Archive for the ‘மயிலை’ Category

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (5)

பிப்ரவரி 24, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (5)

 

கே. அயோத்திதாசர் நூற்றாண்டு விழா

கே. அயோத்திதாசர் நூற்றாண்டு விழா

23-02-2014 – 5.00 மாலை, மயிலை மாங்கொல்லை: மு. தெய்வநாயகத்தின் கூட்டம் என்று மயிலை மாங்கொல்லைக்குச் சென்றபோது, “கே. அயோத்திதாசர் நூற்றாண்டு விழா” என்று ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. குளத்தின் இடதுபக்கத்தில் வாகனத்தில் யாரும் செல்லக் கூடாது என்று போலீசார், வலதுபக்கம் வழியாக செல்லும்படி பணித்தனர். சுற்றிக் கொண்டு சென்றால், கோவிலுக்கு வாசலில், சில போலீசார் நின்றிருந்தனர். விசாரித்ததில் சமூக சமத்துவப்படை சார்பில் கூட்டம் நடப்பதாகக் கூறினார்கள். நான்கு மணியிலிருதே அக்கூட்டம் நடப்பதாகத் தெரிந்தது. “பண்டிதமணி கே. அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டு விழா – 2014, நிகலமற்றோர் – வீடற்றோர் மாநாடு” என்று மேடைக்குப் பின்பக்கம் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்தது[1]. மேடை, கொடிக்கம்பங்கள் வைப்பது போன்ற வேலை காலையிலிருந்தே நடந்ததாகத் தெரிந்தது.

'நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

 

சமூக  சமத்துவப்  படைதலைவரும்,   ..எஸ். அதிகாரியுமான  சிவகாமியின்   அரசியல்   நாட்டங்கள்: பகுஜன் சமாஜில் இணைந்தார், தமிழகத்தில், அரசியலில் நுழைந்த 2வது பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற நிலையைப் பெற்றார் என்று 2008ல் செய்திகள் வந்தன. 22-02-2014 அன்று தே.மு.தி.க. தரப்பில் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்ட போது, விஜயகாந்தை, பார்வர்டு பிளாக் தலைவர் சந்தானம், சமூக சமத்துவப்படை தலைவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி ஆகியோர் சந்தித்து பேசினார்கள்[2]. முன்னர், 04-10-2013 அன்று வேலூர் கூட்டத்தில் சிவகாமி பேசும் போது, வரும் லோக்சபா தேர்தலில், சமூக சமத்துவப்படை கட்சி போட்டியிடுகிறது. தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து, வரும், 24ம் தேதி, சென்னையில் நடக்கும் மாநில பொதுக் குழு கூட்டத்தில், முடிவு செய்யப்படும், என்றார்[3]. அதாவது, ஏதாவது ஒரு கூட்டணியில் சேரவேண்டும் என்ற ஆசையிருந்தது.  29-01-2014 அன்று, சமூக சமத்துவப் படை அமைப்பு சார்பில், அடுத்த மாதம், 23ம் தேதி, சென்னை, மயிலாப்பூரில், ‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு’ நடைபெற உள்ளது என்று சிவகாமி அறிவித்தார்[4].

 

'நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு பிப்ரவரி 2014

23-02-2014 – 6.00 மாலைமயிலை மாங்கொல்லை: சமூக சமத்துவப்படையின் மாநாடு நடந்து கொண்டிருந்தது. யார்-யாரோ பேசிக் கொண்டிருந்தனர். தெய்வநாயகத்தின் கூட்டம் இல்லை என்று தெரிந்தது. இன்று மாங்கொல்லையில் சமூக சமத்துவப்படையின் மாநாட்டு கூட்டம் நடக்கிறது எனும்போது, அதற்கு போலீசார் முன்னமே அனுமதி கொடுத்தனர் என்றாகிறது. அப்படியென்றால், தெய்வநாயகத்தின் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்றாகிறது. இது நிச்சயம் ஒருவாரத்திற்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும். பிறகு, எதற்கு சென்னையில் பல இடங்களில் சங்கராச்சாரியாரையும், போப்பையும் இணைத்து போஸ்டர் ஒட்டி ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் கூட்டம் இல்லை என்று தெரிவித்திருக்க வேண்டும், ஆனால், உண்மை தெரிந்தும் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தே தெய்வநாயகம் போன்றோரின் நாணயத்தை, மெய்தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

 

'நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

பொதுக் கூட்டத்திற்கு தடை ஏன்?: சுற்றிவந்தபோது, ஒருவர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட நோட்டிஸை விநியோகித்துக் கொண்டிருந்தார். வாங்கிப் படித்ததில்,  “பொதுக் கூட்டத்திற்கு தடை ஏன்? பொது மக்களுக்கு அறிப்பு” என்றிருந்தது. அது தெய்வநாயகத்தின் நோட்டீஸ் தான்! “பொதுக் கூட்டத்திற்கு தடை ஏன்?” என்றதில் புள்ளிக்கு பதிலாக தாமரைச் சின்னம் இருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை தெய்வநாயகம் பிஜேபியில் சேரப்போகிறாரா என்று தெரியவில்லை. “இந்துமதச் சின்னமாகிய திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டு சைவ மதத்தையும், வாயினால் நாராயணா எனக்குறிக்கொண்டு வைணவ மததையும்” என்று விமர்சித்துள்ள நிலையில், இவரது “தாமரச் சின்னத்தின்” பிரயோகம் என்னவென்று தெரியவில்லை. இவரது “பொதுக்கூட்டம் நடந்த்யால் கலவரச் சூழலை உருவாக்க இரண்டு அமைப்புகளும் திட்டமிட்டுளன என்ற செய்தி காவல்துறைக்கு எட்டியுள்ளது. இதனால் கூட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்கி சில கட்டுப்பாடுகளைப் போட்ட காவல்துறை, இரண்டாவதாகக் கலவரச் சூழலை கருத்தில் கொண்டு கூட்டம் நடத்த தடை செய்துள்ளது”, என்று அந்த நோட்டீஸில் உள்ளது. ஆக இதைப் பற்றி இவருக்கு முன்னரே தெரிந்திருந்தும், இ-மெயிலில், இவரது இணைதளத்தில் அறிவிக்கவில்லை என்றாகிறது.

 

சமூக சமத்துவப்படையின் மாநாடு

சமூக சமத்துவப்படையின் மாநாடு, மாங்கொல்லை, மயிலை

நடந்த சிவகாமியின் கூட்டமும், இல்லாத தெய்வநாயகத்தின் கூட்டமும்: ‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு’ நடைபெற உள்ளது என்று சிவகாமி அறிவித்தார் என்றால், ஜனவரியிலேயே, அவரது கூட்டம் தீர்மானமாகி விட்டப்படியால், தெய்வநாயகத்தின் நோட்டீஸ், சுவரொட்டி முதலியவை எதற்கு என்ருய் புரியவில்லை. இரண்டு இயக்கங்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில், அதிலும் மயிலை மாங்கொல்லை போன்ற சிறிய இடத்தில் கூட்டம் நடத்துவது என்பது இயலாத காரியம். ஆகவே, ஒருவருக்குத்தான் போலீஸார் அனுமதி அளித்திருக்க முடியும், அவர்கள் தாம் 23-02-2014 அன்று கூட்டம் நடத்த முடியும். சிவகாமியின் கூட்டம் நடந்தது என்றதால், தெயநாயகத்தின் கூட்ட அறிவிப்பு, விடாப்பிடியான போஸ்டர்கள் ஒட்டுதல், முதலியன விளம்பர ஸ்டன்டுகள், பிரச்சார யுக்திகள் என்று புலனாகிறது. மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால், என்னைப் போன்ற நான்கைந்து சென்னைவாசிகள் தவிர, யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான். தாமஸ் கட்டுக்கதையினை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவரும், இவரது விசயங்கள் எல்லாமே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. பாவம், இவரது கூட்டமும் பொய்யாகிவிட்டது, கட்டுக்கதையாக, மாயையாகி விட்டது.

 

சமூக சமத்துவப்படையின் மாநாடு

சமூக சமத்துவப்படையின் மாநாடு, கோவிலுக்குப் போகும் வழியை ஆக்கிரமித்து அரசியல் கூட்டம்

மாங்கொல்லையில் பொது கூட்டம் நடப்பதால் பக்தர்களுக்கு தொல்லை: கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் எப்பொழுதுமே கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அதிலும் ஞாயிற்றுக் கிழமை, கோவிலுக்கு மட்டுமல்லாது சுற்றியிருக்கும் கடைகளுக்கு வரும் கூட்டமும் இருக்கிம். இந்நிலையில், மாங்கொல்லையில் பொது கூட்டம் நடப்பதால் பக்தர்களுக்குத்தான் சிரமும், தொல்லையும் ஏற்படுகின்றன. கூட்டத்தைப் பற்றி கேட்டபோது, நாங்கள் எத்தனையோ தடவை சொல்லியாகிவிட்டது, போலீஸார் முதல் யாரும் இதனைத் தடுப்பதாக இல்லை. இங்கே வேண்டுனென்றே, கூட்டத்தைப் போட்டு, எங்களை சதாய்த்து வருகிறார்கள் என்றே வெளிப்படையாக கூறினார்கள்.

