Archive for the ‘திரியேகத்துவம்’ Category

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)

நவம்பர் 1, 2022

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)

Pope sends mesage for FABC 2022

போப்பும், ஆயர் மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில்  உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினால்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[1]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[2].

The Chinese cardinal- none attended from China

ஆசிய பிஷப் மாநாட்டில் சைனா பிஷப்புகள் கலந்து கொள்ளவில்லை: தொற்று என்றெல்லாம் காரணங்கள் சொல்லப் பட்டாலும், சைனா கிறிஸ்வத்திற்கு ஆதரவாக இல்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் சைனா பொருளாதார விசயங்களில் அதிரடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ மேலிடம் அனுமதி இல்லாமல், எந்த பிஷப்பும் ஒன்றும் செய்து விட முடியாது. அதுதான், சைனாவில் உள்ள நிலை. கம்யூனிஸ மாநாடு நடந்து, லி பிங் மறுபடியும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சைனா, மதரீதியிலாக எந்த பிரச்சினையையும் உண்டாக்கவோ, அல்லது அந்நாட்டில் உருவாக்கவோ விரும்புவதில்லை. பௌத்தம், ஷின்டோ போன்ற மதத்தினர் இருந்தாலும், அவை தங்களது இடங்களுக்குள், மடாலங்களுக்குள் பின்பற்ற வேண்டும். தெருக்களில் வரக் கூடாது. ஆகவே, கிறிச்துவர், முஸ்லிம்கள் மற்ற நாடுகளைப் போனூ சைனாவில், பிரச்சாரம் செய்வது, கூட்டங்கள் போடுவது, போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.

மதம் மாற்ற திட்டம் போடும் கூட்டம்: மாநாட்டின் போது, ஆசியாவில் வளர்ந்து வரும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மத உண்மைகளுக்கு பதிலளிப்பதற்காக ஆசியாவில் உள்ள தேவாலயத்திற்கான ஒரு கிறிஸ்துவ மேய்ப்பு திட்டத்தை – அதாவது மதமாற்றி- ஆடுமாடுகளைப் போன்ற கூட்டத்தை உண்டாக்க – உருவாக்க பங்கேற்பாளர்கள் பல ஆலோசனைகளில் சேர்ந்தனர். ஆசிய இளைஞர்களுக்கான பைபிளின் தனித்துவமான பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது[3]. “அடையாளம்: அடையாளம் கண்டதும், வாழ்க்கையில் உள்ள சவால்களை கடத்தல்” [‘Identity: Identified, Navigating the Challenges of Life] என்ற தலைப்பில் அந்த பைபிள் வெளியிடப் பட்டு, ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் மற்றும் சைமன் போஹ் பிஷப்புகளால் அவைக்குக் கொடுக்கப் பட்டது[4]. முன்பு கூட ஆசியாவிற்கான பைபிள், இந்தியாவிற்கான பைபிள் என்றெல்லாம் வெளியிட்டனர். ஆனால், சர்ச்சை உண்டானதால், அவற்றை சுற்றிலிருந்து அகற்றி விட்டனர். அதை மறந்தும் விட்டனர் எனலாம். கருத்துரிமை பேசுபவர்களுக்கும் கப்சிப் என்று தான் இருக்கிறார்கள்.

அக்டோபர் 12 முதல் 30 வரை பிஷப் மாநாடு நடக்கும் நேரத்தில் உலகம் முழுவதும், பல நாடுகளில் மக்கள் கொல்லப் படுதல்: இம்மாநாடு முடியும் தருவாயில், தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் அக்டோபர் 29 அன்று நடந்த ஹாலோவீன்[5] விழாவில்  ஒரு குறுகிய சந்துக்குள் ஒரு பெரிய ஹாலோவீன் பார்ட்டி கூட்டம் அலைமோதியதில் ஊட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர், நூற்றிற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[6]. பில்லிப்பைன்ஸிலும், பலத்த மழை, வெள்ளத்தினால், 45 பேர் கொல்லப் பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர்[7].  30-10-2022 அன்று தொங்கு பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 150 பேர் பலியாகினர். உக்ரைனில் தொடர்ந்து போர்; பாலஸ்தீனத்தில் கலவரம் கொலை; ஈரான் ஆர்பாட்டத்தில் 150 பேர் கொலை, என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன-இருக்கின்றன. 29-10-2022 அன்று தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகளில் நூற்றிற்கும் மேலானோர் சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் கொல்லப் பட்டனர். ஆசியாவின் ஆயர்களின் கூட்டத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்களின் தூதுவர் தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிலிப்பைன்ஸில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்[8]. தாங்கள் எப்பொழுதும், அவர்களுடன் இருந்து, உதவுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்[9].

