Archive for the ‘ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜயலால்’ Category

ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் – IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர் – நிலைமாறி பேசியது, நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (2)

ஓகஸ்ட் 4, 2021

ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால்IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர்நிலைமாறி பேசியது, நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (2)

சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) மீது குற்றஞ்சாட்டியது: இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது. FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) ‘மருத்துவ அறிவியலை’ தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக மதமாற்றத்தை பரப்ப 83.95 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சமூக சேவை என்ற பெயரில் இவை நடந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஜெயலால் இதன் ட்ரஸ்டீ ஆவார். CMAI வெளிப்படையாகவே சர்ச் மூடநம்பிக்கைகளை பரப்பிய போதும் இவட் அமைதியாகவே இருந்தார். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கம், இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் ஜானரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மற்றும் பலரை முன்னணி படுத்துகிறது. இவர்கள் அனைவரும் தங்களுடைய மதமாற்ற நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் பற்றி மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தை வைத்து அறுவடை செய்ய திட்டம் போட்ட கிறிஸ்தவக் கூட்டங்கள்: இந்த அமைப்பின் சார்பாக நடந்த தேசிய மாநாட்டில் அருள் அங்கெட்டல் கூறுகையில், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம். நாம் பலவித சாதனைகள் செய்து வெற்றிகளை கொண்டு வருவோம். நாம் அனைவரும் இணைந்து ஒருமனதாக சுகாதார அமைப்பின் கடவுளாக இயேசு கிறிஸ்துவை ஆக்குவோம் என்று தெரிவித்திருந்தார். படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு மேலும் மருத்துவ அறிவியலை பயன்படுத்தி மதமாற்றங்கள் செய்வதற்கு பயிற்சிகளையும் நடத்துகிறது. அவர்கள் மத சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதாவது கிறிஸ்தவ மதமாற்றம். தற்பொழுது புதிதாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து வகுப்புகளையும் இந்த அமைப்பு நடத்துகிறது. இந்த அமைப்பின் நோக்கம் மத மாற்றம், அதற்கு பாதுகாப்பு அளிப்பது, இளம் தன்னார்வலர்களும் உதவியாளர்களையும் ஒன்றிணைத்து ஆன்மீக பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆன்லைன் டிரெயினிங் நடத்தப்படுகிறது. பல வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்களுக்கு பினாமி போல செயல்பட்டு, மருத்துவ விஷயங்கள் மூலமாக மத மாற்றங்களை நடத்திவருகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 (1) மற்றும் FCRA சட்டங்கள் 2010-ன் கீழும் குற்றமாகும்.

கொரோனா தொற்றுக்காக என்ற போர்வையில் நிதி பெறுவது: சமூக சேவை நடவடிக்கையாக நன்கொடை பெறுவதாக கூறி சர்ச்சுகளுடனும், எவாஞ்சலிஸ்ட்களுடனும் கூட்டணி வைத்து மருத்துவ அறிவியலை பயன்படுத்தி வருவதாக LRO அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்கள் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு 116 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்து, விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நீதிமன்றத்திற்கு செல்லவும் தயார் என எல்லாரும் அறிவித்துள்ளனர். கிறிஸ்தவ மூடநம்பிக்கைகளையும் நவீன அலோபதி மருத்துவத்தை கலந்து தவறான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அமைப்பின் வெளிநாட்டு நன்கொடை பதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது[1].

ஜூலை 11 2021: ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்[2]. அந்த வீடியோவில் அவர், “பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது போல் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். பெருங்கூட்டங்களைத் தவிர்ப்போம். அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு நாம் மூன்றாவது அலையை வரவேற்கும் எவ்வித ஆபத்தான செயலையும் செய்யாமல் இருப்போம்,” என்று கூறியுள்ளார்[3]. அதாவது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் மக்கள் ஊரடங்கு முறையில் இருக்கலாம் என்பது போல குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம். “பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது போல் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்,” என்கிறார். ஆனால், அங்கோ, அரசை மற்றும் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளதை கவனிக்கலாம்.