 

சமூக சமத்துவப்படையின் மாநாடு

சமூக சமத்துவப்படையின் மாநாடு, 2014

தினமலரில் 2011ல் வெளிவந்த செய்தி: மயிலை மாங்கொல்லை பகுதியில் அரசியல் கட்சிகள் நடத்தும் தொடர் பொதுக்கூட்டங்களால், கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அமைதியாக, உள்ளத்துக்கு நிறைவை ஏற்படுத்தும் வழிபாட்டை, பொதுக்கூட்ட இரைச்சல் குலைக்கிறது என்று பக்தர்கள் வருந்துகின்றனர்[5]. மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், பண்டிகைக் காலங்கள் மட்டுமில்லாமல், எல்லா நாளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ராமகிருஷ்ணா மடம் சாலை கோவிலுக்கு வரும் பிரதான சாலையாக உள்ளது. கோவிலை சுற்றியுள்ள குறுகிய மாட வீதிகள் வழியாக பக்தர்கள் நடந்தும், வாகனத்திலும் கோவிலுக்கு வருகின்றனர்.

நாம் தமிழர் - சீமான் - தமிழருவி மணியன் கூட்டம்

நாம் தமிழர் – சீமான் – தமிழருவி மணியன் கூட்டம் – 2011, ஆனால் இன்றோ இந்துமதத்தை தூஷிக்கும் சீமான், ஆதரிக்கும் மணியன்!

சென்னை நகரில் அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டத்தை நடத்த கோவிலுக்கு எதிரே உள்ள மாங்கொல்லை பகுதியையே, பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். போலீசாரும் இந்த இடத்தை பொதுக்கூட்டம் நடத்தும் பகுதி என, நிரந்தரமாக முடிவு செய்துள்ளனர். அரசியல்கட்சிகளுக்கு இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படும் நாள்களில், பகலிலேயே சாலைகளை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைக்கின்றனர். மேடைக்கு முன் அமருவதற்கு நாற்காலிகளை வேறு போட்டு விடுகின்றனர். கட்சி கொடி கம்பங்களும், டியூப் லைட்களும், தலைவர்களையும், கட்சி சின்னங்களையும் பிரதிபலிக்கும் அலங்கார வளைவுகளும், சீரியல் செட்டுகளுமாக, அரசியல் அரங்கமாக இந்த பகுதி மாறிவிடுகிறது. இதனால், இந்த பாதையைக் கடக்கும் பக்தர்கள், கோவிலுக்கு வந்தோமா, இல்லையா என்பதை மற்றொரு முறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

sfi மாங்கொல்லை கம்யூனிஸம்

sfi மாங்கொல்லையில் கம்யூனிஸம் 2013

பண்டிகை காலங்களில் கூட இந்த தொந்தரவு ஏற்படுகிறது: அதோடு, பொதுக்கூட்டம் 8 மணிக்கு துவங்கும் என்றால், 5 மணிக்கே கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்ப தொடங்குகின்றனர். மாலை நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளாலும், கட்சியின் கொள்கை விளக்க பாடல்களாலும் உள்ளம் நொந்து போகின்றனர். கோவிலுக்கு வாகனத்தில் வருபவர்கள் அவற்றை எங்கே நிறுத்துவது என தெரியாமல் அல்லாடுகின்றனர். தற்போது, நவராத்திரி கொலு பண்டிகையால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலை மாங்கொல்லையில். பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து அனுமதி கேட்டுள்ளன. சில கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளன. இதனால், பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களின் உள்ளத்தையும், பிரசித்தி பெற்ற கோவிலின் பெருமையையும் காக்கும் வகையில், மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்ட திடலை, கோவில் நிகழ்ச்சிகளைத் தவிர, வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்[6]. 2014லிலும் இதே நிலைதான் உள்ளது.

 

வேதபிரகாஷ்

© 24-02-2014


[1] தினமலர், நிகலமற்றோருக்கான மாநாடு, பிப்ரவரி 24, 2014, சென்னை, பக்கம்.11.

[6] தினமலர், மாங்கொல்லையைமறப்பார்களாஅரசியல்கட்சிகள்?, 29-09-2011

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவோம் என்று வந்த கூட்டமும், அதன் பின்னணியும்

ஜூன் 16, 2010

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவோம் என்று வந்த கூட்டமும், அதன் பின்னணியும்

அமைதியான ஞாயிற்றுக் கிழமையின் அமைதியைக் குலைத்தக் கூட்டம்:  ஞாயிற்றுக் கிழமையில் (13-06-2010) அமைதியாக அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லும் நேரத்தில், ஒரு கும்பல் மைலாப்பூர் கச்சேரித் தெருவில் குழுமி கோஷங்கள் போட்டு, கபாலீஸ்வரர் கோவிலுக்குள் செல்வோம், லிங்கத்தைத் தொட்டு வழிபடுவோம், நாங்களே பூஜை செய்வோம் என்று அக்கூட்டம் செல்ல முயன்றபோது, போலீஸார் தடுத்தனர். பார்க்கும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அமைதி குலைந்தது நன்றாகத் தெரிந்தது.

“சிவ-பக்தர்கள்” போலவும், வேடமிட்டு வந்துள்ள இந்து-விரோத சக்திகள்: கிருத்துவ, நாத்திக, இந்திய-விரோத ஆட்கள் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு, ஏதோ “சிவ-பக்தர்கள்” போலவும், வேடமிட்டு, ஏமாற்றி கோவிலுக்குள் நுழையத்தான், இந்த ஔரங்கசீப்-மாலிக்காஃபூர் கோஷ்டியினர் முயற்சித்துள்ளனர். அதாவது, காசியில் எப்படி லிங்கத்தை வழிபடுகின்றனரோ[1], அதே மாதிரி வழிபட வேண்டுமாம்! இதுமாதிரித்தான், இந்துக்கள் தாக்கப் பட்டிருப்பார்கள் போலும்!

இந்துக்கள் முன்னமே புகார் கொடுத்துள்ளது: ஆனால், விஷமத்தை அறிந்த இந்துக்கள், இந்து அமைப்புகள் முதலியோரும், போலீஸாரிடம் புகார் கொடுத்திருந்தனர். அதனால், அவர்கள் – போலீஸார் ஜாக்கிரதையாக கோவிலை நோக்கிச் செல்லாமல் நின்று கொண்டனர்.

இனி மற்ற விவரங்களை “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில்” வந்துள்ளதை தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன்[2]:

மயிலை கோவிலின் அருகில் பதட்டம்

ஞாயிற்றுக் கிழமை (13-06-2010) கபாலீஸ்வரர் கோவிலின் அருகில், இருக் குழுக்கள் ஒருவருக்கொருவர் எதிராக கோஷம் போட்டுக்கொண்டு, கோவிலுக்குள் நுழைய முற்பட்ட சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கும்பல் கோவிலுக்கு அருகில் தெருவில் கூடி, கோவிலை நோக்கி வர ஆரம்பித்தது. இதை மற்ற குழு தடுத்தது. கோவிலுக்குள் நுழைந்து விக்கிரகத்தைத் தொடவேண்டும், தாமே பூஜைகளை செய்யவேண்டும் என்று அந்த கும்பல் கோவிலில் நுழைய முற்பட்டபோது, இந்த சம்பவம் ஏற்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை மதியம் அங்கு கோவிலிக்கு வந்திருந்த பக்தர்கள் இதைக்கண்டுத் திகைத்தனர்[3]. அப்பொழுது அங்கு வந்த போலீஸார், கோவிலுக்குச் செல்லும் எல்லாத் தெருக்களையும் மறித்து, கோவிலை நோக்கிச் செல்வோரை விசாரிக்க ஆரம்பித்தனர்[4].