Traditional Thailand dance – Inculturation

ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்தன்மை குறைந்திருக்க வேண்டும்: ஆசியாவில் உள்ள தேவாலயங்கள், திருச்சபையின் ஆசியத் தன்மையை வலியுறுத்தும் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் போப் பிரான்சிஸ் திருச்சபை சமூகங்களை, இக்கால இறையியல் மூலம் மேலும் அடித்தளமாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று, ஶ்ரீலங்காவின், ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான விமல் திரிமான்ன கூறுகிறார்[10]. ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்-தன்மை குறைந்திருக்க வேண்டும் என்று பேசுவதும்[11] தமாஷாக இருக்கிறது. எப்படித் தான் வார்த்தைகளை மாற்றி, சுற்றி வளைத்துப் பேசினாலும், வாடிகன் கவுன்சில் -2 என்றெல்லாம் பேசும் பொழுது, அவர்களது திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.  உள்-கலாச்சாரமயமாக்கல், உரையாடல் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான். ஏற்கெனவே முரண்பாடுகளுடன் செயல் பட்டு வருகின்றன.

கிருத்துவத்தால் வன்முறையினைக் குறைக்க முடியவில்லை: இத்தாலியிலிருந்து வரும் ஒரு நாளிதழ், “உதவ மற்றும் நீதி கேட்டு கூக்குரலிடும் மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள்…..ஆசிய கண்டத்தில் எழுச்சியுறும் மக்களுக்கு உதவுங்கள்……..ஒன்றாக உழைத்து புதிய ஆசியாவை உண்டாக்குவோம்,” என்றெல்லாம் மாநாட்டில் பேசியதாக கூறுகிறது[12]. இதெல்லாம் வழக்கமான கோஷங்கள் தானே தவிர, புதியதாக உன்றும் இல்லை. முதலில் இருக்கும் கிருத்துவர்களை, கிருத்துவர்களாக இருக்க இவர்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால், அதை செய்வதில்லை. இந்த மாநாடு நடக்கும் போதே, தினம்தினம் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கில் மக்கள் பல நாடுகளில் கொல்லப் படுகின்றனர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப் படுகின்றனர், தீவிரவாத தாக்குதல்களில் குரூரமாகக் கொல்லப் படுகிறார்கள். கடவுளின் பெயரால் தான் அவர்களும் அத்தகையை குரூர காரியங்களை செய்து வருகிறார்கள்.

மாநாட்டின் திட்டங்களை விளக்கும் இறுதி ஆவணம் தயாராகிறது: பம்பாய் பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ், மாநாடு செயல்பட்டு வரும் இறுதி ஆவணத்தை எவாஞ்சலைசேஷன்  (மதம் மாற்றுதல்), மேய்ப்புச் சாத்தியங்கள் (மதம் மாற்றும் நடவடிக்கைகள்) தொடர்பான “எதிர்கால” ஆவணமாகவும், அவ்வாறே செயல்பாட்டிற்கு உதவும் வகையிலும் கொன்டு வர ஆவன செய்வதாக விவரித்தார்[13]. மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆசியாவில் உள்ள சமூகத்தின் பல அம்சங்களின் கூகுரல்களைக் கேட்டதாக அவர் விளக்கினார். கூறினார், உதாரணமாக, “எங்கள் ஆயர் பணியில் அதிக சிந்தனைமிக்க ஆன்மீகத்திற்கான பெரும் ஏக்கத்தை நாங்கள் கேட்டோம்”. இந்த ஆவணம், FABC பிரதிநிதிகளின் பொது ஒப்புதலைப் பெற்ற செயல்பாட்டில் உள்ளது என்று அவர் விளக்கினார். இது மற்ற ஆயர்களுடனும், பாமர உறுப்பினர்களுடனும் மேலும் விவாதிக்கப்படும். “இந்த ஆவணம் முழு ஆசியாவிலும் எதிர்கால மேய்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி ஆவணமாக எங்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றெல்லாம் கூறுவதை கவனிக்கலாம்.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM

[2] https://www.ucanews.com/news/bishops-regret-lack-of-chinese-presence-at-asian-gathering/99252

[3] Maters India, Bible youth edition released at Asian bishops’ meet, BY: FELIX ANTHONY  ON: OCTOBER 22, 2022

[4] https://mattersindia.com/2022/10/bible-youth-edition-released-at-asian-bishops-meet/

[5] ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

[6] ஹாலோவீன் காரணமாக பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவாக இந்த விழாவில் 50 -60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக இந்த விழா வெளியில் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் இதை முன்னிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 1 லட்சம் பேர் அங்கு கூடினார்கள். அந்த மார்க்கெட் பகுதிகளில் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் ஓட தொடங்கி உள்ளனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி.. பலர் கீழே விழுந்து.. அவர்கள் மீது மக்கள் ஏறி மிதித்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பலரின் கழுத்து, முகம், நெஞ்சில் ஏறி மக்கள் ஓடிய நிலையில் அங்கு மிகப்பெரிய களேபரமே ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அதுதான் திடீரென மக்கள் ஓட காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் நேற்று 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இதில் பலியானவர்களில் 100 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

[7] n the Philippines, authorities reported at least 45 deaths so far and millions of damage due to severe Tropical Storm Nalgae, also locally dubbed Paeng.

[8] Pope’s envoy to Asian bishops meeting prays for victims of Seoul stampede, ‘Paeng’

By Roy Lagarde via CBCP News – October 31, 2022 – 5:35 PM .

[9] https://interaksyon.philstar.com/trends-spotlights/2022/10/31/233087/tagle-prays-for-victims-of-seoul-stampede-philippines-storm/

[10] Island News, Asian Church should become ‘more Asian, less Roman’, Published 2 days ago on 2022/10/30.

[11] https://island.lk/asian-church-should-become-more-asian-less-roman/

[12] Agensir, Asia: Fabc’s final message, “let us hear the cry for help and justice” rising from the peoples of the continent. “Together we work for a better Asia”, 31 October 2022 @ 14:20.

[13] Vatican news, Asian Bishops: We wanted to see how our Churches can be agents of change, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 29 October 2022, 10:37.

https://www.vaticannews.va/en/church/news/2022-10/press-conference-fabc-50-bangkok-asia-tagle-gracias-charles-bo.html

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனும், கிறிஸ்தவமும், வாடிகன் அவரைப் போற்றி விருது கொடுத்ததும் – உரையாடல் நடந்த விதம்!

செப்ரெம்பர் 5, 2020

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனும், கிறிஸ்தவமும், வாடிகன் அவரைப் போற்றி விருது கொடுத்ததும் – உரையாடல் நடந்த விதம்!

 

இந்தியா தத்துவம், தத்துவ ஞானம், சாத்திரம் முதலியவற்றில் சிறந்து விளங்கியது: முன்னர், தத்துவம் பாடபு புத்தகங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் என்று எதை எடுத்தாலும், இந்திய தத்துவம் என்று தான் ஆரம்பிக்கும். ஏனெனில், தத்துவம் இந்தியாவில் தான் தோன்றி, வளர்ந்து மற்ற நாடுகளுக்கு, நாகரிகங்களுக்குப் பரவியது. கிரேக்க தத்துவ ஞானிகளில் பலர், இந்திய பல்கலைக் கழகங்களுக்கு வந்து படித்துச் சென்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். ஆங்கிலேயர் பாடபுத்தகங்களில் இவற்றையெல்லாம் மறைத்தனர். 1947- பிறகு வந்த சோசியலிஸ-கம்யூனிஸ-செக்யூலர்ஸ சித்தாந்த குழுக்களும் அதேமுறையைப் பின்பற்றின.

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[1] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[2] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[3]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[4][5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[5]. புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்[6].