06-08-2021 – ஆகஸ்டில் குமுதம் ரிப்போர்ட்டரின் கதை: இப்பொழுது, “குமுதம் ரிப்போர்ட்டர்,” நடந்துள்ள சில விவகாரங்களை சுருக்கி, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பற்றி விவரத்தைக் கொடுத்துள்ளது[4]. இது அலோபதிக் மற்றும் ஆயுர்வேத முறைகள் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைகள் போன்று சித்தரித்து, செய்தியை வெளியிட்டுள்ளது. நிருபர், ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும், அதற்கு தான் சொன்ன கருத்தை திரும்ப வாங்க மாட்டேன் என்றும், வழக்கு நிலுவையில் உள்ளதான், மேற்கொண்டு எதையும் சொல்லவிரும்பவில்லை என்றாராம். இருப்பினும், முழு விவரங்களைக் கொடுக்கவில்லை. மற்ற ஆங்கில-தமிழ் ஊடகங்களும், இதைப் பற்றி அமைதியாகவே இருக்கின்றன. ஆகவே,  எவ்வாறு, கொரோனா காலங்களிலும், மருத்துவர்கள், மருத்துவ அமைப்புகள், மதம், மதப்பிரச்சாரம் போன்றவற்றை வைத்துக் கொண்டு, அரசியல் செய்கின்றன, குழப்பத்தை ஏற்படுகின்றன, சாதாரண மக்களின் நலத்தை விடுத்து, தமது கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை வைத்துக் கொண்டு செயல்படுகின்றன என்பதனை கவனிக்கலாம்.

27-07-2021 செவ்வாய் கிழமை இவரது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்டது: மேலே குறிப்பிடப் பட்ட [(Ajay Goel) Vacation Judge/ADJ-04/Dwarka Courts/SW New Delhi/03.06.2021…..] நீதிமன்ற தீர்ப்புக்கு, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மேல் முறையீடு செய்ததாகத் தெரிகிறது[5]. இருப்பினும், IMA அந்தஸ்த்தை துர்பிரயோகம் செய்து, ஆயுர்வேத முறையை விமர்சிக்கவோ, கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கோ உபயோகப் படுத்தக் கூடாது என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி 27-07-2021 அன்று செய்தது[6]. ஆகவே, இவ்வாறு விவரங்கள் வெளிவரும் பொழுது, ஊடகங்கள் வேண்டுமென்று மறைக்கலாம், ஆனால், இருக்கின்ற ஆவணங்கள் சம்பந்தப் பட்டவர்களை வெளிப்படுத்திக் காட்டி விடும். ஒரு சாதாரண பார்வையாளர், செய்திகளைப் படிப்பவர் அல்லது என்ன நடக்கிறது என்று கவனிப்பவர்களுக்கு, இதெல்லாம் விசித்திரமாகத் தான் இருக்கிறது. மெத்தப் படித்த, பொறுப்புள்ள மருத்துவர்களின் சங்கம் IMA ஆகும். அதன் தலைவர் பொறுப்பில் இருப்பவர், தான் IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர் என்றெல்லாம் இருக்கும் போது, எந்நிலையில், எங்கு, அதை பேசுகிறார் என்பதை அவர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தனது நிலை மாறி பேசும் போது, அதற்கு அவர் பொறுப்பாகிறார். இங்கு, அதுதான் நடந்துள்ளது.

© வேதபிரகாஷ்

04-08-2021


[1] கதிர்.செய்தி, மதமாற்றத்திற்கு 80 கோடி? கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆப் இந்தியா மீது புகார்!, Wednesday, 02 Jun, 9.20 am, Kathir News.

[2] தமிழ்.இந்து, சுற்றுலா, ஆன்மிக பயணத்தை தற்காலிகமாக தவிர்க்கலாம்: கரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கும் இந்திய மருத்துவக் கழகம், செய்திப்பிரிவு, Published : 12 Jul 2021 04:43 PM; Last Updated : 12 Jul 2021 04:50 PM.