கச்சேரி ரோடில் குழுமிய அந்த கும்பல் கோவிலுக்குள் நுழைந்து விக்கிரகத்தைத் தொட்டு, தாமே பூஜைகளை செய்ய அனுமதிக்கப்படும் வரை, தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்ததால் அந்த பதட்டமான நிலைமை ஏற்பட்டது. சுமார் முப்பது “தன்மானத் தமிழர் கூட்டமைப்பு” ஆட்கள் கிருத்துவர் தெய்வநாயகம் என்ற ஆளின் தலைமையில் வந்தனர். பி / பழ. நெடுமாறன் என்ற தமிழ் தேசிய கட்சிக்காரரும் அவருடன் சேர்ந்தார்[5]. இதைத்தவிர இருந்த இளைஞர்கள் பெரியார் படம் அச்சிடப்பட்ட கருப்பு நிற-டி-சர்ட்டுகள் அணிந்திருந்தனர்[6].

அந்த ஆட்கள் வேறு கூப்பாடுகளையும் போட்டனர், ”தமிழக அரசு எந்த ஜாதிக்காரரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று சட்டத்தை எடுத்து வந்துள்ளது. ஆனால், பல கோவில்களில் அது செயல்படுத்தப் படாமல் தடுக்கப் படுகிறது”, என்று நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்[7]. அருகிலிருந்த பெரிய போலீஸ் அதிகாரிகள் பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினாலும்[8], அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகியது. அந்த கிருத்துவன் தெய்வநாயகம் சொன்னதாவது, “கோவிலுக்குள் செல்ல முடியாது என்று எங்களுக்குத் தெரியும். இருப்பினும் நாங்கள் நெருங்குவோம், செல்வோம்”, என்று ஒரு பெரிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து சொன்னது வியப்பாக இருந்தது[9]. ஏதாவது, அசம்பாவிதம் ஏற்பட்டாலொழிய, போலீஸார் தலையிடக்கூடாது, என்று அந்த கும்பல் பிடிவாதம் பிடித்தது[10].

கோவிலுக்கு அருகில் விஸ்வ இந்து பரிஸத்தின் அங்கத்தினர்களும் கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். போலீசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். அவர்கள் மற்ற கும்பலை நோக்கி கோஷமிட்டவாறு செல்லவும் ஆரம்பித்தனர். கோவிலைச்சேர்ந்தவர்கள், அவர்கள் (வி.எச்.பி நபர்கள்) தாங்களாகவே வந்துள்ளதாகவும், அவர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்கள்[11].

கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போலீஸார் சொன்னதாவது, தாங்கள் சனிக்கிழமை மாலையிலிருந்து பாதுபாப்பிற்காக இருப்பதாகவும், அடுத்த நாள் கோவில் மூடும் வரை இருப்போம் என்றனர்[12].  பெயரைச் சொல்லவிரும்பாத போலீஸ் அதிகாரி, “இது மிகவும் முக்கியமான பிரச்சினை (sensitive). நாங்கள் ஜாக்கிரதையாக இருக்க விரும்புகிறோம்”, என்றார்[13].

தெய்வநாயகம், நெடுமாறன், ஒரு பெண் மற்றும் 11 நபர்கள் கைது செய்யப்பட்டப் பிறகுதான், கோவிலுக்குப் பக்கத்தில் பரபரப்பு அடங்கியது. எனினும், பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்[14].

போலீஸாரை மதிக்காத, மிரட்டும் கோஷ்டியினர்: போலீஸாரை மிரட்டும் அளவிற்கு, இந்த கோஷ்டியினர் இருக்கின்றனர் என்றால், அத்துறையிலும் இவர்களுக்கு வேண்டியவர்கள் சாதகமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிகின்றது. அதாவது, போலீஸ் என்றால் பயந்து போகக் கூடிய மனிதர்கள் அல்லர் அவர்கள். ஆகவே, சாதாரண பக்தர்கள் இவர்களுக்கு ஈடாக மாட்டார்கள்.

இந்துக்கள் சுலபமாகத் தாக்கப் படலாம் என்ற நிலை: அமைதியாக இருக்கும் இந்துக்கள் எப்படியெல்லாம் தாக்கப் படலாம் என்பதற்கும் இது சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. ஏதோ அந்த கிருத்துவர்கள், நாத்திகர்கள், முஸ்லீம்கள் வருகிறார்கள் கோஷம் போடுகிறர்கள், சென்று விடுகிறார்கள் என்று இருந்து விடுகிறர்கள். அவ்வாறு நோட்டமிட்டு சென்ற பிறகுதான், அவர்களது தாக்குதல்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்துக்களது மென்மையான போக்கு, அப்பாவித்தனம், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற போக்கு முதலியனவை உண்மையாக அவர்களைக் கோழையாக ஆக்கியுள்ளன. ஜாஸ்தியாக போனால், “அவர்கள் நாசமாக போக”, என்று கத்திவிட்டு இருந்து விடுவர்.