சரித்திர ஏசு இருந்ததை ஏற்றுக் கொள்ளவில்லை: தத்துவ வித்தகர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனை (1888-1975) அறிந்தவர், படித்தவர், அவரது மதங்களின் ஒப்பீட்டு ஆராய்ச்சியைக் கவனிக்க வேண்டும். இவ்விசயத்தில் பலவழிகளில் அவரை சுவாமி விவேகானந்தர் (1863-1902) ஈர்த்துள்ளார். விவேகானந்தர் ஒரு சரித்திர கிருஸ்து இருந்ததை ஏற்கவில்லை. கிருத்துவர்களின் நம்பிக்கையை எதிர்க்கவில்லை, ஆனால், சரித்திர ரீதியாக அத்தகைய நபர் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். இதனை அவரது பேச்சுகள், எழுத்துகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே நிலையை எஸ். ராதாகிருஷ்ணனும் கொண்டிருந்தார். இது ஸ்பால்டிங் சொற்பொழிவுகளில் வெளிப்பட்டன[7]. கிருத்துவத்தின் மீதான பௌத்தத்தின் தாக்கத்தை எடுத்துக் காட்டி, ஒரு சரித்திர கிருஸ்து இருந்தது இல்லை என்பதை சுட்டிக் காட்டினார். எஸ். ராதாகிருஷ்ணன், ஜோசப் அல்லது ஜோசப என்ற பெயர், போதிசத்வர் என்றதிலிருந்து பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்[8]. மேனாட்டவர் முகம் உடைக்கப் பட்ட கிரேக்க உருவத்தை ஏசு என்று சொல்லி, புத்த  சிற்பத்துடன் ஒப்பிடுவர். ஆனால், அந்த ஒப்பீடே, கிருத்துவம் பௌத்தத்திலிருந்து பெற்றது என்று காட்டுகிறது. அதாவது ஏசு, கிறிஸ்து, ஏசு கிறிஸ்து எல்லாமே புனைவுகள் என்றாகிறது.

ராதாகிருஷ்ணனின் கிருத்துவ அலசல்களில் அவரது கிருஸ்டோலோஜி (Christology) நோக்கும் வெளிப்படுகிறது.  நிச்சயமாக 19-20 நூற்றாண்டில் வெளி வந்த அப்புத்தகங்களைப் படித்துள்ளார். எவ்வாறு கிருத்துவ பக்தர்கள் திரியேகத்துவத்தை (Doctrine of Trinity) காப்பி அடித்தனர் என்று [பிரம்மத்திலிருந்து] எடுத்துக் காட்டினார். அவரது அத்வைத-வேதாந்த விளக்கங்கள் உதிர்ந்த தத்துவ பேராசிரியர்களுக்கு மற்ற மதங்களை ஒப்பீடு செய்து ஆராய்பவர்களுக்குப் புரிந்தது, ஆனால், அடிப்படைவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. இதை இன்றளவிலும் கிருத்துவர் எதிர்த்து வருகின்றனர். ஏசுவை ஒரு வன்முறையாளர் போன்று இருந்ததை எதிர்த்தார், அது வோல்டேர், பைன், பிராட்லாப், இங்கர்சால் போன்றோரை ஒத்தது ஆகும்.

போப், ராதகிருஷ்ணன் தொடர்புகள்: எங்கள் கடவுளர் எப்பொழுதுமே பிரம்மச்சாரியாக இருக்கவில்லை, திருமணம் செய்து கொண்டர், மனைவியர் இருந்தனர், என்று எடுத்துக் காட்டினார்! எனவே இத்தகைய கருத்துகள், கிருத்துவர்களுக்குத் திகைப்பாக இருந்தது. ஆனால், அவரோ தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர். ஆக, “உரையாடல்” மூலம், அவரது ஆராய்ச்சிகளை நீர்க்க முயன்றனர். வாடிகனில் இந்திய ஜனாதிபதி, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், போப் பயஸ் XII உடன், அக்டோபர் 3, 1952 அன்று வரவேற்பு அளிக்கப்படது. அப்பொழுது, ரோமுக்கான, இந்திய தூதுவர் இருந்தார். 1964ல், போப் பால் VI, அவருக்கு வாடிகனின் உயர்ந்த விருதை  அதாவது வாடிகனின் உயந்ர்த விருது ஒரு நாட்டின் அதிபருக்குக் என்று – அளித்து கௌரவித்தது[9]. போப் பால் VI, டிசம்பர் 3. 1964 அன்று பாம்பேக்கு வந்த போது, இந்திய ஜனாதிபதி, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பரிசும் கொடுத்தார்! தனி விமானத்தில் பாம்பேவிற்கு அனைத்துலக யூகேரிஸ்ட் மாநாடாட்டில் கலந்து கொள்ள வந்தார்[10]. 1975ல் டெம்பில்டன் விருது (Templeton Award) அளிக்கப் பட்டது, முதன் முதலாக, அப்பொழுது, கிருத்துவர் அல்லாதவருக்குக் கொடுக்கப் பட்டது, ஆனால், அவர் அந்த பணத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்து விட்டார்[11]. 17-04-1975 அன்று காலமானார்.