[3] https://www.hindutamil.in/news/india/692335-3rd-wave-imminent-doctors-body-ima-says-tourism-pilgrimage-can-wait-2.html

[4] குமுதம் ரிப்போர்ட்டர், இந்து மருத்துவ முறைகளுக்கு ஆபத்து…? வம்பிழுக்கும் கிறிஸ்தவ அலோபதி, 06-08-2021, ப.18-19.

[5] ANI,  Delhi HC dismisses IMA President’s plea against trial court order criticising his Ayurveda remarks as ‘propagating Christianity’,  Updated: Jul 27, 2021 12:14 IST

[6] The Delhi High Court on Tuesday dismissed the appeal filed by Indian Medical Association (IMA) president Dr Johnrose Austin Jayalal challenging a trial court order that criticised his remarks on Ayurveda in an interview as allegedly “propagating Christianity“.

https://www.aninews.in/news/national/general-news/delhi-hc-dismisses-ima-presidents-plea-against-trial-court-order-criticising-his-ayurveda-remarks-as-propagating-christianity20210727121414/

பாபா ராம்தேவ், அலோப்பதியா-ஆயுர்வேதமா பிரச்சினை – ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பிரச்சினையானது – நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (1)

ஓகஸ்ட் 4, 2021

பாபா ராம்தேவ், அலோப்பதியாஆயுர்வேதமா பிரச்சினைஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பிரச்சினையானதுநீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (1)

பாபா ராம்தேவ் அல்லோபதி மருந்து முறையை விமர்சித்தது, IMA கண்டித்தது, வழக்கு போட்டது: பாபா ராம்தேவ் கொரோனா மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி விமர்சித்த போது, இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு / இன்டியன் மெடிகல் அசோஸியேஷன் (IMA) அதனைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். மன்னிப்புக் கேட்க சொன்னார்கள். மோடி கூட அறிவுருத்தினார். பாபா ராம்தேவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மன்னிப்புக் கேட்டப் பிறகும், தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அலோபதி மருத்துவம், கரோனா தடுப்பூசி குறித்து யோகாகுரு பாபா ராம்தேவ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தார். தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைக் கூறியும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளைத் தெரிவித்துவரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியது.

ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது: இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, அலோபதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அலோபதி மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் எதிராக அவதூறு கருத்துகளை யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதற்கு எதிராக, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தங்கிப் பணியாற்றும் ரெஸிடெனட் மருத்துவர்கள் கூட்டமைப்பு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாபா ராம்தேவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன[1]. இந்த நிலையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார்[2]. கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பலமுறை கண்டனங்கள் எழுப்பினார். இவையெல்லாம், டிவி மற்ற ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருந்தன.

 2020லிருந்து கொரோனா காலத்தை, ஊழியக் காலமாக மாற்றிக் கொண்ட கிறிஸ்துவ மிஷினரிகள்: ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மருத்துவராக இருந்தது மட்டுமல்லாது, விசுவாசமான கிறிஸ்துவராகவும் இருந்துள்ளார். அதிலும் தப்பில்லை, ஆனால், கொரோனா தொற்று, மரணங்கள், ஊரடங்கு முதலியவற்றை வைத்து, எப்படி கிறிஸ்தவத்தைப் பரப்பலாம் என்று, “கிறிஸ்டியானிடி டுடே” என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விரித்துள்ளார்[3]. மார்ச் 2021லேயே இந்த பேட்டி வந்துள்ளது[4]. தவிர “ஹக்கை இன்டெர்நேஷனல்” என்ற கிறிஸ்தவ மதப் பிரச்சார மற்றும் மதமாற்றம் செய்யும் இணைதளத்திலும் இவரது அப்பட்டமான பேச்சுகள் பதிவாகி இருந்தன. ஆனால், சுதாரித்துக் கொண்ட கிருத்துவர்கள் அதனை நீக்கிவிட்டார்கள். இருப்பினும், “ஸ்கிரீன் ஷாட்” பலரிடத்தில் உள்ளது.  அவர்கள் இதைப் பற்றி 2020லிருந்தே பிரச்சாரம் செய்து வருகின்றனர்[5]. இந்த கொரோனா காலமே, கடவுள் நமக்குக் கொடுத்த வரப் பிரசாட்தம் ஆகும் என்று ஊழியத்தை ஆரம்பித்தனர்[6]. ஆனால், IMA இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. 30-03-2021 தேதியிட்ட கடிதத்தில் IMA, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலாலுக்கு வக்காலத்து வாங்கி, அவரது கடிதத்தை சான்றாக வைத்து, அவரைப் பற்றிய வரும் செய்திகள் பொய் என்று அறிக்கை விட்டது. அதாவது, அந்த அளவுக்கு அவருக்கு ஆதரவு தெரிவிக்கப் பட்டது.

ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால்IMA தலைவரின் பிரச்சாரம்: தனது பதவியையும், அலுவலகத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு பயன்படுத்தியதாக புகார்கள் வந்ததை அடுத்து அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது[7]. தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக ஜெயலால் பயன்படுத்தியதால் நீதிமன்றத்தில் ஆஜராகி இது குறித்து பதிலளிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது[8]. LRPF என்ற தன்னார்வ அமைப்பு ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் அளித்த இரண்டு நேர்காணல்களை மேற்கோள் காட்டி அவர் தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது[9]. அவர் தனது நேர்காணலில், “தொழுநோய், காலரா மற்றும் பிற தொற்றுநோய்கள் உலகை பேரழிவிற்கு உட்படுத்தியபோது, ​​கிறிஸ்தவ மருத்துவர்கள் மற்றும் தேவாலயங்கள் மட்டுமே அவற்றிற்கு எதிராக நின்று போராடிய கிறிஸ்தவர்களின் தயாள குணத்தைக் காட்டினர்,” என்று கூறியிருந்தார்[10]. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தி அளிக்க வேண்டும் என்ற அவசரம் மத சார்பற்ற நிறுவனங்களில், அதாவது அரசு மற்றும் கிறிஸ்தவர் அல்லாதோரின் தனியார் மருத்துவமனைகள், கூட மதப் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஹக்காய் இன்டர்நேஷனலுக்கு அளித்த நேர்காணலில் ஒவ்வொரு தேசமும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மூலம் மீட்கப்பட்டு நல்ல மாற்றம் அடைந்துள்ளது: இதேபோல் ஹக்காய் இன்டர்நேஷனலுக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஒவ்வொரு தேசமும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மூலம் மீட்கப்பட்டு நல்ல மாற்றம் அடைந்து உள்ளதாக அவர் கூறி இருந்தார். ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்த ஒரு யோசனையை அவர் விரும்பவில்லை என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் ஆயுஷ் அமைச்சகத்தை குறிப்பிட்டு, “அவர்கள் ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை என்று மாற்ற விரும்புகிறார்கள். அடுத்து, அவர்கள் அதை ஒரே மதமாக மாற்ற விரும்புவார்கள். அது சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது, அது எப்போதும் பாரம்பரியமான இந்து மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்று தெரிவித்தார். எனவே, “சமஸ்கிருத மொழியையும் இந்துத்துவாவின் கொள்கைகளையும் மக்களின் மனதில் அறிமுகப்படுத்த இது ஒரு மறைமுக வழி,”‌ என்றே தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவர் தனது நேர்காணலில் இந்து மதத்தை தாழ்த்தியும் கிறிஸ்தவ மதத்தை உயர்த்தி பேசியுள்ளது தெள்ளத் தெளிவாகிய நிலையில் இவர் இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பை மதமாற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