பெரிய தாக்குதல் நடத்தப் பட்டால், பாதுகாப்பு எப்படி கிடைக்கும்? மேலும் இங்கு  கிருத்துவ, நாத்திக, இந்திய-விரோத ஆட்கள் சேர்ந்து வந்துள்ளதைக் கவனிக்க வேண்டும். இது வெறும் இந்த முப்பது நபர்களின் வேலையா அல்லது அவர்களது பின்னணியில் பல இயக்கங்கள் வேலை செய்கின்றனவா என்று கவனிக்க வேண்டியுள்ளது. அவர்கள் நாளைக்கே கார்களில், ஆட்டோக்களில் ஆயுதங்களுடன் வந்து தாக்கினால், என்ன நிலைமை ஏற்படும். இதற்கு அரசு, போலீஸார் முதலியோர் என்ன உத்திரவாதம், பாதுகாப்பு கொடுப்பார்கள்?

இந்தியன் எக்ஸ்பிரஸின் நிருபருடன் பேசியது: நேற்று மாலை (15-06-2010) ஜி. பாபு ஜெயக்குமார் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸின் நிருபருடன் தொலைபேசியில் பேச வாய்ப்புக் கிடைத்தது. 03-05-2010ல் வந்த செய்தி “தவறு” (I accept it is a mistake) என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அவ்வாறு ஏன் வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, அச்சுப்பிரதிகளில் வராமல் இருந்திருக்கலாம், ஆனால், தவறு என்று தாங்கள் வெளியிட்டு விட்டோம் என்று வாதாடினார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை ஏன் என்னிடத்தில் விசாரிக்கிறீர்கள் என்று திரும்ப-திரும்ப கேட்டார். அவருடைய பெயர் அடிபடுவதினால் தான் கேட்பதாகக் கூறியதுடன், யார் தனது பெயரைக் குறிப்பிட்டது என்று கேட்டார். இணைதளங்களில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்றதும், எந்த இணைதளங்கள் என்று கேட்டார், http://hamsa.org/ ; http://apostlethomasindia.wordpress.com; http://the-st-thomas-teller.blogspot.com/

http://bharatabharati.wordpress.com ; https://christianityindia.wordpress.com

http://thomasmyth.wordpress.com; http://vedaprakash.indiainteracts.in முதலியவற்றைக் குறிப்பிட்டேன். திடீரென்று அவர் குரல் திக்க ஆரம்பித்தது. நான் அவர் பேசுவதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் மறுபடியும் கிருத்துவ சார்பாக நடந்து கொள்வதைக் கண்டு வருத்தப் படுவதாகக் கூறினேன். யார் அப்படி சொல்வது என்று கேட்டதால், பழைய உதாரணங்களையெல்லாம் கூறினேன். இப்பொழுது அவருடைய குரல் அதிகமாக திக்க ஆரம்பித்தது (அவர் உணர்ச்சி வசப்படுகிறார் என்பது தெரிகின்றது). ஆகவே, நான் உங்களை நேரில் சந்தித்து பேசுகிறேன், தொந்திரவிற்கு மன்னிக்கவும் என்றேன். “குட் நைட்” என்று நானே தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.

கிருத்துவர்கள், கிருத்துவர்களாக செயல்படும் போக்கு: கிருத்துவர்கள், கிருத்துவர்களாகத்தான் செயல்படுகிறார்கள். என்ன படித்தாலும், நாகரிகமாக இருந்தாலும், சமயம் என்று வரும்போது, அவர்கள் அவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். எனக்கும் கிருத்துவ நண்பர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் அப்படியில்லை என்று தோன்றுகிறது.  ஜி. பாபு ஜெயக்குமார், தெய்வநாயகம், அந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர்……………………எல்லோருமே அப்படித்த்ஹான் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் இந்துக்கள் விஷயத்தில் தலையிட வேண்டும்? இதுதான் மிகவும் சிறிய கேள்வி.

