபை சமூகங்களை, இக்கால இறையியல் மூலம் மேலும் அடித்தளமாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று, ஶ்ரீலங்காவின், ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான விமல் திரிமான்ன கூறுகிறார்[10]. ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்-தன்மை குறைந்திருக்க வேண்டும் என்று பேசுவதும்[11] தமாஷாக இருக்கிறது. எப்படித் தான் வார்த்தைகளை மாற்றி, சுற்றி வளைத்துப் பேசினாலும், வாடிகன் கவுன்சில் -2 என்றெல்லாம் பேசும் பொழுது, அவர்களது திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.  உள்-கலாச்சாரமயமாக்கல், உரையாடல் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான். ஏற்கெனவே முரண்பாடுகளுடன் செயல் பட்டு வருகின்றன.

கிருத்துவத்தால் வன்முறையினைக் குறைக்க முடியவில்லை: இத்தாலியிலிருந்து வரும் ஒரு நாளிதழ், “உதவ மற்றும் நீதி கேட்டு கூக்குரலிடும் மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள்…..ஆசிய கண்டத்தில் எழுச்சியுறும் மக்களுக்கு உதவுங்கள்……..ஒன்றாக உழைத்து புதிய ஆசியாவை உண்டாக்குவோம்,” என்றெல்லாம் மாநாட்டில் பேசியதாக கூறுகிறது[12]. இதெல்லாம் வழக்கமான கோஷங்கள் தானே தவிர, புதியதாக உன்றும் இல்லை. முதலில் இருக்கும் கிருத்துவர்களை, கிருத்துவர்களாக இருக்க இவர்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால், அதை செய்வதில்லை. இந்த மாநாடு நடக்கும் போதே, தினம்தினம் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கில் மக்கள் பல நாடுகளில் கொல்லப் படுகின்றனர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப் படுகின்றனர், தீவிரவாத தாக்குதல்களில் குரூரமாகக் கொல்லப் படுகிறார்கள். கடவுளின் பெயரால் தான் அவர்களும் அத்தகையை குரூர காரியங்களை செய்து வருகிறார்கள்.

மாநாட்டின் திட்டங்களை விளக்கும் இறுதி ஆவணம் தயாராகிறது: பம்பாய் பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ், மாநாடு செயல்பட்டு வரும் இறுதி ஆவணத்தை எவாஞ்சலைசேஷன்  (மதம் மாற்றுதல்), மேய்ப்புச் சாத்தியங்கள் (மதம் மாற்றும் நடவடிக்கைகள்) தொடர்பான “எதிர்கால” ஆவணமாகவும், அவ்வாறே செயல்பாட்டிற்கு உதவும் வகையிலும் கொன்டு வர ஆவன செய்வதாக விவரித்தார்[13]. மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆசியாவில் உள்ள சமூகத்தின் பல அம்சங்களின் கூகுரல்களைக் கேட்டதாக அவர் விளக்கினார். கூறினார், உதாரணமாக, “எங்கள் ஆயர் பணியில் அதிக சிந்தனைமிக்க ஆன்மீகத்திற்கான பெரும் ஏக்கத்தை நாங்கள் கேட்டோம்”. இந்த ஆவணம், FABC பிரதிநிதிகளின் பொது ஒப்புதலைப் பெற்ற செயல்பாட்டில் உள்ளது என்று அவர் விளக்கினார். இது மற்ற ஆயர்களுடனும், பாமர உறுப்பினர்களுடனும் மேலும் விவாதிக்கப்படும். “இந்த ஆவணம் முழு ஆசியாவிலும் எதிர்கால மேய்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி ஆவணமாக எங்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றெல்லாம் கூறுவதை கவனிக்கலாம்.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM

[2] https://www.ucanews.com/news/bishops-regret-lack-of-chinese-presence-at-asian-gathering/99252

[3] Maters India, Bible youth edition released at Asian bishops’ meet, BY: FELIX ANTHONY  ON: OCTOBER 22, 2022

[4] https://mattersindia.com/2022/10/bible-youth-edition-released-at-asian-bishops-meet/

[5] ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

[6] ஹாலோவீன் காரணமாக பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவாக இந்த விழாவில் 50 -60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக இந்த விழா வெளியில் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் இதை முன்னிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 1 லட்சம் பேர் அங்கு கூடினார்கள். அந்த மார்க்கெட் பகுதிகளில் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் ஓட தொடங்கி உள்ளனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி.. பலர் கீழே விழுந்து.. அவர்கள் மீது மக்கள் ஏறி மிதித்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பலரின் கழுத்து, முகம், நெஞ்சில் ஏறி மக்கள் ஓடிய நிலையில் அங்கு மிகப்பெரிய களேபரமே ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அதுதான் திடீரென மக்கள் ஓட காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் நேற்று 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இதில் பலியானவர்களில் 100 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

[7] n the Philippines, authorities reported at least 45 deaths so far and millions of damage due to severe Tropical Storm Nalgae, also locally dubbed Paeng.

[8] Pope’s envoy to Asian bishops meeting prays for victims of Seoul stampede, ‘Paeng’

By Roy Lagarde via CBCP News – October 31, 2022 – 5:35 PM .

[9] https://interaksyon.philstar.com/trends-spotlights/2022/10/31/233087/tagle-prays-for-victims-of-seoul-stampede-philippines-storm/

[10] Island News, Asian Church should become ‘more Asian, less Roman’, Published 2 days ago on 2022/10/30.

[11] https://island.lk/asian-church-should-become-more-asian-less-roman/

[12] Agensir, Asia: Fabc’s final message, “let us hear the cry for help and justice” rising from the peoples of the continent. “Together we work for a better Asia”, 31 October 2022 @ 14:20.

[13] Vatican news, Asian Bishops: We wanted to see how our Churches can be agents of change, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 29 October 2022, 10:37.

https://www.vaticannews.va/en/church/news/2022-10/press-conference-fabc-50-bangkok-asia-tagle-gracias-charles-bo.html