04-06-2021 அன்று நீதிபதி கண்டித்த நிலை:  “ஹக்காய் இன்டெர்நேஷனல்” இணைதளத்தில் அரசாங்கத்தை “இந்து நாடு இந்தியா” என்றெல்லாம் விமர்சித்ததை நீக்கி விட்டு, இவ்வாறு பொய் என்று வாதிட ஆரம்பித்தனர். மின்னணு கருவிகளில், இத்தகைய மோசடிகள் செய்தால், சைபர் கிரைம் குழுவினர் கூட கண்டு பிடிக்கலாம். தான் பேசியதற்கு ஒருவர் தைரியமாக நிற்கிறேன் என்று உறுதியாகச் சொல்லும் போது, எதையும் இவ்வாறு நீக்கவோ, மறைக்கவோ தேவையில்லை. இதனால், ரோஹித் ஜா என்பவர், தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்[11]. அதுவரை கிடைத்த ஆதாரங்களை இணைதள “ஸ்கிரீன் ஷாட்டுகள்” முதலியவற்றை சமர்ப்பித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். நீதிமன்றமும், அவர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று 04-06-2021 கண்டித்து, தீர்ப்பளித்தது[12].  தனது பதவியையும், அலுவலகத்தையும் கிறிஸ்தவ பிரச்சாரத்திற்கு, மதமாற்றத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றது. 09-06-2021 தேதிக்குள், இதற்கு எதிராக எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டியவற்றை சமர்ப்பிக்கலாம் என்று நீதிபதி ஆணையிட்டார்[13]. ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெய்லாலும், தில்லி நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார். வழக்கம் போல, இழுத்தடிக்க, வழக்கறிஞரை வைத்து, வாதிக்கு முடிவு செய்துள்ளார். நீதிமன்றத்தில், சமர்ப்பிக்கப் படும் ஆவணங்களை வைத்தே, சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 27-07-2021 செவ்வாய் கிழமை இவரது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்டது.

© வேதபிரகாஷ்

04-08-2021


[1] தமிழ்.இந்து, டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகள்; உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பாபா ராம்தேவ் மனு, செய்திப்பிரிவு, Published : 23 Jun 2021 05:21 PM; Last Updated : 23 Jun 2021 05:23 PM.

[2] https://www.hindutamil.in/news/india/685347-yoga-guru-ramdev-goes-to-supreme-court.html

[3] Christianity Today, An Indian Christian Doctor Sees COVID-19’s Silver Linings, INTERVIEW BY MORGAN LEE , MARCH 30, 2021.

Johnrose Austin Jayalal, president of the Indian Medical Association, says the pandemic stirred the church to action.

[4] https://www.christianitytoday.com/ct/2021/march-web-only/india-covid-19-pandemic-medical-association.html

[5] Christianity Today, The Pandemic Lockdown Is a Godsend for the Indian Church, ISAAC SHAW, APRIL 16, 2020

[6] https://www.christianitytoday.com/ct/2020/april-web-only/india-churches-covid-19-coronavirus-pandemic-lockdown.html

[7] கதிர்.செய்தி, தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்நீதிமன்றத்தில் வழக்கு!, Monday, 31 May, 8.43 pm

[8] கதிர்.செய்தி, தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்நீதிமன்றத்தில் வழக்கு!, By : Shiva  |  1 Jun 2021 7:00 AM

[9] https://kathir.news/big-picture/–1093991

[10]தினசரி.காம், வெறித்தனமாய் மதம் மாற்றும் கிறிஸ்டீன் மெடிகல் அச்சொசியேஷன்: LRO குற்றச்சாட்டு!, Suprasanna Mahadevan, 02-06-2021. 12:4 PM.

[11] Brand.Bench, IMA Chief Johnrose Austin Jayalal moves Delhi High Court against trial court order deprecating interview to Christianity Today, Aditi, Published on :  14 Jun, 2021 , 3:30 pm.

[12] The President of Indian Medical Association (IMA), Johnrose Austin Jayalal has moved the Delhi High Court against a trial court order deprecating his interview to Christianity Today as being against secularism (Johnrose Austin Jayalal vs Rohit Jha).

https://www.barandbench.com/news/litigation/ima-chief-johnrose-austin-jayalal-moves-delhi-high-court-interview-christianity-today

[13] (Ajay Goel)  Vacation Judge/ADJ-04/Dwarka Courts/SW  New Delhi/03.06.2021….. Ld. Principal District & Session Judge, South West District, Dwarka on 09.06.2021