கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (5)

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (5)

 

கே. அயோத்திதாசர் நூற்றாண்டு விழா

கே. அயோத்திதாசர் நூற்றாண்டு விழா

23-02-2014 – 5.00 மாலை, மயிலை மாங்கொல்லை: மு. தெய்வநாயகத்தின் கூட்டம் என்று மயிலை மாங்கொல்லைக்குச் சென்றபோது, “கே. அயோத்திதாசர் நூற்றாண்டு விழா” என்று ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. குளத்தின் இடதுபக்கத்தில் வாகனத்தில் யாரும் செல்லக் கூடாது என்று போலீசார், வலதுபக்கம் வழியாக செல்லும்படி பணித்தனர். சுற்றிக் கொண்டு சென்றால், கோவிலுக்கு வாசலில், சில போலீசார் நின்றிருந்தனர். விசாரித்ததில் சமூக சமத்துவப்படை சார்பில் கூட்டம் நடப்பதாகக் கூறினார்கள். நான்கு மணியிலிருதே அக்கூட்டம் நடப்பதாகத் தெரிந்தது. “பண்டிதமணி கே. அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டு விழா – 2014, நிகலமற்றோர் – வீடற்றோர் மாநாடு” என்று மேடைக்குப் பின்பக்கம் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்தது[1]. மேடை, கொடிக்கம்பங்கள் வைப்பது போன்ற வேலை காலையிலிருந்தே நடந்ததாகத் தெரிந்தது.

'நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

 

சமூக  சமத்துவப்  படைதலைவரும்,   ..எஸ். அதிகாரியுமான  சிவகாமியின்   அரசியல்   நாட்டங்கள்: பகுஜன் சமாஜில் இணைந்தார், தமிழகத்தில், அரசியலில் நுழைந்த 2வது பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற நிலையைப் பெற்றார் என்று 2008ல் செய்திகள் வந்தன. 22-02-2014 அன்று தே.மு.தி.க. தரப்பில் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்ட போது, விஜயகாந்தை, பார்வர்டு பிளாக் தலைவர் சந்தானம், சமூக சமத்துவப்படை தலைவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி ஆகியோர் சந்தித்து பேசினார்கள்[2]. முன்னர், 04-10-2013 அன்று வேலூர் கூட்டத்தில் சிவகாமி பேசும் போது, வரும் லோக்சபா தேர்தலில், சமூக சமத்துவப்படை கட்சி போட்டியிடுகிறது. தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து, வரும், 24ம் தேதி, சென்னையில் நடக்கும் மாநில பொதுக் குழு கூட்டத்தில், முடிவு செய்யப்படும், என்றார்[3]. அதாவது, ஏதாவது ஒரு கூட்டணியில் சேரவேண்டும் என்ற ஆசையிருந்தது.  29-01-2014 அன்று, சமூக சமத்துவப் படை அமைப்பு சார்பில், அடுத்த மாதம், 23ம் தேதி, சென்னை, மயிலாப்பூரில், ‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு’ நடைபெற உள்ளது என்று சிவகாமி அறிவித்தார்[4].

 

'நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு பிப்ரவரி 2014

23-02-2014 – 6.00 மாலைமயிலை மாங்கொல்லை: சமூக சமத்துவப்படையின் மாநாடு நடந்து கொண்டிருந்தது. யார்-யாரோ பேசிக் கொண்டிருந்தனர். தெய்வநாயகத்தின் கூட்டம் இல்லை என்று தெரிந்தது. இன்று மாங்கொல்லையில் சமூக சமத்துவப்படையின் மாநாட்டு கூட்டம் நடக்கிறது எனும்போது, அதற்கு போலீசார் முன்னமே அனுமதி கொடுத்தனர் என்றாகிறது. அப்படியென்றால், தெய்வநாயகத்தின் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்றாகிறது. இது நிச்சயம் ஒருவாரத்திற்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும். பிறகு, எதற்கு சென்னையில் பல இடங்களில் சங்கராச்சாரியாரையும், போப்பையும் இணைத்து போஸ்டர் ஒட்டி ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் கூட்டம் இல்லை என்று தெரிவித்திருக்க வேண்டும், ஆனால், உண்மை தெரிந்தும் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தே தெய்வநாயகம் போன்றோரின் நாணயத்தை, மெய்தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

 

'நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு

பொதுக் கூட்டத்திற்கு தடை ஏன்?: சுற்றிவந்தபோது, ஒருவர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட நோட்டிஸை விநியோகித்துக் கொண்டிருந்தார். வாங்கிப் படித்ததில்,  “பொதுக் கூட்டத்திற்கு தடை ஏன்? பொது மக்களுக்கு அறிப்பு” என்றிருந்தது. அது தெய்வநாயகத்தின் நோட்டீஸ் தான்! “பொதுக் கூட்டத்திற்கு தடை ஏன்?” என்றதில் புள்ளிக்கு பதிலாக தாமரைச் சின்னம் இருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை தெய்வநாயகம் பிஜேபியில் சேரப்போகிறாரா என்று தெரியவில்லை. “இந்துமதச் சின்னமாகிய திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டு சைவ மதத்தையும், வாயினால் நாராயணா எனக்குறிக்கொண்டு வைணவ மததையும்” என்று விமர்சித்துள்ள நிலையில், இவரது “தாமரச் சின்னத்தின்” பிரயோகம் என்னவென்று தெரியவில்லை. இவரது “பொதுக்கூட்டம் நடந்த்யால் கலவரச் சூழலை உருவாக்க இரண்டு அமைப்புகளும் திட்டமிட்டுளன என்ற செய்தி காவல்துறைக்கு எட்டியுள்ளது. இதனால் கூட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்கி சில கட்டுப்பாடுகளைப் போட்ட காவல்துறை, இரண்டாவதாகக் கலவரச் சூழலை கருத்தில் கொண்டு கூட்டம் நடத்த தடை செய்துள்ளது”, என்று அந்த நோட்டீஸில் உள்ளது. ஆக இதைப் பற்றி இவருக்கு முன்னரே தெரிந்திருந்தும், இ-மெயிலில், இவரது இணைதளத்தில் அறிவிக்கவில்லை என்றாகிறது.

 

சமூக சமத்துவப்படையின் மாநாடு

சமூக சமத்துவப்படையின் மாநாடு, மாங்கொல்லை, மயிலை

நடந்த சிவகாமியின் கூட்டமும், இல்லாத தெய்வநாயகத்தின் கூட்டமும்: ‘நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு’ நடைபெற உள்ளது என்று சிவகாமி அறிவித்தார் என்றால், ஜனவரியிலேயே, அவரது கூட்டம் தீர்மானமாகி விட்டப்படியால், தெய்வநாயகத்தின் நோட்டீஸ், சுவரொட்டி முதலியவை எதற்கு என்ருய் புரியவில்லை. இரண்டு இயக்கங்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில், அதிலும் மயிலை மாங்கொல்லை போன்ற சிறிய இடத்தில் கூட்டம் நடத்துவது என்பது இயலாத காரியம். ஆகவே, ஒருவருக்குத்தான் போலீஸார் அனுமதி அளித்திருக்க முடியும், அவர்கள் தாம் 23-02-2014 அன்று கூட்டம் நடத்த முடியும். சிவகாமியின் கூட்டம் நடந்தது என்றதால், தெயநாயகத்தின் கூட்ட அறிவிப்பு, விடாப்பிடியான போஸ்டர்கள் ஒட்டுதல், முதலியன விளம்பர ஸ்டன்டுகள், பிரச்சார யுக்திகள் என்று புலனாகிறது. மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால், என்னைப் போன்ற நான்கைந்து சென்னைவாசிகள் தவிர, யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான். தாமஸ் கட்டுக்கதையினை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவரும், இவரது விசயங்கள் எல்லாமே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. பாவம், இவரது கூட்டமும் பொய்யாகிவிட்டது, கட்டுக்கதையாக, மாயையாகி விட்டது.

 

சமூக சமத்துவப்படையின் மாநாடு

சமூக சமத்துவப்படையின் மாநாடு, கோவிலுக்குப் போகும் வழியை ஆக்கிரமித்து அரசியல் கூட்டம்

மாங்கொல்லையில் பொது கூட்டம் நடப்பதால் பக்தர்களுக்கு தொல்லை: கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் எப்பொழுதுமே கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அதிலும் ஞாயிற்றுக் கிழமை, கோவிலுக்கு மட்டுமல்லாது சுற்றியிருக்கும் கடைகளுக்கு வரும் கூட்டமும் இருக்கிம். இந்நிலையில், மாங்கொல்லையில் பொது கூட்டம் நடப்பதால் பக்தர்களுக்குத்தான் சிரமும், தொல்லையும் ஏற்படுகின்றன. கூட்டத்தைப் பற்றி கேட்டபோது, நாங்கள் எத்தனையோ தடவை சொல்லியாகிவிட்டது, போலீஸார் முதல் யாரும் இதனைத் தடுப்பதாக இல்லை. இங்கே வேண்டுனென்றே, கூட்டத்தைப் போட்டு, எங்களை சதாய்த்து வருகிறார்கள் என்றே வெளிப்படையாக கூறினார்கள்.