வேதபிரகாஷ்

16-06-2010


[1] காசி விஸ்வநாதர் கோவில் ஔரங்கசீப்பினால் இடிக்கப்பட்டது. எஞ்சியுள்ள கோவில் பகுதியைத்தான், இப்பொழுது கோவிலாக உள்ளது. உண்மையில் கர்ப்பகிரகம் இருந்த இடத்தில் மசூதி உள்ளது. அது பிரச்சினையாகவும் உள்ளது. ஆக முழு கோவில் அங்கு இல்லை. முன்பு திறந்த வெளியாக இருந்தது. 1992க்குப் பிறகு, மசூதி இருக்கும் கோவில் பகுய்தியைப் பிரித்து, இரும்பு குழாய், முகம்பி வேலி என்றேல்லாம் போட்டுத் தடுத்துள்ளனர். அத்கு மட்டுமல்லாது, இருக்கின்ற எழ்ஜியப்பகுதி கோவிலுள்ளேயே பாதுகாப்பு போலீஸார் உட்கார்ந்துள்ளனர். ஆக இந்த கோவிலின் சம்பிராதங்களை, தென்னிந்தியாவில் உள்ள கோவிலுக்கு அமூல் படுத்த முடியாது.

[2] Tension near Mylai temple, Express News Service; First Published : 14 Jun 2010 02:55:21 AM IST; Last Updated : 14 Jun 2010 08:24:10 AM IST

http://expressbuzz.com/cities/chennai/tension-near-mylai-temple/181345.html

[3] இந்துக்களின் இயல்பு நிலையை காட்டுகிறது. அத்தகைய இந்துக்களை, இப்படி தாக்குவது, அவர்களை இத்தகைய செயல்களால் பயமுறுத்துவது, அமைதியைக்குலைப்பது போன்ற செயல்களை நோக்கினால், அவர்களது தீவிரவாத மனப்பாங்கு வெளிப்படும்.

[4] இதுவும் பக்தர்கள் போர்வையில், அந்த விஷமிகள் உள்ளேச் செல்லக்கூடும் என்ற நிலையைக் காட்டுகிறது. அதாவது, இந்துக்கள் எளிதில் தாக்கப்படலாம், சுலபமான / மென்மையான (Soft target) இலக்கில் உள்ளனர் என்பதைக் காட்டுகின்றது.

[5] இந்த வயதான ஆளிற்கு இந்த வயதில் இப்படி கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, ஏன் செயல்படுகிறார் என்று விசாரிக்க வேண்டும்.

[6] இவர்கள், கிருத்துவர்களாக, முஸ்லீம்களாக, நாத்திகர்களாக இருக்கலாம். கோவிலுக்குள் சென்று பூஜை செய்வோம் என்ற கோஷ்டிகள் எப்படி, இத்தகைய சட்டைகளை அணியமுடியும்?

[7] சட்டநிலையை நெடுமாறன் அறியாமல் இருந்திருக்கிறார் என்றால், நம்பமுடியவில்லை. கருணாநிதியும், அப்படியொன்றும், இளிச்சவாயன் அல்லர்.

[8] போலீஸார் இப்படி கெஞ்சுதல், அவர்களுடைய பாரபட்சத்தைக் காட்டுகிறது. இதனால்தான், கருப்பு-சிவப்பு-பச்சைப்பரிவாரங்கள் போலீஸைத் துச்சமாக மதிக்கின்றது என்றல், மிகையாகாது.

[9] ஒரு கிருத்துவன் எப்படி இவ்வளவு கலாட்டா செய்கிறான், என்று போலீஸ் கேட்காதது வேடிக்கையாகவே இருக்கிறது.

[10] அப்படியென்றால், எதை எதிர்பார்க்கிறார்கள் அந்த விஷமிகள்? அசம்பாவிதம் ஏற்படவேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லது ஏற்படுத்த முனையப்போகிறார்கள்?

[11] இந்துக்கள் என்றல் இப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது போலும். ஆனால், அவர்கள் – கிருத்துவ, நாத்திக, இந்திய-விரோத ஆட்கள் சேர்ந்து வரலாம்!

[12] அதற்குப் பிறகு, அத்தகைய விஷமிகள் வந்து இடையூறு விளைவிக்கமட்டார்கள் என்பது, என்ன உறுதி?

[13] அப்படியென்ன பற்றிக் கொள்ளக்கூடியப் பிரச்சினை? முன்னெச்சரிக்கையாக அது இந்துக்களுக்குச் சொல்லபடவேண்டாமா?

[14] இதெல்லாம் அவர்களுக்கு சகஜமான விஷயங்கள் தாமே? இந்துக்களா என்ன, ஐயோ, போலீஸார் கைது செய்து விட்டார்களே எட்ன்று அவமானப்படுவதற்கு, வெட்கப்படுவதற்கு?