போப்பும், கிருத்துவர்களும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும்: டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், ஆழமாகப் படித்ததால், தத்துவ-தர்க முறையில், தனது நிலையில் உறுதியாக இருந்தார். பொதுவாக ஒரு கடவுளை ஏற்றுக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாலும், அக்கடவுள் இதுதான் என்று குறிப்பாக திணிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. தியேகத்துவம் எப்படி அத்தகைய ஒரு கடவுள் தத்துவத்திற்கு முரணாக உள்ளது என்பதை, “பிரம்ம” மூலம் உணர்த்தினார். இது, இந்தியாவில் கடவுளுக்குப் பெயர் கொடுத்து சண்டை போடுபவர்களுக்கும் பொறுந்தும். புரியாதவர்கள், விதண்டாவாதம் செய்து, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருப்பர். கத்தோலிக்கம் போன்று, இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால், இக்குழப்பம் விளைவிக்கும் கூட்டங்கள் உரிமைகள் என்ற போர்வையில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வபள்ளி ராதகிருஷ்ணன் சரியாகப் புரிந்துக் கொள்ளப்படவில்லை: சர்வபள்ளி நோபல் இலக்கியப் பரிசுக்காக 16 முறை மற்றும் நோபல் சமாதானத்திற்கு 11 முறைகள், பரிந்துரைக்கப் பட்டார்[12], ஆனால், கொடுக்கப்படவில்லை! இதிருந்து அனைத்துல ரீதியில் இவருக்கு எதிராக செயல்பட்ட சில கூட்டங்களை அறியலாம். ஏனெனில், அவருக்கு எல்லா தகுதிகளும், ஆளுமை மற்றும் சிறப்புகள் இருந்தன. இதே போல, இந்தியாவிலும் முறைப்படி ஆதரவு தெரிவிக்க, தாக்கம் ஏற்படுத்த முயலவில்லை என்றும் தெரிகிறது[13]. கிருத்துவ மதத்தைப் பற்றிய அவரது கருத்துக்களே இதற்கு காரண என்பதை சுலபமாக அறிந்து கொள்ளலாம். அதனை சரிகட்ட, டெம்பில்டன் விருது கொடுக்கப் பட்டிருக்கலாம். கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் உதாரணம். விருதுகள் அவரைத் தேடி வந்தன! டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனை இந்தியர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனலாம். அவரது புத்தகங்களைப் படித்து, அவரது கருத்துகளை முறையாக அறிந்து கொள்ளவில்லை. ஏப்ரலில், மைலாப்பூரில் காலமான போது கூட, நிறைய பேர் கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

05-09-2020


[1] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html.

[2] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[3] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[4]  William Jones

[5]  E. Pocokoke, India in Greece,

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Radhakrishnan was knighted in 1931 and invited to take up the Spalding Professorship of Eastern Religions and Ethics at All Souls College, Oxford from 1936 to 1952.

[8] Dr. S. Radhakrishnan state that the name “Joseph” or “Joasaph” is “derived from Bodhisattva, the technical name for one destined to obtain the dignity of a Buddha.

[9] Dec 1964, Pope Paul VI made Dr S Radhakrishnan ” De Equastrine Ordine Militae Auratae ,” the Vactican’s highest honour of a head of State.

[10] The first Pope to visit India was Pope Paul VI, who visited Mumbai in 1964 to attend the International Eucharistic Congress. Pope John Paul II visited several places in India including Chennai in February 1986 and then again visited New Delhi in November 1999.

[11] the Templeton Prize in 1975, a few months before his death, for advocating non-aggression and conveying “a universal reality of God that embraced love and wisdom for all people.”He donated the entire amount of the Templeton Prize to Oxford University.

[12] He was nominated sixteen times for the Nobel Prize in literature, and eleven times for the Nobel Peace prize.

[13]  அந்த இர்வின் வாலஸ் நாவல் “தி பிரைஸ்” இங்கும் பொறுந்தும் என்றாகிறது.