 

சமூக சமத்துவப்படையின் மாநாடு

சமூக சமத்துவப்படையின் மாநாடு, 2014

தினமலரில் 2011ல் வெளிவந்த செய்தி: மயிலை மாங்கொல்லை பகுதியில் அரசியல் கட்சிகள் நடத்தும் தொடர் பொதுக்கூட்டங்களால், கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அமைதியாக, உள்ளத்துக்கு நிறைவை ஏற்படுத்தும் வழிபாட்டை, பொதுக்கூட்ட இரைச்சல் குலைக்கிறது என்று பக்தர்கள் வருந்துகின்றனர்[5]. மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், பண்டிகைக் காலங்கள் மட்டுமில்லாமல், எல்லா நாளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ராமகிருஷ்ணா மடம் சாலை கோவிலுக்கு வரும் பிரதான சாலையாக உள்ளது. கோவிலை சுற்றியுள்ள குறுகிய மாட வீதிகள் வழியாக பக்தர்கள் நடந்தும், வாகனத்திலும் கோவிலுக்கு வருகின்றனர்.

நாம் தமிழர் - சீமான் - தமிழருவி மணியன் கூட்டம்

நாம் தமிழர் – சீமான் – தமிழருவி மணியன் கூட்டம் – 2011, ஆனால் இன்றோ இந்துமதத்தை தூஷிக்கும் சீமான், ஆதரிக்கும் மணியன்!

சென்னை நகரில் அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டத்தை நடத்த கோவிலுக்கு எதிரே உள்ள மாங்கொல்லை பகுதியையே, பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். போலீசாரும் இந்த இடத்தை பொதுக்கூட்டம் நடத்தும் பகுதி என, நிரந்தரமாக முடிவு செய்துள்ளனர். அரசியல்கட்சிகளுக்கு இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படும் நாள்களில், பகலிலேயே சாலைகளை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைக்கின்றனர். மேடைக்கு முன் அமருவதற்கு நாற்காலிகளை வேறு போட்டு விடுகின்றனர். கட்சி கொடி கம்பங்களும், டியூப் லைட்களும், தலைவர்களையும், கட்சி சின்னங்களையும் பிரதிபலிக்கும் அலங்கார வளைவுகளும், சீரியல் செட்டுகளுமாக, அரசியல் அரங்கமாக இந்த பகுதி மாறிவிடுகிறது. இதனால், இந்த பாதையைக் கடக்கும் பக்தர்கள், கோவிலுக்கு வந்தோமா, இல்லையா என்பதை மற்றொரு முறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

sfi மாங்கொல்லை கம்யூனிஸம்

sfi மாங்கொல்லையில் கம்யூனிஸம் 2013

பண்டிகை காலங்களில் கூட இந்த தொந்தரவு ஏற்படுகிறது: அதோடு, பொதுக்கூட்டம் 8 மணிக்கு துவங்கும் என்றால், 5 மணிக்கே கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்ப தொடங்குகின்றனர். மாலை நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளாலும், கட்சியின் கொள்கை விளக்க பாடல்களாலும் உள்ளம் நொந்து போகின்றனர். கோவிலுக்கு வாகனத்தில் வருபவர்கள் அவற்றை எங்கே நிறுத்துவது என தெரியாமல் அல்லாடுகின்றனர். தற்போது, நவராத்திரி கொலு பண்டிகையால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலை மாங்கொல்லையில். பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து அனுமதி கேட்டுள்ளன. சில கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளன. இதனால், பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களின் உள்ளத்தையும், பிரசித்தி பெற்ற கோவிலின் பெருமையையும் காக்கும் வகையில், மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்ட திடலை, கோவில் நிகழ்ச்சிகளைத் தவிர, வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்[6]. 2014லிலும் இதே நிலைதான் உள்ளது.

 

வேதபிரகாஷ்

© 24-02-2014


[1] தினமலர், நிகலமற்றோருக்கான மாநாடு, பிப்ரவரி 24, 2014, சென்னை, பக்கம்.11.

[6] தினமலர், மாங்கொல்லையைமறப்பார்களாஅரசியல்கட்சிகள்?, 29-09-2011

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

ஒரு பதில் to “கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (5)”

  1. Naciappan Palaniappan Says:

    It is evident that Deivanayagam has been bluffing in this regard.

    Ever since his last meeting was objected by many and he has been indulging in mudslinging and blaspheming Hindu religion, the police would not ive permission thereafter.

    Better, he and his gag go to that Santhome church and liberate, as he has been claiming.

    Or the can leave the churches and keep quite hereafter.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: